அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 16🔥🔥

5
(12)

பரீட்சை – 16

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

நெருப்பின் மேல் 

நிற்கிறேன்…

நீ என்ன சொல்லப் 

போகிறாய் என்று 

நெஞ்சம் அறிந்தாலும்..

 

நிழலாய் தொடரும் 

இந்த அரக்கனுக்கு 

நிதர்சனத்தை புரிய 

வைக்க 

நீ சொல்லும் 

நிஜ வார்த்தைக்காய்..

 

உயிர் பாவை 

இவள்

படப்படப்பாய் 

விழி விரித்து 

உன் வாடிய 

முகம்  

பார்த்து 

காத்திருக்கிறேன்…

 

என்ன பதில் 

சொல்வாயோ..? 

என் உறுதியை 

இன்னும் 

வளர்ப்பாயோ? 

உன் ஒரு 

சொல்லில்..

 

#############

 

ஒரு வார்த்தை சொல்லிவிடு…!!

 

அருண் கையில் “ஏகே❤️ஏ” என்று டாட்டூ வரைந்து இருந்தது.. அதை பார்த்து திடுக்கிட்டவள் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்க்க “‘ஏகே’ ன்னா அருண்குமார்.. ‘ஏ’ ன்னா அஸ்வினி.. இப்ப புரியுதா உனக்கு?” என்று கேட்டான் அவன்…

 

அந்த டாட்டூவை அவன் கையில் பார்த்தவளால் அதை நம்பமுடியவில்லை.. அதை பார்த்த அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.. நாளுக்கு நாள் அவள் வாழ்க்கையே அவளுக்கு புரியாத புதிராய் போய்க் கொண்டிருந்தது.. 

 

“அது எப்படி அவளுக்கே தெரியாமல் அவனுடைய பெயரை அவள் கையில் பச்சை குத்தி இருக்க முடியும்?” என்று யோசித்தாள்..

 

 சட்டென ஏதோ தோன்ற  சுதாரித்தவள் “இது என்னை நம்ப வெக்கறதுக்காக இப்ப நீ போட்டுக்கிட்ட டாட்டூவா இருக்கும்.. ஆமா.. எங்க அம்மா அப்பா பேரை டாட்டூவா போட்டுக்கிட்டது எனக்கு ஞாபகம் இருக்கான்னு கேட்டியே.. அதை நான் மறந்துபோயிட்டேன்னு ஏற்கனவே எங்கப்பா சொல்லியிருக்கார்.. நீ சொல்றபடி அவர் பொய் சொல்றாரு.. உன்னோட தான் நான் இந்த டாட்டூவை போட்டுக்கிட்டேன்னா அது எனக்கு ஞாபகம் இருக்கணுமில்ல.. ஆனா அப்படி எதுவும் செஞ்சதா ஞாபகம் இல்லையே.. அப்ப உன் லாஜிக் படியே பார்த்தாலும் எங்கப்பா பொய் சொன்னாருன்னு நீ சொன்னா நீயும் பொய் சொல்றன்னுதானே அர்த்தம்? இதைப்பாரு.. சும்மா இந்த இனிஷியலை வெச்சு பேர் மாத்தி சொல்லி விளையாடற விளையாட்டெல்லாம் என்கிட்ட வேணாம்.. நீ வேற ஏதாவது டிஃபரன்டா ட்ரை பண்ணு.. ஆல் த பெஸ்ட்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்..

 

அவள் செல்வதையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவன் ” ம்ம்ம்ம்.. எப்படியும் உனக்கு புரிய வெக்காம விடமாட்டேன் அஷ்ஷூ டியர்.. உன்னோட இந்த ஒரிஜினல் புருஷன் உன் மேல வச்சிருக்கற காதலை..” என்றான் தன் கைபேசியை முறைத்தபடி..

 

மறுநாள் காலையில் கண் விழித்த தேஜூ தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளின் நெற்றியில் முத்தமிட்டவள் தன்னை அணைத்திருந்த இருவரது கைகளையும் தன்னிடமிருந்து விலக்கி குளியலறை சென்று காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு வந்தவள் பிள்ளைகளை எழுப்பினாள்..

 

“பூஜா.. அஷ்வின்.. எழுந்திருங்க.. ஸ்கூலுக்கு கெளம்பணும் இல்ல.. ” என்றவளுக்கோ இரவு ‌ முழுவதும் ராம் நினைவாகவே இருந்தது..  ராம் சிறையில் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ என்று..

 

ஒரு வழியாக இரு பிள்ளைகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களை சமாளித்து பள்ளிக்கு செல்ல கிளப்பியவள் அவர்களுக்கு காலை சிற்றுண்டி கொடுக்க சமையலறைக்கு அழைத்துக்கொண்டு செல்லவும் சமையலறையிலிருந்து இரண்டு தட்டுகள் நிறைய பாஸ்தா செய்து எடுத்துக்கொண்டு ஏப்ரன், குல்லாய் அணிந்துக்கொண்டு செஃப் போல வெளியே வந்தன் அருண்..

 

“ஹாப்பி மார்னிங்.. செல்லக்குட்டீஸ்.. உங்களுக்கு பிடிச்ச பாஸ்தா.. கம் ஆன்.. சீக்கிரம் காலி பண்ணிட்டு ஸ்கூலுக்கு போலாம்..” என்று தட்டுக்களை மேஜை மேல் கொண்டு வந்து வைத்தான்..

 

இரு பிள்ளைகளின் கன்னத்திலும் முத்தமிட்டவன் ஸ்பூனில் சிறிது பாஸ்தா எடுத்து குழந்தைகள் இருவருக்கும் ஊட்டியும் விட்டான்..

 

“ம்ம் ம்ம் ம்ம்.. யம்..மீ… அங்கிள் சூப்பரா இருக்கு பாஸ்தா.. எங்க டாடியும் இதே மாதிரி தான் செஞ்சு குடுப்பாங்க.. யூ ஆர் ஸோ ஸ்வீட் அங்கிள்” என்றான் அஷ்வின்..

 

அவன் ராம் பிள்ளைகளை எப்படி எல்லாம் பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வானோ அதே போல ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அவர்கள் விருப்பமறிந்து செய்வதை தேஜூவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.. ஆனால் இப்படி செய்வதால் அவன் தன் ராமினுடைய இடத்திற்கு வந்துவிடமுடியுமா? தனக்கும் பிள்ளைகளுக்கும் ராம் உயிர் நாடியாய் இருப்பவன்.. என்ன செய்தும் அவன் கலந்திருக்கும் உயிரிலும் உணர்விலும் ஒரு மூலையில் கூட அருண் இடம் பெற முடியாது.. இவ்வாறு எண்ணிக்கொண்டே எங்கேயோ நினைவுகளில் மூழ்கி இருந்தவளை அருணின் அழைப்பு பூமிக்கு கொண்டு வந்தது.. 

 

இரண்டு கைகளில் பிள்ளைகளுடைய இரண்டு  புத்தகப் பைகளையும் மதிய உணவு பைகளையும் தூக்கிய படி நின்ற அருண் ” அஷ்ஷூ.. பிள்ளைகளை அழைச்சிட்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வர்றேன்” என்றான்..

 

“ஏன்.. அவங்களோட அம்மா நான் இன்னும் உயிரோட தானே இருக்கேன்..? நானே ஸ்கூல்ல அவங்களை விட்டுட்டு வர்றேன்” என்றாள்.. அவனை எரிப்பது போல் முறைத்துக் கொண்டே..

 

ஒரு புருவத்தை தூக்கி இதழ் ஓரத்தில் ஏளனமாய் ஒரு புன்னகை சிந்தியவன் “நானும் அவங்களுக்கு அப்பா மாதிரி தான் அஷ்ஷூ.. அதனால நானே அவங்களை கொண்டு விடுறேன்..” அவள் பால் ஒரு அர்த்தமுள்ள பார்வை வீசியவனை ஏறிட்டு பார்த்தவள் “அப்பா மாதிரி இருக்கிறவங்க எல்லாம் அப்பாவாகிட முடியாது.. நானும் வரேன்.. ரெண்டு பேரும் கொண்டு விடலாம்..” என்று சொன்னாள்..

 

அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு வந்து அவள் கண்ணை உற்றுப் பார்த்தவன்.. “அதனால என்ன அஷ்ஷூ..? இன்னிக்கி அப்பா மாதிரி இருக்கிற நானு நாளைக்கு அப்பாவாவே ஆயிடுவேன்.. எப்படியும் நாளைக்கு நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்க போறோம்ன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல கன்ஃபார்ம் ஆயிடும்.. ” என்று அவன் சொல்ல இந்த முறை ஏளனமாய் இதழோரம் புன்னகை சிந்தினாள் அவள்..

 

“இப்படியே நீ கனவு கண்டுக்கிட்டு இரு.. அருண்.. உன்னோட கனவு ஒண்ணு ஒண்ணையும் சுக்கு நூறா உடைப்பாரு என்னோட ராம்..” என்று சொன்னவள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காரை நோக்கி சென்றாள்..

 

“ம்ம்ம்.. உடைக்கட்டும் பார்க்கலாம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னவன் அவளைத் தொடர்ந்து காரை நோக்கி போனான்..

 

############

 

மாப்பிள்ளையை ஒரு பெண் சம்பந்தமான வழக்கில் கைது செய்த செய்தி அறிந்து மனம் கொந்தளித்து கிளம்பிய தன் கணவன் அழகப்பன் போன வேகத்திலேயே முகத்தை தொங்க போட்டுக் கொண்டு திரும்பியதும் இரண்டு நாட்களாய் அதைப்பற்றி எதுவுமே பேசாமல் அமைதியாக  இருந்ததையும் பார்த்த அகிலாவுக்கு அவர் நடவடிக்கை புதிராக இருந்தது.. 

 

என்ன நடந்தாலும் தன்னிடம் வந்து மனம் விட்டு சொல்பவர் எதையோ நினைத்து உள்ளுக்குள் மருகி கொண்டே இருந்தார்.. தான் பலமுறை கேட்டும் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருப்பது அவளுக்கு ஒரு விதத்தில் எரிச்சலையும் தந்தது..

 

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “என்னங்க… என்ன நடந்துச்சு? எதுக்கு இப்படி உம்முன்னு இருக்கீங்க? மாப்பிள்ளை இப்படி ஒரு தப்பு பண்ணிட்டாருன்னு பேப்பர்ல வந்ததை பார்த்து அவங்க அம்மா அப்பா கிட்ட போய்  நியாயம் கேட்டுட்டு வரேன்.. அப்படியே தேஜூவையும் பேரப்புள்ளைங்களையும் கையோட கூட்டிட்டு வரேன்னு போனீங்க.. எனக்கு ஏனோ மாப்பிள்ளை இந்த தப்பை பண்ணி இருக்க மாட்டார்ன்னு தோணுச்சு.. வேற யாரோ எதுவும் பழி போட்டு இருப்பாங்கன்னு தோணுச்சு.. நான் அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காம அவங்க கிட்ட போய் சண்டை போட்டுட்டு வரேன்னு போனீங்க.. திரும்பி வந்ததுல இருந்து அங்க என்ன நடந்துச்சுன்னு ஒண்ணுமே சொல்லாம அமைதியாவே இருக்கீங்க.. எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு.. இப்ப அங்க என்ன நடந்ததுன்னு சொல்ல போறீங்களா.. இல்லையா?” பொறுமை இழந்து கேட்டார் அகிலா..

 

அவர் மீண்டும் அமைதியாக இருக்கவும் “இப்ப நீங்க சொல்லல.. நான் சென்னைக்கு கிளம்பி போய் தேஜூகிட்டயே என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு வருவேன்..” என்று சொன்னாள் அவள்..

 

“நீ சென்னைக்கு போனாலும் அவங்க வீட்ல தேஜூ இருக்க மாட்டா..” மெதுவாய் இடியை இறக்கினார் அழகப்பன்..

 

“என்ன.. அவங்க வீட்டுல தேஜூ இருக்க மாட்டாளா? என்ன சொல்றீங்க? தேஜூ வேற எங்க போனா?” 

 

 தேஜூ – அருணை பற்றி செய்தி வந்த செய்தி தாளை அவள் முன்னே எடுத்து போட்டார் அழகப்பன்..

 

அந்த செய்தி தாளை கையில் எடுத்தவள் அதிலிருந்த செய்தியையும் படத்தையும் பார்த்ததும் முகம் எல்லாம் வியர்க்க கை நடுங்க அப்படியே உறைந்து நின்றாள்..

 

###############

 

காவல் நிலையத்துக்குள் வந்த ரக்ஷிகா நேரே இன்ஸ்பெக்டரிடம் சென்று “சார்.. நான் ராமை போய் பார்க்கணும் சார்..” என்று கேட்கவும் “நேத்து தானே மேடம் நைட் வந்து பாத்துட்டு போனீங்க.. மறுபடியும் இன்னைக்கு பாக்கணுங்கிறீங்க? என்ன நெனச்சிக்கிட்டிருக்கீங்க? இது போலீஸ் ஸ்டேஷனா.. வேற ஏதாவதா..? ஒவ்வொரு வேளையும் நீங்க வந்து பார்த்துட்டு போறதுக்கு‌‌..” என்று கேட்டார் அவர்..

 

“சார்.. ஒரு முக்கியமான விஷயம்.. அவரோட பேசணும் சார்.. அவரு இந்த தப்பு பண்ணலன்னு ப்ரூவ் பண்ணறதுக்கு சில டவுட்ஸ் கிளியர் பண்ண தான் சார் அவரை பார்க்கணும்னு சொல்றேன்..  அவருக்கு நான் ஏற்பாடு பண்ண அட்வகேட் இதெல்லாம் கேட்டுட்டு வர சொன்னாரு சார்.. ப்ளீஸ் சார்.. கொஞ்சம் அலவ் பண்ணுங்க…” என்று கேட்டாள் அவள் கெஞ்சும் தொனியில்…

 

“ஓகே.. இதான் லாஸ்ட் டைம்.. இதுக்கப்புறம் மறுபடியும் நீங்க அவரை பார்க்கணும்னா நீங்க சொன்ன அந்த லாயரோட வாங்க.. அப்ப அவரைப் பார்க்க அலவ் பண்றேன்” என்று சொல்லி ராம் இருந்த சிறையின் பக்கம் கண்ணை காட்டி அனுப்பி வைத்தார்..

 

ராம் இருந்த சிறை அறையின் அருகில் வந்தவள் “ஹாய் ராம்.. குட் மார்னிங்..” என்று சொல்லவும் நிமிர்ந்து அவளை பார்த்தவன் “வந்துட்டியா?” என்று உதட்டை சுழித்து அவள் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் பார்த்தான்..

 

“விஷ் பண்ணா மறுபடியும் குட்மார்னிங் கூட சொல்ல மாட்ட இல்ல? சரி உன்னோட மார்னிங்கை ஹாப்பியா மாத்தட்டுமா? இங்க பாரு..” என்று சொல்லி ஒரு காணொளியை அவள் கைபேசியில் இருந்து காண்பித்தாள்..

 

அதில் பூஜாவும் அஸ்வினும்.. தேஜுவும் அருணும் தாங்கள் வந்த காரில் இருந்து அவர்களை இறக்கி விட அவர்கள் இருவர் கன்னத்திலும் முத்தமிட்டு கையை ஆட்டி “பைஈஈஈ… மா.. பைஈஈஈஈ.. அங்கிள்” என்று சொல்லிவிட்டு பள்ளிக்குள் சென்றார்கள்..

 

இதை கண்டவன் பிள்ளைகளை பார்த்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் சிரித்தாலும் அடுத்த நொடியே அவர்களை அருண் கொண்டு விட்டதும் அவனுடன் அவர்கள் நெருக்கமாக பழகுவதும் அவன் முகத்தில் ஒரு எரிச்சலை படர செய்தது..

 

அதை கவனித்த ரக்‌ஷிகா “பாத்தியா.. உன் பிள்ளைகளுக்கு வேற எவனோ அப்பாவா சொந்தம் கொண்டாடிட்டு இருக்கான்..” என்று சொல்லி சிரித்தாள்..

 

“இப்படியே நீ ஜெயில்ல உக்காந்துட்டு இருந்தேன்னா மொத்தமா உன் பிள்ளைங்க பொண்டாட்டி எல்லாருமே அவனோடயே செட்டில் ஆயிருவாங்க.. அட்லீஸ்ட் உன் புள்ளைங்களாவது உன்னோட இருக்கணும்னு நினைச்சேன்னா என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஒத்துக்கோ.. இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள உன்னை நான் வெளியில எடுத்துக் காட்டுறேன்..” என்றாள் ரக்ஷிகா..

 

“எவ்ளோ கன்னிங்கா பிளான் பண்ணி என்னமா விளையாடுற நீ? இன்னிக்கு காலையில இந்த வீடியோவை எடுத்துட்டு நீ என்னை வந்து பார்த்து இருக்கேன்னா இதுக்கு முன்னாடி நீ அந்த அருணோட சேர்ந்து எவ்வளவு பிளான் பண்ணி இருக்கேன்னு எனக்கு புரியுது.. ஆனா நீ சொல்ற மாதிரி என் குழந்தைகளை பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துருக்கு.. நிஜமாவே இந்த மார்னிங் எனக்கு ஹாப்பி மார்னிங்கா தான் இருக்கு.. நேத்துல இருந்து அவங்களை பாக்காம என் கண்ணு பூத்து போச்சு.. இப்ப அவங்களை பார்த்தது மனசுக்கு ஒரு விதமா நிம்மதியா இருக்கு… ஆனா அதே சமயம் அவங்க ரெண்டு பேரும் அந்த ராட்சசனோட இருக்காங்கனு நினைக்கும்போது அப்படி இருக்க விடக்கூடாதுனு எனக்கு தோணுது.. அவன் யாரு என் புள்ளைங்களை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுறதுக்கு.. நீ சொல்ற மாதிரி இது கண்டினியூ ஆக கூடாதுங்கறதுக்காகவே இந்த ஜெயிலை விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியில வரணும்னு எனக்கு தோணுது..” என்று சொல்லி அவளை பார்த்தவன் கண்களுக்கு அவள் முகத்தில் அவனை அடையத் துடிக்கின்ற பேராசையும் அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று உன்னிப்பாக கேட்கும் ஆர்வமும் தெரிந்தது.. 

 

அதைப் பார்த்து இதழோரமாய் ஒரு புன்னகையை உதிர்த்தவன்… “அதனால எனக்கு அவன் கிட்ட இருந்து என் புள்ளையை வாங்கறத்துக்கு நீ சொன்ன மாதிரி நான் இந்த ஜெயிலை விட்டு வெளிய வந்தாத் தான் முடியும்.. அதனால உன் கண்டிஷனுக்கு ஒத்துக்கலாமான்னு ஒரு யோசனை வருது.. ஆனா.. ” என்று இழுத்தவன் ஒரு யோசனையுடனே அவள் கண்களை தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்..

 

இங்கு நடக்கும் அனைத்தையும் அருண் காண்பித்துக் கொண்டிருந்த காணொளியில் பார்த்துக் கொண்டிருந்த தேஜுக்கு இதயம் பல மடங்கு வேகத்தில் எக்கு தப்பாக துடித்துக் கொண்டிருந்தது…

 

 அவள் முகத்தில் அரும்பிய வியர்வையை பார்த்த அருண் சிரித்தபடி “என்ன அஷ்ஷூம்மா..? ரொம்ப கவலையா இருக்கா? உன் புருஷன் உன்னை கவுத்து விட்டுடுவான் போல இருக்கு? என்ன இப்படி சொல்றான்…?” 

 

அவன் கிண்டலாக கேட்கவும் ஒரு கையால் தன் புடவையை படப்படப்பில் இறுக்கிப்பிடித்தவள்.. இன்னொரு கையால் அவன் கைபேசியை இன்னும் அருகில் பிடித்தபடி ராம் அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று அந்த கைபேசியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

 

தொடரும்..

 

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள்( கமெண்ட்ஸ்) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!