அத்தியாயம் – 4
அறையை விட்டு வெளியில் வந்த ஆஹித்யாவிற்கோ தூக்கி வாரிப் போட்டது.
ஹாலில் அமர்ந்து தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த விபீஷனிடம் வம்பு வளர்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பவ்யா.
‘ஆத்தி, நானே தலை சூடேறி போய் இருக்கேன். இவ வேற ஓவர் பேர்போமன்ஸ் பண்றாளே’ என முணுமுணுத்துக் கொண்டே கதவின் நிலையில் சாய்ந்து நின்ற படி இருவரையும் அவதானித்தாள்.
“இது என் சோஃபா மரியாதையா எழும்பி வேற எங்க சரி போய் உட்காருங்க” என சீறினாள் பொறுமையை இழுத்து பிடித்த படி,
“வாட்? உங்க சோஃபாவா பட் நான் நேம் அஹ் கவனிக்கலயே” என்று சொல்லிக் கொண்டே எழுந்த விபீஷன் இருக்கையை ஆராய,
அவளுக்கோ, பொறுமை எல்லையை கடந்து போனது.
இருக்கையை ஆராய்ந்து கொண்டிருந்தவனை சொடக்கிட்டு அழைத்தாள்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவள் புறம் திரும்பினான்.
“என்ன கிண்டலா?” என்று கேட்டாள்.
“கிண்டலா? வொய் என்ன கிண்டல் புரியல” என அப்பாவி போல விழித்தான் அவன்.
பல்லைக் கடித்தவள் “கையை நீட்டிட கூடாதுனு பார்க்குறேன் விபீஷன்”
“தப்பு பவி, புருஷனை கை நீட்டி அடிக்க கூடாது” என்றான் பவ்யமாக,
“ஹாங், புருஷனா யார்?” என கேலியாக சொன்னவள் அவன் பின்னால் எட்டிப் பார்க்க,
“யாரை கை நீட்ட தோணிச்சோ அவர் தான்” என்றான் பதிலுக்கு,
“அவர்கிட்ட போய் சொல்லுங்க கனவுல கூட அவர் எனக்கு புருஷனாக மாட்டார்னு” என்றாள் இதழ்களை சுளித்த படி,
நெற்றியை அழுத்தி விட்ட படியே சற்றே அவள் உயரத்திற்கு குனிந்தவன் “ கனவுல இல்ல, ரியலாவே நடத்தி காட்டுறேன்” என்றவன் அவளின் சோஃபாவிலேயே அமர்ந்து கொண்டான்.
“ஹவ் டேர் யூ” என கை நீட்டி என்னவோ விபீஷனிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்த மகளை சமையலறைக்குலிருந்து வந்த வித்யா பார்த்து விட,
“பவ்யா நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். என்னடி வர வர உனக்கு வாய் கொழுப்பு அதிகமாயிட்டே வருது. சும்மா சின்ன பொண்ணு போல வம்பு வளர்திட்டு இருக்காமல் உள்ள போ” என்று விபீஷன் முன்னாலேயே திட்டிக் கொண்டே அவனுக்கு காஃபியை அவர் பரிமாற,
“அத்த நான் வீட்ல காஃபி குடிச்சிட்டேன்” என்றான்.
“பரவால்ல டா எடு” என்க,
வேறு வழி இல்லாமல் அவனும் காஃபி கப்பை எடுத்துக் கொள்ள, கேலியாக இதழ் வளைத்தவள் ‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.
அவள் தன்னை கேலியாக பார்த்து என்னவோ நினைத்து தனக்குள் சிரிக்கின்றாள் என்று புரிந்தது.
ஆனால், கோபம் வர வேண்டிய ஆணவனுக்கு அவளின் செய்கை ஒவ்வொன்றும் ரசிக்க வைத்தது.
தன்னை விழி அகலாமல் பார்த்த படி காஃபியை அருந்தியவனை கண்டு இருப்பு கொள்ள முடியாத பவ்யாவுக்கோ, கோபம் சுர்ரென்று ஏறியது.
அதிலும் அவனது இதழ்களில் தேங்கிய புன்னகை கூட தன்னை பார்த்து அவன் கேலியாக புன்னகைப்பது போலிருக்க, பல்லைக் கடித்தவள் வித்யாவின் முன்பே “ஐ ஹேட் யூ” என்று விட்டு வாயடைத்து போய் பார்த்துக் கொண்டிருந்த ஆஹித்யாவை இடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து விட்டாள்.
அவள் இடித்ததில் சமநிலை தடுமாறி விழ எத்தனிக்க, “ஓஹ் ஷிட், அண்ணிணி…” என்று விபீஷன் கத்தவும், அவள் கதவு நிலையை பிடிமானமாக பற்றிப் பிடிக்கவும் சரியாக இருந்தது.
இருக்கையை விட்டெழுந்து காஃபி கப்புடன் தன் முன் வந்து நின்ற விபிஷனை தான் அதிர்ந்து போய் மலங்க மலங்க விழித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆஹித்யா.
“தேங் கோட், பவ்யாவுக்காக நான் சாரி கேட்டுகிறேன் அண்ணி” என்றவன் மெலிதாக புன்னகைத்துக் கொண்டே சொல்ல,
அதெல்லாம் எங்கே அவள் காதில் விழ போகின்றது?
அவன் “அண்ணி” என்று அழைத்ததிலேயே தேங்கி விட்டாள் அல்லவா?
தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற ஆஹித்யாவை “அண்ணி” என்றழைத்தான் மீண்டும்,
அவ்வழைப்பில் மீள சுயம் அடைந்த பெண்ணவளோ “எ…என்ன சொன்னிங்க?” என்று கேட்டவள் வார்த்தைகள் திணறி ஒலித்தன.
“எப்போ?” என்றான் புரியாமல்,
“ஜஸ்ட் நவ்”
இதழ் கடித்து ஒற்றை புருவம் உயர்த்தி சிந்தித்தவனோ “அண்ணி” என்றவன் தோள்களை குலுக்கி விட்டு திரும்ப,
“விபீ” என்றவள் ‘ஸ்ஸ் சொதப்பாத ஆஹி’ என தனக்குள் சொல்லிக் கொண்டே “ஷன்” என்று அவனின் பிற்பாதி பெயரை அழைத்திருந்தாள்.
கேள்வியாகத் திரும்பி அவளை நோக்கினான்.
“ஜெய் மாமா மேரேஜ்கு ஓகே சொன்னாரா?”
“உங்களோட பேசணும்னு சொல்லிட்டு இருந்தார் அண்ணி” என்றவன் எதுவும் பூசி மெழுகாமல் உள்ளதை உள்ளபடியே கூற,
“என்கூட பேச என்ன இருக்கு?” என்ற கேள்வியை தன் மனதுக்குள் கேட்பதாக நினைத்து வெளியில் கேட்டு விட,
“ஐ டோண்ட் க்னோ அண்ணி” என்றவன் நெற்றியை நீவிக் கொண்டே , “என்னை பார்த்து வொய் மார்னிங் முறைசிட்டு என்னன்னவோ பேசுனிங்க? புரோமிஸ், நீங்க என்ன பேசுனிங்கனு புரியல” என்றவன் தன் மனதில் ஓடிக் கொண்டு இருந்த கேள்வியை கேட்டு விட,
இப்படி நேரடியாகவே கேட்பான் என்று கொஞ்சமும் எதிர் பார்க்காதவளோ திணறி விட்டாள்.
அவன் கேட்ட தோரணையில் ஒரு கணம் ஒரே ஒரு கணம் தான் கண்ட அந் நீள கனவு நினைவடுக்கில் வந்து போக, ‘ஆத்தி எதாச்சும் சொல்லி தொலை’ என தன்னை தானே திட்டிக் கொண்டுவள் “ஹி ஹி ஹி என பற்கள் பளிச்சிட புன்னகைத்து வைத்தவள் “லைட்டா குட்டியா கெட்ட கனவு கண்டேன் சோ அந்த எஃபெக்ட்ல வந்து பேசிட்டேன்” எனக் கூறியவள் அவன் அடுத்த கேள்வி கேட்பதற்குள்ளேயே “நாம அப்புறம் பேசலாமே” என்று சொன்னவள் பக்கத்து அறைக்குள் புகுந்து கொண்டாள்.
‘சம்திங் பிஷி’ என முணுமுணுத்துக் கொண்டவன் வித்யாவிடம் கூறி விட்டு அப்போதே கிளம்பி இருந்தான்.
இங்கோ, அறைக்குள் வந்த பெண்ணவளுக்கு ஜெய் ஆனந்த் தன்னிடம் பேச வேண்டும் என்று கூறியதை நினைத்தே எண்ணங்கள் வலம் வந்துக் கொண்டிருந்தன.
“ஹையோ என்னவா இருக்கும்?” என சுவரில் கோலம் வரைந்து கொண்டே தன் மனதிடம் அக் கேள்வியை கேட்டாள்.
“ஒருவேள நான் வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்குறதா கேட்டேனே அதைபத்தியா இருக்குமோ?” என அவளே அவளுக்கு பதில் கூறி விட்டு சுவரில் சாய்ந்து நின்றாள்.
யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது.
“ஐயோ கடவுளே! என் நிலைமை யாருக்கும் வர கூடாது. கனவுலயும் சரி எழுந்ததுல இருந்தும் சரி என்னை புல் ஹைப்பர்டென்ஷன்லயே வச்சிட்டு இருக்க” என்று பல்லைக் கடித்தாள்.
சட்டென மனதில் ஓர் கேள்வி எழுந்தது.
“ஐயோ! வேற எவளையும் லவ் பண்ற விஷயத்தை என்கிட்ட சொல்லவா இருக்குமா?” எனக் கேட்டுக் கொண்டவள் உடல் விறைத்தது.
அந்த கேள்வியே அவளை மேலும் சிந்திக்க விடாமல் மேனியை இறுக வைத்தது.
தொண்டை அடைப்பதை போலிருக்க எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.
Super jeeshu sis
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.👌👌👌👌👏👏👏👏😍😍😍🥰🥰🥰🤩🤩❤️❤️❤️❤️❤️❤️