9. விஷ்வ மித்ரன்

5
(3)

💙 விஷ்வ மித்ரன் 💙

அத்தியாயம் 09

 

ஊஞ்சலில் அமர்ந்து காலாட்டியவாறே, அந்தி வானினை ரசனையுடன் பார்த்திருந்தாள் வைஷ்ணவி. அருகில் யாரோ வருவது போல் இருக்கவும் நிமிர்ந்து பார்க்க, மித்ரன் தான் நின்றிருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

 

அவனும் அவளருகில் அமர்ந்து கொண்டு அவளைத் தான் பார்த்தான். சில நிமிடங்கள் கழிய பேரமைதியைக் கலைத்துக் கொண்டு “அண்ணா…!!” என்று அழைத்தாள் வைஷு.

 

சட்டென தன்னை மீட்டுக் கொண்ட மித்ரனோ ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தான். ஏனோ அவனுக்கு வைஷ்ணவியைப் பார்ப்பது விஷ்வாவைப் பார்ப்பது போல் இருந்தது. பெயரும் ஒத்துப் போவதாலோ என்னவோ!? அவள் முகத்தில் தன் விஷுவைக் கண்டான் மித்ரன்.

 

“என்னண்ணா? என்ன விஷயம்? முகத்துல தௌஸன்ட் வாட்ஸ் பல்பு எரியுது?” என்று அவள் கேட்க, “அப்படியா தெரியுது?” என்று வினவியவனது முகம் மட்டுமல்ல மனதும் கூட விஷ்வா பழையபடி பேசியதில் நிறைந்து பிரகாசித்தது.

 

“ம்ம் ஆமாணா. இன்னிக்கு எப்போவும் இல்லாத பிரகாசம் உங்க முகத்துல தெரியுது. இந்த தேஜஸ்கு பின்னாடி இருக்குற பொண்ணு யாரு?” குறும்பில் துடித்தன அவளிதழ்கள்!

 

மித்ரன் “யேன் யேன் ஒருத்தனோட எல்லா உணர்வுகளுக்கும் பின்னாடி ஒரு பொண்ணு தான் இருக்கனுமா? இன்னொரு ஆண் கூட இருக்கலாம். என்னோட சந்தோஷம், கவலை, நட்பு, வலி, வேதனை இப்படி எல்லாத்துக்கும் பின்னால இருக்குறது என் விஷு தான். அவன் என் உயிர் மட்டுமில்ல, உணர்வும் கூட” என்றவனின் குரலில் வலி நிறைந்திருந்தது என்றால், முகமும் வாடிச் சோர்ந்திருந்தது.

 

விழி விரித்த பெண்ணோ ‘விஷு யாரு? அவர் அண்ணாவோட ப்ரெண்டுனா இங்க வராம எங்கிருக்கார்?’ என்பதை வெளியில் கேட்கவில்லை. மனதினுள் தான் கேட்டுக் கொண்டாள்.

 

அவனாக சொல்லும் போது சொல்லட்டும் என்று நினைத்தவள் அவனைத் திசை திருப்பும் பொருட்டு “ச்சும்மா பொய் சொல்லாத ணா. உங்க மனசுல ஒரு பொண்ணு இருக்கான்னு எனக்கு தெரியும்” அவனை வம்பிழுத்து சிரித்தாள்.

 

வைஷ்ணவியைப் பார்த்தவனோ “ஆமா! என் மனசுல ஒன்னு இல்ல ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க” என்று சொல்ல, நெஞ்சில் கை வைத்து “ஒன்னுன்னா கூட பரவாயில்லை ரெண்டா?” முட்டைக் கண்ணை விரித்து கேட்பவளின் ரியாக்ஷனில் அவனுக்கு சிரிப்பும் தான் வந்தது.

 

மித்ரன் “ஒன்னு நீ, அடுத்தது பூரி. என் ரெண்டு தங்கச்சிங்களும் தான்” என சொன்னவனின் அன்பில் நெகிழ்ந்து தான் போனாள் வைஷுவும்.

 

“மித்து பேபி” என்றவாறே வந்து அவனருகில் அமர்ந்து கொண்ட பூர்ணி, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

 

அவளைப் புரியாமல் பார்த்த மித்ரன் “என்னாச்சு பூரி. உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா?” பதற்றமாகக் கேட்டான்.

 

அவளுக்கு அடக்க முடியாத சோகம், இல்லையென்றால் தாங்க முடியாத வலி வந்தால் மட்டுமே சேயாக அவன் தோள் சாய்வாள்.

 

கண்களை மூடிக் கொண்டவள் “இல்ல மித்து. தலை வலிக்குது” என்று சொல்ல, அவள் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தான் மித்ரன்.

 

இவர்களது தூய அண்ணன் தங்கை உறவை ரோஹன் வீட்டினர் கொச்சைப் படுத்தி விட்டார்களே என்று அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது வைஷ்ணவிக்கு.

 

வைஷுவும், மித்ரனும் ஒருவருக்கொருவர் சீண்டிக் கொண்டு பூர்ணியை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர். பூர்ணிக்கோ ஒரு மாதிரி உடல் சோர்வாக இருந்தது.

 

“பூரி! போய் சாஞ்சுக்க. தூங்கினா சரியாகிடும்” மித்ரன் கூறவும் சரியென்று விட்டு எழுந்து நடக்கப் போனவளுக்கோ கால்கள் பின்னிக் கொள்ள, கண்களும் இருட்டிக் கொண்டு வர மயங்கிச் சரியப் போனவளைத் தாங்கினாள் வைஷு.

 

“பூரீஈஈஈ” கத்திய மித்து அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு அறையில் படுக்க வைத்தான்.

 

ஹாஸ்பிடலுக்குச் சென்றிருந்த ஹரிஷுக்கு அழைப்பு விடுத்து வரச் சொல்லி விட்டு பூர்ணியின் அருகில் அமர்ந்த வைஷ்ணவி “பூரி! என்னடி ஆச்சு? பயமா இருக்கு” என்றவளுக்கு கண்களில் கண்ணீர் கோர்த்தது.

 

மித்ரனுக்கும் உள்ளுக்குள் பதற்றமாக இருந்தது. ஹரிஷ் வந்து அவளைப் பரிசோதித்து விட்டு நெற்றியை நீவிக் கொண்டார்.

 

“அப்பா அவளுக்கு என்னாச்சு” வைஷ்ணவி அழுகையூடே உதடு கடித்து நிற்க, “டாடி நம்ம பூரிக்கு எதுவும் இல்லல?” அவனும் கலங்கிப் போனான்.

 

ஹரிஷின் இதழ்களில் புன்னகை தவழ “நோ ப்ரோப்ளம் டா! ஷீ இஸ் ப்ராக்னட்” என்றார் அந்த டாக்டர். அவர் இருபது வருடம் குறைந்து விட்டது போன்ற சந்தோஷத்துடன், தங்கையிடம் விடயத்தைப் பகிர சென்று விட, வைஷ்ணவியும் மித்ரனும் இன்பமாய் அதிர்ந்தனர்.

 

மெல்ல கண்களைத் திறந்த பூர்ணியை வைஷு கட்டிக் கொண்டாள்.

 

“ஏய் என்னாச்சு டி எனக்கு? ஏன் பெட்டுல படுத்திருக்கேன்? சொல்லு வைஷு” என்று கேள்விகளை அடுக்கியவளுக்கு “நீ அம்மாவாக போற டி” வைஷ்ணவி பதிலளித்தாள்.

 

பூர்ணிக்கோ தான் கேட்டது கனவா நனவா என்றிருந்தது. உச்சபட்ச மகிழ்வு அவளுள் ஊற்றெடுக்க கரம் தானாகவே வயிற்றில் பதிந்தது. ரோஹனின் முகம் அவளுள் தோன்றிட கண்ணீர் அவளறியாமலே சீறிப் பாய்ந்தது.

 

அவள் கண்ணீரைக் கண்டு துடித்துப் போன மித்ரன் “பூரி” என அருகில் வர அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.

 

“மி…மித்து நான் அம்மாவாக போறத நெனச்சி சந்தோஷப்படறதா ரோஹி என் கூட இல்லங்குறத நெனச்சி கவலைப்படுறதானு தெரியல டா. ஏன் மித்து எனக்கு இப்படி ஒரு சோதனை?” என்று அழுதவளின் கண்ணீரைத் துடைத்து விட்டாள் வைஷ்ணவி.

 

மித்ரன் “அழாத மா. இந்த டைம்ல அழக் கூடாது. உனக்கு ரோஹன் கூட இருக்கனும்லே? நான் அவன் கூட பேசி உன்ன அழைச்சிட்டு போக சொல்லவா?” என்று கேட்க, சட்டென கண்களைத் துடைத்து விட்டவளின் முகமோ பாறையாக இறுகியது.

 

“இல்ல மித்து. நான் போகப் போறதில்ல. அவன் வீட்டுல என்னால காலடி எடுத்து வைக்க முடியவே முடியாது. என்ட் நீ இதைப் பற்றி ரோஹன் கிட்ட பேசவே கூடாது. அவனுக்கு மட்டும் தெரிஞ்சு இங்க வந்தான்னா நான் எங்கேயாவது போயிடுவேன்” மிரட்டி விட்டு கண்களை மூடிக் கொண்டவளைப் பார்த்து அவனுக்கு மனம் கனத்தது.

 

வைஷு “சரி டி. நீ எத பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா இரு” என்று சொல்லி வெளியே செல்ல, மித்ரனும் அவள் பின்னோடு வந்து “இப்போ என்ன பண்ணுறது பாப்பா? இவ வேற அடம்பிடிக்கிறா. ரோஹன் கிட்ட சொல்லுறது தானே சரி. இது அவனுக்கும் குழந்தை தான்” என்றான்.

 

அவனைத் திரும்பிப் பார்த்து “அது உண்மை தான். பூரி ஏதோ கோவத்துல பேசுறா ணா.அவள் மனசுல ரோஹன் மேல அவ்வளவு காதல் இருக்கு. அவன் சந்தேகப்பட்டத இவளால மறக்க முடியல்ல அது தான் ப்ராப்ளமே! பூர்ணியே ரோஹன் கிட்ட பேபி விஷயத்த சொல்லட்டும்” ஆறுதல் அளித்தாள் அவள்.

 

“எதுவோ நல்லது நடந்தா ஓகே. அத்தை வேற பூரிய நெனச்சி ரொம்ப வருத்தப்படுறாங்க. சீக்கிரமே ரெண்டு பேரும் சேர்ந்துடனும்” என்று விட்டுச் சென்றான் ஆடவன்.

 

அவனைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியின் மனதிலோ “மித்ரனின் நண்பன் யார்?” என்ற கேள்வியே நிறைந்திருந்தது.

 

…………………………….

ஹாலில் யோசனையாக இருந்தனர் நீலவேணி மற்றும் சிவகுமார். அக்ஷராவும் அவ்விடம் வந்து சோபாவில் அமர்ந்து கொள்ள “அக்ஷு மா! விஷு எதுக்கு நம்மள வரச் சொன்னான்?” புரியாமல் கேட்டார் நீலா.

 

“தெரில மா. ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னான். அவன் தான் வந்து சொல்லனும்” கையை விரித்துக் காட்டினாள் அக்ஷரா.

 

டிசர்ட் சார்ட்ஸ்சில் வந்து அக்ஷுவின் அருகில் அமர்ந்து தொண்டையைச் செருமினான் விஷ்வஜித்.

 

“நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் டாட்! அது பற்றி உங்க கிட்டயும் பேசலாம்னு தான் கூப்பிட்டேன்” என்ற விஷ்வாவிடம் “நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு என்னோட ஆதரவு எப்போவும் இருக்கும் கண்ணா. ஆயிரம் வாட்டி யோசிச்சு நீ எதையும் சரியா தான் முடிவு பண்ணுவ” கண்ணாடியைச் சரி செய்தபடி கூறினார் சிவகுமார்.

 

“டேய் அண்ணா எதுக்கு அடித்தளம் எல்லாம் பலமா போடுறே? பட்டுனு போட்டு உடைச்சிரனும்” அக்ஷூ சொல்ல, “பொறு டி ராட்சஸி” என்றவன் பெற்றோர் புறம் பார்வையை செலுத்தி “நான் அக்ஷுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்” என்று சொல்ல தந்தையோ மகளின் முகத்தை பார்த்தார்.

 

அவளோ நகத்தைக் கடித்துக் கொண்டு வெட்கப்பட “நீ பார்த்தியா இல்ல உன் தங்கச்சி பார்த்தாளா?” என்று உதட்டுக்குள் சிரித்துக் கொண்டு அவர் கேட்க, தன்னைக் கண்டு கொண்ட தந்தையைப் பார்த்து “ஹீஈஈஈ” என அசடு வழிந்தாள் பெண்.

 

நீலவேணியும் சிரித்து விட்டு “ரெண்டும் கூட்டுக் களவாணிங்க. மாப்பிள்ளை யாருன்னு சொல்லு விஷு?” என்று கேட்டார்.

 

தம் வீட்டு இளவரசியின் மனம் கவர்ந்தவன் யார் என்பதை அறிவதில் பெற்றவர் முகத்தில் அத்தனை எதிர்பார்ப்பும் மகிழ்வும் கொட்டிக் கிடந்தது.

 

விஷ்வா “நம்ம மித்ரன் தான் மா” என்று சொல்லி விட்டு இருவரையும் ஏறிட்டான்.

 

சிவகுமாரின் முகம் பிரகாசிக்க நீலவேணியின் முகமோ கறுத்துப் போயிற்று.

 

“யாரு நம்ம மித்ரனா? அப்படினு யாராவது இருக்காங்களா? நான் கூட செத்துட்டான்னு நினைச்சேன்” என்றிட, “மாம்” எனக் கத்தினான் விஷ்வா.

 

கை நீட்டி அவனைத் தடுத்து “என்னடா மாம்? உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா? இவள் தான் காதல் கத்திரிக்கானு உளறினா உனக்கு எங்க போச்சு புத்தி? உன்னை விட்டு அவன் போனதுனால பட்ட கஷ்டத்த எல்லாம் நீ மறந்து இருக்கலாம். ஆனா என்னால மறக்கவே முடியாது. அவன மன்னிக்கவும் முடியாது” கோபமாகக் கூறினார் நீலவேணி.

 

“நீலா” என அதட்டிய சிவகுமார் “விடு மா. உன் கோவம் நியாயமானது தான். அவனை நம்ம பொண்ணுக்கு புடிச்சிருக்கு. அவளுக்கு புடிச்சத நாம என்னக்கி கொடுக்காம இருந்திருக்கோம்?” இறுதியில் கெஞ்சலாக முடித்தார்.

 

அவரோ இறங்கி வருவதாக இல்லை. “அது இல்லைங்க. நீங்க என்ன சொன்னாலும் என் மனசு மாறாது. அவன அக்ஷுக்கு மாப்பிள்ளையா ஏத்துக்கவும் முடியாது” உறுதியாகச் சொல்ல, இத்தனை நேரம் தன் காதல் நிறைவேறி விட்ட சந்தோஷத்தில் இருந்த அக்ஷராவிற்கு இடியே விழுந்தது.

 

தாயின் வார்த்தைகளில் கண்ணில் நீர் துளிர்க்க எழுந்து செல்ல முற்பட, அவள் கைப்பிடித்து தடுத்தான் விஷ்வா.

 

“எங்க போற குட்டிம்மா? அவங்க ஏத்துக்கலனா என்ன? நான் மித்துவ இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆக்குவேன். இந்த விஷ்வா கொடுத்த வாக்கை எப்போவுமே மீற மாட்டான். உனக்கு கொடுத்த வாக்குப்படி உன் அருள் உனக்குத் தான். இத யாராலயும் மாற்ற முடியாது” தீர்மானமாகக் கூறியவனின் குரலோ இறுகிப் போய் இருந்தது.

 

அவன் சொன்னதைக் கேட்டு, விஷ்வாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் அக்ஷரா.

 

நீலவேணிக்கு மூக்கு விடைக்க “இது தான் உன் முடிவுன்னா என் முடிவை சொல்லுறேன் கேட்டுக்க. அவன் அக்ஷுக்கு மாப்பிள்ளையா வரக் கூடாது. இந்த வீட்டுக்குள்ள மறுபடியும் காலடி எடுத்து வைக்கவும் கூடாது. உனக்கே இத்தனை அழுத்தம்னா உன்ன பெத்தவ எனக்கு எவ்ளோ இருக்கும். இன்னிக்கு நீயா நானானு பார்த்துடறேன்” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் கத்தினார்.

 

“ஏய்ய்” மனைவிக்கு அடிக்க கையை ஓங்கி விட்ட சிவகுமாரின் கை “டாட்” எனும் விஷ்வாவின் சத்தத்தில் அப்படியே நின்றது.

 

“வேணாம் பா ப்ளீஸ்” கெஞ்சலுடன் சொன்ன விஷ்வா அவர் கையைப் பிடித்து தலையசைத்தான். இத்தனை நாளாக கோபமாக கூட பேசியிராதவர் இன்று கையோங்கி விட்டதில் நீலவேணிக்கு கண்கள் கலங்கியது.

 

அவர் அருகில் முட்டி போட்டு அமர்ந்த ஆணவனோ “ம்மா உங்களுக்கு என்ன ப்ராப்ளம்” என்று மென்மையாகத் தான் வினவினான்.

 

“மித்ரன் தான் ப்ராப்ளம். அவன் மட்டும் அக்ஷுவுக்கு வேணாம் கண்ணா” என்றவரின் குரலும் நலிந்து ஒலித்தது.

 

கண்களை மூடித் திறந்தவன் “ஆனா அக்ஷுக்கு அவன மட்டும் தான் மா பிடிச்சிருக்கு. அவனை உயிரா காதலிக்கிறாள். மித்து மேல ஏதாவது கோபம்னா அதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன் மா” என்று தாயின் கையைப் பற்றிக் கொள்ள,

 

அவன் பிடியிலிருந்து கைகைளை வெடுக்கென உருவிக் கொண்டு “நோ விஷ்வா! இதுக்கு நான் என்னைக்குமே சம்மதிக்க மாட்டேன். அந்த மித்ரன் ச்சே அவன் பேரை சொல்ல கூட பிடிக்கலை. எப்படி இருந்த நம்ம குடும்பத்த இப்படி ஆக்கிட்டான். இவர் கை ஓங்கிட்டாரு. நீயும் என்னை விட அவன தான் முக்கியம்னு சொல்லிட்டு ஆடுற. எல்லாமே அவனால தான்” என்று கோபமாக சொல்லி விட்டு அறைக்குச் சென்றார்.

 

மற்றைய மூவருக்கும் பெரும் அதிர்ச்சி! மித்ரன் மேல் நீலவேணிக்கு இத்தனை கோபமும் வெறுப்புமா? இதைத் தீர்க்க என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தனர்.

 

அக்ஷரா “அப்பா ஏன்பா ம்மா இப்படி சொன்னாங்க? எனக்கு அருள் வேணானு சொல்லுறா” என்று கலங்கியவளிடம் வந்து “அவ ஏதோ ஆதங்கத்துல பேசிட்டு போறா டா கொஞ்சம் நேரத்துல சரியாகிடும். எதுவும் நெனச்சிக்காத” என தலையைத் தடவி விட்டுப் போனார் சிவகுமார்.

 

“குட்டிம்மா நீ அழாத. நான் நாளைக்கே மித்து கூட பேசுறேன்” என்றவன் சோபாவில் சரிந்து கண்களை மூடிக் கொண்டான்.

 

‘அம்மா கிட்ட நான் சவால் விடுற மாதிரி பேசுனது தப்பு தான். ஆனாலும் அவ மித்துக்கு எதுவும் சொல்லுறத என்னால தாங்கிக்க முடியல. அம்மா அம்மானு பூனை குட்டி மாதிரி உங்களையே சுத்தி வர்ரவன ஏன்மா உங்களுக்கு பிடிக்காம போச்சு?’ நினைத்தவனின் மனம் வேதனையில் உழன்றது.

 

அதையும் தாண்டி “மித்து அக்ஷராவுடனான கல்யாணத்தை ஏற்பானா?” என்ற வினாவும் பூதாகரமாகத் தோன்றி அவனைச் சிதைத்தது.

 

……………………….

முக்கியமான கால் ஒன்று வர, பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி பேசி முடித்தவன் ஃபோனை பாக்கெட்டினுள் போட்டு விட்டு நிமிர அவன் விழிகளில் பட்டது அந்த நிறுவனத்தின் பெயர்.

 

அக்ஷரா க்ரூப் ஆப் கம்பனீஸ் என்று மின்னிய அந்த எழுத்துக்களை அவன் விழிகள் அன்பு கனிய வருடின.

 

“அக்ஷுவ பார்த்து எத்தனை நாளாச்சு? இப்போ எப்படி இருப்பாள்?முன்ன மாதிரி சேட்டைக்காரியா தான் இருப்பாளா? அப்படி இருந்தா தான் அவளுக்கு அழகே” அக்ஷராவின் நினைவுகள் அவனுள் தோன்றின.

 

செக்யூரிட்டி கை காட்டி அழைக்க அவர் அருகில் சென்றான் அவன். “உங்கள சார் உள்ள வரச் சொன்னார்” என்று சொல்ல, சிவாப்பா தான் கூப்பிடறார் போல என நினைத்தவன் “ஓகே” என்று லிப்டில் ஏறி உள்ளே சென்றான்.

 

சிறு வயதில் விஷ்வாவுடன் இங்கு வந்து லூட்டி அடிப்பது மனதில் வந்து போனது. எம்.டி கேபின்கு சென்று கதவைத் தட்டி அனுமதி வேண்ட “யாஹ் கம்மிங்” கம்பீரமான குரல் அவனை வரவேற்க உள்ளே நுழைந்தவனின் விழிகளோ சாஸர் போல் விரிந்தன.

 

நீல நிற சர்ட்டை இன் செய்து, ப்ளாக் ட்ரவுஸர் அணிந்து ,முடிக்கு ஜெல் தடவி லேப்டாப்பில் கவனம் பதித்தபடி கம்பீரமாய் அமர்ந்திருந்தான் விஷ்வஜித். 

 

தனது நண்பனின் ஆளுமையான தோற்றத்தில் சிறு கர்வமும் அவனுள் எட்டிப் பார்க்க நின்ற மித்ரனுக்கு “என்ன நின்னுட்டீங்க? வந்து உட்காருங்க மித்ரன்” என்ற விஷ்வாவின் அந்நியத் தன்மையான பேச்சில் முகம் வாடிப் போனது.

 

அமைதியுடன் இருக்கையில் அமர்ந்து கொண்டு “எதுக்கு வரச் சொன்னீங்க சார்?” என்று கேட்டான்.

 

சார் என்ற அழைப்பில் புருவங்கள் மேலெழுந்து பழையபடி மாற “கொஞ்சம் பர்சனலா பேச வேண்டியிருக்கு” என்க, “பர்சனலா? அப்படி ஏதாச்சும் நமக்குள்ள இருக்கா” முறைப்புடன் கேட்டவனுக்கு அவன் வேறு யாருடனோ பேசுவது போல் பேசியதில் மனம் இன்னும் ஆறவில்லை.

 

“இல்லனா என்ன? இனிமேல் பர்சனல் எல்லாம் இருக்குற மாதிரி பண்ணிடலாம் மாப்பிள்ளை” குறும்பு மின்ன விஷ்வா சொல்ல, “மாப்பிள்ளையா? அது என்ன புது அழைப்பு” இன்னும் முறைத்துத் தான் பார்த்தான்.

 

“புது உறவுகள் வரும் போது அழைப்புகளும் புதுசா வரும்” கண் சிமிட்டினான் அவன்.

 

அவனது கண்சிமிட்டலில் தன்னையும் மீறி புன்னகை பூக்க, அதை இதழுக்குள் அடக்கியதைக் கண்டு கொண்டான் கள்வன் அவனும்.

 

“உங்களால கோவத்த இழுத்து பிடிச்சு வெச்சுக்க முடியலயா மிஸ்டர் அருள் மித்ரன்?” சிரித்தவனைக் கண்டு கடுப்பாகியது அவனுக்கு.

 

“பேசுறதப் பாரு மித்ரனாம் மித்ரன்ன்ன். மித்துன்னு கூப்பிட்டா குறைஞ்சா போயிடுவான்? ஆனால் அவனை சொல்லி குற்றமில்லை உன் மூஞ்சில தான் பஞ்ச் பண்ணனும் டா. கொஞ்சம் நேரம் கூட கோவமா இருக்குற மாதிரி காட்டிக்காம அவன் கண் சிமிட்டினதும் லவ்வர் மாதிரி தடக்குனு விழுந்துட்டே” தன்னைத் தானே வாய்க்குள் வறுத்தெடுத்தான் மித்ரன்.

 

விஷ்வா “என்னாச்சு சார்?” என்று மீண்டும் ஆரம்பிக்கும் போதே அவனுக்கு ஏகத்துக்கும் எகிற, மேசையிலிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து அவனுக்கு வீசினான்.

 

அதை லாவகமாக கேட்ச் பிடித்து ஸ்டைலாக மறு கைக்கு மாற்றி “கேட்ச் இட்” என்றபடி விஷ்வா வீச, மித்ரனும் அனிச்சை செயலாக அதைப் பிடித்து மறு கைக்கு தூக்கிப் போட்டு மாற்றியவன் டேபிளில் வைத்தான்.

 

நிமிர்ந்து நண்பனைப் பார்க்க அவனோ உதட்டுக்குள் சிரித்தபடி நின்றிருக்க “சார் மோர்னு சொன்னா கொன்னுடுவேன் டா ராஸ்கல்” என்று மித்ரன் சொல்ல, முறைப்புடன் பார்த்தான் அவன்.

 

“முறைக்காம எதுக்கு வரச் சொன்னனு சொல்லு” என்று மீண்டும் அதே கேள்வியில் வந்து நிற்க, “அத இங்க வெச்செல்லாம் பேச முடியாது. வெளில போகலாம்” என்றபடி எழுந்து கொண்டான்.

 

“ம்ம் ஓகே” தானும் எழுந்து கொள்ள, “வெயிட் அ மினிட்” என்ற விஷு தனது கேபினை ஒட்டியிருந்த இன்னொரு அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

 

தோளைக் குலுக்கிய விட்டு வேடிக்கை பார்த்து விட்டு கதவு திறக்கும் சத்தத்தில் அப்பக்கம் திரும்பியவனின் இதழ்கள் அழகாக விரிந்தன. மித்ரனைப் போலவே மெரூன் கலர் டிசர்ட் அணிந்திருந்தான் அவனும்.

 

“என்னை அப்புறமா சைட் அடிக்கலாம். வா போலாம்” என்றவன், பின் திரும்பி “நீ போட்டதால தான் நானும் இதே கலர் டிசர்ட் போட்டன்னு நினைக்காத. இது மட்டும் தான் ரூம்ல இருந்துச்சு” என்று சிலுப்பிக் கொண்டு சொல்ல, பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி “நான் இத கேட்கவே இல்லையே” கிசு கிசுத்தான் தோழன்.

 

“உன் கலர் ட்ரெஸ் போட்டதால உன் மேல இருக்குற கோவம் போயிடுச்சுன்னு நீ நெனச்சுட்டீனா என்ன பண்ணுறது? அதான் நானே சொன்னேன். உன் மேல கோபம் அப்படியே தான் இருக்கு” முகத்தைத் திருப்பிக் கொள்ள, “ச்சும்மா போடா” சிரித்தே விட்டான் மித்து.

 

கேபினை விட்டுப் வெளியேறிட அனைவரது பார்வையும் இவர்கள் மேலே தான் நிலைத்தது. ஒரே கலர் டிசர்ட்டில், இடது கையில் வாட்ச் கட்டி வலது கையில் கறுப்பு நிற பேங்கல் போட்டு, ஒரே ஹேர்ஸ்டைல் ஒரே உயரத்தில் இரட்டையர் போல் இருந்தவர்களில் யார் அழகு என்று பிரித்தறிய முடியவில்லை. இமை சிமிட்டாமல் இவர்களையே ரசித்தனர் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூடவே.

 

சும்மாவே க்ரஷ் என்று சுற்றுபவர்கள் மனதில் பதிந்த கோர்ட் சூட் ரோபோ விஷ்வா, இன்று ஹேன்ட்ஸம் சாக்லேட் பாய்யாக மாறினான்.

 

முடியைக் கோதி டிசர்ட்டில் மாட்டியிருந்த சன்க்ளாஸை போட்டுக் கொண்ட விஷ்வா பேன்ட் பாக்கெட்டினுள் கை விட்டு இன்னொரு சன்க்ளாஸை மித்துவிடம் நீட்ட, அதை வாங்கிப் போட்டுச் சிரித்த மித்ரனின் மனமோ விஷ்வாவுடனான முதல் சந்திப்பை நோக்கிச் சென்றது.

 

நட்பு தொடரும்………!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!