Home Novelsசெவ்வானம் தீண்டிய பனிக்காற்று

செவ்வானம் தீண்டிய பனிக்காற்று

4) செவ்வானம் தீண்டிய பனிக்காற்று

by Kowsalya Velmurugan
0
(0)

சுபாவின் பெயரை பார்த்ததும் ஆரவிற்க்கு புரிந்து விட்டது.  சார் இங்க இருக்கிறது என்னோட வைஃப் கயல் தான்.  அவள ஒரே ஒரு டைம் நான் பாக்கணும். அவகிட்ட நான் பேசிட்டு இந்த இடத்தை விட்டு நான் கிளம்புறேன்.  தயவு செஞ்சு அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க.

 

மதுரையில் பிசினஸில் செழித்துக் கொண்டு இருக்கும் ஒரு ஆண்மகன் கேட்கும் போது வேண்டாம் என்றா மறுப்பார்கள்.  இதிலும் இவன் ரெகுலர் கஸ்டமர் என்பதில் கொஞ்சம் யோசித்த தயாளன் அவங்களே தான் ஆரவ். பட் உங்கள மீட் பண்ண இஷ்டம் இல்லனு  சொல்லிட்டாங்க.

 

என்ன மீட் பண்ண இஷ்டம் இல்லனு சொன்னாலா?  இருக்காது கண்டிப்பா இருக்காது…

 

என்னோட கயல் என்னை பாக்குறதுக்காகவே கொட்ற மழையில ஓடி வந்தவ.  இந்த மாதிரி நடந்திருக்க வாய்ப்பே இல்லை மறுபடியும் போய் ஒரே ஒரு டைம் அவளை கேட்டு பாருங்க.

 

அந்நேரம் பார்த்து பாத்ரூமில் இருந்து வெளிவந்த சுபா மாமா அக்கா உங்கள பாக்க விருப்பம் இல்லன்னு தான் சொன்னாங்க.

 

ஆரவ் முழுவதுமாக உடைந்து விட்டான்.  ஏன் என்ன பாக்க கூடாதுன்னு இப்படி அடம் பிடிக்குறா.  நான் என்ன தப்பு பண்ண.  என்ன காதலிச்சானு அவ சொன்னா மறுகணம் அவளை கல்யாணம் பண்ணனே அதுதான் என் தப்பா. கல்யாணம் முடிஞ்சு குழந்த குட்டா வேணாம்னு அவ சொன்னதுக்காக நான் வேண்டாம்னு தள்ளி நின்னனே அது தப்பா.  இப்போ பிரிஞ்சிடலாம்னு சொல்லி அவளா இருந்து என்கிட்ட டிவோர்ஸ் வாங்கிட்டு போயிட்டா அதுவும் மறுக்காம செஞ்சது என் தப்பா.  கொஞ்ச நாளுக்கு அப்புறம் நியூஸ்ல பார்த்தப்ப அவளோட பேர் இறந்தவங்க லிஸ்ட்ல இருந்தது.. நான் வந்து பார்த்தப்ப சடலமா இருந்தது கயலோட உடம்பு தான்.  அப்ப இப்ப நான் பார்த்தது கயல்.  அப்படி இருந்தும் என்ன பார்க்கவே கூடாதுன்னு எப்படி அவ முடிவு எடுத்தா.

 

அவ இஷ்டத்துக்கு பண்றதுக்கு நான் என்ன சிலையா.  வர சொல்லு சுபா அவள.  ஒரு எல்லைக்கு மேல என்னால பொறுத்துட்டு போக முடியாது.   என்ன நினைச்சுட்டு இருக்கா அவ மனசுல.

 

லவ் பண்ண சொன்னா லவ் பண்ணுனும், கல்யாணம் பண்ண சொன்னா கல்யாணம் பண்ணனும், டிவோர்ஸ் பண்ண சொன்னா டிவோர்ஸ் பண்ணனும், செத்துட்டான்னா சாங்கியம் பண்ணனும், எதுக்கு? ஏன்? என்னை இப்படி பம்பரமா சுத்த வைக்குறா?…

 

கயல் வெளிய வா கயல் என் கோவத்தை மேலும் மேலும் தூண்டாதே.

 

இவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உள்ளே இருந்த கயலுக்கு தெளிவாக கேட்டது.  இருந்தும் தனது காதினை அடைத்துக் கொண்டு முட்டிக்காலிட்டு உட்கார்ந்து அமர்ந்தபடி  அழுது கொண்டே இருந்தாள்.

 

போயிடு மாமா இங்கிருந்து போயிடு.  நீயும் நானும் மறுபடியும் சந்திச்சா அது நம்ம ரெண்டு பேரோட உயிருக்கே ஆபத்து போயிரு மாமா. உன்ன நான் பாக்கவே கூடாது மாமா.  உன்ன நான் பாத்துட்டன்ற விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சுச்சுன்னா சும்மாவே இருக்க மாட்டாங்க. ஐயோ நான் இப்ப என்ன பண்ணனும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தால் அந்த இக்கட்டான நேரத்தில்.

 

சுபாவும் தலையை குனிந்து கொண்டு நின்ற சமயம் முதல்ல நகரு சுபா.  இன்னைக்கு நான் என்னோட வைஃபை பார்த்தே ஆகணும்.

 

சுபாவினை தள்ளிக் கொண்டு அந்த பாத்ரூமினை ஓப்பன் செய்தான்.

 

தரையில் படுத்து கொண்டு அழுந்திருந்தவளை பார்ப்பதற்கே அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

 

ஓடி சென்று அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

 

ஏன்? எதுக்கு? ஏன் கயல் இப்படி பண்ற என்று அவனும் அழுக ஆரம்பித்தான்.

 

நகரு நீ.  முதல்ல இங்கிருந்து வெளியே போ.  உன் விரல் கூட என் மேல படக்கூடாது.  உன்ன பார்த்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு.  தயவு செஞ்சு இங்க இருந்து வெளியே போயிடு.

 

ஆத்திரத்தோடு கயல் கத்தவும்,

 

வேண்டாம் இல்ல உன்னை விட்டு நான் போக மாட்டேன்.  ஏன் கயல் இப்படி பண்ற.  என்ன பாரு கயல் நான் உன்னோட அன்பு மாமா வந்திருக்கேன் கயல்.  உனக்காக தான் மாமா வாழ்றேன்னு சொல்லுவையே கயல். இப்ப என்ன ஆச்சு.  ஏன் என்கிட்ட இருந்து இப்படி விலகி இருக்க.  ஏன் செத்து போயிட்டன்னு சொல்லி வச்சிருக்க.

பதில் பேசுடி. பதில் பேசுடி.  நீயில்லாத நாள் எனக்கு நெருப்பு மாதிரி எரியுது.  நீயும் நானும் இருந்த இடமெல்லாம் நீ எங்கனு கேள்வி கேட்குது. நீ கொடுத்துட்டு போன இந்த வாட்ச் கூட இப்ப வரை உன்ன தேடுது‌. நான் மட்டும் எப்பிடிடி உன்ன விட்டு போவன்.

என் மேல ஏன் உனக்கு இவ்வளவு கோபம். என்ன ஆச்சுன்னு ஆவது சொல்லுடி.

 

என்று ஆதங்கத்துடன் ஆரம்பித்தவன் அழுதான்.  அவளும் அவனும் அந்த பாத்ரூமில் தரையில் படுத்து அழுதிட

 

இதை கண்ட சுபாவிற்கும் கண்கள் கலங்கியது.

 

இதோ இது போன்று தானே அழுதவாக்கில் இருவரும் ஒரு முறை ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள்.

 

 

என்னடா சொல்ற சக்தி.. ஸ்டார்ட் பண்ணி இன்னும் ஒரு மாசம் கூட முடியல அதுக்குள்ள லாஷ்.  என்னடா பண்ண முடியும் என்னால. ஆல்ரெடி இது என்னோட அம்மாவோட இஷ்டப்படி நான் பண்ணலன்னு அவங்களுக்கு என் மேல ரொம்ப கோவம்.  இப்ப இது லாஷ்னா முடிஞ்சு போச்சுடா சோலி.

 

இல்லாத இந்த டைம் தான் ஏதோ ரொம்ப கெமிக்கல் சேர்த்துட்டோம்னு சொல்லி பிஹெச் ப்ராப்ளம் வந்ததுனால கொஞ்சம் நிறுத்தி வச்சிருக்காங்க.  பி ஹெச் மெய்ன்டெனன்ஸ் பண்ணி நம்ம ப்ராஜெக்ட் நம்மளோட பார்ட்னர்ஷ்கிட்ட சப்மிட் பண்ணுனம்னா, அதுக்கப்புறம் அவங்க ஹெல்ப் பண்ணி நம்ம மேல வர வாய்ப்பு இருக்குடா.

 

அந்த பிஹெச் மெயின்டனன்ஸ் ஆகுற அளவுக்கு கெமிக்கல் கலக்காம ஏன் ஓவர் அளவு கலந்தாங்க.

 

இல்ல மச்சி அந்த பொண்ணோட ஃபேமிலில ஒரு பிராப்ளம்.  அத நெனச்சிட்டு அந்த பொண்ணு இன்னைக்கு செய்ய வேண்டிய சோப்புல அதீதமான கெமிக்கல் கலக்கிட்டதனால பிஹெச் வேல்யூ ரொம்ப ஓவர் ஆயிடுச்சு.

 

ரெடிகுலஸ் இவ்ளோ கேர் லெஷ்ஷா இருக்கா பாத்தியா.  அவள முதல்ல நான் சொல்ற பிளேஸ்க்கு வந்து என்னை பார்க்க சொல்லு.

 

சரி மச்சி நான் அனுப்பி விடுறேன்.

 

அவ போட்டோ இருந்தா அனுப்பிவிடுடா அவளை பத்தி எனக்கு எதுவும் தெரியாது.

 

இல்ல மச்சி இப்போதைக்கு அவ போட்டோ எதுவும் என்கிட்ட இல்ல.  அவ வந்த பிறகு அவளுக்கும் தெரியாமல் வேணுனா போட்டோ எடுத்து நான் அனுப்புறேன்.

 

ஓவர் ரிஸ்க் எடுக்க வேணாம். எப்படியும் அந்த பொண்ணு நான் இருக்க இந்த பீச் பங்களாக்கு தான வரும்.  என்ன கலர் டிரஸ்னு மட்டும் சொல்லு நான் கண்டுபிடிச்சிடுவேன்.

 

இன்னைக்கு அந்த பொண்ணு ஏதோ ப்ளூ கலர் சாரின்னு நினைக்கிறேன் டா.

 

அப்புறம் என்ன அவ மூஞ்ச நான் பேத்து எடுத்துறன் நீ வை என்று போனை துண்டித்தவன் அவள் வருவதற்காக காத்திருந்தான்.

 

முதலில் தொடங்கிய தொழில் இது. தனது தாய் வேண்டாம் என்ற போதும் கூட அடம்பிடித்து சம்மதிக்க வைத்து விட்டான்.  அதிலும் அவருக்கு பிணக்கல் தான்.  மகனின் விருப்பத்தை கெடுத்த தாய் என்ற பழி சொல் வேண்டாம் என ஒப்பு கொண்டார்.

 

இதையெல்லாம் யோசித்தவனுக்கு அங்கு வந்த பெண் ப்ளூ வர்ண புடவையில் இருக்கவும் அவளாக இருக்கலாம் என யூகித்தது.  அந்த யூகத்தின் பேரில் சென்றவன் ஒரு துளி நேர இடைவெளி விடாமல் அவளை ஓங்கி அறைந்தான்.

 

 

அடித்த கன்னத்தை தடவியவாறு சார் என்று அவள் ஆரம்பிக்கும் முன்பே பேசவும் தொடங்கிவிட்டான்.

 

அறிவு இருக்கா.  சோறு சாப்பிடுறையா இல்ல வேற ஏதாச்சும் சாப்பிடுறையா?  பச்சை குழந்தைங்க  யூஸ் பண்ற சோப்ல எந்த அளவு கெமிக்கல்ஸ் கலக்குனும்னு நாலேஜ் இல்ல.  படிச்ச பொண்ணு தானே நீ. வீட்ல ப்ராப்ளம்னா லீவ் போட்டு ஃபீல் பண்ணி இருக்கனும்.  இப்ப உன்னால எவ்ளோ திங்க்ஸ் லாஸ்னு தெரியுமா?

உன்ன வேலைக்கு எடுத்தது என் கெட்ட நேரம்.

 

தனது மனதாங்கலை வார்த்தைகளால் கொட்டி தீர்த்தான். வார்த்தையில் இருந்த வலிகள் கொஞ்சம் அதீதமானது மட்டும் அல்லாமல் எரிச்சலூட்டும் வண்ணமானதும் கூட.

 

சார் என்று அவள் மீண்டும் அழைத்த தருணத்தில் என்ன மன்னிச்சிடுங்க சார் தெரியாமல் நான் பண்ணிட்டன் என்று அவனுடயை காலை பிடித்து ஒரு பெண் கெஞ்சினாள்.

 

மார்னிங் அம்மா கிட்ட ஃபைட் போட்டு வந்ததால கெமிக்கல்ஸ் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆட் பண்ணிட்டேன் சார் ரொம்ப மன்னிச்சிடுங்க.

 

அந்தப்பெண் காலை பிடித்துக் கொண்டு இவ்வாறு கெஞ்சவும், சிறிது நேரம் சிந்தித்தான்.

 

அப்ப நம்ம அடிச்ச பொண்ணு யாரு?…

 

அவன் முதுகு புறம் நின்று கன்னத்தை தடவிக் கொண்டு இருந்த அவளை திரும்பிப் பார்த்தான்.  அப்பாவியாக இருக்கும் அவளின் அந்த பிஞ்சு முகத்தை காணும் போது அவனுக்கு தான் செய்த செயல்கள் ஞாபகம் வந்தது.

 

இதில் வேறு ஏகச்சக்க வார்த்தைகள்!..

 

ஐயோ கடவுளே சாரிமா சாரிமா நான் என்னோட ஆபீஸ் ஸ்டாப் என்று நினைத்து உன்னை அடிச்சிட்டேன்.

 

திஸ் இஸ் ஓவர் சார்.  என்ன சொல்ல வர்றன்னு கூட பொருட்படுத்தாமல் அடிக்குறிங்க.  அடிக்க  உங்களுக்கு யார்தான் சொல்லிக் கொடுத்தார்களோ.  உங்களை சொல்லி குற்றமில்லை உங்களை வளர்த்து இருக்க லட்சணம் அப்படி.

 

குறைப்பட்டபடியே அவளது கன்னத்தில் நீவியவளை

 

என்ன வேணா என்னைய பத்தி சொல்லுமா. என்  வளர்ப்பை பத்தி நீ சொல்லாத.

 

இங்க பாருமா இனிமே உனக்கு இந்த ஆபீஸ்ல வேலை இல்ல.  மரியாதையை கிளம்பு.

 

முதல் வார்த்தை அவன் அறைந்த பெண்ணிடமும் இரண்டாவது வார்த்தை அவன் காலை பற்றிய பெண்ணிடமும் கூறினான்.

 

சார் சார் எனக்கு இந்த வேலை மட்டும் போயிடுச்சுன்னா என் நிலைமை ரொம்ப மோசமா இருக்கும் சார்.  ஆல்ரெடி அம்மாவுக்கு உடம்பு நலம் சரியில்ல.  இந்த வேலையும் போச்சுன்னா எங்க குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடும் சார்.

 

மீண்டும் அந்தப் பெண் காலை பிடித்து கெஞ்சியது.

 

கன்னத்தில் அறைந்த பெண்ணோ இப்படிப்பட்டவன் ஆபீஸ் ரூம்ல வேலை செய்வதற்கு நீ பிச்சை எடுத்துக் கூட வாழலாம்மா என்றாள்.

 

எதுவும் தெரியாம பேசாதீங்க அம்மா.  இந்த தப்பு எல்லாமே என்னோடது தான்.  அதனால தான் சார்க்கு கோபம்.

 

உங்க சாருக்கு உன்மேல கோபம் வந்தா தப்பு இல்ல.  இந்த பீச் பக்கம் வரவங்க மேல எல்லாம் கோவம் வந்தா என்ன பண்றது.

 

பீச் அருகே சுற்றி பார்த்திருந்த அவளைதான் அவன் ஆபீஸ் ஸ்டாப் என்று நினைத்து கன்னத்தில் அறைந்தான்.

 

ஹலோ பொண்ணு என்ன தெரியாம அடிச்சிட்டேன். அதுக்கு என்ன காம்பன்ஷேசன் வேணுமோ அதைக் கேட்டு வாங்கிட்டு போ சும்மா கீச்சுமூச்சுங்காத…

 

ஹான்… அப்படியா… ஒரு பிளாங் ஜெக் கொடுங்க.‌‌

 

இவ்வளவுதானா இதுக்குத்தான் இவ்வளவு நேரம் சீன் போட்டையா.  இந்தா இந்த பிளாங் செக் உன் கன்னத்துல நான் கை வச்சதுக்கு இந்த பிளாங் ஜெக் எவ்ளோ வேணா ஃபில் பண்ணிக்கோ.

 

அதை வாங்காமல் மறுத்தவள் நீங்களே அதை வச்சுக்கோங்க சார்.  சொன்ன மறுகணம் அவனது கன்னத்தில் பட்டாரென்ற அறை விழுந்தது.

 

விழுந்ததோடு மட்டுமில்லாமல் அறிவு இருக்குதா சோறு சாப்பிடுறையா வேற ஏதாவது சாப்பிடுறியா?  மூளைன்னு ஒன்னு இருந்தா அதை யோசிச்சு வேலை செய்ய வைக்கனும்.  போற வருவாங்களை எல்லாம் அடிக்கிற உனக்கு வீட்டில் பிரச்சனை என்று நிக்கிற அந்த பொண்ணோட சிட்டுவேஷன் உனக்கு புரியலைல்லை.  உனக்கு புரியவே வேண்டாம்.

 

அவன் போலவே கன்னத்தில் அறைந்ததோடு மட்டுமில்லாமல் எவ்வாறெல்லாம் திட்டி தீர்த்தானோ அதேபோல திட்டி தீர்த்தாள்.

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!