தணலின் சீதளம் 14

4.4
(14)

சீதளம் 14

“அடியே சீத்தா என்னடி புள்ள பெத்து வச்சிருக்க இவனையெல்லாம் என் பிள்ளைன்னு சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. ஒரு சின்ன வேலையை கூட ஒழுங்கா செய்ய தெரியல தருதலை. இவனெல்லாம் உயிரோட இருக்குறதுக்கு செத்துப் போய் இருக்கலாம்”
“ என்னங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு ஆம்பள புள்ள. இப்படி வார்த்தையால கரிச்சி கொட்டாதிங்க” என்று அழுதார் சீத்தா.
“ அடச்சை நிறுத்து உன் ட்ராமவ அது எப்படி டி. ஆ ஊ னா உடனே உங்க கண்ணுல தண்ணி வந்துடுது. ஊருக்குள்ள தண்ணிக்கு பஞ்சம்னு சொல்றாங்க உங்க கண்ணுல மட்டும் தண்ணி வத்தவே வத்தாதா. உன்ன மாதிரி ஒரு பத்து பொம்பளைங்கள தண்ணி இல்லைன்னு சொல்ற இடத்துக்கு அனுப்பனும். அங்க தண்ணி பஞ்சமே வராது” என்று அவரைத் திட்டிய செண்பக பாண்டியனோ தலையில் அடித்து கொண்டு சென்றுவிட்டார்.
இங்கு வேந்தன் வீட்டிலோ காலையிலேயே மொத்த குடும்பமும் பேசிக் கொண்டிருந்தது வேந்தனின் திருமணத்தைப் பற்றி.
ஆனால் எதற்கு சம்பந்தப்பட்டவனோ அந்த இடத்தில் இல்லை.
அவனைத் தவிர மற்ற அனைவரும் இருந்தார்கள்.
முதலில் ஆரம்பித்தது செல்வரத்தினம் தான்.
“ அம்மா நேத்து சின்னச்சாமி வீட்டு நிச்சயதார்த்தத்தில ஒரு பொண்ண பார்த்தேன். ரொம்ப நல்ல பொண்ணு தைரியமான பொண்ணும் கூட. சுத்தி அத்தனை பேர் முன்னாடியும் உண்மை என்னன்னு தைரியமா பேசுச்சு மா. அந்த பொண்ண நம்ம வேந்தனுக்கு பேசினா என்ன” என்று சொல்ல உடனே அறிவழகியோ,
“ அப்பா சூப்பர்பா அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு எனக்கும் அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு மட்டும் இல்ல அம்மா அப்பத்தா ஏன் நம்ம அண்ணாவுக்கு கூட அவங்கள ரொம்ப பிடிக்கும். உங்க முடிவு சரியான முடிவுப்பா” என்று ஆனந்தமாக சொல்ல செல்வரத்தினமோ தன் மனைவியின் முகத்தை கேள்வியாக பார்த்தார்.
உடனே அன்னலட்சுமியும் புன்னகைத்தவர்,
“ ஆமாங்க நம்ம புள்ள அந்த பொண்ண விரும்புறான் போல இருக்கு. எங்களுக்கும் அந்த பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்குதுங்க. உங்க கிட்ட எப்படி பேசணும்னு யோசிச்சுக்கிட்டு இருந்தோம். இப்ப நீங்களே இந்த பேச்ச ஆரம்பிச்சுட்டீங்க. சட்டு புட்டுன்னு அந்த பொண்ணோட வீட்ல பேசி இரண்டு பேத்துக்கும் கல்யாணம் ஏற்பாடு செஞ்சிடுவோம்ங்க. அத்தை நீங்க என்ன சொல்றீங்க”
“ இதுல நான் சொல்றதுக்கு என்னமா இருக்கு நம்ம எல்லாத்துக்கும் அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு அதைவிட என் பேராண்டியும் அந்த பொண்ண விரும்புறான் இதைவிட வேற என்ன வேணும்”
“அப்போ சரி உடனே அந்த பொண்ணு வீட்ல பேசவோம்.
அந்த பொண்ணு எந்த ஊரு யாரு என்ன அவங்க அப்பா அம்மா யாருன்னு சின்னசாமிகிட்ட விசாரிப்போம்” என்றார் செல்வரத்தினம்.
உடனே அறிவழகியோ,
“ ஐயோ அப்பா அதெல்லாம் தேவையில்லை அவங்கள பத்தின ஃபுல் டீடைல்ஸ் எங்களுக்கு தெரியும் நான் சொல்றேன்.
அவங்க பேரு மேகா. வெட்னரி டாக்டர் பைனல் இயர் படிச்சிக்கிட்டு இருக்காங்க. சொந்த ஊர் சென்னை. அவங்க அப்பா சத்தியராஜ். சென்னையிலேயே பெரிய பிசினஸ்மேன். அம்மா சுபாஷினி ஹவுஸ் வைஃப்”
“என்னம்மா அந்த பொண்ணோட ஜாதகம் மட்டும் தான் உன் கைல இல்ல போல இருக்கு மத்தபடி எல்லாமே சொல்ற”
“ ஐயோ அப்பா அன்னைக்கு அவங்க நம்ம வீட்டுக்கு வந்தாங்கல்ல அப்போ அவங்க தான் எல்லாமே சொன்னாங்க அப்பத்தாதான் கேட்டாங்க என்ன அப்பத்தா” என்று அப்பத்தாவை மாட்டிவிட அவரோ,
“ அது ஒன்னும் இல்லப்பா அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தப்போ நம்ம வேந்தனுக்கு அந்த பொண்ணு மேல விருப்பம்னு தெரிஞ்சது அதனாலதான் அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு விசாரிச்சேன்” என்றார்.
“ஓ அப்படியாம்மா அப்போ நாளைக்கு நாம சென்னைக்கு போய் அவங்க கிட்ட நேரடியா பொண்ணு கேட்போம் என்ன சொல்றீங்க”
“ சரிப்பா போகலாம்” என்று அப்பத்தா சொல்லிக்கொண்டு இருக்கும்போது வேந்தன் மாடியில் இருந்து இறங்கி வந்தான்.
“என்ன என்ன நடக்குது இங்க குடும்பமே ஒண்ணா சேர்ந்து என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க” என்றவாறு அவர்கள் அருகில் வந்த அமர்ந்தான் வேந்தன்.
வேந்தனுக்கு இந்த விடயம் தெரிய வேண்டாம் என்று நினைத்தவர்கள் கண்களாலேயே சைகை செய்து கொண்டார்கள்.
“ என்ன கேட்டுகிட்டே இருக்கேன் யாரும் எதுவும் சொல்லாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டு இருக்கீங்க” என்று மீண்டும் வேந்தன் கேட்க செல்வரத்தினமோ,
“ இல்லப்பா ஒரு வேலை விஷயமா சென்னை போகணும் அதான் பேசிகிட்டு இருந்தோம்”
“ என்னப்பா என்ன வேலை விஷயம் அதுவும் சென்னைக்கு போகணும்னு சொல்றீங்க எப்போ போகணும். இன்னைக்கு நான் வர முடியாதுப்பா நாளைக்கு போவோமா” என்று வேந்தன் கேட்க உடனே மறுத்த செல்வரத்தினமோ,
“ இல்லப்பா நீ வர வேண்டாம் என்னோட நண்பனோட பொண்ணு கல்யாணத்துக்கு தான் போறோம். நான் அம்மா அப்பத்தா மூணு பேரும் பொய்ட்டு வாறோம். நாளைக்கு கிளம்புறோம் நீ இங்க இருந்து வேலைய பாரு” என்றார் செல்வரத்தினம்.
“ ஓ அப்படியாப்பா சரி ஓகே அப்போ நீங்க மூணு பேரும் போய்ட்டு வாங்க. சரிப்பா நம்ம வீராவ சேர்க்கைக்கு கூட்டிட்டு போனும் நான் கிளம்புறேன் பா” என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.
அவன் அங்கிருந்து சென்றதும்,
“ அப்பாடி நல்ல வேலை அண்ணா வரேன்னு சொன்னதும் ஒரு நிமிஷம் பயந்துட்டேன். நல்ல வேலை அப்பா மாத்தி சொல்லி சமாளிச்சிட்டிங்க”
“ அவன் அவனோட லவ்வ நம்ம கிட்ட சொல்லி நம்மள சர்ப்ரைஸ் பண்றதுக்குள்ள நம்ம அந்த பொண்ணு வீட்ல பேசி அவனுக்கு பெரிய சர்ப்ரைஸ் பண்ணவோம்” என்றார் அப்பத்தா.
“ ஆமா அப்பத்தா நானும் அதுதான் நினைச்சேன்”
“இந்த ஆத்துல குளிக்க எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமாடி நாளைக்கு ஊருக்கு போனா இதை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
என்னதான் அங்க ஸ்விம்மிங் பூல்ல குளிச்சாலும் இந்த ஓடுற ஆத்து தண்ணியில இந்த குட்டி மீன்களோடு விளையாண்டுக்கிட்டே குளிக்கிற சுகம் எங்க போனாலும் வராது டி” என்று அங்கு ஆத்தங்கரையில் குளித்தவாறே பக்கத்தில் துணி அலசிக்கொண்டிருக்கும் பூங்கொடிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் மேகா.
“அப்படின்னா மேகா நீ ஒன்னு பண்ணு பேசாம இந்த ஊர்ல யாரையாவது ஒருத்தரை பார்த்து கல்யாணம் பண்ணி இங்கே செட்டில் ஆகிரு. அப்படின்னா தினமும் நீ இங்க வந்து குளிக்கலாம் தானே” என்றாள் பூங்கொடி.
“இது கூட நல்ல ஐடியாவா தான் இருக்கு ஆனா இந்த மேகாவுக்கு புடிச்ச மாதிரி இந்த ஊர்ல யாருமே இல்லையே என்ன செய்றது” என்று மேகா சொல்லிக் கொண்டிருக்க, வீரவை அவ்வழியே அழைத்துக் கொண்டு வந்த வேந்தனின் காதுகளில் விழுந்தது இவளுடைய பேச்சு. அவளுடைய குரலை கேட்டு அங்கேயே நின்றான் வேந்தன்.
பூங்கொடியோ,
“ ஏண்டி இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா. இவ பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவளுக்கு ஏத்த பையன் இங்க இல்லையாம்மா” என்றாள்.
“சரி இவ்வளவு பேசுறியே நீ ஏன் இங்கேயே ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணல” என்று கேட்டாள் மேகா.
“ அடியே பிசாசே நீ கேக்குறது உனக்கே அபத்தமா தெரியல நானும் ராமுவும் லவ் பண்றோம்டி. அப்படி இருக்கும்போது நான் எப்படி இங்கே உள்ள ஒருத்தரை கல்யாணம் பண்ண முடியும்”
“ தெரியுதுல்ல இந்த ஊர்ல பிறந்து வளர்ந்திருக்க நீ. இங்க உள்ள ஒரு பையன் கூடவா உன்னை இம்ப்ரஸ் பண்ணல” என்றாள்.
“ அது ஒரு ரெண்டு மூணு பேர் ப்ரொபோஸ் பண்ணுனாங்க ஆனா எனக்கு யாரையுமே புடிக்கல” என்றாள் பூங்கொடி.
அவளுடைய பதிலை கேட்ட மேகாவோ லேசாக புன்னகைத்தவள்,
“ இங்கு பிறந்த உனக்கே இங்க யாரையும் பிடிக்கல இதுல இந்தம்மா என்ன குறை சொல்ல வந்துட்டாங்க” என்றாள்.
“ சரிடி மேகா அப்போ உன்னை கட்டிக்க போறவன் எப்படி இருக்கணும்னு நீ எதிர்பார்க்கிற” என்று கேட்டாள் பூங்கொடி.
இவர்களுடைய பேச்சை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தான் வேந்தன். இப்பொழுது அவள் என்ன பதில் சொல்வாள் என்று ஆவலாக காத்திருக்க, மேகாவோ,
“ நல்லா ஆறடிக்கு குறையாமல் இருக்கணும் உயரம், நல்ல கட்டுக்கோப்பான உடம்பு, அடர்த்தியான முடி, அவனுடைய அந்த இரண்டு கண்களும் அப்படியே என்னை கவர்ந்திழுக்கனும், அதற்கு மேலே இருக்கிற அந்த ரெண்டு புருவமும் வில் மாதிரி இருக்கணும், கொஞ்சமா மாநிறமா இருக்கணும், என்ன அவன் குழந்தை மாதிரி பார்த்துக்கணும், நான் எனக்கு இது வேணும்னு சொல்றதுக்கு முன்னாடியே என் கண்ணை பார்த்து அவன் புரிஞ்சுக்கணும், எங்களுக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் அவன் எனக்கு தான் முதல் உரிமை கொடுக்கணும், மொத்தத்துல எனக்கே எனக்கான ஒருத்தனா இருக்கணும்” என்றாள் தனக்கு வர போகும் வாழ்க்கைத் துணை பற்றி.
அவள் அனைத்தும் சொல்ல அதை ஒன்று விடாமல் தன் மனதில் குறித்துக் கொண்டான் வேந்தன்.
ஆனால் பூங்கொடியோ,
“ என்னடி லிஸ்ட் பெருசா போகுது நீ சொல்றத பார்த்தா உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் இந்த பூமியில் இருக்க மாட்டான். தேவலோகத்தில் இருந்து தான் குதிச்சு வரணும்” என்றாள்.
“ போடி அப்படி எனக்கானவன் அந்த தேவலோகத்தில் தான் இருப்பான்னா கண்டிப்பா இந்த மேகாவை கொத்தா தூக்கிட்டு போறதுக்கு வருவான் அவனுக்காக காத்துகிட்டு இருப்பேன்” என்றாள் மேகா.
‘அப்படி எந்த தேவலோகத்தில் இருந்து எவன் வந்தாலும் உன்னை தூக்கி கொடுத்துற முடியாது மேகா. நீ இந்த வேந்தனுக்கு தான் சொந்தம். இந்த வேந்தன் உடைய மேகா. உன்ன யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட வேந்தனோ வீராவுடன் அவ்வழியை கடந்து செல்ல போக, அவனைப் பார்த்த மேகாவோ அவனை வம்பு இழுக்கும் பொருட்டு அவனை அழைத்தாள்.
“நானே சும்மா என் வழியை பார்த்துட்டு போக நினைச்சாலும் இந்த சில்வண்டு சும்மா இருக்காது போல இருடி மாமா வாரேன்”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தணலின் சீதளம் 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!