மை டியர் மண்டோதரி…(12)

5
(5)

ஷ்ராவனி சொன்னது போலவே மறு நாள் அவளது தந்தை கல்லூரிக்கு வந்தார். கல்லூரியில் தசகிரீவன் அவளைப் பார்த்து வணக்கம் வைத்திட யார் இது என்றார் கதிர்வேலன் .என்னோட ஸ்டூடன்ட் இவதான் நேத்து என்னை டிராப் பண்ணினான் என்றாள் ஷ்ராவனி .

இவன் ஸ்டுடென்ட்டா கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லை என்ற கதிர்வேலன் அவனைப் பற்றி கல்லூரியில் விசாரித்து அவன் மாணவன் தான் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கல்லூரியை விட்டு சென்றார்.

அவளுக்கு அவமானமாக இருந்தது தன் தந்தை ஏன் இப்படி ஒரு கேவலமான விஷயத்தை செய்கிறாரு கொஞ்சம் கூட பெத்த பொண்ணு மேல நம்பிக்கை இல்லையா என்று நினைத்தவள் அன்று முழுவதும் சோகமாகவே அமர்ந்திருந்தாள் .

அவளால் வகுப்பில் பாடம் எடுக்க கூட முடியவில்லை அதனால் பாடம் கூட எடுக்காமல் அமைதியாகவே இருந்தாள். அவளது முகமாற்றத்தை கவனித்தான் தசகிரிவன்.

என்ன ஆச்சு இந்த மேடம்க்கு ஏன் இப்படி இருக்காங்க என்று யோசித்தவன் அவளிடமே கேட்க நினைத்தான்.

ஹலோ மேடம் என்ற தஷகிரிவனிடம் அவள் பேசாமல் மௌனமாக இருக்க உங்களுடைய பைக் சாவி என்று அவளிடம் பைக்கின் சாவியை நீட்டினான் . தாங்க்ஸ் என்றவள் அதை வாங்கிக் கொண்டாள்.

என்னாச்சு மேடம் இன்னைக்கு முழுக்க ரொம்ப டல்லா இருந்தீங்க என்ன பிரச்சனை என்ற தசகிரிவனிடம் எனக்கு என்ன பிரச்சனை என்றால் உனக்கு என்ன நீ எதுக்காக இந்த காலேஜ் வந்து இருக்க படிக்க தானே வந்து வேலையை மட்டும் பாரு என்றாள் கோபமாக .

படிக்க தான் மேடம் வந்தேன் ஆனால் இப்ப படிப்போடு சேர்த்து உங்களை கல்யாணம் பண்ணிக்கிறது எப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்காக தான் வருகிறேன் என்றான் தசகிரிவன். அவனை முறைத்தவள் உன்கிட்ட திரும்ப திரும்ப சொல்ல முடியாது நீ என்னோட ஸ்டூடன்ட் என்னால உன்னை லவ் பண்ண முடியாது என்றாள் ஷ்ராவனி.

நான் உங்களோட ஸ்டுடெண்ட்டா இருக்கிறது தான் உங்களுக்கு பிரச்சனை  என்றால் நான் வேண்டும் என்றால் இந்த காலேஜ் விட்டு நின்னுறட்டுமா என்றான் தஷகிரிவன் .

முட்டாள்தனமா பேசிட்டு இருக்காதீங்க மிஸ்டர்.தஷகிரிவன் போய் உங்க வேலைய பாருங்க சும்மா என் பின்னாடி சுத்தி உங்க நேரத்தை வீணாக்காதீங்க என்றாள் ஷ்ராவனி .நான் என்ன நேரத்தை வீணாக்குறேன் நீங்க ஏன் இப்படி பேசுறீங்க நேத்து நல்லாதானே பேசினீங்க என்ற தஷியிடம் எல்லாம் உன்னால தான்டா அசிங்கமா இருக்குடா அதான் சொன்னேன் இல்ல டா உன் பைக்ல வர மாட்டேன்னு வற்புறுத்தி பைக்ல கூட்டிட்டு போய் அது எங்க அப்பா பார்த்து அசிங்கமா இருக்கு நீ யாரு என்ன என்று விசாரிக்க காலேஜ் வரைக்கும் வந்துட்டு போறாரு என்றாள் ஷ்ராவனி . உங்க பைக் பஞ்சரானதாலதான என்ற தஷகிரிவனிடம் அது தானா பஞ்சர் ஆக வில்லை நீ தான் பஞ்சர் பண்ணி வச்சிருக்க என்னை எப்படியாவது உன் பைக்ல கூட்டிட்டு போகணும் என்பதற்காக நீ தான் பஞ்சர் பண்ணி வச்சிருக்க ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காத கெட் லாஸ்ட் என்று அவனை திட்டி விட்டு சென்று விட்டாள் ஷ்ராவனி.

என்னங்க ஷ்ராவனி மேடம் ப்ளீஸ் கொஞ்சம் நில்லுங்க நான் சொல்றதை காது கொடுத்து கேளுங்க என்ற தஷகிரிவனிடம் ப்ளீஸ் மிஸ்டர்.தஷகிரிவன்  தயவு செஞ்சு என்னை தொந்தரவு பண்ணாதீங்க நீங்க படிக்க வந்திருக்கீங்க, நான் வேலை பார்க்க வந்து இருக்கேன் .நமக்குள்ள இந்த காதல் எல்லாம் செட் ஆகாது என்றாள் ஷ்ராவனி .

அப்படியா அப்ப என் கண்ண பாத்து என்ன உங்களுக்கு பிடிக்கலைன்னு சொல்லிட்டு போங்க ஷ்ராவனி மேடம் என்றவன் உங்க மனசுல நான் தான் இருக்கேன் நீங்க அதை மறைக்கிறீங்க அதுக்கு உங்க குடும்ப சூழ்நிலை கூட காரணமா இருக்கலாம் ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க தான் என்னோட மண்டோதரி  அது இந்த ஜென்மத்துல மாறாது. யாராலும் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட அவளுக்குத்தான் ஐயோ என்று ஆனது.

என்ன வைஷு கம்முனு இருக்க இன்னைக்கு உனக்கு எங்கேஜ்மென்ட் என்ற காயத்ரியிடம் அது ஒன்னு தான் குறைச்சல் என்று நினைத்தபடி தயாராகிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி .

அவளது மனதில் ஒரே குழப்பமாக இருந்தது நேற்று குகன் தன்னிடம் பேசிய விஷயங்களை மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி .

என்ன சார் ஏதோ பேசணும் வர சொன்னீங்க என்ற வைஷ்ணவி இடம் எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல வைஷ்ணவி. எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்றான் குகநேத்ரன்ன். அவன் சட்டென்று இப்படி கேட்டதும் மங்கை அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவள் மௌனமாக நின்றிருந்தாள். என்ன வைஷ்ணவி உங்களுக்கு என்னை பிடிக்கலையா என்ற குகனிடம்  எனக்கு நாளைக்கு வேற ஒருத்தர் கூட நிச்சயதார்த்தம் நடக்க போகுது சார் என்றாள் வைஷ்ணவி.

வாட் என்று அதிர்ந்தவனிடம் ஆமா எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க நாளைக்கு எனக்கு வேற ஒருத்தருடன் நிச்சயதார்த்தம் இந்த நேரத்தில் வந்து நீங்க இப்படி சொல்றிங்களே சார் என்ற வைஷ்ணவி தப்பா எடுத்துக்காதீங்க என்னால என் அப்பா பேச்சை மீறி உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

என்னதான் அவனிடம் மறுப்பு சொல்லி இருந்தாலும் அவள் மனதில் குகநேத்ரன் மீது ஒரு சிறிய விருப்பம் இருக்க தான் செய்தது . ஆனாலும் தன் தந்தையை பற்றி நினைத்தவள் அந்த நினைப்பை மனதிற்குள் போட்டு புதைத்து விட்டு நிச்சயதார்த்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

அக்கா தான் முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கானா உனக்கு என்னடி பிரச்சனை என்றார்  காயத்ரி. எனக்கு என்ன பிரச்சனை அதெல்லாம் ஒன்றும் இல்லை என்ற ஷ்ராவனி இன்னைக்கும் நான் சித்தி வீட்டுக்கு போகணுமா. அப்பா எதுவும் சொன்னாரா என்று கேட்டாள்.

இல்லடி இன்னைக்கு நிச்சயதார்த்தம் உன் சித்தியும் இங்கே வர போறாளே.  மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு தான் வைஷ்ணவியை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அப்புறம் என்ன என்ற காயத்ரி மறந்தும் புடவை கட்டிடாத டீ நீ பாவாடை தாவணியில் இரு என்றார் .சரி என்று மௌனமாக தமக்கையின் அருகில் அமர்ந்திருந்தாள் ஷ்ராவனி.

என்னடா அண்ணன் ஒரு பக்கம் சோகமா இருக்கான் தம்பி ஒரு பக்கம் சோகமா இருக்க என்ன பிரச்சனை என்றான் விஷ்ணு . ஒன்னும் இல்லை மச்சான் என்ற குகனிடம் இப்போ சொல்ல போறியா இல்லையாடா? என்று அவனை உளுக்கிட வைஷ்ணவி இடம் தன் விருப்பத்தை சொல்லி அவளோ தனக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது என்று கூறியதைப் பற்றி சொன்னான் குகநேத்ரன். அந்த பிள்ளையை ரொம்ப லவ் பண்றியா மச்சான் என்ற விஷ்ணுவிடம் ஆமா டா ரொம்ப ரொம்ப என்றான் குகன். பேசாமல் அந்த பொண்ணை கடத்திடுவோமா என்ற விஷ்ணுவின் தலையில் நங்கென்று கொட்டினான் தசகிரிவன்.

முட்டாப் பயலா டா நீ இவனுக்கு புடிச்சிருந்தால் போதுமா அந்த பொண்ணுக்கு பிடிக்க வேண்டாமா இப்பதான் பொண்ணை தூக்க போறானாம்.  பொறுக்கி உன்னுடைய கேவலமான ஐடியாவால தான் என் ஆளு இப்ப என் மேல காண்டுல சுத்திட்டு இருக்கு . உன்னை யாருடா அன்னைக்கு அவள் பைக்க பஞ்சராக்க சொன்னது நீ பண்ணுன வேண்டாத வேலை அதனால் தான் இப்ப நான் இருந்தாலே முகத்தை திருப்பிட்டு போகிறாள். முகம் கொடுத்து கூட பேச மாட்டேன்கிறாள். முன்னாடியாவது கொஞ்சம் கொஞ்சம் சிரிச்சு பேசிட்டு இருந்தாள். இப்போ சுத்தம் நான் இருந்தேனா அந்த பக்கம் திரும்ப கூட மாட்டேங்குறாள். உன்னால தான் டா பொறுக்கி என்று நண்பனை திட்டிக் கொண்டிருந்தான் தஷகிரிவன்.

டேய் நான் என்ன அந்த பொண்ணு அப்பன்  இப்படி ஒரு ஹிட்லரா இருப்பாருன்னு   தெரிஞ்சா அப்படி பண்ணுனேன். அந்த ஆள் எல்லாம் மனுசனாடா சைக்கோ பொண்ணு யாரு கூட பைக்ல வந்தால் அப்படின்னு பார்க்கிறதுக்காக காலேஜுக்கு வந்துட்டாரு.  பொண்ணு மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்ற விஷ்ணுவிடம் நாளைக்கு உனக்கு ஒரு பொண்ணு பிறந்து அவளை வளர்க்கும் போது தான் அவரோட கஷ்டம் புரியும் சும்மா தேவையில்லாமல் பேசாத என்றான் தசகிரிவன்.

இப்பவே மாமனாருக்கு சப்போட்டா என்ற விஷ்ணுவிடம் ஆமாம் என் மாமனார் பற்றி நீ தப்பா பேசக்கூடாது என்றான்.

அந்த பொண்ணு உன்னை பிடிக்கலைன்னு சொல்லுச்சா என்ற தஷகிரிவனிடம் இல்லன்னா என்னை பிடிச்சிருக்கு பிடிக்கல எதுவுமே சொல்லல எனக்கு வேற ஒருத்தர் கூட நிச்சயதார்த்தம் அப்படின்னு மட்டும் தான் சொல்லுச்சு என்றான் குகநேத்ரன். சரி அந்த பொண்ணு கிட்ட நான் ஒருமுறை பேசி பார்க்கிறேன் . அப்புறமா இதை பத்தி பேசலாம் இப்ப வெறும் நிச்சயதார்த்தம் தானே கல்யாணம் இன்னும் முடியலையே பாத்துக்கலாம் விடு என்றான் தஷகிரிவன். சரிண்ணா என்று கூறிய குகன் சென்று விட்டான்.

என்ன பேபி நான் கிளம்பனும்னு சொல்லிட்டு இருக்கேன் இல்ல என்ற வினித்திடம் அவசியம் அவளை நீ கல்யாணம் பண்ணிக்கணுமா பேபி என்றாள் தனிஷா. கண்டிப்பா பேபி  உனக்கு தான் கல்யாணத்து மேல நம்பிக்கை இல்ல எனக்கு உன்ன விடவும் மனசு இல்ல நம்ம ரெண்டு பேரும் எப்பயும் போல இப்படியே இருக்கணும் அப்படின்னா எனக்கு இன்னொருத்தி கூட கல்யாணம் நடந்தே ஆகணும். என் அப்பா அம்மாவுக்கு கண்டிப்பா ஒரு மருமகள் தேவைப்படுறாளே அதனால அந்த பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். நம்ம எப்பயும் போல சந்தோஷமா இருக்கலாம் அந்த பொண்ண பார்த்தா என்னை எதிர்த்து கேள்வி கேட்கிற ஆள்  மாதிரி தெரிய வில்லை அதனால பிரச்சனை இல்லை என்றான் வினித்.

ஓகே பேபி என்ற தனிஷா அவனது இதழில் முத்தமிட்டு அவனைப் பிரிந்து எழுந்தாள் . அவனும் எழுந்து குளித்துவிட்டு உடைமாற்றி விட்டு கிளம்பி கொண்டிருந்தான். அவனது மொபைல் போன் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க என் அப்பா தான் என்று சொல்லிக் கொண்டே போனை அட்டென்ட் செய்தான் வினித் .

எங்கடா இருக்க என்ற தந்தையிடம் வந்துட்டு இருக்கேன் அப்பா ஒரு பத்து நிமிஷம் என்ற வினித் தனிஷாவின் இதழில் முத்தமிட்டு பாய் என்று கூறி கிளம்பி விட்டான்.

 

… தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!