உள்நெஞ்சே உறவாடுதே

5 – உள்நெஞ்சே உறவாடுதே!

அத்தியாயம் 5 உயிர் தீண்டும் உணர்விதிலே உள்ளுயிரும் உருகுதடி! ———— ஷக்தி மகிழவன் பேசியதைக் கேட்டு உறைந்த நிலைக்குச் சென்ற பிரகிருதி, பேச்சற்றுத் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று விட்டாள். அவளது அமைதி அவனது இதயத்தைத் தாறுமாறாகத் துடிக்க விட்டது. ஏதோ உள்ளுக்குள் உடைந்த நிலை. ஆனால், எப்போதும் போல வெளியில் சொல்லி விட வார்த்தைகள் தேடி, உணர்வின் உருவம் தேடித் தொய்ந்து போகிறான். இனி அவள் தன்னுடன் இருக்க மாட்டாள் என்பது மட்டும் அவனுக்கு நிச்சயம். […]

5 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

4 – உள்நெஞ்சே உறவாடுதே

வார்த்தைப் போரில் வாகை சூட அழைக்கிறேன் வானழகியே… உணர்வற்ற உள்நெஞ்சின் உருவம் கேட்டால்… உயிர் மட்டுமே உனதாகும்!!! சிறிது நேரம் தனித்து இருந்து விட்டு, ஷக்தியின் அறைக்கே சென்றாள் பிரகிருதி. அலைபேசியில் கவனத்தைச் செலுத்தி இருந்தவன், அவள் வந்ததைக் கண்டதும், “ரொம்ப லேட் ஆகிடுச்சு ருதி. படுத்து தூங்கு” என பக்கத்து படுக்கையைக் கை காட்ட, அவனை முறைத்து விட்டு, சோஃபாவில் படுத்துக் கொண்டாள். அதில் ஆடவனின் முகம் சுருங்கிப் போனது. எதுவும் பேசாமல் உறங்கி விட்டான்.

4 – உள்நெஞ்சே உறவாடுதே Read More »

3 – உள்நெஞ்சே உறவாடுதே

உள்மன உதறல்கள் உன்னிடமே சிதறல்களாக உடைபடும் நேரம் எப்போதோ? ———————————————– இருவரும் திருமணம் முடிந்த பின் அவரவர் வேலைக்குச் செல்லும் முதல் நாள். ஷக்தி மகிழவனின் ரொட்டின் படி, பிரக்ருதியும் வேலைகளைத் துரிதப்படுத்தினாள். அவன் தனியாக இருப்பதும் இதுவே முதன்முறை. இத்தனை வருடங்கள் பெற்றவர்களுடன் இருந்ததால், லேகா சரியான நேரத்தில் அனைத்தையும் தயார் செய்து விடுவார். பிரக்ருதி சீக்கிரமாக எழுந்து அடுக்களை வேலைகளைப் பார்த்து விடுவாள். உடற்பயிற்சி செய்து முடித்து விட்டு, அவனும் உதவி செய்து விட்டே

3 – உள்நெஞ்சே உறவாடுதே Read More »

2 – உள்நெஞ்சே உறவாடுதே!

முகமூடிகளின் எண்ணிக்கை முந்தியடித்துக் கொண்டே வளர்கிறது… முக்கியத் தருணங்களிலெல்லாம் முக்கியமாய் நடிப்பதற்கு!!! ——————————– பிரம்மாண்டமாக நடைபெற்றது ஷக்தி மகிழவன் மற்றும் பிரக்ருதியின் திருமணம். சில மணி நேரங்கள் வரை சிரித்த முகத்துடன் அனைவரையும் எதிர்கொண்ட பிரக்ருதியின் முகமே சோர்வடைந்து விட்டது. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாமல், “அம்மா… நான் ரூம்க்குப் போகனும். ப்ளீஸ்” என்று ஆர்த்தியிடம் பரிதாபமாகக் கேட்டாள். “விளையாடுறியா ஒழுங்கா மாப்பிள்ளை பக்கத்துல நில்லு!” என்று கடியும் போதே அங்கு லேகா வந்தவர் “என்னங்க

2 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

1 – உள்நெஞ்சே உறவாடுதே

அகத்தின் அலைவரிசைகளெல்லாம் அகத்தினுள்ளே அடக்கமாகி அழுகி விடுவதிலேயே அழுத்தமெனும் ஆழிப்பேரலை ஆட்டம் காண்கிறது!!! தட தடவென ஓடும் இரயிலின் ஜன்னல் வழி தெரியும் இருட்டில் துழாவியது ஆடவனின் கருவிழிகள். குளிரூட்டப்பட்ட ரயில் கேபினில் அவனுக்கு மட்டும் தனி கேபின் ஒதுக்கப்பட்டிருந்தது. சில நேரங்களில் அவனுக்குள் வீற்றிருக்கும் உருவமறியா உணர்வுகளை காகிதத்தில் கிறுக்கி விடுவது அவனது வழமை. இந்தியாவின் டாப் டென் தொழிலதிபர்களில் அவனும் ஒருவன். கேம்ஸ் மற்றும் பஸ்ஸில் (puzzle) தயாரிப்பதில் வல்லவன். லாஜிக், எமோஷன், புத்திக்கூர்மையைப்

1 – உள்நெஞ்சே உறவாடுதே Read More »

error: Content is protected !!