27. விஷ்வ மித்ரன்

5
(4)

 விஷ்வ மித்ரன் 

 

💙 அத்தியாயம் 27

 

ஹரிஷ் மித்துவிடம் இருப்பதாகக் கூறி விஷ்வாவை வீட்டிற்குச் சென்று ரெஸ்ட் எடுக்குமாறு சொல்ல, மனமே இன்றி வீடு திரும்பினான் அவன்.

 

அவன் மனதில் மித்து இரத்த வெள்ளத்தில் மயங்கிய காட்சியே நினைவில் உதிக்க, இன்னும் கூட அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை தோழனால்!

 

வழியில் இருந்த கோயில் கண்களில் தென்பட அங்கு சென்றான். கண்களை மூடி மித்ரனுக்குப் பிடித்த முருகனை வணங்கினான்.

 

“முருகா! மித்து என்னை விட்டுப் பிரிஞ்சு போய் ரொம்ப கஷ்டப்பட்டான். இப்போ கூட தர்ஷனால பிரச்சினை. அவனோட உயிருக்கே ஆபத்தாயிருச்சு. அவனுக்குக் கொடுத்த கஷ்டம் எல்லாம் போதும்.

 

இன்னும் ஏதாவது உன் மனசுல மிச்சம் மீதி இருந்தால் அதை எனக்குக் கொடுத்துரு. இனி அவன் நல்லா இருக்கனும். எப்போவும் என் மாப்ள வாழ்க்கைல சந்தோஷம் மட்டுமே நிறைந்து இருக்க நீ தான் துணையா இருக்கனும்” கரம் கூப்பி வேண்டினான் விஷ்வா.

 

விபூதியை நெற்றியில் வைத்து விட்டுத் திரும்பியவனுக்கு ஏதோ உணர்வு! அங்குமிங்கும் அவனது கூரிய விழிகள் அலை பாயத் துவங்கின. “என்னாச்சு எனக்கு ஒரு மாதிரி ஃபீலாகுது?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனின் கண்களில் பளிச்சென்ற மின்னல்.

 

எதிரில் இமைகளை மூடி கை கூப்பிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

 

“ஓஓ! என் மனசுல குளு குளு உணர்வு தோன்ற இந்த சாரல் காற்றுப் பெண் தான் காரணமா?” இதயத்தைக் கையால் தடவிக் கொண்டான் விஷ்வஜித்!

 

“சாரல் காற்று மட்டுமல்ல இவள். ஆனந்த கீற்று. என் காதல் ஊற்று” முரட்டு ஆடவனும் தன்னவள் தரிசனத்தில் மென்மையான கவிஞனாய் மாறிப் போகலானான்.

 

கண்களைத் திறந்த வைஷு அவனை இங்கு எதிர்பாராததால் கண்கள் அகல நோக்கினாள், ஜித்துவை.

 

“ஓய்ய் முட்டைக் கண்ணி..!!” அவள் முகத்தின் முன் சொடக்கிட்டான் விஷு.

 

சிந்தை கலைந்து, “நான் முட்டைக் கண்ணினா நீங்க கோழிக் கண்ணனா?” முறைத்துப் பார்த்தாள் அவள்.

 

“இல்லை. காதல் கண்ணன்! எனக்காக யாராவது காதல் கொடியை ஏந்திட்டு நீயே என் காதலன். நீயே என் காவலன்னு வர மாட்டாங்களானு ஏங்கிட்டு இருக்கேன். ஆனால் அப்படி யாரும் தான் வர மாட்டேங்குறாங்க”

 

“ஓவர் இமேஜினேஷன் பண்ணாதீங்க விஷ்வா. அப்படி யாரும் வர மாட்டாங்க. இதயத்துக்கு காதலனா உங்களை யாரும் கூப்பிட மாட்டாங்க. வீட்டைக் காவல் காக்க கண்டிப்பா கூப்பிடுவாங்க. செக்யூரிட்டிக்குத் தேவையான பத்துப் பொருத்தமும் உங்க மூஞ்சுல பக்காவா இருக்கு” நமட்டுச் சிரிப்புடன் கூறினாள் பெண்.

 

“கிரேட் இன்சல்ட் டா விஷ்வா” சுட்டு விரலைக் காதினுள் விட்டுக் குடைந்தவன், “ஆமா! நீங்க எங்க இங்கே?” எனக் கேட்க,

 

“இங்கே ஆயா வடை சுட கத்து தரேனு சொன்னா. அதான் நானும் கத்துக்கிட்டு வடை வியாபாரம் பண்ணலாம்னு வந்தேன்” கடுப்புடன் சொன்னாள் அவள்.

 

“வேணாம் தாயே! அவசரப்பட்டு வடை சுட கத்துக்கறேன்னு விஷப் பரீட்சையில் இறங்கிடாத. அப்பறம் ஒரு வடையால எல்லாரும் அச்சோ பல்லுப் போச்சே இனி என் சொல்லும் போச்சே அப்படினு புலம்புற மாதிரி ஆயிடும்” கும்பிடு போட்டு அவளது பிபியை நன்றாக ஏற்றி வைக்கலானான் வேங்கை.

 

“என் பொறுமையை ரொம்பத் தான் சோதிக்கிறீங்க. என் சமையல் அவ்வளவுக்கு ஒன்னும் கேவலமா இருக்காது”

 

“அன்னிக்கு வீட்டுக்கு வந்தப்போ கொடுத்தியே ஒரு ஜூஸு. அதை நினைக்கும் போது இப்போ கூட வாந்தி வருது” வாந்தி எடுப்பது போல் செய்கை செய்தான்.

 

“நல்லாத் தான் போட்டேன். உங்களுக்கு ரசனை இல்லனா நான் என்ன பண்ணுறது?” அவனை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளினாள் வைஷ்ணவி.

 

“என் ரசனைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அது எப்போவும் தூக்கலா கலக்கலா இருக்கும்” பெருமிதமாகப் பார்த்தவனுக்கு அவளது வசை மாரியிலிருந்து விடுபடும் எண்ணம் இல்லை போலும்.

 

“க்கும் அதை அவங்கவங்க தான் மெச்சிக்கனும்” என நொடித்துக் கொண்டவளின் கடுகடுத்த முகம் அவனுக்கு கிக்காக இருந்தது.

 

‘அச்சோ முறைச்சே கொல்றியே நவி! நீ என் பக்கத்துல இருந்தாலே றெக்கை இல்லாமல் பறக்குறா மாதிரி இருக்கே டி’ தன்னவளை மனதினுள் கொஞ்சித் தீர்த்தான் விஷு.

 

“விஷு! நான் போட்ட ஜூஸ் நிஜமாவே அவ்ளோ கேவலமாகவா இருந்துச்சு?” மெல்ல வினவியவளின் முகபாவனை கூட அவனை மேலும் ரசனையில் ஆழ்த்தியது.

 

“ஆமானு சொல்ல எனக்கும் ஆசை தான். ஆனால் அப்படி சொன்னா அழுதுருவியே. கோயில்ல நீ அழுறது நல்லாவா இருக்கும்? சோ நல்லா இருந்ததுனு சொல்லிக்கறேன்”

 

“போனா போகுதுனு ஒன்னும் என் ஜூஸ்கு கமண்ட் கொடுக்க தேவையில்லை சார். என்னை அழ வெச்சுருவீங்களா?”

 

“ஆனால் ஒன்னு நவி! அன்னைக்கு கொடுத்ததை விடு. இனிமேல் நீ எதைக் கொடுத்தாலும் எனக்கு அமிர்தமா தான் இருக்கும். ஏன்னா அதில் உன்னோட மாசு மறுவற்ற அன்பு கலந்து இருக்கும்ல?” அவளை அன்பு நிறைய நோக்கினான் ஆடவன்.

 

“இதுவும் ஜோக்கா? இல்லை உண்மையா?” எனக் கேட்டாலுமே அவன் கூறிய வார்த்தைகள் உள்ளுக்குள் அமிர்தமாகத் தித்தித்தன அவளுக்கு.

 

“உண்மை முற்றிலும் உண்மை. அதை நீ தான் இன்னும் உண்மைப்படுத்தனும்” என்றவனை,

 

“அது எப்படி உண்மைப்படுத்துறது? சைன் போட்டு முத்திரை குத்தி ஏதாச்சும் டாக்குமென்ட் கொடுக்கனுமா?” என்ற கேள்வியுடன் எதிர் கொண்டாள்.

 

“நோ நோ! என் மேல அன்பு இருக்கா இல்லையானு சொல்லிட்டா போச்சு” தோளைக் குலுக்கினான் அவன்.

 

அவனையே இமை சிமிட்டாமல் பார்த்தாள் காரிகை. அவன் மீது தன் இதயத்தில் ஓங்கி நிற்கும் உணர்வை அன்பு என்னும் ஒற்றைச் சொல்லில் அடக்கிடவும் முடியுமோ? முடியாது அல்லவா?

 

பழகியது சில காலமாக இருந்தாலும் ஈரேழு ஜென்மமும் அவனின்றி வாழ முடியாது, அவன் ஸ்பரிசமின்றி சுவாசிக்க முடியாது எனும் நிலமைக்கு அவளை ஆட்டிப் படைக்கின்றான் ஜித்து.

 

“ஹேய்! என்ன அப்படியே சைலன்ட் ஆகிட்ட? அன்பு இருக்கானு கேட்டதுக்கு இவ்ளோ யோசிக்கனுமா?”

 

“யோசிக்க தேவையில்லை. இப்படி பட்டுனு கேட்டா எப்படி சொல்லுறது? இப்போ உங்க கூட நின்று பேசிட்டு இருக்கேனே, நீங்க டீஸ் பண்ணுறதையும் கேட்டு சும்மா இருக்கேன். இதெல்லாம் எதனால?

 

எல்லாத்துக்கும் மேலாக ஒன்னா சேர்ந்து உணர்வுகளோடு கலக்க கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்கேனே இதற்கு எல்லாம் காரணம் அன்பு இல்லாமல் வேறு எது?” என்று கேட்டவள் அவனிதயத்தில் மேலும்

ஆழமாய்த் தடம் பதித்தாள்.

 

அமைதியாக இருந்தவனிடம், “அன்பு இருக்குனு சொன்ன உடனே குத்தாட்டம் போட ஆரம்பிச்சுடாதீங்க. அதையும் தாண்டி என்னை தினமும் கடுப்பாக்குறதால கொஞ்சம் கோபம் இருக்கு, நிறையவே கடுப்பும் இருக்கு” என்றாள்.

 

“ஆஹான்….?” ஒற்றைப் புருவத்தை லேசாக மேலே ஏற்றி இறக்கியவனின் செய்கையை அவள் ரசிக்க,

 

“அதெல்லாத்தையும் மீறி ரசனையும் எக்கச்சக்கமா இருக்கு. அதை சொல்லாம விட்டுட்டியே கள்ளி” என்று சொன்னவனைப் பார்த்து,

 

“ஆசை தோசை. ரசனையும் இல்லை சுரணையும் இல்லை. உங்களை எல்லாம் போய் எந்த ரசனை உள்ள ஜீவனாவது ரசிப்பாங்களா?” பொய்யாக முகம் சுளித்தாள் அவள்.

 

“எக்ஸாட்லி! அப்போ நீயே உன்னை ரசனை கெட்டவனு ஒத்துக்கிட்டல்ல. அது வரைக்கும் சந்தோஷம்”

 

“டேய் ப்ராடுப் பயலே போடா. உன் கூடல்லாம் மனுசன் பேசுவானா?” அவனது கழுத்தை நெறிப்பது போல் கையைக் கொண்டு செல்ல,

 

“மரியாதை எங்கே தூரப் பறக்குது?” எனக் கேட்டான் விஷ்வா.

 

“மரியாதை ஒன்னு தான் குறை. என்னை வெறுப்பேத்திப் பார்க்குறதுல அப்படி என்ன சந்தோஷம் உங்களுக்கு?” மீண்டும் மரியாதையைக் கையிலெடுத்தாள் நவி.

 

“அது தான் தெரியல. நீ கோபப்படுறது செமயா இருக்கு. முறைக்கும் போது இன்னும் இன்னும் கடுப்பாக்கத் தோணுது” வரிசைப் பற்கள் தெரிய அழகாகப் புன்னகைத்தான் அவன்.

 

அவன் புன்னகையில் தொலைந்து தன்னையும் மீறி ரசித்தாள், ரசிகையாய். 

 

🎶உன் பேர தினம் கூவும்

குயிலா ஆனேன் நான்

நீ பாக்க புது மாரி

ஸ்டைலா ஆனேன் நான்🎶

 

🎶பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா

ஆனேன் நான்

*மனசார உன்னோட ஃபேனா*

*ஆனேன் நான்*🎶 

எனும் பாடல் அவள் மனதில் இனிமையாய் இசைத்தது.

 

“ஓகே! டைம் ஆச்சு விஷ்வா. நான் போய்ட்டு வரேன்” என்றவளிடம்,

 

“ம்ம்! டேக் கேர் நவி. பை” என விடை பெற்றுச் சென்றான் ஆணவன்.

 

……………..

வீட்டிற்குச் சென்ற விஷ்வா டிவி பார்த்துக் கொண்டிருந்த அக்ஷுவின் அருகில் தொப்பென அமர்ந்தான்.

 

“டேய் தடிமாட்டுப் பயலே! இப்படியா வந்து திடும்னு உட்காருவ? பயந்தே போயிட்டேன்” நெஞ்சைப் பிடித்தாள் தங்கை.

 

“ஹா ஹா பயந்துட்டியா பவுடர் டப்பா?”

 

“எனக்கு பயம் காட்டிட்டு நீ கெக்க பிக்கனு சிரிக்கிறியா?” அவன் தோளில் அடித்தாள்.

 

“நான் என்னவோ உன்னை அஞ்சா நெஞ்சம் கொண்ட வீர மங்கைனு நெனச்சி பெருமைப்பட்டேன். பார்த்தா இப்படி பயந்தாங் கொள்ளியா இருக்கியே” நமட்டுச் சிரிப்புடன் அவன் வம்பிழுக்க,

 

“வேணாம் டா உன் கிண்டலைத் தாங்கும் இதயம் எனக்கில்லை. இன்னிக்கு தயவு செஞ்சு என்னை விட்று”

 

“ஓகே ஏதோ போனா போகுதுனு விடறேன். மாம் என்ன பண்ணுறாங்க?” தாயைத் தேடினான் அவன்.

 

“அவங்களோட அருமை மகனுக்கு சூப் செஞ்சுட்டு இருக்காங்க விஷு”

 

“யாரு எனக்கா சூப்பர். என்ன பண்ணுறாங்க?” ஆவலுடன் கேட்டான்.

 

“அடங்கு டா. நான் உன்னை சொல்லல. மித்துவை சொன்னேன்” என்று பழிப்புக் காட்டினாள் அக்ஷரா.

 

“ஆமாடி உண்மை தான். அவன் மகன் மாதிரி. என்னைத் தான் என்னவோ மருமகன் மாதிரி ட்ரீட் பண்ணுறாங்க” பொய்யாக அலுத்துக் கொண்டாலும் அவனுக்குத் தன்னை விட நீலவேணி மித்து மீது அன்பு கொண்டிருப்பது பேரானந்தமே.

 

“பாவம் டா நீயி. போ போய் ஓரமா நின்று அழு. நான் டிவி பார்க்க போறேன்” டிவியில் கவனமானாள் பெண்.

 

“போடி சீரியல் பைத்தியம்” என அவள் தலையில் தட்டி விட்டு சமையலறைக்குள் நுழைந்தான் விஷ்வா.

 

“கண்ணா வா வா. என்ன எட்டிப் பார்க்குறே?” மகனைக் கண்டு கொண்டவராக அழைத்தார் நீலவேணி.

 

“மித்துக்கு சூப் செய்யுற சாட்டுல என் மாம் திருட்டுப் பூனை மாதிரி எதையாச்சும் சாப்பிடுறீங்களானு பார்த்தேன்” தாயின் கன்னத்தைக் கிள்ளினான் அவன்.

 

“பெரிய உளவுத் துறை அமைச்சர் வந்துட்டார் சிஐடி வேலை பார்க்குறதுக்கு” என முறைத்தவர், “என்னைப் பார்த்தா திருடித் தின்னுறவ மாதிரியா இருக்கு?” என்று வினவினார்.

 

“இல்லைனு சொல்ல முடியாது. ஏன்னா சின்ன வயசுல எப்போ பாரு கிட்சன்ல புகுந்து திருடித் தின்னு தாத்தா கிட்ட அடி வாங்கின கதையை எனக்கு பாட்டி சொல்லிருக்கு” உதட்டோரம் குறும்புச் சிரிப்பு தவழ்ந்தது.

 

“போடா படவா! அதே கதையை வெச்சுத் தான் உங்க அப்பா வேற என்னை ஒரு வழி பண்ணுறார்”

 

“நம்மள கேலி செய்யுறத விட டாட்கு வேற வேலை இருக்கா? எப்போ பாரு என்னையும் வம்பிழுத்துட்டே இருக்கார். அவரை வெச்சு செய்ய எதுவும் மேட்டர் இல்லையா?”

 

“அது தான் டா எனக்கும் தெரியல. ஒரு சின்ன மேட்டர் கூட கிடைக்க மாட்டேங்குது” பாவமாகப் பார்த்தார் நீலா.

 

“யூ டோன்ட் ஒர்ரி மாம். எதுவும் சிக்காமலா போயிடும். கிடைச்சுதுனா அதை கப்புனு பிடிச்சுட்டு கதற விடுவோம்” தாயோடு ஹைஃபை கொடுத்தான் மைந்தன்.

 

“சூப் செஞ்சு முடிச்சாச்சு. யார் கொண்டு போய் கொடுக்குறது?” என்று நீலவேணி கேட்க,

 

“வேற யாரு? உங்க வீட்டில் கூரியர் சேவிஸ் இருக்குல்ல. அது மூலமா அனுப்பிருங்க” என்றபடி வந்து சமையல் மேடையில் ஏறி அமர்ந்தாள் அக்ஷரா.

 

“அது யாரு அக்ஷு மா?” புரியாமல் கேட்டார் நீலவேணி.

 

“வேற யாரு இந்த தடியன் தான்” அண்ணனின் தோளில் குத்தினாள் அவள்.

 

“ஏய் பவுடர் டப்பா நான் சிவனேனு தானே இருக்கேன். சும்மா என்னை சீண்டி விடாத” என்று முறைத்தான் விஷ்வா‌.

 

“நீ மித்துக்கு போய் இதைக் கொடுப்ப தானே. இல்லை நான் கொடுக்கவா?”

 

“நான் கொடுத்துருவேன். நீ கம்முனு கிட. மித்துக்காக கூரியர் சேவிஸ் என்ன? வேற என்ன வேணா பண்ணுவேன்” நண்பனை நினைக்கையில் புன்னகை உறைந்தது உதட்டில்.

 

“இருந்தாலும் நீ அவ்ளோ பாசம் வைக்கக் கூடாது அவன் மேல. எனக்கு பார்க்க பொறாமையா இருக்கு அண்ணா” முகத்தை உப்பிக் கொண்டு சொன்னாள் அவள்.

 

“ஏய்! கண்ணு வைக்காதடி என் கண்ணுங்க மேல” என்று அதட்டிய தாயைப் பாரத்து,

 

“பெரிய கண்ணுங்க. அவங்க கண்ணுனா நான் யாரு?” செல்லக் கோபத்துடன் வினவினாள் மகள்.

 

“நீ சப்பை மூக்கி, தவளை வாய் போதுமா?” இடைபுகுந்த விஷுவைக் கண்டு, சீறி எழுந்தாள் அக்ஷரா.

 

“ஹேய் வாயை மூடிட்டு இருங்க” சிரிப்புடன் இருவரது நடுவிலும் வந்து நின்றார் நீலா.

 

“மாம்! ரொம்ப நாளைக்கு அப்புறம் நீங்க சிரிச்சு பார்க்கிறேன். அந்த சிரிப்பு இல்லாமல் போனதுக்கு நானும் காரணம். உங்களை பத்தி தெரிஞ்சும் சட்டுனு வந்த கோபத்தில் ரொம்பவே ஹேர்ட் பண்ணிட்டேன்” வருத்தத்துடன் கூறினான் விஷ்வஜித்.

 

“பழசை யேன் திரும்ப பேசுற கண்ணா? அதுக்கு பின்னாடி தர்ஷன் இருந்தது உனக்குத் தெரியாது. தன் அம்மா இப்படி பண்ணதுக்கு யாரா இருந்தாலும் இப்படி தான் ரியாக்ட் பண்ணி இருப்பாங்க. இதுல உன் தப்பு எதுவும் இல்லை” அவனது முகத்தை வருடினார் அன்புடன்.

 

“இல்லை மா. என்ன இருந்தாலும் எனக்கு மனசு ஆறலை. சாரி கேட்குற தகுதி கூட எனக்கில்லை. இருந்தாலும் மித்து தான் மா உங்களை முழுசா புரிஞ்சுக்கிட்டவன்.

 

நான் கோபப்படும் போது கூட அம்மா மேல கோபப்படாத. அவங்க இப்படி பண்ணுறதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் கண்டிப்பா இருக்கும்னு சொன்னான். உங்க கண்ணுல தெரிஞ்ச பாசம் பொய்யில்லைனு உறுதியா நம்புனான். அவன் தான் உங்க உண்மையான பாசத்தை அறிந்த பையன். நான் இல்லை”

 

“ப்ச் விஷு. நீயும் அவனும் எனக்கு எப்போதும் ஒன்னு தான். நீயும் என் மேல பாசமாத் தான் இருக்கே. மித்து மேல் வெச்ச அளவு கடந்த பாசம் உன்னை அந்த பாசத்தையும் மிஞ்ச வைத்தது. அவ்ளோ தான். இதுல வருத்தப்பட எதுவும் இல்லை” என்றதும்,

 

“லவ் யூ மாம். சாரி சாரி” என தாயை அணைத்துக் கொண்டான் ஆடவன்.

 

……………

ஏ.டூ வார்டினுள் நுழைந்து மகனின் அருகில் சென்றார் ஹரிஷ். கன்னத்தில் கை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான் மித்ரன். ஓரமாக இருந்த ஸ்டூலை இழுத்து கட்டிலருகே போட்டு அமர்ந்தவர் தூங்கும் மகனையே பார்த்தார்.

 

மனைவியின் இழப்பையும் தாண்டி வர தந்தையெனும் அந்தஸ்தைக் கொடுத்து அவரைப் புதிதாக உயிர்த்தெழச் செய்தவன் இந்த அருள் மித்ரன். அவனை உண்மையில் இறைவன் தனக்குக் கொடுத்த பேரருளாகவே நினைக்கிறார்.

 

அவனது தலையை அன்புடன் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க, மெல்லமாய் இமை பிரித்தவனின் விழித்திரைக்குள் விழுந்தது தந்தையின் முகம்.

 

“டாடி!” என்ற அழைப்புடன் சிரித்தவனிடம், “எழுந்துட்டியா மித்து? இன்னும் தூங்கு” என்றார் ஹரிஷ்.

 

“தூக்கம் போயிருச்சு. சாப்பிட்டீங்களா? மெடிசீன் எடுத்தீங்களா?” கேள்வி எழுப்பினான் அவன்.

 

“இப்போ நீ தான் பேஷன்ட். இதே கேள்வியை நான் கூட கேட்கலாம்” கிண்டலாக சொல்லும் போதே குரல் கமறியது. தன் மகனை இப்படி ஹாஸ்பிடலில் காண மனம் வலித்தது.

 

“கேட்குறதுனா கேளுங்க. அதை விட்டுட்டு எதுக்கு உங்க ஒரு தலைக் காதலிகளை நினைச்சு பாட்டு பாட வாய்ஸை சரி பண்ணுறீங்க?” கிண்டல் ஒளிந்திருந்தது அவன் குரலில்.

 

“ஒரு தலைக் காதலிகள் எல்லாம் எதுக்கு எனக்கு? என் செல்ல அன்னுக் குட்டியே போதும் டா” 

 

“அது யாரு அன்னுக் குட்டி அன்னப் பறவைனு? புதுசா அப்பாய்மன்ட் வாங்கி வந்திருந்த அந்த லேடி டாக்டரா?” உதட்டுக்குள் உதித்த சிரிப்புடன் மித்து.

 

“அது யாரு டா? ஹான் புதுசா சார்ஜ் எடுத்துக்கிட்ட டாக்டரா? டேய் அவங்களை நானே பார்க்கல. நீ பார்த்திருக்க. என்னை சொல்லிட்டு நீ பார்க்குறியா திருடா” அவன் காதைத் திருகினார் ஹரிஷ்.

 

“நான் ஒன்னும் ஆன்ட்டி ஹீரோ இல்லை. அது யாரு கன்னுக் குட்டினு சொல்லவே இல்லையே” விடாமல் கேட்டான் மகன்.

 

“கன்னுக் குட்டி இல்லை. அன்னுக் குட்டி! உன் அம்மா அன்னபூர்ணியை தான் சொன்னேன்” 

 

“நம்ப முடியலையே மை லாட்” தந்தையை ஆராய்ச்சிப் பார்வை பார்க்கலானான் காளை.

 

“நம்பு டா மீ பாவம்” பாவமாகப் பார்க்க, “ம்ம் சரி நம்புறேன்” என்று சிரித்தவனுக்கு இருமல் வந்தது.

 

“பார்த்து கண்ணா!” அவன் தலையில் தட்டி தண்ணீர் புகட்டினார்.

 

சற்று சரியானவனைக் கண்டு, “மித்து! யேன் டா சட்டுனு சூட் பண்ணிக்கிட்ட? விஷுக்காக தான்னு தெரியும். ஆனாலுமே உன் கிட்ட இப்படி கேட்கத் தோணுது. உனக்கு என் கையால ஆப்பரேஷன் பண்ணத நினைக்கும் போதே தாங்க முடியல.

 

சுயநினைவை இழந்த அந்த டைம்ல கூட உன் வாய் விஷு உனக்காக நான் வருவேன்னு சொல்லுச்சு. அந்த ஆத்மார்த்தமான நட்பை என்னால வியக்காமல் இருக்க முடியல” வாய்க்கு வந்தபடி இன்னும் ஏதேதோ பேசினார்.

 

அவர் மனதிலுள்ள ஆதங்கத்தைக் கொட்டட்டும் என அமைதியாக சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான் மித்து.

 

“இனிமேல் எக்காரணம் கொண்டும் இப்படி ஒரு முடிவை நீ எடுக்கக் கூடாது. நண்பனுக்கு அப்படி ஒரு நிலமை வந்தால் இந்த முடிவை எடுக்கனும் தான். ஆனால் உனக்காக விஷு துடிச்ச துடிப்பைக் கண்ணால பார்த்ததால சொல்லுறேன். அவன் அப்படி உடைஞ்சு போய் நான் பார்த்ததில்லை” என்றார் ஹரிஷ்.

 

“இனிமேல் அப்படிப்பட்ட சூழ்நிலை வராதுனு நினைக்கிறேன். தர்ஷனை அர்ரஸ்ட் பண்ணிட்டாங்கள்ள. ஆனால் ஒன்னு எந்த ப்ராப்ளம் வந்தாலும் அது என்னை மீறித் தான் என் மாப்ளயை நெருங்கும். அதை நீங்க சொன்னாலும் என்னால கேட்க முடியாது. சாரி டாடி” அவரிடம் மன்னிப்பை யாசித்தான் அன்பு மகன்.

 

“ஏன் அப்படி நினைக்கிற? இனிமேல் எந்த ப்ராப்ளமும் இல்லாமல் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பீங்க” முழுதாகத் தெளிந்து இருவரையும் மனதார ஆசீர்வதித்தார்.

 

“பாப்பா எங்கே டாடி? அவள் மட்டும் வீட்டில் தனியா இருக்காளா?”

 

“ஆமா. வீட்டுக்கு போக முடியாதுனு தான் சொன்னா. நான் தான் போகச் சொன்னேன். அவளுக்கு ஹாஸ்பிடல் வாசனை அவ்வளவு ஒத்துக்காதுல்ல” என்று பதிலளித்தார்.

 

“இன்னும் கொஞ்ச நேரத்தில் விஷு வருவான்ல. அவன் கிட்ட வைஷுவை கூட்டி வர சொல்லுறேன். அவளுக்கும் தனியா இருந்தால் போரடிக்கும்ல” என்ற மித்து விஷ்வாவுக்கு அழைத்து அவளை அழைத்து வருமாறு கூறினான்.

 

“கரும்பு தின்னக் கூலியா? உன்னைப் பார்க்க ஒரு சான்ஸ்சை உன் அண்ணனே உருவாக்கித் தந்துட்டான். தாங்க் யூ மாப்ள!இதோ வரேன் டி என் ராங்கி!” என்று கூறி உல்லாசமாய் விசிலடித்தான் நவியின் ஜித்து.

 

நட்பு தொடரும்….!!

 

✒️ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!