கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4

4.4
(5)

 

 

              அத்தியாயம் 4

 

மும்பை,

 

கவியும் கீதாவும் ஊருக்கு செல்வதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது கவி கீதாவிடம் நம்ம எந்த ஊருக்குப் போக போறோம் என்று கேட்டாள். அதற்கு அவர் தமிழ்நாடு மத்ததுலாம் அங்கே போய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. பின்னர் ஃப்ளைட்டில் சோழனின் கல்யாணத்திற்கு முன் தினம் இரவு சென்னை வந்து இறங்கினார்கள்.

 

அங்கே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து ரெஃப்ரஷ் ஆகிட்டு கீதா முன்பே பேசிய ஒருவரிடம் தாங்கள் சென்னை வந்து விட்டதாகவும் அங்கிருந்து சோழபுரம் செல்வதற்கு ஒரு டாக்ஸியை புக் செய்யுமாறும் கூறினார். அவரும் டாக்ஸியை புக் செய்து கொடுத்தார்‌. அதில் இருவரும்‌ சோழபுரம் கிளம்பினர். சொல்லும் போது கவி என்ன ஊருக்கு அம்மா போறோம் அங்கே யாரு இருக்காங்கன்னு கேட்கிறாள்.

 

அதற்கு அவர் நம்ம இப்போ தஞ்சாவூர் பக்கத்தில் இருக்கும் சோழபுரம் என்னும் ஊருக்குப் போறோம். அங்கே என்னோட அண்ணன் பையனுக்கு இன்று கல்யாணம் அதற்கு தான்‌ போறோம்னு சொல்றாங்க. அவள் ஏதோ கேட்க வருவதை பார்த்து இதுக்கு அப்புறமா எதுவும் கேட்காதே அங்கே போய் பேசிக்கலாம்னு சொல்லிவிட்டு தூங்குவது போல் கண் மூடினார். கவியும் கொஞ்ச நேரம் வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தாள். பின்பு அவளும் தூங்கி விட்டாள்.

 

கவி தூங்கியதும் முழித்துப் பார்த்த கீதாவும் யோசனையோடு இருந்தார். நான் எப்படி எல்லா உண்மைகளையும் உன்கிட்ட சொல்லுவேன். உண்மை எல்லாம் தெரிஞ்சா நீ என்ன பண்ணுவ உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். அந்த ஊரில் இருப்பவர்களோடு நான் இல்லாமல் இனிமேல் நீ இருந்துப்பியா. இதவிட்டா எனக்கு வேறு எந்த வழியும் தெரியலை. இதற்காக தான் நான் இவ்வளவு வருஷமா காத்துக் கொண்டு இருந்தேன் அப்படின்னு மனசுக்குள் பேசிக் கொண்டு வருகிறார்.

 

சோழபுரம்,

 

விடியற்காலையில் அந்த பெரிய வீட்டில் உள்ள அனைவரும் பரபரப்புடன் செயல்பட்டு வந்தனர். ஏனெனில் இன்று தான் சோழனின் கல்யாணம். ஆனால் அவன் மட்டும் இன்னும் எழவில்லை. எப்போதும் சரியாக 5 இல்லைன்னா 6 மணிக்குள் எழுந்து விடுவான். இன்று தான் இப்படி எழாமல் தூங்கிக் கொண்டிருந்தான். இரவு நாளைக்கு கல்யாணம் என்னாகும் அப்படின்ற யோசனையிலேயே ஒழுங்காக தூங்காமல் 3மணிக்கு மேல் தான் தூங்கினான்.

 

வீட்டில் பெரிய மேடை அமைத்து அதில்தான் ஐயர் அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார். சேரனும் அவருக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்து உதவி செய்துட்டு இருந்தான். ராஜன் ஐயா வந்தவர்களை வரவேற்று அமர வைத்துக்கொண்டு இருந்தார். பின்னர் ஐயர் மாப்பிள்ளை ரெடியா என்று கேட்டார். உடனே ராஜனும் சேரனை அனுப்பி பார்த்து வர சொன்னார்‌.

 

அவனும் தன் அண்ணனின் அறைக்கு சென்று கதவை தட்டினான். சோழன் தான் தூக்கக் கலக்கத்தில் வந்து கதவைத் திறந்தான். கதவு திறந்ததும் அண்ணா ஐயா உன்ன சீக்கிரமா வர சொன்னாங்கன்னு சொல்லி அவனைப் பார்த்து ஷாக் ஆகிட்டான். என்ன அண்ணா இன்னும் கிளம்பாமல் இருக்கீங்க ஐயர் மாப்பிள்ளை ரெடியானால் கூட்டிட்டு வர சொல்றார்னு சொல்லிட்டே இருக்கான் அதற்குள் சோழன் பட்டென்று கதவை சாற்றி விட்டான்.

 

சோழனுக்கு அப்போது தான் நியாபகம் வருகிறது இன்னும் கொஞ்சம் நேரத்தில் கல்யாணம் என்று உடனே வேக வேகமாக சென்று குளித்து விட்டு கிளம்பினான். அதற்குள் கீழே சேரனிடம் அண்ணனைக் கூட்டிட்டு வர சொன்னா எங்கே நீ மட்டும் வரேன்னு ராஜன் கேட்கிறார்.

அது வந்துங்க ஐயா அண்ணா அப்படின்னு ஏதோ கூறுவதற்குள் யாரோ கூப்பிடவும் அங்கே சென்று விடுகிறார்.

 

சேரனும் ஐயோ இந்த அண்ணா ஏன் இப்படி பண்றாரு மத்த நாட்கள் லாம் டான்னு 6மணிக்கு லாம் எந்திரிச்சு வந்துடும் இன்னைக்கு கல்யாணம் அதுவும் ஊரே திரண்டு வந்து வீட்டில் இருக்கும் போது இப்படி கிளம்பாமல் இருக்காரே. ஒரு வேளை இறங்கி வந்து எல்லார் முன்னாடியும் எனக்கு கல்யாணம் வேண்டாம் இதில் விருப்பம் இல்லைனு சொல்லிடுவாரோ அப்படின்னு யோசித்துக் கொண்டிருந்தான். அப்படி மட்டும் நடந்தால் ஐயாவுக்கு கோவம் வந்து என்னப் பண்ணுவாங்களோ.

 

இப்படி இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டி விட்டுட்டு போய்ட்டியே மீனாம்மா அப்படின்னு மனசுக்குள்ளேயேப் பேசிக் கொண்டிருந்தான். அதற்குள் மறுபடியும் ராஜன் வந்து சோழன் கிளம்பியாச்சா எங்கே நீ கூட்டிட்டு வரலையான்னு கேட்கிறார். அதற்குள் பக்கத்தில் இருக்கும் ஒருவர் அதோ சோழனே வந்துட்டான்னு சொல்றாங்க.

 

உடனே இவர்கள் இருவரும் டக்குன்னு திரும்பிப் பார்க்கிறார்கள். அங்கே சோழன் பட்டு வேட்டி பட்டு சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் கம்பீரமாக படியில் இறங்கி வந்து கொண்டு இருந்தான். அதைப் பார்த்தவுடன் ராஜனுக்கு ஆனந்த கண்ணீரே வந்து விட்டது. சேரனும் தன் அண்ணனை ஆ ன்னு இப்போ ஒரு பத்து நிமிடம் முன்னாடி தூக்கக் கலக்கத்தில் பார்த்த அண்ணனா இது அப்படின்னு பார்க்கிறான்.

 

 

அப்போது அந்த ஊரை நெருங்கி வந்து விட்டனர் கவியும் கீதாவும்.

இவர்கள் வருவதால் கல்யாணம் நிற்குமா நடக்குமா என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!