தணலின் சீதளம் 25

4.9
(16)


சீதளம் 25

“ஐயோ என்ன அப்பத்தா இவ்வளவு பூ வைக்க சொல்றீங்க ஏற்கனவே என் தலையை பாருங்க இவ்வளவு பூ வச்சிருக்காங்க சொல்ல சொல்ல கேட்காம” என்று முதலிரவுக்கு அவளை அலங்கரித்துக் கொண்டிருக்க, ஏற்கனவே அவள் தலையில் அதிக அளவு பூ வைத்திருந்தார்கள் அழகு கலை கலைஞர்கள்.
இதில் அப்பத்தா வேறு தன் பங்கிற்கு தங்களுடைய தோட்டத்தில் பூத்த குண்டு மல்லிகையை தன் கையாலேயே தொடுத்தவர் அவளுக்காக அதைக் கொண்டு வந்தார்.
“ பரவால்ல ஆத்தா வச்சுக்கோ இன்னும் அழகா இருப்ப” என்று சொல்லியவர் தன் கையாலேயே அவளுக்கு வைத்தும் விட்டார்.
ஓரளவு அவளுக்கு அலங்காரங்கள் முடிந்திருக்க சற்று நேரத்தில் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டாள்.
வெகு நேரம் அலங்காரம் செய்ததில் ஒரே இடத்தில் அமர்ந்ததால் அவளுடைய இரு கால்களும் வெகுவாய் வலித்தது.
“ அப்பா முடிஞ்சிருச்சா எவ்வளவு நேரம் மேக்கப் போட கால் ரெண்டும் வேற வேற பக்கம் போகுது. ரிசப்ஷனுக்கு கூட மேக்கப் போட இவ்வளவு நேரம் ஆகல ஆனா ராத்திரி தூங்க போறதுக்கு இவ்வளவு மேக்கப்பா” என்று தன்னுடைய கால்களை நீவி விட்டவாறே அவள் சொல்ல அதைக் கேட்ட மற்றவர்களோ வாயில் கைவைத்து மறைத்து சிரித்துக்கொண்டனர் அவளுடைய கூற்றில்.
அப்பத்தாவோ,
“ ஆத்தா என்ன இப்படி சொல்லிட்ட இன்னைக்கு உனக்கும் என் பேராண்டிக்கும் முதலிரவு மறந்துட்டியா” என்று அவர் கேட்க,
‘அச்சச்சோ ஒரு ப்ளோர்ல வாய்க்கு வந்ததை இப்படி சொல்லிட்டியேடி’ என்று நினைத்துக் கொண்டவள்,
“இல்லா அப்பத்தா அது ஏதோ ஒரு ப்ளோர்ல சொல்லிட்டேன்” என்று அசடு வழிந்தாள்.
அந்த நேரம் சரியாக அன்னலக்ஷ்மி கையில் பால் சொம்புடன் அவர்கள் இருக்கும் அறைக்குள் வந்தவர் தங்களுடைய மருமகளின் அழகில் மயங்கி விட்டார்.
“ அத்தை என் மருமக ரொம்ப அழகா இருக்கா இத கொஞ்சம் பிடிங்க. என் மருமகளுக்கு கண்ணு பட்டுடும் முதல்ல அவளுக்கு திருஷ்டி பொட்டு வைக்கணும்” என்றவர் தன் அத்தையிடம் பால் சொம்பை கொடுத்துவிட்டு மேகாவின் அருகில் வந்தவர் அவருடைய கண்ணில் இருந்த கண்மையில் தன் விரல் கொண்டு சிறிது எடுத்தவர் மேகாவின் இடது பக்க காதில் பின் பக்கத்தில் வைத்து விட்டார்.
பின்பு வடிவுக்கரசியோ,
“ ஆத்தா வா தாயி வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்ற அழைத்தார்.
மேகாவோ,
‘ ஐயோ இவங்க வேற நானும் அவனும் ஆத்மார்த்தமா காதலிச்சு கல்யாணம் பண்ண மாதிரி பில்டப் பண்றாங்க சும்மா போய் தூங்குறதுக்கு ஏன்டா இந்த அலப்பறை பண்றீங்க’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள், வடிவுக்கரசி அன்னலட்சுமி இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்.
அதில் வடிவுக்கரசியோ,
“ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும்” என்று வாழ்த்தியவர் கூடுதலாக மெகாவிடம்,
“ ஆத்தா அடுத்த அஞ்சு வருஷத்துக்குள்ள எனக்கு இரண்டு கொள்ளுப்பேரன் ரெண்டு கொள்ளுப்பேத்தி பெத்து கொடுத்துரு” என்று வேண்டுகோள் வைக்க மேக உட்பட அன்னலட்சுமியும் கூட அவருடைய கூற்றில் அதிர்ந்து விட்டார்.
மீண்டும் அவரே தொடர்ந்தவர்,
“ இதோ உங்க அத்தைகிட்டையும் இதே மாதிரி கேட்டேன் அவ ரெண்டு பிள்ளையோட நிப்பாட்டிட்டா நீயும் அப்படி செஞ்சுடாத ஆத்தா எனக்கு குறைஞ்சது நாலு கொள்ளுப்பேரன் பேத்தி வேணும் அதுக்கு மேல பெத்துக்கிறது நாளும் ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா நாளுக்கு குறையக்கூடாது என்ன” என்றார் அப்பத்தா.
‘எது ஐஞ்சு வருஷத்துக்குள்ள நாலு பிள்ளையா நான் என்ன பொண்ணா இல்ல பிள்ள பெக்கிற மெஷினா’ என்று அதிர்ச்சியாக நின்றாள் மேகா.
இங்கு தன்னுடைய அறையில் பட்டு வேஷ்டி சட்டையில் மிடுக்காக இருந்த வேந்தனோ குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
அவனுடைய பெட்டில் வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அவர்களுடைய முதல் இரவிற்காக.
அதையும் பார்த்தவனுக்கோ,
“ எங்க அவ ஒரு முத்தம் கூட எனக்கு கொடுக்குறதுக்கு அவ்வளவு யோசிக்கிறா இதுல இவங்க வேற முதல் இரவுக்குன்னு அலங்காரம் செஞ்சு ரெடி பண்ணி வச்சிருக்காங்க. வரட்டும் அவளுக்கு இன்னைக்கு இருக்கு. நான் யாருன்னு காட்டுறேன்.. வீராவுக்கு வளைச்சி வளைச்சு முத்தம் கொடுக்குறா கட்டுன புருஷன் எனக்கு ஒரு முத்தம் கொடுக்கிறதுக்கு அவ்வளவு யோசிக்கிறா”
“ ஆமா நீ அவ அனுமதியோட அவ விருப்பப்படி அவளோட கழுத்துல தாலி கட்டுன தானே” என்று அவனுடைய மனசாட்சி கேள்வி கேட்க.
சற்று நிமிடம் யோசித்தவன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டு,
“ அதுக்காக அவதான் என்னை புருஷனா ஏத்துக்கிட்டால்ல அப்புறம் என்ன”
“ உடனே புருஷனா ஏத்துக்கிட்டா அடுத்த நிமிஷம் உனக்கு முத்தம் கொடுத்து வா பிள்ள பெத்துக்கலாம்னு கூப்பிடுவாங்களா” என்று மீண்டும் அது கேள்விகளை தொடுக்க,
“ ஆஆஆ” என்று தன்னுடைய தலையை சொரிந்தவன்,
“ இப்போ உன்கிட்ட யாரு இந்த கேள்வி எல்லாம் கேட்டா சும்மா சும்மா கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்க ஒழுங்கு மரியாதையா உள்ள போ நானே பாத்துக்கிறேன். இது வேற நேரம் காலம் தெரியாம” அதனுடன் சண்டை போட்டவன்,
“ அது சொல்றதும் சரிதான் நாம என்ன அவ இஷ்டப்பட்டா அவ கழுத்துல தாலி கட்டுனோம் அவங்க அப்பன பழிவாங்குறதுக்காக அவ கழுத்துல தாலி கட்டுனோம்”
“ அவ அப்பாவ பழிவாங்குறதுக்காக மட்டும்தான் நீ அவ கழுத்துல தாலி கட்டுனியா உனக்கு அவ மேல அப்ப விருப்பம் இல்லையா.
இல்ல இதே மாதிரி உங்க அப்பாவ யாரு கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தினாலும் அவங்க பொண்ணு கழுத்துலையும் போய் தாலி கட்டுவியா” என்று மீண்டும் அவனுடைய சட்டை பாக்கெட்டில் இருந்து அவனுடைய மனசாட்சி எட்டி பார்க்க,
“ டேய் உன்ன தான் அப்பவே உள்ள போனு சொன்னேல்ல எதுக்குடா கூட கூட வந்து கேள்வி கேட்டுகிட்டு இருக்க நானே பெரிய குழப்பத்தில இருக்கேன். அப்பா சாமி தயவு செஞ்சு நீ உள்ள போ” என்று அதை மீண்டும் தன்னுடைய பாக்கெட்டினுல் அனுப்பி வைத்தான்.
“ அது சொல்றதும் சரிதான் என்னதான் அந்த ஆள பழிவாங்கிறதா நினைச்சாலும் எனக்கும் அவள ரொம்ப பிடிக்கும் அதான் சட்டுன்னு தாலி கட்டிட்டேன். ஆனா அவளுக்கு என்ன சுத்தமா கூட புடிக்கல என்ன செய்றது. சரி இப்போதைக்கு நம்ம கட்டின தாலியை ஏத்துக்கிட்டா அதே மாதிரி இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா கண்டிப்பா என்னையும் புரிஞ்சிப்பான்னு நினைக்கிறேன்” என்று ஒரு வழியாக அனைத்தையும் அலசி ஆராய்ந்தவன் ஒரு முடிவோடு இருக்க, அப்பொழுது மேகா கையில் பால் சொம்போடு அவன் அறையின் கதவை திறந்து உள்ளே வர அவளைப் பார்த்த வேந்தனோ இமைக்க மறந்தான்.
வெண்ணிற பட்டு சிவப்பு நிற பார்டர் அழகாக கொடுத்து இருக்க, அளவான நகைகளோடு அழகு கலைஞர்களின் கைவண்ணத்தில் ஏற்கனவே அழகாக இருப்பவளோ இப்பொழுது கூடுதல் அழகாக அவனுடைய கண்ணிற்கு தெரிய, அவனோ வெளிப்படையாகவே அவளை ரசித்துக்கொண்டு நின்றான்.
அடர்ந்த கார் கூந்தலை அழகாக பின்னலிட்டு மல்லிகை பூக்களால் மேலும் அதற்கு அழகு ஏற்றியிருக்க, நெற்றி வகுட்டில் செந்நிற திலகத்தோடு, வில் போன்று அழகாக வளைந்திருந்த அவளுடைய புருவங்கள், அதற்கு கீழே பார்ப்பதற்கு மீன் போன்ற அவளுடைய கண் வடிவு இருந்தாலும் எதிரில் இருப்பவரை திமிராகவே பார்க்கும் அவளுடைய விழிகள், குட்டியான கூர் மூக்கில் சின்னதாக ஒரு வெள்ளை கல் பதித்த மூக்குத்தி அழகாக வீற்றிருக்க, அதற்கு கீழ் புதிதாய் பூத்த ரோஜா இதழ் போல இரண்டு இதழ்கள் சிறிதாக பிளந்திருக்க, அதன் இடைவெளியில் அவளுடைய முத்துப் பற்களோ தன்னுடைய இருப்பிடத்தை அழகாக காட்ட, அதற்கு கீழ் சங்கு கழுத்தில் அவன் அணிவித்த தாலிக்கொடியும் கூடவே சிறிது நகைகளும் போட்டு இருக்க, அதற்கு கீழ் பெண்மையை எடுத்துக்காட்டும் அவளுடைய தணங்களை பார்த்தவனுக்கோ இங்கு மூச்சடைத்தது.
மேலும் அவனுடைய கண்பார்வை சற்றே கீழே இறங்க அவளுடைய அந்த சிற்றிடையோ இருக்கிறதா இல்லையா என்ற தெரியாத அளவிற்கு இருந்தது. தன்னுடைய இரண்டு கையாளும் பால் சொம்பை பிடித்திருந்த அவளுடைய கரங்களோ பஞ்சை விட மென்மையாக இருக்கும் போல.
அந்த சொம்பின் வெயிட்டை கூட தாங்காமல் அவளுடைய உள்ளங்கையோ சற்று சிவந்தார் போல இருந்தது.
அதையும் கவனித்தவன் தனக்குள்ளையே உச்சி கொட்டிக் கொண்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பார்வையை கீழே இறக்கியவன் அவளுடைய பாதத்தை பார்க்க,
அதிலும் நகங்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டு மெலிதான ஒரு கொலுசு ஒன்றும் மெட்டியும் போட்டு இருக்க சர்வ லட்சணமாக இருந்த தன்னுடைய மனைவியை விழி அகழாமல் ரசித்துக் கொண்டே இருந்தான்.
‘ என்ன இவன் இதுக்கு முன்னாடி பொண்ணுங்களை பார்த்ததே கிடையாதுங்கிற மாதிரி இப்படி விலுங்குற மாதிரி பார்த்துக்கிட்டு இருக்கான்’ என்று நினைத்துக் கொண்டவள் அவன் முன்னே வந்து அவன் முகத்தின் முன்னால் சொடக்கிட அப்பொழுதே சுயநினைவிற்கு வந்தவன் அவளை பார்க்க அவளும் அவனை ஏற இறங்க பார்த்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தணலின் சீதளம் 25”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!