அரண் 4
செங்கதிரோன் தனது ஆட்சிதனை நிலைநாட்டிக் கொண்டு பூமியில் எங்கும் சுடரொளியாய் தன்னை வியாபிக்க தொடங்கிடும் அந்த அதிகாலைப் பொழுதில் மும்பை நகரத்தில் பெரிய தொழிலதிபரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பார்ப்பவர் கண்களுக்கு அது கோயில் திருவிழா போல இருந்தது. அந்த பெரும் மண்டபத்தில் நிற்க கூட இடமில்லாமல் அவ்வளவு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சிறு ஊசி போட்டால் கூட கீழே விழாத அளவுக்கு அவ்வளவு சனத்திரள். தெரிந்தவர், தெரியாதவர் என அனைத்து பிரமுகர்களும் அவனது திருமணத்திற்கு வந்திருந்தனர்.
இப்படிப்பட்ட ஒரு ஆண்மகனை திருமணம் முடிக்க முடியவில்லை என்று வயதுக்கு வந்த பெண்கள் அனைவரும் ஏங்கித் தவித்தனர்.
துருவனின் அழகுக்காக சிலர், பணத்திற்காக சில பெண்கள் என கவலையுடன் அப்படி என்னதான் இந்த ரேகாவிடம் கொட்டி கிடக்கிறது துருவனை மயக்கி எடுத்து விட்டாளே என்று அனைத்து வயதிற்கு வந்த பெண்களும் துருவனின் திருமணத்தை எண்ணி வயிறு எரிந்தனர்.
பொதுவாக ரேகாவோடு யாருமே பெரிதாக பேசிக் கொள்வதில்லை. அவளது திமிரான பேச்சும் கர்வமான நடையும் அவளுடன் யாரையும் நெருங்க விடுவதில்லை.
அவளும் யாருடனும் நெருங்கிப் பழக விரும்புவதில்லை. ஏனென்றால் அவளிடம் அதிக அளவில் பணம் கொட்டி கிடக்கிறது. அதனால் எனக்கு யாரும் தேவையில்லை. தனக்கு என்ன வேண்டுமென்றாலும் பணத்தை கொடுத்து அதை சாதித்து விடுவாள்.
அதனால் யாரின் உதவியும் எனக்கு தேவையில்லை என்ற ஒரு எண்ணமே அவளுக்கு பெரிதும் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
அப்படிப்பட்ட ரேகா இதுவரையில் சேலை கட்டி யாரும் பார்த்ததே இல்லை.
ஓரளவு அழகாக இருந்த ரேகா கூட வானத்தில் இருந்து வந்த ரதி போல அவ்வளவு அழகாக சேலையில் தெரிந்தாள். சேலையின் மகத்துவமே அப்படித்தானே சுமாராக இருப்பவர்களை கூட எழில் பொங்கும் அழகிகளாக மாற்றிவிடும்.
அத்துடன் திமிராக திரிபவர்களை கூட மென்மையானவர்களாக காட்டி விடும் அதன் குணமே அப்படித்தான்.
அந்த வகையில் ரேகா அன்று புதுமணப் பெண்ணாக எல்லோர் கண்களுக்கும் ஒளி வீசினாள்.
வைதேகிக்கு ரேகாவை பார்த்தவுடன் கண்கள் ஒரு நிமிடம் ஆச்சரியமாக அவளிலேயே நிலைத்து நின்றது.
நான் பார்த்த ரேகாவா இது என்று கூட அவருக்குத் தோன்றியது.
ஐயருக்கு அருகில் இருந்து அனைத்து பூசை பொருட்களையும் எடுத்துக் கொடுத்துவிட்டு இன்னும் இந்த துருவன் எழும்பவில்லையே முகூர்த்தத்திற்கு கூட நேரமாகின்றது இன்னும் எழாமல் என்ன செய்கிறான் என்று சிந்தித்தபடி அருகில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த தனபாலிடம் சென்று,
“இன்னும் துருவன் கீழ வரேல போய் என்னன்னு பார்த்துட்டு வாங்க..” என்று வைதேகி சிறு பதற்றத்துடன் கூறினார்.
தனபால் பிசினஸ் விடயமாக அருகில் இருந்த தனது நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தவர்.
மிகவும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்ததால் வைதேகியைப் பார்த்து,
“இல்ல வைதேகி நீயே போய் பாத்துட்டு வா எனக்கு கொஞ்சம் முக்கியமான விஷயம் பேச இருக்கு பிறகு இவரை நான் நேர்ல பார்க்க முடியாது இவர் ரொம்ப பிசியான விஐபி நீ போய் பார்த்துட்டு வா..” என்று வைதேகி இடம் பணிவாகக் கூறினார்.
கோபமாக கூறினால் மறுத்து பேசலாம் பணிவாகக் கூறியதால் கணவரிடம் எவ்வாறு மறுப்பது அதுவும் முக்கியமான விடயம் என்று வேற கூறுகின்றாரே என்று வேறு வழியில்லாமல் வைதேகி மாடிப்படிகளில் ஏறி மேலே தனது மகனின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினார்.
“துருவா.. துருவா.. கதவை திறப்பா லேட் ஆகுது இன்னும் அரை மணி நேரத்துல நீ மணவறைக்கு போகணும் இன்னும் தூங்கிக்கிட்டு இருக்க எழுந்திரு பா..” என்று கதவை தட்டினார் வைதேகி.
முதல் மெதுவாகத் தட்டியவர் துருவன் எழாமல் விட சந்தேகத்துடன் மிகவும் வேகமாகவும், சத்தமாகவும் கதவைத் தட்டினார்.
பத்து நிமிடங்களுக்கு மேல் கதவைத் தட்டியும் கதவு திறக்காமல் போக சிறு படபடப்புடன் மெதுவாக சத்தம் போடாமல் கீழே இறங்கி வந்து தனபாலினை தனியாக அழைத்து காதில் ரகசியமாக,
“என்னங்க துருவனோட ரூம் கதவை பல தடவை தட்டியாச்சு ஆனால் துருவன் எழுப்புர மாதிரி இல்ல உள்ள அவன் இருக்கானா இல்லையா என்று கூட தெரியல்ல கொஞ்சம் எழும்பி வந்து பாருங்க..” என்றிட
அருகில் பேசிக்கொண்டு இருந்தவரிடம் சென்று சிரித்து சமாளித்து விட்டு,
“பைவ் மினிட்ஸ் இருங்க வைப் கூப்பிடுறாங்க ஒரு சின்ன வேலை போய் பார்த்துட்டு வரேன்..” என்று அவரிடம் கூறிவிட்டு மேலே சென்று கதவைத் தட்டினார்.
பல தடவைகள் கதவை தட்டியும் கதவு திறந்த பாடி இல்லை.
தனபாலுக்கும் ஒரே யோசனையாக இருந்தது. பல இடங்களில் இருந்து இவ்வளவு பிரமுகர்கள் வந்திருக்கும் இந்த நேரம் பார்த்து கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கின்றானே இன்னும் சிறிது நேரத்தில் ஐயர் வேற மாப்பிள்ளையை மணவறைக்கு கூட்டிட்டு வரச் சொல்லிடுவாரு அப்படி என்னதான் உள்ள செய்து கொண்டிருக்கின்றான் என்று தனபாலுக்கும் சிறு கோபம் எட்டிப் பார்த்தது.
வைதேகியைப் பார்த்து,
“என்ன வைதேகி இது இந்த நேரம் பார்த்து உன் பிள்ளை இப்படி தூங்கிக்கிட்டு இருக்கிறான்..”
“எனக்கும் என்னன்னு புரியலைங்க சில வேலை இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு..” என்று சற்று பதட்டமாகவே கூற,
“என்ன வைதேகி நீ வேற சும்மா இரு ஆட்டுக்குள்ள கொண்டு வந்து மாட்டை புகுத்தாத அவன் சொல்லித்தானே இந்த கல்யாணமே நடக்குது பிறகு என்ன..?” என்று சிடு சிடுத்தார் தனபால்.
“ அது சரிங்க.. முதல் கதவை கொஞ்சம் வேகமாகத் தட்டுங்க..” என்று தனபாலின் கோபம் அறிந்து பேச்சை மாற்றினார் வைதேகி.
தனபால் கதவினை சத்தமாகத் தட்ட அங்கு திருமணத்திற்கு வந்த ஒரு சிலர் அதனை கவனித்தனர்.
அப்படியே ஒவ்வொருத்தரும் மேலே ஏன் கதவை தட்டுகிறீர்கள் என்று விசாரிக்க தொடங்கினர். துருவனின் கதவினை சுற்றி உறவினர், நண்பர்கள் என அனைவரும் குழுமி நிற்க தனபால் வைதேகி ஆகிய இருவராலும் கேள்வி கேட்பவர்களை சமாளிக்க முடியவில்லை.
மணப் பெண்ணின் அறையில் இருந்து வெளியே வந்த ரேகா நடப்பது என்னவென்று புரியாமல்,
‘ஏன் துருவனின் கதவை அனைவரும் சூழ்ந்த நிற்கின்றனர்..’ என்ற சிந்தனையுடன் துருவனின் கதவின் அருகே வந்து வைதேகி பார்த்து,
“என்ன ஆன்ட்டி ஏதும் பிரச்சனையா..?”
“இல்லம்மா துருவன் இன்னும் எழும்பல அதுதான் எழுப்புறத்துக்கு ட்ரை பண்ணிக் கொண்டிருக்கின்றோம். கதவைத் திறக்கிறான் இல்லமா..”
வைதேகியின் பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேகா,
“என்னது இன்னும் துருவன் நித்திரை விட்டு எழும்பலையா என்ன ஆன்ட்டி உங்க மகன் விளையாடிக்கிட்டு இருக்காரா கடைசி நேரம் கல்யாணத்தன்னக்கு இப்படி யாரும் தூங்குவாங்களா..? என்று அனைவரும் முன்பும் ரேகா எரிந்து விழ,
“ரேகா ப்ளீஸ் செட் அப் என் மகனை பற்றி இதுக்கு மேல நீ பேசக்கூடாது..” என்று மூஞ்சில் அடித்தால் போல் கூறினார் வைதேகி.
“இல்ல ஆன்ட்டி இன்னும் துருவன் எழும்பல அதுதான்..” என்று வைதேகியின் கோபம் கண்டு பயந்து பேச்சை இழுத்தாள்.
“எனக்கும் என்னன்னு புரியல கொஞ்சம் பொறு..” என்று வைதேகி கூற,
தனபாலின் அருகில் இருந்தவர்,
“ஒருவேளை மாப்பிள்ளை கல்யாணம் பிடிக்காம கதவை பூட்டிட்டு சூசைட் ஏதும் பண்ணிக்கிட்டாரோ..”
இன்னொருவன்,
“இல்லடா யாரையும் பொண்ணையும் விரும்பி இருப்பாரு அதனால கூட்டிட்டு ஓடி இருப்பாரு..”
“ச்சீ ச்சீ அப்படி எல்லாம் இருக்காது துருவன் அப்படிப்பட்ட ஆள் இல்ல..” என்று ஒவ்வொருத்தரும் வைதேகி, தனபால் காதில் விழும்படி பேசிட,
தனபாலிற்கும் வைதேகிக்கும் ஒரு பக்கம் பயம் இன்னொரு பக்கம் பதற்றம், யோசனை என்று இவர்கள் கூறும் ஒவ்வொரு கதைகளையும் கேட்கக் கேட்க அவர்களுக்கு இதயம் பலமாக துடிக்கத் தொடங்கியது.
இதற்கு மேல் முடியாமல் தனபால் வைதேகியிடம்,
“வைதேகி இதற்கு மேலும் பொறுத்திருக்க முடியாது. கதவை உடைத்து என்ன என்று பார்த்து விடுவோம்..” என்றிட,
வைதேகிக்கு தூக்கி வாரிப் போட்டது.
“என்னங்க இப்படி சொல்றீங்க..” என்றார் அதிர்ச்சியுடன்,
“அப்புறம் என்ன செய்றது வைதேகி கதவை திறந்து பார்த்தே ஆகணும் இவ்வளவு பேரு இவ்வளவு பேசுறாங்க.. இதையெல்லாம் கேட்கிற அளவுக்கு எனக்கு மனசுல சக்தி இல்லை.. இப்படி இவங்க எல்லாம் பேசுற அளவுக்கு உன் பையன் வச்சுட்டான் தானே..
இவங்க பேசுற அளவுக்கு எல்லாம் என் பையன் அப்படி இல்லை என்று இவங்க எல்லாருக்கும் காட்டணும் கதவை உடைச்சா தான் இவர்களுடைய வாய் மூடும். அதுவரைக்கும் ஒருவர் மாதிரி ஒருவர் இப்படித்தான் ஏதாவது ஒன்றை பேசிக் கொண்டிருப்பர்..” என்று பெரும் கோபத்துடன் வார்த்தைகளை கடித்துத் துப்பினார் தனபால்.
“வேற வழி இல்லையா கதவை கட்டாயமா உடைக்கத்தான் வேணுமா..” என்று கவலையுடன் வைதேகி கேட்க,
“உடைத்தால் தான் சரி..” என்று அருகில் இருந்த துருவனின் நண்பர்கள் இரண்டு பேரை அழைத்து பெரிய கடப்பாறையை கொண்டு வரும்படி தனபால் கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள்,
“உண்மையாகவே சொல்றீங்களா அங்கிள்..?” என்று கேட்க,
“ஆமாம்பா எனக்கு வேற வழி தெரியல சீக்கிரம் போய் எடுத்துட்டு வாங்க..” என்று கவலையுடன் கூறினார் தனபால்.
இருவரும் வேகமாக சென்று கடப்பாரையை எடுத்து வர, அதனைப் பார்த்த வைதேகிக்கோ படப் படக் என்று இதயம் துடிக்கும் வேகத்தில் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது.
இருவரும் சேர்ந்து கடப்பாரையை கதவை நோக்கி தூக்கிப்பிடிக்க, தனபாலின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு பயத்தில் கண்களை இருக்க மூடி “கடவுளே..!” என்று முணுமுணுத்தார் வைதேகி.
துருவனுக்கு என்ன நடந்தது..? கதவு பல தடவை தட்டியும் திறக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன..?
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்..