தேவதை 7
தர்ஷினி கோவமாக அமந்திருந்தவள்,, தேவாவை அவ்வப்போது திரும்பிப் பார்த்தப் படி தான் க்ளாசை கவனித்தாள்..
தேவா அவளை திரும்பியும் பார்க்காமல் உயிரில்லா பிணம் போல் தான் அமர்ந்திருந்தான்..
பிரேக் டைம் வந்ததும் தர்ஷினி, ஜெய்யயும், தேவாவையும் எதிர்பார்க்காமல் எழுந்து வெளியே செல்லவும்.. ஜெய்யிக்கு ஆத்திரமாக வந்தது.
டேய் அவ அந்த வசிய பாக்க போறா டா.. உன் பின்னாடி நாய்க்குட்டி மாதிரி சுத்துவா ஆனா இப்ப பாரு., அவன் வந்ததும் உன்னையும் என்னையும் கண்டுக்காம போறா. என தேவாவிடம் சொல்லவும்..
விடுடா.. அது அவ விருப்பம் நாம தலையிடக் கூடாது என்றான்…
ஜெய் சரி டா நீ எதுவும் சொல்ல வேணாம்.. நா போய் சொல்லிக்கிறேன்.,நீ படுற வேதனையை என்னால பாக்க முடியாது, இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்லை என்றவன் கண் இமைக்கும் நேரத்தில் தேவாவின் பேகில் இருந்த டைரியை எடுத்துக் கொண்டு எழுந்து ஓடவும்,,
தேவாவிற்கு அங்கு நடப்பதை உணரவே சில கணங்கள் தேவைப்பட்டது.. நொடியும் தாமதிக்காமல் எழுந்தவன்,, உடனே டேய் மரியாதையா அந்த டைரிய குடுத்திரு., இல்லனா நடக்குறதே வேற.. என கத்தியப்படியே அவனை துரத்தி செல்ல…
போடா நீயும், உன் லவ்வும் இன்னைக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிடுறேன் பாரு என ஜெய் மூச்சி வாங்க ஓடினான்..
தர்ஷினி ரெஸ்ட் ரூம் போகத்தான் உண்மையாகவே எழுந்து சென்றிருந்தாள்.. க்ளாசுக்கு செல்லலாம் என வந்துக் கொண்டிருக்கும் போது தான்,, வசி அவளுக்காகவே காத்திருந்து மீண்டும் வந்து அவளிடம் பேச்சுக் கொடுக்க இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்….
ஜெய் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் மூச்சி வாங்கி நின்று தனது கால் முட்டியை பிடித்து .. எப்பா டேய் என்ன டா இப்டி மூச்சி வாங்குது முதல்ல உடம்ப குறைக்கணும் என நினைத்தவன் ஏய் தர்……. ம் ம் ம் ம் ம்
தேவா தான் அவன் வாயை பொத்தி இழுத்து மறைவிடமாக சென்றிருந்தான்.. சுவரில் சாய்த்து அவன் கழுத்தில் கையை வைத்து அழுத்தியவனுக்கு அவ்வளவு கோவம்..
மற்றொரு கையால் அவனிடமிருந்த தன் டைரியை பிடுங்கியவன், டேய் என் விஷயத்துல தலையிட்ட உன்ன கொள்ள கூட தயங்க மாட்டேன் என வியர்வை நெற்றியில் இருந்து ஒழுக அவனை பல்லைக் கடித்து கொண்டே முறைத்தான், , ஜெய்யிக்கு ஒரு மாதிரியாகிப் போனது.. தேவாவிடம் இது வரை பாக்காத முகம் அது….
சரி டா சைக்கோ நாயே! என் கழுத்துல இருந்து முதல்ல கைய எடு என அவன் கையை பிடித்து தள்ளிவிட்டவன், இருமியப் படி அவனை பார்க்க,, தேவா அந்த டைரியை தான் தடவிப் பார்த்தான்..
தேவா இப்டியே இருக்காத டா உன்ன பாத்தாலே பயமாருக்கு.. எத்தனை வருஷமா டா இப்டி அவ மேல உள்ள காதல மறச்சி வைக்க போற.. இப்ப பாரு அவ அந்த வசிய லவ் பண்ண போறா! எனக்கு இருக்குற பயமும் வேதனையும் உனக்கு இல்லையா? டா என தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு கேட்கவும்…
பரவாயில்ல டா அவ யார வேணுன்னாலும் லவ் பண்ணட்டும் அது அவ விருப்பம்.. அவ சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.. நீ இடையில புகுந்து குட்டைய குழப்பாத.. என் லவ் எல்லாம் இந்த டைரியில முடிஞ்சி போச்சு.. டேய் மச்சான் பாத்தல்ல அவன் கூட எவ்ளோ ஹாப்பியா சிரிச்சி பேசுறா.. அவளுக்கு அவனை தான் டா புடிச்சிருக்கு.. அவள பொறுத்த வரைக்கும் எங்களுக்குள்ள உள்ளது வெறும் பிரெண்ட்ஷிப். அது அப்டியே இருந்துட்டு போகட்டும்….
இங்க பாரு இன்னும் ஒரு தடவ நீ என் பேச்ச கேட்காம இந்தமாதிரி ஏதாவது கிறுக்கு தனம் பண்ணின.. அப்புறம் என்ன உயிரோட பாக்க மாட்ட.. நா செத்துருவேன் என விரல் நீட்டி கண்கள் கலங்க ஜெய்யை மிரட்டிவிட்டு அவ்விடம் விட்டு செல்லப் பார்க்கவும்
ஜெய் தேவா பேசியதில் அதிர்ந்துப் போனவன், சாவுடா எனக்கென்ன. எப்பா சாமி நீயாச்சு உன் லவ்வாச்சி எனக்கு என்ன வந்துச்சி..நா இனிமேல் உங்க விஷயத்துல தலையிட போறது இல்ல.. போங்கடா.. என்ன அப்போ அப்போம் நீ வேதனைப்படுறத தான் என்னால தாங்கிக்க முடியல.. ஆனா இனி எனக்கென்ன வந்துச்சி.. அவ லவ்வுக்கு ஹெல்ப் பண்ணு,, அவ கல்யாணத்துல அப்பளம் சுடு, போட்டோ எடு எந்த எழவும் பண்ணு.. ஆள வுடு சாமி என தேவாவுக்கு முன் அங்கிருந்து சென்றிருந்தான் ஜெய்…
ஜெய் செல்வதையே வெறித்தப் பார்த்தவன்,, தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு, முகம் கழுவிய பிறகு தான் தனது க்ளாசிற்கு சென்றான்..
ஆனால் தர்ஷினி இன்னும் அங்கு வந்திருக்கவில்லை.. ஜெய் மட்டும் முகத்தை தூக்கி வைத்தப் படி அமர்ந்திருந்தான்…
தனது இடத்தில் அமர்ந்திருந்தவன், டைரியை தனது பேகில் பத்திரப்படுத்திக் கொண்டான்…தர்ஷினி வருகிறாளா? என அடிக்கடி வாசலைப் பார்த்தப் படி அமர்ந்திருக்கவும்..
அடுத்த க்ளாஸ் ஆரம்பம் ஆனது,தர்ஷி அப்போது தான் உள்ளே வந்தவள் தேவாவை நிமிர்ந்தும் பார்க்காமல் தனது இடத்தில் அமர்ந்துகொள்ள அவளின் நிராகரிப்பு இங்கே ஒருத்தனுக்கு நெருப்பில் நிற்பது போல் இருந்தது….
கல்லூரி முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்லும் போதும் ஜெய் யாருக்காகவும் காத்திருக்காமல் அவன் பாட்டுக்க செல்ல.. தர்ஷியும் அப்படிதான் எழுந்து சென்றாள். தேவா சட்டென அவளின் கை பிடித்து நிறுத்தினான்…
வண்டு எங்க போற? என் மேல என்னடி கோவம்.. வா நா கொண்டு போய் விடுறேன் என சொல்லவும்…
ஒன்னும் தேவ இல்ல,, எனக்கு பஸ் ஏற தெரியும்.. நா போய்க்கிறேன் என்ன முகத்தில் அடித்தாற் போல் பேசினாள்.. தேவா நொந்து போய் அவளின் பிடித்திருந்த கையை விட்டவன்.. நா என்ன டி பண்ணேன்? உனக்கும் அவனுக்கும் தான சண்டை… இதுல என் மேல என்ன கோவம்
ஆமா கோவம் தான்.. அவன் என்ன திட்டுனப்ப நீ வாய மூடிக்கிட்டு சும்மா தான இருந்த.. எனக்கு எங்கேயாச்சும் சப்போர்ட் பண்ணியா என முகத்தை சுருக்கினாள்..
இங்க பாரு வண்டு அவனும் உனக்கு பிரென்ட் தான நீங்க ரெண்டு பேரும் எப்போதும் போல தான அடிச்சிக்கிட்டீங்க.. நா அதுனால தான் சாதாரணமா விட்டுட்டேன்.. இத போய் பெருசு பண்ணிக்கிட்டு தேவை இல்லாம பேசுற.. சரி வா போவோம் என அவளை மீண்டும் அழைக்க அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்…
சரி தான் வாடி.. என அவள் பின்னால் மாட்டியிருந்த பேகை பிடித்து இழுத்து சென்றான் தேவா… அவன் இழுத்த இழுப்பிற்கு பின்னால் சென்றவள்.. விடு டா எரும நானே வரேன் என்றதும் தேவா தனது பேகயும் அவளிடம் கொடுத்து விட்டு சென்று பைக்கை எடுத்து வந்தான்…
அதில் ஏறி அமர்ந்தவள், சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தாள்.. ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளும் நிலையில் தான் அவன் இல்லை.. நா வரமாட்டேன் தனியா போறேன் என்ற சொல்லில் முற்றிலும் சோர்ந்து போயிருந்தான்.. அந்த வார்த்தையை ஜீரணிக்க முடியாமல் அவளிடம் கேட்டும் விட்டான்…
ஏண்டி வண்டு என்கூட வர மாட்டேன்னு சொல்லிட்டு எப்படி போவ? உனக்கு எந்த பஸ் னு கூட தெரியாது.. என்னடி பண்ணிருப்ப?
ஹான் வாயேன்! நா எதுக்கு டா பஸ்ல போகனும்.. நா கோச்சிக்கிட்டு நேரா உன் பைக் இருக்குற இடத்துக்கு தான் போய் நின்றிருப்பேன் எப்படியும் நீ என்ன சமாதானப் படுத்தி கூப்டு போயிருவேன்னு எனக்கு தெரியுமே! அவ்வளோ மொக்க நீ என சிரிக்க… தேவாவும் தன் நிலையை எண்ணி சிரித்துக் கொண்டான்….
டேய் தேவா நா மதியம் ரெஸ்ட்ரூம் போயிட்டு திரும்ப வந்துட்டு இருந்தேனா அப்ப வசி…. அதான் டா வசீகரன் என்கிட்ட வந்து பேசிகிட்டு இருந்தான்.. என் நம்பர் கேட்டான்னு குடுத்தேன் டா, ஹ்ம்ம் இன்னைக்கி எப்படியும் மெசேஜ் பண்ணுவான் பாரேன்…
அவளின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை சைடு மிர்ரர் வழியாக பார்த்தவன்.. புன்னகைத்து வைத்தான்..
டேய் அவன் செம ரிச்சாம் டா.. காலேஜ்க்கே கார்ல தான் வரான்.. அப்புறம் அவனை சுத்தி மன்மதன் படத்துல ஒரு பாட்டு வருமே! தத்தை தத்தை தத்தைனு அதுல வர மாதிரி எப்போதும் பொண்ணுங்க கூட்டமாவே இருக்கு… அவன் சொன்னான் அவனா இது வரைக்கும் எந்த பொண்ணுகிட்டயும் வான்ட்டெடா போய் பேசுனதோ! நம்பர் கேட்டதோ இல்லயாம்.. என்கிட்ட தான் அவனாவே வந்து பேசி நம்பர் கேக்குறானாம்.. அப்புறம் அவங்க அப்பா பாரின்ல இருக்காராம்.. இவனுக்கு ஒரு தங்கச்சி இருக்காம் இங்க தான் படிக்கிறாலாம்.. என வசியை பத்தி வல வல வென பேசியப்படியே இருக்க.. தேவாவிடம் அமைதி மட்டுமே!
அவன் காதருகில் சென்றவள்,, லாஸ்ட்டா ஒன்னு சொன்னான் டா ஐ லைக் யூனு என்றதும் வண்டியை வேகமாய் போய் நிறுத்த.. நன்றாக அவன் பின் தலையில்,, அவள் மூக்கை இடித்துக் கொண்டு வலியில் முகம் சுணங்கினாள்…
லூசு லூசு.. பைத்தியம் என அவன் முதுகில் அடித்தவள்,, இப்படியா டா பிரேக் போடுவ? அறிவு கேட்டவனே என தன் மூக்கை தேய்த்த படி கீழே இறங்கினாள்…
வீடு வந்துட்டு பாரு.. போ நாளைக்கு பாக்கலாம்.. என்றவன் தன் வண்டியை வேகமாக அக்சலேட்டர் கொடுத்து திருகி அதன் மேல் தன் கோவத்தை காட்டினான்…
சே போடா என தர்ஷி தன் வீட்டுக்குள் புகுந்துக்கொள்ளவும் தான் அங்கிருந்து படு ஸ்பீடாக பைக்கை ஓட்டி தன் வீட்டிற்கு சென்றிருந்தான்..
வீட்டிற்குள் நுழைந்து தன் தாய் கலா விடம் எதுவும் பேசாமல் அறைக்குள் நுழைந்துக் கொண்டவன்.. முதல் வேலையாக டைரியை எடுத்து காப்போர்டில் வைத்து பூட்டிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான்….
ஷவருக்கடியில் உட்காந்தவன் தர்ஷி, தர்ஷி என அவள் பெயரை சொல்லி சொல்லி கதறி அழ ஆரம்பித்து விட்டான்….
நீ எனக்கு இல்லையா டி? என் தேவதை என்கிட்ட வர மாட்டியா டி? வந்துருடி என்னால முடியல.. ப்ளீஸ்.. டி மூச்சு முட்டுது டி, தொண்டைலாம் அடைக்குது.. வந்துரு மா என கத்தி கத்தி வாயில் எச்சில் ஒழுகும் அளவிற்கு அழுது தீர்த்து விட்டான்….
தொடரும்….