நாணலே நாணமேனடி..

நாணலே நாணமேனடி – 21

அன்று, ஸ்டோருக்குள் நுழைந்த சற்று நேரத்துக்கெல்லாம் சேமிக்கப்படாத ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, சம்யுக்தாவுக்கு. பொதுவாக அவள் வேலை நேரத்தில் அலைபேசியுடன் சரசம் புரியும் ரகத்தை சேர்ந்தவள் அல்ல. திருமணத்துக்கு முன்பு என்றால், பெரும்பாலும் துணிக்கடைக்குள் நுழையும் போதே அவளின் அலைபேசி சைலன்ட் மோடில் உறங்கிக் கொண்டிருக்கும். தான் அழைப்புக்கு பதில் கொடுக்கவில்லை என்றால், அடுத்த கணம் வீட்டிலிருந்து வித்யாவுக்கு அழைப்பு செல்லும் என்றபடியால் பயம், பதற்றம் எதுவுமில்லை. ஆனால் இப்போது அவ்வாறு அலட்சியமாக இருக்க […]

நாணலே நாணமேனடி – 21 Read More »

நாணலே நாணமேனடி – 20

காலச் சக்கரம் முன்னும் பின்னுமாக சுழன்று, யுக்தா-நந்தன் வாழ்வில் மூன்று மாதங்களை தன் சுழற்சிக்கு இரையாக்கிக் கொண்டிருந்தது. இடையில் ஒருநாள், முதல் மாத சம்பளத்தை மொத்தமாக கொண்டு வந்து யுக்தாவுக்கு நீட்டி, அவளின் மனம் குளிர்வித்த சாந்தனா, மறுநாள் விடியலில் அவினாஷின் குடும்பத்தினரை எந்தவொரு முன் அறிவித்தல், ஏற்பாடும் இன்றி வீட்டுக்கு வரவழைத்து அவளுக்கு நெஞ்சுவலியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாள். முன்னாளில், அவள் சம்பளத்தைக் கையில் பொத்தியதும் ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா! கண்களுக்குச் சொந்தமில்லை.’ என ஐயத்தில் மயங்கிய

நாணலே நாணமேனடி – 20 Read More »

நாணலே நாணமேனடி – 19

சம்யுக்தா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது. திருமணத்துக்கு உடுத்திக் கொண்ட அதே சந்தன நிற பட்டுச் சேலையில், தலை நிறைய மல்லிப்பூ சூடி இருந்தவளை விட்டு வேட்டி சட்டையில் இருந்தவனுக்கு பார்வையை அகற்றவே முடியவில்லை. திருமணமன்றும் இதையே தான் கட்டி இருந்தாள். சொல்லப் போனால் சகல ஒப்பனைகளுடன், கைகளில் மருதாணி மணம் வீச, கூந்தல் அலங்காரங்களுக்குச் சற்றும் குறைவின்றி இதை விட ஜகஜோதியாய் ஜொலித்தாள். ஆனால் அன்றெல்லாம் அவளைப் பார்த்து மயங்கி நிற்கவில்லை யதுநந்தன். ஏதோ

நாணலே நாணமேனடி – 19 Read More »

நாணலே நாணமேனடி – 18

வெளிர் நிற ஆடையில், லட்சக்கணக்கான ஜோடிக் கண்களுக்கு விருந்தூட்டியபடி வானவெளியில் உலா வந்து கொண்டிருந்தவளை, மார்புக்கு குறுக்காகக் கைகளை கட்டியபடி பார்த்திருந்தாள் சம்யுக்தா. ஊர் உறங்கிப் போயிருக்கும் காரிருள் சூழ்ந்த இந்நிஷப்த ராத்திரிப் பொழுதில், சகல ஒப்பனைகளுடன் இந்த நிலவு யாருக்காகத் தான் காத்திருக்கிறாளோ! ஒருவேளை, இந்த பூலோகத்துப் பூவை போன்றே அகம் திருடியவன் மனை திரும்பும் வரை தனிமையில் வானவீதியிலே நடை பயின்று கொண்டிருக்கிறாளோ, என்னவோ?! தெரியவில்லை. உடலை தொட்டுச் சென்ற கூதல் காற்று சில்லென்ற

நாணலே நாணமேனடி – 18 Read More »

நாணலே நாணமேனடி – 17

யாவரும் உறங்கிப் போன அந்த ஆளரவமற்ற இராப் பொழுதில், தன்னந்தனியே மறுகி தவித்து மதியாளிடம் ‘நிம்மதி’யைத் தேடுவதாக யுக்தா சொன்னதிலிருந்து நந்தனுக்கு மனமே சரியில்லை. புகுந்த வீட்டில் கூட சந்தோசமாக வாழ வழியின்றி, பிறந்த வீட்டைப் பற்றிய கவலையில் உழன்று கொண்டிருக்கும் யுக்தாவின் மனம் அவனுக்கு பிரமிப்பைக் கொடுத்தாலும், ‘ஆனா பாவம் இல்ல?’ என்ற இரக்கத்தையும் அவள் மீது தோற்றுவித்தது. அன்றிலிருந்து சரியாக மூன்றாவது நாள், யுக்தா துணிக்கடையிலிருந்து வீட்டுக்கு வரும் போது, கூடத்தில், சக்கர நாற்காலியில்

நாணலே நாணமேனடி – 17 Read More »

நாணலே நாணமேனடி – 16

அன்றிரவு வீட்டுக்கு வந்ததும் நந்தனைப் பிடித்துக் கொண்டாள் சம்யுக்தா. “நீங்க எதுக்கு சந்தாவுக்கு மாமாவோட கம்பெனியை சஜஸ்ட் பண்ணீங்க?” என ஆரம்பித்தவளை கை நீட்டிப் பேச விடாமல் தடுத்தவன், “சொந்தத்துக்குள்ள அவ விரும்பும்படி வேலை பார்க்க கம்பெனிஸ் இருக்குறப்போ, சாந்தனா எதுக்கு வெளியே போய் தடுமாறி திரியனும்? என்கிட்ட பேசிட்டு இருக்கும் போது கம்பெனிஸ் பத்தி கேட்டா. நான் என்னவோ நார்மலா தான் சொன்னேன். அதுவுமில்லாம அது என் அப்பாவோடதுனு அவளுக்கு தெரியாது..” என்றான், அமைதியான குரலில்.

நாணலே நாணமேனடி – 16 Read More »

நாணலே நாணமேனடி – 15

அடுத்து வந்த ஓரிரு நாட்களும் வெகு சாதாரணமாகத் தான் கழிந்து போனது, புதுமணத் தம்பதியினருக்கு. முதல் நாளன்று இரவு நந்தன் சொன்னது போல், மறுநாளே சுவர் வார்ட்ரோபில் தன் உடைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தவள் கூடவே, சற்று ஒழுங்கீனமாகக் காணப்பட்ட அவனது உடைகளையும் அழகாக மடித்து வைத்து, அவனிடமிருந்து மெச்சும் சிறு தலை அசைப்பைப் பெற்றுக் கொண்டிருந்தாள். வீடியோ காலில் பார்த்து வந்த மம்மியை இப்போதெல்லாம் இருபத்திநான்கு மணி நேரமும் தன் கண் முன்னே காண்பதில் குஷியோ

நாணலே நாணமேனடி – 15 Read More »

நாணலே நாணமேனடி – 14

திருமணம் நல்லபடியாக முடிந்து, சம்யுக்தா நந்தனின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள். வர முன்பு, கண்களில் கண்ணீர் சொரிய நின்றிருந்த தாயைக் கட்டியணைத்து ஆயிரம் பத்திரங்கள் கூறிவிட்டு வித்யாவிடம் கண்ணசைவில் விடை பெற்றுக் கொள்ள மறக்கவில்லை. வந்தவளை புகுந்த வீட்டு சாம்பிரதாயங்கள், சடங்கு முறைகள் என படுத்தி எடுத்தனர், வீட்டில் கூடியிருந்த யதுநந்தனின் நெருங்கிய சொந்தங்கள். யதுநந்தன் தன்னை சாதாரணமாகக் காட்டிக் கொள்ள பெரிதும் பாடுபட்டான். ஒவ்வொரு நிகழ்விலும் பல்லவியின் நினைவுகள் மேலெழுவதைத் தவிர்க்க முடியாமல் தவித்துப் போனவன்

நாணலே நாணமேனடி – 14 Read More »

நாணலே நாணமேனடி – 13

சம்யுக்தா தயங்கியது போல் எதுவும் நடக்கவில்லை.   காருண்யராஜ் ‘டிஸ்கவுண்ட்’ மூலமாக, வாங்கிய பட்டுச்சேலை மற்றும் பிறவற்றின் பெறுமானத்தைக் கொஞ்சமாகக் குறைத்து நந்தன் முன்னிலையில் அவளது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் தான் நடந்து கொண்டார். போகிற போக்கில், ‘நாளைக்கு ஸ்டோர் வந்ததும் என்னை வந்து பாரும்மா, சம்யுக்தா!’ என சாடைமாடையாகப் பேசி கண்காட்டி விட்டுச் செல்ல, ‘நான் உங்களை வந்து பார்க்கலேன்னாலும் வழமையான அர்ச்சனை என்னைத் தேடி வராதா சாரே?’ என்ற நினைப்பில் சிரிப்பு பீரிட்டது சம்யுக்தாவுக்கு.

நாணலே நாணமேனடி – 13 Read More »

நாணலே நாணாமேனடி – 12

தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள். தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள் மறுநாள் முழுவதும் வழமை போல் வீட்டுவேலை, துணிக்கடை எனக் கடந்து போனது அவளுக்கு. ‘உங்களை மீட் பண்ணனும்’ என அவள் காலையில் அனுப்பி வைத்த குறுஞ்செய்தியைப்

நாணலே நாணாமேனடி – 12 Read More »

error: Content is protected !!