அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 46🔥

5
(7)

பரீட்சை – 46

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

ஒவ்வொருவராய் 

வந்து 

என்னவள் 

இன்னொருவனை 

விரும்பினாள் என்று

உறுதியாய் சொல்ல

 

ஒரே மாதிரியான 

பொய்யை 

உரு போட்டது போல் 

உதடுகள் எல்லாம் 

உண்மை போலவே 

உரைக்க

 

சொல்வதைக் கேட்டு என் 

சின்ன இதயத்தில் 

நிறைந்தவளை 

சந்தேகப்படும் 

சிறியவன் அல்ல 

நான்..

 

என்னவளே வந்து 

என்னிடம் 

இதை சொன்னாலும் 

ஏழேழு ஜென்மத்திலும் 

ஏற்றுக்கொள்ள 

மாட்டேன்..

 

என் இதயத்தின் 

ராணியாய் 

வீற்றிருக்கும் அவளை 

உள்ளத்தில் ஏந்தி 

உலா வருவேன் 

தினமும்..!!

 

###################

 

இதயத்தின் ராணி..!!

 

“தேஜூ அந்த காலேஜ்ல படிப்பை முடிச்சப்ப தான் அதோட நான் அந்த அருணை சந்திச்சேன்..” என்று யோசனையில் ஆழ்ந்தார் அழகப்பன்..

 

அவரைப் பார்த்த ராம் “என்ன சொல்றீங்க மாமா? தேஜு படிப்பை முடிச்சப்பதான் மறுபடியும் அந்த அருணை சந்திச்சீங்களா? அப்படின்னா எங்க கல்யாணம் முடிஞ்சப்புறம் நீங்க.. அந்த அருணை சந்திச்சீங்களா? ஏன்னா தேஜூ காலேஜ் படிக்கும் போதே எங்க கல்யாணம் நடந்துடுச்சே” என்று கேட்டான்..

 

“உங்க கல்யாணம் முடிஞ்ச பிறகும் நான் அந்த அருணை சந்திச்சேன்.. ஆனா அதுக்கு முன்னாடியே நான் அந்த அருணை சந்திச்சேன்.. தேஜுக்கும் அருணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கேட்டுகிட்டு அந்த அருண் என்கிட்ட வந்து பேசினான்..” அவர் சொன்னதை கேட்ட ராமுக்கோ ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.. 

 

அவர் சொன்னதை தாங்கும் சக்தி கூட அவனுக்கு இல்லை.. கண்கள் சிவப்பேற கைகளை இறுக்கியவன் “மா…மா…!!” என்று கத்தினான்..

 

“என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சு தான் சொல்றீங்களா? நீங்க சொல்ற மாதிரி மட்டும் நிஜமா நடந்திருந்ததுன்னா அந்த அருணை நான் கொன்னே போட்டுடுவேன்” என்று சொன்னவனை பார்த்து “கோபப்படாதீங்க மாப்ள.. நான் சொல்றதெல்லாம் முழுசா கேட்டுட்டு அப்புறம் நிதானமா கோபப்படுங்க.. நீங்க கோபப்பட வேண்டிய ஒரே ஆள் நான் மட்டும்தான்.. அந்த அருண் இல்ல.. அந்த அருண் மேல எந்த தப்பும் இல்லை மாப்பிள்ளை.. உங்களுக்கு இதுக்கு மேல விளக்கமா சொல்லணும்னா அது ஒருத்தரால தான் முடியும்.. அவ தேஜூவோட ஃப்ரெண்ட் மல்லி.. மல்லி தேஜூவோட எங்க ஊர்ல இருக்கும்போது எல்.கே.ஜி.லேர்ந்து பிளஸ் டூ வரைக்கும் ஒண்ணா படிச்சா.. அவளோட உயிர் தோழி.. மல்லி கொஞ்சம் வசதி கம்மியான குடும்பத்தில் இருந்து வந்த பொண்ணு. அவ +2ல 87% வாங்கி இருந்தாலும் அவளை இன்ஜினியரிங் காலேஜ்ல அவங்க அம்மா அப்பாவாலை சேர்த்து படிக்க வைக்க முடியல..  அவ அந்த ஊரிலேயே ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்துதான் படிச்சா.. இன்ஜினியரிங் சேரணும்னு ஆசைப்பட்ட தேஜூவுக்கு அன்னைக்கு இருந்த சூழ்நிலையினால கொடைக்கானல்ல ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர வேண்டியதா போச்சு.. நீங்க இப்ப என்கிட்ட எதுக்காக கோபப்பட்டீங்களோ அந்த விஷயம் நடக்குறதுக்கு ஆதாரமா இருந்த விஷயங்களை நான் சொல்றதை விட மல்லி சொன்னா.. உங்களுக்கு அது புரியும்.. ஏன்னா அது ஒன்னும் ஒன்னும் நடந்தப்போ தேஜூ அதெல்லாம் அவ உயிர் தோழியான மல்லி கிட்ட தான் ஷேர் பண்ணிக்கிட்டா.. நான் ஊர்லேர்ந்து இங்க கிளம்பின உடனே மல்லிக்கு ஃபோன் பண்ணிட்டேன்.. அவ இப்ப இங்க வந்துட்டே இருப்பா..” என்றார் அவர்..  

 

ராம்க்கோ அவர் சொன்ன விஷயங்களை கேட்டு தலை சுற்றியது.. அவனால் அவர் சொல்லும் ஒரு விஷயத்தையும் நம்ப முடியவில்லை.. அதே சமயம் அவர் தேஜுவின் தந்தையாய் இருப்பதனால் அவர் பொய் சொல்வதற்கு எந்த அவசியமும் இல்லை.. அதனால் அவர் சொல்வதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.. 

 

அவர் சொன்ன விஷயங்கள் ஒட்டுமொத்தமாய் அவன் மனதை இருப்பில்லாமல் ஆக்க “மாமா.. எப்ப மாமா வருவாங்க மல்லி?” என்று குரலில் தவிப்புடன் கேட்டான் ராம்..

 

அதே சமயம் அவர்கள் அறையின் அழைப்பு மணி ஒலிக்க வேகமாக போய் கதவை திறந்தான் ராம்.. அங்கே மல்லி நின்று கொண்டிருந்தாள்..

 

“நீங்க..?” என்று ராம் கேட்க “நான் தான் மல்லி.. தேஜூவோட ஃப்ரெண்ட்.. அழகப்பன் அங்கிள்..” என்று சொன்னவளிடம் “அவரு இங்கதான் இருக்காரு.. வாங்க.. உள்ள வாங்க..” என்று அவன் அழைக்க உள்ளே இருந்த அழகப்பன் “நான் இங்க தான் மா இருக்கேன்.. உள்ள வா..” என்றார்..

 

உள்ளே வந்தவள் “எப்படி இருக்கீங்க அங்கிள்? என்ன விஷயமா என்னை அவசரமா இங்க வர சொன்னீங்க?” என்று கேட்க “அம்மா மல்லி.. தேஜு பத்தி இப்ப நடக்குற விஷயம் ஏதாவது உனக்கு  தெரியுமாம்மா?” என்று அழகப்பன் கேட்டார்..

 

“ஆமா அங்கிள்.. பேப்பர்ல எல்லாம் பார்த்தேன்.. ஒரே ஷாக்கிங்கா இருந்துச்சு.. அந்த அருண் மறுபடியும் எதுக்கு அவ வாழ்க்கையில வரணும்? எல்லாம் நல்லபடியாதானே போயிட்டு இருந்தது..” என்று அவள் கேட்க ராமோ அவள் சொன்னதை நம்ப முடியாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தை விட்டு ஏதோ வேறு உலகத்துக்கு போய் விட்டோமோ என்று குழம்பித் தவித்தான்..

 

“மல்லி.. அருண் இப்ப திரும்பி வந்ததுனால வேற வழி இல்லாம நான் இப்ப எல்லா விஷயங்களையும் மாப்பிள்ளை கிட்ட சொல்ல வேண்டியதா போச்சு.. தேஜூ அந்த காலேஜ்ல படிச்சப்போ நடந்த சில விஷயங்கள் அவளே உன்கிட்ட ஃபோன்ல சொன்னா இல்ல? அதனால அதை நான் சொல்றதை விட நீ சொன்னா சரியா இருக்கும்னு தோணுச்சு.. அதான் உன்னை கூப்பிட்டேன்.. நான் சொல்றதை அவரால நம்ப முடியல.. நீயே சொல்லி அவருக்கு புரிய வை..” என்று சொன்னார் அழகப்பன்..

 

“இதுல எனக்கு ஒன்னும் ஆச்சரியம் இல்லை அங்கிள்.. ஏன்னா அந்த காலேஜ்ல அவ சேர்ந்து நியூ இயர் வந்துச்சு.. க்ரிஸ்மஸ் லீவுக்கப்பறம் மறுபடியும் காலேஜ் ரிஓபன் பண்ணினாங்க.. அப்போ அன்னிக்கு ஈவினிங் அவ எனக்கு ஃபோன் பண்ணி அந்த அருண் கிட்ட ப்ரபோஸ் பண்ணேன்னு சொன்னப்போ என்னாலயே அதை நம்ப முடியல.. அப்ப இத்தனைக்கும் அவளுக்கு கல்யாணம் கூட ஆகல.. அப்பவே என்னால நம்ப முடியல.. ஏன்னா அவ இருக்கிற அழகுக்கு எத்தனையோ பசங்க.. அழகான பசங்க.. அவளை சுத்தி சுத்தி வந்தாங்க.. ஆனா அவங்க ஒருத்தரையும் அவ திரும்பி கூட பார்த்ததில்லை.. ராம் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆறு வருஷம் அவ கூட சந்தோஷமா வாழ்ந்திருக்காரு.. இவங்களுக்கு ரெண்டு பிள்ளையும் இருக்கு.. இவரால எப்படி அங்கிள் இதை நம்ப முடியும்?” என்றாள் மல்லி..

 

அவள் சொன்னதை கேட்டு மேலும் அதிர்ந்து “என்ன..?! தேஜு அந்த அருணுக்கு ப்ரபோஸ் பண்ணாளா..?! நான் இதை நம்பவே மாட்டேன்.. என் தேஜூ என்னை தவிர யாரையும் மனசால கூட நினைச்சு இருக்க மாட்டா.. நீங்க எல்லாம் எதுக்கு இப்படி ஒவ்வொருத்தரா வந்து பொய் சொல்றீங்க..? அந்த அருண் ஒரு பொய் சொல்லி அவளை கடத்திட்டு போயிருக்கான்..  மாமா என்னன்னா ஒரு கதை சொல்றாரு.. நீங்க என்னடானா தேஜூ அந்த அருணை லவ் பண்ணான்னு சொல்றீங்க.. உங்களுக்கெல்லாம் என் மேல என்ன கோபம்? என்னோட வாழ்க்கையையும் தேஜூவோட வாழ்க்கையையும் ஏன் கெடுக்கணும்னு நினைக்கிறீங்க? உயிர் இருக்கிற வரைக்கும் என்னை தவிர அவ மனசை அந்த மன்மதனே வந்தாலும் தொடக்கூட முடியாது.. இது எனக்கு நல்லா தெரியும்.. நீங்க சொல்ற கதையை எல்லாம் நான் நம்ப முடியாது.. ஐ அம் சாரி மல்லி… நீங்க அந்த அருணோட ஆளா? மாமா உங்களுக்கு அந்த அருண் பணக்காரன்கறதனால திடீர்னு அவன் ஆசைப்பட்டான்னு தேஜூக்கு வசதியான வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு இந்த மாதிரி ஏதாவது பண்றீங்களா? நீங்க இப்படி ஏதாவது பண்ணா உங்க மக செத்து போய்டுவா மாமா.. அவளால என்னை தவிர வேற யாரையும் மனசால நினைக்க கூட முடியாது மாமா.. உங்க பொண்ணு உயிரோட விளையாடாதீங்க மாமா..” கோபமும் அழுகையும் கெஞ்சலும் கலந்த குரலில் சொன்னான் ராம்..

 

“எனக்கு தெரியும் மாப்பிள்ளை.. என் பொண்ணு நான் சொல்றதெல்லாம் கேட்டான்னா உயிரோட இருக்க மாட்டா.. எனக்கு தெரியும்.. அதனால தான் மாப்பிள்ளை இதுநாள் வரைக்கும் அவகிட்ட நான் இதை சொல்லல… உங்களுக்கும் நான் இதை தெரிய விடல.. அங்க தான் நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்.. உங்ககிட்ட நான் உண்மையை சொல்லி இருக்கணும்.. உங்ககிட்ட உண்மையை சொன்னா உங்களை மாதிரி ஒரு நல்ல புருஷனை அவ இழந்திருவாளோன்ற பயத்துல உங்க கிட்ட சொல்லல.. உங்க கிட்ட இந்த விஷயத்தை சொன்னா கோவத்துல நீங்க எங்க அவகிட்ட சொல்லி அவ உயிரையே விட்டுடுவாளோன்னு ஒரு பயமும் எனக்கு இருந்தது.. ஏன்னா என்னிக்கு நீங்க பொண்ணு பார்க்க வந்தீங்களோ அன்னியிலிருந்து தேஜூ உங்களை மட்டும் தான் மனசுல சுமந்துகிட்டு இருக்கா.. உங்களை தவிர அவ வாழ்க்கையில இன்னொருத்தர் இருந்தாருன்னு சொல்லியிருந்தா அவ நிச்சயமா உயிரை விட்டிருப்பா..” அவர் நா தழுதழுக்க சொன்னார்..

 

ராம் “அது எப்படி மாமா? அவளுக்கே தெரியாம அவ அந்த அருணுக்கு ப்ரபோஸ் பண்ணி இருக்க முடியும்? அவளா அந்த அருணுக்கு ப்ரபோஸ் பண்ணி இருந்தான்னா அவளுக்கு அந்த விஷயம் தெரிஞ்சிருக்கும் தானே?” விழிகளில் நிறைந்த குழப்பத்துடன் கேட்டான் ராம்..

 

“அங்க தான் மாப்பிள.. விதி அவ வாழ்க்கையில ஏகத்துக்கும் விளையாடிருச்சு..” என்றார் அழகப்பன்.. மல்லியை பார்த்து அவளிடம் தேஜூ சொன்னதை ராமிடம் சொல்லுமாறு சொன்னார்..

 

மல்லி அருணுக்கும் தேஜூவுக்கும் நடுவில் நடந்த உரசல்கள், சந்தேகங்கள், சண்டைகள் எல்லாவற்றையும் கூறி அதன் பிறகு தேஜு எவ்வாறு மனம் மாறி அவனிடம் தன் காதலை சொன்னாள் என்பது வரை ராமிடம் கூறினாள்..

 

அதைக் கேட்ட ராம் அதிர்ச்சியில் அப்படியே அந்த அறையில் இருந்த கட்டிலில் தன் இதயத்தை யாரோ பிடுங்கி எடுத்ததனால் உயிரற்று போனவன் போல் தளர்ந்து போய் அமர்ந்தான்..

 

####################

 

“ஐ லவ் யூ ராம்.. ஐ லவ் யூ ஒன்லி..” என்று மறுபடியும் மறுபடியும் சொல்லி அழுது அழுது புலம்பிக் கொண்டிருந்த தேஜுவின் நிலை கண்டு பதறி போனார்கள் வைஷூவும் விஷ்வாவும்..

 

“அக்கா அக்கா ப்ளீஸ்.. அழாதீங்க அக்கா.. எல்லாம் சரியா போய்டும் கா.. நீங்க அந்த டைரியை படிக்க வேண்டாம்.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க அக்கா..” என்று சொன்ன வைஷு தேஜுவை அணைத்துக் கொண்டு அவள் முதுகில் ஆதரவாக தடவி கொடுத்து அவளை சமாதானப் படுத்தினாள்..

 

“இல்ல வைஷு.. இவன் சொன்னதெல்லாம் மட்டும் உண்மையா இருந்தா நான் இந்த உலகத்தில உயிரோட இருக்க மாட்டேன்.. என்னை நானே அழிச்சுக்குவேன்.. என் ராம்க்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டு நான் உயிரோட இருக்கக் கூடாது.. ஆனா எனக்கு நல்லா தெரியும்.. நான் நிச்சயமாக என் ராமை தவிர வேற யாரையும் விரும்பி இருக்க மாட்டேன்.. என் மனசுல என் ராமுக்கு மட்டும் தான் இடம்.. இவன் இந்த டைரில எழுதியிருக்கிறது எல்லாமே ஃபேக்.. எல்லாமே பொய்.. எதுவுமே உண்மை கிடையாது..” 

 

வெறி பிடித்தவள் போல் எழுந்து ஓடி மயங்கி கிடந்த அருணின் சட்டையை தன் கைகளால் பிடித்து “ஏன் இப்படி பண்ற? எதுக்கு என் வாழ்க்கையோட இப்படி விளையாடுற நீ? உனக்கும் எனக்கும் ஏதாவது தீராத பகை இருக்கா? அதனாலதான் என் ராமுக்கு நான் துரோகம் பண்ணிட்டேனு என்னை நம்ப வச்சு என் உயிரை எடுக்க பாக்குறியா? சத்தியமா சொல்றேன் டா.. இது மட்டும் உண்மைன்னு நீ நிரூபிச்சன்னா நான் அந்த நிமிஷமே உயிரை விட்டுடுவேன்.. அதுக்கப்புறம் இந்த தேஜூ இந்த உலகத்துல இருக்க மாட்டா..” என்றாள் தேஜூ..

 

அதைக் கேட்டு வைஷுவும் விஷ்வாவும் அதிர்ந்து போயினர்.. “அக்கா.. அவசரப்பட்டு சத்தியம் எல்லாம் பண்ணாதீங்க..” என்றவளை திரும்பி தீவிரமாக முறைத்தாள் தேஜூ..

 

“ஏன் இந்த டைரில எழுதியிருக்கிறது எல்லாம் உண்மைன்னு இவன் நிரூபிச்சிடுவான்னு நீ நினைக்கிறியா? அப்படி நடந்ததுன்னா இந்த தேஜூ அதுக்கு அடுத்து ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க மாட்டா..” என்றவளை பயத்துடன் பார்த்தார்கள் வைஷூவும் விஷ்வாவும்..

 

அப்போது அவள் அவன் சட்டையை பிடித்து உலுக்கியதில் அவன் தலை லேசாக தலையணையிலிருந்து நகர்ந்து இருக்க அவன் தலைக்கு பின்னால் பார்த்த தேஜு.. அப்படியே அதிர்ச்சிக்குள்ளாகி அசையாமல் நின்றாள்..

 

அவள் ஏன் அப்படி நிற்கிறாள் என்று புரியாமல் பார்த்த வைஷூவும் விஷ்வாவும் கட்டிலுக்கு அருகில் சென்று அருணின் தலையை பார்க்க அவனுடைய பின்னந்தலையில் விஷ்வா அடித்த இடத்திலிருந்து இரத்தம் வடிந்து தலையணையை நனைத்திருந்தது..

 

அப்போது கல்யாணி அம்மாவுக்கு விழிப்பு வந்து இருக்க அவர் மெல்ல கண்களை திறக்க எழுந்து பார்த்தவர் அருணின் நிலையை கண்டு பதறிப் போனார்.. 

 

“ஐயையோ அந்த தம்பிக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை.. அடப்பாவிங்களா.. அதை போய் இப்படி அடிச்சு போட்டு இருக்கீங்களே.. நீங்க எல்லாம் மனுஷங்க தானா?” என்று புலம்பிக்கொண்டே அவன் அருகில் வந்து “தம்பி தம்பி எழுந்திருங்க தம்பி..” என்று அவனை எழுப்ப முயன்றார்..

 

விஷ்வாவும் வைஷூவும் அடித்ததற்கு மேல் அவனுக்கு மயக்க மருந்து வேறு தெளித்து விட்டோமே என்று பதட்டம் ஆகி அவன் உயிருக்கு ஆபத்தாகி விடுமோ என்று பதைப்பதைத்தார்கள்..

 

“ஐயோ.. அவருக்கு உயிருக்கு ஏதாவது ஆபத்தாயிட போகுது.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்..விச்சு..” என்று வைஷூ சொல்ல “வேண்டாம்.. இவனை இப்படியே விட்டுடுங்க.. செத்து போகட்டும்.. இவன் உயிரோட இருந்தா என்னையும் என் குடும்பத்தையும் நாசம் பண்ணிடுவான்..” என்றாள் தேஜூ குரலில் சிறிதும் இரக்கமில்லாமல்..

 

தொடரும்..

 

கதை ரொம்ப குழப்பமா இருக்குதா? இல்ல இன்ட்ரெஸ்டிங்கா இருக்கா..? படிக்கற நீங்க உங்க விமர்சனத்துல சொல்லிடுங்க மறக்காம ப்ளீஸ்.. 😍😍🤩

உங்க மதிப்பீடுகளுக்காகவும் விமர்சனங்களுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் அன்புத் தோழி 

❤️❤️சுபா❤️❤️

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!