தணலின் சீதளம் 32
சீதளம் 32 அந்தி சாயும் வேலையில் ஆதவன் மங்கிக் கொண்டு செல்ல, பட்சிகள் தங்கள் உறக்கத்தைத் தேட, மங்கைகள் தன் மன்னவனைத் தேட, வெண்மதியானவள் வெளிச்சம் கூடி வீசி விண்ணில் நகர்வலம் வந்து கொண்டிருந்தாள். வேந்தனுடைய வீட்டில் ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தனர் வேந்தன் மேகாவை தவிர. அப்பொழுது செல்வரத்தினமோ தன் அன்னையிடமும் மனைவியிடமும் மகளின் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். “ அம்மா நம்ம அறிவுக்கு ஒரு நல்ல சம்மந்தம் வந்திருக்கு அதை பேசி முடிச்சிடலாம்னு நினைக்கிறேன்” […]