அந்தியில் பூத்த சந்திரனே
முருகன் கோவிலில் ஏற்கனவே திருமணத்திற்க்கான முன்பதிவு நடை பெற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ஐயர் மந்திரங்கள் சொல்ல அதை திரும்ப சொன்னபடியே பட்டு வேட்டி பட்டு சட்டையில் பேரழகனாக அமர்ந்திருந்தான் ஹர்ஷா. மிதமான ஒப்பனையுடன் மிக நேர்த்தியாக புடவை கட்டி, தங்க ஆபரணங்கள் அணிந்து கல் வைத்த பொட்டு வைத்து பார்த்து கொண்டே இருக்கலாம் போன்ற அழகில் தயாராகி இருந்தாள் அம்ருதா. அவளுக்கான புடவையும் நகையும் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்திருந்தான் ஹர்ஷ மித்ரன்.
அந்தியில் பூத்த சந்திரனே Read More »