அத்தியாயம் 15
ராமச்சந்திரன் தன்னுடைய மனைவியிடமும் அம்மாவிடமும் கலந்து பேசியவர் மறுநாள் அனைவரையும் அழைத்து அடுத்த வாரமே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூற அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது மீனுவை தவிர.
அனைத்து வேலைகளையும் வீட்டில் உள்ள அனைவரும் ஆளுக்கு ஒன்றாக எடுத்து செய்ய லல்லவோ ஆடைகளின் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டாள்.
இவ்வாறு ஒவ்வொரு வேலைகளையும் ஒவ்வொருவர் பொறுப்பு எடுத்துக் கொள்ள ஒரு வாரத்திற்குள் அனைத்து வேலைகளும் முடிந்திருந்தன.
விடிந்தால் பிரம்ம முகூர்த்தத்தில் லல்லுவுக்கும் விஹானுக்கும் திருமணம் என்று இருக்க,
இந்த இரவு நேரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் தன்னுடைய வருங்கால மனைவியாக ஆகப்போகும் லல்லுவிடம் பேசிக் கொண்டிருந்தான் விஹான்.
அவனுக்கோ மிகுந்த ஆனந்தமாக இருந்தது.
இங்கு வந்து சில தினங்களே ஆகினும் அவன் எதிர்பார்க்காத வண்ணம் அவனை ஈர்த்த அந்தப் பெண்ணையே அவனுடைய துணையாக மாற்றப் போகிறான் என்று நினைத்தவனுக்கோ இதைவிட வேறு என்ன வேண்டும் என்று இருந்தது.
லல்லுவோ என்னதான் விஹானிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவளுடைய பாதி கவனம் தன் கையில் இருக்கும் டேப்லெட்டில் இருந்தது.
அனைவருக்கும் ஆடை தேர்வு செய்தவள் அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.
இங்கு விஹானோ அதைப் பார்த்து சற்று முகம் சுளித்தவாறே,
“ லாலி நாளைக்கு விடிஞ்சா நமக்கு கல்யாணம் நீ என்னடா இன்னும் வேலை பார்த்துகிட்டு இருக்க அதை கொண்டா கொஞ்சம் ஓரமா வை.
நம்ம காதலர்களா இருக்கிற லாஸ்ட் நாள் இன்னைக்கு தான்” என்றான் விஹான்.
“ ஜஸ்ட் 2 மினிட்ஸ் ஒரு சின்ன வேலை அதை மட்டும் முடிச்சிட்டு வந்துடறேன்” என்று அவளுடைய வாய் அவனுக்கு பதில் கூறினாலும் அவளுடைய கண்களும் அவளுடைய கைகளும் டேப்பில் தான் வேலை செய்து கொண்டிருந்தன.
வேறு வழி இல்லாமல் அவள் சொல்வதைக் கேட்டு இரண்டு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு இதற்கு மேலும் பொறுமை தாங்காது என்று அவள் புறம் திரும்பியவன்,
“இங்க பாரு லாலி நீ சொன்ன ரெண்டு நிமிஷம் முடிஞ்சி போச்சு இதுக்கு அப்புறம் உன் கைல டேப் இருக்க கூடாது” என்றவன் அவளிடம் இருந்து அதைப் பிடுங்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு தன்னுடைய கைவளைவுக்குள் அவளைக் கொண்டு வந்தான் விஹான்.
அவளும் ஒரு சிறு சிரிப்புடன் அவனுடன் இருக்க விஹானோ,
“ லலி நான் உன்கிட்ட சொன்னேன் தானே நாம லவ்வர்ஸா இருக்கிற கடைசி நாள் இன்னைக்குத் தான் சோ”
“சோ?”
“சோ ஒரே ஒரு கிஸ் கிடைக்குமா” என்று கண்ணடித்து கேட்க அவளோ அவனுடைய இந்த பாவணையை ரசித்தவள் சரி விடிந்தால் தங்கள் இருவருக்கும் திருமணம் என்று நினைத்தவள் போனால் போகட்டும் ஒரு முத்தம் தானே இதற்காக அவனும் எத்தனை நாள் தான் தன்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றான் என்று பாவம் பார்த்தவள் அவனுக்காக கொஞ்சம் இறங்கி வந்து சரி என்று சொல்ல, அவனுக்கோ சந்தோச சாரல் வீசியது.
உடனே ஒரு கையால் அவளுடைய இடையை வளைத்து தனக்கு இன்னும் நெருக்கமாக நிப்பாட்டியவன் மற்றுமொரு கையால் அவளுடைய கன்னத்தைத் தாங்கி இதழில் முத்தமிட போக நூல் இழை தான் இடைவெளி இருவருடைய இதழ்களுக்கும்.
அப்போது கீழே இருந்து பத்மா லல்லுவை அழைக்கும் சத்தம் கேட்க சட்டென திடுக்கிட்டவள் யாரும் வந்து விட்டார்களோ என்று நினைத்து அவனை விட்டு உடனடியாக பிரிந்தவள்,
“சாரி விஹான் கீழ அம்மா கூப்பிடுறாங்க நான் போறேன்” என்று அவனை விட்டு செல்ல போக இவனுக்கோ மிகுந்த ஏமாற்றமாக போனது.
முகத்தை தொங்க போட்டுக் கொண்டு லல்லுவின் கையைப் பிடித்தவன்,
“ லாலி இது போங்காட்டம்” என்று சொல்ல அவளோ தன்னுடைய கையில் இருந்த அவனுடைய கையை பிடித்தவள்,
“ ஐயோ விஹான் அம்மா கூப்பிடுறாங்க இன்னைக்கு நைட்டு மட்டும் தானே நாளைக்கு அப்புறம் உங்களுக்கு எந்த தடையும் இல்லை” என்று வெட்கப்பட்டவாறே கூறியவள் அங்கிருந்து ஓடி சென்று விட்டாள்.
இங்கு இவனோ தன்னுடையக் காலை தரையில் உதைத்தவன் தன்னுடைய இரண்டு கையையும் தலைக்கு பின்னால் பிடித்தவாறு அந்த இருட்டு வானத்தில் ஒற்றையாய் ஜொலித்துக் கொண்டிருந்த நிலவை ரசித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் நின்று பார்த்தவன் பின்பு அங்கிருந்து கீழே வந்தவன் விழிகளிலோ மீனுவின் அறை தென்பட்டது.
அவளுடைய அறையைக் கடந்து தான் கீழே வரவேண்டும்.
அப்படி இருக்கையில் அவளுடைய அறையின் முன்னே வந்தவன் பார்வையோ எதிர்ச்சியாக அவளுடைய அறையின் கதவு மேல் விழுந்தது.
உடனே அவனுக்கு இரண்டு நாளைக்கு முன்னர் நடந்த விடயம் நினைவுக்கு வந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்.
அனைவருமே கல்யாண வேலையில் அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருக்க அப்பொழுது மீனுவோ கையில் ஒரு லெட்டருடன் வந்தவள் அனைவரையும் அழைத்து,
“ அப்பா பாட்டி எனக்கு ட்ரெய்னிங்கு வர சொல்லி மும்பையில் இருந்து லெட்டர் வந்திருக்கு” என்று சொன்னாள்.
ராமச்சந்திரனோ,
“ எப்பொழுது போக வேண்டும்” என்று கேட்க இவளோ,
விஹானுக்கும் லல்லுவுக்கும் திருமணம் நடக்கும் அன்று தான் அங்கு இருக்க வேண்டும் என்று கூற அவர்கள் அனைவருக்குமோ இதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. ராமச்சந்திரனோ,
“ என்னடா மீனு குட்டி இப்படி சொல்ற கல்யாணத்துக்கு நீ அங்க இருக்கணும்னா அப்போ கல்யாணத்துக்கு முதல் நாள் நீ இங்கிருந்து கிளம்புற மாதிரி இருக்கும். இப்ப எப்படிம்மா நீ கிளம்ப முடியும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு போக முடியாதா” என்று ராமச்சந்திரன் கவலையாக கேட்க அதற்கு மீனுவோ,
“ இல்லப்பா நான் கண்டிப்பா போய் தான் ஆகணும் வேற வழியே இல்ல. எனக்கும் இங்க இருக்கணும்னு ஆசை தான் பா ஆனா என்ன செய்யறது இப்படி இந்த லெட்டர் வரும்னு நான் எதிர்பார்க்கல” என்று சொல்ல, சித்ரா பத்மா லல்லு என்று அனைவருமே அவளை இருக்கச்சொல்லி வற்புறுத்த, மீனுவின் விழிகளோ ஒரே ஒரு நிமிடம் விஹானின் முகத்தை ஏறிட்டது.
விஹானுக்கோ இங்கு நடக்கும் நாடகத்தில் துளியும் விருப்பமில்லை. அவன் எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய மொபைலில் ஏதோ செய்து கொண்டிருக்க, பார்த்தவளோ சட்டென சுறந்தக் கண்ணீரை தன்னுடைய பார்வையை வேறு பக்கம் திருப்பியவாறு கண்ணீரை உள்ளெழுத்துக் கொண்டாள் மீனு.
அப்பொழுது விக்ரமோ,
“ கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்க வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்கும்போது மீனா இங்கே இருக்க முடியலைன்னு எனக்கும் வருத்தமா தான் இருக்கு. ஆனாலும் இது அவளோட கேரியர் கண்டிப்பா அவ போய் தான் ஆகணும் எதுக்காகவும் அவளோட கரியரை நம்ம ஸ்பாயில் பண்ண முடியாது” என்று விக்ரம் சொல்ல, பாட்டிக்கோ ஒரு பக்கம் நிம்மதியாகவும் இருந்தது.
ஏனென்றால் விஹான் லல்லுவின் கழுத்தில் தாலி கட்டும் பொழுது மீனு இங்கு இருந்தால் ஏற்கனவே வேதனையில் இருக்கும் அவளது மனம் மீண்டும் கஷ்டப்படத்தான் நேரிடும். இதுவே அவள் இங்கு இல்லை என்றால் ஓரளவுக்கு அவளால் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்தவர் மருமகனுடைய வார்த்தைக்கு ஆமோதித்தார்.
“ ராமு அவ போகட்டும் பா” என்றார். மீனுவோ பாட்டியை கண்கள் கலங்க பார்த்தவள் தன்னுடைய விழிகளால் பாட்டிக்கு நன்றி கூறினாள்.
அதேபோல இன்று சற்று நேரத்திற்கு முன்பு தான் மீனுவை மும்பைக்கு அனைவரும் வழி அனுப்பி வந்திருக்க, அப்பொழுதுதான் மாடியில் லல்லுவிடம் பேசிக் கொண்டிருந்தவன் இப்பொழுது கீழே வர வந்தவன் கண்ணிலோ மீனுவின் அறைக்கதவு தென்பட அதை உற்றுப் பார்த்த விகானின் கண்களிலோ,
“ஸ்டே அவே” என்ற பலகை பொறிக்கப்பட்ட அறைக்கதவை பார்த்தவன் இதழில் ஏலனமாக மலர்ந்தது புன்னகை.
“சரியான டிராமா காரி” என்றவன்
மெதுவாக அந்த அறைக் கதவை திறந்து உள்ளே சென்றான் விஹான்.
அந்த அறையின் உள்ளோ எங்கு சுற்றிலும் மீனாவின் புகைப்படங்கள் அழகழகாக இருந்தன.
ஒவ்வொன்றாக பார்வையிட்டு வந்தவன் அவளை நினைத்து அவன் வதனத்தில் ஏளனமான ஒரு புன்னகையும் மலர்ந்தது.
பின்பு தன்னுடைய பிடரியில் லேசாக தட்டியவன்,
“ஆமா இவ பெரிய பட்டத்து இளவரசி ச்சை.. சரி இப்ப நான் எதுக்கு இங்க வந்தேன்.. சரியான டைம் வேஸ்ட் லாலிக்கு இப்படி ஒரு அக்காவா.. அவ எப்படி இருக்கா. இவ எப்படி இருக்கா சரியான இடியட் முதல்ல இங்க இருந்து கிளம்புவோம்..” என்று திட்டியவன் அந்த அறையை விட்டு வெளியேற தன்னுடைய பாதங்களை எடுத்து வைக்க எதிலோ அவன் கால் இடிப்பட்டது. “ஆஆஆ..” என்று காலை உதறினான். அப்பொழுது அங்கு இருந்த கபோர்டு மாதிரி இருந்த ஒரு கதவு சட்டென திறந்தது.
இவனோ அந்தக் கதவை அதிர்ச்சியாகவும் ஆர்வாமாகவும் பார்த்தவன்,
“என்ன ரூமுக்குள்ள இன்னொரு கதவு இருக்கு.. அதுவும் யாருக்கும் தெரியாத மாதிரி மறைச்சி வைச்சிருக்கிற அளவுக்கு இவ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.. ம்ம் சரி அப்படி உள்ள என்ன இருக்குன்னு யோசிக்கிறதுக்கு பதிலா அப்படி உள்ள என்னதான் இந்த மேடம் வச்சிருக்காங்கன்னு போய் பார்ப்போம்..” என்று அந்த அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
இருட்டு அறையாக இருந்தது அந்த ரூம். பின்பு லைட்டை ஆன் செய்து அந்த அறையை பார்வையிட்டவன் விழிகளோ தெறித்து நின்றன.
அவனுடைய கண்களை அவனாலையே நம்ப முடியவில்லை.
கைகள் எல்லாம் உதறல் எடுத்தது. கால்களோ நிற்க பலம் இல்லாமல் தள்ளாடுவதை உணர்ந்தவன் பிடிமானத்திற்காக கதவைப் பற்றிக் கொண்டன அவனுடைய கைகள்.
அந்த அறை முழுவதுமே அவனுடைய புகைப்படங்கள் தான் இருந்தது.
அவன் பத்து வயதிலிருந்து இப்பொழுது இருக்கும் வரையிலான படங்கள் மிக நுணுக்கமாகவும் மிக அழகாகவும் உயிரோட்டமுமாக தன் கைப்பட வரைந்து வைத்திருந்தாள் மீனா.
அந்த ஒவ்வொரு படங்களிலும் அவளுடையக் காதலை உருக்கமாக எழுதிருந்தாள் மீனா.
அதை அனைத்தையும் பார்த்தவனுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. விடிந்தால் லலிதாடன் அவனுக்கு திருமணம் அப்படி இருக்கையில் இப்பொழுதா இவளின் மனம் இவனுக்கு தெரிய வேண்டும்.
விஹான் லலிதாவுடன் ஆன திருமணத்தை ஏற்பானா அல்லது தன்னை இவ்வளவு உருகி உருகி காதலித்திருக்கும் மீனாவைத் தேடி செல்வானா..?