என்ன இது சுபா. உன்னோட ஆன்லைன் வீடியோஸ்ல என்ன பத்தி எந்த விதமான நியூஸையும் வெளியிட கூடாதுன்னு உன் கிட்ட நான் எத்தனை முறை சொல்லிட்டன். இப்படி வாய மூடிட்டு இருந்தா போதுமா. உடனே வீடியோ டெலிட் பண்ணு. நம்ம இப்ப போயிட்டு இருக்க இடம் மட்டும் அவனுக்கு தெரிஞ்சது நீ, நான் எல்லாரும் மாட்டிப்போம். முதல்ல அந்த வீடியோவ டெலிட் பண்ணுடி.
ரொம்ப குதிக்காத கயல். எப்பவும் ரொம்ப அமைதியா உன்ன மாதிரி ஒதுங்கி போனால் தான் ப்ராப்ளம். என்ன மாதிரி எது வந்தாலும் பேஸ் பண்ண ரெடியா இருக்க பழகிக்க. யார் வந்தாலும் தலைய சீவி வீசிட மாட்டாங்க.
உனக்கு சொன்னா புரியாதுடி. நான் சொல்றத மட்டும் செய். உன்ன மாதிரி நான் ஒன்னும் ஓவர் பவர் விமன் இல்ல.
நான்சென்ஸ் மாதிரி பிகேவ் பண்ணாத கயல். எனக்கு இந்த கிளைமேட் அண்ட் என் அக்கா கூட போற இந்த முதல் ட்ரிப் ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னோட பயத்துக்காகவும் வருத்ததுக்காகவும் என்னால இந்த வீடியோவை டெலிட் பண்ண முடியாது.
கயலும் சுபாவும் உடன்பிறந்த சகோதரிகள்; அண்ணா விமான நிலையத்தில் தங்களின் பணியை செவ்வென செய்யும் இரு ஃப்ளைட் உதவியாளினி மற்றும் மேனேஜர்!
இன்றைய தினம் அண்ணா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை அடையும் முன்பு கண்ட அழகான மேகமூட்டத்தை படம் பிடித்ததோடு விமானத்தை விட்டு இறங்கியதும் மதுரையில் இருந்து அதை போஸ்ட் செய்தால் யூடியூப்பில்!
SKJ என்ற எழுத்தை உறித்தாக கொண்ட அந்த யூடியூப் சேனல் ஃபேமஸ் ஆக காரணமே மாஸ்க் அணிந்த இருவரின் முகமறிய காத்திருக்கும் ஆவல் உடைய ரசிகர்கள்!
இல்ல சுபா. எனக்கு இந்த ஊரும் சரி இந்த வீடியோவும் கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு.
வீடியோ கூட ஓக்கே இந்த ஊரு என்னக்கா உன்ன பண்ணுச்சு. நீ ஒரு அல்ட்ரா பயந்தாங்கோளிக்கா. இப்படி இருந்தா காலம் முழுக்க இப்டியே பயந்து தான் நீ வாழனும்.
என்னடி என்னால பண்ண முடியும். என்னோட லைஃப் அப்டி ஆகிடுச்சு.

உன்ன மாதிரி என்னால இந்த விஷயத்தை அவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடியாது சுபா. ஒருவேளை இந்த வீடியோவை அவன் பாத்துட்டு வந்து பைரவிய தூக்கிட்டு போயிட்டா என் நிலைமை என்ன?
சரி சரி நீ பைரவிய இழுத்த காரணத்தினால மட்டும் தான் இந்த வீடியோவை நான் டெலிட் பண்றேன். இருந்தாலும் நீ ரொம்ப பயப்படுற அக்கா. எதையும் ஃபேஸ் பண்ணிக்கிற மைண்ட் செட்டில இருந்த நீயே இப்போ ஒரு கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட கிளி மாதிரி மாறிட்ட.
சூழ்நிலை என்ன இப்படி மாத்திருச்சு.
சூழ்நிலைக்கும் உனக்கு நீயே பின்னிக்கிட்ட வலைக்கும் ஏக்கா சம்பந்த படுத்துற.
பின்னிக்கிட்ட வலை இல்ல சுபா பின்னப்பட்ட வலை.
அழுத்தமாக சொன்ன கயலின் முகத்தில் பதட்ட ரேகை ஒட்டி இருந்தது.
ஏன் அவளை இந்த சூழ்நிலைக்கு தள்ள வேண்டும் என்று அந்த வீடியோவை டெலிட் செய்து விட்ட சுபாவிற்கு இந்த ஐந்து வருடம் முழுவதும் தனது அக்கா நிம்மதி இல்லாமல் உழவுகிறாள் என்று பெருமூச்சு வந்தது.
மதுரை விமான நிலையத்தில் உணவு உண்பதற்காக சுபாவும் கயலும் அமர்ந்திருந்த தருணம் அவர்களுக்கு பழைய நினைவுகளை கிளறிவிட்டு சென்றது.
இதோ இந்த விமான நிலையத்தில் எனது படிப்பு தொடர்ந்து கொண்டிருந்த சமயம் அது!
தள்ளாடி கொண்டு மது போதையில் விமானம் ஏற தயாராகிக் கொண்டிருந்த ஒருவனை தடுத்து நிறுத்தினால் கயல். விமானத்தில் ஏறும் போது ட்ரிங்க்ஸ் பண்ண கூடாது சார்.
நான் எல்லா அப்ரூவழும் வாங்கிட்டேன் மிஸ் கயல் என்று அவளது பெயரினை பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட அந்த பெயர் பலகையை பார்த்து கூறினான்.
இது ரூல்ஸ் உங்களால எப்படி வாங்க முடியும். முக்கியமா மேனேஜ்மென்ட் பண்ற எங்க சார் கிட்ட பர்மிஷன் யாராலயும் வாங்க முடியாது. இவரு வாங்கிட்டாராம் முதல்ல போய் வெளில நில்லுங்க என்று விமானம் ஏறிக் கொண்டிருந்தவனை இறங்கி நிற்கும் படி ஆணையிட்ட கயலை முறைத்த வாக்கில் நின்றிருந்தவன் மேனேஜர் தயாளன் வரவும் என்ன என்பது போல புருவம் உயர்த்தினான்.
சார் யார் உங்களை இங்க நிக்க வச்சது?
என்னை மேனேஜர் பதறவும் விமானத்தின் ஏறுபவர்களை வரவேற்கும் இடத்தில் இருந்த கயல் ஓடி சென்று, நான் தான் சார் அவர் இங்கே நிறுத்தினேன். அவர் ட்ரிங்க் பண்ணிருக்கார் என்று தனியாக தனது பணியினை சுட்டிக்காட்டி அதோடு மட்டுமல்லாமல் அவனை முறைத்து பேசியவளை ரசித்தான் அந்த சுருள் முடி ஆணழகன்.
சாரி சார் இவங்க எங்களோட ட்ரெயினிங் ஸ்டுடென்ட். கம்பல்சரி இவங்களுக்கு கொடுக்கப்படற ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும். நான் இவங்களுக்கு உங்கள அலோ பண்ண சொல்லி ஆல்ரெடி இன்பார்ம் பண்ணி இருந்தேன். பட் இவங்க மறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன் என்று கயலை பார்த்து அவர் ஓரக்கண்ணால் கண்ணடித்து நாக்கினை துருத்தி காட்டினார். அப்படி என்றால் அவர் ஆம் என்று தலையசிக்கும்படி அவளிடம் கெஞ்சுகின்றார்.
மதுரையில் செழித்து கொளுத்திருந்த பணக்காரரில் ஒருவரான இந்த ஆரவ் குடிபோதையில் விமானம் ஏறுவதற்கு அனுமதி அளித்ததை மறந்த ஸ்டூடண்ட்டோ இவள்!
கண்களை சுருக்கி அவள் அருகாமையில் சென்று அவள் அணிந்திருந்த மாஸ்கினை கலட்ட முயற்சி செய்ய அவனது கையை தட்டி விட்டாள்.
இங்க பாருங்க மிஸ்டர் ஆரவ் சார் சொன்னத வேணா நான் மறந்திருக்கலாம். அதுக்காக என் மேல டச் பண்றதுக்கான உரிமை எல்லாம் உங்களுக்கு இல்லை.
அவன் மாஸ் கழட்ட முயற்சி செய்வதை தட்டி விட்ட கயல் மேனேஜர் தயாளன் கூறிய பொய்யினை உண்மை என்று ஏற்றுக் கொன்றாள்.
இப்ப நீங்க ஏறிக்கோங்க என்று முகச் சுழிப்போடு கூறியவளின் நெற்றியின் வலது கண் அருகாமையில் இருந்த மட்சத்திணை கண்டு கொண்டேன்.
கயல் டைம் ஆச்சு பிளைட் எடுக்குற டைம் மேல வா என்று அவளது தோழி மைதிலி அச்சமயம் அழைக்கவும் அவளது பெயர் கயல் என்பதையும் கவனித்துக் கொண்டான்.
விமான பயணத்தின் போது ஒரு நிமிடம் கூட அவளின் முகத்தை காண்பதை தவிர்க்காமல் பார்த்து பார்த்து இரசித்து போதையேற்றி கொண்டிருந்தான். அதன் பலன் அவள் பின்புற களத்தில் இருந்த பட்டர்பிளை பறப்பது போன்ற ஒரு புறம் இறகுகள் விரிந்து இருக்க என்று வரையப்பட்டிருந்த டேட்டூவினை பார்த்துக்கொண்டான்.
பின் மூன்று மணி நேர பயணத்திற்கு பின்பு அவனின் இந்த தொடர் கண் பார்வைக்கு விடை கிடைத்தது கயலுக்கு.
தயாளன் சார் பண்ண வேலையால இன்னைக்கு இவன் கண்ணுல நான் மாட்டி சின்னா பின்னமாய்ட்டே மைதிலி. வச்சக்கண் வாங்காம என்ன பாத்துட்டு இருக்கான்.
ஹே ஹி இஸ் ஹேண்ட்சம் டி. எனக்கெல்லாம் இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சது கரெக்ட் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு போய்டுவேன்.
வேணும்னா சார் கிட்ட உன்ன இன்று கொடுக்கவா என்ற போது மைதிலி திடுக்கிடவும் புரியுதா எதுக்கு வந்தமோ அந்த வேலையை மட்டும் பார்த்தால் போதும்டி என்று சொல்லிவிட்டு சென்ற முதல் நாள் பணி நினைவு வந்து சென்றது கயலிற்கு.
உணவின் சுவை தனது நாவினை வருட மெதுவாக எடுத்து உண்டவளுக்கு ஏதோ மிதமான காற்று தன்னை தீண்டி புயலாக மாறுவது போன்று பிரம்மை!
யாரைப் பார்க்க கூடாது என்று இத்தனை நாள் தவிர்த்து கொண்டு இருந்தாலோ அவனை தன் முன் வந்து நின்றதை போன்ற பிம்பம் அவளுக்கு!
அவளுக்கு அப்படி இருந்தால் கனவாக இருக்கலாம் சுபாவிற்கு அப்படி என்றால் அது நிஜம் தானே!
கயல் மாமா!…
ஆச்சரியம் ததும்பும் குரலில் சுபா கூறவும் தயவு செஞ்சு அமைதியா இரு இப்பவும் நம்ம மாஸ்க் போட்டு தான் இருக்கும்.
கொரோனா காலகட்டம் என்பதனால் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று கட்டாயம்!
எப்படி இருந்த மனுசன இப்படி ஆக்கிட்ட.
நான் என்னடி பண்ண முடியும். எனக்கு அவர புடிக்கல தூக்கி போட்டுட்டு வந்துட்ட.
நீ ரொம்ப பண்றடி. உனக்காகவே எல்லாத்தையும் செஞ்சு உனக்காகவே அன்ப கொட்டி, உன் மேல உயிரை கொடுத்த அந்த மனிதனை நீ தூக்கிப்போட்டு வந்துடுவேனு நான் கூட நினைச்சது இல்ல. தூக்கி போட்டது மட்டும் இல்லாம அவர் என்னமோ ராட்சசன் மாதிரி பார்த்து பயப்படுற பாத்தியா உன்னோட ஆக்டிங் நீலாம்பரிய விட ஓவர்.
நீலாம்பரி! இட்ஸ் ஓகே. ரொம்ப தேங்க்ஸ் என்று மட்டும் கூறியவள் நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடுறேன் என்று அங்கிருந்து வெளியேறத் தவித்தாள்.
தன் மனையாளனை இதுவரை பார்ப்பதை தவிர்த்து இருந்தவளுக்கு இன்று அவனை காணும் நேரம் என்று தெரியுமானாலும் அதை தாங்கும் பக்குவம் அவளிடம் இல்லை.
இந்த ஐந்து வருடமாக மதுரை பயணத்தை மட்டும் தவிர்த்தவளுக்கு தோழியின் விடுமுறை தொல்லையாக முடிந்தது.
தினம் விமானம் ஏறி இவன் பயணம் செய்வது வழக்கமாக இருந்த சமயத்திலும் கூட அவனைக் காணாமல் தவிர்த்தவளுக்கு இப்பொழுது அது முடியாமல் போனதுதான் மாயை!

நீண்ட முடியும் தாடியுடனும் இருக்கும் ஆரவ்வினை காண்பதற்கே பாவமாக இருந்தது சுபாவிற்கு.
மொபைலில் பேசிக் கொண்டு வந்தவனுக்கு சில்லென்று காற்றின் உணர்வு ஏதோ முன்பு அனுபவித்திருந்த சில நினைவினைகளை தூண்டிவிட்டு சென்றது.
இதோ இந்த விமான நிலையத்தில் தான் அவளை தொலைத்தான். வேண்டாம் என்று சொல்லியும் அவளாகத் தொலைந்தாள்.
திரும்பி வரவே இயலாத தூரத்திற்கு சென்று விடுவாள் என்று அவன் நினைத்து இருந்தால் அப்படியே அவளை தன் கைக்குள் பின்னி தன் கைக்காப்பாக மாட்டி வைத்திருப்பான்.
சில நிமிடம் அவளோடு ஒரு மழை நாளில் நின்றிருந்த நினைவு வரவும் அவனது வதனம் சிரிப்பை தொட்டது.
நாளையோட அஞ்சாவது வருஷம். நீ இந்த உலகத்தை விட்டு போய். ரொம்ப கஷ்டமா இருக்கு குட்டிமா. உனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சும் என்னை விட்டுட்டு உன்னால் அவ்வளவு ஈஸியா போய்விட முடிஞ்சிடுச்சு. உன்கிட்ட வந்துடலாம்னு பார்த்தாலும் நான் வரக்கூடாது என்கிற அளவுக்கு எனக்கு பைரவ குடுத்துட்டு போயிட்ட.
தினம் தினம் அவன் கேட்கிற கேள்விக்கு வருஷ வருஷம் உனக்கு செய்ற இந்த சடங்குக்கும் இனிமே முடிவே இல்லல்ல.
அமைதி இழந்த அவனது மனம் அந்த அமைதி இழந்த விமான நிலையத்தை போன்று நிஜம் இழந்து நின்றது.
கௌசல்யா வேல்முருகன் 💞