அத்தியாயம் 17
இறுகி முகத்துடன் வீட்டை வந்தடைந்து இருந்தான் இன்னுழவன். வீட்டுக்குள் அவன் பிரவேசிக்க, கல்யாணத்திற்காக தயாராகி அனைவரும் ரெடியாக அமர்ந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் மேல் சக்திவேல் மிகவும் ஆர்வமாக அமர்ந்திருந்தார். “இன்னு சீக்கிரமா கிளம்பி வாப்பா முகூர்த்தத்துக்கு டைம் ஆச்சு இல்ல” என கோதாவரி கையில் தாம்பூலத்துடனும் பட்டு சேலை சகிதம் வந்து நின்றார். “அடியேய் ஏஞ்சல் என் நிலைமைய பார்த்தியா என் தலைமைல உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணம். இதுக்கு நான் மூச்ச கொடுத்து என் நைனாகிட்ட கட்டளை […]