90. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.3
(6)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 90

 

ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தனர் அகியும், யுகியும். அவர்களது அருகில் அமர்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி.

 

“டாடி‌ இன்னும் வரலயா?” யுகன் யோசனையாகக் கேட்க, “இல்ல கண்ணா. லேட்டாகும்னு சொன்னார். வந்துடுவார்னு நினைக்கிறேன்” என்றவளது விழிகள் வாயிலை நோக்கியே இருந்தன.

 

இன்று காலையில் வேலை விடயமாக வெளியூர் சென்றவன் சத்யா. இன்னும் வீடு திரும்பவில்லை. அவன் குரல் கேட்காத பொழுதுகள் என்னவோ போல் இருந்தன அவளுக்கு.

 

அவனுக்கு ஊட்டாமல், தலை துவட்டாமல், ஜானு ஜானு எனும் அழைப்பைக் கேட்காமல் பொழுது வெகு சிரமத்தோடு கழிந்தது போல் உணர்ந்தாள்.

 

“டாடி இல்லாம போர் அடிக்குதுல்ல டா” என்று அகி சொல்ல, “ஆமா. டாடி முன்னெல்லாம் என்னை விட்டுப் போகவே மாட்டார். இப்போ அடிக்கடி போயிடுறார். கேட்டா ஜானு இருக்கா தானேனு சொல்லுவார்” என்று முறுக்கிக் கொண்டான் யுகி.

 

“ஏன் யுகி? ஜானு கூட இருக்க உனக்குப் பிடிக்காதா?” கவலை படரும் முகத்துடன் அவள் வினவ, “பிடிக்காம இருக்குமா? டாடி இருந்தா பிடிக்கும். நீங்க இருந்தாலும் பிடிக்கும். ஆனால் ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா ரொம்ப பிடிக்கும்” கைகளை விரித்துச் சொன்னான் யுகி.

 

“அச்சோ! என் அச்சுக் குட்டி” அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

அதே வேளை கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் சத்யா. அவனைக் கண்டதும், “டாடீஈஈ” என இருவரும் ஓடி வந்து அணைத்துக் கொண்டனர்.

 

“மை டார்லிங்ஸ்” இருவரையும் கை விரித்து அணைத்துக் கொள்ள, அவனது அருகில் வந்து தோள் பையை எடுத்துக் கொண்டாள் ஜனனி.

 

அவள் விழிகள் அவனை நோக்கின. அவனும் அவ்விழிகளைத் தான் ஆழ்ந்து பார்த்தான், அதனுள் ஏக்கங்களின் சொட்டு மிச்சம் இருக்கிறதா என அறியும் ஆவலோடு.

 

“உங்களை ரொம்ப மிஸ் பண்ணுனோம் டாடி. இனிமே இப்படி போகாதீங்க” அகிலன் சொல்ல, “எஸ் டாடி. எங்க கூடவே இருங்க” அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான் சத்யா.

 

“இதென்னடா வம்பாப் போச்சு? ஒரு நாள் போனதுக்கே இப்படி பண்ணுறீங்க. நான் நிறைய நாள் போனா என்னவாகும்?” என்று அவன் கேட்க, “அப்படி எங்கேயும் போக வேண்டாம்” இதைச் சொன்னது ஜனனி தான்.

 

“அப்படினா ஜானு மேடமும் டாடியை மிஸ் பண்ணுனாங்களா?” அவளைப் பார்த்து கண்ணசைவால் கேட்க, “நான் மிஸ் பண்ணலயே. இவங்க உங்களைக் காணாம தேடுறாங்க. அதை சமாளிக்க முடியாம சொன்னேன். வேற ஒன்னும் இல்லை” அவசரமாக மறுத்தாள் மங்கை.

 

“அது சரி. நீ எப்போ உனக்காக சொல்லுவ? எப்போவும் மத்தவங்களுக்காக தான் எல்லாமே” என்று சொன்னவன், “நான் சாக்லேட் கொண்டு வந்தேன். ஆனால் என்னை மிஸ் பண்ணுனவங்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்” என்றவாறு கிட்சனுக்குச் சென்று கை கழுவினான்.

 

“நாங்க மிஸ் பண்ணுனோமே. சாக்லேட் கொடுங்க டாடி” என்றவாறு கையை நீட்ட, “முதல்ல சாப்பிடனும். எனக்கு செமயா பசிக்குது” என்றவாறு தான் கொண்டு வந்த பார்சலை எடுத்தான்.

 

“சாப்பிட்டு வர்றதா சொன்னீங்க. அதனால எதுவும் மிச்சம் வைக்கல. ஏன் இவ்ளோ லேட்டா சாப்பிடுறீங்க?” என்று கேட்டாள்‌ ஜனனி.

 

“எங்களுக்தும் பசிக்குது. ஊட்டி விடுங்க டாடி” இருவரும் வந்து அமர்ந்து கொள்ள, சத்யாவின் முகத்திலும் அப்பட்டமான பசி.

 

அவன் மகன்களுக்கு ஊட்டி விட ஆரம்பிக்க, அவனருகில் அமர்ந்து உணவை எடுத்து சத்யாவுக்கு ஊட்டினாள் மனைவி.

 

இமைக்க மறந்து அவளைப் பார்த்தான். அவளுள் தாய்மையைத் தாண்டிய அன்பொன்று உருவெடுத்தது.

 

🎶 உன்னோடு தான் என் மனம் வாழுதே

அது சொல்லாமலே உன் வசமானதே

உன்னோடு தான் என் நிழல் போகுதே

என் கண்ணோடு தான் உன் இமை மூடுதே 🎶

 

🎶 தாலாட்டும் பார்வை நீ வீச வா

உன் மாரோடு நான் சாய்ந்து தூங்கவா

நான் கேட்கும் பாடல் நீ ஆக வா

என் உயிரெல்லாம் இசையாக சேர வா 🎶

 

🎶 பெண்ணே அழியாத பேரன்பை நான் காட்டுவேன்

உன்னை இழக்காமல் போர் செய்து பரிசாக்குவேன்

உன் கைரேகை மேல் எந்தன் உயில் தீட்டுவேன்

மரணம் நேர்ந்தாலும் உனக்காக உயிர் மீட்டுவேன் 🎶

 

🎶 வா என் உயிரே, வா என் உறவே

உன்னாலே என் ஜீவன் வாழுதே

வா என் உயிரே, வா என் உறவே

உன்னாலே என் காதல் வாழுதே 🎶

 

அவனுயிர் இனிய பாடல் மீட்டியது. ஆம்! இன்று அவளால் தான் அவன் ஜீவன் வாழ்கிறது. இந்த ஜீவனுக்கு ஜனனம் கொடுத்து விட்டாள் ஜனனி.

 

“மிஸ் பண்ணலனு சொன்ன. பொய் தானே? மேடமுக்கு எனக்கு ஊட்டாம இருக்க முடியல” இதழ் கடையோரம், சிரிப்பைத் தவழ விட்டவனுக்கு அவளின் செயலில் மனம் நிறைந்தது.

 

“பேசாம சாப்பிடுங்க. எப்போ பாரு பேச்சு தான். டைமுக்கு சாப்பிடனும்னு தெரியாதா?” அவள் திட்ட, “திட்டாத ஜானு. எனக்கு பசிச்சுது தான். ஆனால் உன் கையால் சாப்பிடனும் போல இருந்துச்சு. அதனால அப்படியே எடுத்துட்டு வந்தேன்” உண்மையை மறைக்காமல் சொல்ல, அவளால் வேறொன்றும் பேச முடியவில்லை.

 

“டாடி பாவம்ல? வேலை செஞ்சு களைச்சு போய் வர்றார்” அகி தந்தையைப் பார்த்து சொல்ல, “ஜானுவும் தான் பாவம். வீட்டுல நிறைய வேலை செய்றாங்கள்ல” யுகனும் ஜனனியை நோக்கினான்.

 

சாப்பிட்டு முடித்ததும் சாக்லேட் எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்‌. 

 

“சாக்லேட் சாப்பிடு ஜானு” என்று அகி சொல்ல, “அவரை மிஸ் பண்ணுன ஆட்களுக்கு மட்டும் தான் உங்க டாடி கொடுப்பாராம். எனக்கு எதுக்கு?” முறைப்புடன் அமர்ந்து கொண்டாள் ஜனனி.

 

“இவ என் கூட சண்டை போடனும்னு பண்ணுறா. அது அப்போ சொன்னது. இப்போ சாப்பிட சொல்லு அகி” மகனிடம் சொன்னான் சத்யா.

 

“எனக்கு வேண்டாம்” அவள் மறுக்க, “அப்போ மிஸ் பண்ணேன்னு சொல்லு” என்க, “சும்மா சொல்ல முடியாது” என்றாள் அவளும்.

 

“நான் உன்னை மிஸ் பண்ணேன் ஜானு. அதுக்காக நீ சாப்பிடு” அவளிடம் சாக்லேட்டை நீட்ட, “ஓகே” தலையசைப்புடன் வாங்கிக் கொண்டாள்.

 

“யம்மி டாடி” இருவரும் சுவைத்துச் சாப்பிட்டனர்.

 

“வாங்க தூங்குவோம்” என்று சத்யா அழைக்க, “ப்ரஷ் பண்ணிட்டு தூங்க சொல்லுங்க” என்றவாறு பாத்ரூம் அழைத்துச் சென்றாள்.

 

பல் துலக்கியவர்கள் தமது அறையில் உறங்கி விட்டனர். சத்யா டவலை எடுக்க, “குளிக்காதீங்க” என்றாள் ஜனனி.

 

“ஏன்? நான் குளிக்க போறேன்னு உனக்கு எப்படி தெரியும்?” வியந்து கேட்டான் காளை.

 

“உங்களைப் பற்றி தெரியாதா? உங்களுக்கு சளி இருக்குல்ல. இதுல குளிக்க வேண்டாம்” அவள் உறுதியாக மறுக்க, “நீ ரொம்ப மோசம்” முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றான்.

 

உடலில் நீர் ஊற்றி களைப்பைப் போக்கிக் கொண்டு வந்தவனை கட்டிலில் சாய்ந்தவாறு நோக்கினாள் பெண்‌.

 

“ஏதாச்சும் சொல்லனுமா?” அவனது பார்வை உணர்ந்து கேட்க, “தேவையில்லை. நான் உன் கூட கோபமா இருக்கேன்” உதட்டைச் சுளித்தான் அவன்.

 

“ஏன் கோபம்?” அவள் புரியாமல் பார்க்க, “ஒன்னும் இல்லை. ஒன்னுமே இல்ல. பேசாம தூங்கு” என்று கூற, அவள் எழும்பி வந்தாள்.

 

“இங்கே எதுக்கு வர்ற? தூங்கு போ” அவன் முறைக்க, “தூங்கனும்னா எப்போவோ தூங்கி இருப்பேன்‌. சும்மா விரட்டாதீங்க” அவளும் பதிலுக்கு முறைத்தாள்.

 

“தூங்காம திருடன் வேலை பார்க்கப் போறியா?” என்று அவன் கேட்க, “இப்படி உட்காருங்க” அவனை அங்கிருந்த கதிரையில் அமர வைத்தாள்.

 

“என்ன பண்ணப் போற?” அவன் புரியாமல் விழித்தான்.

 

“சும்மா சும்மா மண்டை சூடாகிப் போய் கோபம் வருதே. இந்த ஹிட்லரோட மண்டையில் நாலு தட்டு தட்டி கூலாக்க போறேன்” கையைப் பொத்தி குட்டு வைக்கப் போக, கண்களை மூடிக் கொண்டான் அவன்.

 

மென்னகை பூத்து விட்டு அவனது தலையில் கை வைக்க, இமை பிரித்துப் பார்த்தான் அவன். முன்னே கண்ணாடியில் விழுந்தது அவளின் விம்பம்.

 

இரு கைகளையும் அவனது தலையில் வைத்து மசாஜ் செய்ய, “வாவ் ஜானு” கண்களை மூடி அதன் சுகத்தை அனுபவித்தான்.

 

“இதுக்காக தானே இந்த ராத்திரில குளிக்கப் போனீங்க?” அவள் புருவம் உயர்த்திக் கேட்க, “ஆமா! ஆனால் இது நல்லா இருக்கே. இனி தினமும் குளிக்காமல் வந்து இப்படியே பண்ண சொல்லுறேன். இது நல்லா இருக்கு” என்று சொன்னான் சத்யா.

 

“இன்னிக்கு மட்டும் தான். குளிக்காம தினமும் வந்தா பக்கத்துல வர முடியாம போயிடும்” அவள் சொன்னதைக் கேட்டு, “நக்கல்” என முறைத்தான்.

 

“ச்சும்மா” அவள் கண் சிமிட்ட, அக்குறும்புதனில் கொள்ளை போனான் கணவன்.

 

“நீ ஏன் ஜானு எனக்காக இதையெல்லாம் பண்ணுற?” விடையறிய வேண்டி இருந்தது அவனுக்கு.

 

“சொல்லத் தெரியலங்க. நானே யோசிக்கிறேன். உங்க கிட்ட நெருங்கிப் பழகுறேன். எந்த தடையும், தயக்கமும் எனக்கு வந்ததில்ல. கணவன் என்கிற உரிமையானு கேட்டாலும் தெரியல. இந்த கேள்வியை மையமா வெச்சு இதையெல்லாம் பண்ணாம இருக்கவும் முடியல.

 

எனக்கு பிடிச்சிருக்கு. அகி, யுகிக்காக எப்படி பண்ணுறேனோ அதே மாதிரி உங்களுக்காகவும் பண்ணுறேன். உங்க மேல கேர் எடுத்து பண்ணுற ஒவ்வொரு விஷயமும் எனக்கு சந்தோஷத்தைத் தருது” தன் மனதில் தோன்றியதை அப்படியே பகிர்ந்து கொண்டாள்.

 

“உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு. எது பிடிச்சிருக்கோ அதை செய். நான் சும்மா தான் கேட்டேன். அந்த கேள்வியை கேட்கனும் போல இருந்துச்சு. நீ எதுவும் நெனச்சுக்காத” அவள் என்ன நினைத்தாளோ என்று சொல்ல,

 

“நான் எதுவும் நினைக்கலங்க. ஒன்னு தோணுச்சுனா கேளுங்க. இப்படிலாம் விளக்கம் தர வேண்டாம்” என்றவளின் கை வேலை நிறுத்தம் செய்திருந்தது.

 

“தலையில் கை வெச்சுக்க ஜானு” அவளது கையைப் பிடித்துத் தலையில் வைத்துக் கொண்டான்.

 

“அகி, யுகியை விட அவங்க டாடி தான் குழந்தைப் பிள்ளைனு அத்தை கிட்ட சொல்லனும்” செல்லமாகச் சலித்துக் கொண்டு தலை முடிக்குள் கை விட்டு கோதிக் கொடுத்தாள்.

 

சற்று நேரம் இருந்தவன், “போதும் ஜானு” என்றவாறு எழுந்து கொள்ள, அவளும் கட்டிலில் சாய்ந்தாள்.

 

“அவனும் மற்ற பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஏதோ யோசிக்க, “என்ன யோசனை?” எனக் கேட்டாள் ஜனனி.

 

“சீரியல்ல எல்லாம் ஹீரோவும் ஹீரோயினும் கட்டில்ல தூங்கும் போது பில்லோவை நடுவில் வைப்பாங்க” என்று அவன் தீவிர யோசனையில் ஆழ்ந்திட,

 

“நீங்க ஹீரோவும் இல்ல, நான் ஹீரோயினும் இல்லை. மொத்தத்துல இது சீரியலும் இல்ல” என்று தலையசைத்துச் சொன்னாள் அவள்.

 

அவள் சொன்ன விதத்தில் சிரித்து விட்டவனைப் பார்த்து, “ஹலோ மிஸ்டர்” என்று அழைக்க, “சொல்லுங்க மிஸ்ஸஸ் சத்ய ஜீவா” அவனும் அவள் பக்கம் திரும்பினாள்.

 

“எதுக்கு இப்போ அந்த பெயரை சொல்லுறீங்க?”

 

“நீ தானே அடிக்கடி ஞாபகப்படுத்த சொன்ன. அதனால தான். மறந்து போயிடும்ல?” என்று அவன் கூற, “நானே மறந்தாலும் தினமும் ஞாபகப்படுத்தத் தான் இது இருக்கே” தனது கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்துக் காட்டினாள்.

 

“அட! ஆமால்ல. மறந்தே போயிட்டேன்” என்றவனின் கண்கள் அவள் தாலி மீது படிந்தன.

 

வெண்சங்குக் கழுத்தில் பளபளத்தது அவன் கட்டிய தங்கத்தாலி. இத்தனை நாட்கள் அதனை உன்னிப்பாகப் பார்த்தது இல்லை. தாலியில் பதிந்த பார்வை இரண்டு மில்லி மீட்டர் அளவு விலகிச் செல்ல, அவள் கழுத்தில் இருந்த மச்சம் அவனைக் கவர்ந்திழுத்தது.

 

இமை சிமிட்ட மறந்து நின்றவனுக்கோ மூச்சுக் காற்றில் வெப்பம் ஏற, “குட் நைட் ஜானு” என்றவாறு மறுபுறம் திரும்பிப் படுத்தான்.

 

லைட்டை அணைத்தவளும் அவன் முதுகைப் பார்த்தவாறே உறக்கம் கொள்ள, அவனுக்குத் தான் தூக்கம் தொலை தூரம் சென்று தொலைந்தது.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!