விஷ்வ மித்ரன்
💙 நட்பு 38
நேற்றிரவு தன் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வந்திருந்தாள் அக்ஷரா. இன்று விஷ்வா தம்பதியினர் மறுவீடு வருவதாக இருக்க, சமையலறையில் இருந்தாள் அக்ஷு.
“அம்முலு….!!” எனக் கேட்ட சத்தத்தில் பயந்து போய் திரும்பினாள் அவள்.
“ஏன் டா கொஞ்சம் மெல்ல பேச வராதா? எதுக்கு பக்கத்து தெரு வரைக்கும் கேட்க லவுட் ஸ்பீக்கர் போட்டு கத்துற?”
“பக்கத்து தெருவில் புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கா. அவள் என் ஸ்வீட் வாய்சைக் கேட்டு ரசிக்கட்டும் என்று சவுண்டு விட்டேன்” பேன்ட் பாக்கெட்டுக்குள் ஸ்டைலாக கையை விட்டுக் கொண்டான் அருள் மித்ரன்.
“ஓஹ்ஹோ! அப்படி ஒரு ஆசை வேற உனக்கு இருக்கா? பக்கத்து தெருவுக்கு பொண்ணு வந்திருக்கிறது எனக்கே தெரியல. உனக்கு எல்லாம் தெரியுதுல்ல”
“எஸ் எஸ்! ஆல் டீடேல்ஸ் ஐ நோ ஸ்வீட்டி”
“வாயை உடைச்சுருவேன். பொண்ணுங்க இருக்கும் இடமெல்லாம் சிசி டிவி கேமரா வெச்ச மாதிரி டக்கு டக்குனு நியூஸ் வருது. அது சரி அந்தப் பொண்ணைப் பார்த்தியா?”
“இன்னும் இல்லை. வெள்ளை மல்லிகையா இல்லை கறுப்பு ரோஜாவா அப்படினு பார்க்கனும்” அவளது முக பாவனைகளைக் கூர்ந்து அளவிட்டான் காளை.
“இன்னொரு பொண்ணைப் பத்தி சொல்லி வெறுப்பேத்தினா நான் ஒன்னும் பாசசிவ்ல பொங்கி அழுக மாட்டேன். பார்க்குற கண்ணை நோண்டிருவேன். முகரைய பேத்துருவேன் பார்த்துக்க” மூக்கு நுனி சிவந்தது அவளுக்கு.
“உன்னைப் பத்தி தெரிஞ்சும் பாசசிவ்னஸ் வரும்னு நெனச்சது தப்புத் தான். ஆனாலும் என் செல்ல ராங்கி டி நீ” அவள் கன்னத்தைக் கிள்ளினான்.
“சரி சரி ஐஸ் வைக்காத” என முறைத்தவள், “யெஸ்டர்டே ஹாட் சாக்லேட் எப்படி இருந்துச்சு?” என்று கேட்டாள்.
“ஸ்ஸ் அதைப் பற்றி கேட்கும் போதே அப்படி இருக்கு. ஹாட் சாக்லேட் வித் கிஸ், ஹக் எக்ஸட்ரா எக்ஸட்ரா.. சும்மா வேற மாதிரி இருந்தது” அவன் விழிகள் அவளது இதழில் பதிந்தன.
அவன் பார்வையில் “அச்சோ கேட்டதுமே பார்க்க ஆரம்பிச்சுட்டானே” என திரும்பிக் கொள்ள, “இவ்ளோ பயமா எனக்கு” என்று வாய் விட்டே நகைத்தான் மித்ரன்.
“ஓகே இன்னிக்கு பயம்னு வெச்சுக்க. எனக்கு வெங்காயத்தை நறுக்கி தா” என்றிட, “ஏன்டி வந்த உடனே வேலை வாங்குற?” என்றான் பாவமாக.
“உன் ப்ரெண்டு வரான்ல அவனுக்காக ஸ்பெஷலா சமைக்க பார்த்தேன். முடியாதா?”
“என்னாதூ நீ சமைக்கிறியா? அதுவும் ஸ்பெஷலா? நான் இல்லை” என ஓட ஆயத்தமானவனின் டிசர்ட்டை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள் மனைவி.
“எங்கே எங்கே ஓடுற? நான் சமைக்கிறதை நீ மட்டுமில்ல அந்த லூசுப் பய விஷ்வாவும் சாப்பிட்டு தான் ஆகனும்”
“என் விஷு லூசா? நீ தான் டி அரை லூசு”
“நீ முக்கா லூசு, உன் ப்ரெண்டு முழு லூசு” பழிப்புக் காட்டியவளின் தலையில் நங்கென்ற கொட்டு விழ, “யேன்டா” என்று கேட்டவளிடம், “கொஞ்சம் அக்கடச்சூடு” என பின்னால் கை காட்டினான் மித்து.
திரும்பியவளோ தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் அண்ணனைக் கண்டு திரு திருவென விழித்தாலும், “ஹாய் அண்ணாத்த” என சல்யூட் வைத்தாள்.
“எவ்ளோ அடிச்சாலும் வாய் குறையுதா பாரு உனக்கு?”
“அண்ணனோட வாய் தங்கச்சிக்கு இல்லாமல் போகுமா?” என்றபடி வந்த வைஷுவைக் கண்டு, “வைஷு வா வா” என அழைத்தாள் அக்ஷரா.
“வந்துட்டேன்! வந்த உடனே உன்னை கலாய்க்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா?”
“அதைத் தவிர இந்த தடிப் பயலுக்கு என்ன வேலை? யார் கிட்டேயாவது வம்பு பண்ணுறது தான் ஆல்டைம் டியூட்டி” என்று நொடித்துக் கொண்டாள் அக்ஷு.
“ஏய் நான் ஃபேமஸ் பிஸினஸ் மேக்னட் டி. என்னைப் பார்த்து இப்படி சொல்லாத” அவள் காதைப் பிடித்து திருகினான் விஷ்வா.
“விளங்குது. எப்போ பாரு வீட்டுல மேக்னட் மாதிரி ஒட்டிக்கிட்டு இருப்ப. இதுல பிசினஸ் மேக்னட்னு புளுகாத” அவன் கையைக் கிள்ளி விட்டு காதை அவன் பிடியில் இருந்து மீட்டுக் கொண்டாள்.
“அம்மா வரலையா மாப்ள?” நண்பனிடம் வினவினான் மித்து.
“மாம் அன்ட் டாட் அப்பா கூட பேசிட்டு இருக்காங்க” என்று சொல்லி சமயலறையில் இருந்து வெளியே சென்ற விஷு,
“நீங்க போய் பேசிட்டு இருங்க. நான் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்” என்ற அக்ஷுவின் பேச்சில் வாந்தி எடுப்பது போல் செய்கை செய்தான்.
“உனக்கு வாந்தி தான் வருது. எனக்கு இவ ஜூஸ் பத்தி நினைக்கும் போது ஹார்ட் அட்டாக்கே வருது விஷு” என பயத்துடன் சொன்னான் மித்து.
“போங்கடா பெருச்சாளிங்களா! நிஜமாவே ஒரு நாளைக்கு விஷத்தை வெச்சுருவேன்” கொதித்தெழுந்தாள் அக்ஷரா.
“வைக்க தேவலை உன் கையால எது சாப்பிட்டாலும் அப்படி தான் இருக்கும்” என விஷு சொல்ல, அக்ஷு அகப்பையை எடுத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்தாள்.
“அய்யோ நான் இல்லை” அவன் ஓட, “என்ன நடக்குது டா?” எனக் கேட்டார் சிவகுமார்.
“பிசாசு துரத்துது டாட்!” என மித்துவைப் பிடித்துக் கொண்டு பின்னால் மறைய, “அவன் பின்னாடி போனா விட்றுவேனா? அவனுக்கும் சேர்த்து அடிப்பேன்” மித்துவிற்கு அடிக்க கை ஓங்கியவளின் கையைப் பிடித்து முறுக்கி,
“என் முன்னாடியே ப்ரெண்டுக்கு அடிப்பியா?” என்று கேட்டான் விஷு.
“பொல்லாத ப்ரெண்டு” என்றாள் துடுக்காக.
“உனக்கு பொறாமை டி”
“இதே வார்த்தையைக் கேட்டு கேட்டு பொறாமைக்கே பொறாமை வந்துர போகுது”
“போடா! நான் போய் ஜூஸ் போட்டு வரேன்” என்று அக்ஷு திரும்ப, “நீ எதுக்கு அக்ஷுமா இந்த வேலை எல்லாம் பண்ணுற? நீலா நீ போய் ஜூஸ் போடு குட்டிமா ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் சிவகுமார்.
“பார்த்தியா டாட்கு மட்டும் தான் என் மேல பாசம்” தந்தையின் தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டாள் மகள்.
“அவர் உன் மேல இருக்கும் பாசத்தில் சொல்லல. அவரோட உயிர் மேல் இருக்கும் பாசத்தில் தான் சொன்னார். இன்னிக்கு பவுடர்கு பதிலாக கரப்பான் பூச்சி மருந்தை போட்டுட்டேனா உயிருக்கு என்ன உத்தரவாதம்?” விடாமல் காலை வாரிய விஷ்வாவை மிரண்டு பார்த்தார் தந்தை.
“ஏன் டாட் உண்மையாவே அதுக்கு தான் வேணாம்னு சொன்னீங்களா?” அப்பாவிடம் கேட்டாள் அவள்.
“அக்ஷுமா இல்..லை டா. நெஜமாவே அதுக்கு சொல்லலை. இவன் சும்மா நம்மளை பிரிக்க ட்ரை பண்ணுறான்” என்றார் சிவகுமார்.
“ஆமா டாட் சரியான பொறாமை புடிச்சவன்” என விஷுவை முறைத்தாள் தங்கை.
நீலவேணி ஜூஸ் போட்டு வந்து அனைவருக்கும் பரிமாறி விட்டு தானும் அமர்ந்து கொண்டார்.
“அம்மா ஜூஸ் சூப்பர். ரொம்ப நாளைக்கு பிறகு” என சப்புக் கொட்டிய மித்ரனைக் கண்டு, புன்னகைத்தார் நீலவேணி.
“சிவா! ரிசப்ஷன் எப்போ வைக்கலாம்னு கேட்டியே. வர்ர வியாழக் கிழமை வைக்கலாம்னு டிசைட் பண்ணிருக்கோம். உனக்கு எப்படி?” நண்பனிடம் கேட்டார் ஹரிஷ்.
“ஓகே ஹரி! எனக்கு எப்போனாலும் ஓகே தான். உனக்கு தான் இம்போர்டன்ட் ஆப்பரேஷன் வரதால ஃப்ரீ இல்லை” ஹரிஷின் முடிவிற்கு சம்மதித்தார் சிவகுமார்.
“இவருக்கு நீங்க நினைக்கிற மாதிரி தினமும் டியூட்டி இல்லை. நர்ஸ் அன்ட் அழகான பேஷன்டை சைட் அடிக்கிறது தான் இவரோட ஆல்டைம் வேலைப்பா” இடை புகுந்து கிண்டல் குரலில் சொன்னான் மித்து.
“டேய் என் அப்பாவை போய் அப்படி சொல்லுவியா? அவர் ரொம்ப டீசன்டான ஆளு” என்று விஷ்வா வரிந்து கட்டிக் கொண்டு வர,
“அட அட இந்த டைம்கு மட்டும் தான் நீ முட்டைக் கோசு மித்ரன்கு சப்போர்ட் பண்ண மாட்ட” என்று சிரித்தாள் அக்ஷு.
“ஆமா அக்ஷு! வேற டைம்கு பசை போட்ட மாதிரி ஒட்டிக்கிட்டு இருப்பாங்க” என ஒத்து ஊதினாள் வைஷு.
“உனக்கும் ஆசைனா நேரடியா சொல்லு வைஷு. உன் கூட பசை என்ன அதை விட ஒட்டிக்கிட்டு இருக்கேன்” என அவள் காதில் கிசு கிசுத்தான் விஷ்வஜித்.
“ஹேய் யாராவது கேட்டுட போறாங்க” அடிக் குரலில் சீறியவளுக்கு அவன் அருகில் இருப்பது முள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது.
இப்போதெல்லாம் அவனது அருகில் இருப்பது மட்டுமல்ல அவனோடு பேசுவதைக் கூட தவிர்த்து விட்டிருந்தாள். அவனைப் பார்க்கையில் ஆராவின் முகம் தெரியும் போது அவளும் என்ன தான் செய்வாள்?
“அப்போ ரூம்கு வந்து சொல்லுறேன்” என அழைக்க, “ப்ச் விளையாடாதீங்க” முறைப்புடன் பார்த்தாள் வைஷ்ணவி.
அனைவரும் சாப்பிட அமர்ந்திட நீலவேணியை இழுத்து அமர வைத்து, “இன்னிக்கு நான் தான் பரிமாறுவேன். நீங்க உட்காருங்க மாம்” என்று பரிமாறத் துவங்கினாள் அக்ஷரா.
“அடடா அநியாயத்துக்கு ரொம்ப நல்லவள் ஆகிட்ட அம்முலு” என மித்ரன் சொல்ல, “ஆமாடா என்னால இதை நம்பவே முடியல” என வியந்தான் நண்பன்.
“அவளே பெறுப்பான பொண்ணா மாறிட்டு வராள். நீங்க சும்மா என் செல்லக் குட்டியை எதுவும் சொல்ல வேணாம்” என்றார் சிவகுமார்.
“நான் தான் சமச்சேன் எப்படி இருக்கு சாப்பாடு?” என்ற அக்ஷுவின் கேள்வியில், “சும்மா பொய் சொல்லாமல் போடி. உன்னால இவ்ளோ டேஸ்டா எல்லாம் சமைக்க முடியாது. இது ஹரிப்பா கைப்பக்குவம்னு எனக்குத் தெரியும்” நக்கலாக உரைத்தான் விஷ்வா.
“என்னது ஹரியை சமைக்க விட்டியா? அவனுக்கு எத்தனை வேலை இருக்கு? நீ என்ன பண்ணுற அக்ஷு?” சிவகுமார் மகளை முறைத்தார்.
“அவளை சமைக்க சொல்லும் போதெல்லாம் பாவம், கொஞ்ச நாள் போகட்டும், கை சுடும் கால் சுடும்னு சொல்லிட்டு இப்போ திட்டி என்ன பிரயோஜனம்?” கணவனிடம் எகிறினார் நீலவேணி.
“இருங்கப்பா. அக்ஷு சமைக்க வந்தா. நான் தான் விஷுக்கு என் சமையலை சாப்பிட ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாளா அவன் என் கையால சாப்பிடலன்னு நானே சமைச்சேன். அது தெரியாமல் என் பட்டுக் குட்டியை எதுவும் சொல்லாதீங்க” அக்ஷுவின் தலையை வருடி விட்டார் ஹரிஷ்.
“நீங்க எதுவும் பேசாதீங்கப்பா. மாம்கு என்னை திட்டலனா பொழுது விடியாது. நான் போறேன்” என முறுக்கிக் கொண்டு சென்றாள் அக்ஷு.
“அடியே முட்டபோண்டா! நீ போனா உன் பங்கையும் நான் சாப்பிடுவேன்” என விஷ்வா கத்த, “எனக்கும் வெச்சுடு விஷு” என ஓடி வந்து அவளது தட்டை எடுத்துக் கொண்டு நடக்க,
“தின்னி மூட்டை இங்கே வாடி” என அவளை இழுத்து அமர வைத்து ஊட்டத் துவங்கினான் விஷு.
“இவ்ளோ பாசமா உனக்கு என் மேல?” என வாய் கேட்டாலும் மனமோ, அண்ணனின் பாசத்தில் பூரித்துப் போய் அவன் ஊட்டியதை சாப்பிட்டு மகிழ்ந்தது.
இதைப் பார்த்திருந்த வைஷ்ணவிக்கோ விஷ்வாவைப் பார் பார் என மனம் துள்ளியது. இவ்வளவு அடாவடியான அன்பு தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கவும் செய்தாள்.
சாப்பிட்டு முடிய பல்கோணியில் நின்றிருந்த வைஷுவின் அருகில் வந்து, “ஓய் நவி” என அழைத்தான் விஷ்வா.
“என்ன?” இவ்வளவு நேரம் ஆராவின் நினைவில் உழன்றவள் அவன் மீதிருந்த கோபத்தில் பட்டெனக் கேட்டாள்.
“ஏன்மா ஒரேயடியா பாயுற? நான் என்ன பண்ணேன் உனக்கு?” பாவமாகப் பார்த்தான் அவன்.
“என்னெல்லாமோ பண்ணி இருக்கீங்க. நீங்க பண்ணுன வேலைக்கு பாயக் கூடாது உங்களை வேற மாதிரி டீல் பண்ணனும்” சிறு வெறுப்பும் துளிர் விட்டிருந்தது அவள் குரலில்.
“என்ன பண்ணேனு சொன்னால் தானே தெரியும்?”
“எல்லாம் பண்ணிட்டு தெரியாத மாதிரி இருக்காதீங்க. உங்க பச்சைப் பிள்ளை பார்வையால் மயக்க ட்ரை பண்ணாதீங்க”
“ஆஹா கண்டுபிடிச்சுட்டேன். எதுக்கு இவ்ளோ கோபமா இருக்கீங்கனு தெரிஞ்சு போச்சு”
“எதுக்கு? சொல்லுங்க பார்ப்போம்”
“ரொம்ப நாளா ஹெல்ப் பண்ணலைனு டென்ஷன் ஆகுறீங்க தானே? ஹெல்ப் வேணும்னு கேட்டா உடனே தருவேனே” மாயக் கண்ணனின் முகத்தில் குறும்பு கூத்தாடியது.
“ஹெல்ப்பா? நான் எதுவும் ஹெல்ப் கேட்கலையே” புருவம் இடுங்கக் கேட்டாள் காரிகை.
“வாய் திறந்து கேட்கலனாலும் உன் முகம் காட்டிக் கொடுக்குது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இல்லையா?”
“தெளிவா குழப்புறீங்க. நான் எதுவும் கேட்கலை”
“ஓகே அந்த ஹெல்பை பண்ணியே காட்டுறேன்” என்றவன் அவளை நெருங்கி நாடி பற்றி முகத்தைத் திருப்பி கன்னத்தில் முத்தமிட்டான்.
முத்தம்! மெல்லிய எதிர்பாராத அந்த முத்தம் அவளை மாய வலைக்குள் தள்ளியது.
சிலிர்த்தாள் அவள்!
அவனின் அவள்!
அவனுக்கு மட்டுமே உரியவள்!
“ஹெல்ப் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? இது உனக்கு தேவைப்பட்டதால தான் கோபமா இருக்கிற மாதிரி இருந்தல்ல?”
சட்டென திகைப்பில் இருந்து மீண்டு, “இந்த கருமம் புடிச்ச ஹெல்பை நான் கேட்டேனா? கடன் முடிஞ்சு இப்போ உதவியா?” படபடவென வெடித்தாள் வஞ்சி.
“உனக்கு முத்தம் தேவைப்படுவதற்கு அறிகுறி இந்த கோபம். இனிமேல் கோபப்பட்டீனா டக்குனு ஹெல்ப் பண்ணி கோபத்தைக் குறைச்சிருவேன்”
“கோபத்துக்கும் முத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? தேவையில்லாமல் இரண்டுக்கும் முடிச்சு போடாதீங்க” கோபத்தில் அவள் கத்தினாள்.
“இப்போவும் தேவைப்படுதுனு நினைக்கிறேன்” என்று மீண்டும் நெருங்கி வர, “போடா” அவனைத் தள்ளி விட்டுச் சென்றாள்.
அவன் இதழின் ஈரம் கூட தன்னில் இருக்கக் கூடாது என்று நினைத்தாளோ?
கைகள் அவன் முத்தமிட்ட கன்னத்தை அழுத்தத் துடைத்தன.
……………
ஊஞ்சலில் அமர்ந்து எங்கோ பார்வையை நிலைக்க விட்டிருந்த வைஷ்ணவியின் அருகில் வந்தமர்ந்தான் மித்ரன்.
“வைஷுமா..!!” என்ற அவன் குரலில் சட்டென அவனைப் பார்வையால் தழுவியவள் அவனது தோளில் தலை வைத்துக் கொண்டாள்.
அவனோ அவளே பேச்சைத் துவங்கட்டும் என்று அமைதியாக தலையை வருடிக் கொடுத்தவாறு இருந்தான் அண்ணன்காரன்.
சிறிது நேரம் கழித்து அவளாகவே “அண்ணா” என அழைத்தாள்.
“சொல்லு பாப்பா. எதுக்கு தனியா இங்கே வந்து உட்கார்ந்து இருக்கே?” என்று கேட்டான்.
“இங்கே இருந்த வரைக்கும் இந்த ஊஞ்சல்ல ஆடிட்டு இருந்தேன். இப்போ இதுவும் எனக்கு வேற்றிடமா மாறிடுச்சு. அதான் கொஞ்சம் உட்கார்ந்துட்டு போகலாம் என்று வந்தேன்” அவள் முகத்தில் வலியின் சாயல்.
“என்னடா இது? வேறு இடம்னு பிரிச்சு பேசுற? நீ அங்கே போனாலும் இது உன் வீடு பாப்பா. இங்கே எப்போ வேணாலும் வரலாம். உனக்கு வரணும்னு தோணுறப்போ சொல்லு விஷு கூட்டிட்டு வருவான்,
இல்லனா நான் வந்து கூட்டிட்டு போறேன்” ஆதுரமாக உரைத்தான் அண்ணன்.
“ம்ம் சரிணா”
“வைஷு! உன் கிட்ட ஒன்னு கேட்கிறேன் தப்பா எடுத்துக்காத. இது அம்மா கேட்டிருக்க வேண்டிய கேள்வி. அவங்க தான் நம்ம கூட இல்லையே சோ அம்மா சார்பா நான் கேட்கிறேன்” என்றவனை,
“எதுவா இருந்தாலும் கேளுங்கணா. நான் தப்பா நினைப்பேனா என் செல்ல அண்ணனை?” என ஆவலுடன் ஏறிட்டாள்.
“விஷு கூட நீ சந்தோஷமா இருக்கிறாய் தானே? உனக்கு விஷுவை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் கேட்கிறேன்” என்று கேட்ட தன் சகோதரனைப் பரிவுடன் நோக்கினாள் வைஷு. இதற்கு என்னவென்று பதில் அளிப்பாள் அவள்?
“உன் பர்சனல் விஷயத்தில் நான் மூக்கை நுழைக்கிறது தப்புதான் வைஷு. இருந்தாலும் எனக்கு என்னவோ உன்னைப் பார்க்கும் போது அவன் கூட ஒட்டுதல் இல்லாமல் இருக்கிற மாதிரி தோணுது. ஒன்னு தெரிஞ்சுக்க விஷு விளையாட்டு பையன் தான்.
ஏதாவது எடக்கு மடக்கா பேசுவான், கலாய்ப்பான், கடுப்பாக்குவான், நிறைய ஜோக்கடிப்பான் பட் அவனுக்குனு இன்னொரு பக்கமும் இருக்கு. அவன் எவ்ளோ ஜாலி டைப்போ அதை விட கோபக்காரன்.
அவனை நீ என்னிக்கும் தப்பா நினைச்சுராத. உண்மையான காரணம் இல்லாமல் அவனைத் தப்பா நினைச்சு அவனுக்கு அது தெரிஞ்சால் ரொம்ப சீரியஸ் ஆயிடுவான். அவனுக்கு லேசில் கோபம் வராது. ஆனால் வந்தால் அதை இல்லாமல் பண்ணுவது ரொம்ப கஷ்டம்” நண்பனைப் பற்றி அவளுக்கு எடுத்துச் சொன்னான்.
மித்ரன் சொன்னதைக் கேட்டு பொங்கி எழுந்தவளுக்கு இதற்கு மேலும் ஆரா விஷயத்தை மறைக்கத் தோன்றவில்லை. இத்தனை நல்லவனாக நடிக்கும் விஷ்வாவின் சுயரூபத்தை அவனது நண்பனுக்குத் தெரியப்படுத்த முடிவு செய்தாள் தங்கை.
“நான் அவனை தப்பா நினைக்கத் தேவையில்லை. அவன் தப்பானவனே தான். ஒரு வேளை அவன் தப்பானவனா இருக்கும்போது நான் தப்பா நினைச்சாலும் கோபப்படுவானா?” என்று கேட்டவளை புருவம் சுருக்கிப் பார்த்தான் மித்ரன்.
“வாட்? என் விஷு தப்பானவனா? அவன் என்ன தப்பு பண்ணான்?”
“அவன் பண்ணது சாதாரணமான தப்பு இல்லை. பெரிய துரோகம் பண்ணிட்டான். ஒன்னுக்கு ரெண்டு பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்டான்” என்றாள் வைஷு வெறுப்பு மண்டிய குரலில்.
“வேண்டாம் பாப்பா! இதுக்கு மேல எதுவும் பேசறது நல்லா இல்ல. விஷுவை தப்பா பேசாத” என எச்சரிக்கை விடுத்தான் ஆடவன்.
“தப்பா பேசுறது நான் இல்லை, முழுக்க முழுக்க தப்பா மட்டுமே பேசி தப்பா நடந்துக்கிட்டு தப்பு பண்ணவன் அந்த விஷ்வா. அவன் மகா தப்பு பண்ணிட்டான். அவன் எனக்கு மட்டும் இல்லைண்ணா…” என நிறுத்தியவள்,
உள்ளே இறங்கிச் செல்லும் வார்த்தைகளை வெளியே இழுத்து வந்து, “உண்மையை மறைச்சு உங்களுக்கும் துரோகம் பண்ணிட்டான்” என்றாள் மெதுவாக.
இத்தனை நேரம் இழுத்துப் பிடித்த பொறுமை காற்றில் பறந்து விட உள்ளமெல்லாம் கொந்தளிக்க, கண்கள் சிவக்க கைமுஷ்டி இறுக, “ஏய்” என்று தன் அன்புத் தங்கைக்கு அறைய கையை ஓங்கினான், விஷ்வாவின் மித்ரன்!
நட்பு தொடரும்….!!
✒️ஷம்லா பஸ்லி