சோதிக்காதே சொர்க்கமே!

சோதிக்காதே சொர்க்கமே 12

தனது நெற்றியை தொட்டு காட்டிய தீனா “எட்டு தையல் போட்டு இருக்காங்க. ஏன் தெரியுமா? என் அம்மா என் நெத்தியை அடிச்சி உடைச்சிட்டாங்க..” என்றான். எட்டு தையல் என்பது இவளுக்கும் அதிர்ச்சியாகதான் இருந்தது. அவளின் தோள்கள் இரண்டையும் பிடித்து உலுக்கியவன் “நான் ஏன் அடி வாங்கினேன்? உன்னால. ஆமா உன்னாலதான் நான் குடிச்சேன்? நான் ஏன் குடிச்சேன். உன்னாலதான். ஆமா உன்னை நான் அடிச்சதாலதான் கில்ட்டி ஃபீலிங் தாங்க முடியாம குடிச்சேன். என்னை கில்டியா மாத்தியது நீதான். […]

சோதிக்காதே சொர்க்கமே 12 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 11

மானசாவின் உடம்பை வருடியது அவனின் கரம். இவளுக்கு ஆத்திரமாக வந்தது. என்னை தொடாதே என்று கத்த விரும்பினாள். போதை தெளியாமல் இருந்தவன் “நீ எப்படிப்பட்ட தேவதை தெரியுமா? அப்படியே முழுசா சிக்கிட்டேன். உன்னை பார்த்த செகண்ட் என் நெஞ்சுக்குள்ள மலரால் நிரம்பிய பூமலை வெடிச்சது. என் உதடுகள் உன் பேரை சொல்லவே படைக்கப்பட்டது போல கர்வப்பட்டது. நீ எவ்வளவு அழகு தெரியுமா? என் அனதர் சோல் நீ. என் சொர்க்கம். என் லைஃப் உன் காலடியில் இருக்கு.

சோதிக்காதே சொர்க்கமே 11 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 10

அவள் கேட்டதில் கோபமான தீனா அவளின் புஜத்தை பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான். அவனின் நகங்கள் அவளின் புஜத்தை குத்தின. ரூமுக்கு வந்த பிறகு அவளை விட்டு விட்டவன் சப்பென்று ஓங்கி ஒரு அறையை விட்டான். மானசா அதிர்ந்து விட்டாள். குழந்தை திடீர் சத்தத்தில் அழ ஆரம்பித்து விட்டது. அவளின் கரங்கள் அனிச்சையாக குழந்தையை தாலாட்ட ஆரம்பித்தது. “தனியா இருக்கும்போது என்னை நீ செருப்பால் கூட அடி. நான் அமைதியா வாங்கிப்பேன். ஆனா சர்வன்ட்ஸ்

சோதிக்காதே சொர்க்கமே 10 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 9

அவளின் மேனி முழுக்க அவன் தடம். அவளின் நெஞ்சு முழுக்க ப்ரீத்தியின் முகம். உடம்பு ஒத்துழைக்கிறது என்று மட்டும் பார்த்தவனுக்கு அந்த மனம் எவ்வளவு பாடாய் படுகிறது என்று தெரியவில்லை. கண்ணீரை கொட்டிய கண்கள் மரணத்தை விரும்பியது. இந்த உலகத்தை பார்க்க விரும்பவில்லை. அவள் அழுதுக் கொண்டிருந்தாள். இவன் அவளை திருடிக் கொண்டிருந்தான். பிடிவாதம்தான். அவள் மீது கோபம்தான். ஆனால் அவள் தன் சொத்து என்பதை அவன் மறக்கவில்லை. அதனாலேயே முடிந்த அளவுக்கு அவளை காயப்படுத்தாமல் களவாடி

சோதிக்காதே சொர்க்கமே 9 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 8

மானசாவின் முன்பே வேற்றுடையை மாற்றினான் தீனா. இவள் அவனை பார்க்காமல் குழந்தையின் முகத்தை பார்த்தாள். உடை மாற்றிக் கொண்டவன் “எனக்கு வேலை இருக்கு. கிளம்புறேன்.. என் அம்மா உன்னை வெளியே துரத்த மாட்டாங்க. அந்த நம்பிக்கை இருக்கு. ஆனா வேற ஏதாவது தொந்தரவு பண்ணினா எனக்கு போன் பண்ணு. நான் பார்த்துக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். இவள் குழந்தையை பார்த்து கண்ணீர் வடித்தாள். குழந்தையை பார்க்கும் போதெல்லாம் அழதான் தோன்றியது. குழந்தையின் விதி இப்படி ஆகிவிட்டது

சோதிக்காதே சொர்க்கமே 8 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 7

மானசாவின் அம்மா பூரணி சமையல் வேலைகளை முடித்துவிட்டு வீட்டு வேலைகளை செய்ய தொடங்கினாள்‌. தொடப்பத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ரூமையும் பெருக்கிக் கொண்டு வந்தவள் மகளின் அறை கதவை திறந்தாள். அந்த ரூமில் மகள் இல்லை. பாத்ரூமிலும் இல்லை. இந்த நேரத்துக்கு இவள் எங்கே போனாள் என்று பூரண யோசித்த நேரத்தில் வாசலில் கார் ஹாரனின் சத்தம் கேட்டது. வீட்டில் இருந்த மூன்று பேரும் வெளியே சென்றார்கள். தீனாவும் மானசாவும் மாலையும் கழுத்துமாக வாசலில் நின்று இருந்தார்கள். மானசாவின்

சோதிக்காதே சொர்க்கமே 7 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 6

சுலோச்சனா உறக்கத்தில் இருந்து எழுந்தாள். காலை நேரத்து கடமைகளை எல்லாம் முடித்து விட்டு பணிப்பெண் உதவியோடு தன் சக்கர நாற்காலியில் ஏறி அமர்ந்தாள். குழந்தையின் அறைக்கு சக்கர நாற்காலியை உருட்டினாள். அப்போது பார்த்து ஒரு பணிப்பெண் இவளிடம் ஓடி வந்தாள். “சார் கல்யாணம் பண்ணி வந்திருக்காரு மேடம்..” என்றாள். சுலோச்சனாவுக்கு அந்த வார்த்தைகளை கேட்டதற்கே நெஞ்சு அடைத்து விட்டது. அப்படி மட்டும் இருக்க கூடாது என்று வேண்டினாள். வாசலை நோக்கி நாற்காலியை உருட்டினாள். வாசல் கதவை நெருங்கினாள்.

சோதிக்காதே சொர்க்கமே 6 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 5

இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. மானசா தீனா வீட்டின் கேட்டை நெருங்கி அந்த கேட்டின் மீது தட்டினாள். வாட்ச்மேன் இவளை பார்த்துவிட்டு “நான் மேடம்க்கு கால் பண்றேன்..” என்றார். ஆனால் இந்த முறையும் சுலோச்சனா “அவளை உள்ளே விடாதிங்க..” என்றுதான் கடினமான குரலில் சொன்னாள். அதைக் கேட்டு வெறுப்பாகி விட்டாள் மானசா. “நான் அந்த லேடிகிட்ட உடனே பேசணும்..” என்று கோபத்தோடு சொன்னாள். வாட்ச்மேன் அதையும் போனில் சொன்னார். சுலோச்சனா ஐந்து நிமிடத்தில் இங்கே வந்துவிட்டாள். பட்டன் அழுத்தினால்

சோதிக்காதே சொர்க்கமே 5 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 4

கார் நின்றது. தீனா கீழ் இறங்கினான். காம்பௌண்ட் சுவரில் சாய்ந்து நின்று இருந்த மானசாவும் கார் நின்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள். தீனா இவள் அருகில் வந்தான். ‘இவனா?’ என்று யோசித்தவள் அவசரமாக முகத்தை துடைத்து கொண்டாள். இரவெல்லாம் கற்பனையின் மூலம் வந்து உறங்க விடாத ராட்சசி, உறங்கினாலும் கனவில் வந்து கொள்ளை கொண்ட ராட்சசி இப்போது நிஜத்திலேயே வந்து விட்டாளே என்று இவனுக்கு ஆச்சரியம். “இங்கே என்ன செய்றிங்க?” என்று கேட்டான். மனைவியின் இறப்புக்கு முழுமனதாக

சோதிக்காதே சொர்க்கமே 4 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 3

மகனுக்கு அடியை தந்த பிறகும் சுலோச்சனாவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. “நீயெல்லாம் நரகத்துக்குதான்டா போவ..” என்று திட்டினாள். “ஆனா நான் அந்த பொண்ணை லவ் பண்றேன்..” என்று இவன் அம்மாவின் கோபத்தை பொருட்படுத்தாமல் பதில் சொன்னான். இவள் சுற்றி தேடினாள். செருப்பு கையில் கிடைக்கவில்லை. உணவு கொண்டு வந்து தந்திருந்த தட்டு இருந்தது. இவள் சாப்பிட்டு இருக்கவில்லை. அந்த தட்டை எடுத்து மகனின் தலையில் அடித்தாள். உணவு அவன் தலையிலும் உடம்பிலும் கொட்டியது. சுலோச்சனாவின் கண்களில் கண்ணீர் இறங்கியது.

சோதிக்காதே சொர்க்கமே 3 Read More »

error: Content is protected !!