அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 55🔥🔥

5
(11)

பரீட்சை – 55

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

மனதிலே ஒரு

முடிச்சு

போட்டுவிட்டேன்..

 

உன்னை அடைய

ஒரு வழி

கண்டுவிட்டேன்..

 

விடை இல்லா

கேள்விகளோடு

என்னை..

வரவேற்கிறது

எதிர்காலம்..

 

உன்னோடு நான்

வாழப்போகும்

காலத்தை எண்ணி

உள்ளத்தில் ஒரு

கணக்கு போட்டேன்..

 

சரியோ தவறோ

உன்னை சேர

முள் விரித்து

நடக்க சொன்னாலும்

சிறிதும்

நடுக்கமின்றி

தயக்கமின்றி

செய்வேன் 

உன்னுடைய இந்த 

இதயராணி..!!

 

##############

 

காதல் வளர்த்தேன்…!!

 

திருடன் கையில் இருந்த கத்தியை இழுத்து தேஜூ தன் தோளின் பக்கம் வெட்டி விட தோளில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்ட அதைப் பார்த்த அருண் துடித்து போய் “அஸ்வினீ….ய்ய்ய்ய்….” என்று கத்தினான்.. 

 

இரு நொடி நடந்ததை நம்ப முடியாமல் ஸ்தம்பித்து சிலையாய் நின்றவன் பின்பு தான் தன் உறைநிலையில் இருந்து வெளிவந்து ஓடிப்போய் அந்த திருடன் கையில் சரிந்த அவளை தன் மடியில் தாங்கினான்.. தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து அவளுக்கு ரத்தம் வந்த தோள் பகுதியில் வைத்து அழுத்தினான்..

 

“எதுக்குடி இப்படி பண்ண? ஐயோ… உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா… அஸ்வினி…அஷ்ஷூம்மா… ஹாஸ்பிடல் போகலாம் முதல்ல..” என்று அவளை தூக்க முனைந்தவனை கையைப் பிடித்து தடுத்தாள் தேஜூ..

 

“ஒன்னும் தேவையில்லை.. நீ எங்கேயும் என்னை கூட்டிட்டு போக வேண்டாம்.. என்னை இப்படியே விட்டுடு.. நான் இப்படியே செத்துப் போறேன்.. நீ தான் என்னை காதலிக்கலை இல்ல? நான் எப்படி போனா உனக்கு என்னடா? நான் செத்துப் போறேன்..” என்று சொன்னவளிடம் “அப்படியே அறைஞ்சிருவேன் உன்னை.. நீ போயிட்டேனா நானும் செத்துருவேன் டி..” என்று சொன்னவன் அவளை அப்படியே தன் மார்போடு அணைத்து கொண்டான்..

 

அவளுக்கு இரத்தம் மிகுதியாக வெளியேறிக் கொண்டிருக்க அப்படியே மயங்கியவளை தன் கையில் ஏந்தி கொண்டு போய் அவள் முதலில் ஏறப்போன ஆட்டோவில் ஏற்றி ஆட்டோ ட்ரைவரை மருத்துவமனைக்கு போக சொன்னான்..

 

நடந்த அனைத்தையும் பார்த்த நிலவழகனும் சுமியும் அப்படியே ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார்கள்.. என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு புரியவில்லை.. போலீசார் அந்த திருடனை பிடித்துக் கொண்டு போகும் போது நிலவழகனிடம் “நாங்க இவனை கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல லாக்கப்ல போட்டுட்டு அதுக்கப்புறம் அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு ஃபாலோ பண்ண ஹாஸ்பிடல் வர்றோம்.. நீங்க அதுக்குள்ள அவருக்கு போய் ஹாஸ்பிடல்ல ஹெல்ப் பண்ணுங்க.. அந்த பொண்ணுக்கு ரொம்ப ஆழமா கத்தி குத்து பட்டு இருக்கு.. ரத்தம் வேற நிறைய போயிட்டு இருக்கு..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார்கள்..

 

நிலவழகனும் சுமியும் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.. 

 

மருத்துவமனைக்கு சென்ற அருண் தேஜுவை கையில் ஏந்தி கொண்டு உள்ளே சென்று “டாக்டர் எமர்ஜென்சி” என்று மறுபடியும் முன்னே கத்தியது போலவே கத்த அங்கே அதே மருத்துவரும் செவிலியும் அவன் எதிரே வந்து நின்றார்கள்..

 

தேஜுத் தோளில் இருந்த பெரிய காயத்தில் கைகுட்டையால் கட்டு போட்டு இருப்பதையும் அதையும் தாண்டி ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருப்பதையும் பார்த்த மருத்துவர் “ப்ளீஸ் அவங்களை கூட்டிட்டு போய் அந்த ரூம்ல பெட்ல படுக்க வைங்க.. சிஸ்டர் நீங்க போய் வூன்ட கிளீன் பண்ணுங்க..” என்று சொல்லிவிட்டு அவரும் அந்த அறையை நோக்கி நடந்தார்..

 

அருண் தேஜுவை தூக்கிக் கொண்டு அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைக்க அவன் பின்னாலே சென்ற செவிலி அந்த கை குட்டையிலே போட்டிருந்த கட்டை பிரித்து அவளுக்கு அடிப்பட்ட இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்..

 

அதற்குள் பல்வேறு மருந்துகளின் பெயரைச் சொல்லி மருத்துவர் இன்னொரு செவிலியிடம் அதை எல்லாம் எடுத்துக் கொடுக்க சொல்ல அவர் அதை எடுத்துக் கொடுக்க தேஜுவுக்கு சட்டென்று சிகிச்சை ஆரம்பித்தார் அந்த மருத்துவர்..

 

“மிஸ்டர் அருண் சாதிக்..” என்று அழைத்தவரிடம் “சாரி டாக்டர்.. என் பெயர் அருண் தான்.. அது.. இவளோட தொல்லை தாங்காம அருண் சாதிக்னு அன்னைக்கு பொய் சொல்லிட்டேன்.. அவளுக்கு ஒன்னும் இல்லையே” 

 

“அவங்களுக்கு கொஞ்சம் ரத்தம் நிறைய போய் இருக்கு.. மத்தபடி தோள்ல தான் அடிபட்டு இருக்கு.. ஒன்னும் பிராப்ளம் இல்ல.. அது கிளீன் பண்ணி ஸ்டிச் போட்டா..சரி ஆயிடும்.. ஆமா நீங்க என்ன..?! எப்ப பாரு.. எமர்ஜென்சின்னு அவங்களை இதே மாதிரி நிலைமையில எங்க ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்துட்டு இருக்கீங்க..? என்னதான் பிரச்சனை உங்க ரெண்டு பேருக்குள்ள..? யாரு அவங்களை கத்தியால குத்துனது?”   சரமாரியாக கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார் அந்த மருத்துவர்…

 

“டாக்டர்.. அந்த பொண்ணு என்னை விரும்புறா.. ஆனா நான் என் காதலை சொல்லலைங்கறதுக்காக அவ என்னை ரொம்ப தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கா.. அதனாலதான் அன்னைக்கு அப்படி பொய்யான பேர் சொல்லி மறைச்சேன்.. இன்னிக்கி ஒருத்தரை போலீஸ் தொரத்திக்கிட்டு வந்தாங்க.. அவன்கிட்ட மாட்டிக்கிட்டா இவ.. அவன் கையில வச்சிருந்த கத்தியால இவ கழுத்தை வெட்டிடுவேன்னு பயமுறுத்திக்கிட்டு இருந்தான்.. அவன் போலீஸ் கிட்ட இருந்து தப்பிக்க கூடாதுங்கறதுக்காக இவளே அந்த கத்தி எடுத்து தோளில வெட்டிக்கிட்டு மயக்கம் போட்டு விழுந்துட்டா..” அருண் நிகழ்ந்ததை விளக்கி சொன்னான்..

 

“இது போலீஸ் கேஸா? அந்த போலீஸ் திருடனை பிடிச்சுட்டாங்களா?” மருத்துவர் கேட்க அதற்குள் அங்கே வந்த நிலவழகனும் சுமியும் அவர்கள் அருகே வந்து நின்றனர்..

 

நிலவழகன் “ஆமாம் டாக்டர்.. போலீஸ் அவனை புடிச்சுட்டாங்க.. அவங்க அவனை லாக்கப்பில போட்டுட்டு இங்க வரேன்னு சொல்லி இருக்காங்க.. தயவு செஞ்சு நீங்க டிலே பண்ணாம ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிடுங்க ப்ளீஸ்..” என்றான்..

 

“நீங்களும் இவங்களோட தான் இருக்கீங்களா? இந்த முறை என்ன இன்னொரு பொண்ணையும் கூட்டிட்டு வந்து இருக்கீங்க? நீ யாரும்மா?” என்று கேட்க “டாக்டர்.. என் பெயர் சுமி.. நான் தேஜூவோட ஃப்ரெண்ட்.. நானும் அங்க தான் இருந்தேன்..” என்று சொன்னாள்..

 

“இப்பல்லாம் நாங்க போலீஸ்க்கு எல்லாம் காத்துகிட்டு இருக்கிறது இல்ல.. பேஷண்டோட உயிர் தான் முக்கியம்ன்னு ட்ரீட்மென்ட்டை முதல்ல ஆரம்பிச்சிடுவோம்.. அவங்களுக்கு கொஞ்சம் பிளட் தேவைப்படும்னு நினைக்கிறேன்.. உங்க யாருக்காவது அவங்க பிளட் குரூப் இருந்தா பிளட் டோனேட் பண்ண ரெடியா இருங்க.. ஹாஸ்பிடல்ல ரொம்ப பிளட் ஸ்டோக் இல்ல இப்போ..”  சொல்லிவிட்டு தேஜூ இருந்த அறையின் உள்ளே சென்றார்..

 

நிலவழகன் “சுமி அவங்க வீட்ல வேணா சொல்லிடறியா? அவங்களுக்கு விஷயத்தை சொல்லணும் இல்ல?” என்று சொல்ல அருண் “வேண்டாம் அழகா.. அதுக்குள்ள சொல்ல வேண்டாம்.. ரொம்ப பயப்படுவாங்க.. அவ கண்ணை முழிக்கட்டும்.. அப்புறம் சொல்லலாம்..” என்றான்..

 

“அவளுக்கு ஒன்னும் உயிர்க்கு ஆபத்து இல்லன்னு டாக்டர் சொன்னாரு.. ஸ்டிச்சஸ் போடணும் கையிலன்னு சொல்லி இருக்காரு.. அவ்வளவுதான்.. கொஞ்ச நாள்ல சரியா போயிடும்.. கண்ணு முழிச்சப்புறம் அவங்க அப்பா அம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லிக்கலாம்..” என்று சொன்னவன் மருத்துவர் வெளியே வருவதற்காக காத்திருந்தான்..

 

சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் “எல்லா டிரீட்மென்ட்டும் கொடுத்தாச்சு.. இவ்வளவு நேரம் கண்ணு முழிச்சி இருக்கணும்.. ஆனா ஏன் கண்ணு முழிக்க மாட்டேங்கிறாங்கன்னு தெரியல.. இன்னும் 1 ஹவர்ல அவங்க கண்ணு முழிக்கலனா கொஞ்சம் க்ரிட்டிகல் ஆயிடலாம்..” என்று சொன்னவரை “நீங்க தானே டாக்டர் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லன்னு சொன்னீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி..” என்று கேட்டான் அருண்..

 

“அப்படித்தான் சொன்னேன்.. அவங்களுக்கு பிளட் கூட ஏத்தியாச்சு.. அவங்க ப்ளட் ஹாஸ்பிடல்ல ஸ்டாக் இருந்தது.. ஆனாலும் எல்லா மெடிசனும் கொடுத்தும் அவங்க எதுவும் ரெஸ்பான்ட் பண்ண மாட்டேங்குறாங்க எங்க மெடிசின்ஸ்க்கு.. அவங்க உடம்பு நாங்க குடுக்கற மெடிசின்ஸை ஏத்துக்கற மாதிரி தெரியல.. அவங்க மனசளவுல குணமாகணும்னு நெனைச்சா தான் மெடிசின்ஸை உடம்பும் ஏத்துக்கிட்டு வேலை செய்யும்.. நீங்க யாராவது போய் அவங்களோட பேசி பாருங்க.. ஒருவேளை அதுக்கப்புறம்  அவங்க உடம்பு அந்த மெடிசின்ஸை அக்செப்ட் பண்ணி அவங்க எழுந்துக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு..” என்று சொன்னார் அந்த மருத்துவர்..

 

அருண் உடனேயே உள்ளே சென்று படுத்து இருந்த தேஜுவின் அருகில் போய் அமர்ந்தான்..

 

“அஸ்வினி.. அஷ்ஷூம்மா.. ப்ளீஸ்.. கண்ணு முழிச்சுடு.. ஏண்டி பிடிவாதம் பிடிக்கிற..? உன் உயிரோட வெளையாடாதே.. நீ போயிட்டனா எனக்கு உலகமே அஸ்தமிச்சிடும்.. உன் மேல உயிரையே வச்சிருக்கேன் டி.. காதலை சொல்லு.. காதலை சொல்லுன்னு உயிரை எடுக்கிற.. நான் காதலை சொன்னா நீ செத்துருவடி.. நீ என்னோட இருக்க முடியாது.. உன்னை அந்த மாதிரி ஒரு ஆபத்தில சிக்க வைக்கிறதுக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்.. நான் காதலை சொன்னாலும் என்னால உன்னை ஏத்துக்க முடியாதுடி.. உன்னை உயிரோட கொல்றதுக்கு என்னால முடியாது.. தயவு செஞ்சு எனக்காக குணமாகி எழுந்து வாடி.. நீ எங்கேயோ சந்தோசமா இருக்கேன்ற நினைப்பு தான் என்னை உயிரோட வச்சிருக்கு.. அந்த சந்தோஷத்தை கூட எனக்கு இல்லாம பண்ணிடாத டி..” அவள் கையை தன் கையில் பிடித்துக் கொண்டு அதன் மேல் தலையை வைத்துக்கொண்டு அழுதான்..

 

“ஐ லவ் யூ டி அஸ்வினி.. ஆனா உன்கிட்ட என்னால இதை சொல்ல முடியாது.. ஏன்னா இதை சொன்னா நீ என்னோட வாழனும்னு அடம் பிடிப்ப.. என்னால உன்னோட வாழ முடியாது.. எழுந்து வந்துருடி..” அவன் சொல்லிக் கொண்டிருக்க சட்டென்று தன் கட்டிலில் எழுந்து அமர்ந்தாள் தேஜு..

 

அதை கண்டு திடுக்கிட்ட அருண் அவள் கை இரண்டையும் விட்டு அவளை முறைத்து பார்த்தான்..

 

அவன் முகத்தை தன் கையில் ஏந்தியவள் “தேங்க்ஸ்டா அருண்.. ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பா.. இந்த கைல தையல் போட்டது வேற வலிக்குது.. ஆனா நீ ஐ லவ் யூ சொன்ன இல்ல..? அந்த எக்சைட்மெண்ட்ல இந்த வலியை பத்தி எல்லாம் நினைக்கவே தோணலடா.. நீ என்கிட்ட லவ் சொல்லிட்ட இல்ல..? இது போதும்.. என்னோட சேர்ந்து ஊர் சுத்த வேண்டாம்.. நீ என்னோடு சேர்ந்து வேற எதுவுமே பண்ண வேண்டாம்.. என் கழுத்துல ஒரு தாலி கட்டிடு.. அதுக்கப்புறம் இதே மாதிரி  நான் சமத்தா உன் பொண்டாட்டியா உன்னோடயே இருந்துடறேன்.. அவ்வளவு தான் எனக்கு வேணும்.. எனக்கு வேற எதுவும் வேண்டாம்..” என்று சொன்னவளின் கையை எடுத்து அவள் மடியிலேயே வைத்துவிட்டு “முடியாது என்னால அது மட்டும் முடியாது.. உன்னை லவ் பண்றேங்கறதுக்காக உன் வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன்.. என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்கல்லாம் முடியாது.. இதுக்கு தான் நான் என் லவ்வை ஒத்துக்காம இத்தனை நாள் உன்னை வெறுத்து விரட்டி அடிச்சேன்.. நான் உன்னை காதலிக்கிறேன்.. ஆனா என்னால உன்னை ஏத்துக்க முடியாது..” என்று சொன்னான் அருண்..

 

“ஏன்டா..? ஏன் ஏத்துக்க முடியாது..? என்ன பிரச்சனை..? என்ன காரணம் சொல்லு.. அதை ஏதாவது செஞ்சு சரி பண்ண முடியுமான்னு பார்க்கலாம்..” என்று சொன்னவளிடம் “இதெல்லாம் யோசிக்காம நான் இருந்திருப்பேன்னு நினைக்கிறியா? அதெல்லாம் யாராலயும் சரி பண்ண முடியாது.. இங்க பாரு.. இதோட இந்த விஷயத்தை இங்கேயே விட்டுடு.. நீ என்னை காதலிச்சதை ஒரு பாஸிங் க்லௌட்னு நெனச்சு மறந்திரு.. வேற யாராவது ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ… என்னை விட்டுடு.. என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் வாழ்க்கையை அழிக்க முடியாது.. வேண்டாம்.. விடு.. இனிமே நான் உன்னை பார்க்கவே மாட்டேன்.. இனிமே நீ என்னை பார்க்க முயற்சி பண்ணா நான் அந்த காலேஜ் படிப்பை நிறுத்திட்டு வேற எங்கேயாவது போயிருவேன்.. இந்த ஊரை விட்டு.. நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா நீ நிச்சயமா சும்மா இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்.. அதனால இதுக்கு மேல நீயும் நானும் சந்திக்காம இருக்கறது தான் இதுக்கு சரியான வழி.. இதுதான் நீயும் நானும் கடைசியா மீட் பண்றது.. என்னை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ..” என்று சொன்னான்..

 

“ஓகே.. அவ்வளவுதானே.. நான் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கறேன்.. ஆனா ஒரு கன்டிஷன் இருக்கு..” என்றாள் தேஜூ..

 

“என்ன கன்டிஷன்?” என்று கேட்டான் அருண்.. 

 

“நான் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உன்னை அந்த கல்யாணத்துக்கு கூப்பிடுவேன்.. நீ அந்த கல்யாணத்துக்கு வந்து என்னையும் எனக்கு தாலி கட்டற புருஷனையும் வாழ்த்தணும்.. உன் ஆசீர்வாதத்தோட தான் எங்க வாழ்க்கையையே நாங்க ஆரம்பிப்போம்” என்றாள்.. 

 

“அடிப்பாவி.. ராட்சசி.. எதை செஞ்சா எனக்கு உயிரே போற மாதிரி வலிக்குமோ அதை செய்ய சொல்லி கண்டிஷன் போடுறா.. ஆனா அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னா நான் இதை செஞ்சு தான் ஆகணும்..” என்று யோசித்தவன் “சரி நான் வரேன் உன் கல்யாணத்துக்கு.. ஆனா அந்த கல்யாணத்தை தவிர நாம இனிமே வேற எங்கேயும் மீட் பண்ண கூடாது..” என்று சொன்னவனிடம் அவள் “ஓகே .. டீல்..” என்று தலையாட்டி சொன்னாள்..

 

“அப்படின்னா சரி.. குட்பை ஃபார் எவர்” என்று சொல்லிவிட்டு அவளை திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்று விட்டான் அருண்..

 

வெளியே வந்த அருணிடம் சென்று நிலவழகன் “எங்கடா போற? தேஜுக்கு எப்படி இருக்கு?” என்று கேட்க “அஸ்வினி நல்லா தான்டா இருக்கா.. அவளுக்கு உடம்பு சரியில்லாத மாதிரி நடிச்சிருக்கா.. என் வாயால காதலை சொல்ல வெச்சுட்டா.. இனிமே செத்தாலும் நான் அவளை பார்க்க மாட்டேன்.. அதுக்கு அப்புறம் நீ எனக்கு பண்ணி கொடுத்த சத்தியம் ஞாபகம் இருக்கட்டும்.. எந்த காரணத்தை கொண்டும் நான் உன்கிட்ட சொன்னதை அவ கிட்ட நீ சொல்லக்கூடாது..” என்று சொன்ன அருணிடம் “நிச்சயமா சொல்ல மாட்டேன் டா..” என்று அழகன் சொன்னவுடன் அவன் கையைப் பிடித்த அருண் “தேங்க்ஸ்டா..” என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டான்..

 

தொடரும்..

 

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்.. கமெண்ட்ஸ் போட மறக்காதிங்க.. ஷேர் பண்ணுங்க..

 

உங்கள் பிரிய சகி..

💖💖சுபா💖💖

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!