தேடித் தேடி தீர்ப்போமா

3.8
(5)

அத்தியாயம் 13

 

ராமச்சந்திரன் வெளியே செல்ல வந்தவரோ அப்படியே உறைந்து நின்றார்.

அவர் தன்னுடைய வண்டி சாவியை மறந்து வைத்து விட்டு வந்திருக்க, அதை கவனித்த அவரது மனைவி பத்மாவோ,

“ இவருக்கு எப்ப பாரு எதையாவது மறந்து வச்சிட்டு போறதே வேலையா போச்சு அதை அவர்கிட்ட சொன்னா நீ கொண்டு வரணும்னும் உன் முகத்தை பார்த்துட்டு போகணும்னு தான் நான் மருந்து வச்சிட்டு வந்தேன்னு மாதிரி சொல்லுவாரு” என்றவாறே வெளியே வந்தவர்,

“ஏங்க இந்தாங்க வண்டி சாவி எப்ப வரும் மறந்து வச்சிட்டு வந்துகிட்டே இருக்கிறது” என்று அவரிடம் கொடுத்தவர் அவரைப் பார்க்க அவரின் விழிகளோ வாசலையே வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தன.

‘ அப்படி என்னத்த இப்படி பார்த்த மேனிக்கு நிக்கிறாரு’ என்றவர் அவர் பார்த்தத் திசையை இவர் திரும்பி பார்க்க இன்பமாக அதிர்ந்தார் பத்மா.

“ அட அண்ணா வாங்க வாங்க” என்று புன்னகை முகமாக விக்ரமை வரவேற்றவர் தன் கணவரிடம் திரும்பி, “என்னங்க என்ன இப்படியே நிக்கிறீங்க அண்ணா வந்திருக்காரு வாங்கன்னு உள்ள கூப்பிடாம இப்படியே பேய் அரைஞ்ச மாதிரி நிக்கிறீங்க” என்று பத்மா சொல்ல உடனே ராமச்சந்திரன் விக்ரமின் அருகே சென்றவர்,

“வாங்க மாப்பிள்ளை மன்னிச்சிடுங்க திடீர்னு உங்களைப் பார்த்ததும் கை கால் ஓடல” என்று மன்னிப்பு கேட்ட ராமச்சந்திரனோ விக்ரமின் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தார்.

இவர்கள் உள்ளே வரவும் வீட்டில் இருந்த அனைவருமே விக்ரமை பார்த்து இன்பமாக அதிர்ந்தார்கள் என்றால் சித்ராவுக்கோ சொல்லவே வேண்டாம்.

ஆனந்தத்தில் அவருக்கு கண்ணிர் வழிந்து.

இத்தனை ஆண்டுகள் தன் பெற்றோர்கள் அவரை மதிக்காததால் தன்னை இங்கு அனுப்பாமல் இருந்தவர் இன்று தனக்காக தன்னிடம் கூட சொல்லாமல் வந்திருப்பதை நினைத்து கண் கலங்கியவர் “விக்ரம்” என்று அழைத்தவாறே தன்னுடைய வயதையும் மறந்து ஓடி சென்றவர் விக்ரமை கட்டி அணைத்துக் கொண்டார்.

“சரி சரி போதும் தங்கம்மா எல்லாரும் பார்க்குறாங்க பாருங்க” என்றார் விக்ரம்.

அவர்கள் இருவருடைய இந்த காதலை பார்த்து சித்ராவின் குடும்பமோ சந்தோஷம் அடைந்தார்கள்.

பின்பு அனைவரும் விக்ரமை நலம் விசாரித்து மொத்த குடும்பமும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

முன்னர் நடந்த கசப்புகளையும் நல்ல விடயங்களையும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது லல்லுவும் விஹானும் எதையோ பேசி சிரித்தபடி தங்களுடைய கைகளை கோர்த்த படியே உள்ளே வந்தனர்.

ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் புறம் திரும்பும் அளவிற்கு இருந்தது அவர்கள் இருவருடைய அந்த சிரிப்பு சத்தம்.

விஹானோ அங்கு வருகை தந்திருந்த தன்னுடைய தந்தையைப் பார்த்தவன்,

“டாட் வாட் அ சர்ப்ரைஸ்” என்று தன் தந்தையை அணைத்துக் கொண்டான்.

“ டாட் நீங்க எப்படி இங்க வாட் அ சர்ப்ரைஸ் நான் எதிர்பார்க்கவே இல்லை ஐ அம் சோ ஹாப்பி டாட்” என்று தன் தந்தையை ஆறத் தழுவி கொண்டான்.

அவரும் புன்னகைத்தவர் தன்னுடைய மகனை அனைத்து விடுவித்து,

“என்னடா பண்றது மை சன் என்னோட உலகமா இருந்த இரண்டு பேரும் என்னை விட்டு இவ்வளவு தூரம் இருக்கும்போது நான் மட்டும் அங்க எப்படி டா தனியா இருக்கிறது சரி கொஞ்ச நாள் இருக்கலாம்னு பார்த்தா அந்த வீட்ல நம்ம மூணு பேருமா இருந்த நினைவுகள் தான் அடிக்கடி வந்து என்ன தொந்தரவு பண்ணது சரி உங்க அம்மாவாவது எனக்கு போனாவது பண்ணலாம் இல்ல இங்க வந்ததும் என்னை சுத்தமா மறந்துட்டாள்” என்று விக்ரம் சித்ராவை பார்த்தவாறே கூற அதற்கு சித்ராவின் முறைப்பையும் பரிசாக பெற்றார் விக்ரம்.

“ அதான் இதுக்கு அப்புறமும் இந்த வெட்டி வீராப்ப புடிச்சு வச்சு நான் என்ன செய்யப் போறேன் என் பொண்டாட்டி பிள்ளையோட இருக்கிறது தான் எனக்கு சந்தோஷமா பட்டது அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லடா அதான் உடனே கிளம்பி இங்க வந்துட்டேன்”

“ என்னை டாட் ஓவர் எமோஷனலா இருக்கு” என்று தந்தையை கலாய்த்தான் விஹான்.

அவரோ அனைவருக்கும் தெரியாமல் தன்னுடைய மகனிடம் கண் ஜாடையில் கேட்டார் விக்ரம் அந்த பெண் யார் என்று கண்டுபிடித்தாயா என்று.

அதற்கு அவனும் அவரைப் போலவே தன்னுடைய விழிகளால் லல்லுவை சுட்டிக்காட்டினான்.

விக்ரமோ அவனுடைய கண் அசைவில் லல்லுவை பார்த்தவர் தன்னுடைய மகனுக்கு மட்டும் கேட்கும் வகையில்,

“ உன் சாய்ஸ் சூப்பர் மகனே பொண்ணு ரொம்ப அழகா லட்சணமா இருக்கா” என்றார்.

“ தேங்க்ஸ் டாட்” என்றான் விஹான்.

இரண்டு நாட்கள் அழகாக சென்றன.

விஹானோ லல்லு பிசியாக இருக்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களை தனக்காக எடுத்துக்கொண்டு அவளோடு தன்னுடைய நேரங்களை செலவிட்டான்.

லல்லுவும் இந்த புதுமையான அனுபவத்தை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் மொத்த குடும்பமும் ஹாலில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது பாட்டி சித்ராவிடமும் விக்ரமிடமும்,

“அம்மாடி சித்ரா மாப்ள நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க இந்த வயசானவளோட கடைசி ஆசையா கூட எடுத்துக்கோங்க என் பேரனக்கு என்னோட பேத்திய கட்டிக் கொடுத்து நம்ம சொந்தம் விட்டுப் போக கூடாதுன்னு நினைக்கிறேன் நீங்க நல்லா யோசிச்சு எனக்கு ஒரு நல்ல முடிவு சொல்லுங்க” என்று சொல்ல, ராமச்சந்திரன் பத்மா சித்ரா பாட்டி இவர்களது முகத்திலோ விக்ரம் என்ன சொல்ல போகிறாரோ என்ற கலக்கம் தெரிய, இங்கே விஹான் லல்லு மீனு இவர்கள் மூவரின் முகத்திலோ புன்னகை மலர்ந்தன.

விக்ரமோ, அத்தை உங்ககிட்ட நானே பேசணும்னு தான் இருந்தேன் அப்புறம் மச்சான் இது உங்க பொண்ணோட வாழ்க்கையும் கூட, நானே எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சிகிட்டு தான் இருந்தேன் ஆனா அத்தையே ஆரம்பிச்சுட்டாங்க எனக்கு இதுல பரிபூரண சம்மதம் தான்” என்று எந்தவித யோசனையுமே இன்றி தன்னுடைய சம்மதத்தை அங்கு தெரிவிக்க மொத்த குடும்பமும் அந்த பதிலை கேட்டு மகிழ்ச்சி அடைந்தது.

லல்லுவும் விஹானும் தங்களுடைய விழிகளாலேயே சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள இங்கு மீனுவோ வெட்கப்பட்டு கொண்டு தலை குனிந்தவாறு நின்றிருந்தாள்.

பாவம் அவளுக்குத் தெரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் இந்த வெட்கமோ மகிழ்ச்சியோ அவளிடம் துளியாவது இருக்குமா என்றால் அது கேள்விக்குறியே.

பாட்டி ஏதோ கூற வர அதற்குள் விக்ரம் பேச ஆரம்பித்தார்.

“ மச்சான் எங்களுக்கும் சம்மதம் உங்களுக்கும் சம்மதம் நம்ம நாட்களை கடத்த வேண்டாம் நாங்களும் ரொம்ப நாளைக்கு இங்கே இருக்க முடியாது.

ஏற்கனவே இவங்க ரெண்டு பேருமே இங்க வந்து ரொம்ப நாளாச்சு இப்போ நானும் வந்து இங்க ரொம்ப நாள் தங்க முடியாது அதனால நம்ம பசங்களுக்கு சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்று சொல்ல அவர்களும் சம்மதமாக தலையாட்டினார்கள்.

அப்பொழுதுதான் அந்த குண்டை தூக்கி போட்டார் விக்ரம்.

“ கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம லலிதா அங்க ஆஸ்திரேலியாவில் வந்து கூட அளரோட கரியரை பார்த்துகிடட்டும்” என்று சொல்ல அங்கு உள்ள அனைவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை.

விக்ரம் ஏன் லல்லுவை பற்றி கூறுகின்றார் என்று ராமச்சந்திரன் பத்மா சித்ரா பாட்டி அனைவரும் கேள்விக்குறியாக பார்க்க, மீனுவோ சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

அப்பொழுது அங்கு உள்ள அனைவரின் சந்தேகத்தையும் நீக்கும் பொருட்டு ராமச்சந்திரனே விக்ரமிடம் கேட்டார்.

“ மாப்பிள்ளை என்ன சொல்றீங்க லலிதாவா” என்று கேட்க,

“ ஆமா மச்சான் என் பையன் விஹான் உங்க பொண்ணு லலிதாகவும் விரும்புறாங்க” என்று சொன்னார் விக்ரம்.

ராமச்சந்திரன் குடும்பம் விஹானுக்கு தன்னுடைய மூத்த மகள் மீனாட்சியை திருமணம் செய்து வைக்க தான் அவர்கள் அனைவரும் ஆசைப்பட்டார்கள்.

ஆனால் விக்ரம் விஹானும் லலிதாவும் விரும்புகிறார்கள் என்று சொன்னதும் அவர்களுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ராமச்சந்திரன் பத்மாவையும் தன்னுடைய அம்மாவையும் பார்க்க அவர்கள் இருவரும் தங்களுடைய விழிகளை மூடி திறந்து எதுவும் பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்தார்கள்.

அதன்படி அவரும் வேறு எதுவும் பேசவில்லை.

இங்கு விக்ரமே மீண்டும் பேச தொடங்கினார்.

“ நீங்க எல்லாரும் கலந்து பேசிட்டு எனக்கு முடிவு சொல்லுங்க அடுத்த வாரத்துக்குள்ள நாம கல்யாணம் வச்சுட்டோம்னா எங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்” என்றார் விக்ரம். ஹாலில் மொத்த குடும்பமும் அமர்ந்து விஹான் லலிதா திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க இங்கு அந்த இடத்தில் இருப்பது பிடிக்காமல் யாருக்கும் தெரியாமல் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றவளோ தன்னுடைய அறைக்குள் வந்து தன்னால் முடிந்த மட்டும் அழுது கரைந்தால் மீனு.

அவளுக்கு அவள் மீதே அவ்வளவு கோபம் வந்தது.

யாரை சொல்லி என்ன பயன். தன்னுடைய கோழைத்தனம் தன்னுடைய தைரியம் இல்லாத இந்த தன்மையை அவளே வெறுத்துக் கொண்டிருந்தாள். தான் இத்தனை வருடங்களாக உருகி உருகி காதலிக்க விஹானை தன் தங்கையே ஆகினும் இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க மனம் இல்லை தான் ஆனால் அவளால் என்ன செய்ய முடியும். இங்கு விதி வேறு மாதிரி விளையாடிவிட்டதே.

அவளுடைய செவியில் மீண்டும் மீண்டும் கேட்ட வார்த்தைகள் இவை தான்.

“என் பையன் விஹானும் லலிதாவும் விரும்புகிறார்கள்”

முடிந்த மட்டும் தன்னுடைய இரு செவிகளையும் தன்னுடைய கரங்களால் பொத்தியவள் மௌனமாக கண்ணீர் சிந்தினாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 3.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!