அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 54🔥🔥

5
(9)

 

பரீட்சை – 54
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

நீ இல்லாத
வாழ்வை
நினைத்து
பார்க்கவும்
முடியவில்லை..

நெஞ்சம் முழுதும்
நிறைந்திருக்கும்
உன்னை
இறக்கி வைக்கவும்
இயலவில்லை..

உன்னை எந்தன்
உளத்திலிருந்து
வெளியேற்றுவதை
விட
உயிரை விடுவது
உன்மத்தம் எனக்கு..

உயிரை கொடுத்தாலும்
கொடுப்பேனே
தவிர
உன்னை யார்
கேட்டாலும்
தரமாட்டேனடா
என்னுளம்
வென்றவனே…!!

####################

என் உயிர் நீயடா..!!

பேருந்து நிறுத்தத்திற்கு சென்று ஒவ்வொரு பேருந்திலும் ஏறி தேஜூ இருக்கிறாளா என்று பார்த்து தேடிக் கொண்டிருந்தான் அருண்..

அப்போது ஒரு பேருந்தில் இருந்து இறங்கிய அருணின் எதிரில் வந்தாள் சுமி..

“ஹே அருண்.. என்ன நீ? இங்க வந்து இருக்க? இவ்வளவு நாளா தேஜு மேல லவ் இல்லன்னு சொல்லிட்டு இப்ப அவ ஊருக்கு போறான்னு தெரிஞ்ச உடனே வந்துட்டியா? இப்பதான் நிலவழகன் சொல்லிட்டு இருந்தான்… நீ வர மாட்டேன்னு சொன்னேன்னு சொல்லி.. இப்பவாவது புரிஞ்சுகிட்டியா அவளை நீ எவ்வளவு லவ் பண்றேன்னு..” என்று கேட்டாள்..

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ஆக்சுவலா என் கஸ்டமர் ஒருத்தர் டிரைவர் இல்லைன்னு சொல்லி என்னை பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு வந்து விட சொன்னாரு.. அவரைதான் பஸ் ஏத்திட்டு வரேன்.. நான் யாரை தேடியும் இங்க வரல.. சரி.. நான் கிளம்புறேன்..” என்று சொன்னவன் திரும்ப அப்போது தான் அங்கே பேருந்துக்காக காத்துக் கொண்டு தன் பைகளுடன் நின்று கொண்டிருந்த தேஜுவை கண்டான்..

அவளை மறுபடியும் பார்க்க முடியாது என்று அடுத்த நொடி தோன்ற அவளையே பார்த்துக்கொண்டு தன்னை மறந்து நின்றான் அவன்..

அவன் அருகில் வந்த நிலவழகன் “டேய் அருண்.. உன்னால அவளை பிரிஞ்சு இருக்கவே முடியாது டா.. இப்போதைக்கு அவகிட்ட உன் காதலை சொல்லிடு.. அவளை ஏத்துக்கிறது‌.. கல்யாணம் பண்ணிக்கறது.. பத்தி எல்லாம் அப்புறம் யோசிக்கலாம்.. அவ போயிட்டான்னா அப்புறம் மறுபடியும் அவளை பார்க்கவே முடியாது டா..” என்றான்..

“டேய்.. அழகா.. சுமிக்கு நான் உன்கிட்ட பஸ் ஸ்டாண்டுக்கு வர மாட்டேன்னு சொன்னது எப்படி தெரியும்? நீ எல்லா விஷயத்தையும் அவங்க கிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்டான் அருண்..

“இல்லடா.. ஆக்சுவலா நான் உனக்கு ஃபோன் பண்ணதே தேஜூ சொல்லித்தான்.. தேஜூ தான் என்கிட்ட அருண் என்னை லவ் பண்றான்னு எனக்கு தெரியும்.. நான் ஊருக்கு போறதை கேட்டான்னா அவன் நிச்சயமா என்னை போக விட மாட்டான்.. அவன் வந்து என்கிட்ட லவ் சொல்லிட்டான்னா நான் ஊருக்கு நிச்சயம் போக மாட்டேன்.. அதனால நான் நிரந்தரமா ஊருக்கு போக போறேன்ற விஷயத்தை அவன் கிட்ட சொல்லு.. அவன் மட்டும் என்னை பாக்க பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான்னா நிச்சயமா நான் எங்க அப்பா கிட்ட கெஞ்சியாவது ஊருக்கு போறதை தடுத்து நிறுத்திடுவேன்னு சொன்னா.. அதனாலதான் நான் உனக்கு அவ போறதை ஃபோன் பண்ணி சொன்னேன்.. ஆனா நீதான் பிடிவாதமா நான் பஸ் ஸ்டாண்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டியே.. நான் அவ கிட்ட அதை சொன்ன அப்பறம் நைட் முழுக்க அழுது இருக்காடா.. அங்க பாரு அவ கண்ணெல்லாம் எப்படி வீங்கி இருக்குன்னு… ஆனா அந்த அழுத மூஞ்சிலயும் இப்ப எவ்ளோ பெரிய சிரிப்பு தெரியுது பார்த்தியா உன்னை பார்த்து..? அவன் உன் மேல உயிரையே வெச்சிருக்காடா.. தயவு செஞ்சு அவகிட்ட உன் காதலை சொல்லிடுடா..” அவன் காதில் வேறு யாருக்கும் கேட்காதவாறு கிசுகிசுத்தான்..

அப்போது அங்கே வந்த சுமி “டேய்.. ரெண்டு பேரும் என்னடா ரகசியம் பேசிட்டு இருக்கீங்க? அருண் நீ யாருக்காக வந்தியோ? அதை விடு.. தேஜூ உன்னை விட்டு ரொம்ப தூரம் போகப் போறதை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்றா.. அவ எப்பவும் அழுதுகிட்டே இருக்கா.. தயவு செஞ்சு நீ அவளை காதலிக்கறேன்னா அதை ஓபனா சொல்லிடு.. அவ அதோட ஊருக்கு போறதை எப்படியாவது நிறுத்தி உன்னோடயே இருந்திடுவா..” என்று சொன்னாள்..

“இதை பாரு சுமி.. நான் யாரையும் காதலிக்கல.. அப்படி இருக்கும்போது நான் எதுக்கு சொல்லணும்? அவ போறதுன்னா போகட்டும்.. எனக்கும் ஒரு தொல்லை விட்டது… இல்லன்னா தினமும் ரோஜா பூவை கொடுத்து லவ் பண்றேன் லவ் பண்றேன்னு சொல்லி என் உயிரை எடுத்துட்டு இருப்பா.. அவ ஊருக்கு போய் நல்லபடியா படிக்கிற வேலையை பார்க்கட்டும்.. சரி.. அழகா நான் கிளம்புறேன்..” என்று நிலவழகனை பார்த்து சொன்னவன் அங்கிருந்து புறப்பட திரும்ப அப்போது தேஜூ அவன் அருகில் வந்தாள்..

“அருண் நான் ஊருக்கு கிளம்புறேன்.. இனிமே நெனச்சாலும் என்னால திரும்பி வர முடியாது.. நான் அங்கேயே இருக்க போறேன்.. தயவு செஞ்சு உன் மனசுல இருக்கற காதலை இப்பவாவது சொல்லிருடா.. நம்ம சேர்றதுல என்ன பிரச்சனை இருந்தாலும் அதை சரி பண்ணிக்கலாம் டா.. நீ என்னை காதலிக்கிறேன்னு சொல்லு.. அது போதும்.. அதுக்கப்புறம் உன்கிட்ட இருந்து தள்ளி நின்னு நான் வாழ்ந்துக்கிறேன்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. உன்னை நினைச்சுட்டு நான் வாழ்ந்துருவேன்.. ஆனா உன் வாயால எனக்கான காதலை கேட்கணும்னு ஆசைப்படுறேன்.. ப்ளீஸ் டா.. ஒரு தடவை என்ன காதலிக்கிறேன்னு சொல்லுடா.. எனக்கு வேற எதுவுமே வேண்டாம்..” என்றாள் தேஜு..

அவன் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சியவளை “ஏய்…” என்றவன் சத்தம் அவளை உலுக்கியது.. அவன் சத்தமாக அப்படி அழைத்ததில் நடுங்கியவள் அவன் மேலும் பேசப் பேச தன் காதுகளால் அதை கேட்க முடியாது காதுகள் இரண்டையும் பொத்திக் கொண்டாள்..

“என்னடி ரொம்ப பசப்பற? இவங்க கிட்ட என் லவ்வை சொல்லிட்டா இவங்க அப்படியே என்னை நினைச்சுக்கிட்டே வாழ்ந்துடுவாங்களாம்.. அப்படி இருக்கிறவ படிக்கிற வயசுல அதுவும் காலேஜ் படிக்கிற வயசுல உனக்கு என்னடி காதல்? உனக்கு என்ன சுகம் வேண்டி இருந்ததோ இந்த வயசிலேயே.. என்னை மாதிரி ஒரு அழகான ஆளை பார்த்ததும் லவ் பண்றேன்னு பின்னாடியே திரிஞ்சிக்கிட்டு இருக்கே.. முதல்ல முறுக்கிட்டு திரிஞ்ச.. மத்த ஆம்பளைங்கன்னா நீ முறுக்கிட்டு திரிஞ்சாலும் உன் பின்னாடி வந்து இருப்பாங்க.. நான் வரலைன்ன உடனே இப்ப இந்த மாதிரி ஆசையா பேசி.. சென்டிமென்ட்டா பேசி.. என்னை கவுக்க பாக்குறியா.. உனக்கு ஒரு ஆம்பளை தான் வேணும்னா அதுக்கு ஊர்ல எத்தனையோ பேர் இருக்காங்க.. என்னை ஏண்டி போட்டு உயிர் எடுக்கிற..? அந்த மாதிரி அழகா எவன் இருக்கானோ அவனை போய் புடி.. என்னை நிம்மதியா வாழ விடு.. இனிமே என் பக்கம் திரும்பி பார்த்தே அதோட மரியாதை கெட்டுடும் உனக்கு… உன்னோட இந்த மேனா மினுக்கி வேலை எல்லாம் வேற எவன் கிட்டயாவது போய் காட்டு.. அதான் உங்க அப்பா ஊருக்கு வர சொல்லிட்டாருல்ல..? அங்கேயாவது போய் ஒழுங்கா இந்த மாதிரி எவனையும் மயக்கிட்டு தெரியாம படிப்புல கவனமா இருந்து வாழ்க்கையில முன்னேறி உங்க அப்பாக்கு பெருமையை சேக்கற வழியை பாரு.. அவரை பார்த்தா நல்ல மனுஷனா தெரியுறாரு..” என்று சொல்லி அவள் இதயத்தை சுக்கு நூறாக உடைத்து இருந்தான் வார்த்தைகளால்..

நிலவழகனோ அவன் மனதை தெரிந்திருந்தும் அவன் ஏன் அப்படி பேசுகிறான் என்று புரிந்து இருந்தும் அவன் அப்படி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தான்.. ஆனால் தேஜூவோ மனம் மாறுவதாகவே இல்லை..

நிலவழகனுக்கு தெரியும் ஒரு வேளை அருண் அப்படி பேசாவிட்டால் தேஜூ மீண்டும் அவன் மனதை மாற்றி அவனோடு சேரத் தான் துடிப்பாள்.. அருணால் அவளை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பான்.. அதைவிட அவள் பிரிவு பரவாயில்லை.. என்று நினைத்து இப்படி பேசி இருக்கிறான்.. என்று அறிந்திருந்தாலும்.. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை..

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அருணின் அருகில் வந்த தேஜூ “அருண் எங்க அப்பாக்கு எந்த ட்ரான்ஸ்ஃபரும் கிடைக்கல.. நான் ஊருக்கு போக போறதும் இல்ல.. ஆனா நான் நிரந்தரமா போ போறேன்னு சொன்னாலாவது உன் மனசுல இருக்குற காதலை சொல்ல முடியாம தடுக்கிற அந்த தடையையும் தாண்டி நீ உன் காதலை என்கிட்ட சொல்லிடுவேன்னு நெனச்சு தான் நான் இப்படி ஒரு டிராமா பண்ணேன்.. ஆனா நீ மனசுல இருந்த காதலை சொல்லல.. என் மனசை சுக்கு நூறா கிழிச்சிட்டே.. இதுக்கு மேல கேவலமான வார்த்தைகளை கேக்குறதுக்கு என் மனசுல தெம்பு இல்ல.. இப்பவும் சொல்றேன்.. நான் உன்னை தான் லவ் பண்றேன்.. என் வாழ்க்கையில் வேற ஒரு ஆம்பளைக்கு இடமே கிடையாது.. நீ சொன்னியே உன்னை விட அழகா ஒரு ஆம்பளையை பார்த்து என் உடம்பு சுகத்துக்காக தேடிக்க சொல்லி.. என் உடம்பு சுகத்துக்காக தான் தேடிக்கணும்னா உன்னையே மயக்கி அடையறதுக்கு எனக்கு எத்தனையோ வழி இருக்கு.. ஆனா என்னோட தேவை உன் உடம்பில்ல.. உன் மனசு.. அதையும் நீ எப்பவோ என்கிட்ட கொடுத்துட்டேன்னு எனக்கு தெரியும்.. ஆனா என்கிட்ட உன் காதலை சொன்னா நான் கஷ்டப்படுவேன்னு எதோ ஒரு காரணம் உன்னை உன் காதலை சொல்ல விடாம  தடுக்குது.. இவ்வளவு நடந்ததுக்கப்புறமும் நீ அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்குறன்னா நீ இந்த ஜென்மத்துக்கு என்கிட்ட உன் காதலை சொல்லவே மாட்டேன்னு நினைக்கிறேன்.. வேண்டாம்.. நீ இனிமே உன் காதலை என்கிட்ட சொல்லவே வேண்டாம்.. நான் இப்படியே உன்னை நினைச்சுக்கிட்டே வாழ்ந்துடறேன்.. இனிமே இந்த தேஜூ.. உன் அஸ்வினி.. உன்னை தொல்லை பண்ண மாட்டா.. இது சத்தியம்..” என்று சொன்னவள் அங்கிருந்து நகர்ந்து சென்று எதிரில் இருந்த ஒரு ஆட்டோவை அழைத்து அதனுள் தன் பைகளை ஏற்றிக் கொண்டிருந்தாள்..

அப்போது அந்த பக்கமாக ஒரு ஆள் ஓடி வர அவன் பின்னே போலீஸ்காரர்கள் துரத்திக் கொண்டு ஓடி வந்தார்கள்…

அந்த ஆள் நேரே தேஜுவின் அருகில் போய் அவள் கழுத்தில் ஒரு கத்தியை வைத்தான்.. “இதுக்கு மேல என்னை துரத்திட்டு வந்தீங்க.. இந்த பொண்ணை கொன்னுடுவேன்.. ஏ.. பொண்ணு. இந்த ஆட்டோவில் அப்படியே ஏறு..” என்றவன்  ஆட்டோ டிரைவரை பார்த்து.. “யோவ்.. வண்டியை எடுத்து நான் சொல்ற இடத்துக்கு ஓட்டு.. என்னை துரத்திகிட்டு யாராவது வந்திங்கன்னா இந்த பொண்ணு உயிர் போயிரும்..” என்று போலீஸை பார்த்து சொல்ல நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த அருணுக்கு உயிரே போய்விட்டது.

“யாருடா நீ? அவளை விடுடா.. அவளுக்கு ஏதாவது ஆச்சு அவ்வளவுதான்.. உன்னை உயிரோட விடமாட்டேன்..” என்று சொல்ல “இனிமே இவளை உயிரோட இங்க விட்டேன்னா நான் மாட்டிக்குவேன்டா.. இவ என்னோட இருக்கிற வரைக்கும் உயிரோட இருப்பா.. ஆனா என்னை துரத்திட்டு வந்து இவளை காப்பாத்த ட்ரை பண்ணீங்கன்னா அந்த செகண்டே இவ உயிர் போயிடும்” என்று சொல்ல அருண் அவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கவும் தேஜூவின் கழுத்தில் கத்தியை லேசாக அழுத்தினான் அந்த திருடன்..

அவள் கழுத்தில் அந்த கத்தி முனை பட்டு லேசாக ரத்தம் வர பயந்து போனான் அருண்.. “டேய் வேணாண்டா.. அவளை எதுவும் பண்ணிடாத.. ப்ளீஸ்.. உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. நீ அவளை கூட்டிட்டு போ‌.. ஆனா அவளை உயிரோட விட்டுடு.. அவளுக்கு ஏதாவது ஆச்சு.. அதோட நீயும் உயிரோட இருக்க மாட்ட.. உன்னை கண்டதுண்டமா வெட்டி போட்டுடுவேன்டா” என்று சொன்னான் அருண்..

அப்போது தேஜூ அந்த ஆளை பார்த்து “நீங்க யாருன்னு தெரியல.. தயவு செஞ்சு நீங்க போகும் போது என்னை கொன்னு போட்டுட்டு போயிடுங்க.. எனக்கு இனிமே வாழ இஷ்டம் இல்லை.. இதோ இப்ப நீங்க என் கழுத்துல கையை கத்தி வெச்சி இருக்கும் போது அப்படியே துடிக்கிற மாதிரி நடிக்கிறாரே.. நான் சாகப் போறேன்னா கூட அவர் காதலை என்கிட்ட சொல்ல மாட்டார்.. அவர் என்னை காதலிக்கலையாம்.. இந்த வார்த்தையை கேட்டப்புறம் எனக்கும் வாழனும்னு ஆசை இல்லை.. நீங்க போறதுக்கு முன்னாடி தயவு செஞ்சு என்னை கொன்னுட்டு போயிருங்க..” என்றாள் தீர்க்கமாய் அந்த திருடனை பார்த்து..

“அஸ்வினி.. உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? எதுக்குடி இப்படி எல்லாம் பேசுற..? உயிர் போச்சுன்னா திரும்பி வராது டி.. டேய்.. நான் நிஜமா சொல்றேன்.. அவளுக்கு ஏதாவது ஆச்சு.. உன்னை உயிரோட விடமாட்டேன்.. அதோட அதுதான் நீ இந்த பூமியில விடற  கடைசி மூச்சுன்னு நினைச்சுக்கோ..” என்று அந்த திருடனை மிரட்டினான் அருண்..

“உனக்கு என்ன வந்தது என் உயிர் போனா..? நீ தான் என்னை விரும்பல இல்ல..? போ.. அப்படியே உன் மெக்கானிக் ஷெட்டுக்கு போய் இன்னும் நாலு வண்டி இருக்கும்.. போய் ரிப்பேர் பண்ணிக்கிட்டு இரு.. நான் செத்துப் போறேன்.. இல்ல எனக்கு எதோ.. என்னவோ ஆகுது..  நீ அதை பத்தி எதுக்கு கவலைப்படுற..? உனக்கு என் மேல காதல் இல்லைன்னு சொல்லிட்டே.. என் காதலையும் கொச்சைப்படுத்திட்ட.. இனிமே நான் உயிர் வாழறதில எந்த அர்த்தமும் இல்லை.. இந்த உயிரை வச்சுக்கிட்டு ஒரு குற்றவாளி தப்பிக்கிறதுக்கு நான் துணையா இருக்க மாட்டேன்..” போலீஸ்காரர்கள் பக்கம் திரும்பியவள் “சார்.. நீங்க வந்து இவனை அரெஸ்ட் பண்ணுங்க.. எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல.. என் உயிர் போனாலும் நான் கவலைப்பட மாட்டேன்..” என்று சொன்னாள்..

ஆத்திரமடைந்த அந்த திருடன் “உன்னை இப்படியே கழுத்தை அறுத்து போட்டு போயிட்டே இருப்பேன் நானு..” என்று சொல்ல அவனிடம் “நீ என்னடா அறுத்து போடுறது..? நானே அறுத்துக்கிறேன்..” என்று சொல்லி அவன் கையில் இருந்த கத்தியை இழுத்து தன் தோளின் பக்கம் வெட்டி விட தோளில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்ட அதைப் பார்த்த அருண் துடித்து போய் “அஸ்வினீ….ய்ய்ய்ய்….” என்று கத்தினான்..

தொடரும்…

ஹாய் நண்பர்களே..!!

கதை பிடிக்குதா? பிடிக்கலையா? கதை போகிற போக்கு இன்ட்ரெஸ்டிங்கா இருக்கா? உங்க கமெண்ட்ஸ் குடுங்க.. ப்ரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க..

உங்க விலைமதிப்பற்ற விமர்சனங்களுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
❤️❤️சுபா❤️❤️

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!