வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 17

வாடி ராசாத்தி – 17 எவ்வளவு வேலை பளு இருந்தாலும் அது எதுவுமே கேபியை பாதிக்காது. அவன் எல்லா வேலைகளையும் விரும்பி செய்வதால் எந்நேரமும் உற்சாமாகவும் துடிப்பாகவும் தான் இருப்பான். ஆனால் இன்று அவன் வாழ்வின் ஆதாரமே லேசாக ஆட்டம் கண்டு விட, மனம் கொஞ்சம் துவண்டு தான் போனது அவனுக்கு. சிறு வயதில் இருந்து எல்லாமே இருந்தும் அம்மா இல்லாததால் எதுவுமே இல்லாதது போல் தான் உணர்ந்திருக்கிறான். அம்முவை இழந்து விட மாட்டான் என்று அவனுக்கு […]

வாடி ராசாத்தி – 17 Read More »

வாடி ராசாத்தி – 16

வாடி ராசாத்தி – 16 “ஹலோ தம்பி நல்லா இருக்கீங்களா?” செல்வராஜின் நெருங்கிய நண்பரிடம் தொடர்பில் இருந்தான் கேபி. பேசும் விதத்தில் பேசி அவரை வசீகரித்து அவரிடம் இருந்து தகவல்களை பெற்று கொள்வான். “நல்லா இருக்கீங்களா மாமா…. உங்க நண்பர் என்ன சொல்றார்….?” “உன்மேல கோவமா இருக்கேன் நான். நீ அவன் நிலத்தை விற்க விடாமா செஞ்சு இப்போ அவன் அனாவசியமான பிரச்சனையில் போய் மாட்டிக்கிட்டு இருக்கான். கூடவே பொண்ணு வாழ்க்கையும் மாட்டிக்கிட்டு இருக்கு….” என்று நாராயணன்

வாடி ராசாத்தி – 16 Read More »

வாடி ராசாத்தி – 15

வாடி ராசாத்தி – 15 கேபி அவளை வரச்சொல்லி இருப்பானோ இல்லைனா இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் இங்கே வர என்று யோசித்த ஜெயந்தி, “இந்த வீட்டுக்கு வந்து பார்த்து பேசி பழகற வேலையெல்லாம் எனக்கு பிடிக்காது….” “என்ன அத்தை, நான் ஏதோ உங்களை பொண்ணு பார்க்க வந்துட்டு போன மாப்பிள்ளை மாதிரி, என்னை பார்க்கமாட்டேன், பேசமாட்டேன், பழக மாட்டேன்னு பதறி போறீங்க….” “என்ன உளர்ற?” ஜெயந்திக்கு தான் புரியவில்லை மற்ற இருவருக்கும் அவள் ஜெயந்தியை

வாடி ராசாத்தி – 15 Read More »

வாடி ராசாத்தி – 14

வாடி ராசாத்தி – 14 அன்று இரவு வீட்டிற்கு வந்த கேபியை தன் அறைக்கு அழைத்தார் ஞானம். ஜெயந்தி கூறிய அனைத்தையும் அவர் சொல்ல, வெகுண்டு எழுந்தான் கேபி. பெரியம்மாக்கு நீங்களே பதில் சொல்லி இருக்கணும் பா, அன்னைக்கு எனக்கு சாதகமாக பேசினீங்க….இப்போ மாத்தி பேசறீங்க….? அவன் கோபம் கண்டு நல்லவேளை அம்ரிதவல்லி பற்றி ஜெயந்தி சொன்னதை சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டார் ஞானம். “நந்து, விஜி எல்லாம் நினைச்சா எனக்கும் ஏன் புதுசா இப்போ நாம

வாடி ராசாத்தி – 14 Read More »

வாடி ராசாத்தி – 13

வாடி ராசாத்தி – 13 செல்வராஜ், அம்மு, கிஷோர் என மூவரும் செல்வதை பார்த்தபடி அலுவலகத்தை அடைந்தார் முருகர். “என்ன பா, பெரியம்மாக்கு தான் தலைவலி கொடுத்து இருக்கேன்னு பார்த்தா, உன் மாமா வீட்டுக்கும் அதே நிலைமை தான் போல….” “எல்லாரும் அவங்க அவங்க சொல்றது செய்றது தான் சரினு நினைக்கிறாங்க…. அதனால நானும் அப்படியே இருக்கேன் பெரியப்பா.” “மத்தவங்களை பத்தி கவலைப்பட தேவையில்லை, ஆனா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு பிரச்சனை இல்லாம இருந்தா சரி….”

வாடி ராசாத்தி – 13 Read More »

வாடி ராசாத்தி – 12

வாடி ராசாத்தி – 12   வீடு வந்தவனின் மனதில் கோபத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதை மீறி என்னை என்னவென்று நினைத்தாள் அவள்….? நான் அழைக்கும் போது அசையாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்…. நினைத்து நினைத்து நிலைகொள்ளாமல் தவித்தான் கேபி. அவளை வார்த்தைகளால் விளாசி தள்ள துடித்தது அவன் மனம். இப்பிடியே சற்று நேரம் இருந்தவன், உடனே சற்குணத்தை அழைத்தான். அழைத்து சில வேலைகள் செய்ய சொல்ல, அந்த நடுராத்திரியில் இது அவ்ளோ முக்கியமா என்று

வாடி ராசாத்தி – 12 Read More »

11. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 11   அன்று இரவு உணவருந்தி விட்டு அறைக்கு செல்லும் கேபியை நிறுத்தினார் ஜெயந்தி.   “உங்க மாமா வீட்டுக்கு போயிருந்தியா ராஜா இன்னைக்கு….?” நேராக எந்த பாசாங்கும் இன்றி வந்தது கேள்வி.   ஜெயந்தியின் அதிருப்தியை உணர்ந்தாலும், அதை கண்டுகொள்ளாமல், “ஆமா பெரியம்மா….” என்றான்.   சென்றதற்கு ஏதாவது விளக்கம் கொடுப்பான் என்று எதிர்பார்த்த ஜெயந்திக்கு பலத்த ஏமாற்றம். அதை விழுங்கி கொண்டு,   “உங்க தாத்தா பாட்டி நல்லா இருக்காங்க

11. வாடி ராசாத்தி Read More »

10. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 10 ஒருவரில் ஒருவர் ஆழ்ந்து இருந்த இருவரையும் கலைத்தது அந்த வழியே சென்ற லாரியின் சத்தம். அப்போதும் பதட்டம் ஏதும் இன்றி நிதானமாக அவளில் இருந்து மெதுவாக விலகினான் கேபி. விலகியவன், சகஜமாக அவள் கூந்தலை ஒதுக்கி, அவள் முகத்தை கர்சீப் கொண்டு துடைத்து விட்டான். அவன் செய்யும் அனைத்தையும் கண்கள் மூடி ஏற்று கொண்டாள் அம்மு. அவள் மறுப்பை மதிக்கிறவன் அல்லவே அவன்…! அதோடு இன்று அவளும் அவனில் கரைந்து இருக்க,

10. வாடி ராசாத்தி Read More »

9. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 9 ஜெயந்தி பேசி விட்டு சென்றதை பொருட்படுத்தாமல், ஞானம் மகனை கண்ணால் அழைத்து கொண்டு அவர் அறைக்கு சென்றார். “என்ன பா…. ஏதாவது முக்கியமான விஷயமா?” “ம்ம்…. உன் கல்யாண விஷயமா….” “அப்பா, அம்மாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை….” “என்ன தம்பி இப்படி அவசரப்படுற…. புதுசா இருக்கு…. எதிராளியை பேச விட்டு அவன் மனசை தெரிஞ்சுக்கிற என் பையன் எங்க….? ஏன் இந்த அவசரம்….?”

9. வாடி ராசாத்தி Read More »

8. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 8 மணி இரவு ஒன்றை தொட, உச்சு கொட்டியப்படி எழுந்து அமர்ந்தாள் அம்மு. உறக்கம் கிட்டே வருவேனா என்றது…. எதுக்கு இப்படி வேண்டாதது எல்லாம் நினைக்கிறேன்…. கடவுளே….! எவ்வளவு புலம்பினாலும் மனம் மாலை நடந்த வாக்குவாதத்தை விட கேபியின் அண்மையை தான் நினைத்து நினைத்து பார்த்தது. அந்த திண்மையான தோளும், அகண்ட மார்பும், அழுத்தமான அணைப்பும் மென்மையாக சுவைத்து அவன் கொடுத்த முத்தமும் அவளுக்கு கிறுக்கு பிடிக்க போதுமானதாக இருந்தது. எவ்ளோ தைரியம்

8. வாடி ராசாத்தி Read More »

error: Content is protected !!