அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 40🔥🔥

5
(10)

பரீட்சை – 40

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

மதியவளை

மறுபடியும்

அனுதினமும்

மனதின் 

ஆசை தீர

பார்த்திடுவேன்..

 

சதி செய்து 

பிரித்தாலும்

விதி இருக்கிறதே 

ரதி அவளை 

நாள்தோறும்

கண்களால் களவாடி

தூரத்தில் நின்றேனும்

அவள் பார்வை

தூரலில் நனைவதற்கு..

 

எவர் அதை மாற்றமுடியும்?

இறைவனை தவிர…

 

################

 

விதியின் அழகான சதி..!!

 

நிலவழகனுடைய கைப்பேசியில் அவர்கள் செய்த சதிக்கு ஆதாரமாக எந்த காணொளியும் இல்லை என்று சரண் நித்திலாவிடம் சொல்லவும் நித்திலா நிலவழகனிடம் அந்தக் காணொளி ஆதாரம் பற்றி கேட்க அவனோ அந்த காணொளி அப்போதுதான் அங்கு மறைந்து வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படக்கருவியில் பதிவாகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னான்.. அப்படியே திடுக்கிட்டு போனார்கள் மூவரும்..

 

சரியாக அப்போது கல்லூரி முதல்வர் சகுந்தலா தேஜூவோடும் சுமியோடும் அந்த நூலகத்திற்குள் நுழைந்தார்..

 

அவர்களைப் பார்த்த சஞ்சீவும் கோகுலும் நிலவழகனை தங்கள் பிடியிலிருந்து விடுவிக்க சரண் நித்திலா இருவரும் அப்படியே உறைந்து நின்றார்கள்..

 

“நித்திலா.. நீ என்ன ஸ்டூடண்டா? இல்ல ஏதாவது மாஃபியா கேங் லீடரா..? ஏதோ கொள்ளை கூட்ட தலைவி மாதிரி வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்க?” 

 

கேட்டுக் கொண்டே சகுந்தலா உள்ளே வர “அது இல்ல மேடம்.. இவன் என்னை ஏதோ தப்பு தப்பா வீடியோ..”

 

அவள் சொல்ல ஆரம்பிக்கும் முன் கையை முன்னே காட்டி அவள் பேசுவதை நிறுத்தினார் சகுந்தலா..

 

“நீ இவ்ளோ நேரம் பேசினது அத்தனையும் கேட்டுட்டு தான் நான் இங்க வந்து இருக்கேன்.. எவ்வளவு கேவலமான வேலை எல்லாம் நீ பண்ணி இருக்கே? ஏற்கனவே உன்னை வார்ன் பண்ணி தான் இந்த காலேஜ்ல கன்டினியூயஸா படிக்க விட்டேன்.. இப்போ இது செகண்ட் டைம்.. இதுக்கு மேல உங்க நாலு பேரையும் எஸ்க்யூஸ் பண்ண முடியாது.. உங்களை காலேஜ் விட்டு உடனே டீட்டெயின் பண்றேன்..” கறாராக சொன்னார் அவர்..

 

“ப்ளீஸ் மேடம்.. நான் அந்த அருணோட திமிரை அடக்கணும்னு நினைச்சேனே தவிர இப்படி எல்லாம் பண்ணனும்னு நினைக்கல மேடம்.. அந்த அருண் எந்த பொண்ணையும் மதிக்காம திமிரா நடக்கிறான்.. அதனாலதான் எனக்கு அவனுக்கு எப்படியாவது பொண்ணுங்களோட அருமையை புரிய வைக்கணும்னு தோணுச்சு.. அதனாலதான் நான் இப்படி எல்லாம் பண்ணிட்டேன்.. ப்ளீஸ் மேடம்.. என்னை காலேஜ் விட்டு அனுப்பிடாதீங்க.. எங்க அப்பாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாரு..” கெஞ்சினாள் நித்திலா..

 

“இதெல்லாம் இந்த தப்பெல்லாம் செய்யறதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்.. ஒரு முறை வார்ன் பண்ணினவுடனேயே ஜாக்கிரதையா இருந்திருக்கணும்.. மேல மேல தப்பு செஞ்சிட்டே இருந்தா நான் வேற என்ன செய்ய முடியும்? முதல்ல உங்க அப்பாக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லறேன்..” என்று சொன்னவர் அந்த புகைப்பட கருவியை தன் கையோடு எடுத்துக் கொண்டு “ஆல் ஆஃப் யூ.. கம் டு மை ரூம்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார்..

 

நித்திலாவும் சரணும் சஞ்சீவும் கோகுலும் தேஜூவை முறைக்க தேஜூ “என்ன முறைக்கிறீங்க? நீங்க செஞ்ச வேலைக்கு நான் தான் உங்களை மொறைக்கணும்.. எவ்வளவு நாடகம்.. எவ்வளவு பொய்.. மேடம் உங்களுக்கு சரியான பனிஷ்மென்ட் கொடுப்பாங்க.. வாங்க..” நிலவழகனையும் சுமியையும் அழைத்துக் கொண்டு கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றாள் தேஜூ..

 

சகுந்தலா தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து தன் கைபேசியை எடுத்து முதலில் நித்திலாவின் தந்தை ஈஸ்வரமூர்த்தியை அழைத்தார்..

 

அவர் அழைப்பை ஏற்று “சொல்லுங்க மேடம்.. என்ன திடீர்னு கால் பண்ணி இருக்கீங்க? நித்திலாக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?” பதட்டத்துடன் கேட்க “நித்திலாக்கு உடம்பு எல்லாம் நல்லாதான் இருக்கு சார்.. அவ நடவடிக்கை தான் ரொம்ப சரியில்லை.. தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கா காலேஜ்ல.. இனிமே அவளை இங்க படிக்க விட்டா மத்த ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் கெட்டு போயிடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு… அதனால நான் அவளை டிஸ்மிஸ் பண்ண போறேன்.. நீங்க வந்து அவளை கூட்டிட்டு போங்க.. இப்ப எங்க இருக்கீங்க?” என்று கேட்டார் சகுந்தலா..

 

“மேடம்.. நான் இப்போ லண்டன்ல இருக்கேன்.. எனக்கு இங்க ஒரு பிசினஸ் மீட் இருக்கு.. நாளைக்கு அதை முடிச்சுட்டு நான் 31ஸ்ட் இந்தியாவுக்கு வந்துவிடுவேன்… ஆனா நீங்க சொல்றதெல்லாம் கேட்க எனக்கு ஷாக்கிங்கா இருக்கு.. அப்படி என்ன பண்ணா நித்திலா..? நீங்க காலேஜ் விட்டு டிஸ்மிஸ் பண்ற அளவுக்கு..” என்று கேட்டார் அவர்..

 

“உங்களுக்கு இப்ப ஃபுல்லா எக்ஸ்பிளைன் பண்ணறதை விட உங்களுக்கு ரெண்டு வீடியோ அனுப்புறேன்.. அந்த ரெண்டு வீடியோவும் பாருங்க.. தன்னால உங்க பொண்ணு என்ன பண்ணான்னு புரிஞ்சிடும்.. இதுக்கப்புறம் நான் என்ன பண்ணனும்னு நீங்களே சொல்லுங்க.. நான் இப்ப காலை கட் பண்றேன்.. ஃபைவ் மினிட்ஸ் கழிச்சு உங்களுக்கு கால் பண்றேன்… மறுபடியும்..” என்று சொல்லி நித்திலா செய்த சதிக்கு சாட்சியாக இருந்த இரண்டு காணொளிகளையும் அவள் தந்தைக்கு அனுப்பி வைத்தார்..

 

நித்திலா தலையை குனிந்து கொண்டு முதல் முறையாக கண்களில் கண்ணீர் வழிய அழுது கொண்டிருந்தாள்.. அந்த காணொளிகளை தன் தந்தை பார்த்து தன்னை பற்றி என்னவெல்லாம் நினைப்பாரோ என்று அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது..

 

தன் தாயின் மரணத்திற்கு பிறகு இன்னொரு திருமணம் செய்யாத தந்தையின் மேல் அவளுக்கு அதிக மதிப்பும் பாசமும் இருந்தது.. இப்போது அவரை கண் கொண்டு பார்க்க முடியாத அளவிற்கு தான் கேவலமான பல விஷயங்களை செய்து மாட்டி கொண்டு விட்டோமே என்று அவளுக்கு வருத்தமாகவே இருந்தது..

 

சகுந்தலா மறுபடியும் கைபேசி எடுத்து வேறொரு எண்ணை அழைத்தார்..

 

####################

 

அருணின் டைரியில்…

 

கல்லூரியில் இருந்து என்னை வெளியே அனுப்பி மூன்று நாட்கள் ஆகிறது.. இன்னும் நான்கு நாட்களில் புது வருடம் பிறக்க இருக்க அதை எண்ணி ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் என் மனம் மட்டும் அழுது கொண்டிருக்கிறது..

 

இரண்டு விஷயங்கள் என் வாழ்வில் என் உயிருக்கும் மேலானவையாக இருந்தன.. 

 

ஒன்று என் கனவு.. நன்றாக படித்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வாழ்க்கையில் என்னை புறந்தள்ளியவர்கள் முன் வெற்றி பெற்று காட்டுவது.. 

 

இன்னொன்று என் உயிர்.. அஸ்வினியின் அன்பை பக்கத்தில் இருந்து பெறமுடியாவிட்டாலும் அவளை தள்ளி நின்று பார்த்து ஆனந்தப்படுவது..

 

இவை இரண்டுமே அந்த நித்திலாவின் சதியால் இன்று என் கை விட்டு போய்விட்டன.. எந்த வேலையிலுமே மனம் செல்லாமல் ஏனோதானோவென்று வேலை செய்து கொண்டு சோர்வாகவே இருந்த என்னை சின்ன பையனின் குரல் அசைத்தது..

 

“அண்ணே விடுங்க அண்ணே.. அந்த காலேஜ்க்கு தான் நீங்க படிக்கிறதுக்கு கொடுத்து வைக்கல.. வேற எங்கேயாவது சேர்ந்து.. கரஸ்பாண்டன்ஸ்ல கூட படிச்சு முடிச்சுக்கலாம்ணே.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. நீங்க அதுக்காக இப்படி ஆகாதீங்கண்ணே.. நீங்க கோவமா இருந்தா கூட பரவால்ல.. இந்த மாதிரி சோகமா சோர்வா இருக்காதிங்க அண்ணே.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..  மூணு நாளா ஏரியாவே ட்ரையா இருக்குது.. வழக்கமா உங்களை பாக்க வர்ற  பொண்ணுங்களை கூட காணோம்..” என்று சொல்ல எனக்கு சிரிப்பு வந்தது..

 

அதை பார்த்து “அட சிரிச்சிட்டீங்களே… என்ன அதிசயம்..?” என்று கேட்டான் சின்ன பையன்..

 

“மனுஷன் எவ்வளவு பெரிய கவலையில இருக்கேன்.. உனக்கு பொண்ணுங்க வரலையேன்னு கவலையா? ஒழுங்கா வேலையை பாருடா.. இன்னிக்கு நைட்டுக்குள்ள மூணு வண்டி கொடுத்து அனுப்பணும்.. எனக்கு வேலையே ஓட மாட்டேங்குது..” என்று சொல்லிக் கொண்டே வேலை செய்ய அப்போது என் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது..

 

அது கல்லூரி முதல்வரிடமிருந்து வந்திருந்தது.. ஆச்சரியத்துடன் அந்த அழைப்பை நான் ஏற்க “ஹலோ அருண்.. இந்த 31ஸ்ட் நீ காலேஜுக்கு வா.. உன்னோட டிஸ்மிஸலை  கேன்சல் பண்ண போறேன்.. நீ மறுபடியும் ரெகுலரா காலேஜுக்கு வரலாம்..” என்று சொல்ல மகிழ்ச்சியில் எனக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை..

 

“மேடம்.. நிஜமாத்தான் சொல்றீங்களா?என் செஞ்சதா சொன்ன தப்பை மன்னிச்சிட்டீங்களா?” என்று நான் கேட்க “நீ தப்பே பண்ணலன்னு ப்ரூவ் ஆயிடுச்சு.. நான் சொல்றபடி நீ கிளம்பி வா..” என்று சொன்னார் சகுந்தலா..

 

“என்ன சொல்றீங்க மேடம்? எப்படி நான் தப்பு பண்ணலன்னு கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்க “ஃபோன்லயே எல்லாத்தையும் சொல்ல முடியாது.. நீ தர்ட்டி ஃபர்ஸ்ட் நேர்ல வரும்போது எல்லாத்தையும் சொல்றேன்.. இப்ப நான் ஃபோனை வைக்கிறேன்..” என்று சொல்லி கைப்பேசி இணைப்பை துண்டித்து விட்டார்..

 

எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் அளவே இல்லாமல் இருந்தது.. என் முகத்தில் சந்தோஷத்தை பார்த்து சின்ன பையன் “அண்ணா என்னண்ணா விஷயம்? என் கிட்டயும் சொல்லுங்கண்ணா” என்று கேட்க “டேய் சின்ன பையா.. என்னை மறுபடியும் காலேஜுக்கு வர சொல்லிட்டாங்க டா..” என்று ஓடி சென்று அவனை தூக்கி சுற்ற அவனும் “அட சூப்பர்ண்ணே.. இன்னிக்கு நீங்க எனக்கு ட்ரீட் கொடுக்கணும்..” என்று கேட்டான் அவன்..

 

“என்ன வேணும்னு சொல்லுடா.. அத்தனையும் கொடுக்கிறேன்..” என்று அவனிடம் சொல்லியவன் என் மனதிற்குள் “என் தேவதையை மறுபடியும் நான் பாக்க போறேன் டா.. இதைவிட சந்தோஷமான விஷயம் வேற எதுவுமே கிடையாது..” என்று உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டேன்..

 

####################

 

சகுந்தலா ஐந்து நிமிடங்களுக்கு பிறகு மறுபடியும் நித்திலாவின் தந்தையை கைப்பேசியில் அழைத்தார்.. “ஹலோ.. மிஸ்டர் ஈஸ்வரன்.. என்ன வீடியோஸ் எல்லாம் பாத்தீங்களா? இன்னும் உங்க பொண்ணை பத்தி ஏதாவது நியாயம் சொல்ல வேண்டி இருக்கா உங்களுக்கு?” என்று கேட்க “அய்யோ மேடம்.. உங்க கிட்ட நான் எப்படி சாரி கேட்கிறதுன்னு எனக்கு தெரியல.. அவ வாழ்க்கை நல்லபடியா ஆகணும்னு தான் நிறைய பேர் அவளுக்கு ஹோம் டியூஷன் வைக்க சொன்னப்போ கூட அவ வாழ்க்கையோட எல்லா தட்டு மக்களைப் பற்றியும் புரிஞ்சுக்கணும்னு தான் அவளை அங்க காலேஜ்ல கொண்டு வந்து சேர்த்தேன்.. அவ வீட்ல யாரும் இல்லாம எனக்கு போர் அடிக்குது னு சொன்னப்போ அந்த ஹாஸ்டல்ல எல்லாம் தங்க வெச்சதும் அதுக்கு தான்.. இந்த மாதிரி அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி அவ சந்தோஷப்பட்டு இருக்கான்றது பார்க்கும்போது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு மேடம்.. அவளை என் பொண்ணு சொல்லிக்கறத்துக்கே எனக்கு வெட்கமா இருக்கு..” குரல் கம்ம சொன்னார் அவர்..

 

“மிஸ்டர்.ஈஸ்வரன்.. அவ இப்படி மத்தவங்க உணர்வுகளை புரிஞ்சுக்க தெரியாத தன் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கிற ஒரு பொண்ணா வளர்ந்து இருக்கிறதுக்கு நீங்க தான் முழு காரணம்.. கவனிக்க வேண்டிய நேரத்துல பொண்ணை சரியா கவனிக்காம விட்டிருக்கீங்க.. போனது போச்சு.. இப்ப அதை விடுங்க.. ஆனா இனிமே நீங்க அவகிட்ட எப்படி நடந்துக்க போறீங்கன்றதை பொறுத்து தான் அவ இனிமே வாழற வாழ்க்கை இருக்க போகுது.. நீங்க 31ஆம் தேதி இங்க வாங்க.. உங்களோட சில விஷயங்கள் எல்லாம் பேசி அவளை இனிமே இந்த மாதிரி தப்பு பண்ணாம சரி பண்றதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்.. நித்திலாவை இப்படியே டிஸ்மிஸ் பண்ணி அனுப்பறதுக்கு எனக்கு ரெண்டு நிமிஷம் கூட ஆகாது.. ஆனா இந்த காலேஜோட நோக்கம் அது கிடையாது.. பசங்க தப்பு பண்ணா அதை சரி பண்ணனும்னு தான் நாங்களும் நினைக்கிறோம்.. அதனால நீங்க தவறாம 31ம் தேதி இங்க வந்துருங்க.. அது தான் உங்க பொண்ணுக்கும் நல்லது.. உங்களுக்கும் நல்லது..” என்றார் சகுந்தலா..

 

“ஓகே மேம்.. நான் நிச்சயமா வரேன்.. நித்திலாவை வீட்டுக்கு போக வேண்டாம்னு சொல்லிடுங்க.. அவளுக்கு எங்க வீட்டு கதவு திறந்திருக்காது.. நான் அவளை காலேஜ்லயே வந்து மீட் பண்றேன்..” என்று சொன்னவுடன் “நீங்க நித்திலாவோட பேசுறீங்களா?” என்று கேட்க “எனக்கு அவ கிட்ட இப்போதைக்கு பேசுறதுக்கு ஒன்னும் இல்ல மேடம்..” என்று சொல்லி இணைப்பை துண்டித்து விட்டார்..

 

தன் தந்தை தன் மேல் எவ்வளவு கோபமாக இருக்கிறார் என்று நித்திலாவுக்கு புரிந்தது.. கண்ணீர் விட்டு கரைந்தவள் அமைதியாக அழுது கொண்டே நின்று கொண்டிருந்தாள்..

 

“ஓகே.. நிலவழகன்.. தேஜஸ்வினி.. சுமி.. ரொம்ப தேங்க்ஸ்.. அனாவசியமா ஒரு நல்ல ஸ்டூடண்ட்டோட படிப்பு நிக்காம இருக்கிறதுக்கு நீங்க காரணமா இருந்திருக்கீங்க.. அதுவும் மிஸ்.தேஜஸ்வினி.. கம்ப்ளைன்ட் கொடுத்த நீயே அவன் மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சவுடனே அதை ஸார்ட் அவுட் பண்ணது ரொம்ப நல்ல விஷயம்.. ஆனா இனிமே யாரு என்ன சொன்னாலும் அதை அப்படியே பிளைண்டா நம்பாம அவங்க குணம் என்னன்னு பாத்து அதுக்கப்புறம் ஒரு முடிவெடு.. ஓகேவா..?” என்று சொல்ல “புரிஞ்சது மேடம்.. இனிமே இந்த தப்பை நான் ரிப்பீட் பண்ண மாட்டேன்..” என்று சொன்னாள்..

 

அதன் பிறகு அனைவரையும் அங்கிருந்து அவரவர் இருப்பிடத்திற்கு செல்ல சொன்னார் சகுந்தலா..

 

டிசம்பர் 31ஆம் தேதி வந்தது.. கல்லூரி முதல்வரின் அலுவலகத்தில் அருண் தேஜு நிலவழகன் சுமி நித்திலா சரண் சஞ்சீவ் அனைவரும் கல்லூரி முதல்வரை சுற்றி நின்று கொண்டு அவர் என்ன பேசுகிறார் என்று கேட்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்..

 

அருண் தேஜூவை பார்ப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தான்.. அவள் மேல் கோபமாக இருப்பது போலவே பாவனை செய்து கொண்டு இருந்தான்.. தேஜுவோ அவன் ஒரு பார்வை கிடைக்காதா என அவனையே எதிர்பார்ப்போடு பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.. ஆனால் அவனோ அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியில் அவள் மேல் தான் வைத்திருக்கும் காதல் வெளிப்பட்டுவிடுமோ என்று தன்னையே கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டு அவளை பார்ப்பதை முழுவதுமாய் தவிர்த்து இருந்தான்..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!  கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உடனுக்குடன் கதைகளை படிக்க என் கதைகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்க.. உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!