இதயமே இளகுமா இளமயிலே

இதயமே இளகுமா அத்தியாயம் 10

காலை நேரம், மழை தூறல்கள் பூமியை தொட்டு தொட்டு உறவாடி கொண்டிருக்க, அந்த வேலையிலும் அம்பாளுக்கு பால்குடம் எடுத்து முடித்து, கோவில் சன்னதியில் அமர்ந்திருந்தனர் பாலா குடும்பத்தினர். சமரின் விழிகளோ செம்பாவை தேடிக் கொண்டிருந்தன, அவள் தான் கோவிலுக்கே வரவில்லையே பின் எங்கே அவன் விழிகளில் விழுவது. அவள் குடும்பத்தினர் அங்கே நிற்க, அவளும் நிற்கிறாளா? என பார்க்க அங்கேயும் இல்லை. பெண்ணவளை காணாமல் ஆனவனின் மனம் வாடியது. திரும்பி பாலாவை பார்க்க அவன் யாரிடமுமே பேசுவதை […]

இதயமே இளகுமா அத்தியாயம் 10 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 9

கோகிலா செம்பாவை தேடி அந்த இடத்திற்கே வந்துவிட்டாள். செம்பா நடந்து வருவதை பார்த்தவள் “உன்னை எங்கெல்லாம் தேடுறது, ஏதோ பச்ச பிள்ளையை தொலைத்த மாதிரி, “ஐயோ என் ஆத்தாவை காணும்னு மாமா ஒப்பாரி வச்சிட்டு இருக்கார். நீ இங்கே என்னடி பண்ற? அப்போ எங்க கூட சாமி பின்னாடி கோவிலுக்கு எல்லாம் வரலையா?”…. “ இல்லடி நான் நடந்து வரும்போது பின்னாடி வந்தவங்க, கூட்டத்துல பின்னாடி சேலையில மிதிச்சுட்டாங்க, அது சேலை லேசா அவிழ்ந்த மாதிரி ஆகிடுச்சி,

இதயமே இளகுமா அத்தியாயம் 9 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 8

மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி… உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி… கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி… மாயவரம் அபயாம்பிகா… பின்புறத்தில் சித்ராவின் குரலில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பாலா அவன் நண்பர்களுடன் கோவில் அருகில் நின்றிருந்தான். “பாலா சமர் உண்மையாவே வருவானா.? இல்லையா..?” என தினேஷ் கேட்க… “வருவான்டா… பக்கத்துல வந்துட்டு இருக்குறதாதான் சொன்னான்.” “போன் பண்ணி பாருடா. மணியை பாரு எட்டு மணி ஆகிடுச்சி. காலையிலே கிளம்பிட்டான்னு சொன்னான். இன்னும் வராமல் இருக்கான்” என்றான் கோகுல்.

இதயமே இளகுமா அத்தியாயம் 8 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 7

தன் மகளின் புடவையின் முன்சுருக்கத்தை சரி செய்தபடி, “செம்பா நாங்க கோவிலுக்கு வர கொஞ்சம் நேரம் ஆகும். மாட்டை கொண்டு குகன் வயல்ல கட்டிட்டு வாறேன். உங்க அப்பா கோவிலுக்கு போய்ட்டார். எவனாவது குடிக்க கொடுத்துருப்பான். குடிச்சிட்டு எங்கேயாவது விழுந்து கிடக்காமல், நீ பார்த்து உன் பக்கத்துலயே இருக்க வை சரியா.?” “சரிம்மா” என்றவள் வெளியே வர, “அண்ணி” என அழைத்தபடி வீட்டிற்குள் வந்தார் ராசாத்தி. “அடியாத்தி என் மருமக எம்பூட்டு அழகு. என் கண்ணே பட்டும்

இதயமே இளகுமா அத்தியாயம் 7 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 6

தேனி மாவட்டத்தின் தெற்கே, உள்ள கிராமம் செல்வபுரம். மண்ணின் வாசத்தில் மல்லிகை மனமும் கலந்து வீசும் பசுமை கலந்த ஊர். அந்த ஊருக்குள் செல்லும் பாதை, வழியெல்லாம் உயர்ந்த மரங்களும்,அவற்றின் அடியில் நீளும் பசுமையான செடிகொடிகளும், பூந்தோட்டங்களும் ஓரமாக ஓடும் நதியும், இன்னும் அந்த ஊருக்கு அழகு சேர்க்கும். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசலென காட்சியளித்தது. அந்த ஊருக்குள் நுழைந்தது பாலாவின் கார். அவர்கள் வருவது காலை நேரத்தில், மழை லேசான தூறல் போட்டுகொண்டிருக்க, காரின் கண்ணாடியில்

இதயமே இளகுமா அத்தியாயம் 6 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 5

சமர் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது வீட்டிற்குள் வந்தனர் அவனின் அம்மா, அப்பா இருவரும். “டேய், சமர் நீ ஹாஸ்பிடல் போகலையா” என்றபடி தன் மகனின் அருகில் அமர்ந்தார் நேத்ரன். “இல்லப்பா, நான் இன்னைக்கு  போகல,” “அதான் ஏன்னு கேட்டேன்? இன்னைக்கு ஈவினிங் பாலாவோட ஊருக்கு எல்லாரும் கிளம்புறீங்கதானே, “ “நான் போகலப்பா” “போகலையா, என்னாச்சுடா உனக்கு, ஹாஸ்பிடல் போகலையான்னு கேட்டால், போகலைன்ற, ஊருக்கு போகலையான்னு கேட்டாலும் போகலன்னு சொல்ற, என்னாச்சு

இதயமே இளகுமா அத்தியாயம் 5 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 4

பாலா மருத்துவமனைக்கு வந்தபோது, தினேஷ், கோகுல், வித்யா  மூவரும் சமர்,  பாலாவிற்காக மருத்துவமனை  வாசலில் காத்திருந்தனர். “என்னடா சமர் எங்கே? அவனை கூப்பிட்டு வரேன்னுதானே போன?” நீ மட்டும் தனியாக வர்ற..? என்றான் தினேஷ், சற்றே ஏமாற்றத்துடன். “அவன் வரலைன்னு சொல்லிட்டான்டா…” என்றான் பாலா. அந்தநேரம், அங்கே வந்த ஆத்விகா, பாலா பேசியதை கேட்டாள், “என்ன? சமர் வரலையா? சமர் வர்றான்ற ஒரே காரணத்துக்காகத்தான் இந்த மெடிக்கல் கேம்புக்கு வர நான் சம்மதிச்சேன். சமர் வரலையென்றால், நானும்

இதயமே இளகுமா அத்தியாயம் 4 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 3

விடியற்காலை இன்னும் பளிச்சிட ஆரம்பிக்காத நேரம். அறை மங்கலான வெளிச்சத்தில், சன்னல் வழியே நுழையும் காற்று, அறையை சற்று சில்லென்று தழுவியிருந்தது. அந்த அமைதிக்குள், ஒரு அழகான படுக்கையில், பரந்த உருவமாய் படுத்திருந்தான் சமர். தலையணையின் ஓரமாக சாய்ந்திருந்த அவன் முகம், தூக்கத்தில் சற்றே புன்னகை செய்தது. நீண்ட நெற்றி, நன்றாக வகுக்கப்பட்ட புருவங்கள், சீரான மூக்கு, கூர்மையான கண்கள், கிளின் சேவ் செய்த முகம், ஆண்மைக்கே உரிய அழகான மீசை என, தூக்கத்தில் இன்னும் அழகாக

இதயமே இளகுமா அத்தியாயம் 3 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 2

செம்பாவும் கோகிலாவும் வீடு வந்து சேர்ந்தனர். தலையில் இருந்த புல்லுக்கட்டை கீழே போட்டவள், மாட்டை கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். வாசலில் அமர்ந்திருந்த செம்பாவின் அன்னை அரிசியில் கல் எடுத்து கொண்டிருந்தார். மகளின் உடை நனைந்து இருப்பதைப் பார்த்த அவர், “என்னடி இவ்வளவு நேரம்? மழைக்கு முன்னாடி வந்திருக்கலாமே!” “கிளம்பும் நேரத்திலேயே மழை வந்துடுச்சி அம்மா…” “சரி, போய் துணியை மாத்திக்கோ.” அவள் உள்ளே சென்றதை உறுதி செய்தவர் கோகியிடம், “என்ன கோகி, உன் தோஸ்து கோபமா

இதயமே இளகுமா அத்தியாயம் 2 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1

மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் போதும் போதும் தீர்ந்தது வேதனை      என ஒருபுறம் அவளின் கைப்பேசியில் உள்ள எஃப்எம்மில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பெண்ணவளோ மும்முரமாய் புற்களை அறுத்துகொண்டிருந்தாள். அதே நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து தன் சோகத்தை மௌனமான மழையாக வார்க்க, சின்ன சின்ன மழைத்துளிகள் பெண்ணவளின்

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1 Read More »

error: Content is protected !!