அந்தியில் பூத்த சந்திரனே

அந்தியில் பூத்த சந்திரனே – 20

ஆத்யாவை வாங்காமல் எங்கேயும் போக மாட்டேன் என திமிராக சோபாவின் மீது அமர்ந்து கொண்டாள் தாரிக்கா. இதை பார்த்த அம்ருதாவிற்கு உள்ளத்தில் பயம் சூழ்ந்து கொண்டது. ‘எங்கே தன் பிள்ளையை வாங்கி கொண்டு போய் விடுவாளோ?’ என்று பதறியவளாக அவள் நிற்க, ஆனால் அதற்க்கு நேர் மாறான மன நிலையில் நின்றிருந்தான் ஹர்ஷா. ‘இவளால் என்ன செய்து விட முடியும்? என்ன நடந்தாலும் தன் மகளை விட்டுவிடவே கூடாது’ என்று எண்ணியவனோ, தாரிக்காவிடம் நெருங்கி  “உனக்கு எவ்வளவு […]

அந்தியில் பூத்த சந்திரனே – 20 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 19

தன்னுடைய குழந்தைதான் அம்ருதாவின் வயிற்றில் வளர்ந்தது என்பதை அறிந்து, அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தான் ஹர்ஷா. அம்ருதாவுக்கும் அதே நிலைதான். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளாமல், சிறிது நேரம் அந்த இனிமையான நிமிடங்களில் மூழ்கி போயினர். இருவரது விழிகளில் இருந்தும் ஆனந்த கண்ணீர் வழிந்த படி இருக்க, தன்னையும் மீறி, ஐ லவ் யூ ஹர்ஷா.. என்றாள் அம்ருதா. தன்னிடம் அவள் காதலை சொல்லி விட்டாள் என்பதில் அவன் மனம் முழுவதும் தித்தித்தது.

அந்தியில் பூத்த சந்திரனே – 19 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 18

கீர்த்தனாவுக்கும் ஹர்ஷாவுக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் கைத்தட்டும் ஓசையுடன் உள் நுழைந்தாள் தாரிக்கா. தாரிக்காவை பார்த்த அம்ருதாவிற்கோ உடல் நடுக்கமுற செய்தது. ஒரு காலத்தில் ‘தாரிக்காவை பார்த்துவிட மாட்டோமா? என்று பதற்றத்துடன் தேடி அலைந்த நாட்களும் உண்டு. ஆனால் இன்று எல்லாம் சரியாகி நன்றாக போய்கொண்டிருக்கும் தருணத்தில்  வரக்கூடாத நேரத்தில் வந்திருக்கிறாளே. இவள் எதற்காக இப்போது இங்கே வந்தாள்?’ என்ற கேள்வியும், கோபமும், பயமும், அழுகையுமாக பலவிதமான உணர்வுகளோடு அவளை ஏறிட்டாள். உள்ளே நுழைந்த தாரிக்கவோ அம்ருதாவை

அந்தியில் பூத்த சந்திரனே – 18 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 17

ஹர்ஷாவின் மனைவி அம்ருதா என்று அறிந்ததில், ‘ஹா.. ஹா.. ஹா.. இது போதுமே எனக்கு. உன்னை காயப்படுத்த இதைவிட வேற பெட்டெரான ஆப்ஷன் கிடையவே கிடையாது. ஹர்ஷா.. இன்னைக்கே உனக்கு எதிரா எல்லா வேலையும் ஆரம்பிக்கிறேன்.’ என்றவள் ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்தவள் மூளையில் மின்னல் வெட்டியது. அவளது அலைபேசியில் நிரஞ்சனாவின் நம்பரை தேடி கண்டுபிடித்தவள், உடனே நிரஞ்சனாவிற்கு அழைப்பை விடுத்தாள். மறுபக்கம் அழைப்பை ஏற்று காதில் வைத்த நிரஞ்சனாவோ “ஹலோ.. ” என்றதும், “ஹலோ..

அந்தியில் பூத்த சந்திரனே – 17 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 16

சில தினங்களுக்கு முன்பு அம்ருதாவிடம் வம்பிழுத்த அதே நபர்தான் தன் நண்பர்களுடன் மீண்டும் அம்ருதாவை பற்றியும் அவளது கடந்த காலத்தை பற்றியும் மோசமாக பேசி கொண்டிருந்தான். அவன் பேசியதை கேட்டவர்கள், “அப்படீங்குற? ஒருவேளை இருக்குமோ?” என்றதும், “ஆமாம் டா” என்று சிரித்தபடியே அவர்களுக்குள் மேலும் பேச தொடங்க, ‘இன்னும் இங்கேயே நின்றால் தேவையில்லாத வார்த்தைகளை கேட்க நேரிடும். அம்ருதாவின் கடந்த காலத்தை பற்றி எதுவுமே தெரியாமல் இவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டலோ அல்லது சண்டையிட்டாலோ, ஒருவேளை அது அம்ருதாவிற்கே

அந்தியில் பூத்த சந்திரனே – 16 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே -15

அம்ருதா குளித்து முடித்து வெளியே வந்தவள் ஹர்ஷாவை பார்க்க அவன் எதிர் புறம் திரும்பி எதையோ வெறித்த வண்ணமே நின்றிருந்தான். இரவு நடந்த விடயங்களை எண்ணி பார்த்தவளுக்கு அவனை நேருக்கு நேர் சந்திக்கவே முடியாமல் வெட்கம் பிடுங்கி தின்றது.  கூந்தலை பின்னலிட்டு, நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அழகாக தயாராகி முடித்ததும் அவன் புறம் திரும்பி பார்க்க, அவன் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பது போல தெரிந்தது. அவனை தொந்தரவு செய்யாமல் அறையை விட்டு வெளியேறியவள் ஆத்யாவை

அந்தியில் பூத்த சந்திரனே -15 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 14

வீட்டிற்கு வந்ததிலிருந்து நிரஞ்சனா முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. திருமணத்தின் போதும், அதற்க்கு முன்பும் கூட புடவை, நகை வாங்க சென்ற இடத்திலும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அவளுடைய பிடித்தமின்மையும் அம்ருத்தா மீதான வெறுப்பு  பார்வையும் ஹர்ஷாவுக்கு நன்றாகவே புரிந்தது. இருப்பினும் அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை. இரவு உணவு தயாராக இருக்க அனைவரும் அமர்ந்து பேசி சிரித்தப்படியே சாப்பிட தொடங்கினர். அப்போது ஹர்ஷாவின் கைபேசி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்தவன் தன்னுடைய ரெஸ்டாரண்ட் இன்டீரியர் டெகரேஷன் மாற்றுவதை பற்றி

அந்தியில் பூத்த சந்திரனே – 14 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 13

தன்னை மிரண்டு போய் பார்த்தவளை கண்டு, “எனக்கு குழந்தையே பிறக்காதுன்னு பொய் சொல்லி, என்னை வார்த்தைகளால எவ்வளவு காயப்படுத்திருப்ப? அதோட விட்டியா? என்னோட அப்பா, அம்மா முன்னாடியே வச்சு ஒரு குழந்தை பெத்துக்குற தகுதி எனக்கில்லைன்னு சொல்லிதான டிவோர்ஸ் வாங்கின?” என்று அதீத கோபத்துடன் அவன் கேட்க, “ஆ.. ஆமா.. அது உண்மைதானே? மெடிக்கல் சர்டிபிகேட் கூட என்கிட்ட இருக்கு.” என்று பயத்தில் திக்கி திணறி கூறி முடிக்கும் முன்னரே அவள் கன்னத்தில் “பளார்..” என அறைந்திருந்தான்

அந்தியில் பூத்த சந்திரனே – 13 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 12

தங்கள் இருவருக்குமான காஃபி, டீயை எடுத்துகொண்டு அறைக்குள் நுழைய, ஆத்யா இன்னும் உறங்கி கொண்டிருந்ததை பார்த்தவள்  நேராக ஹர்ஷாவிடம் சென்றாள். ஹர்ஷாவோ பால்கனியில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தான். அம்ருதா அவன் அருகில் வந்து “காஃபி எடுத்துக்கோங்க” என்று கூறி அவன் முன்பு நீட்ட,  “தேங்க்ஸ் அம்ருதா” என்றவன் அதனை புன்னகை முகமாய் வாங்கி கொண்டான்.   இருவரும் அருந்தி கொண்டிருந்த நேரம் ஆத்யா தூக்கம் கலைந்து எழுந்தவள் அம்ருதாவிடம் தூக்க கலக்கத்தில் தடுமாறியப்படியே நடந்து

அந்தியில் பூத்த சந்திரனே – 12 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே -11

முதலில் அறைக்கு செல்லாமல் தயங்கியப்படி அங்கேயே நின்றவள் ‘எப்படியும் போய்தானே ஆகனும்?’ என்று எண்ணி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து படியேறி செல்ல துவங்கினாள். அறை கதவை தட்ட நினைத்து கதவின் மீது தனது கரத்தை பதிக்க, கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே நுழையும்போதே ஆத்யா, ஹர்ஷாவின் பேச்சு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. கதவை தாழிட்டு விட்டு திரும்பி என்னவென்று பார்க்க ஆத்யாவிற்கு வன விலங்குகளை வைத்து கதை சொல்லி கொண்டிருந்தான் ஹர்ஷா. “ம்மா… நீங்களும்

அந்தியில் பூத்த சந்திரனே -11 Read More »

error: Content is protected !!