வீட்டிற்கு வந்த நல்லசிவம், சந்திராவிடம் “என் ஆத்தாவை எங்கே சந்திரா?” என கேட்க “இப்போதாங்க, இரண்டுபேரும் வேலைக்கு போறாங்க” என்றதும் “சரி” என அமைதியாக வீட்டில் ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டார்.
இரவு 7 மணி கடற செம்பா, கோகி இருவரும் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
“என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு ஏன்டி இவ்வளவு இருட்டா இருக்கு, தெருவிளக்கு எல்லாமே ப்யூஸ் போய்டுச்சா என்ன?
பார்த்தால் அப்படி தெரியலை. யாரோ வேணும்னே ஆஃப் பண்ணி போட்ட மாதிரியே இருக்கு” என்றாள் கோகி.
“உன் மூளை மட்டும் அப்படித்தான் யோசிக்கும்” என செம்பா வண்டியை ஓட்டிக் கொண்டு வர சட்டென்று பிரேக் அடித்து நிறுத்தினாள்.
நிறுத்திய வேகத்தில் செம்பாவின் மீது பலமாக இடித்தாள் கோகி.
“ஆஹ் அம்மா, என்னடி ஏன் நிறுத்துன, என்க, செம்பாவின் நிலை குத்திய பார்வையில், அந்த இடத்தை கோகியும் பார்க்க… அப்போதுதான் தங்கள் முன்னால் நின்றிருந்த காரினை கவனித்தாள் கோகிலா.
“இது யாரடி நடுரோட்டில் காரை நிறுத்தி வச்சது, கரண்ட் இல்லன்னதும் கண்ணு தெரியலை போல, நம்ம மேல இடித்துவிடாமல் ஸ்கூட்டியை அந்த பக்கம் திருப்பு” என்றதும் செம்பா வேறு பக்கம் திரும்ப போக, அந்த கார் அவர்களை போக விடாமல் தடுத்தது.
“செம்பா ஏதோ தப்பா இருக்குற மாதிரி இருக்கு” என கோகி பயம் கொள்ள, “பயப்படாத கோகி எதுவும் ஆகாது” என்று ஸ்கூட்டியை மறுபடியும் வேறு பக்கம் திருப்பப் போக, கார் அவர்களின் பாதையை மறைத்தது, சடசடவென காரிலிருந்து நான்கு, ஐந்து பேர் இறங்கி செம்பாவின் கையை பிடித்து இழுக்க, கோகி தடுத்தாள். அப்போது வண்டியில் இருந்த ஒருவன் “டேய் அந்த பொண்ணு தலைல ஒரு போடு போடுடா” என்றதும் அங்கிருந்து ஒருவன் கட்டையால் கோகி தலையில் ஓங்கி ஒரு அடி வைக்க, அப்படியே மயங்கி சரிந்தால் கோகிலா.
அதை பார்த்த செம்பா “கோகி, கோகி”என சத்தமிட, மயக்கமருந்து தடவிய கைக்குட்டையை அவள் மூக்கில் வைக்க மயங்கி சரிந்தாள் செம்பா.
“டேய் அவளை சீக்கிரம் தூக்கி வண்டியில் போடுங்கடா, மருது அண்ணா தோப்புக்கு போகனும். இந்த மருந்து கொஞ்ச நேரம் தான் நிற்க்கும். அதுக்குள்ள நம்ம இவளை அண்ணாகிட்ட ஒப்படைத்தால் மட்டும் போதும். நம்ம வேலை அதோடு முடிந்தது. அதுக்கப்புறம் நடக்கவேண்டியதை அண்ணா பார்த்துப்பார். சீக்கிரம் வாங்கடா” என அந்த கும்பலின் தலைவன் சொன்னதும் செம்பாவை தூக்கி காருக்குள் வைத்தனர். கார் வேகமாக மருதுவின் தோப்பை நோக்கி சென்றது..
காலையில் சொன்னது போல செம்பா வருவதற்காக காத்துக் கொண்டிருந்தான் சமர். அவள் வரும் நேரம் தாண்டி விட செம்பாவின் எண்ணிற்கு அழைத்தான் அழைப்புச் செல்லவில்லை. போன் ஸ்கூட்டி பக்கத்தில் இருந்த ஒரு செடிக்குள் கிடந்தது. “என்ன ஆச்சுன்னு தெரியலையே ஏன் போன் எடுக்க மாட்றாள், சரி நம்மலே நேர்ல போய் பார்க்கலாம்’ என மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வந்தான் சமர்.
அங்கே ரோட்டில் ஒரு ஸ்கூட்டி ஓரமாகக் கிடக்க ‘பைக் ஆக்ஸிடென்ட் மாதிரி இருக்கே’ என பைக்கை அங்கே நிறுத்தியவன், ஸ்கூட்டியை பார்த்ததும் இது பட்டாசு ஸ்கூட்டில்ல என்றவனின் மனம் படபடத்தது. பட்டாசு, பட்டாசு!, என சத்தமிட, ‘ஒருவேளை விபத்து நடந்து கீழே விழுந்துட்டாங்களோ’ என நினைத்து போன் ஒளியில் சாலையோரம் தேட, அங்கே கோகி தலையில் குருதி வழிய கிடந்தாள். அவளை பார்த்து அதிர்ந்தவன் “கோகி, கோகி” என்னடா நடந்தது” என கன்னத்தில் தட்ட, மெதுவாக கண்களை திறந்தாள்.
“ண்ணா… செம்பா… ண்ணா” என்ற வார்த்தை மட்டுமே வந்தது.
“ உனக்கு எப்படி அடிபட்டத்து கோகி. செ..செம்பா எங்கே? நீ மட்டும் இருக்க என்னாச்சிம்மா?” என கேட்க… முழுவதும் மயங்கும் நிலையில் இருந்த கோகி. “அ..ண்ணா… செ..செம்பா… தோ..தோப்பு.. ம..மருது” இந்த வார்த்தையை மட்டும் திருப்பி திருப்பி சொல்லியபடி இருக்க ஏதோ தவறாக நடந்து இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. கோகியும் முழுவதும் மயங்கவிட்டாள். கோகி இருக்கும் நிலையை கருத்தில் கொண்டு, அவளை தனியாக விட்டுவிட்டு செல்ல முடியாது. என்பதை உணர்ந்தவன் உடனே பாலாவிற்கு அழைத்து இடத்தை கூறி காரை எடுத்து வருமாறு சொன்னான். ஐந்து நிமிடத்திலேயே பாலா அங்கே வந்து சேர, அவனிடம் கோகியை “பத்திரமா, நம்ம வீட்டுக்கு கொண்டு போ, அவங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டாம். செம்பா இல்லாமல் போனால் எல்லாரும் பயந்துடுவாங்க, அவளை பத்திரமாக இருக்க சொல்லு. வீட்ல இருந்து போன் பண்ணா, முக்கியமான கேஸ் ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு இருக்கோம்னு மட்டும் சொல்ல சொல்லு. அதுக்குள்ள நான் எப்படியாவது செம்பாவை கண்டுபிடிச்சு கூப்பிட்டு வந்துடறேன்” என்றான் சமர்.
“நீ மட்டும் தனியா எப்படி போவ? நானும் வரேன்” என்றான் பாலா.
“கோகியை கூப்பிட்டு, நாங்க தங்கிருக்குற வீட்டுக்கு போ, எனக்கு தேவை என்றால் உடனே நான் உனக்கு போன் பண்றேன். அதுக்கு அப்புறம் நீ வா” என்றவன் உடனடியாக அவன் பைக் எடுத்துக் கொண்டு மருதின் தோட்டத்தை நோக்கி சென்றான்.
முழுவதும் தோட்டக்காடு. அந்த இடமே கும்மிட்டாக இருந்தது. இங்கே யாரும் வந்திருப்பது போல தெரியவில்லை. காரோ பைக்கோ எதுவுமே அந்த இடத்தில் இல்லை. ‘வேறு எங்கும் சென்று விட்டார்களா’ என சந்தேகத்திலேயே அந்த இடத்தை சுற்றி சுற்றி வர, மருதின் குடிசையில் மட்டும் லேசாக விளக்கு எறிவது போல் தெரிந்தது.
“அங்கே போய் பாக்கலாமா இல்லை, வேற இடத்தில் தேடலாமா’ என யோசனையோடு நின்றவன் ‘எதற்கும் அந்த குடிசையை பார்த்துவிட்டு வருவோம்’ என தன் போனின் விளக்கொலியில் அந்த இடத்தை நோக்கி நகர்ந்தான்.
அந்த குடிசையில் இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. ஒரே நிசப்தமாக இருந்தது. சின்ன சின்ன வண்டுகளில் ஒலியும், பட்சிகளின் சத்தம் மட்டுமே அந்த இடத்தில் நிறைந்திருந்தனர். அப்போது யாரோ உள்ளே நடமாடுவது போல சத்தம் கேட்க, ‘உள்ளே ஆள் இருக்கிற மாதிரியே தோணுது, ஒருவேளை நமக்கு தான் பிரம்மையா’ என நினைத்தவன் எதற்கும் கதவை திறக்கலாம் என கதவில் வெளிச்சத்தை பரப்ப, வெளியே பூட்டாமல் உள்ளே பூட்டிருப்பது நன்றாக தெரிந்தது. ‘அப்போ உள்ளே ஆள் இருக்காங்க’ என்பதை உறுதிப்படுத்தியவன் கதவை ஓங்கி மிதித்தான்.
அந்தப் பக்கம் நின்றிருந்த மருது கையில் கட்டையுடன் மூச்சு விடாமல், கதவை திறக்காதபடி பிடித்திருந்தான்.
‘இவன் எப்படி என்னோட இடத்தை கண்டுபிடித்து வந்தான் என்ற குழப்பத்தில், மயக்கமாக இருந்த செம்பாவை பார்த்து உன்னை அனுபவிக்காமல் விடமாட்டேன்டி. இன்னைக்கு என்னோட விருந்தே நீதான். முதல்ல இவனுக்கு சங்கு ஊதிட்டு அப்புறம் உன்கிட்ட வாறேன்” என சமரை கொல்லுவதற்கு தயாராக நின்றான் மருது.
“சமர் மிதித்த மிதியில் கதவு திறந்தது. உள்ளே வந்த சமரின் மீது பாய்ந்தான் மருது. அவனை ஒரே தள்ளாத தள்ளி கீழே விழ வைக்க, கீழே கிடந்த அரிவாளை தூக்கி சமரை முறைத்தபடி எழுந்தான் மருது.
சமர் செம்பாவை தேட, மங்கலான அகல்விளக்கு ஒலியில் ஒரு நாற்காலியில் செம்பாவை கை, கால்ளை கட்டி, அவள் சத்தமிடாதவாறு வாயிலும் கட்டு போட்டு வைத்திருந்தனர். இன்னும் மயக்கம் தெரியவில்லை.
மருது சமரை நோக்கி அரிவாளை ஓங்கிக் கொண்டு வர அவன் நெஞ்சிலே எட்டி மிதித்தான் சமர். விழுந்தவன் அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து சமரின் காலில் எரிந்தான். காலில் பட்டதும் சமர் தடுமாறி கீழே விழ, ஓடிவந்த மருது சமரின் கைகளில் கட்டையால் அடித்தான். சமர் லாவகமாக அவன் முகத்தில் ஓங்கி குத்து விட்டவன், கட்டையை அவன் கையில் இருந்து பிடுங்கி, மருதுவின் தலையில் அடிக்க தள்ளாடியபடி கீழே விழுந்தான் மருது. இன்னும் செம்பா மயக்கம் தெரியாமல் இருப்பதை பார்த்தவன். அங்கே தண்ணீர் இருக்கிறதா என பார்க்க ஒரு மண்பானை இருந்தது. அதில் தண்ணியை எடுத்து செம்பாவின் மீது தெளிக்க லேசாக கண்களை சுருக்கி முழித்தாள். எல்லாமே மங்கலாக தெரிய கண்களை கசக்கினாள் செம்பா.
அப்போது சமரின் பின்னால் வந்து கட்டையால் அடித்தான் மருது. திரும்பி பார்த்த சமர் காலால் எட்டி உதைத்து அங்கிருந்த இன்னொரு கட்டையை எடுத்து மருதுவின் தலையிலேயே அடிக்க தள்ளாடியபடி மீண்டும் கீழே விழ போனவன் அங்கே எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கை தட்டிவிட, கீழே விழுந்து உடைந்தது. அதில் இருந்த மண்ணெண்ணெய் எல்லாம் சிந்திவிட லேசாக அந்த இடம் தீப்பிடிக்க ஆரம்பித்தது. சண்டையிட்டதில் அதை கவனிக்கவில்லை முவரும். கட்டையை எடுத்து மருது எழுந்து ஓடாத வண்ணம் அவன் கால்களிலேயே அடித்தான் சமர்.. வலியில் அலறினான் மருது.
“ஏன்டா நாய்களா!, பொண்ணுங்கன்னா உங்களுக்கு கிள்ளுகீரையா, நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா, பொண்ணுங்க உடம்பை பார்க்காமல் உன்னை, என்னை மாதிரி ஒரு உயிரா பாருங்கடா நாய்களா” என கட்டையால் அவன் முகத்தில் அடித்தவன் “அன்னைக்கு அந்த பொண்ணை கடத்த பார்த்த, இன்னைக்கு என் செம்பாவே கடத்திருக்க, இனிமேலும் உன்னை உயிரோட விட்டால் நான் பிறந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்டும்” என எந்த இடமென பார்க்காமல் அவன் உடல் முழுவதும் கொலைவெறியில் அடியில் வெளுத்தான். முகம் கிழிந்து ரத்தம் வெளியேற, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. அதேநேரம் குடிசை முழுவதும் தீ பரவி அதிகமாகி விட, அதை உணர்ந்த சமர் தன்னை பார்த்துக் கொண்டிருந்த செம்பாவிடம் வந்து, கை கால்களில் இருந்த கட்டுகளை அவிழ்த்து அவளை இழுத்துக் கொண்டு வெளியே வர, மருதோ வெளியே வர நகரகூட முடியாமல் வலியில் உலறி கொண்டு இருந்தான். அப்போதுகூட உயிரை காக்கும் மருத்துவனாய் அவனையும் வெளியே கொண்டு வர நினைக்க, குடிசை மொத்தமும் எறிந்து உள்ளே விழ, சமரால் அதற்குள் போகமுடியாத அளவு தீ கொழுந்துவிட்டு எறிந்தது.
“ஏங்க” என செம்பா சொல்ல வர, “நீ எதுவும் சொல்ல வேண்டாம் செம்பா. அவனை பற்றி எனக்கு எல்லாமே தெரியும். அவனால் சீரழிந்த பொண்ணுங்க அதிகம். போலிஸ்க்கு போனாலும் பணபலம் ஆள்பலத்தை வைத்து சுலபமா வெளியே வந்துடுவாங்க. வந்து மறுபடியும் இதே தவறைதான் செய்வான். திருந்தலாம் மாட்டான்.. பொண்ணுங்கன்னா இவனை மாதிரி ஆளுங்களுக்கு காமத்துக்கு மட்டும்தான்னு நினைச்சுட்டு இருக்காங்க. இவனுங்களாம் இந்த பூமியில் வாழவே தகுதி இல்லாதவனுங்க அதான் கடவுளே அவனுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டார்”, என்றவன் அவள் கையை பிடித்து அந்த இடத்தை விட்டு தள்ளி அழைத்து வரவும். தீ எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள தோட்டக்காரர்கள் எல்லாம் அந்த இடத்தை நோக்கி ஓடி வந்தனர். அவர்களின் கண்ணில் படாதவாறு செம்பாவும் சமரும் ஒரு இடத்தில் மறைந்து நின்று கொண்டனர். பயத்தில் அவனை இறுக்கமாக அணைத்திருந்தாள் செம்பா.
அங்கே இருந்த தண்ணிரை கொண்டு எரிந்த தீயை அணைத்து உள்ளிருந்த மருதுவை வெளியே எடுத்தனர். உடல் எல்லாம் கருகி அகோரமாய் காட்சியளித்தான். அங்கிருந்த சிலர் அவன் காதுபடவே “இவன் பண்ண பாவத்துக்கு இது தேவைதான்” என்க, ஒரு சிலரோ “இதுவே கம்மிதான் பணம் இருக்குற திமிர்ல எத்தனை பெண்கள் வாழ்க்கையை நாசம் பண்ணிருப்பான். அதற்கு சரியான தண்டனை கடவுள் கொடுத்திருக்கிறார்” என்றனர்.
சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து அவனை ஏற்றிக்கொண்டு செல்ல, ‘சமருக்கு நன்றாகவே தெரியும் அவன் உடல் முக்கால்வாசி தீயிலேயே வெந்துவிட்டது. அவன் உயிர் பிழைப்பது கஷ்டம். இப்படிப்பட்டவர்கள் பூமிக்கு பாரமாய் வாழ்வதைவிட இல்லாமல் இருப்பதே நல்லது’ என நினைத்துக் கொண்டு அங்கிருந்து செம்பாவை பத்திரமாக அழைத்து சென்றான்.
செம்பா இன்னும் அந்த பயத்தில் இருந்து வெளியேவரவில்லை சமரின் கரங்களை இறுக்கமாக பிடித்திருந்தாள். மருதுவின் அலறல் சத்தம் அவள் காதில் கேட்பது போலவே இருந்தது.
சமர் வீட்டிற்கு அழைத்து வர, கோகி செம்பாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள்..
“கோகி உனக்கு ஒன்னும் இல்லையே” என அவள் கட்டுப்போட்ட தலையை செம்பா மெதுவாக வருட, “எனக்கு ஒன்னும் இல்லடி, அண்ணா காப்பாத்திட்டாங்க உனக்கு ஒன்னும் இல்லல்ல” என கோகி கேட்க
“எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லபடியா வந்துட்டேன்” என்றாள்
“பாலா ஸ்கூட்டி எங்கே?” என சமர் கேட்க கோகுல் ஸ்கூட்டியை கொண்டு வந்து விட்டான்.
“செம்பா ஸ்கூட்டியில் போய்டுவல்ல, இல்லை நான் கொண்டு விடவா?” என சமர் கேட்டதும்…
“ நான் போய்டுவேன்” என்றாள்.
“அப்புறம் அங்கே நடந்த விஷயத்தை” என சமர் சொல்ல வர…
“வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லனுமா அண்ணா” என்ற கோகியின் தலையில் கோகுல் மெதுவாக தட்ட:வலியில் “ஆஹ்” என்றவள்.
“ஏன்டா என்னை அடிச்ச?” என கோகுலிடம் சண்டைக்கு செல்ல…
“தலையில் கட்டு போட்டும் நீ அடங்கலை. அவனுங்க உன் வாயிலையே அடிச்சிருக்கனும்.”
“யோவ் நீ ரொம்ப பேசுற?”
“யாரு நானா? நீதான் எப்பவும் முந்திரிகொட்டை மாதிரி நடந்துக்குற. இருக்குற இடத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கனும். சமர் என்ன சொல்ல வரான்னு கேட்டுட்டு பேசு” என்ற கோகுலை அவளால் முடிந்த மட்டும் முறைத்தாள்”.
“வீட்ல இதை பத்தி எதுவுமே பேச வேண்டாம். அன்னைக்கு உன்னை கடத்தினது கூட மருதுதான். அது எங்களுக்கு அடுத்த நாளே தெரிஞ்சிருச்சு. இப்போ அவனோட வாழ்க்கை கிட்டத்தட்ட முடிஞ்சிருக்கும். இதை நீங்க வீட்ல சொல்லி வீட்ல உள்ளவங்களை எல்லாம் பயம் காட்ட வேண்டாம். சரியா, இனிமே மருதுன்னு ஒருத்தன் இல்லை. அவனால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. நீங்க ரெண்டு பேரும் பத்திரமா வீட்டுக்கு போங்க” என அனுப்பி வைத்தான் சமர்.
என பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி புடவையில் அழகோவியமாக தயாராகி கொண்டிருந்தாள் ஆத்வி.
அவளை கவனித்தபடியே தயாராகினாள் வித்யா. சில நாட்களாக ஆத்வியின் நடவடிக்கையை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். முன்பை போல் எதற்கெடுத்தாலும் கோபப்டுவதில்லை. வாக்குவாதம் செய்வதில்லை. சிறு புன்னகையுடன் கடந்து செல்வாள், இல்லையென்றால் அதை கவனிக்காமல் இருந்துவிடுவாள். எதற்காக இந்த மாற்றம் என்றுதான் தெரியவில்லை.
“ஆத்வி” என வித்யா அழைக்க…
“சொல்லு வித்யா” என்றாள்.
“உங்கிட்ட திடிர்னு நல்ல மாற்றம் தெரியிதே என்ன விஷயம்?”
“என்ன? மாற்றம் எப்போவும் போலத்தானே இருக்கேன்.”
“அப்படியா எப்பவும் போல இருக்கியா? நல்லா பேசுற. சின்ன வயசுல இருந்து உன்னை பாக்குறேன். எனக்கு உன்னை பற்றி தெரியாதா என்ன?”
வித்யாவை பார்த்து சிரித்தவள் “நீ கேம்ப்க்கு கிள்மபலையா?” என்க
“கிளம்பிட்டேன். நான் கேக்குற கேள்விக்கு மட்டும் உன்கிட்ட இருந்து பதில் வராதே. அப்புறம், இன்னைக்குதான் லாஸ்ட் மெடிக்கல் கேம்ப். இரண்டு, மூன்று நாள்ல நம்ம இங்கே இருந்து கிளம்புறோம்” என்றதும் ஒருவித தவிப்பு ஆத்வியின் முகத்தில் தெரிந்தது.
‘எதையோ மறைக்கிறாள்’ என்பதை உறுதி செய்தாள் வித்யா. ஆனால், அவளிடம் அதற்குமேல் அதை பற்றி பேசவில்லை. “வா போகலாம் எல்லாரும் வெளியே வெயிட் பண்றாங்க.”
“நீ..நீ போ நான் கொஞ்சம் கழித்து வாறேன்.”
“எல்லாரும் கார்லதானே போறோம். நீ நேரம் கழிச்சி வறேன்னு சொன்னாள் எப்படி.”
“இன்னைக்கு ஊருக்குள்ள தானே கேம்ப் நான் வந்துடுறேன்.”
“என்னமோ ஆகிடுச்சி உனக்கு, சீக்கிரம் வா” என்றவள் வெளியே வந்தாள்.
“ஆத்வி எங்கே?” என பாலா கேட்க…
“அவ கொஞ்சநேரம் கழித்து வராளாம் பாலா.”
பாலா சமரை பார்க்க “போலாம்” என தலையைசைத்தான். கார் கிளம்பியது அதன் பின் வெளியே வந்தவள் குகனின் தோட்டத்தினை நோக்கி நடந்தாள்.
கையில் மண்வெட்டியுடன் தண்ணிர் பாய்த்து கொண்டிருந்தான் குகன்.
இவள் வருவதை தூரத்தில் இருந்தே கவனித்தவன் “இந்த பொண்ணு ஏன் இங்கே வருது” என நினைத்தபடி அவன் வேலையை கவனித்தான்.
அவன் நினைத்தது போலவே அவன் அருகில் வந்து நிற்க…
அவளை பார்த்து “என்ன” என்றான்.
“நா..நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனூம்”
“இங்கே நம்ம ரெண்டு பேரும்தானே இருக்கோம் சொல்லுங்க என்ன விஷயம்?”.
“அ..அது..அது” என புடவையின் முந்தானையை திருகியபடி திணற…
“என்னனு சொல்லுங்க எனக்கு வேலை இருக்கு”
“நா.. நான் உ..உங்களை… நான்..உங்கள் வி..விரு”
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தவன் “நீங்க மனசுல நினைக்கிறது நடக்காது கிளம்புங்க” என்றான் பட்டென்று
அவன் சட்டென்று சொன்னதும் கலங்கியவள் “ஏன்..?” என்றாள்
“ஏன்னா எனக்கு உங்களுக்கும் செட் ஆகாது. நீங்க வேற நான் வேற”
“ரெண்டுபேரும் மனுஷங்கதானே”
“ம்ப்ச் இந்த அறிவாளியா பேசுறேன்னு சொல்லிட்டு என்கிட்ட பேசாதே”
“எனக்கு பதில் தெரியும்”.
“உன்னோட வாழ்க்கைமுறை என்னோட வாழ்க்கை வேற. அதைவிட முக்கியம் என் மனசுல உன் மேல எந்த விருப்பமும் இல்லை”.
“ஏன் நான் அழகா இல்லையா”
“அழகா… அது எனக்கு தேவையும் இல்லை. என் மனசுக்கு பிடித்தால் யாரா இருந்தாலும் கட்டிப்பேன்”.
“என்னால் உங்களை தவிர யாருயும் கல்யாணம் பண்ண முடியாது.”
“அப்படியொன்னும் நம்ம ரெண்டுபேரும் பழகலையே. நீ என்கூட ஒரு ரெண்டு தடவை பேசிருப்பியா. அதுவும் நாலு வார்த்தை அதுலயே காதலா.? இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு?”
“உங்ககிட்ட பழகினால்தான் உங்களை விரும்பனும்னு இல்லை. உங்களை பார்த்ததுமே என் மனசுக்கு பிடிச்சிடுச்சி. எனக்கே என்னை நினைத்து ஆச்சரியமாகத்தான் இருக்கு. காதல்னா என்னனு எனக்கு புரிய வைத்தது நீங்கதான். என் மனசுல எப்படி உங்க மேல விருப்பம் வந்ததுன்னு எனக்கு தெரியலை. நீங்க சொன்ன மாதிரிதான் கல்யாணம் பண்ண என் மனசுக்கு பிடித்தால் போதும்.”
“இரண்டு பேர் மனசுக்கும் பிடித்தால்தான் கல்யாணம். இல்லனா அது வேற”
“என்னை உங்களுக்கு பிடிக்க நான் என்ன பண்ணணும்ங்க.”
“இதோப்பாரு. நான் சொல்றதை நல்லா புரிஞ்சிக்கோ. என்னை உனக்கு பிடிச்சிருக்குன்னே வச்சிக்குவோம். ஆனால் என்கூட உன்னால் வாழ முடியாது. உன்னை பார்த்தாலே தெரிகிறது நல்ல வசதியான வீட்டு பொண்ணுணு. என் வீட்ல உன்னால் வாழமுடியாது. எனக்கு என் அம்மாதான் எல்லாம். அவங்களை என்னை கல்யாணம் பண்ணுறவ, நல்லா பார்த்துக்கணும். உன்னால் அது முடியாது. உன்னையே பார்க்க ஒரு ஆள் தேவைப்படும் புரியிதா.?”
“நா..நான் பாத்துக்கறேன்.”
‘எதை…’
“உங்களை, உங்க அம்மாவை”
“இது விளையாட்டு இல்லம்மா வாழ்க்கை. உன் வீட்ல, என் விடு ஒரு அறை அளவுக்குதான் இருக்கும்”.
“அதை நான் பார்த்துக்கறேன்.”
“இது சரி வாராது. நான் சமர் கிட்ட பேசுறேன்.”
“நான் பேசிட்டேன்.”
“என்ன பேசிட்டியா” என்றான் அதிர்ச்சியாய்
“நான் சமர் கிட்ட பேசிட்டேன். என்னை காப்பாற்றுனிங்க இல்லையா அன்னைக்குதான் பேசினேன்”.
“என்ன சொன்னான்?”
ஆத்வி குகனை பற்றி நினைத்தபடி வீட்டின் வெளியே நடமாடி கொண்டிருந்தாள். அப்போது சமர் வெளியை சென்று வீட்டிற்க்குள் வந்தான்.
“ஆத்வி சாப்டியா”
“ஆமா” சமர்.
‘ஏன் வெளியே நிற்கிற உள்ளே வா”
“சமர்”
“ம்ம்ம் சொல்லு”
“உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.”
“குகன் அண்ணாவை பற்றியா”
“அவனை ஆச்சரியமாய் பார்க்க…”
“உன்னோட பார்வையே சொல்லிடுச்சி, உன் மனசுல என்ன இருக்குன்னு…”
“இல்லை சமர். நீ என்னை பற்றி தவறா நினைக்கலையா”
‘தவறா நினைக்க என்ன இருக்கு ஆத்வி?.”
“நான் உன்னை விரும்புறேன்னு நான் உன்கிட்ட சொல்லல நாளும் உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்…”
“அது காதல் இல்லை ஆத்வி. அது வேற… நீ ரொம்ப அடம்பிடிக்கிற டைப். அப்படிதான் நீ என்னை விரும்புறேன்னு சொன்னதும்… உன்கிட்ட நான் ஃப்ரெண்ட்டா காட்டின பாசம், நம்ம ரெண்டு பேரும் சமமான வசதியும் இருந்ததால் என்னை கல்யாணம் பண்ணலாம்னு உன் மனதில் ஒரு எண்ணம் வந்ததே தவிர என் மேல் காதல் வரலை. அதனால் நீ அதை பற்றி யோசிக்க வேணாம். உன் மனதில் இருக்குறதை குகன் அண்ணாகிட்ட சொல்லு, அதுக்கு முன்னாடி குகன் அண்ணாவை பற்றி சொல்றேன் கேட்டுக்கோ… அண்ணா உன் குடும்பம் அளவுக்கு வசதியானவர் இல்லை. நல்ல படிச்சி நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தும் அது லாம் வேணாம்னு விவசாயம் பண்றார். அவர் சம்பாத்தியத்தில் நிம்மதியா வாழ்பவர். நீ அப்படி இல்லை. உண்மையை சொல்லனும்னா உன் செலவுதுதான் அவரோட வருமானம். அவருக்கு உலகமே அவங்க அம்மாவும், விவசாயம்தான். நீ அவரை உன்கூட கூப்பிட்டு போய்டலாம்னு நினைச்சிடாதே, அதுக்கு வாய்ப்பே இல்லை. அவரை விரும்புற நீ அவரோட விருப்பத்தையும் ஏற்றுக்கனும். அதுக்கெல்லாம் சம்மதம்னா மட்டும் உன்னோட காதலை சொல்லு. கண்டிப்பா குகன் அண்ணா உன்னை ஏற்றுக்க மாட்டாங்க. நீ உன்னோட காதலை புரிய வைத்தால்தான் அவரை மாற்ற முடியும்”.
“என்ன பைத்தியமா நீ? குகன் அண்ணா மட்டும் இல்லன்னா உன் நிலமை என்ன?’
“அவர் இருக்குறதை பார்த்துதான் குதித்தேன்.”
“ஏன்?”
“தெரியலை நான் கிணற்றில் குதித்தாள், என்னை காப்பாற்ற வருவாறான்னு ஒரு சந்தேகம் அதனாலதான்”
“நீ இல்லை. யாராக இருந்துதாலும் குகன் அண்ணா காப்பாற்றதான் செய்வாங்க ஆத்வி.”
“தெரியும் ஆனாலும் மனதில் சின்ன ஆசை.”
‘சரி ஆனால் இனிமே இப்படி பைத்தியகாரதனமா பண்ணாதே ஆத்வி.”
“சரி சமர். நான் அவர்கிட்ட என் காதலை சொல்ல போறேன்”.
‘நல்லா இரண்டு நாள் யோசிச்சிட்டு அவர்கிட்ட சொல்லு. குகன் அண்ணா ரொம்ப நல்லவர். அவர் மனதில் ஆசையை வளத்துட்டு கடைசியில் உன்னால் கல்யாணம் பண்ண முடியலைன்னா? அவரோட நிலமை”
“நல்ல முடிவு ஆத்வி. உன்னோட காதல் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்” என்றான் சமர்
“சமர் எனக்கு வாழ்த்து சொன்னான்” என்ற ஆத்வியை குகன் பார்க்க “இப்பவும் சொல்றேன், உங்களை தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். அப்படியொரு சூழ்நிலை வந்தால் சாகலாம் மாட்டேன். யாருக்கும் தெரியாமல் கண்காணாத இடத்துக்கு போய்டுவேன்”.
“என்ன ப்ளாக்மெயிலா?”
“இல்லை. உண்மையை சொன்னேன். என்னை பிடிச்சா கல்யாணம் பண்ணுங்க, இல்லை உங்களுக்கு வேற பொண்ணை பிடித்தாலும் கல்யாணம் பண்ணுங்க, ஆனால் நான் உங்களை மனசுல வச்சிட்டு வாழ்ந்துடுவேன். இவ இப்படிதான் பேசுவாள், சிட்டி பொண்ணு அவங்க ஊருக்கு போனதும் மறந்துடுவான்னு நினைக்காதிங்க. உங்க நினைப்பு உயிருக்குள்ள கலந்துடுச்சி. இனிமே அதை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. அப்புறம் என் வீட்ல சம்மதிப்பாங்களான்னு கேட்காதிங்க. நான் எங்க வீட்ல பேசிட்டேன். என் குடும்பம் சம்மதிச்சிட்டாங்க.” என அடுத்த அதிர்ச்சியை கொடுத்தாள்.
“ஏய்…நான் ஒரு விவசாயி உங்க அப்பா பிஸ்னெஸ் பண்றவர். எப்படி சம்மதிப்பாங்க.?”
“எங்க அப்பாவும் விவசாய குடும்பத்துல இருந்து வந்தவர்தானாம். அவருக்கு விவசாயம்னா ரொம்ப பிடிக்குமாம். சொத்து நம்மகிட்ட நிறைய இருக்கு. நல்ல மனுஷங்களல சம்பாதிக்கிறதுதான் கஷ்டம். என் மருமகன் விவசாயியா இருக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷம்னு சொன்னார்.”
குகன் குழப்பத்தில் நின்றான்.
ஆத்வி அப்பாவின் முடிவுக்கு பின்னால் சமர் இருக்கிறான் என தெரியாதே. ஆத்வி குகனை விரும்புகிறாள் என அவன் கண்டுபிடித்ததுமே அவள் அப்பாவிடம் குகனை பற்றி பேச அவருக்கு குகனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது படித்த படிப்பு, லட்சத்தில் சம்பளம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு விவசாயம் செய்கிறான் என்றதுமே குகனை பிடித்துவிட்டது. சமரின் அப்பா போலவே ஆத்வியின் அப்பாவும் நல்ல குணமுடையவர். அதனால் குகனை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டார்.
குகனிடம் “சரி நான் கிளம்ப இன்னும் ரெண்டு நாள் இருக்கு, அதுக்குள்ள “ஆத்வி ஐ லவ் யூ” ன்னு சொல்றிங்க. எனக்கு இப்போ கேம்ப்க்கு நேரம் ஆகிடுச்சு, வர்றேன் மை புருஷா” என்க… குகனின் முகத்திலோ எந்தவித உணர்வும் இல்லை.
நேராக மெடிக்கல் கேம்ப் வந்தவள் சமர் இருக்கும் இடத்திற்கு வந்தாள். அவன் நோயாளிகளை பாய்த்துகொண்டிருந்தவன் சைகையால் ஐந்து நிமிடம் என்றான்.
நோயாளி சென்றதும் அவன் மூன் அமர்ந்தாள்.
‘நீங்க போன விஷயம் என்னாச்சி அண்ணியாரே”
“அண்ணியா?”
“குகன் அண்ணாவை கல்யாணம் பண்ண போறிங்கல்ல அதான். என சிரித்தான்.”
“ அட போ சமர். என்ன சொன்னாலும் கல்லு மாறி நிற்கிறார்.”
“கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு ஆத்வி”
“ம்ம்ம்…. நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன் சமர். அடுத்து என்ன பண்ணணுங்குறது உங்க அண்ணா எடுக்குற முடிவுதான்”.
“சிரித்தான் சமர்.”
“ஏன் சிரிக்குற?”
“இல்லை குகன் அண்ணா, ரொம்ப பாவம்.”
“ஏன்…?”
“உன்னை கல்யாணம் பண்ணிட்டு என்ன பாடுபட போறாரோ…”
சமரை முறைத்த ஆத்வி. “நான் அவரை நல்லா பார்த்துக்குவேன் சமர். நீ தானே சொன்ன அவர் ரொம்ப கஷ்டபட்டதா? இனிமே அவரையும் அவங்க அம்மாவையும் பார்த்து கொள்ளவெண்டியது என் பொறுப்பு. நான் நல்ல மகளாக இருந்து அவங்களை பார்த்துக்கறேன்.”
“நீயா பேசுற ஆத்வி. ஆச்சரியமா இருக்கு”.
“நான் ரொம்ப ஓவராதான் பண்ணிட்டு இருந்திருக்கேன். காதல் இவ்வளவு தூரம் மாற்றுமா? ஆச்சரியமா இருக்கு சமர். எனக்கு குகன் வேணும். அவர்கூட வாழனும்னா அவரோட எல்லாத்தையும் நான் ஏற்றுக்கனும்னு சொன்னல்ல, அப்போதான் அவர் வேணுமா பணக்கார வாழ்க்கை வேணுமான்னு யோசிச்சேன். எனக்கு அவர்தான் வேணும்னு மனசு சொல்லுது சமர். அவரைவிட பணம் முக்கியமில்லை. அவர் சம்பாதிக்கிறார். நானும் வேலைக்கு போறேன். எங்க குடும்பத்தை பார்க்க அதுவே போதும். நிம்மதியா வாழலாம்னு தோணுது சமர்.”
“அவளை தோளோடு அணைத்தான். கண்டிப்பா நீ ஆசைப்பட்ட மாதிரி அமையும் ஆத்வி. அண்ணா சீக்கிரம் சம்மதம் சொல்வாங்க”
“தேங்க்ஸ் சமர் நான் போய் வேலையை பார்க்கிறேன்” என அவளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தாள். ஒவ்வொருவராக வர எல்லாரையும் பரிசோதித்தவள். இறுதியாக ஒரு வயதான பெண்மணி வந்தார். அவரை நாற்காலியில் அமர சொன்னவள் அவரை சோதித்தாள். அவரிடம் சில கேள்வியை கேட்டவள், உடனே வயிற்று பகுதியை மட்டும் ஸ்கேன் எடுக்க எழுதி கொடுத்து அங்கே எப்படி செல்ல வேண்டும் என வழியையும் காண்பித்தாள். அவர் தட்டுத்தடுமாறி செல்ல “அம்மா ஒரு நிமிஷம்” என்றவள் அவரின் கையை பிடித்து அழைத்து செல்ல, அதை பார்த்த பாலாவிற்குதான் பேரதிர்ச்சி. கண்களை இரண்டு முறை நன்றாக துடைத்து பார்த்தவன் ஆத்விதான் என உறுதி செய்தான்.
“என்ன அதிசயம் மேடம் பேஷன்ட் கையை பிடிச்சி கூப்பிட்டு போறாங்க, நல்ல மாற்றமா இருந்தால் சரிதான்” என அவன் வேலையை பார்த்தான்.
ஸ்கேன் எடுக்கும் இடத்தில் விட்டுவிட்டு அங்கே வேலை செய்பவரிடம் “ஸ்கேன் எடுத்ததும் இவங்களை என்னோட ரூம்க்கு கூப்பிட்டு வந்திருங்க” என்றவள் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து அந்த பெண்மணி வர அவரின் ரிப்போர்ட்டை பார்த்தவளுக்கு சந்தேகம் சரியானது. கர்ப்பபையில் கட்டி இருப்பது ஊர்ஜிதமாக அவரிடம் “உங்ககூட யாரும் வரலையா” என கேட்டாள்.
“என் பையன்தான் கொண்டு விட்டுட்டு போனான். இப்போ வந்துடுவான்”
“இதுக்கு முன்னாடி ஸ்கேன் ஏதாவது எடுத்துருக்கிங்களா?”
“இல்லம்மா. என் பையன் கூப்பிடுவான் நான் போனதில்லை. பக்கத்துல உள்ள ஹாஸ்பிடல் போய் வயிறு வலிக்கும்போது ஊசி போட்டுட்டு வருவேன்.”
“அவங்க உங்களை ஸ்கேன் எடுக்க சொல்லலையாம்மா.”
“சொன்னாங்கம்மா. அடிக்கடி வயிறு வலி வருது ஒரு ஸ்கேன் எடுங்கன்னு, என் பையனும் சொன்னான். நான்தான் போகமாட்டேன்னு இருந்துட்டேன்”
“இப்போ உங்க பையன் எங்கேம்மா.?”
“அவன் வேலையா போய்ருக்கான். என்னை டாக்டரை பார்த்ததுட்டு இங்கேயே இருக்க சொன்னான்.”
“சரிம்மா நீங்க வெளியே உள்ள நாற்காலியில் உட்காருங்க. உங்க பையன் வந்ததும் அவரை மட்டும் என்னை பார்க்க உள்ளே வர சொல்லுங்க”
“என்னம்மா எனக்கு பெரிய பிரச்சனை இருக்கா?” என அந்த பெண்மணி கேட்க…
“இல்லம்மா, நீங்க ரொம்ப பலகீனமா இருக்கிங்க, அதுக்கான சத்து மாத்திரை ஆகாரங்கள் என்ன சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது எல்லாம் அவங்ககிட்ட தான் சொல்லனும்”
“சரிம்மா என் பையனை வரசொல்றேன்” என்றவரை வெளியே அமர வைத்தவள், மற்ற நோயாளிகளை பார்க்க ஆரம்பித்தாள்.
இருபது நிமிடம் கழித்து “உள்ளே வரலாமா டாக்டர்” என கேட்ட சத்தத்தில் சர்வமும் ஆடியது. “என்ன நம்ம ஆள் குரல் மாறியே இருக்கே” என நினைத்தவள் “உள்ளே வாங்க” என்க… உள்ளே வந்தான் குகன்.
அவளை பார்த்து அதிரவில்லை. அமைதியாக “எங்க அம்மாகிட்ட என்னை பார்க்க வர சொன்னிங்களாம்” என்றான்
சமர் சொன்னது போலவே செம்பாவால் சமரை அன்று காலையில் இருந்து பார்க்கவே முடியவில்லை. நாளைக்கு ஊருக்கு கிளம்புவதால் வைஷ்ணவி சில பொருட்கள் கேட்டிருக்க அதை வாங்குவதற்காக பாலா உடன் ஷாப்பிங் சென்று விட்டான். சமர் வீட்டிற்கு வரவே மணி இரவு 9 தாண்டியது. அதற்கு மேல் எப்படி சென்று செம்பாவை பார்ப்பது என அவனும் நாள் முழுவதும் அலைந்த சோர்வில் தூங்கிவிட்டான்.
செம்பாவோ ஏற்கனவே ஒருமுறை தோட்டத்து வீட்டு பக்கமாய் வந்துவிட்டு அவன் இன்னும் வரவில்லை என்பதை கவனித்து விட்டு தான் வீட்டிற்கு சென்றிருந்தாள்.
தன் வீட்டின் முற்றத்தில் இருந்த தண்ணீர் வாளியில் கல் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
“மாமோவ் உன் மகளுக்கு பேய் அடித்துவிட்டது போல, போய் திருநீறு போடு, எப்ப பாரு ஊம்மனாங்கொட்டை மாதிரி உட்கார்ந்து இருக்கிறாள். வர வர பழைய செம்பா மாதிரியே இல்லை. என் செம்பருத்தி துறுதுறுன்னு இருப்பாள். எனக்கு இவளை பிடிக்கவே இல்லை” என கோகி திட்டி கொண்டிருக்க, அதையெல்லாம் காதில் வாங்கவில்லை. அவள் கைகளில் இருந்த கல் ஒவ்வொன்றாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தன் உயிரை மாய்த்து கொண்டிருந்தது.
சந்திராதான் செம்பாவின் முகத்தை கவனித்தார். அவள் முகம் வாடியது போல இருந்தது. தன் கணவனை பார்த்து கண்ணசைக்க தன் மகள் அருகே சென்று அமர்ந்தார் நல்ல சிவம்.
“என் ஆத்தாவுக்கு என்ன கவலை? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என கேட்க…
“அப்பா நம்ம வசதியாக வாழ முடியாதா? கடைசி வரைக்கும் இப்படி கஷ்டப்பட்டு தான் இருக்கணுமா?”
“என்னடா இப்படி கேட்டுட்ட? அப்பா உங்க ரெண்டு பேரையும், நல்லா படிக்க வைக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் படித்து நல்ல வேலைல இருந்தீங்கன்னா, நம்மளுக்கு வசதி வாய்ப்பு தானா வந்துட போகுது”.
“படிச்சா பணக்காரன் ஆயிடலாமா?”
“ஆமா நல்லா படிச்சு, நல்ல வேலை கிடைச்சா போதும். பணக்காரங்களா ஆகிவிடலாம்.”
“ஓஹ் என யோசனையாக இருந்தவள் மனதில் சமர் நல்ல வசதியான வீட்டு பையன் என கற்பகம் சொன்னது மனதில் அச்சாரமாய் பதிந்து இருந்தது.
“என்னடா அமைதியா இருக்க..?”
“அப்பா நானும் படிச்சு முடிச்சிட்டு நல்லா சம்பாதிச்சு, பெரிய வீடு கட்டி உனக்கு சொந்தமா கார் வாங்கி கொடுத்து உன்னை மகாராஜா மாதிரி வாழ வைக்கிறேன்.”
“இதைத்தான் யோசிச்சிட்டு இருந்தியாடா”
“ஆமாப்பா, அந்த கற்பகம் இருக்குல்ல அதைவிட நான் வசதியா மாறனும். அது முகத்துல நான் கரிய பூசணும்”
“அதெல்லாம் நமக்கு எதுக்கும்மா? அவ்வளோ பெரிய வாழ்க்கையெல்லாம் நமக்கு வேண்டாம். நிம்மதியா மூன்று வேலை வயிறு நிறைய சாப்பிட்டால் போதும். யாருகிட்டயும் கடன் வாங்காமல் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழனும். அந்த வாழ்க்கை உங்களுக்கு கிடைச்சாலே எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆத்தா”
“கவலைப்படாத அப்பா, கண்டிப்பா நமக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். சரியா” என்ற தன் மகளை மடியில் படுக்க வைத்தபடி தலையை கோதிவிட்டார் நல்லசிவம்.
“மாமா நீ குடுக்குற செல்லத்துல தான் உன் சின்ன மக ரொம்ப ஆடுறா பாத்துக்கோ சொல்லிட்டேன்”. என்றாள் கோகி”
“ஆமா நீ மட்டும் ஆடாம தான் இருக்க, என் விளக்கு மாத்து கட்ட” என ராசாத்தி வர
‘இந்த அம்மாவை யார் வர சொன்னாங்க. என்னையே திட்டிட்டு இருக்கும்” என கோகி முகத்தை சுழிக்க…
கோகியை பார்த்து சிரித்தாள் செம்பா.
விடியற்காலை யாருக்கும் காத்திராமல் தன் வருகையை உணர்த்தினான் ஆதவன்.
எதையோ பறிகொடுத்தவள் போலவே திரித்தாள் செம்பா.
எல்லாரும் அவளை குறுகுறுவென பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் அவள் வேலையை பார்த்து பள்ளிக்கு கிளம்பினாள்.
எப்போது மணி நான்கு ஆகும். பள்ளி விடும் என கடிகாரத்தை பார்த்து பார்த்து கண்கள் பூத்து போனது பாவையவளுக்கு. நான்கு மணியும் ஆகிவிட பள்ளி முடிந்தது. வகுப்பறையை விட்டு வெளியே வந்த கோகி செம்பாவிடம் “பாத்ரூம் போய்ட்டு வரேன் இங்கேயே நில்லு உடனே வந்துடுவேன்” என சொல்லிவிட்டு சென்றுவிட, இதுதான் சமையம் என கோகியை விட்டுவிட்டு அங்கிருந்து கோவிலுக்கு கிளம்பினாள்.
சரியாக 4.15க்கு கோவிலுக்குள் நுழைந்தாள். வேகமாக வந்ததில் மூச்சி வாங்கியது.கோவில் பின்புறம் இருந்த தெப்பகுளத்தின் படிக்கட்டில் அமர்ந்தாள்.
சமர் வருவது போல தெரியவே இல்லை. மணி ஐந்து நெருங்கிவிட்டது. கண்களில் கண்ணிரோடு எழுந்தவள் “ஜித்து என்கிட்ட சொல்லாமலே கிளம்பிட்டியா” என திரும்ப அப்போதுதான் வந்து நின்றான் சமர். அவனை கண்டதும் ஓடிச்சென்று அணைத்துக்கொள்ள அதிர்ச்சியில் உறைந்தான். முதல் முறை அவளின் அணைப்பு. அவளை விட்டு விலகி செல்வதன் நினைவு பரிசாக கிடைத்தது.
சில நொடிகளில் இருக்கும் இடம் கருதி அவளை தன்னிடம் இருந்து விலக்கி “என்னடா பயந்துட்டியா உன்னை பார்க்காமல் கிளம்பிடுவேன்னு” என கேட்கவும்
“ஆமா” என தலையை அசைத்தாள்.
“அது எப்படி? என் பட்டாசை பார்க்காமல் போகமுடியும். நான் போனால் அவ வெடிச்சி சிதறிட மாட்டாளா என்ன?” என்றான் குரலில் குறும்பு கொப்பளிக்க…
“சமருக்கு செம்பாவை என்ன சொல்லி சாமாதனபடுத்த என தெரியவில்லை. அவள் அழுகை மனதை பிசைந்தது. அவளும் சிறு குழந்தைதான். அவன் மனதில் இருக்கும் காதலை கூறி அவள் மனதில் ஆசை விதையை முளைக்க வைக்க அவனுக்கு விருப்பம் இல்லை. மனதிற்குள்ளேயே காதலை புதைத்து விடலாம் என நினைக்க அவளின் அழுகை அதையெல்லாம் தாண்டி வெளியே வர வைக்க தூண்டியது.
அவள் கரங்களை பிடித்தவன் “செம்பா நான் சொல்றதை நல்லா கேளு, நீ இப்போ சின்ன பொண்ணு, சில விஷயங்கள் உனக்கு சொன்னால் புரியாது. அதை நீ விளையாட்டாகவும் எடுக்கலாம் இல்லை சீரியஸாகவும் எடுக்கலாம். உன்னோட இடத்தில் இருந்து பார்த்தால் தவறாக தெரியாது. ஆனால் அந்த விஷயம் எனக்கு சரின்னு படலாம். ஏன்னா நம்ம வயசு அப்படி” என அவனே ஒருவித குழப்பத்தில் பேச அவன் பேசுவது புரியாமல் வித்யாசமாக பார்த்தாள் செம்பா….
“என்ன அப்படி பாக்குற?”
“நீங்கள் என்ன பேசவர்றிங்கன்னு எனக்கு புரியலை என முழிக்க.”
கண்ணை உருட்டி விழிக்கும் கருவிழிகளில் முத்தமிட மனம் தூண்ட “ஹய்யோ கடவுளே” என மனதிற்குள்ளே புலம்பிய சமர் “சில விஷயங்கள் புரியாமல் இருக்குறது தான் நல்லது பட்டாசு”. என்றான் சோர்வாக…
“கண்டிப்பா எனக்காக வருவிங்கல்ல” என மீண்டும் அந்த வார்த்தையிலேயே நின்றாள்.
“கண்டிப்பா வருவேன்.”
“அதை எப்படி நான் நம்புறது ஜித்து”.
“எப்படின்னா எனக்கு தெரியலை செம்பா. நான் உன்னை பாக்குறதுக்காக கண்டிப்பா வருவேன்”.
“ ஒருவேளை நீங்க வரலைன்னா”
“என் மேல நம்பிக்கை வரலையா பட்டாசு”
“வரலையே நம்பிக்கை வர்ற மாதிரி ஏதாவது சொல்லுங்க” என்றவளிடம்
“நம்பிக்கை வர்ற மாதிரியா, என யோசித்தவன் அந்த இடத்தை சுற்றி பார்க்க அங்கிருந்த ஆலமரத்தில் மஞ்சள் கயிறு கட்டியிருப்பதை பார்த்தவனுக்கு திடிரென ஒரு எண்ணம் தோன்ற, தன் அம்மா கையில் கட்டிவிட்ட கருப்பு நிற கயிறை கலட்டியவன், தன் கழுத்தில் கிடந்த சங்கிலியில் இருந்த ”s” வடிவ டாலரை கழட்டி அந்த கயிற்றில் கோர்த்தபடி அம்மன் சன்னதியை பார்த்தான். அங்கே மக்கள் யாரும் இல்லை. செவ்வாய், வெள்ளி மட்டும் அம்மன் கோவிலில் பூஜை நடக்கும். என்பதால் மற்ற நாட்கள் மக்கள் வரமாட்டார்கள். அம்மன் சன்னதியை உற்று நோக்கினான். மனதிற்குள் ‘இது சாதாரண கயிறாக இருக்கலாம். ஆனால் இதை என் மனசளவில் அவளை மனைவியா நினைச்சிதான் கட்டுறேன். எனக்கு புரியிது. அவளுக்கு அதுக்கான வயசும் இல்லை. எனக்கும்தான். ஒருவேளை சில வருடங்களுக்கு பின் அவள் எண்ணங்கள் மாறலாம். என்னையும் மறக்கலாம். அவள் வாழ்க்கையில் புதியதாக யாராவது வரலாம். அப்படியொரு சூழ்நிலை உருவாகலாம். அப்படி என்னை மறந்தால், தாராளமா அவ எங்கே இருந்தாலும், அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்து சந்தோஷமா வாழட்டும். ஆனால், என் பட்டாசு எனக்காக பிறந்தவள்னு என் மனசு சொல்லுது. அது உண்மையா இருந்தால் எனக்காக என் பட்டாசை காத்திருக்க வை. இந்த கயிறை உன்னை சாட்சியா வைத்துதான் கட்டுறேன், உன்னை நம்பி என் பட்டாசை விட்டுட்டு போறேன். மறுபடியும் வருவேன் நான் சொன்னதை மறந்துவிடாதே” என அந்த அம்பாளிடம் பேசியவன் செம்பாவின் கழுத்தில் கருப்பு கயிறை கட்டினான். “இதை என் நியாபகமா வச்சிக்கோ. கண்டிப்பா எங்கே இருந்தாலும் உன்னை தேடி வருவேன். என்னை மறந்துடாதே பட்டாசு. கண்டிப்பா உனக்காக வருவேன்” என அவள் கண்ணம் தட்ட கண்ணில் கண்ணிர் வழிந்துகொண்டிருந்தது. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவளே உணர்ந்த தருணம். அதை அவனிடம் சொல்ல மனம் துடிக்க அவள் இதழ்களை திறக்கவும் “சமர், டேய் சமர், என்னடா பண்ற? சாமி கும்பிட்டு வர்றேன்னு சொன்ன, டேய் எங்கடா இருக்க? ஏற்கனவே ரொம்ப லேட் இவன் வேற” என பாலாவின் புலம்பல் குரல் கேட்க, “ பாலா என்னை தேடி வர்றான். நா…. நான் போய்ட்டு வறேன் பட்டாசு, ஐ மிஸ் யூ சோ மச்” என அவள் விரல்களை பிடித்திருந்த கையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கியவன், அவளை விட்டு வெளியேற மனம் வெறுமையை சூழ்ந்தது. திரும்ப திரும்ப செம்பா நின்ற திசையை பார்த்துகொண்டு பாலாவுடன் காரில் ஏறி கிளம்பினான். அவன் செல்வதை பாலா கண்ணில் படாதவாறு கோவில் உள்ளே மறைந்து நின்று பார்த்தபடி நின்றாள் செம்பா.
“மனமெல்லாம் ரணமாய் வலித்தது. இதுதான் காதலா? காதலிப்பதற்கான வயது இது இல்லையே, ஆனால் ஏன் மனம் பதைபதைக்கிறது. ஒருவேளை இத்தனை நாள் ஜித்துவுடன் பழகியதால் அப்படி தோன்றுகிறதோ, இனிமே ஜித்துவை எப்போது பார்ப்பேன்” என்றவள் மீண்டும் அந்த குளத்தின் கரையோரம் அமர்ந்துவிட்டாள்.
அந்த நேரம் தெப்பக்குளத்தில் பெரிய கல் விழும் சத்தம் கேட்க… திரும்பி பார்த்தால் செம்பா.
அணிந்திருந்த பள்ளி உடைமுழுவதும் வியர்வையில் நனைந்திருக்க செம்பாவை எரிப்பது போல பார்த்து நின்றாள் கோகி.
செம்பா எழுந்து அவளிடம் வர…
“சாரிடி கோவிலுக்கு போகனும் போல இருந்தது. அதான் நீ எப்படியும் வருவேன்னு உங்கிட்ட சொல்லாமலே வந்துட்டேன்.”
“நல்லா சமாளிக்கிற, விளக்கெண்ணெய்”
“சரி கோபப்டாதே, என் செல்லம்ல வா, வீட்டுக்கு போகலாம்.”
“நீ அழுதியா செம்பா”
“இ…இல்லையே. நான் ஏன்டி அழனும் நான் என்ன பைத்தியமா?”
“ம்ம்ம் பைத்தியம்தான். எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிற, நீயா சொல்ற வரை நான் கேட்கமாட்டேன். அம்மா தேடுவாங்க வா போகலாம்
“ஆமா” செம்பா. என்றாள் கோகி, வீட்டின் உள்ளே இருந்து குரல் கொடுத்தபடி
“நம்ம எப்போ போகலாம்?.”
“நம்ம ஏன் போகனும்” என்றபடி வெளியே வந்தாள் கோகி தட்டு நிறைய சாப்பாட்டுடன்
“விளையாடதான்டி”
“அம்மா இன்னைக்கு வரவேணாம் சொன்னாங்களே செம்பா?”
“ஏன்?”
“தெரியலை செம்பா. அம்மாவுக்கு இன்னைக்கு வேலை வேற இடத்துலயாம். அதனால் என்னை சாப்பாடு கொண்டு வரவேண்டாம்னு சொன்னாங்க.”
“அப்படியா” என முகத்தை சோகமாக வைக்க
“நீ ஏன் சோகமா இருக்க…?”
“இல்லைடி அங்கே விளையாடுறது நல்லா இருந்தது அதான்.” என்றாள் உண்மையை மறைத்து.
“ஆமா செம்பா. ஆனால் இன்னைக்கு எப்படி போறது” என கோகியும் யோசிக்க… அப்போது அவர்களை நோக்கி கையில் ஒரு கவருடன் வந்தான் கோகியின் அண்ணண் ஏழுமலை.
“கோகி”
“என்ன அண்ணா?”
“இந்தா இந்த கவரை கொண்டுபோய் அம்மாகிட்ட கொடு.”
“அம்மா எங்கே இருக்காங்கன்னு எனக்கு தெரியாதேண்ணா”.
“அந்த தோட்டத்து வீட்ல தான் நிற்கிறாங்க. வெண்டைக்காய் பறிக்கனுமாம், அதான் முழுக்கை சட்டை கேட்டாங்க, இதுல இருக்கு கொண்டு கொடுத்துட்டு வா கோகி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”
“சரிண்ணா” என அதை வாங்கிகொண்டு இரண்டுபேரும் தோட்டத்திற்கு வந்தனர்.
“பார்த்தியா கடவுளே நமக்கு கருணை காட்டி விளையாட அனுப்பிட்டார்.” என்றாள் கோகி
ராசாத்தியிடம் கவரை கொடுத்துவிட்டு இரண்டு பேரும் மாமரத்தின் கீழே ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தனர்.
திடிரென கேட்ட சத்தத்தில் செம்பா உடல் நடுங்கி நின்றாள்.
“என்னடி பிச்சைக்கார நாயே!, யாரு வீட்டுக்குல்ல யார் வர்றதுன்னு ஒரு விவஸ்தை வேணாம். அப்படியே நைஸா உள்ளே வந்து என் பையனை மயக்கி, எல்லா சொத்தையும் வளைச்சி போட்டுட்டு வான்னு, உன் ஆத்தாகாரி அனுப்பி வச்சாளா. யாரை கேட்டுடி என் வீட்டுக்குள்ள வந்த, ஓடுகாலி பெத்த ஓடுகாலி” என புடவை முந்தானையை இடுப்பில் சொருகியபடி வந்தார் கற்பகம். அவரை கண்டதும் அழுதபடியே நின்றாள் செம்பா.
“உன் ஆத்தாவையே உள்ளே விடக்கூடாதுன்னு சொன்னேன். என் மாமியாகார கிழவிதான் விசுவாசமான குடும்பம், ஒருத்தன் பண்ணுண தப்புக்கு இவங்க என்ன பண்ணுவாங்க, அது இதுன்னு என் வாயை அடைச்சிட்டாள். அதான் நீங்கயெல்லாம் என் வீட்டுக்குள்ள வர்றிங்க. ஏய்!, என செம்பாவின் புறம் திரும்பிய கற்பகம் “என்னடி, நீ கொஞ்சம் அழகா இருந்ததும் உன்னை அனுப்பி வச்சிட்டாளா உன் ஆத்தாகாரி. அழகை காட்டி என் புள்ளையை மயக்குன்னு ஹாங்… பதில் சொல்லூடி நாயே!” என கோபத்தில் பேச…
“இதோப்பாருங்க ரொம்ப பேசாதிங்க. நாங்க ஒன்னும் உங்க சொத்தை அடையை வரலை. எங்க அத்தையை தேடி வந்தோம். இங்கே விளையாடினோம். இனிமே உங்க வீட்டு பக்கமே வரமாட்டோம். உங்க இஷ்டத்துக்கு போசாதிங்க” என்றாள் செம்பா அதே கோபத்துடன்.
“வாடி என் வாரிய கட்டை, என்னையே எதிர்த்து பேசுறியா. நீ இருக்குறது என் இடம். இங்கே திருட வந்தேன்னு பஞ்சாயத்தை கூட்டி, உனக்கு மொட்டை அடிச்சி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏத்தி அனுப்பிடுவேன். என்னை எதிர்த்து பேசுற அளவுக்கு தைரியம் வந்துடுச்சாடி நாய்களா, கஞ்சிக்கே வழியில்லாத உங்களுக்கு எல்லாம் ஏன்டி கோபம் வருது. அதான் பெரிய சொத்து வச்சிருக்கியே, அதை வச்சி வேற யாரையாவது மயக்க வேண்டியதுதானே நிறைய பணம் கிடைக்குமே” என செம்பாவை மேலும் கீழும் பார்க்க, அவர் பார்வையில் அறுவெறுப்பாக உணர்ந்ததில் உடல் கூசியது.
“உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு பார்த்து பேசுங்க” என்றாள் கோகி
“என் பொண்ணா, உன் வீட்ல வந்து விளையாடினாள். என் பொண்ணு உன் வீட்ல கால் வைக்கிறதுக்குகூட உங்களுக்கு தகுதி இல்லை. என் வீட்டு சோத்தை திண்ணவன்தான் உன் அப்பன். உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணுணவன். நல்ல வசதியான பொண்ணு பார்த்ததும் அவளை மயக்கி கட்டிகிட்டான். உன் ஆத்தாளும், அவன் ஆளு நல்லா இருந்ததும் என் தம்பியை வேணாம்னு அவன் பின்னாடி போனாள். என் தம்பியை கட்டியிருந்தால் ராணி மாதிரி இருந்திருக்கலாம். உன் அப்பனை கட்டி பிச்சகாரியா ஐந்துக்கும் பத்துக்கும் வேலைக்கு போய்ட்டு இருக்காள். போதாத குறைக்கு இரண்டு பொம்பளை பிள்ளைங்க வேற, உங்களை எப்படி கட்டி கொடுக்குறாங்கன்னு நானும் பார்க்க தானே போறேன். உன் அழகுல மயங்கி கட்டினாதான் உண்டு. அதுக்குன்னு எவனாவது வருவான். உங்க அப்பன் எப்படியும் தேடி பிடிச்சி இருப்பான். நல்ல வசதியான மாப்பிள்ளையா. அப்போ தானே நல்லா சொகுசா குடும்பமே உட்கார்ந்து சாப்பிட முடியும்.” என்க…
‘இப்போ எதுக்கு தேவையில்லாமல் பேசுறிங்க.?” என செம்பா கோபத்தில் சீற…
என்னடி சீறிட்டு வர்ற “முதல்ல இங்கே இருந்து வெளியே போ. என் வீட்ல நின்னால் இன்னும் அசிங்கமா பேசுவேன். இதுதான் உங்களை இங்கே பாக்குறது கடைசியாக இருக்கனும். “போங்கடி வெளியே” என்றதும் இரண்டு பேரும் அங்கிருந்து வெளியேறினார். நல்ல வேளை அந்த இடத்தில் யாரும் இல்லை. யாராவது இருந்திருந்தால் சந்திராவிடமோ இல்லை ராசாத்தியிடமோ சொல்லிவிடுவார். இங்கே கற்பகம் பேச்சால் மனதால் நொந்ததை விட, அவர்கள் இருவரும் உடலால் நோகடித்து விடுவர்.
“இனிமே அந்த பொம்பள வீட்டுக்கு போகனும்னு சொன்ன உன்னை கொண்ணுடுவேன் செம்பா. எப்படி பேசுறான்னு பாரு. அவ மகள் ஒழுங்காம். அவளை பற்றி எனக்கு தெரியாது பாரு. லிஸ்ட்டே போடனும். அவ கால் எதுக்கு நம்ம வீட்ல படனும். அவளே ஒரு தரித்திரியம், அவ வரனும்னு நம்ம என்ன தவமா இருக்கோம். அழாதே! அவ பேசியதை எல்லாம் பெரியதாக எடுக்காதே செம்பா” என அவளை சாமாதானபடுத்தி வீட்டில் விட்டு சென்றாள் கோகி.
ரஞ்சி செம்பாவின் முகத்தை பார்த்து “ஏன் அழுதுறுக்க, உனக்கு கோகிக்கும் சண்டையா?” என கேட்க
“பார்த்து விளையாட கூடாதாடி. பாரு வலியில் அழுறியே, சரி காலை காட்டு அக்கா மருந்து போடுறேன்”.
“இல்லக்கா வேணாம். அது சரியாகிடும்”.
“மருந்து போடாமல் எப்படி சரியாகும்”
“கோகி மருந்து போட்டு விட்டாக்கா”
“உண்மையாவா…”
“ஆமாக்கா”
“சரி” என்றவள் சமையல் அறைக்குள் சென்று கையில் சாப்பாடு தட்டோடு வந்தாள். செம்பாவிற்க்கு சாப்பாடு ஊட்டிவிட்டு தூங்கவைத்தாள். கற்பகம் பேசியதை நினைத்தபடியே தூங்கிபோனாள் செம்பா.
செம்பா எப்போதும் வரும் நேரம் தாண்டிவிட, அவள் வருகிறாளா? என பார்க்க வெளியே வந்தான். அவள் வருவது போல தெரியவில்லை. வாசலுக்கும் அவன் அறைக்குமாய் நடந்துகொண்டிருந்தான். மணி மாலை ஆகிவிட்டது. இனிமே செம்பா வருவது கஷ்டம். அவளை பார்க்காமல் மனது ஒரு மாதிரியான உணர்வில் தத்தளித்து. சமர் இருக்கும் வீட்டில் இருந்து செம்பா வீடு பக்கம்தான். “அவளை பார்த்து விட்டு வரலாமா!” என கீழே இறங்கினான். ஓரளவுக்கு இருட்டி இருந்தது. மெதுவாக நடந்து செம்பாவின் வீட்டின் முன்னே வந்தான்.
எல்லாரும் அவர்கள் வீட்டின் வெளியே முன் பகுதியில் பாயை விரித்து அமர்ந்து இருந்தனர். செம்பாவை மட்டும் காணவில்லை. “பட்டாசு மட்டும் இல்லை. எங்கே போனாள். ஒருவேளை வெளியே சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ருப்பாளோ, இல்லையே போனால் நேற்றே சொல்லிருப்பாளே, அப்புறம் எல்லாரும் இருக்காங்க!, இவ மட்டும் எங்கே போனாள்?, ஒரு வேளை உடம்பு சரியில்லையோ, அதான் நம்மளை பார்க்க வரலையோ?” என மனதிற்குள்ள பட்டிமன்றம் நடத்தியவன் “இதற்கு மேல் இங்கே நிற்பது நல்லது இல்லை. யாராவது பார்த்தால் தவறாக நினைக்ககூடும்” என அவள் வீட்டை பார்த்தபடியே தாண்டிசென்றான்.
“அண்ணே!, ஏழுமலைக்கு நல்ல வேலை கிடைச்சிடுச்சில்ல, நம்ம ரஞ்சிக்கும் அவனுக்கும் சின்ன வயசுலயே பேசினது தானே. உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்ல.”
“அம்மா, ரஞ்சி இப்போதான் காலேஜ் இரண்டாவது வருஷம் படிக்கிறாள். படிச்சி முடிக்கட்டும். அதுக்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசலாம்” என்றான் ஏழுமலை.
“இல்லடா நீ தனியா கஷ்டபடுறியேன்னு சொன்னேன். எங்க பக்கத்துல இருந்தால் நான் ஏன் இதை பற்றி பேச போறேன்”.
“எனக்கு என்னம்மா கஷ்டம் நான் நல்லாதான் இருக்கேன். படிக்கிற பிள்ளையோட படிப்பை கெடுத்துடாதே. ரஞ்சி படிச்சி முடிக்கட்டும். அதுக்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசலாம்.”
“சரிடா நீயே சொல்லிட்ட அப்புறம் நான் என்ன சொல்றது. என்ன அண்ணா, நீயென்ன அமைதியா இருக்க…?”
“நான் பேசணும் நினைச்சதை என் மருமகனே பேசிட்டானே. அப்புறம் நான் பேச என்ன இருக்கு ராசாத்தி. என் புள்ளைங்க நல்லா படிச்சி அவங்க சொந்தம் கால்ல நிற்கனும். அதை நான் பார்க்கனும். அதான் என் ஆசை. ரஞ்சியை மாதிரி என் ஆத்தாளையும் அவ ஆசைப்பட்ட மாதிரியே நர்ஸிங் படிக்க வைக்கனும். இரண்டு பிள்ளைங்களும் அவங்க படிச்ச படிப்புக்கு வேலைக்கு போகனும். அதுக்கு அப்புறம்தான் அவங்க கல்யாணத்தை பற்றி பேசனும். அவங்களும் சந்தோஷமா புருஷன், பிள்ளையோட வாழுறதை பாக்கனும் அதான் என் ஆசை”
“அவ சாயந்திரம் தூக்கத்திலேயே காபி குடிச்சிட்டு தான் தூங்குறாள் ராசாத்தி. அதான் அவளை நான் எழுப்பலை. வயிறு பசித்தால் தன்னாலே எழுவாள். நல்லா விளையாண்டு இருப்பாள். கால் வலியில் தூங்குவாள். அவளே எழுந்து வரட்டும். வயசு பிள்ளையா ஒரு இடத்துலே இருன்னு சொன்னாள், எங்கே கேட்குறாங்க ரெண்டு பேரும். இன்னும் சின்ன பிள்ளை மாதிரி அலையிறாளுங்க. அவளுங்க விருப்பபடிதான் இருக்காங்க. என்னத்தை சொல்ல!”
“ஆமா அண்ணி. அவ கெட்டு போக காரணமே இவள்தான்” என்றார் கோகியை பார்த்து
“ஆமா இல்லன்னா மட்டும் உன் மருமக படிச்சி மாநிலத்துலயே முதல்ல வந்திருப்பாள் போயேன்ம்மா, காமெடி பண்ணிட்டு”
“எதிர்த்து எதிர்த்து பேசாதேடி. உனக்கு இருக்குற வாய்க்கு உன் மாமியார் உன்னை உரல்ல போட்டு இடிக்கிறவளாதான் வருவாள்”
“என்னை அவ உரல்ல போட்டு இடிச்சாள். நான் அவளை அம்மில போட்டு அரைச்சிடுவேன்.”
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நாளைக்கு பள்ளிக்கூடம் தானே போ, போய் தூங்குடி” என்றதும் ‘இதுக்கு மேலே இவர்களிடம் இருந்தால் நம்ம தலைதான் உருளும்’ என நல்லபிள்ளையாக “சரிம்மா” என ஓடி போய் செம்பாவின் அருகில் படுத்து கொண்டாள் கோகி.
“ஏன்டி அமைதியா வேலை செய்யமாட்டியா ஒரு கட்டு புல் அறுக்கலை… அதுக்குள்ள ஓராயிரம் வார்த்தை பேசுற…
“உன்னை யாரு இன்னைக்கு டியூட்டி மாற்ற சொன்னது.”
“அம்மாவுக்காகதான்”.
“வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளில் ட்யூட்டி மாத்திருக்க, உன்னை என்ன பண்றது”.
“ஒன்னும் பண்ண வேணாம். ஒழுங்கா வேலையை பாரு. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு காலையில் எழுந்துக்கவே இல்லை. அதான் மாற்றினேன்.” என்றாள் செம்பா.
“அந்த ஒரு காரணத்துக்காகதான் உன்னை மன்னிச்சி விடுறாள் இந்த கோகி. திருவிழாவையும் பார்க்கவிடாமல் புல்லு அறுக்க கூப்பிட்டு வந்திருக்க.”
“இன்னைக்கு நைட்தானடி திருவிழா”
“அதையும்தான் பார்க்க முடியாதே. சாமி அருள்வாக்கு சொல்லும். பார்க்கவே அம்பூட்டு அழகா இருக்கும்.” என கண்ணத்தில் கை வைத்து ஆகாயத்தை பார்க்க…
“அம்மா தாயே! நீ வேணும்னா கிளம்பி வேலைக்கு போ. உன்னை போகவேண்டாம்னு நான் சொல்லல. நீதான் நான் உன் கூடவே டியூட்டி பாக்குறேன் சொன்ன. மறந்துடுச்சோ உன் மரமண்டைக்கு”
என்ன பண்றது. அந்த மருது பேசினதுல இருந்து உன்னை விட்டு தனியாக போக பயமா இருக்கு என மனதிற்குள் நினைத்தாள் கோகி.
“வாய்க்காலில் விழுந்துட்டாங்க போல என செம்பா சொல்ல…
“அப்படி தான் தெரியுது, கால் தடுமாறி இருக்கும் என்ற தோழிகள் இருவரும் அவர்கள் வேலையை பார்க்க.. தட்டு தடுமாறி எழுந்து நின்றால் ஆத்விகா.
காலையில் எழுந்த ஆத்விகா தன் வீட்டிலிருந்து போன் வர பேசிய படியே வயலின் ஓரம் நடந்து வந்தவள், குகனின் தோட்டத்திற்குள் வந்து வரப்பில் ஏறியவள், வாய்க்காலில் கால் வைக்க, இடறி சகதி வயலுக்குள் விழுந்தாள்.
கீழே விழுந்ததில் அவள் கால் முழுவதும் சகதி ஆகிவிட்டது.
அங்கே புல் அறுத்து கொண்டிருந்த இரு பெண்கள் தன்னை பார்த்துவிட்டு மீண்டும் வேலை செய்வதை கவனித்தவள் அவர்களை அழைத்தாள்.
“இந்த பொண்ணு எதுக்கு செம்பா நம்மளை கூப்பிடுது.?”
“என்னன்னு கேளுடி” என்ற செம்பா அவள் வேலையை பார்த்தாள்..
அதேபோல் கோகி “என்ன” என கேட்க,
இங்கே வான்னு கூப்பிடுறேன்ல்ல காது கேட்கலையா, அங்கே நின்று எதுக்குன்னு கேட்கிற? என்ற ஆத்விகாவை,
“பாத்தியா செம்பா திமிர, வா என்னனு கேட்டுட்டு வருவோம்” என இருவரும் ஆத்வியிடம் வர செம்பாவிற்கு பக்கத்தில் செல்லவும் அன்று சமருடன் பார்த்த பெண் என தெரிந்துவிட்டது.
“என்ன? எதுக்கு கூப்பிட்ட…?”
“இதோ இந்த செருப்பை கொஞ்சம் கழுவிக் கொடு…” என்றாள் ஆத்வி.
“எது உன் செருப்பை நாங்க கழுவனுமா…?” என செம்பா கேட்க…
“ஹூ ஸ் அன் இடியட்? பி பொலைட். டாக் டூ சம்ஒன் யு நௌவ். ஐ வில் ட்யர் யுவர் மௌவுத் அபார்ட். இப் யு கம் டு டவுன் அன்ட் லுக் அரௌவுண்ட் தி டவுன். யு வில் ஜஸ்ட் லீவ். ஐ வில் கில் யு பார் திங்கிங் தட் யு ஆர் ஆரோக்கன்ட்” என்றவளை ஆவென பார்த்தாள் கோகி.
( யாரு இடியட். ஆளைப்பாரு, யாருகிட்ட பேசுறோம்னு பார்த்து பேசு. வாயை கிழிச்சிடுவேன். ஊருக்கு வந்தியா ஊரை சுற்றி பார்த்தியா அப்படியே போய்ட்டு இருக்கனும். உன் திமிரை என்கிட்ட காட்டனும்னு நினைச்ச மூஞ்ச பேத்துடுவேன்.)
“யாரைடி எதிர்த்து பேசுற” என ஆத்வி செம்பாவை பார்த்து கையை ஓங்க
செம்பா தடுக்கும் முன் இன்னொரு கரம் தடுத்திருந்தது.
கண்கள் சிவக்க கோபமாக நின்றிருந்தான் குகன். அவள் கையை பிடித்து தள்ளி விட கீழே விழுந்தாள் ஆத்வி.
“யாரு மேல் கையை வைக்கிற கையை உடைச்சிடுவேன் ராஸ்கல். பொம்பள பசங்க மேல் கையை வைக்கிற பழக்கம் எனக்கு இல்லை. இதே இடத்துலே ஆம்பள இருந்திருந்தால் உடம்புல உசுரு மட்டும்தான் இருந்திருக்கும். ஊருக்கு வந்த வேலையை மட்டும் பார்த்தால் ரொம்ப நல்லது இல்லை தொலைச்சிடுவேன்” என குகன் மிரட்ட…
ஆத்வி கீழே விழுந்தவள் எழுந்து மூவரையும் முறைத்து கொண்டு கிளம்பினாள்.
“நீங்க வேலைக்கு போகலையா செம்பா.?”
“போகனும் மாமா. மதியத்துக்கு மேலதான் டியூட்டி.”
“சரிம்மா. அப்போ இன்னைக்கு ராத்திரி திருவிழா பார்க்க இருக்க மாட்டிங்களா…?”
“ஆமா மாமா”.
“இன்னைக்குதானே செம்பா சாமி அருள்வாக்கு சொல்லும்.”
‘என்ன சொல்லி என் தலையெழுத்து மாறிடுமா என்ன?’ என மனதிற்குள் நினைத்தவள் ‘வருஷா வருஷம் சொல்றதுதானே மாமா” என்றவள் நேரம் ஆகிடுச்சி நாங்க கிளம்புறோம் மாமா’ என இருவரூம் வயலை விட்டு வெளியேற, குகன் பார்வை ஆத்வி மேல் சென்றது. இப்போதும் போனை பேசியபடி நடந்தவள், தடுமாறி கிழே விழ அதை பார்த்தவன் சிரித்தபடி நகர்ந்தான்.
நள்ளிரவு உச்சிகால பூஜை. அப்படியொரு அமைதி. மக்களின் கூட்டத்தில் கோவில் வளாகமே நிரம்பி வழிந்தது. ஆனால் சத்தம் இல்லை. எல்லோரும் கை கூப்பியபடி அம்பாளையே பார்த்தபடி இருந்தனர்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவரின் மீது அம்பாள் இறங்கி அருள்வாக்கு சொல்லுவாள். அந்தநாள் ரொம்ப விஷேசமானது. அதற்காகவே பக்கத்து ஊரில் இருந்து எல்லாம் மக்கள் குவிவார்கள். இன்று யார் மீது வரும் என தெரியவில்லை. யார் வந்தாலும் அந்த உச்சிகாலை பூஜை முடியும் வரை அவர்கள்தான் அந்த ஊரின் தெய்வம். அம்பாள் கிரிடம், வாள், கும்பம், தீச்சட்டியுடன், சலங்கையும் காத்திருந்தன. அம்பாள் அருளுடன் அருள்வாக்கு முடிந்ததும் தீ மிதிக்கவேண்டும். நேரம் கடந்து கொண்டேயிருந்தது.
ஊரின் தலைவர் “என்ன பூசாரி இன்னூம் ஆத்தாளை காணும்”
“வருவாய்யா! அவளுக்கானவரை தேடுவாளா இருக்கும். வந்துடுவாள்.”
“ஏய் என்ற அதித சத்தத்துடன் ம்ஹிம்.. ம்ஹூம்.. ம்ஹிம்.. என்ற வித்தியாசமான மூச்சினை விட்டு அம்பாளின் முன் அங்கிருந்த வாளை எடுத்து நின்றான் குகன். கைகள் இரண்டும் வானத்தை பார்ப்பது போல உயர்த்தி, கண்களில் கருவிழி தெரியாமல் விழிகள் முழுவதும் மாறி வெண்மையாய் தெரிந்தன. கண்கள் உக்கிரத்தையும் இதழ்கள் புன்சிரிப்பினையும் காட்டியது. பெண்கள் குலவை சத்தம் விண்ணை முட்டியது. ஆத்தா, அம்மா, தாயே என்ற வார்த்தைகள் மட்டுமே மந்திரமாய் உச்சரிக்க பட்டன.
அங்கேயும் இங்கேயுமாய் ஆங்காரமாய் நடந்தான். “ஹாஹாஹா” என்ற சிரிப்பு சத்தத்தோடு ம்ஹிம்… ம்ஹிம்..ம்ஹிம்..ம்ஹிம்… ஏய்..ம்ஹிம்… ம்ஹிம் என முனங்கியபடி அங்கிருந்த அம்பாளுக்கான நாற்காலியில் ஒரு காலை நீட்டி, ஒரு காலை மடக்கி கையில் வாளை ஏந்தியவன், அப்படியே தரையில் வாளின் முனையை குத்தினான். அதை பார்க்கவே அத்தனை கம்பிரமாய் இருந்தது. அந்த நாற்காலியில் அமர்ந்ததும் அம்பாளிற்கான கிரிடத்தை அவன் தலையில் தூக்கி வைத்தனர். சலங்கையை காலில் கட்ட ஜல்..ஜல்.. என சலங்கை சத்தம் அந்த இடத்தையே நிறைத்தது.
முதல்முதலில் அம்மனின் அருள்வாக்கு அருள்வந்து ஆடுபவரின் குடும்பத்தினருக்குதான். குகனுக்கு அவன் அம்மா மட்டும்தான். அவர் முன்னால் வந்து மடியேந்தி கண்கலங்கி நின்றார்.
“ஹாஹாஹா… ஏன் கலங்குற”
“உனக்கு தெரியாதாம்மா?”
“ம்ஹூம்.. நேரம் நெருங்கி வந்துடுச்சி. போ” என அவன் கழுத்தில் இருந்த எலுமிச்சை மாலையில் உள்ள எலுமிச்சம்பழம் ஒன்றை, அவர் மடியில் விபூதியுடன் வைத்தான். கையெடுத்து கும்பிட்டு விட்டு நகர்ந்தார் குகனின் அம்மா.
ஒவ்வொருவராய் அருள்வாக்கு கேட்டு இருக்க, பாலாவின் குடும்பம் வந்தது.
கற்பகத்தை பார்த்து எக்காளமிட்டு சிரித்தான் குகன்.
“என்னம்மா? வருஷா வருஷம்! எனக்கு உன் சிரிப்பையே பதிலாக தாறியே, என் பையனுக்கு எப்போது திருமணம் நடக்கும்.”
“வா, என பக்கத்தில் அழைத்து இரண்டு எலுமிச்சை கனிகளை கையில் கொடுத்து போ” என்றான்.
“இதை எதுக்கும்மா கொடுக்குற, போன தடவை ஒரு கனி கொடுத்த இப்போ ரெண்டு கொடுக்குறியே?
“போ, சீக்கிரம் பதில் தெரியும்” என்றதும் அதற்குமேல் நிற்க முடியாது என்பதால் நகர்ந்தார் கற்பகம்.
அடுத்தது பாலா வந்தான்.
“எவ்வளவு நாள் மறைக்க முடியும். இன்னும் கொஞ்ச நாள்தான். எல்லாமே வெட்ட வெளிச்சமாக போகுது, என்ன பண்ண போற”
அ…அம்மா..
“ஹா.. ம்ஹூம் போய்ட்டு சீக்கிரம் வா. என்னை பாக்கனும்ல”
“ஆமாம்மா” என்றான் பாலா.
“சந்தோஷமா போ” என்றதும் அடுத்து செம்பாவின் அம்மா சந்திரமதி வந்தார்.
நாராயணன் தங்கையை பார்த்தும் பார்க்காது போல திரும்பி கொல்ல, மங்கையும், கற்பகமும் அவரை கேலியாக பார்த்து சிரித்தனர்.
“வா என்ன வேணும்” என்றான் இவ்வளவு நேரம் இருந்த புன்னகை முகம் மறைந்து.
“நான் என்னம்மா கேட்கபோறேன், என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்.”
“ம்ம்ம் நல்லா இருக்கும். முடிவுலதான் தொடக்கம் இருக்கு. விதி வலியது. ஏத்துக்க தயாரா இரு” என அவருக்கு விபூதி கொடுத்தான்.
அடுத்து சமரை அழைத்துகொண்டு சென்றான் பாலா.
“வா.. வா மகனே… என் கோட்டைக்கு இத்தனை வருஷம் கழிச்சி வந்திருக்க, நீ நினைச்சி வந்தது நடக்கும். கலங்காதே, கவலைபடாதே என்னைதானே சாட்சியா வச்சிட்டு போன, மறந்துட்டியா ?
“மறக்கவில்லை” என தலையசைத்தான் சமர்.
“ஹாஹாஹா.. வா” என பக்கத்தில் அழைத்தவன் அவன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி அவன் கையில் கொடுத்தான். அதை வாங்கிகொண்டு சமர் நகர அவன் பின்னால் வந்ததால் ஆத்வியும் அங்கே நின்றாள்.
“அவளை இங்கே வா” என்க சமரை பார்த்தாள்.
“போ” என கண் அசைக்க குகன் முன் நின்றாள். உள்ளுக்குள் உதறலாகவும் பயமாகத்தான் இருந்தது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நின்றாள்.
“எங்கேயோ பிறந்து, எங்கேயோ வாழப்போற, உன்னோட ஆங்காரம், அகம்பாவம் எல்லாத்தையும் இழந்து நிற்கதியா உன் வாழ்க்கைக்காக நீயே போராடுவ மகளே, என விபூதியை அவள் நெற்றியில் வைத்தவன் போ” என கர்ஜிக்க பயந்தபடி நகர்ந்தாள்.
எல்லாருக்கும் அருள்வாக்கு சொல்லி முடிக்கவும், இருந்த இடத்திலேயே மஞ்சள் நீரால் அபிஷேகம் ஆரம்பமானது. இடுப்பில் அம்பாளுக்கு அணிவிக்கும் புடவையை கட்டி விட்டனர். பூக்களால் ஜோடிக்கபட்ட கும்பம் அவன் தலையில் ஏற்றபட்டது. ஒரு கையில் வாளுடன், இன்னொரு கையில் தீச்சட்டியுடன் ஆங்காரமாய் நடந்தவன் நான்கு பேர் மட்டுமே அவன் பின்னால் செல்ல ஊரை சுற்றினான். ஒரு மணி நேரம் தாண்டிய பின் கோவிலுக்குள் வந்தவன், அம்பாள் சன்னதியை மூன்றுமுறை சுற்றி வந்து அங்கிருந்த தீக்குழியில் இறங்கினான். அவன் நடக்க நடக்க அவன்மீது மலர்களாய் கொட்டினர். அப்படியொரு சிரிப்பு அவன் முகத்தில். தீக்குழியை மிதித்து முடித்ததும் எக்காளமிட்டு சிரித்தவன் “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் மனசு குளுந்துடுச்சி, அதுபோல என் ஊரையும் குளிர்விப்பேன் என் மக்கா” என அம்மன் சன்னதியின் முன் விழுந்து மயங்கினான் குகன்.
கோகிலா செம்பாவை தேடி அந்த இடத்திற்கே வந்துவிட்டாள். செம்பா நடந்து வருவதை பார்த்தவள் “உன்னை எங்கெல்லாம் தேடுறது, ஏதோ பச்ச பிள்ளையை தொலைத்த மாதிரி, “ஐயோ என் ஆத்தாவை காணும்னு மாமா ஒப்பாரி வச்சிட்டு இருக்கார். நீ இங்கே என்னடி பண்ற? அப்போ எங்க கூட சாமி பின்னாடி கோவிலுக்கு எல்லாம் வரலையா?”….
“ இல்லடி நான் நடந்து வரும்போது பின்னாடி வந்தவங்க, கூட்டத்துல பின்னாடி சேலையில மிதிச்சுட்டாங்க, அது சேலை லேசா அவிழ்ந்த மாதிரி ஆகிடுச்சி, அதான் கொஞ்சம் மறைவா இருக்கிற இடத்துல கட்டிட்டு வந்தேன். அதுக்குள்ள கூட்டம் நகர்ந்துடுச்சி.” என்றாள் உண்மையை மறைத்து…
“சரி புடவையை கட்டிட்டல்ல”
“ஆமா”
“ஆனால், ஏண்டி உன் முகம் இவ்வளவு படபடப்பா இருக்கு, வியர்த்து எல்லாம் கொட்டுது, என்னாச்சு ஏதாவது பார்த்து பயந்துட்டியா செம்பா? பேய், பிசாசு எதுவும் அடிச்சிடுச்சா”
“இல்லடிம்மா, அம்மா அப்பா எங்க இருக்காங்க?”
“கோவில்ல இருக்காங்க வா” என செம்பாவை அழைத்துக் கொண்டு நடந்தாள் கோகி. செம்பா பின்புறம் திரும்பி பார்க்க அவளை பார்த்தபடியே பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தான் சமர்.
அவனின் சோர்ந்த முகத்தை கண்டு பெண்ணவளின் மனமெல்லாம் ரணமாய் வலித்தது. அளவுக்கு அதிகமான காதல் அவன் மீது, காட்ட முடியாத சூழ்நிலை அவளிடம். இதுவரை தன் குடும்பத்திற்கு நிகழ்ந்த அவமானம் போதும், இதற்கு மேலும் அசிங்கத்தை தேடி தர அவள் விரும்பவில்லை. காலம் முழுவதும் அவன் நினைவில் வாழ்ந்து விடலாம் என நினைத்தாள். நிச்சயமாக அவன் வருவான் என்ற நம்பிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்தது. நான் மட்டும்தான் அவனை நேசிக்கிறேன் என்ற நினைப்பில் இருக்க, இல்லை என் காதலுக்கு முன்னாடி உன் காதல் பெரியதில்லை என தன் எதிரே கம்பீரமாய் வந்து நிற்கிறான். ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனிடம் பேசும்போதுகூட அவன் முகம் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி நின்றாள். காலங்கள் ஓடிவிட்டதுதான். இருவரிடமும் உடலளவிலும் மனதளவிலும் அதிகமான மாற்றங்கள். இத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அவன் மீது அவள் கொண்ட காதல் கரையவில்லையே. அவனின் “பட்டாசு” என்ற அழைப்பு உயிர் வரை தீண்டிச் செல்கிறது. அதன்பின்தான் அவளுடைய கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன. சத்தியமாய் சமர் இவ்வளவு தூரம் தன்னை விரும்புவான் என அவள் நினைக்கவில்லை. அந்த கயிறை அவள் கழுத்தில் கட்டும்போது கூட அவன் நினைவாகத்தான் கட்டி சென்றானே தவிர, “என் நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்” என சொல்லிச் செல்லவில்லை. இறுதியாக அவன் இந்த ஊரை விட்டு செல்லும்போது சிறு குழந்தை போல ஏங்கி ஏங்கி அழுதவளை சமாதானப்படுத்த, “கட்டாயமாக நான் மறுபடியும் உன்னை பார்க்க வருவேன் பட்டாசு. என் நினைவாக இதை வைத்துக் கொள்” என அவன் கழுத்தில் கிடந்த செயினில் இருந்து டாலரை கழற்றி, அவள் கையில் கட்டி இருந்த கருப்பு கயிறை அவிழ்த்து அதில் டாலரை கோர்த்து அவள் கழுத்தில் கட்டி விட்டான். இன்று வரை அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் செவிப்பறையை மோதி செல்கின்றன. அந்த இறுதி வார்த்தையைத்தான் இன்றுவரை இதயத்தில் பொக்கிஷமாய் பூட்டி வைத்திருக்கிறாள். இப்போது கூட தன் பின்னால் வருபவனிடம் ஓடி செல்ல தூண்டுகிறது மனது. ஆனால், முடியாதே! அடுத்தவர்களுக்காக வாழ வேண்டுமா? இல்லை, தனக்காக தான் வாழ வேண்டுமா? என்ற சூழ்நிலையில், அவள். எவ்வளவுதான் அடுத்தவர்களின் வாயில் அவுலாய் விழுவது, தனக்காக வாழ்கிறேன் என்று ஒருத்தி பெற்றவருக்கு அவமானத்தை தேடி கொடுத்தது போதாதா?, நானும் கொடுக்க வேண்டுமா?, என்ற எண்ணம் ஒரு புறம். “ஏன்டி கஷ்டப்பட்டவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? பணக்காரர்களை பார்த்துதான் பல்லைக் காட்டுவீங்களே, இல்ல உன் ஆத்தக்காரி, நான் தான் கஷ்டப்பட்டவனை பார்த்து போய் விழுந்து செத்துட்டேன், நீயாவது போய் பணக்காரனை புடிச்சிக்கோன்னு சொல்லி அனுப்பி வைத்தாளா” என பாலாவின் அன்னை கற்பகம் பேசிய வார்த்தைகள் இன்று வரை மனதுக்குள் ஆழமாய் பதிந்து விட்டது. அதனாலேயே சமர் மீது வளர்ந்து நிற்கும் காதலை வெறுக்கிறாள். ஆனால் சமரை வெறுக்கவில்லை. இறுகிய கற்பாறைக்குள் புகுந்து வேர்விடும் செடிகளை போல, அவள் இறுகிய மனதிற்குள் ஆழமாய் நுழைந்து விட்டான் சமரன். விதி வழியது வேண்டாம் என்று விலகிச் சென்றாள் விட்டு விடுமா என்ன? அவனுக்கு அவள் தான் என முடிவு இருக்கையில், அவளால் அதை மாற்ற முடியுமா? வாழ்க்கை பல பாதைகளை கொண்டது. எந்த பாதை நமக்கானது என தீர்மானிப்பதும் அதுவே தான்.
செம்பருத்தி தன் அம்மா அப்பாவிடம் சென்று நின்று கொண்டாள். அதற்குப்பின் சமரை அவள் பார்க்கவே இல்லை. அவள் கண் முன்னே தான் வந்து நின்று இருந்தான். அவனின் பார்வை அவளை விட்டு அகலவே இல்லை. “தன்னை நேசிக்கிறாள்” என்பதை அப்பட்டமாக விழிகளே காட்டிக் கொடுக்கின்றன. ஏன் வெறுக்கிறாள் என்பது புரியவில்லை. சரி இன்னும் கொஞ்ச நாள் இங்கேதானே, இருப்போம். எப்படியாவது அவள் மனதை மாற்றி விட வேண்டும் என்ற எண்ணம். ஆனால், அவளை விட்டு விடும் எண்ணம் துளியும் இல்லை. அவள் தனக்கானவள் என்பதை இதயம் இன்றும் பறை சாற்றுகிறதே.
“சமர் எங்களை விட்டு நீ எங்க போன?” என அவனிடம் வந்தால் ஆத்மிகா.
அவனிடம் கொஞ்சிய படி பேசிகொண்டிருந்த ஆத்வியை பார்த்ததும் கோகி அன்று சொன்னது, “ஏழைகளே, பணக்கார பொண்ணுங்களா தேடும்போது பணக்காரங்க, எப்பிடி ஏழை பொண்ணுங்களை தேடுவாங்க,. நேரம் போகறதுக்காக நம்ம கிட்ட பேசுவாங்க, வளிவாங்க அவ்வளவுதான் உண்மையான காதல்ன்னு சொல்றது சுத்த பொய்” என்றது நியாபகத்திற்கு வந்தது செம்பாவிற்கு.
இல்லை “என் ஜித்து காதல் பொய்யாய் இருக்காது” என அவள் மனமே அவளுக்கு சொல்லிக் கொண்டது. இதுவரை அவன் அறியாத வண்ணம் அவனை ரசித்துப் பார்த்தவள், இப்போது சுத்தமாக பார்ப்பதை நிறுத்தினாள்.
சமர் ஆத்வியிடம் “ரொம்ப கூட்டமா இருந்தது, அதான் அங்கே நின்றேன்” என்றான்.
“ஓஹ் சரி சமர். அங்கே வளையல் கடை இருக்கு. எனக்கு வளையல் வாங்கி கொடுக்குறியா?”
வித்யா அப்போதுதான் அவளை நன்றாக பார்த்தாள். நேற்று அவள் அணிந்திருந்த வளையல்கள் கையில் இல்லை. கிளம்பும்போதே ஆத்வி நேற்று வாங்குன வளையலை போட்டுக்கோ, நீ கட்டியிருக்குற புடவைக்கு ரொம்ப அழகா இருக்கும் என்றதும் “சரி” என்றாள். ஆனால், அதை அணியாமல்தான் வந்திருக்கிறாள் என்பதை இப்போதுதான் பார்த்தாள். எதற்கு என்ற காரணம் புரிந்தது “சமரின் கையால் வளையல் வாங்கி போட வேண்டும்” என ஆசைப்படுகிறாள்போல என நினைத்துக் கொண்டாள் வித்யா.
செம்பாவை பார்த்தான். “அவளோ,அவள் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்க, சரி போயிட்டு சீக்கிரம் வந்துவிடலாம்” என ஆத்வியை அழைத்து சென்றான் சமர்.
கடைக்கு அழைத்து வந்தவன் “உனக்கு எந்த வளையல் பிடித்து இருக்கோ, எடுத்துக்கோ ஆத்வி” என்க…
அவள் ஒரு வளையலை கைகாட்ட கடைக்காரர் அதை எடுத்து மாட்டிவிட போக, கொடுங்க நானே மாட்டிக்கிறேன் என வாங்கிக் கொண்டாள்.
சமரிடம் வளையலை நீட்ட, “என்ன” என கேள்வியாக அவளை பார்த்தான்.
“ நீயே எனக்கு மாட்டி விடு சமர்” என ஆத்வி சொல்ல
“எனக்கு தெரியாது ஆத்வி. உடைஞ்சிடுச்சினா கஷ்டமாகிடும், நீ அவர்கிட்ட கொடுத்து போடு” என்றதும் ஆத்மி முகம் வாடிவிட்டது
எப்படியும் சமர் போட்டு விட மாட்டான் என தெரிந்ததும் கடைக்காரரிடமே மாட்டி கொண்டு வந்து நின்றாள்.
பாலா அவளை பார்த்து நக்கலாக சிரிப்பது போல இருந்தது. அவனை முறைத்துக் கொண்டு திரும்பி விட்டாள்.
கோவிலில் உச்சிகால பூஜை நடக்க எல்லோரும் சாமி கும்பிட்டு முடித்துவிட்டு கலை நிகழ்ச்சிகளை பார்க்க அமர்ந்தனர். ஆனால், செம்பா காலையில வேலைக்கு போகனும்மா. நீங்க இருந்து நிகழ்ச்சியை பார்த்துட்டு வாங்க, நானும் கோகிலாவும் வீட்டுக்கு போறோம்.
“ஏண்டி கொஞ்ச நேரம் இருந்து பாத்துட்டு போயேன்” என சந்திரா சொல்ல…
“இல்லம்மா நாளைக்கு முதல் தடவை வேலைக்கு போறோம். அங்க போய் தூங்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்”
“சரிடா நீ எல்லாம் சொல்ல வேண்டாம். கொஞ்சமாவது சொல்லு, இல்லன்னா என் தலையே வெடிச்சிடும்”
“என் தேவதையை தேடுறேன்டா”
“தேவதையா? என்ன? இங்கே வந்து உனக்கு பொண்ணு பாக்குறியா என்ன..?”
“ஆமா…. பொண்ணு பாத்துட்டேன், பொண்ணுதான் கொஞ்சம் முரண்டு பிடிக்குது”
“முரண்டு பிடிக்குதா, யாரடா சொல்ற?”
“எல்லாவற்றையும் சொல்லும்போது சொல்றேன்”
“இப்போ சொன்னாத்தான் என்னவாம்?”
“நீ இந்த ஊரு காரன் இல்லை மச்சான், அதனால வேண்டாம் மச்சான், எதுக்கு மச்சான், வீணாக ஏன் மச்சான், பிரச்சனைக்குள்ள போற மச்சான்னு சொல்லிட்டு 1008 மச்சான் போடுவ, அதான் சொல்லல….”
“சரிடா அதை நீயே பாரு. ஆத்விகிட்ட நேராவே உன் மனசுல அவளை பற்றிய எந்த எண்ணமும் இல்லன்னு பேசிட வேண்டியதுதானடா”
“என்ன பேச சொல்ற, நான் அவகிட்ட மறைமுகமாகவே என் மனசுல அவளை பற்றின எந்த நினைப்பு இல்லைன்னு சொல்றேன். அதுவே, புரிஞ்சுக்காம இருக்காள். அவ மனசு கஷ்டப்படக்கூடாது அப்படிங்கற எண்ணத்தில்தான் மறைமுகமாக சொல்கிறேன். நான் என்னடா பண்றது?, சின்ன வயசுல இருந்தே நம்ம கூடவே வளர்ந்துட்டாள். திடீர்னு முகத்தில் அடிக்கிற மாதிரி பேச கஷ்டமா இருக்கு பாலா”
“சரி கேம்ப் முடிஞ்சு போறதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணிடுங்க சார்.”..
“சரிடா”
“அப்புறம், நான் இன்னைக்கு நைட்டு இங்கே தான் தங்கனும். நீ ப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வீட்டுக்கு போய்டு சமர்.”
“ஏன்டா?”
“காலைல பால் குடம் எடுக்குறவங்க இன்னைக்கு கோயில்லதான் தங்கனும்”
“சரி அப்போ நானும் உன் கூடவே தங்கிடுறேன்.”
“வேணாம் சமர். நீ இங்கே தங்கிடமாட்ட வீட்டுக்கு போ” உங்களுக்கு துணைக்கு அப்பா வருவாங்க.”
“அப்பாவை ஏன்டா அலைய வைக்கிற? எனக்கு பழக்கபட்ட ஊருதான். நான் பார்த்துக்கறேன்” என நண்பர்களுடன் கொஞ்ச நேரம் கோவிலில் இருந்துவிட்டு கிளம்பினான்.