தீராத ஆறாத பேராசையடி பெண்ணே..

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 41

பேராசை- 41 ஆம், சுவரில் இரத்தக் கரை படிந்து இருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்தவனுக்கு எப்படி இந்த இரத்தக் கரை படிந்து இருக்கும் என ஊகிக்க சில நொடிகள் பிடித்தன.   புரிந்த கணம் அப்படியே அசைவின்றி வெறிக்கத் தொடங்கியவனின் நினைவு அன்று அவனின் விருதுகளைப் அவள் போட்டு உடைத்ததனால் அவளின் கழுத்தைப் பற்றிப் பிடித்து தூக்கியதும் பின்னர் அவளை அப்படியே விடுவிக்கும் போது நெற்றியிலும் காலிலும் அவளுக்கு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது அவன் நினைவில் […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 41 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 40

பேராசை – 40   ஈகுவேடாரில் இருந்து இலங்கை வந்து சேர கிட்டத்தட்ட இருபத்து மூன்று மணித்தியாலங்களைப் பிடித்து இருந்தது. விமானம் தரை இறங்கியதும் எப்போதுடா செக்கிங்கை முடித்து விட்டு வெளியில் போகலாம் என்று இருந்தது அவனுக்கு….   ஒருவழியாக வெளியில் வந்தவன் அங்கு போடப் பட்டு  இருந்த இருக்கையில் தொப்பென தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவனுக்கு ஆழினிக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவனின் சிந்தை முழுதும் ஓடிக் கொண்டிருந்தது.  

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 40 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 39

பேராசை – 39 போகும் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளது விழிகளோ உயிர்ப்பைத் தொலைத்து இருந்தன.   போவதற்கு வழியும் தெரியாது இதில் தனியாக வழி தவறிச் சென்று காட்டு விலங்குகளிடம் சிக்கி உயிர் போவதை விட தானே உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன? என்று நினைத்தவள் மனதில் விக்ரம் என்று ஒருவன் இருக்கின்றான் என்ற நினைவு கூட வர வில்லை.   அதே விரக்தி மனநிலையில் விழிகளை மூடித் திறந்து ஆழ்ந்த ஒரு பெரு

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 39 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 38

பேராசை- 38 அவன் கேட்ட கேள்வியில் அவளது மேனியே கூசிவிட்டதைப் போல உணர்ந்தாள்.   “வாட்? கம் அகைன்” உடைகளை அணிந்துக் கொண்டு எழுந்தவன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு “இதுக்காகத் தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று  சற்று முன் நிகழ்ந்து விட்ட கூடலை வைத்து அவன் கேட்க….   அவன் கேட்ட தோரணையில் அவளுக்கு இதயமே வெடித்து விடுவது போல வலித்தது. விழிகள் கலங்கிப் போக அவனை வெறித்துப் பார்த்தவள் “ நான் என்ன பண்ணேன் இங்க வந்ததுல இருந்து ஹர்ட் பண்ணிட்டே இருக்கீங்க” என்று அவள் கேட்க….   “வாட் நானா உன்னை ஹர்ட் பண்றேன்?” என்றவன் நதியினை வெறித்தான்.   “வை நாட்? நான் இதுக்காகவா உங்களோட” என்றவள் குரலோ முழுமையாக சொல்ல வந்ததைக் கூட முடிக்க முடியாமல் தழுதழுத்தது விட்டது.  

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 38 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 37

பேராசை – 37   ஆம், கீழே நின்றுக் கொண்டு இருந்தது ஜாகுவார் அல்லவா!   அவளுக்குத் தான் தாறு மாறாக கற்பனை போகுமே!   இப்போது கீழே விழுந்தால் என்ன ஆகும் என்று நினைக்கும் போதே புல்லரித்து விட்டது அவளுக்கு…..   “ஆழி…. பார்த்தியா?” என்று அவன் கேட்க….   அவளின் மௌனத்தில் பயந்து விட்டாள் என புரிந்துக் கொண்டவன் “பேசு டி” என்றான் மெல்லிய குரலில்….   “என்னத்தை பேசணும் இப்போ… அதான் பார்த்திட்டேனே”

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 37 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 36

பேராசை – 36     அவளை அனல் பார்வையுடன் நெருங்கியவன் பார்வை அவளுக்கு காலில் கட்டிட்டு முடித்து விட்டு எழுந்தவனின் மேல் இப்போது படிய, “விக்ரம், என் நியூ ப்ரெண்ட்” என்றாள்.   “ஹும்….” என்றவன் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க, அவனோ “அம் விக்ரம் ப்ரோம் இந்தியா” என்றவன்  அவனின் துளைத்து எடுக்கும் பார்வையை எதிர் கொண்டவன் புரிந்து கொண்டவனாக தான் வந்தது முதல் நடந்தவைகளை கூற “அனிவே தேங்க்ஸ்” என்று சொன்னான் காஷ்யபன்.

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 36 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 35

பேராசை – 35 யாரோ தன்னை பின்னால் இருந்து வாயை மூடி இழுக்க, அவளின் கைகளில் இருந்த தடி நழுவி விழும் சமயம் அதை தன் காலால் லாவகமாக கீழே விழாமல் தடுத்து இருந்தான் அவன்.   ஒருவேளை அந்த தடியானது கீழே விழுந்தால் அதன் சத்தத்தில் அந்த பாம்பு தங்களின் புறம் கவனம் செலுத்தக் கூடும் அல்லவா!   இருவருக்கும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான்.   அவளும் திமிறி விடுபட எண்ணவில்லை.

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 35 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 34

பேராசை – 34   ஆம், அங்கு நதி ஓடிக்கொண்டு இருக்க, கீழே விழுந்த வேகத்தில் நதியில் விழுந்து இருந்தாள் ஆழினி. அவன் விழிகள் வெறித்தது வேறு எதையும் அல்ல, நதியில் ஆழினி ஒரு பக்கம் வீழ்ந்து இருக்க அவளுக்கு சற்றே தள்ளி அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பிரானா  மீன்கள் தன் கூர் போன்ற பற்களால் உயிருள்ள ஒரு மிருகத்தின் உடலை  துளைத்து மின்னல் வேகத்தில் உண்ண, அணுவணுவாக உயிருடன் கதறலோடு இறந்த அந்த

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 34 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 33

 பேராசை – 33 “பேபி தேவையான எக்கியுப்மென்ஸ் எல்லாம் கவனமா வச்சுக்கோ” என்றவாறு தனது பையினை தோளில் மாட்டிக் கொண்டவனைப் பார்த்து “உங்களுக்கே உதறுதுல அப்புறம் ஏன் காஷ் இங்க வந்தோம் பேசாமல் ஹனிமூன் செலிப்ரேட் பண்ணுனமா இடத்தை காலி பண்ணுனமான்னு இருந்து இருக்கலாம்ல” என்றாள். வந்த கோபத்தை முயன்று அடக்கியவன் “எனக்கு ஒன்னும்  பயம் இல்லை என்றவன் நெற்றியை நீவிக் கொண்டே ஹியர் லிஸின் ஆழி இருபத்து இரண்டு ஹவர்ஸ் டிராவல் பண்ணி இவ்ளோ தூரம்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 33 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 32

பேராசை – 32 இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமானது சரியாக பதினெட்டு மணித்தியால பயணத்தின் முடிவில் “ஈகுவேடார் கோமஸ்” என்ற சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.   இந்த சர்வதேச விமான நிலையமானது பிரேசிலில் உள்ள மனாஸ் என்ற நகரில் அமைந்துள்ளது. தன் தோளில் சாய்ந்து உறங்கும் அவளை மென் புன்னகையுடன் பார்த்து விட்டு அவளின் நெற்றியில் புரளும் முடியை காதிற்கு பின்னால் எடுத்து விட்டவன் “பிளைட் லேண்ட் ஆச்சு பேபி”

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 32 Read More »

error: Content is protected !!