காளையனை இழுக்கும் காந்தமலரே : 09

4.9
(10)

காந்தம் : 09

தேவச்சந்திரனும் ராமச்சந்திரனும் என்ன நடக்குது இங்கே என்று பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அங்கு வேலை செய்யும் வேலையாள் ஒருவன் இவர்களிடம் ஓடி வந்து, “ஐயா நம்ம ரைஸ் மில்லுக்கு போலிஸ் வந்திட்டு இருக்கிறாங்க” என்றான். அதைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் இத்தனை வருடங்களுக்கும் இப்படி போலிஸ் வந்ததே இல்லை. அப்படி இருக்கும் போது, இப்போ போலிஸ் வந்திருக்கு என்பது அதிர்ச்சியான விஷயம் தானே… 

போலிஸ் உள்ளே வந்தனர். அவர்களிடம், “வாங்க சார்…. உட்காருங்க. எதுக்காக இங்க வந்திருக்கிறீங்கனு தெரிஞ்சிக்கலாமா….?” என்று கேட்டார் ராமச்சந்திரன். அதற்கு போலிஸ், “உங்களோட ரைஸ் மில்லுல கஞ்சா விக்கிறதா எங்களுக்கு புகார் வந்திருக்கு….” என்றார். 

அதற்கு காளையன், “சார் உங்ககிட்ட யாரோ தப்பா புகார் குடுத்திருக்கிறாங்க…. நீங்க வேணும்னா எங்களோட மில்லை சோதனை பண்ணிப் பாருங்க….” என்று சொன்னதும் வந்திருந்த கான்ஸ்டபிள்ஸ் மில்லை சோதனை செய்தனர். அவர்களுக்கு கஞ்சா கிடைக்கவே இல்லை. வெறும் கையோடு திரும்பி வந்தனர். 

ஒன்றும் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், “சாரிங்க எங்களுக்கு யாரோ தப்பான புகார் குடுத்திருக்கிறாங்க…..” என்று சொல்லிவிட்டு வந்த வேகத்தில் போய்விட்டார்கள். 

அதன் பின்னர் காளையன் நடந்தவற்றை இவர்களிடம் சொல்லி, கவனமாக இருக்க சொன்னான். அவர்களும் பார்த்துக் கொள்ளவதாக கூறினார்கள். கதிர் வந்ததும், அவனையும் அழைத்துக் கொண்டு சென்றான். 

கேசவன் தன் மகளான மோனிஷாவை எதற்காக வேண்டாம் என்று சொல்றீங்க என சபாபதியிடம் கேட்டார். அதற்கு சபாபதி, “இல்லை சார் எங்களோட வீட்ல, கல்யாண விஷயத்தை முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அது எங்க தாத்தாவோட விருப்பம். யாரும் அவரோட முடிவுக்கு எதிராக நடக்க முடியாது……” என்றான். 

இதைக் கேட்ட கேசவனுக்கு சிரிப்பு வந்தது. “சபாபதி நீங்க என்ன பழைய மனுசங்க மாதிரி பேசுறீங்க….? இப்போ எல்லாம் பிள்ளைகள் விரும்புறவங்களையே பெத்தவங்க கல்யாணம் பண்ணி வைக்கிற காலம். நீங்க என்னடான்னா உங்க தாத்தா சொல்றவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றீங்க…? நீங்க ஐடில வொர்க் பண்றீங்க. 

உங்களுக்கு ஏத்த மாதிரி படிச்ச பொண்ணா, இப்போ உள்ள நாகரீகம் தெரிஞ்ச பொண்ணா இருந்தால்தானே நீங்க அவங்களை வெளியே கூட்டிட்டு போகலாம்….. இதே உங்க தாத்தா, அங்க கிராமத்தில உள்ள பொண்ணா பார்ப்பாங்க. அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தா, அவகூட நீங்க வெளியே பார்ட்டிக்கு போகலாமா….? எவ்வளவு அவமானமா இருக்கும் உங்களுக்கு….”

இதே நீங்க என் பொண்ணை கல்யாணம் பண்ணா, இந்த ஐடி கம்பனிக்கு நீங்கதான் எம்டி. அதுமட்டுமல்ல என் பொண்ணோட சொத்து எல்லாம் உங்களுக்கும் தான்… நீங்க சொந்தமா பிஸ்னஸ் பண்றன்னா, அதுக்கு என்னால உதவி பண்ண முடியும்…. யோசிச்சிட்டு உங்க முடிவை நாளைக்கு சொல்லுங்க….” என்று சபாபதியை மூளைச் சலவை செய்து அனுப்பி வைத்தார். 

போலிஸிடம் நடந்தது விபத்துதான், யாரும் கொலை முயற்சி செய்யவில்லை என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் மலர்னிகா. அதனால் அவளிடம் தன்னை மீறி கோபப்பட்டாள் நிஷா. 

நிஷாவை பார்த்தவள், “நான் எது செய்தாலும் அதுக்கு காரணம் இருக்கு நிஷா…. எனக்கு நல்லாவே தெரியும் இந்த விபத்து, உண்மையாக விபத்து இல்லை, என்னை கொலை செய்ய நடந்த முயற்சி என்று…. இதை பண்ணதும் அந்த ராஸ்கல் முகேஷ் தான். அவனை எப்போ என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்….” என்றாள். 

மலர்னிகா இவ்வளவு சொல்லியும் நிஷாவிற்கு மனசு கேட்கவே இல்லை. இருந்தாலும் மலர்னிகா சொன்னதற்காக அமைதியாக இருந்தாள். துர்க்காவும் இருவருக்கும் சாப்பாடு எடுத்து வந்திருந்தார். நிஷாவை சாப்பிட சொல்ல, அவளும் சாப்பிட்டாள். மலர்னிகாவோ வேண்டாம் என்று சொல்ல, அதைக் கேட்காமல் தனது கைகளால் ஊட்டிவிட, பேசாமல் சாப்பிட்டாள். மாத்திரைகள் போட்டு விட்டு தூங்கி விட்டாள். 

துர்க்கா நிஷாவை அனுப்பி விட்டு அவளருகிலே இருந்தார். அவரது மனம் கணவனை நினைத்தது. ஆறுதல் சொல்ல பக்கத்தில் யாரும் இல்லாதது, பெரும் வேதனையாக இருந்தது. மகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு போய்விடலாமா என்று கூட யோசித்துக் கொண்டு இருந்தார். 

முகேஷ் ஹாஸ்பிடலில் இருக்கும் மலர்னிகாவைப் பற்றி விசாரிக்க அவள் உயிர் பிழைத்து விட்டதாகவும், கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். அந்த ஆக்ஸிடெண்ல உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். நீ திரும்ப கம்பனிக்கு வர்றதுக்கு முன்னாடி உன் பிஸ்னஸ் எல்லாத்தையும் அழிக்கிறன்டி. என்று சபதம் போட்டுக் கொண்டான். 

கதிருடன் வந்த காளையன் ஆத்தோரமாக, தனது கிளைகளைப் பரப்பி நிற்கும் ஆலமரத்தின் கீழ் புல்லட்டை நிறுத்தினான். புல்லட்டில் சாய்ந்து கொண்டு யோசனையில் இருந்தான். அவனைப் பார்த்த கதிர், “அண்ணே என்ற யோசிக்கிறீங்க….?” என கேட்டான். 

அதற்கு காளையன், “இல்லை கதிரு, நம்மளோட லெட்சுமிக்கு வேணும்னே யாரோ மருந்து கொடுத்திருக்கிறாங்க.…. அதனால்தான் கன்றுக்குட்டி செத்துப் போச்சு. அப்புறம் வீட்ல கஞ்சா மூடை இருக்கு, ரைஸ் மில்லுலயும் கஞ்சா மூடை இருந்திச்சு, இதுவரைக்கும் போலிஸ் நம்ம மில்லுக்கு வந்ததே இல்லை….. ஆனால் எப்பிடி கஞ்சா மூடை இருக்குனு சொல்லி வந்தாங்க….. நாம கவனிக்காமல் விட்டிருந்தா கஞ்சா விக்கிறம்னு அப்பாவையும் பெரியப்பாவையும் அரஸ்ட் பண்ணியிருப்பானுங்க….

நம்மளை வேணும்னு மாட்டிவிடணும் பண்ணியிருக்கிறாங்க…. ஆனால் நம்ம குடும்பத்து மேல இவ்வளவு வன்மம் யாருக்குனு தெரியலையே. இன்னும் என்ன பண்ணப் போறாங்கனும் தெரியலை. அதுதான் கதிர் யோசிச்சிட்டு இருக்கிறன்….” என்று சொன்னான் காளையன். 

அதற்கு கதிரும், “அண்ணே ஒருவேளை அந்த வேலுச்சாமி தான் இதை எல்லாம் செய்திருப்பானோ….? அப்பிடி அவன் இல்லைனா வேறு யாரு அண்ணே….?” ஒரே குழப்பமாக இருக்கு. 

காளையனும், “இல்லை கதிரு வேலுச்சாமி இதை எல்லாம் செய்திருக்க மாட்டான்… அவனுக்கு அந்தளவுக்கு தைரியம் இல்லை…. இது வேற யாரோதான் மறைஞ்சிருந்து விளையாடுறாங்க… எத்தனை நாளைக்கு மறைஞ்சி இருக்கிறாங்கனு பார்க்கலாம்…. அவனுங்க யாருனு தெரிஞ்சிது, அதுக்கு பிறகு அவனுங்க இந்த காளையனோட ஆட்டத்தை பாப்பானுங்க. அவனுங்களை விடவே மாட்டேன் கதிரு….” என காளையன் சொல்லும் போது அவனுக்கு போன் வந்தது. 

போனை எடுத்துப் பேசிய காளையன் அதிர்ச்சி அடைந்தான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

1 thought on “காளையனை இழுக்கும் காந்தமலரே : 09”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!