அந்தியில் பூத்த சந்திரனே

அந்தியில் பூத்த சந்திரனே – 5

ஹர்ஷாவின் கோரிக்கையை அவள் ஏற்றக் கொண்டதற்க்கு அடையாளமாக அவன் அலைபேசியில் அறிவிப்பு பகுதியில் “அம்ருதா அக்ஸப்டெட் யுவர் ரெக்வஸ்ட்” என்று இருக்க அதை பார்த்தவனுக்கு உள்ளம் மகிழ்ச்சியில் நிறைந்தது. ஆனால் இங்கு அம்ருதாவின் மனநிலையோ அதற்க்கு நேர்மாறாக இருந்தது. காவேரி அம்ருதாவிடம் கோபமாக பேச ஆரம்பித்து இருந்தார். “இதோ பாரு அம்ருதா இதுக்கு மேல பொறுமையா இருக்க என்னால முடியாது. உனக்கு அப்புறம் ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கும் நாங்க கல்யாணத்தை பண்ணனும். ஏதோ வாழ்க்கைல ஒரு […]

அந்தியில் பூத்த சந்திரனே – 5 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 4

அம்ருதாவின் விரக்தியான சிரிப்பையும், கடலை வெறித்தவாரு வெறுமையான  முகபாவனையுடன் அவள் அமர்ந்திருக்கும் விதத்தையும் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்த உணர்வு. தான் அனுபவிக்கும் அதே வேதனையை இன்னொருத்தியும் அனுபவிக்கிறாள் என்பதில் அவனால் அவள் மனநிலையை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அருகில் நின்றிருந்த ஆருபேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் மேலும் சில அநியாய வார்த்தைகளை அம்ருதாவின் மீது வீசிவிட்டு கலைந்து சென்று விட்டனர். சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள் பிறகு குழந்தையிடம் “வீட்டுக்கு போகலாம் பாப்பா?”

அந்தியில் பூத்த சந்திரனே – 4 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 3

ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில் குறைந்து மிதமான ஒளி வீசும் மாலை பொழுது நேரம். கடற்கரை ஓரத்தில் அம்ருதாவின் விரலை இறுக பிடித்து கொண்டு ஆத்யா தனது சிறிய கால்களால் குட்டி குட்டி எட்டுக்கள் வைத்து நடந்து கொண்டிருந்தாள். கடல் அலைகள் ஒவ்வொரு முறை குழந்தையின் பாதத்தை தொட்டு செல்லும்போதும் துள்ளி குதித்து விளையாடிய படியே வந்தது அந்த அமுல் பேபி. குழந்தையுடன் ஓரிடத்தில் அமர்ந்தவள் கடல் அலையை வேடிக்கை பார்த்தவரே குழந்தையை தூக்கி தன் மடி மீது

அந்தியில் பூத்த சந்திரனே – 3 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 2

சென்னையின் புறநகர் பகுதியில் வாழ்ந்து வரும் அம்ருதாவின் குடும்பம் நடுத்தர வர்கத்தை சார்ந்தது. வரவேற்பறை, சமையலறை, இரண்டு படுக்கயறை வசதி கொண்டு சுற்றிலும் சிறியவகை தோட்டம் அமைக்கும் அளவு இடைவெளி விட்டு மதில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது  அவர்களுக்கு சொந்தமான வீடு. தந்தை ஆறுமுகம் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர். அன்னை காவேரி இல்லத்தரசி. தங்கை நிரஞ்சனா கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாள். அம்ருதா எம்.சி.ஏ முடித்து ஒரு ஐ.டி கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜராக

அந்தியில் பூத்த சந்திரனே – 2 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே

“உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியவே புரியாதா அம்ருதா? நானும் இவ்வளவு நாளா பொறுமையா இருந்துட்டேன். ஆனா இனிமேலும் முடியாது.” என்றதும், தன் காதுகளில் எதுவும் விழவே இல்லை என்பது போல் புத்தகத்தை புரட்டியவாரு அமர்ந்திருந்தாள் அவள். “உன்கிட்டதான் பேசிகிட்ருக்கேன் அம்ரு.. உன் காதுல விழுதா இல்லையா?” என்றவர் அவள் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென பிடுங்கி கொள்ள, அப்போதும் சலிப்பான ஒரு பெருமூச்சு வந்ததே தவிர, எந்த ஒரு பதிலும் அவள் பேசிட வில்லை. “நீ சொன்னா

அந்தியில் பூத்த சந்திரனே Read More »

error: Content is protected !!