அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 52🔥🔥

5
(11)

 

பரீட்சை – 52
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

என் உயிரின் மேல்
கை வைத்து
உரு குலைக்க
பார்த்தவனை
உயிரோடு
இருக்கட்டும் என
மனமிரங்கி
விட்டு விட்டேன்..

ஆனால்

என்னவள் பட்ட
துன்பம்
அவன் பட
வேண்டும் என்று
உயிரை மட்டும்
விட்டு வைத்து
மற்றவற்றை
முடித்து விட்டேன்..

எனக்கு உரியவள்
மேல்
கை வைக்க
எவன் நினைத்தாலும்
அவனுக்கும்
இதே கதி தான்
எல்லோருக்கும்
தெரியட்டும்..
என்னவளை தவிர..!!

###################

என்னுயிர் நீயடி..!!

மருத்துவர் சொன்னதைக் கேட்டு நிலவழகனை பார்த்து முறைத்தாள் தேஜூ..

நிலவழகனோ சிறிது பதைபதைப்புடனும் முகத்தில் முயன்று வரவழைத்த புன்னகையுடனும் “ஓ.. சாதிக்கா.. அவன் வீட்ல இருந்து ஏதோ அவசர வேலையா வர சொல்லி  ஃபோன் வந்தது.. அதான் அவன் போயிருக்கான்..” என்று சமாளித்தவனை ஆச்சரியமாக பார்த்தார் அந்த மருத்துவர்..

“இவன் அந்த பையனை அருண்னு தானே கூட்டிட்டிருந்தான்.. இப்ப என்ன சாதிக்குங்குறான்?” என்று எண்ணியவர் “ஏதோ சரியில்லையே.. இந்த பொண்ணு கிட்ட ஏதாவது இந்த பசங்க வம்பு பண்ணி இருப்பாங்களோ?” என்று யோசனையுடன் இருந்தார்..

“ஆமா.. உன் பேரு தேஜஸ்வினின்னு சொன்னாங்க இந்த பசங்க.. சரிதானா?” என்று மருத்துவர் கேட்க “ஆமா டாக்டர்.. என் பேரு தேஜஸ்வினி தான்..” என்றாள் அவள்..

மருத்துவர் மேலும் கேள்வி கேட்டால் தேஜூ ஏதாவது உளறி வைக்கப் போகிறாள் என்று பதட்டம் அடைந்த நிலவழகன் “டாக்டர்.. உங்களுக்கு என்ன..? ஏதாவது சந்தேகமா? நாங்க தான் சொன்னோமே அவ பேரை.. மறுபடியும் அவ பேரை கேக்குறீங்க..? டாக்டர்.. நாங்க சொன்ன மாதிரி அவங்க லேப்ல பை மிஸ்டேக் எதையோ ஸ்மெல் பண்ணி தான் மயக்கம் ஆயிட்டாங்க.. அவங்க அப்படி மயக்கமானப்ப லேப்ல யாருமே இல்ல.. அந்தப் பக்கமா நானும் என் ஃப்ரெண்டும் போயிட்டு இருந்தோம்.. உள்ள முனகுற சத்தம் கேட்டு தான் நாங்க போய் இவங்களை எழுப்பினோம்.. ஆனா இவங்க மயக்கம் ஆயிட்டாங்க..” என்றான் நிலவழகன்..

அவர்கள் எதற்காகவோ அவரிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட தேஜூ “டாக்டர்.. அவங்க சொன்னது உண்மைதான்.. நான் ஒரு பிஎஸ்சி மேக்ஸ் ஸ்டுடென்ட்.. காலேஜ் முடிஞ்சு கெமிஸ்ட்ரி லேப் பக்கம் போகும்போது திடீர்னு உள்ள போய் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.. எனக்கு கெமிஸ்ட்ரியும் பிடிக்கும்..  அங்க போனப்போ ஏதோ ஒரு பாட்டில் கை பட்டு தவறி கீழ விழுந்துடுச்சு.. அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு கூட தெரியல டாக்டர்..” என்று சொன்னவளை தலையை சொரிந்து கொண்டு பார்த்தான் நிலவழகன்..

இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ நினைப்பில் அவள் வேதியியல் பரிசோதனை கூட்டத்திற்கு சென்று எதையோ முகர்ந்து பார்க்க தான் இப்படி ஆகிவிட்டது என்று யோசிக்காமல் பொய் சொல்லி விட்டார்கள்.. ஆனால் அவள் ஒரு கணித பாடப்பிரிவின் மாணவி என்பதை மறந்தே போயிருந்தார்கள்.. நல்ல வேளையாக தேஜூ எதையோ சொல்லி அவர்களை அந்த மருத்துவரின் சந்தேக கேள்விகளில் இருந்து காப்பாற்றி இருந்தாள்..

“இல்ல.. ரெண்டு பசங்க மட்டும் உங்களை தூக்கிட்டு வரவே வேற ஏதோ தவறா நடந்து இருக்கும் போலன்னு கொஞ்சம் எனக்கு யோசனையா இருந்துச்சு.. அதான் உங்ககிட்ட கிளியர் பண்ணிக்கிட்டேன்..” என்றார் அவர்..

“உங்க காலேஜ் பிரின்ஸ்பல்க்கு ஃபோன் பண்ணி கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்க சொல்லணும்…‌‌ இப்படி ஒரு பொண்ணுக்கு மயக்கம் ஆகி ஹாஸ்பிடல் வரைக்கும் வந்தும் அது பத்தி தெரியாம இருக்காங்க.. நான் டியூட்டி முடிஞ்சதும் போய் அவங்களோட ஃபோன் பண்ணி பேசுறேன்” என்று சொன்னார் மருத்துவர்..

“இல்ல டாக்டர்.. நாங்களே அவங்களுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டோம்.. நாளைக்கு நாங்க காலேஜுக்கு போகும்போது அவங்க கிட்ட டீடெயிலா சொல்லிடுவோம்..” என்று சொன்னவனிடம் “குட்.. அப்புறம் மிஸ்.தேஜஸ்வினி.. நீங்களும் இனிமே இந்த மாதிரி ஏதாவது ஒரு இடத்துக்கு போகும்போது தனியா போகாதீங்க.. இந்த மாதிரி ஆர்வக்கோளாறுல எதையும் பண்ணி வைக்காதீங்க.. ஓகேவா..? கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. இந்த பசங்க ரெண்டு பேரும் நல்லவங்களா இருந்ததால உங்களை நேரா ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தாங்க.. இதே வேற மாதிரி பசங்களா இருந்திருந்தா உங்களுக்கு என்ன நடந்திருக்கும்ன்னு கூட சொல்ல முடியாது.. அவங்களை எதிர்க்கிற நிலையில் கூட நீங்க இல்லை.. மயக்க நிலையில் இருந்திருக்கீங்க.. இனிமே கேர்ஃபுல்லா இருங்க” என்று தேஜூவுக்கு அறிவுரை வழங்கினார் மருத்துவர்..

“ஓகே டாக்டர்.. தேங்க்ஸ்.. இனிமே நான் கவனமா இருக்குறேன்..” என்று சொன்னாள் தேஜு..

“சரி.. இவங்களுக்கு இப்ப உடம்பு குணமாயிருச்சு.. ஒன்னும் பிராப்ளம் இல்ல.. நீங்க கூட்டிட்டு போகலாம்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து போய்விட்டார் மருத்துவர்..

“சாதிக் யாரு?” என்று தேஜூ கேட்க “அவன் எங்க வீட்டு பக்கத்துல இருக்கிறவன்.. இன்னைக்கு காலேஜ் விட்டு நான் வெளியில வரும்போது எதிரே வந்தான்.. நான் அவனை ஏத்திக்கிட்டு வண்டியில் வரும்போது தான் வண்டி மக்கர் பண்ணுச்சு.. அப்புறம் அருணை பார்த்தப்போ எனக்கு விஷயம் தெரிஞ்சு நானும் சாதிக்கும் காலேஜ் வந்து உன்னை காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணோம்..”  வாய் கொள்ளாமல் பொய்களை அவிழ்த்து விட்டான் நிலவழகன்..

வெளியே வந்த டாக்டரிடம் “டாக்டர்.. டாக்டர்.. இப்ப எப்படி இருக்காங்க அவங்க..?”

அருண் பதைபதைப்போடு கேட்க “ஒன்னும் பிராப்ளம் இல்ல.. அவங்க மயக்கம் தெளிஞ்சு இப்போ நல்லா ஆயிட்டாங்க.. கொஞ்சம் ஒரு நாள் முழுக்க ஒரு மாதிரி மயக்கமா இருக்கும்.. தூக்கம் நிறைய வரும்.. ஆனா நாளைக்கு எல்லாம் சரியா போயிடும்..” என்று சொன்னவர் “பை த வே.. உங்க பேர் என்ன?” என்று யோசனையுடன் கேட்டார்..

“ஏன் டாக்டர்..? என் பேரு அருண்..” என்று சொல்ல “அப்புறம் ஏன் நீங்க எங்கன்னு உள்ள இருக்குற உங்க ஃப்ரெண்ட்.. ஹான்.. அவரை அழகன்னு தானே கூப்டிட்டு இருந்தீங்க.. அவரைக் கேட்டப்போ உங்க பேரை சாதிக்ன்னு சொன்னார்.. நிஜமா உங்க பேரு என்ன?”

முகத்தில் கேள்வியோடு அவனைப் பார்க்க “அது வந்து.. என் பேரு அருண் சாதிக்.. அவன் என்னை சாதிக்னும் சில சமயம் கூப்பிடுவான்.. அதனாலதான்..” என்று சொல்லி சமாளித்துவிட்டு அந்த அறையில் இருந்து யாரோ வெளியே வரும் சத்தம் கேட்கவே “சரி டாக்டர்.. நான் உங்களை அப்புறம் பார்க்கிறேன்..” என்று சொல்லி ஓட்டமும் நடையுமாக வேகமாக அங்கிருந்து செல்ல அந்த பாதையின் முனையில் சென்று அவன் திரும்புவதற்கும் தேஜு தன்னறையில் இருந்து வெளியே வந்து அவன் முதுகு பக்கத்தை காண்பதற்கும் சரியாக இருந்தது..

“அது அருண் தானே?” என்று அவள் கேட்க அந்த மருத்துவர் “ஆமா அவர் அந்த அருண் சாதிக் தான்..” என்று சொல்லிவிட்டு போக தேஜூ நிலவழகனை பார்த்து முறைத்தாள்..

“அப்படின்னா உங்க பக்கத்து வீட்ல இருக்குற பையன் பேரு அருண் சாதிக்கா?” என்று கேட்க “ஆமா தேஜூ.. அவன் பேரு அருண் சாதிக் தான்..” என்று சொன்னான் நிலவழகன் திருதிருவென விழித்துக்கொண்டு..

“இன்னும் எவ்வளவு பொய் தான் சொல்லுவே.. அவன் மட்டும்தான் என்கிட்ட பொய் சொல்லிட்டு இருந்தானு நினைச்சேன்.. இப்ப நீயும் அவனுக்கு துணையா பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா? சரி விடு.. உன் கிட்ட எனக்கு என்ன பேச்சு? நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்..” என்று சொன்னவள் நிலவழகனுடன்  வெளியே வர ஒரு வாடகை டாக்ஸி பிடித்து அவளை அதில் ஏற்றி விட்டு தான் காரில் ஏறும் முன் திரும்பி பார்க்க அந்த மருத்துவமனையின் பக்கவாட்டில் அருண் ஒளிந்து கொண்டு இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனை பார்த்து தேஜூவுக்கு தெரியாமல் கையை காட்டி விட்டு காரிலே ஏறி சென்றான் நிலவழகன்..

அடுத்த நாள் கல்லூரிக்கு வந்த தேஜுவை கூப்பிட்டு அனுப்பினார் கல்லூரி முதல்வர்..

அங்கே ஏற்கனவே நிலவழகனும் நின்று கொண்டிருக்க “வா தேஜஸ்வினி.. நேத்து என்ன நடந்ததுன்னு என்கிட்ட உண்மையை மறைக்காம சொல்லு..” என்று கேட்டார் சகுந்தலா..

“அது வந்து.. மேடம்.. நேத்து பழைய ஆடிட்டோரியம் பக்கம் ஒரு கியூரியாசிட்டில அது உள்ள அப்படி என்ன தான் இருக்குன்னு பார்க்க போனேன்.. அப்போ யாரோ ஒரு துணியை என் முகத்துல வெச்சு என்னை மயக்கம் போட வெச்சுட்டாங்க மேடம்.. அப்பறம் நான் எழுந்திருக்கும்போது ஹாஸ்பிடல்ல இருந்தேன்..” என்றாள்..

“ம்ம்ம்ம்.. நேத்து நிலவழகன் ஃபோன் பண்ணி அந்த சரண் தான் உன்னை மயக்கம் போட வச்சு உன் கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான்னு சொன்னப்போ அந்த சரணை இன்னைக்கு கூப்பிட்டு சஸ்பென்ட் பண்ணணும்னு நான் நினைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா நேத்து நைட்டு எனக்கு இன்னொரு ஃபோன் வந்தது.. சரணோட அம்மா அப்பா கிட்ட இருந்து.. நேத்து நைட்டு அவங்க வீட்டு கிட்ட அவன் நடந்து போயிட்டு இருந்தப்போ யாரோ முகம் தெரியாத ஒரு ஆளு இருட்டுல அவனை போட்டு சரமாரியா அடிச்சி இருக்கான்.. குத்துயிரும் கொலையுயிருமா அவன் ஹாஸ்பிடல்ல இருக்கான்னு அவங்க அம்மா அப்பா என்கிட்ட அழுதாங்க.. இன்னைக்கு சரணை கூப்பிட்டு சஸ்பெண்ட் பண்ணலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா இப்ப அவன் இருக்கிற நிலைமைக்கு இன்னும் ஒரு வருஷத்துக்கு காலேஜ் பக்கமே தலை வச்சு படுக்க முடியாதுன்னு அவன் அம்மா அப்பா சொன்னாங்க.. நேத்து நிலவழகன் சொன்னதுக்கும் அவங்க சொன்னதுக்கும் வச்சு பார்த்தப்போ ஒருவேளை நிலவழகன் தான் இப்படி பண்ணிருப்பானோ கோவத்துலன்னு எனக்கு சந்தேகமா இருந்தது.. அதான்.. உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டேன்..” என்றார் சகுந்தலா..

நிலவழகன் “அய்யோ மேடம்.. நான் எதுவும் பண்ணல மேடம்.. நான் தேஜூவை அவ வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு எங்க வீட்டுக்கு போயிட்டேன்.. அதுக்கப்புறம் இப்ப காலேஜுக்கு தான் வரேன்.. சரணுக்கு நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மேடம்..” என்றான்..

“ஓ.. அப்படின்னா தேஜூக்கு நடந்த விஷயம் உங்களை தவிர வேற யாருக்காவது தெரியுமா?” என்று கேட்க “அது.. வேற யாருக்கும் தெரியாது மேடம்..” என்றான் தடுமாறிக் கொண்டே நிலவழகன்..

“ஏன் கேக்குறேன்னா ஒருவேளை வேற யாருக்காவது தெரிஞ்சிருந்தா அவங்க இப்படி பண்ணி இருக்கலாம் இல்ல..? அதனால தான் கேட்டேன்..” என்று சகுந்தலா சொல்ல தேஜூவுக்கும் நிலவழகனுக்கும் இதை யார் செய்திருப்பார்கள் என்று நன்றாகவே விளங்கியது..

“ஓகே.. நீங்க ரெண்டு பேரும் போகலாம்.. இதை பத்தி நாம எதுவும் இப்ப பேச வேண்டாம்.. ஏன்னா சரணோட அம்மா அப்பா ஏற்கனவே அவனுக்கு அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான்னு கவலையா இருக்காங்க.‌ ஆனா தேஜு.. நீ இனிமே ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்.. இந்த மாதிரி இடங்களுக்கெல்லாம் தனியா போகாதே.. அப்படியே போகணும்னு தோணுச்சுன்னா இங்க ஆஃபீஸ்ல யார்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லிட்டு அப்புறம் போ..” என்று சொன்ன சகுந்தலா “ரெண்டு பேரும் கிளம்புங்க..” என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார்..

வெளியே வந்த தேஜூ நிலவழகனை திரும்பி பார்த்து “ஏன்.. நேத்து உன் கூட யாரும் இல்லைன்னு சொன்ன? உன் கூட தான் அந்த அருண் சாதிக் இருந்தான்ல?”

அருண் என்ற பெயரில் அழுத்தம் கொடுத்து அவள் கேட்க “இல்ல.‌.. அவன் என் பக்கத்து வீட்ல இருக்குறவன்.. அவனுக்கு இதனால எதுவும் பிராப்ளம் வந்திட கூடாது இல்ல‌‌..? அதுக்கு தான் சொல்லல.. ஏதோ அவசரத்துக்கு ஹெல்ப் பண்ணான்..”

“அப்போ அருண் தான் உன் கூட இருந்தான்னு நீ ஒத்துக்க மாட்டே இல்ல? பாத்துக்குறேன்.. அந்த சரண் குத்துயிரும் குலையுயிருமா இப்ப ஹாஸ்பிடல்ல கிடக்கிறதிலேயே தெரியுது.. என் அருணை தவிர அதை யாரும் பண்ணி இருக்க முடியாதுன்னு.. சரி‌‌.. நீ போ‌.. நான் கிளாசுக்கு போறேன்..” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவளை பார்த்து சுமி “ஏ தேஜூ.. என்ன காலங்காத்தால பிரின்ஸ்பல் ரூமுக்கு போயிட்டு வரே.. காலைலயே என்னடி பஞ்சாயத்து?” என்று கேட்க அவளிடம் நடந்த விஷயம் முழுவதையும் சொன்னாள்..

“அந்த சரணுக்கு நல்லா வேண்டியது தான்.. அவனை எல்லாம் உயிரோடவே விட்டு இருக்க கூடாது அவன் செஞ்ச வேலைக்கு..” என்று சொன்னாள் சுமி..

“பின்ன என் மேல கை வச்சா என் அருண் சும்மா இருப்பானா? அதான் பொளந்துட்டான்… ஏதோ இந்த மட்டுக்கும் அவனை உயிரோட விட்டு வச்சிருக்கானே.. அது வரைக்கும் அவங்க அம்மா அப்பா சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்” என்றாள் தேஜூ பார்வையில் அருணை பற்றிய பெருமிதத்துடன்..

அப்போது அவளைப் பார்த்தபடியே மரத்தடியில் நின்று கொண்டிருந்த அருண் தேஜூ அவனை பார்த்த அடுத்த நொடி தலையை திருப்பி தன் கையிலிருந்த புத்தகத்தை நோட்டம் இடுவது போல் பாசாங்கு செய்தான்..

அதை பார்த்த தேஜூ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு நேரே அவனிடம் சென்றாள்..

அவள் அருகில் வந்து அமைதியாய் வெகு நேரமாய் நின்று கொண்டு இருப்பதை உணர்ந்து அவளை திரும்பிப் பார்த்த அருணிடம், “என்ன பாக்குற? நேத்து நிலவழகனும் நீயும் தான் வந்து என்னை காப்பாத்தினீங்கன்னு எனக்கு தெரியும்.. அது மட்டும் இல்லாம அந்த சரணை நீ தான் அடிச்சு போட்டேன்னும் எனக்கு தெரியும்..” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் அருண்..

ஒருவேளை நிலவழகன் அவளிடம் ஏதாவது உளறி கொட்டி விட்டானோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது..

தொடரும்…

வணக்கம்.. அன்பு நெஞ்சங்களே..!!

இந்த எபி உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு நெனைக்கறேன்.. விமர்சனங்கள் பதிவு பண்ண மறக்காதீங்க.. குறைஞ்ச பட்சம் கதை பிடிச்சிருந்துதுன்னா ரேட்டிங் கொடுங்க.. உங்க ஃப்ரெண்ட்ஸ், மத்த ரீடர்ஸூக்கும் ஷேர் பண்ணுங்க..

எப்போதும் போல உங்கள் விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
❤️❤️சுபா❤️❤️

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!