அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 5🔥🔥

4.9
(14)

பரீட்சை – 5
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

என் மனம்
முழுவதும்
என் மன்னவன்
நிறைந்திருக்க ..

இன்னொருவன்
வந்தென்னை
சொந்தம் என்று
கூறும் போது
எப்படி இதயம்
ஏற்றுக் கொள்ளும்…

நானே உன்
மன்னவன் என்று
என் முன்னே
நிற்பவனிடம்..

நான்கு யுகங்கள்
சென்றாலும்
என்னவனுக்கு
தந்த உள்ளம்
இன்னொருவர்
கொள்வதில்லை
என்று எப்படி
விளங்கச் செய்வேன்..

அவனன்றி எனக்குள்
ஓரணுவும்
அசையாது ..

இதை அறியா
அந்த
இதயமில்லா
அரக்கனோ என்னை
நொடிக்கு நொடி
சாகடித்து
நோகடிக்கிறானே…

###############

மன்னவனே…!! வந்துவிடு.!!

பூஜா சொன்னதை கேட்டு விக்கித்து போய் அமர்ந்திருந்த ராம் பிறகு சமாளித்துக்கொண்டு “இதோ பாருங்க பூஜா… அஷ்வின்.. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க ரெண்டு பேரும்..
அம்மா அப்பா பாட்டி தாத்தா தவிர வேற யார் வந்து எது கொடுத்தாலும்.. அவங்க எங்க ஃபோட்டோ காமிச்சாலும் சரி.. இல்ல நாங்க சொன்னதா சொன்னாலும் சரி.. இல்ல நாங்க எழுதின லெட்டர் காமிச்சாலும் கூட அவங்க கிட்ட எதுவும் வாங்கி சாப்பிட கூடாது.. அவங்க கூப்பிட்டா போகக்கூடாது.. பேசக்கூடாது.. புரிஞ்சுதா..? இன்னிக்கு வந்த அதே அங்கிள் இன்னொரு வாட்டி வந்து கூப்பிட்டாருன்னா அவர்கிட்ட போகக்கூடாது.. பேசக்கூடாது.. ஓகே..? ” என்றான்..

” ஓகேப்பா..” என்றனர் இருவரும் ஒரு சேர.. அதன் பிறகு தன் அன்னை தந்தையின் அறைக்கு சென்று அவர்களிடம் நடந்ததை எல்லாம் கூறவும் இருவரும் மிகவும் பயந்து போயினர்..

“என்னடா சொல்ற? யாருடா நம்ம தேஜூவை கடத்தினது?” கவலையுடன் கேட்டார் பார்வதி..

“தெரியலம்மா.. போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கேன்.. ஏதாவது தகவல் தெரிஞ்சா ஃபோன் பண்றேன்னு சொல்லி இருக்காங்க.. வெயிட் பண்ணுவோம்.. நிச்சயமா அவர் கால் பண்ணுவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..” அவன் சொல்லி முடிக்கும் முன் அவனுடைய கைபேசி ஒலித்தது..

இன்ஸ்பெக்டர் தான் பேசினார்.. “சார் உங்க வைஃப் செல்ஃபோன் ட்ரேஸ் பண்ணதுல அவங்க சிக்னல் எங்க ஆஃப் ஆகி இருக்குன்னு எங்களுக்கு தகவல் தெரிஞ்சுது சார்.. உங்க ஃபோனுக்கு அந்த அட்ரஸ் அனுப்பி இருக்கோம்.. நீங்களும் அங்க வந்துடுங்க..”

“ஓகே சார்.. நான் உடனே கிளம்பி வரேன்” என்றவன் தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டு குழந்தைகளை அவர்களிடம் விட்டுவிட்டு இன்ஸ்பெக்டர் அனுப்பிய முகவரி நோக்கி வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.. அந்த முகவரியில் ஒரு பெரிய மாளிகை இருந்தது..

வண்டியை விட்டு இறங்கியவனை பார்த்த இன்ஸ்பெக்டர் “வாங்க சார்.. இங்கே வந்து தான் இந்த வீட்டில உங்க மனைவியோட செல்ஃபோனோட சிக்னல் ஆஃப் ஆகியிருக்கு.. இது வரைக்கும் அவங்க ஃபோன் ஆன்ல தான் இருந்திருக்கு.. அவங்க நிச்சயமா இந்த வீட்டுக்குள்ள தான் போயிருக்காங்க.. சரி வாங்க.. யாராவது இருக்காங்களான்னு பார்ப்போம்..” அவர்கள் அந்த வீட்டை நோக்கி போனார்கள்.. ஆனால் அந்த வீட்டின் முன் இருந்த பெரிய கதவு பூட்டப்பட்டிருந்தது..

“என்ன சார் இது..? பூட்டி இருக்கு..” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் “இருங்க.. யாராவது வராங்களான்னு பார்க்கலாம்..” என்று சுற்று முற்றும் பார்த்தார்..

அங்கே ஒருவர் நடந்து வரவும் “ஒரு நிமிஷம் சார்.. இந்த வீடு பூட்டி இருக்கே.. உள்ள யாரு இருக்காங்க? இந்த வீட்டுக்கு செக்யூரிட்டி எதுவும் கிடையாதா? ரொம்ப பெரிய வீடா இருக்கு..” என்று கேட்ட இன்ஸ்பெக்டரை பார்த்து சிறிது பயந்துபோனவர் “என்ன விஷயம் சார்? ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டார்..

“ஒரு கேஸ் விஷயமா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கோம் சார்.. நீங்க நான் கேட்டதுக்கு பதிலே சொல்லல..” என்றார் அவர்..

“சார்.. இந்த வீடு ரொம்ப நாளா பூட்டி தான் சார் இருக்கு.. இதுல யாருமே இல்ல.. நான் தினமும் இந்த வழியா வந்துட்டு போயிட்டு தான் இருக்கேன்.. இதுவரைக்கும் இந்த வீடு திறந்ததே இல்லை சார்.. இந்த வீட்டுக்கு யாரும் வராததனால இது யாரோட வீடுன்னு கூட எங்களுக்கு தெரியாது சார்..”

“சரி.. நீங்க போலாம்..” என்று சொன்னவர் ராம் சரணை பார்த்து “நீங்க கவலைப்பபடாதீங்க மிஸ்டர் ராம்.. நான் போய் இந்த வீட்டோட ஓனர் யாருன்னு விசாரிக்க சொல்றேன்.. அப்புறம் ஓனர் கிட்ட பேசி பார்க்கலாம்” என்று சொன்னவர் ஒரு சில அழைப்புகள் செய்து பத்து நிமிடங்களுக்குள் அந்த வீட்டின் முதலாளி எண்ணை கண்டுபிடித்திருந்தார்…

“சார்… இந்த வீட்டோட ஓனர் நம்பர் கிடைச்சிருச்சு.. நான் அவருக்கு ஃபோன் பண்ணி பாக்குறேன்..” என்றவர் அந்த எண்ணை அழைக்கவும் “இந்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை ” என்று செய்தி வந்தது..

“வேற வழியே இல்ல.. ஓனர் டெலிஃபோன் நம்பர் தெரியல.. ஓனர் பேரு அருண்குமார்‌.. அது மட்டும் தான் இப்ப நம்மளுக்கு தெரிஞ்ச விஷயம்.. அவரை பத்தி வேற எந்த டீடைல்ஸும் கிடைக்கல.. அது பத்தி விசாரிக்கறதுக்கு முன்னாடி எங்க சீனியர் அஃபிசியல் கிட்ட இருந்து உங்க வைஃப் உள்ள இருக்கலாம்னு சந்தேகம் இருக்குன்னு சொல்லி அவங்களை காப்பாத்தறதுக்கு ஒரு வாரண்ட் வாங்கிட்டு வந்து இந்த பூட்டை உடைச்சு வீட்டை சர்ச் பண்றேன்..  நீங்க இங்கேயே இருக்கீங்களா? நான் இன்னொரு ஹாஃப் அன் ஹவர்ல வந்துடுவேன்..” என்றார் இன்ஸ்பெக்டர்…

“நோ ப்ராப்ளம் சார்… நான் இங்கேயே வெயிட் பண்றேன்.. ரொம்ப தேங்க்ஸ் சார்.. கொஞ்சம் சீக்கிரம் என் வைஃப்பை எப்படியாவது கண்டுபிடிச்சிருங்க சார்..” என்று மறுபடியும் அதே பாட்டை பாடினான் ராம்சரண்..

“அதுக்குத்தானே சார் ட்ரை பண்ணிட்டு இருக்கோம்.. இவ்ளோ ஈவினிங் எல்லாம் நாங்க சீனியர் அஃபிசியல் கிட்ட பர்மிஷன் வாங்கல்லாம் போகமாட்டோம்.. நீங்க உங்களுக்கு சின்ன சின்ன குழந்தைங்க இருக்காங்கன்னு சொன்னதுனால தான் நாங்க இவ்வளவு ஃபாஸ்ட்டா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கோம்.. நீங்க வெயிட் பண்ணுங்க.. நான் வரேன் ” என்றவர் சொன்னபடியே அடுத்த அரை மணி நேரத்திற்குள் அங்கே வந்தார்..

பூட்டை உடைத்து உள்ளே சென்றவர்கள் அங்கே இருந்த அலங்காரங்களையும் வாசகங்களையும் பார்த்து திடுக்கிட்டு போனார்கள்..

அதன் பிறகு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவர்களை கண்ணெதிரே அருண்குமாரும் தேஜஸ்வினியும் அணைத்து கொண்டிருக்கும் அந்த பெரிய ஆளுயர புகைப்படம் அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது..

“ஏன் சார்.. உங்க வைஃபை யாரோ கடத்திட்டாங்கன்னு சொன்னீங்க.. ஆனா இங்க இருக்குற சீன் எல்லாம் பார்த்தா அவங்க விரும்பி தான் இங்க வந்திருப்பாங்க போல இருக்கு.. அதுவும் இந்த ஃபோட்டோவை பாத்தா அவங்களுக்கும் அந்த அருண்குமாருக்கும் ஏதோ..” என்று அவர் முடிக்கும் முன் “சா….ர்ர்ர்ர்” என்று கத்தினான் ராம்சரண்..

“கத்தாதிங்க சார்.. இந்த ஃபோட்டோவை பார்த்து பின்ன நாங்க என்ன நினைக்கிறது? பார்த்தீங்களா? வெளியில அவ்வளவு பூ போட்டு ஒருத்தரை வரவேற்கிற மாதிரி போர்டு பேனர் எல்லாம் வெச்சிருக்கிறார்” என்று சொன்னவர் “சரி நீங்க சொன்னபடி கடத்தியிருந்தா இந்த வீட்டில எங்கேயாவது ரூம்ல தானே இருக்கணும்? பார்க்கலாம்..” என்றவர் “கான்ஸ்டபிள்.. இங்க இருக்கிற ஏதாவது ஒரு ரூம்ல அவங்க இருக்காங்களான்னு சர்ச் பண்ணுங்க” என்று சொல்லி கூட இருந்த காவலர்களை அனுப்பினார்..

“சார்.. எல்லா ரூம்லயும் தேடிட்டோம் சார்.. அவங்க எங்கேயுமே இல்லை” என்று அவர்கள் கூறவும் “சார்.. அவங்க இங்க இருந்து கிளம்பி எங்கேயோ போயிருக்கணும் சார்.. எனக்கு என்னவோ உங்க வைஃப் இஷ்டப்பட்டு தான் அவரோட போயிருக்காங்கன்னு தோணுது.. எங்களை ஏன் சார் இப்படி வீணா அலைய விடுறீங்க?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்..

“நீங்க சொன்னீங்க இல்ல..  உங்க வைஃப் அவங்க ஃப்ரெண்ட் கிட்ட என் ஆளு ஃபோன் பண்ணாருன்னு சொன்னாங்கன்னு… அவங்க அவங்களோட ஆளுன்னு சொன்னது அனேகமா இந்த அருண்குமாரை தான் இருக்கும் சார்” என்று இன்ஸ்பெக்டர் சொல்லவும் ராம்சரண் தன் கைகள் இரண்டையும் இறுக்கிக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்..

“சொன்னா புரிஞ்சுக்கோங்க சார்.. அவ அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது.. அவ என்னை தவிர வேற யாரையும் மனசால கூட நினைக்க மாட்டா..” என்று ராம் சொல்லவும் “இந்த ஃபோட்டோவை பாத்தா அப்படி தெரியலையே சார்.. பாருங்க.. எவ்ளோ சந்தோஷமா சிரிச்சிட்டு இருக்காங்க அவரோட‌…” என்றார் இன்ஸ்பெக்டர் சிறு ஏளன புன்னகையுடன்..

“சார்.. இந்த ஃபோட்டோ நிச்சயமா ஏதாவது ஃபோட்டோஷாப் பண்ணதா தான் இருக்கும்..  என் பொண்டாட்டி இப்படி கிடையாது சார்.. நீங்க வேணா இந்த ஃபோட்டோவை எடுத்து செக் பண்ணி பாருங்க..”

“அதையும் பண்ணி பாத்துடலாம்.. ஆனா வெளில இருக்குற செட்டப் எல்லாம் பார்த்தா எனக்கு என்னமோ உங்க மனைவி விரும்பி தான் அவரோட போயிருக்காங்கன்னு தோணுது.. உங்க திருப்திக்காக நான் அந்த ஃபோட்டோவையும் செக் பண்ணிடறேன்.. ஆனா அந்த ஃபோட்டோ ஒருவேளை ஒரிஜினலா இருந்தா.. ஐ அம் சாரி.. நாங்க இந்த கேஸை இதோட மூட வேண்டியதா இருக்கும்..” என்று சொல்லிவிட்டு அந்த ஃபோட்டோவை எடுக்க சொல்லி கையோடு எடுத்துக் கொண்டு போனார் இன்ஸ்பெக்டர்..

ராம் சரண் அந்த வீட்டை சுற்றி சுற்றி பார்த்தான்.. அவன் மனதில் ஏனோ அவனுடைய தேஜஸ்வினி அந்த வீட்டில் தான் இருப்பது போல் தோன்றியது..

மனமே இல்லாமல் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான் அவன்.. இன்ஸ்பெக்டர் வீட்டை பூட்டிவிட்டு காவல் நிலையத்துக்கு சென்று விட்டார்…

அந்த வீட்டையே பார்த்துக் கொண்டு தன் வண்டியில் ஏறியவன் தன் வீட்டிற்கு எல்லாவற்றையும் இழந்தவன் போல் களைத்து போய் வந்தான்..

#############

அருண்குமார் தேஜஸ்வினிக்கு நிமிடத்திற்கு நிமிடம் புரியாத புதிராகவே மாறிக்கொண்டிருந்தான்.. அவன் செய்யும் ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு குழப்பத்தையே விளைவித்தது…

“இவனுக்கு ஏதாவது பிரச்சினை  இருக்குமோ.. ஏதாவது சைக்கலாஜிக்கல் பிராப்ளம் இருக்கும்னு நினைக்கிறேன்.. என்னை தெரியும்ங்கிறான்.. பொண்டாட்டிங்கிறான்.. என்னை இழந்துட்டேங்குறான்.. என்ன என்னவோ சொல்றான்.. ஒண்ணுமே புரியல.. நானோ இவனை இதுவரைக்கும் பார்த்தது கூட கிடையாது.. ஒருவேளை என்னை மாதிரியே யாரையாவது கல்யாணம் கட்டி இருப்பானோ.. அவங்க செத்துப்போனதனால இப்ப என்னை வந்து அவங்கன்னு நினைச்சுட்டுருக்கானோ” என்று யோசித்தவள் “ஆனா அதே பேர் எப்படி இருக்கும் தேஜஸ்வினி அருண்குமார்ன்னு அழுத்தி சொன்னானே..” என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்..

அவளை கூட்டிக்கொண்டு அறைக்கு சென்றவன் அங்கே இருந்த ஒரு அலமாரியை திறந்து அவளுக்கு காண்பித்தான்.. அங்கு பெண்கள் அணியும் ஆடைகள் அடுக்கப்பட்டிருந்தன.. எல்லா ஆடைகளுமே பல்வேறு விதமான பச்சை நிறத்தில் இருக்கவும்..

“யாரோட டிரஸ் இதெல்லாம்? எதுக்கு எனக்கு காட்டுறீங்க? ஆமா இது என்ன? ஒரே பச்சை கலர் ட்ரஸ்ஸா வாங்கி வச்சிருக்கீங்க..” என்ற அவள் கேட்கவும் “ஏன்னா என்னோட அஷ்ஷு டார்லிங்க்கு பச்சை கலர் தான் ரொம்ப பிடிக்கும்.. அதனாலதான் டிஃபரென்ட் ஷேட்ஸ் ஆஃப் கிரீன்ல உனக்கு எல்லா விஷயத்தையும் வாங்கி வச்சிருக்கேன்.. இதுல உனக்கு எது பிடிச்சிருக்கோ எடுத்து போட்டுக்கோ..” என்று சொன்னான்..

“எனக்கு இதில எந்த ட்ரெஸ்ஸுமே பிடிக்கல.. என் புருஷனுக்கு புடிச்ச கலர் பிங்க்.. அதுல தான் நான் புடவை கட்டிட்டு இருக்கேன்.. அவர் வாங்கி கொடுத்த இந்த டிரஸ்ஸை தவிர வேற எதையும் நான் போட்டுக்கறதா இல்லை..” உறுதியாக சொன்னாள் அவள்..

ஆனால் அவன் தனக்கு பிடித்த நிறம் பச்சை என்று சரியாக சொன்னது அவள் குழப்பத்தை மேலும் அதிகரித்தது..

“நல்லா யோசிச்சு சொல்லு.. நீ இதுல எந்த ட்ரஸ்ஸையும் போட்டுக்க மாட்டியா? உன் டெம்பரரி புருஷன் வாங்கி கொடுத்த டிரஸ் வேணுமா? இல்ல அவன் உயிரோட இருக்கணுமா?” என்று அவன் கேட்கவும் அப்படியே ஸ்தம்பித்து நின்றவள் “இல்ல நான் இந்த டிரஸ்ஸையே மாத்திக்கிறேன்” என்றாள்..

“வெரி குட்.. இப்படிதான் பட்டு பட்டுன்னு புரிஞ்சிப்பா என் அஸ்வினி டார்லிங்…” என்று சொல்லி அவன் அந்த அலமாரியிலிருந்து கணுக்கால் வரை முழுதாக மூடியிருக்கும் ஒரு பச்சை நிற கவுனை எடுத்துக் கொடுத்தான் அவளிடம்..

“இந்தா.. இதை போட்டுட்டு வா” என்று அவளை அடுத்து இருந்த ஒரு அறைக்கு அனுப்பினான்.. அவளோ அவனை நம்பி எப்படி உடை மாற்றுவது என்று யோசித்தபடி அவனையே பார்த்து நின்று கொண்டிருக்க “கவலைப்படாதே.. அஷ்ஷு பேபி.. உன் பர்மிஷன் இல்லாம நான் உன்கிட்ட எந்த அத்துமீறலும் பண்ண மாட்டேன்.. ஆனா கூடிய சீக்கிரம் உன் பர்மிஷன் வாங்கிடுவேன்..” என்று சொன்னவன் அவள் அந்த அறைக்குள் சென்றதும் கதவை இழுத்து தாழிட்டு விட்டு “டிரஸ் சேஞ்ச் பண்ணி முடிச்சதும் என்னை கூப்பிடு அஷ்ஷு டார்லிங்” என்று சொல்லிவிட்டு போனான்..

அவளுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.. “எங்க வந்து மாட்டிக்கிட்டிருக்கேன் நான்.. இப்ப என்ன பண்றது.. பாவம் ராம்.. குழந்தைங்க.. அத்தை.. மாமா.. எல்லாம் அங்கே என்னை காணாம எப்படி துடிச்சுக்கிட்டு இருக்காங்களோ.. இந்த கிராதகன் இப்படி என் உயிரை எடுக்கிறானே.. அவன் யாருன்னே தெரியலையே..” என்று புலம்பியவள் “சரி.. இந்த டிரஸ்ஸை போட்டுட்டு போவோம்.. இதுக்கும் லேட் ஆச்சுன்னா வந்து ஏதாவது சொல்லி மெரட்ட போறான்” என்று சொல்லியபடி அந்த உடையை மாற்றிக் கொண்டாள்..

உடை மாற்றிய பிறகு குரல் கொடுத்தவளை கதவை திறந்து வெளியே அழைத்தவன்..
அவளை மேலிருந்து கீழ் வரை ஆசையுடனும் ஒருவித பிரமிப்புடனும் பார்த்தான்.. அவளை ரசிக்க ஆரம்பித்தான்.. ஆனால் அவன் பார்வை அவளுக்கு என்னவோ போல இருந்தது.. அது பிடிக்காமல் நெளிய ஆரம்பித்தாள்.. அவன் தன்னை அப்படி ஊடுருவி பார்த்தது அவள் உடம்பில் கம்பளி பூச்சி நெளிவது போல் இருந்தது.. அவனோ கண்களில் காதலுடன் அவள் கைக்கு இடையில் தன் கைகளை கோர்த்துக் கொண்டு மேலே இருந்த வரவேற்பறைக்கு வந்தான்..

அங்கே அவன் மாட்டி இருந்த ஆளுயர படம் காணாமல் போனதை பார்த்தவுடன் “பரவால்ல அஷ்ஷு.. உன் டெம்ப்ரரி புருஷன் நீ இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிட்டான்..” என்று அவன் சொன்னதும் அவளையும் அறியாமல் அவள் மனம் துள்ளி குதித்தது..

“என் ராம் என்னை தேடி வந்துட்டாரு..” என்று சந்தோஷப்பட்டவளை அவன் ஒரு ஏளன புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..

தொடரும்….

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!