அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 34🔥🔥

5
(9)

பரீட்சை – 34

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

அடித்த அடி 

வலிக்கவில்லை

வெறுப்புடன் நீ 

பார்த்த பார்வையில் 

ஒரு நொடி 

இதயம் 

துடிக்கவில்லை..

 

இகழ்ச்சியாக ஒரு 

பார்வை 

மரண வலியை 

கொடுத்தாலும் 

மகிழ்ச்சியாய் நீ 

இருக்க 

அதை

மனம் விரும்பி 

ஏற்றேனடி..

 

முழு நிலவே..

என் வாழ்வில் 

வந்த நீ 

பிறை நிலவாய் 

ஆனதேனோ..

 

மெய் மறைத்து 

பொய் சொல்லி உன்

மனதை மாற்றிய 

கயவர்கள்

சொன்ன வார்த்தை 

நம்பி 

சிதறடித்தாய் என் 

இதயத்தை..

 

உடைத்த நீதான்

மருந்திட்டு 

ஒட்ட வைக்க 

முடியும் 

உதிரியாய் கிடக்கும் 

உள்ளத்தை..!!

 

##################

 

உடைந்த மனம்..!!

 

அடுத்த நாள் கல்லூரிக்குள் வந்த தேஜூ ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் மாணவர்கள் நின்று கொண்டு சுவற்றில் எதையோ படித்துக் கொண்டிருக்க என்னவென்று புரியாது தன்னுடன் வந்து கொண்டிருந்த சுமியிடம் “என்னடி..? அங்கங்க சுவத்துல எதையோ பாத்துக்கிட்டு இருக்காங்க.. அப்படி என்ன விஷயம் எழுதி இருக்கு அங்க..?”என்று கேட்டாள்..

 

“தெரியலையே டி.. சரி வா.. நம்மளும் போய் பார்க்கலாம்…” என்று சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு அங்கே பக்கத்தில் இருந்த சுவற்றில் எட்டிப் பார்க்க அதில் தேஜு 💘 அருண் என்று எழுதியிருந்தது..

 

இதே போலவே ஆங்காங்கே கேவலமாக அருவருக்கும் விதமான ஆண் பெண் படங்களை வரைந்து அதன் கீழேயும் இப்படித்தான் எழுதியிருந்தார்கள்..

 

தேஜுக்கு அங்கேயே பூமி பிளந்து தான் உள்ளே சென்று விட மாட்டோமா என்று தோன்றியது.. சுவற்றில் இருந்தவற்றை  படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் எல்லோரும் இவர்கள் பக்கம் திரும்பி இவர்கள் இருவரையும் வினோதமாக ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களுடைய அருவருப்பான ஏளனமான பார்வையை சந்திக்க முடியாமல் தேஜு தலையை குனிந்து கொண்டாள்..

 

அப்போது அவர்கள் கல்லூரி அலுவலகத்தில் வேலை செய்யும் பியூன் அவர்கள் அருகில் வந்து “மிஸ்.தேஜஸ்வினி.. உங்களை பிரின்ஸ்பல் வந்து உடனே பார்க்க சொன்னாங்க..” என்று சொல்லிவிட்டு போனார்..

 

“ஐயோ.. என்ன கேக்க போறாங்களோ தெரியலையே சுமி.. இந்த அருண் நேத்து அந்த பாட்டு போட்டியில கை தட்டுனான் இல்ல..? அதுதான் இது எல்லாத்துக்கும் காரணம்.. தேவை இல்லாம வம்பை வெலைக்கு வாங்கி.. இப்ப பாரு.. சுவரு முழுக்க ஏதேதோ கிறுக்கி வச்சிருக்காங்க.. அசிங்கமா இருக்கு டி எனக்கு..” 

 

 “சரி.. இதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவன் கை தட்டினான்.. யாரோ செவுரு எல்லாம் கிறுக்கி வச்சுட்டாங்க.. உன்னோட நானும் வந்து பிரின்ஸ்பல் கிட்ட பேசுறேன் வா.. போலாம்..” 

 

தேஜூவை அழைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரின் அலுவலகம் நோக்கி சென்றாள்..

 

அறைக்குள் கதவைத் தட்டி அனுமதி வாங்கி உள்ளே நுழைந்தவர்கள் அங்கு ஏற்கனவே அருண் நின்று கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டார்கள்..

 

“ஏற்கனவே பயப்புள்ள மாட்டிட்டான் போல இருக்குடி.. நம்மளுக்கு முன்னாடியே வந்து டோஸ் வாங்கிட்டு இருக்கு..” 

 

 ரகசியமாய் தேஜூவிடம் அவள் காதருகே குனிந்து சொன்னாள் சுமி..

 

“எல்லாம் அவனால வந்ததுதானே.. நல்லா வாங்கட்டும் டி.. ஆனா அவன் வாங்கறது பத்தாதுன்னு எனக்கும் சேர்த்து வாங்கி வைக்கிறான் பாரு.. அது தான் எரிச்சலா வருது..” மெல்லிய குரலில் அவளிடம் சொன்னாள் தேஜு..

 

அருணின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.. “மேடம்.. யாரோ ஏதோ செவுத்துல கிறுக்கி வச்சாங்கங்கறதுக்காக நீங்க எதுக்கு எங்களை கூப்பிட்டு விசாரிச்சுக்கிட்டு இருக்கீங்க..? இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு உங்களுக்கு எத்தனை முறை சொல்றது?” என்று கேட்டான் அருண்..

 

“அருண்.. ப்ளீஸ் கூல் டவுன்.. நீ சொல்ற மாதிரி இதுவரைக்கும் உன் மேல எந்த கம்ப்ளைன்ட்டும் வந்ததில்ல.. இன்ஃபேக்ட் நீ பொண்ணுங்க பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேன்னு தான் உனக்கு பேர் இருக்கு.. ஆனா நேத்து அந்த சிங்கிங் காம்பெட்டிசன் நடந்தப்போ தேஜஸ்வினி பாடி முடிச்ச உடனே நீ நிறுத்தாம கைதட்டி இருக்கே.. அதனால தான் இந்த மாதிரி யாரோ உன்னை பத்தியும் தேஜஸ்வினி பத்தியும் எழுதி வச்சிருக்காங்க.. நீ மட்டும் அந்த மாதிரி பண்ணாம இருந்திருந்தேன்னா இந்த மாதிரி ஒரு பிரச்சனையே வந்து இருக்காது.. இப்ப காலேஜ் ஃபுல்லா தேவையில்லாம உன்னை பத்தியும் தெஜஸ்வினி பத்தியும் பேசிகிட்டு இருக்காங்க” என்றார் அவர்..

 

“மேடம்.. அந்த மாதிரி எந்த எண்ணமும் எனக்கு கிடையாது மேடம்” என்று இருவரும் ஒரே குரலில் சொல்ல “எனக்கு புரியுது.. உங்க ரெண்டு பேருக்கும் அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லைன்னு.. ஆனா இப்ப காலேஜ் முழுக்க இதை பத்தி இன்னும் பத்து நாள் பேசுவாங்க.. இப்ப என்ன பண்ணப் போறீங்க ரெண்டு பேரும்?” என்று கேட்டார் கல்லூரி முதல்வர்..

 

“ஏன் மேடம்.. தேஜூ எந்த தப்பும் பண்ணல.. அருணும் எந்த தப்பும் பண்ணல.. யாரோ ஒருத்தர் பண்ணின தப்புக்கு அவங்கள கூப்பிட்டு கேள்வி கேட்டா அவங்க என்ன மேடம் பதில் சொல்வாங்க?” என்று கேட்டாள் சுமி..

 

“நீ சொல்றது கரெக்ட் தான் சுமி.. இந்த தடவை எங்கேயோ தப்பு நடந்துருச்சு.. நாங்க இதை பண்ணது யாருன்னு செக் பண்ணி ஆக்சன் எடுக்கிறோம்.. ஆனா அதுவரைக்கும் இந்த காலேஜ்ல நடக்குற எதுக்கும் ரியாக்ட் பண்ணாம எந்த கலாட்டாவும் ஆகாம பாத்துக்கோங்க.. நீங்க ரெண்டு பேரும் கோவப்படாதீங்க.. யாராவது ஏதாவது பேசினா கூட தயவு செஞ்சு காலேஜ் ரெபுடேஷனுக்காக அதை இக்னோர் பண்ணுங்க.. ஓகேவா..?” 

 

அந்த கல்லூரி முதல்வர் கேட்க..

 

“ஓகே மேடம்” என்று தேஜூ மட்டும் பதில் சொல்ல அருணோ இறுக்கமான முகத்துடன் அப்படியே நின்றிருந்தான்..

 

“என்ன அருண்..? உனக்கு தனியா சொல்லணுமா? எந்த பிரச்சினைக்கும் போய்டாத..” என்று அவர் மீண்டும் அழுத்தி சொல்ல “நானா எந்த பிரச்சனைக்கும் போக மாட்டேன் மேடம்.. ஆனா யாராவது என்கிட்ட வந்து பிரச்சனை பண்ணினாங்கன்னா அவங்களை விட்டுடற அளவுக்கு நான் பெரிய தியாகி எல்லாம் கிடையாது.. நான் போலாமா மேடம்?” என்று கேட்டான் அருண்..

 

“ஓகே.. யூ போத் மே லீவ் நவ்..” என்றவர் அவர் வேலையை பார்க்க தொடங்க இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே வெளியே வந்தார்கள்..

 

வெளியே வந்த சுமி தேஜூவை பார்த்து “நீ ஏண்டி அந்த அருணை அப்படி முறைக்கிற? அவன் என்னடி தப்பு பண்ணான்?” என்று கேட்க “எல்லாம் அவனால தான்.. தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு..” என்று அவள் சொல்ல அவள் சொன்னது தெளிவாக அருண் காதில் விழுந்தது..

 

“ஏய் மகாராணி.. தப்பு தாண்டி.. நீ பாடுன பாட்டு நல்லா இருந்துச்சுன்னு கை தட்டினேன் பாரு.. ரொம்ப தப்பு தான்.. இனிமே அந்த மாதிரி தப்பு எல்லாம் நடக்காது.. போ.. இதை எப்படி டீல் பண்ணனும்னு நான் பாத்துக்கிறேன்.. உன்கிட்ட யாராவது தப்பா பேசினாங்கன்னா சொல்லு அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்..” 

 

 “ஐயோ சார்.. நீங்க செஞ்ச வரைக்கும் போதும் சார்.. எனக்கு ரொம்ப நல்லது செஞ்சு இருக்கீங்க.. இதுக்கு மேல நீங்க எதுவும் பண்ண வேண்டாம் சார்.. நானே பார்த்துக்கறேன் எல்லாத்தையும்..” 

 

 கையெடுத்து அவனைப் பார்த்துக் கும்பிட்டவள் அங்கிருந்து வேகமாக நடந்து போக “ஏய்.. தேஜூ.. நில்லுடி” என்று கத்திக்கொண்டே அவள் பின்னால் சென்றாள் சுமி..

 

அவள் கை கூப்பி அவ்வாறு சொன்னது அருணின் இதழில் லேசான புன்னகையை வரவழைத்திருக்க “நிஜமாவே கோவத்துல ரொம்ப அழகா இருக்க டி நீ.. இதுக்காகவே உன்னை அடிக்கடி கோபப்படுத்தி பாக்கணும் போல இருக்கு..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்..

 

சுவற்றில் அப்படி அவர்கள் இருவர் பெயரையும் எழுதியது யார் என்று விசாரித்து கண்டு கொண்டவன் எப்படியும் அந்த கல்லூரி முதல்வர் விசாரிக்கும் போது மாட்டிக் கொள்வான் என எதுவும் செய்யாமல் அமைதியாக தான் இருந்தான்..

 

ஆனால் அமைதியாக இருந்தவனை பிரச்சனை தேடி வந்தது.. கல்லூரியின் கலை விழா மேடைக்கருகில் நின்று கொண்டு தன் கைபேசியில் கூகுள் ஆண்டவரிடம் எதையோ கேட்டுக் கொண்டிருந்தவன் செவிகளில் அந்த மேடையின் பக்கவாட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்களின் சத்தம் வந்து விழுந்தது..

 

அங்கு சரண் நித்திலா இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.. 

 

“எப்படி நித்தி.. நீ சொன்ன மாதிரியே காலேஜ் ஃபுல்லா அந்த தேஜூ பேரையும் இந்த அருண் பேரையும் சேர்த்து எழுதி வெச்சுட்டேன்… பாத்தியா..?” 

 

சரண் காலரை தூக்கி விட்டபடி கேட்க நித்திலா “இப்போ எல்லாரும் சேர்ந்து அவங்க ரெண்டு பேரும் அப்படி நடந்துக்கிட்டாங்க இப்படி நடந்துக்கிட்டாங்கன்னு கதை கட்டி விடுவாங்கல்ல..? அப்ப அவங்க அவமானத்துல அப்படியே கூனி குறுகி போவாங்க பாரு.. அதை பார்த்தா எனக்கு ஒரு திருப்தி கிடைக்கும் டா.. அதுக்காக தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று சொன்னவளை சந்திக்க அப்போது சஞ்சீவ் வந்தான்..

 

“ஏய்.. நித்திலா.. காலேஜ் ஃபுல்லா அந்த தேஜூ பத்தியும் அருண் பத்தியும் அப்படி பேசிகிட்டு இருக்காங்க.. அவங்க ரெண்டு பேருக்கு இடையிலயும் நிஜமாவே ஏதாவது இருக்கா?” என்று கேட்டான்..

 

அதற்குள் சரண் அவனிடம் “அது என்னடா அப்பிடி கேட்டுட்ட? ரெண்டு பேரும் காலேஜ்ல இருக்கும்போது தான் அப்படியே பாடத்தை கவனிச்சுக்கிட்டு… ஒருத்தர ஒருத்தர மீட் கூட பண்ணாம.. ஒருத்தர ஒருத்தர் முறைச்சுக்கிட்டு இருக்கிறாங்க… அன்னைக்கு ஒரு நாள் பாக்குறேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து கட்டிக்கிட்டு ஒரு ஹோட்டல்குள்ள போறாங்கடா..” என்று சரண் சொல்ல “என்ன ஹோட்டலுக்கா? ஹோட்டலுக்கு எதுக்கு போனாங்க?” என்று  கேட்டான்.. சஞ்சீவ்..

 

“டேய்.. ஒரு பையனும் பொண்ணும் ஹோட்டலுக்கு எதுக்குடா போவாங்க..? ரூம் எடுத்து தங்கி ம்…ம்..ம்…ம்…. பலான விஷயம் பண்றதுக்கு தான்..” என்று சரண் சொல்ல அதுவரை பல்லை கடித்து நின்று கொண்டிருந்த அருண் நேரே சென்று அவன் சட்டையை பிடித்தான்..

 

“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு விஷயத்தை சொல்லுவ நீ..? ஏன்டா.. நீ தான் எனக்கு ரூம் புக் பண்ணி கொடுத்தியா? நாக்கு கூசாம இப்படி பேசுற..? ஒரு பொண்ணு மேல அபாண்டமா பழி போடறோமேன்னு உனக்கு கொஞ்சம் கூட உறுத்தல இல்ல..?” கத்தியபடி அவனை போட்டு அடி பிளக்க ஆரம்பிக்க நித்திலா அருகில் வந்து “அருண்.. விடு அவனை..” என்று சொல்ல அவளை பிடித்து அவன் தள்ள.. தள்ளிய வேகத்தில் அவள் எங்கேயோ போய் விழுந்தாள்..

 

சரணுக்கு சரமாரியாக அடி விழுந்தது.. அப்போது அங்கே வந்த தேஜூ அருண் சரணை அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து வேகமாக அங்கே வந்தாள்..

 

நித்திலா ஒரு பக்கம் விழுந்திருப்பதை பார்த்து அவளுக்கு எழ உதவி செய்து “என்னாச்சு நித்திலா..?” என்று கேட்க “பாரு தேஜு.. இந்த அருண் மனசுல எதையோ வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கான்..” என்றாள் நித்திலா..

 

“என்ன சொல்ற நீ..? என்ன பண்ணான் அருண்..?” என்று கேட்டுக் கொண்டிருக்க அங்கு அருணோ இவர்கள் பக்கம் திரும்பாமல் சரணை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான்..

 

அப்போது “நீ வேணும்னா சஞ்சீவை கேளு.. அவன் என்ன பண்ணான்னு தெரியும்? நான் போய் அவன் கிட்ட இருந்து சரணை எப்படியாவது காப்பாத்துறேன்” என்றாள் நித்திலா.. 

 

சரணை போய் அவனிடமிருந்து பிரிப்பது போல் பாவனை செய்தவள் அருணின் பக்கத்தில் போவதற்கு கூட அஞ்சினாள்..

 

சஞ்சீவ் அவளிடம் வந்து “ஆமாம் தேஜு.. ஆக்சுவலா நான் நித்திலா கிட்ட “காலேஜ் ஃபுல்லா இப்படி எழுதி வச்சிருக்காங்களே யார் எழுதி வச்சிருக்காங்க..? பாவம் அந்த பொண்ணு.. அவ பேரு கெட்டு போயிடுமே”ன்னு கேட்டேன்.. அப்ப சரண் “தெரியல டா.. அந்த அருண் மட்டும் நேத்து அந்த பாட்டு போட்டி நடந்தப்போ அப்படி கை தட்டாம இருந்திருந்தா இப்படி எதுவும் நடந்திருக்காது டா”ன்னு.. சொன்னான்..” என்று சொல்ல அப்போது அருண் சரணை அடித்துக் கொண்டிருப்பதை பார்த்தவள் “அதுக்கு தான் சரணை போட்டு இப்படி அடிக்கிறானா?” என்று கேட்டாள்..

 

“இல்ல தேஜூ.. அவன் அப்படி சொன்னப்போ இந்த ஸ்டேஜ் பின்னாடி நின்னுட்டு இருந்த அருண் வந்து “டேய்.. நான் உங்ககிட்ட ஏற்கனவே நித்திலாவுக்கு கொடுத்த பனிஷ்மென்ட்ட விட அந்த தேஜுவுக்கு மூணு மடங்கு பனிஷ்மென்ட் அதிகமா கொடுப்பேன்னு சொன்னேன் இல்ல..? இப்ப அவ மானம் போய் மரியாதை போய் பிரின்ஸிபல் ரூம் வரைக்கும் போயிட்டு வந்துட்டா இல்ல? இனிமே தினம் தினம் ஒவ்வொருத்தரயும் இந்த காலேஜ்ல ஃபேஸ் பண்றதுக்கு நடுங்குவா.. எவளோ சொன்னான்னு என்ன தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வந்து லவ் ப்ரொபோஸ் பண்ணுவா? இது வெறும் ஆரம்பம் தான் டா.. அவளுக்கு இன்னும் இருக்குடா.. போகப்போக இன்னும் அவமானத்தை வாங்கி இந்த காலேஜை விட்டே அவ ஓடற மாதிரி நான் பண்ணல நான் அருண் இல்லடா” அப்படின்னு சொன்னான்..” என்று அவன் சொல்ல சொல்ல தேஜுவுக்கு கோவம் உச்சியில் ஏறியது..

 

சஞ்சீவ் தொடர்ந்து “அது மட்டும் இல்ல.. அவன் இப்படி சொன்னதும் “ஏன்டா.. இப்படி சதி பண்ணி அவளுக்கு துரோகம் பண்றியே.. நீ எல்லாம் ஒரு மனுஷனா?”ன்னு கேட்டான் சரண்.. கோவம் வந்து அதுக்கு தான் அவனை போட்டு இப்படி அடி அடின்னு அடிச்சிட்டிருக்கான்..” சஞ்சீவ் இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல தேஜுவின் கண்களோ கோபத்தில் சிவந்தது..

 

நேரே சென்று சரணை அடித்துக் கொண்டிருந்த அருணின் சட்டையை பிடித்தவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள்..

 

“நீ எல்லாம் ஒரு மனுசனாடா? உனக்கு எல்லாம் மனசுல ஈவு இரக்கமே கிடையாதா? ஏற்கனவே எனக்கும் நித்திலாக்கும் பண்ணதெல்லாம் பத்தாதுன்னு இப்ப அவனை வேற அடிச்சு சாகடிக்க பாக்குறே.. அவன் கேட்டதுல என்னடா தப்பு.. இப்படி ஒவ்வொரு நாளும் உன்னால எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துகிட்டே தான் இருக்குது.. நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்..? அதைக் கேட்க என் ஃப்ரெண்ட்ஸ் வந்தா அவங்களையும் போட்டு அடிப்பியா நீ?”

 

 அவன் சட்டையை உலுக்கி அவள் கேள்வி கேட்க அவனோ அவள் கேட்பது  எதுவும் புரியாமல் கண்கள் நிறைய கோபத்துடன் அவளையே பார்த்து நின்று கொண்டிருந்தான்..

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!  மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!