அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 15🔥🔥

5
(11)

பரீட்சை – 15

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

என்னவன்- 

எனக்கு மட்டுமே 

உரியவன்..

எல்லாமாய் 

இருப்பவன்..

என் இதயத்தில் 

வாழ்பவன்..

 

தன் மனத்தில் என்னை 

சுமப்பவன்..

தாரமாய் எனை 

கொண்டவன்..

என் தங்கமான 

கணவன்..

 

உதாரண புருஷன்…

உண்மையானவன்..

 

ஒருத்திக்கு ஒருவனாய்

வாழும்

ஒழுக்கசீலன்..

 

மாய மோகினியே 

வந்து 

மயக்கினாலும் 

மனம் மாறாதவன் ..

மனதின் மகாராணியாய் 

என்னையே…

என்றும் 

மனனம் செய்து 

வைத்திருப்பவன்..

 

##############

 

என் மன்னவன்…!!

 

“உனக்கு உன்னை பத்தி வேணா கவலை இல்லாம இருக்கலாம்.. ஆனா உன் குழந்தைகளை நினைச்சு பார்த்தியா? நீ இல்லாம அவங்க துடிச்சுடமாட்டாங்க.. அவங்களுக்காகவாவது நீ வெளில வரணும் இல்ல..?” ரக்ஷிகா கேட்கவும் ராம் முகத்தில் ஒரு அதிர்வு தெரிந்தது..

 

சற்று குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பித்தான் அவன்.. இங்கே தேஜூவோ காணொளியில் தெரிந்த அவன் முகத்தை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள்..

 

 “ஐயோ ராம்.. பசங்க என்கிட்ட தாங்க இருக்காங்க.. அவங்க தனியா இல்ல.. இந்த அருண் ரொம்ப நம்ம வாழ்க்கையோட விளையாடுறான்ங்க.. நீங்க ஏமாறாதீங்க..” என்று அழுதாள் அவள்..

 

ரக்ஷிகாவோ “சரி சரி.. கொஞ்சம் ஷாக்கை குறைச்சுக்கோ.. உனக்கு நாளைக்கு காலையில் வரைக்கும் டைம் தரேன்.. அதுக்குள்ள என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்னா இந்த வீடியோவை காமிச்சிட்டு ஒன்னை வெளிய எடுத்திடறேன்.. ஆனா நாளைக்கு காலையில நான் திரும்பி வரும்போதும் நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தேன்னா நீ இப்படியே இருக்க வேண்டியதுதான்.. உன் பிள்ளைங்க அம்மாவும் இல்லாம அப்பாவும் இல்லாம அனாதையா கஷ்டப்படுவாங்க..” என்றாள் அவள்..

 

அவள் அவன் பிள்ளைகளை பற்றி சொன்ன வார்த்தைகள் அவன் மனதை ரணமாக்கியது.. அது அவனுக்கு கலக்கத்தையே கொடுத்தது.. ஆனால் தன்னை அடைவதற்காக அவள் இப்படி ஒரு தந்திரம் செய்து தன்னை மாட்டி விட்டிருக்கிறாள் என்று தெரிந்துவிட்டபின்  அவளின் அருவருப்பான இந்த நடவடிக்கை அவள் மீது அவனுக்கு மேலும் வெறுப்பையே ஏற்படுத்தியது..

 

“நீ நாளைக்கு காலைல வந்தாலும் சரி.. இல்ல இன்னும் பத்து நாள் கழிச்சு வந்து கேட்டாலும் சரி.. என் பதில் இப்படியே தான் இருக்கும்.. நீ செஞ்சிருக்கற வேலையை நெனைக்கும்போதே உன் மேல அருவருப்பும் வெறுப்பும் தான் வருது.. அப்புறம் நான் எப்படிடீ உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியும்?” என்றான் ராம்..

 

“அவசரப்படாத ராம்.. முடியாதுங்கற பதிலை கூட நல்லா யோசிச்சு சொல்லு.. நைட்டு ஃபுல்லா இருக்கு.. தூங்காம யோசி.. நாளைக்கு காலையில நான் வந்து உன்னை பார்க்கிறேன்.. எதுக்கு பதில் சொல்றதுக்கு அவசரப்படற?” என்று சொல்லி சிறை கதவின் கம்பியை பிடித்திருந்த அவன் கை விரல்களை தன் விரல்களால் வருடியபடி அவள் சொல்ல சட்டென தன் கையை இழுத்துக் கொண்டான்  ராம்..

 

பிறகு அவள் முகத்தை கூர்ந்து பார்த்து தன் கன்னத்தை தடவிய ராம் “எனக்கென்னவோ தேஜூவை கடத்தினதுல கூட உன்னோட பங்கு எதும் இருக்குமோன்னு டவுட்டா இருக்குடி.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக இவ்வளவு தூரம் நான் ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன்னு நாடகம் நடத்தி என் மேல பழி போடுற அளவுக்கு போன நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக தேஜூவை கடத்தறதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்க கூடாது? “

 

 புருவத்தை சுருக்கி கேட்டவன் சிறை கதவின் கம்பியை இறுக்க பிடித்துக் கொண்டு “ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன்.. அப்படி உனக்கும் தேஜூ கடத்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குன்னு தெரிஞ்சது அதோட நீ செத்தடி”

 

 அவள் கழுத்தருகில் தன் கையை கொண்டு போனவன் அவள் மிரண்டு கொஞ்சம் பின்னே செல்லவும் கையால் சிறை கதவின் கம்பியை ஓங்கி குத்தினான்..

 

அவன் கண்கள் பிரதிபலித்த கோபத்தின் சிவப்பை கண்டவள் மிகவும் பயந்து போனாள்.. 

 

“இங்க பாரு.. உன்  தேஜூ அவ இஷ்டத்துக்கு எவனோடயோ ஓடி போனா அவளை நான் கடத்தினேன்னு  நீ என் மேல பழிப்போட பாக்காத… அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. என்னோட நோக்கம் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணுங்கறது மட்டும் தான்.. நான் உன்னை மனசார விரும்புறேன்.. என் காதல் நிறைவேறணுங்கறதுக்காக தான் நான் இதை செஞ்சேன்.. அதை புரிஞ்சுகிட்டு நல்லா யோசிச்சு பார்த்து நாளைக்கு நான் வர்றப்ப சொல்லு உன் பதிலை.. இப்ப நான் போறேன்” என்று சொன்னவள் அங்கிருந்து வெளியே சென்று விட்டாள்..

 

அதோடு அந்த காணொளி முடிவடைந்துவிட்டது…

 

அருணை கோபமாக பார்த்தவள் “எதுக்கு இதெல்லாம் பண்ற நீ? என்னதான் உனக்கு பிரச்சனை? நான் உன்னை விரும்பலைன்னு உனக்கு தெரியுதில்ல..? அப்புறம் என்னை ஏன் இங்க கொண்டு வந்து டார்ச்சர் பண்ற.. ? ” பொறுமை இழந்தவளாய் கேட்டாள்..

 

“அஷ்ஷூ கண்ணு… நீ என்னை நிச்சயமா விரும்புற.. உன் மனசோட அடி ஆழத்துல நான் இருக்கேன்.. அது எனக்கு நல்லா தெரியும்.. ஆனா இப்ப பிரச்சனை என்னன்னா நீ அந்த ராமையும் விரும்புற.. நீ அவன் மேல வச்சிருக்கிற காதலும் உண்மைதான்.. அதை நான் மறுக்கல.. ஆனா நீ அவன் மேல வச்சிருக்கற காதல் பெருசா.. இல்ல என் மேல வச்சிருக்கற காதல் பெருசான்னு என்னை யாராவது கேட்டாங்கன்னா நீ என் மேல வச்சிருக்கற காதல் தான் பெருசுன்னு எனக்கு 150 சதவீதம் தெரியும்னு நான் சொல்லுவேன்.. இப்போதைக்கு உனக்கு அது தெரியல.. அதுக்காகல்லாம் உன்னை அப்படியே விட்டுட முடியாது.. உனக்கு அதை தெரிய வெச்சு நீ என்னைதான் அதிகமா விரும்புறேன்னு நான் ப்ரூவ் பண்ணுவேன்..அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை எதுக்கு காமிச்சேன்னு பாக்குறியா? இந்த விளையாட்டை நான் ஏற்பாடு பண்ணதுக்கு காரணமே நீ நம்புற இல்ல.. அந்த ராம் உனக்காக உயிரையே கொடுப்பான்.. எவ்வளவு நாளானாலும் உன்னை தான் நினைச்சுகிட்டு இருப்பான்.. இன்னொரு பொண்ணை மனசால கூட நினைக்க மாட்டான்னு எல்லாம்… ஆனா அவன் அப்படி எல்லாம் கிடையாதுன்னு ப்ரூவ் பண்றதுக்காக தான் இந்த விளையாட்டு..” 

 

 அவன் என்ன புதிர் போடுகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் தேஜு..

 

“என்ன உளர்ற நீ? அவர் காதலிக்கறத்துக்கும் நீ இப்ப அவர் மேல போட்ட பழிக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள் தேஜு..

 

“என்ன சம்பந்தம்ன்னா இப்ப நீ பார்த்த வீடியோ தான் சம்பந்தம்.. இப்ப வந்து ரக்ஷிகா சொல்லிட்டு போய் இருக்கா இல்ல.. அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் டெம்பரரி புருஷன் ராமை வெளியில் கொண்டு வந்துடுவேன்னு.. இந்த மாதிரி ஒரு நெருக்கடி வந்தா கூட உன்னை தவிர வேற எந்த பொண்ணையும் நான் மனசால நினைக்க மாட்டேன்.. ஆனா அந்த ராம் அவன் குழந்தைகளுக்காக நிச்சயமா நாளைக்கு ரக்‌ஷிகா கிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவான்னு எனக்கு தெரியும்.. உன் மேல அவனுக்கு இருக்குற காதலை விட உன் குழந்தைகள் மேல அவன் வச்சிருக்கற பாசம் அவனை அந்த தப்பை பண்ண வைக்கும்.. அப்போ உன்னோட ராம் நிஜமாகவே ராமன் இல்லைன்னு உனக்கு புரியும்.. இன்னும் என்ன எல்லாம் ராமலீலா பண்ணுவான்னு அதுக்கப்புறம் புரியும்..” அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு வந்து அவள் கண்ணில் உற்றுப் பார்த்து சொன்னான்..

 

ஆனால் அவள் பார்வையில் இருந்த நம்பிக்கையோ சிறிது கூட குறையாமல் “நீ எத்தனை விளையாட்டு வேணா இந்த மாதிரி விளையாடு.. ஆனா உன்னோட எந்த ஒரு அழுத்தத்துக்கும் என் ராமோட மனசை மாத்தற சக்தி கிடையாது.. அவர் என்னை தவிர எந்த பொண்ணையும் மனசால கூட நினைக்க மாட்டார்.. நான் இதை உறுதியா நம்புறேன்..” என்றாள் அவள்..

 

“ம்ம் ம்ம்.. இன்ட்ரஸ்டிங்.. சோ.. மறுபடியும் நம்ம ஒரு பெட் வெச்சிக்கலாமா? ஒரு வேளை நாளைக்கு ராம் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்காம ஜெயிலிலேயே இருக்கேன்னு சொன்னா  நான் நாளைக்கு மதியத்துக்குள்ள அவனை ஜெயில்லருந்து வெளியில் எடுத்துடறேன் எந்த கண்டிஷனும் இல்லாம.. ஆனா ஒரு வேளை ராம் நாளைக்கு ரக்க்ஷிகாவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டான்னா.. ராம் வெளியில் வந்தப்பறம் அவங்க கல்யாணம் பண்ணிக்கறாங்களோ இல்லையோ.. அது வேற விஷயம்.. ஒரு வேளை அவன் ஒத்துக்கிட்டான்னா அப்பவும் அவனை ஜெயில்ல இருந்து நான் வெளில கொண்டு வரேன்.. ஆனா அடுத்த நாள் அவன் கண்ணு முன்னாடி அவன் கட்டின தாலியை எடுத்துட்டு நான் உன் கழுத்தில தாலி கட்டுவேன்.. இந்த சேலஞ்சுக்கு நீ ஒத்துக்கிறியா?” என்று கேட்டான் அருண்..

 

அவனை துச்சமாக பார்த்த தேஜு “நீ என்ன வேணா பண்ணிக்கோ.. என் ராம் மேல எனக்கு இருக்கற நம்பிக்கையை ஒரு துளி கூட உன்னால உடைக்க முடியாது.. அவர் இந்த கல்யாணத்துக்கு நிச்சயமா ஒத்துக்க மாட்டார்.. அவருக்கும் ரக்ஷிகாவோட கல்யாணம் நடக்காது.. உனக்கும் என்னோட கல்யாணம் நடக்காது..” 

 

 அவள் சொன்னதை கேட்டு இடுப்பில் கையை வைத்து புருவத்தை உயர்த்தி ” ம்ம்ம்ம்.. குட் கான்ஃபிடன்ஸ்.. பார்க்கலாம்.. நாளைக்கு காலைல தெரிஞ்சுடும் இல்ல?  ராம் எப்படின்னு?” அலட்சியமாக சொன்னான் அவன்..

 

“நிச்சயமா என் ராம்தான் ஜெயிப்பாரு” என்று சொன்னவள் நம்பிக்கையோடு சிரித்துவிட்டு “ஆனா எனக்கு தான் ஒண்ணு புரியல.. நான் உன்னை லவ் பண்ணேன் லவ் பண்ணேன்னு திரும்ப திரும்ப சொல்ற.. நான் எப்படிடா உன்னை லவ் பண்ண முடியும்? எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா என் ராமை தவிர என் மனசுல வேற யாரும் வந்தது கூட கிடையாது.. ராம் மேல நான் வெச்சிருக்கிற காதலை விட உன்மேல நான் அதிகமா காதல் வெச்சிருக்கேன்னு எவ்வளவு கான்ஃபிடென்ட்டா சொல்ற? அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.. ஒவ்வொரு வாட்டியும் என்கிட்ட சவால் விட்டு நீ தோத்துக்கிட்டே இருக்க.. உண்மையே இல்லாத ஒரு விஷயத்த ப்ரூவ் பண்ண ஏன் இப்படி துடிக்கிற?” புரியாமல் தான் கேட்டாள் தேஜூ…

 

“அஷ்ஷூம்மா.. அப்படின்னா நீ என்னை இன்னும் நம்பலையா? சரி.. ஒரு சின்ன விஷயம் சொல்லி உனக்கு ப்ரூவ் பண்றேன்.. உன் கையில ஒரு டாட்டூ இருக்குதா ?”என்று கேட்டான் அவன்..

 

“ஆமா இருக்கு” என்றாள் அவள் சாதாரணமாக..

 

“அந்த டாட்டூல என்ன எழுதி இருக்கு?” என்று அவன் கேட்கவும் அந்த டாட்டூ வை அவனிடம் காட்டினாள்.. “இதுதான் எழுதியிருக்கு அதுல” என்றாள்..

 

அந்த டாட்டூவில் ஏ என்று எழுதி ❤️ இருதய வடிவம் வரையப்பட்டு அதன் பிறகு ஏ கே என்று எழுதியிருந்தது..

 

“இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?” என்று அவன் கேட்க ” ஏ’ ங்கறது எங்க அம்மாவோட பேரு அகிலா அதோட ஃபர்ஸ்ட் லெட்டர்.. ‘ஏ கே’ ங்கறது எங்க அப்பாவோட பேரு அழகப்பன் கருணாகரன்.. அதோட ஃபர்ஸ்ட் லெட்டர்ஸ்.. அவங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்.. சோ நடுவுல ஹார்ட் சிம்பல் போட்டு இருக்கேன்..” என்று அவள் கூற அவன் சத்தமாக சிரித்தான்..

 

“அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கன்னு சொல்லி உன் கைல நீ ஏன் அஷ்ஷும்மா டாட்டூ குத்தி இருக்கே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டவனை தீயாய் முறைத்தாள்.. அவள்..

 

“அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறதை பார்த்து பார்த்து வளர்ந்ததினால தான் என் ராமை நான் இவ்வளவு உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்.. உண்மையான காதலுக்கு அர்த்தம் அதனாலதான் எனக்கு புரியுது..” என்று விளக்கம் கூறினாள் அவள்..

 

“உன் கையில டாட்டூல உங்க அம்மா பேரு வெறும் அகிலா அப்படின்னு மட்டும் எழுதி இருக்கே.. ஆனா உங்க அப்பா பேருல மட்டும் உங்க தாத்தாவோட பேரு வரைக்கும் எழுதி இருக்கே.. யாராவது அவங்க தாத்தா பேரை கைல டாட்டூ குத்தி நீ பார்த்து இருக்கியா? முதல்ல உங்க தாத்தாவை நீ பார்த்து இருக்கியா?” என்று கேட்டான்..

 

அவள் பிறக்கும் முன்பே அவளுடைய தாத்தா இறந்து விட்டார்.. அவன் கேட்ட கேள்வியில் நியாயம் இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல தெரியவில்லை அவளுக்கு..

 

“இப்ப நீ என்ன சொல்ல வர்ற? இது என் கையில குத்திருக்கற டாட்டூ.. அதுல நான் எங்க அம்மா பேரு எழுதுறேன்.. அப்பா பேரு எழுதுறேன்.. தாத்தா பேரு எழுதறேன்.. இல்ல எவன் பேரையோ எழுதறேன்.. உனக்கு என்ன வந்தது?” 

 

 அவள் முகத்தை தன் கைவிரலால் நிமிர்த்தியவன் அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு வந்து அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்து “ஏன்னா அஷ்ஷூம்மா.. அந்த டேட்டூல இருக்கிறது நீயும் நானும்.. நீ நினைச்சிட்டு இருக்கற மாதிரி உங்க அப்பாவும் அம்மாவும் இல்லை..” என்று அவன் சொல்லவும் புரியாமல் விழித்தாள்.. அவள்..

 

அவன் கையை கோபமாக தட்டி விட்டவள் “என்ன திருப்பி திருப்பி உளறிட்டு இருக்க?” என்று கேட்டாள்..

 

“நான் உளறல.. உண்மையை தான் சொல்றேன்.. ஆமா.. இது உன்னோட அம்மா அப்பாவோட பேர்னு உனக்கு சொன்னது யாரு? நீ உங்க அம்மா அப்பாவோட பேரை இந்த மாதிரி டேட்டூ வரைஞ்சியா?” என்று அவன் கேட்க.. “ஆமா.. நான் தான் டாட்டூ வரைஞ்சுகிட்டேன்” என்றாள் அவள்..

 

“எங்க வரைஞ்சுகிட்டன்னு எனக்கு நீ சொல்ல முடியுமா?” என்று அவன் கேட்க அவள் அப்படியே விழித்துக் கொண்டு நின்றாள் பதில் இல்லாமல்.. 

 

வெகு நாளாக அவளுக்கு அந்த டாட்டூவை தான் எங்கு போட்டோம் என்று நினைவில்லாமல் இருந்ததும் அவள் அப்பா வந்து அவளிடம் அவளுடைய சித்தப்பா மகள் கல்யாணத்தில் அந்த டாட்டூவை போட்டது நினைவில்லையா என்றும் “இந்த சின்ன வயசிலேயே ஆனாலும் உனக்கு இவ்வளவு மறதி கூடாது தேஜூம்மா..” என்று சாதாரணமாக கிண்டல் செய்ததும் அவளுக்கு நினைவு வந்தது..

 

அவன் பதில் சொன்னான்.. “ஆனா இந்த  டாட்டூவை நீ எங்க போட்டுகிட்டேன்னு நான் உனக்கு காட்ட முடியும்.. கூட்டிட்டு போகவா? என்னோட வரியா?” என்று கேட்டான் அவன்..

 

“என்ன சொல்ற?” என்று அவள் கேட்க அப்போது அவன் கையை காட்டினான்.. அவன் கையில் “ஏகே❤️ஏ” என்று டாட்டூ வரைந்து இருந்தது.. அதை பார்த்து திடுக்கிட்டவள் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்க்க “‘ஏகே’ ன்னா அருண்குமார்.. ‘ஏ’ ன்னா அஸ்வினி.. இப்ப புரியுதா உனக்கு?” என்று கேட்டான் அவன்..

 

தொடரும்..

 

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் (கமெண்ட்ஸ்) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!