பரீட்சை – 104
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
மருத்துவர் கேட்ட கேள்விக்கு பதிலாய் ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்த அருண்..
“டாக்டர்.. உங்க கிட்ட ஒரே ஒரு விஷயம் நான் கேட்கிறேன்.. இந்த மருந்தெல்லாம் எடுத்துக்கிட்டா நான் நிச்சயமா ஒரு மாசம் உயிரோட இருப்பேன்னு உங்களால கேரண்ட்டி கொடுக்க முடியுமா?”
அவன் குரலில் உறுதியோடு கேட்க “இல்ல அருண்.. அந்த மருந்து உங்க உடம்பில எவ்வளவு தூரம் எஃபெக்ட்டிவ்வா இருக்கும்னு யாராலயுமே சொல்ல முடியாது.. ஒருவேளை திடீர்னு உங்க பிபி ஷூட்டப் ஆனாலோ இல்ல நீங்க ஏதாவது ஸ்ட்ரெஸ் ஆனாலோ உங்களுக்கு என்ன வேணும்னா நடக்கலாம்..”
அவர் சிறிது தயக்கத்தோடு சொல்ல அருண் “அப்புறம்.. இப்ப நான் சர்ஜரி பண்ணிக்கறத்துக்கும் அதை தள்ளி போடுறதுக்கும் என்ன வித்தியாசம்? ஆக்சுவலா பார்த்தா இப்ப சர்ஜரி பண்ணிக்கிட்டு ஒருவேளை நான் பிழைச்சிட்டேனா என்னால நான் நெனைச்ச படி வாழ முடியும்.. ஆனா ஒருவேளை நான் இந்த சர்ஜரியை தள்ளி போட்டு இந்த இடைப்பட்ட நாட்கள்ல இறந்துட்டேன்னா நான் உயிர் பிழைக்கிறதுக்கான ஒரு சான்சையும் மிஸ் பண்ணிடுவேன் இல்ல டாக்டர்..? எப்படியும் ஒரு மாசத்துல செத்து தான் போக போறேன்.. இந்த சர்ஜரில நான் சாகணும்னு இருந்தா ஒரு மாசம் கழிச்சு நான் சர்ஜரி பண்ணிக்கறப்பவும் செத்து தான் போவேன்.. அதுக்கு நான் இப்பவே இந்த சர்ஜரியை பண்ணிக்கிட்டா நான் கொஞ்சம் சீக்கிரமே நிம்மதியா சாகவோ இல்லை வாழவோ முடியும் இல்ல? நான் பொழப்பேனா இல்லையாங்கற டென்ஷனோட என்னால இன்னும் ஒரு மாசம் தள்ள முடியாது டாக்டர்.. நான் வரேன்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த சர்ஜரியை அவ்வளவு சீக்கிரம் பண்ணிக்கணும்னு நான் நினைக்கிறேன்..”
அவன் அவ்வளவு தீர்மானமாக பேசுவதை கேட்டு அந்த மருத்துவர் “ஓகே மிஸ்டர் அருண்… நான் சர்ஜரிக்கான ஏற்பாடெல்லாம் பண்றேன்.. நீங்க இங்க வந்த உடனே சில டெஸ்ட் எல்லாம் பண்ணிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ நம்ம சர்ஜரியை ஃபிக்ஸ் பண்ணிடலாம்.. ஓகே தென்.. சி யூ ஹியர்..” என்று சொல்லி இணைப்பை துண்டித்தார்..
மருத்துவரிடம் பேசி முடித்தவன் ஏதோ யோசனையில் இருக்க சுற்றி நின்றிருந்த எல்லோரும் அவன் முகத்தையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்..
“ஓகே.. இப்போ என்ன பிரச்சனைனா சின்ன பையனையும் நிலவழகனையும் ஃபாலோ பண்ணிக்கிட்டு நித்திலாவோட அப்பாவோட ஆளுங்க இங்க வந்து இருக்காங்க.. சோ அவங்களுக்கு அனேகமா என்னை பத்தின விஷயம் தெரிஞ்சிருக்கும்.. நான் இன்னும் கொஞ்ச நாள்ல செத்துடுவேன்கிற விஷயம் தெரிஞ்சப்புறம் நிச்சயமா நித்திலா சும்மா இருக்க மாட்டா.. ஒருவேளை நான் இறந்து போயிட்டேன்னா..”
அவன் சாதாரணமாய் சொல்ல சின்ன பையனோ “அண்ணே.. ப்ளீஸ்ண்ணே…” என்று கண்கலங்க கெஞ்சினான்..
“சின்ன பையா.. இதை பத்தி பேசி தாண்டா ஆகணும்.. புரிஞ்சுக்கடா..”
அவனை சமாதானப்படுத்தும் விதமாக சொல்லிவிட்டு “ஒருவேளை எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா.. நித்திலா அப்பவும் நேர்ல வந்து அஸ்வினி கிட்ட எதுவும் சொல்ல மாட்டா.. ஆனா வேற யார் மூலமாவது அஸ்வினியை தூண்டிவிட்டு அவளுக்கு ஏதாவது கெடுதல் பண்ணனும்னு நினைப்பா.. அதனால சின்ன பையா.. அழகா.. நீங்க ரெண்டு பேரும் ராமுக்கு துணையா இங்க இருந்து அஸ்வினிக்கு அப்படி எதுவும் நடக்காம பாத்துக்கோங்க.. உங்க ரெண்டு பேரையும் நான் எதுக்கு இங்க இருக்க சொல்றேன்னா.. நித்திலாவை பத்தி ராமுக்கு ஒண்ணும் தெரியாது.. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் அவளை பத்தி அணு அணுவா தெரியும்.. அதனால நீங்க ரெண்டு பேரும் எனக்கு பதிலா இங்க இருந்தா தான் சரியா வரும்.. நான் அந்த மலையில எடுத்த நித்திலாவோட வீடியோவை உங்களுக்கு அனுப்பி விடுறேன்.. நித்திலாவோ அவ அப்பாவோ ஏதாவது அஸ்வினி கிட்ட வம்பு பண்ற மாதிரி தெரிஞ்சதுன்னா அவளுக்கு உங்க ஃபோன்ல இருந்து அந்த வீடியோவை அனுப்பி போலீசுக்கு அனுப்புவேன்னு மிரட்டி வைங்க.. ஆனா அதுவும் எவ்வளவு நாள் தாங்கும்னு தெரியாது..”
அவன் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.. “நாங்க எல்லாம் இங்க இருக்கணும்னா அப்போ யூஎஸ்க்கு உன்னோட யார் வருவாங்க அருண்?”
நிலவழகன் முகத்தில் கவலையோடு கேட்க “யூஎஸ்க்கு வைஷுவும் விஷ்வாவும் மட்டும் வரட்டும்.. என்ன விஷ்வா… வைஷூ..? உங்களால யூஎஸ்க்கு வர முடியும் இல்ல?”
அருண் வைஷூவை பார்த்து கேட்க அவளோ “சார் என்னை கேட்கவே வேண்டாம் சார்.. வான்னு ஆர்டர் போடுங்க.. நான் வந்துருவேன்.. விஷ்வாவை நீங்க சுத்தமா கேட்கவே வேணாம் சார்.. அவன் ஒரு வெட்டிப்பய.. எப்ப கூப்பிட்டாலும் வருவான்” என்றவளை தீவிரமாக முறைத்தான் விஷ்வா..
“ஓகே தென்.. அவங்களுக்கும் ஒன்னும் பிராப்ளம் இல்லைன்னா மீதி பேர் இங்கே இருந்து நித்திலா அஸ்வினியை நெருங்காம பாத்துக்கோங்க.. இப்போதைக்கு நான் இந்த ஹாஸ்பிடல்ல இல்லங்கறதோ இல்ல டிரீட்மென்ட்க்கு யூஎஸ்க்கு போறேங்கறதோ இந்த ரூம்ல இருக்கிறவங்களை தவிர வெளில யாருக்கும் தெரிய கூடாது.. அப்படி தெரிஞ்சதுன்னா நித்திலா அப்பா அந்த சர்ஜரி நடக்கிறதுக்கு முன்னாடியே என்னை கொலை பண்ண ட்ரை பண்ணுவாரு.. நீங்க எல்லாரும் என்னோட யூஎஸ்க்கு வந்தீங்கன்னா அவருக்கு நிச்சயமா நான் அங்க ட்ரீட்மென்ட்க்கு போறேன்னு தெரிஞ்சுரும்.. அப்படி எதுவும் நடக்க கூடாதுன்னா எனக்கு இந்த ஹாஸ்பிடல்லையே ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்குற மாதிரி ஒரு செட்டப் பண்ணனும்.. நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி வந்து இந்த ஹாஸ்பிடல்ல என்னை பார்த்துக்கிற மாதிரி நடிச்சு நித்திலாவையும் நித்திலா அப்பாவையும் நம்ப வைக்கணும்..”
“வைஷூவும் விஷ்வாவும் உன்னோட வந்தா மட்டும் நித்திலா அப்பாக்கு சந்தேகம் வராதா?” நிலவழகன் கேட்க அருண் நிதானமாய் அவனை பார்த்து “அவங்க ரெண்டு பேரும் என்னோட வர போறாங்கன்னு நான் எப்ப சொன்னேன்? அவங்க தனியா தான் வரப்போறாங்க. அவங்க ஒரு ஃபிளைட்ல வருவாங்க.. நான் வேற ஃபிளைட்ல போவேன்..”
“என்னோட ஒரு நர்ஸ் அதுவும் ரிடையர்ட் நர்ஸ் யாரையாவது அனுப்பி வைக்க முடியுமா டாக்டர்..?” அந்த மருத்துவரை பார்த்து கேட்டான் அருண்..
“அதுல ஒன்னும் ப்ராப்ளம் இருக்காது.. ரீசண்டா அப்படி ஒருத்தங்க எங்க ஹாஸ்பிடல்ல இருந்து ரிட்டயர் ஆகி போயிருக்காங்க.. அவங்களை வர சொன்னா நிச்சயமா வருவாங்க.. அவங்களுக்கு அவங்க ப்ரொஃபஷன் மேல அவ்வளவு காதல்.. அவங்களை நேரே ஏர்போர்ட்டுக்கு வந்துட சொல்றேன்..” டாக்டர் சொல்ல அருண் ஒரு நிம்மதி பெருமூச்சை விடடான்..
“குட்.. அவங்களுக்கு இந்த ட்ரிப்புக்கு ஆகற செலவு அத்தனையும் நான் ஏத்துக்குறேன் டாக்டர்.. நான் போற ஃபிளைட்லயே அவங்களுக்கும் டிக்கெட் எடுத்துடலாம்.. நான் யூஎஸ்க்கு போய் அங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி அந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கற வரைக்கும் அந்த நர்ஸ் என்னை பார்த்துக்கட்டும்.. ரெண்டு நாள் கழிச்சு யூஎஸ்ல நடக்கற ஏதாவது ஒரு ஜர்னலிஸ்ட் மீட்க்கு வைஷூவும் விஷ்வாவும் வர்றா மாதிரி அவ இப்ப வேலை செய்ற ப்ரெஸ்ஸோட எடிட்டர் மூலமாவே ஏற்பாடு பண்ணிடலாம்.. நிலவழகா.. அவருக்கு வேணுங்கிற பணத்தை கொடுத்து எப்படியாவது அதுக்கு ஏற்பாடு பண்ணு..”
அருண் சொன்னதை கேட்டவர்கள் எல்லோரும் வாயடைத்து நின்றார்கள்.. விஷயம் தெரிந்த ஐந்து நிமிடங்களுக்குள் அவன் மூளை எவ்வளவு அதிவேகமாக செயல்பட்டிருக்கிறது என்று எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கி அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தார்கள்..
“இன்னொரு விஷயம்.. நான் இங்க இல்லைன்னு தெரிஞ்சாலோ இல்ல இறந்துட்டேன்னு தெரிஞ்சாலோ நித்திலா அப்பா உங்களை எல்லாம் அட்டாக் பண்றதுக்கும் ட்ரை பண்ணுவாரு.. அது பிரச்சனை தான்… நான் உயிரோட இல்லன்னு தெரிஞ்சா இப்ப என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாருக்குமே அவரால ஆபத்து வரலாம்.. ஆனாலும் இப்போதைக்கு இதை சமாளிச்சு தான் ஆகணும்.. ஒருவேளை நான் உயிரோட வந்துட்டேன்னா அதுக்கப்புறம் நான் பாத்துக்குறேன்.. அப்படி இல்லன்னா நீங்க எல்லாரும் தான் அஸ்வினியை பத்திரமா பாத்துக்கணும்.. எந்த காரணத்தை கொண்டும் நித்திலா அவளை நெருங்காம பார்த்துக்கோங்க.. அஸ்வினிக்கு எல்லா விஷயமும் தெரியும்னாலும் அவ மனசுல அதை இயல்பா எடுத்துக்கறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.. அந்த கொஞ்ச நாள் வரைக்கும் அவளை பாத்துக்க வேண்டியது உங்களோட கடமை.. கூடவே நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க.. நித்திலாவால அஷ்வினிக்கு மட்டும் இல்ல.. உங்களுக்கும் எந்த ஆபத்தும் வந்துடக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்..”
அவன் பேசியதை கேட்டவர்கள் அதற்கு மேல் அவனை எதிர்த்து பேச முடியாமல் வாயை மூடினார்கள்..
ஆனால் ராம் மெல்ல வாயை திறந்தான்.. “அருண்.. நீங்க தேஜூ பத்தி ரொம்ப கவலை படுறீங்கன்னு தோணுது.. அவளுக்காக ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க.. நீங்க உங்க உயிரை காப்பாத்திக்கறதுக்காக இந்த சர்ஜரிக்கு சம்மதிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.. ஆனா அதே சமயம் அவளுக்காக உங்க ஃப்ரெண்ட்ஸ் அத்தனை பேரோட வாழ்க்கையையும் ரிஸ்க்ல போடுறீங்க.. இது வேண்டாம்.. அந்த நித்திலா வந்து அவகிட்ட ஏதாவது சொல்லனும்னாலும் சொல்லிக்கட்டும்.. பாத்துக்கலாம்..”
ராம் சொல்ல அருண் சிரித்தான்.. “என்ன ராம்.. இவ்வளவு கூலா சொல்றீங்க? அந்த நித்திலா வந்து அஸ்வினி மனசை கலைச்சு அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா இத்தனை நாள் நான் செஞ்ச அத்தனையும் வேஸ்ட் ஆயிடும் இல்ல? அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் அவளை கடத்தி கொஞ்சம் கொஞ்சமா அவ பழைய கதையை அவளுக்கு தெரிய வெச்சு இப்போ ஓரளவுக்கு அவ தைரியமா இருக்கா.. ஆனா அவ மனசு முழுசா இதில இருந்து வெளியில வரதுக்கு முன்னாடி நித்திலா அவளை தூண்டிவிட்டு அவ உயிருக்கு ஆபத்து வந்துச்சுன்னா.. அதை என்னால நினைச்சு கூட பாக்க முடியல ராம்.. அப்படியே இந்த சர்ஜில நான் செத்து போனா கூட நான் நிம்மதியா சாக கூட முடியாது.. நிலவழகனுக்கும் சின்ன பையனுக்கும் இது நல்லாவே தெரியும்.. அதனால தான் நான் சொல்றதுக்கு எல்லாம் அவங்க ஒத்துக்கிட்டு இருக்காங்க… இத்தனை நாள் நான் வாழ்ந்த வாழ்க்கையோட அர்த்தமே என் அஸ்வினியோட சந்தோசம் தான்.. இது உங்களுக்கு புரியலையா ராம்..?” அவன் கேட்க அதற்கு மேல் ராமாலும் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை..
அந்த மருத்துவர் பக்கம் திரும்பியவன் “இந்த ஹாஸ்பிடல்ல சிசிடிவி கேமரா இல்லாத ப்ளைன்ட் ஸ்பாட்ஸ் ஏதாவது இருக்கா..? அந்த வழியா யாருக்கும் தெரியாம வெளில போய் நான் ஏர்போர்ட்டுக்கு போகணும்..” புருவம் சுருக்கி கேட்டான்..
“ஸ்கேன் ரூம் பக்கத்துல வெளியில போறதுக்கு ஒரு கேட் இருக்கு.. அங்க சிசிடிவி கேமரா எதுவும் கிடையாது.. பிளஸ் அந்த கேட்டை நாங்க எப்பவும் தொறக்கிறது இல்லை.. அந்த வழியை யூஸ் பண்ணியே கிட்டதட்ட பல வருஷங்கள் ஆகுது.. அந்த கேட்டுக்கு பின்னாடி ஒரு சவுக்கு தோப்பு இருக்கு.. அது பக்கத்துல இருக்குற ரோடு ரொம்ப லோன்லியா இருக்கும்.. அந்த வழி சேஃப் இல்லைன்னு தான் அந்த கேட்டை பர்மனெண்டா மூடி வெச்சிருக்கோம்.. நீங்க அந்த கேட் வழியா வெளில போயிடலாம்.. உங்களுக்கு ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லி அந்த கேட் வரைக்கும் கூட்டிட்டு போகவேண்டியது என்னோட பொறுப்பு..”
அவர் சொல்ல முகத்தில் சிறிது நிம்மதியோடு மெலிதாய் புன்னகைத்தான் அருண்..
“தேங்க்யூ டாக்டர்.. உங்களை ரொம்ப தொந்தரவு பண்றேன்.. ஐ அம் சாரி..”
அவன் சொல்ல “அருண்.. உங்களை மாதிரி ஒரு நல்ல மனுஷனுக்கு ஹெல்ப் பண்ண முடியறது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.. நான் இந்த ஹாஸ்பிடல் டீன்கறதால என்னை தாண்டி எந்த விஷயமும் லீக் ஆகாது.. நீங்க என்னை ஃபுல்லா நம்பலாம்.. உங்க ரூமுக்கு வந்து போறதுக்கு ஒரே ஒரு சிஸ்டருக்கு மட்டும் அனுமதி கொடுக்கிறேன்.. அவங்க எனக்கு நம்பிக்கையான ஆளு.. நிச்சயமா உங்க விஷயத்தை பத்தி வெளியில யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.. அவங்களும் இந்த ஆக்ட்ல ஒரு பார்ட்டா இருக்கட்டும்..”
அவர் சொல்ல அருண் அவர் கை பிடித்து “நான் இந்த உதவியை என்னைக்குமே மறக்க மாட்டேன் டாக்டர்… ரொம்ப தேங்க்ஸ்..” என்றான் குரலில் நெகிழ்ச்சியோடு.. அதன் பிறகு அருணை யு.எஸ்.ஏவுக்கு அனுப்பி வைக்க வேகமாக ஏற்பாடுகள் நடக்க சிகிச்சைக்காக அருணின் திட்டப்படியே அவன் யுஎஸ்ஏவுக்கு பறந்தான்.. இரண்டு நாட்களில் வைஷூவும் விஷ்வாவும் யூஎஸ்ஸூக்கு பயணம் மேற்கொண்டார்கள்..
தொடரும்..