பரீட்சை – 60
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உன்னால் என்னை
விட்டு தர முடியாது..
ஒருவருக்கும்..
தெரிந்தும் ஏனடா
தள்ளி வைக்க
முயல்கிறாய்..
உனக்கானவள்
நான் என்று
உன் உள்ளம்
உன்னிடம்
சொல்லவில்லையா?
எவனுக்கோ நான்
சொந்தம் என
இரக்கமே இல்லாமல்
நீ சொல்லும்
பொய்யை
உன் இதயம்
ஏற்றுக் கொள்ளுமா?
சொல்லும் போதே
உன் மனத்தை
அறுத்து
கூறு போடுவது
போல
வலிக்கவில்லையா?
வலியில் இதயம்
துடிக்கவில்லையா?
சொல்லடா என்
இரக்கமில்லா
அரக்கனே..!!
################
இரக்கமற்ற அரக்கன்…!!
செவிலியை பார்த்த தேஜு “ஸிஸ்டர்.. என்னை எதுக்கு எழுப்புனீங்க? ஏதாவது ஒரு விஷ ஊசி போட்டு என்னை கொன்னுடுங்க.. நான் உயிர் வாழவே விரும்பல.. அந்த பக்கத்து ரூம்ல இருக்கிறவன் எனக்கு தாலி கட்டினான்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே என் உயிர் போயிடுச்சு..”
கதறி அழுதவளின் தோளில் கை வைத்த அந்த செவிலி “நாங்கல்லாம் ஒரு உயிரை காப்பாத்த இங்கே உட்கார்ந்து இருக்கிறோமே தவிர விஷ ஊசி போட்டு ஒரு உயிரை கொல்றதுக்கு இல்லை.. முதல்ல உங்க டென்ஷனை எல்லாம் விட்டுட்டு நான் சொல்றதை பொறுமையா கேளுங்க..” நிதானமாக பேசினார் அவர்..
“மேடம்.. உங்களை ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து சேர்த்தவரு பக்கத்து ரூமில இருக்காருன்னு சொன்னேன்.. ஆனா அது இந்த ரூம் இல்ல மேடம்.. உங்க ரூமுக்கு அந்த பக்கத்து ரூம்ல ஒருத்தர் டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்காரு.. அவருக்கு ரொம்ப அடிப்படல.. லேசா தான் அடிபட்டு இருக்கு.. அவர்தான் உங்களை கொண்டு வந்து இங்க சேர்த்தாரு.. இவரை நித்திலான்னு ஒருத்தங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணாங்க.. அந்த சரண் ரொம்ப க்ரிட்டிக்கலான ஸ்டேஜ்ல இருக்காரு.. அவர் உயிர் பிழைக்கிறதே கொஞ்சம் கஷ்டம் தான்” என்று விவரத்தை சொன்னாள்..
தேஜுவுக்கு அப்போதுதான் உயிரே வந்தது.. அங்கிருந்து ஓடி அந்த செவிலி சொன்ன அறையில் எட்டிப் பார்த்தவள் அங்கே நிலவழகன் சுமி அருண் மூவரும் இருக்க அருணுக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள்..
ஓடிச் சென்று அருணை கட்டித் தழுவி கதறி கதறி அழுதாள் தேஜு..
“ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சுடா.. அந்த சரண் தான் என் கழுத்துல தாலி கட்டிட்டான்னு நெனச்சுக்கிட்டு என் வாழ்க்கையே இருண்டு போச்சுன்னு நினைச்சேன்.. இன்னும் ஒரு செகண்ட் அந்த சிஸ்டர் லேட்டா வந்து சொல்லி இருந்தா கூட ஏதாவது ஒரு கத்தி எடுத்து என்னை நானே குத்திக்கிட்டு செத்து இருப்பேன்.. இதை தானடா நான் முன்னாடியே கேட்டேன்.. எனக்கு முன்னாடியே தாலி கட்டி உன் பொண்டாட்டி ஆக்கி இருக்கலாம் இல்ல..?” துக்கம் தாங்காமல் பொறுமினாள்..
அருண் நிதானமாக அவளை தன்னிடம் இருந்து விலக்கி “இங்க பாரு நீ நினைக்கிற மாதிரி இந்த தாலியை நான் உனக்கு கட்டல..” என்று சொல்ல “என்ன..? நீ கட்டலையா..? அப்ப யாரு அந்த சரண் கட்டினான்னு சொல்ல போறியா? அந்த சிஸ்டர் வந்து சொல்லிட்டாங்க.. நீ தான் என்னை இங்க கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ண.. என் புருஷன்னு நீ தான் இந்த ஃபார்ம்ல கையெழுத்து போட்டு இருக்கேன்னு.. அதனால மறுபடியும் மறுபடியும் என்னை பொய் சொல்லி ஏமாத்தலாம்னு நினைக்காத..” என்றாள் தேஜூ..
“உனக்கு எப்பவும் அவசரம் தானா..? எதையுமே பொறுமையா கேட்க மாட்டியா? சரியான அவசர குடுக்கையா இருக்க.. அந்த சிஸ்டர் உன்கிட்ட என்ன சொன்னாங்க? அருண் தான் உன் புருஷன்னு சொன்னாங்களா?” என்று கேட்க “இல்ல.. அந்த ரூம்ல உன் புருஷன் தனக்கு அடி பட்டத்துக்கு ட்ரீட்மென்ட் எடுத்து இருக்காருன்னு சொன்னாங்க.. இந்த ரூம்ல நீதானே ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்க..?” என்று கேட்க “இந்த ரூம்ல நான் மட்டும் ட்ரீட்மென்ட் எடுக்கலையே.. நிலவழகனும் தான் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கான்.. இதோ இங்கதான் நிக்கறான்.. அவனுக்கும் அடிபட்டு இருக்கு இல்ல.. இத்தனை நேரம் அவனுக்கு தான் ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருந்தாங்க..” என்றான் அருண்..
அவள் அதிர்ச்சியுடன் நிலவழகனை பார்க்க அவனும் சிறிது தடுமாற்றத்துடனும் தயக்கத்துடனும் “ஆமாம்.. அருண் தான் என்னை உனக்கு தாலி கட்ட சொன்னான்.. வேற வழி இல்லாம நானும் தாலி கட்டிட்டேன்.. இல்லன்னா அந்த சரண் மறுபடியும் மறுபடியும் உனக்கு தாலி கட்ட ட்ரை பண்ணிட்டு இருந்தான்.. அதனாலதான் வேற வழி இல்லாம நான் தாலி கட்ட வேண்டியதா போச்சு” என்றான் நிலவழகன்..
“இதுக்கு நீ அங்கேயே என்னை கழுத்தை நெறிச்சு கொன்னு போட்டு இருக்கலாம்..” என்று சொன்னவள் மேலும் அழ ஆரம்பித்தாள்.. ஆனால் அப்போது அருண் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டதை கண்டு கொண்டாள் அவள்..
சட்டென ஏதோ தோன்ற “பொய் சொல்லாத நிலவழகா… எனக்கு தெரியும்.. என் கழுத்துல அருண் தான் தாலி கட்டி இருக்கான்.. எதுக்கு பொய் சொல்ற? ப்ளீஸ்.. தயவு செஞ்சு பொய் சொல்லாத.. உண்மையை சொல்லு..” கெஞ்சினாள் நிலவழகனிடம்..
“உனக்கு என்ன கிறுக்காடி புடிச்சிருக்கு? இவ்வளவு தூரம் நான் சொல்றேன்.. சரி.. எங்களை தான் நீ நம்ப மாட்டே.. இதோ நிக்கிறாளே உன் ஃப்ரெண்டு சுமி.. அவ உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்டு தானே..? அவன் உன்கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லல்ல? அவ கிட்ட கேளு..” படபடத்தான் அருண்..
தேஜூ சுமியை பார்க்க சுமியும் “ஆமாம் தேஜூ.. நிலவழகன் தான் உன் கழுத்தில தாலி கட்டினான்..” என்று சொல்ல அவளுக்கு வானமே இடிந்து தன் தலையில் விழுந்தாற் போல் ஒரு நொடி இருதயமே நின்று துடித்தது..
அதன் பிறகு சிறிது நிதானித்தவள் “உன்கிட்டயும் ஏதோ கதை சொல்லி உன்னை மாத்திட்டானா? இப்ப என்ன? இந்த நிலவழகன் தான் எனக்கு தாலி கட்டி இருக்கான் இல்ல?” என்று கேட்டாள் அவள்..
“ஆமாடி.. நிலவழகன் தான் உன் கழுத்துல தாலி கட்டி இருக்கான்.. அவன் தான் உன் புருஷன்..” அழுத்தமாக சொன்னான் அருண்..
“நிஜமா சொல்லு நிலவழகா.. நீ என் புருஷன்னு இவங்க பொய் சொல்லும் போது உனக்கு வலிக்கல.. எப்படிடா உன்னால இதை செய்ய முடியுது..? நீ சொல்றபடி நிலவழகன் எனக்கு தாலி கட்டி இருந்தான்னா அதை நான் கன்ஃபார்ம் பண்ணனும்னு நினைக்கிறேன்..” என்று சொன்னவள் நிலவழகனை பார்த்து “என்னோட கிளம்பு..” என்றாள்..
“எங்க?” என்று நிலவழகன் கேட்க “எங்க..? எதுக்கு..? என்ன..? இதெல்லாம் கேட்காதே.. என்னோட வா.. வந்து வண்டியை எடு.. நான் கூட்டிட்டு போக சொல்லுற இடத்துக்கு கூட்டிட்டு போ..” என்று சொன்னவள் நிலவழகனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள்..
நிலவழகன் காரில் அவனை ஏறச் சொன்னவள் அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும் தானும் அவன் பக்கத்து இருக்கையில் ஏறி அமர்ந்து அவனை வண்டி எடுக்கச் சொன்னாள்..
அருண் அவர்கள் பின்னாடியே ஓடி வந்தவன் தன்னுடைய வண்டியை எடுத்து சுமியையும் அழைத்துக் கொண்டு அவர்களை பின்தொடர்ந்து சென்றான்..
அவள் சொல்லிக் கொண்டே போன வழியில் காரை ஓட்டி சென்ற நிலவழகன் தன் காரை நிறுத்த சொன்ன இடம் சார்பதிவாளர் அலுவலகம்..
“இறங்கு நிலவழகா..” என்று அவள் சொல்ல அவனோ முகத்தில் பெரும் அதிர்ச்சியோடு “இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்து இருக்கே..?” பதட்டத்துடன் கேட்டான்..
அப்போது அவர்கள் பின்னாடியே வண்டியில் வந்திருந்த அருணும் சுமியும் அங்கே வந்து நின்றார்கள்..
“நீங்களும் வந்துட்டீங்களா? நல்லதா போச்சு.. ஆமா.. நீ என்ன கேட்ட..? இங்க எதுக்கு வந்திருக்கோம்ன்னா.. இது என்ன கேள்வி நிலவழகா.. எனக்கு தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கி இருக்க.. அதை ரெஜிஸ்டர் பண்ண வேண்டாமா? வா.. போய் நம்ம மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிட்டு அப்படியே வீட்டுக்கு போய்.. இன்னைக்கு நம்ம முதலிரவை முடிச்சிடலாம்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அருணின் முகத்தை நோட்டமிட அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..
“என்ன ரிஜிஸ்டர் மேரேஜா..?” பயத்துடன் கேட்டான் நிலவழகன்..
“ஆமா.. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்.. சாட்சி கையெழுத்து போடறதுக்கு கூட எனக்கு சுமி இருக்கா.. உனக்கு சாட்சி கையெழுத்து போடறதுக்கு அருண் இருக்கான்.. அப்புறம் கல்யாணம் முடிச்சுட்டு நேரே கழுத்துல மாலையோட வீட்டுக்கு போனா எங்க அப்பா நிச்சயம் ஒத்துப்பாரு.. என் விருப்பத்துக்கு எதிரா அவர் எதுவும் சொல்ல மாட்டாரு.. இன்னைக்கே எங்க வீட்டிலேயே நம்ம ஃபர்ஸ்ட் நைட்ட வச்சுக்கலாம்… உங்க வீட்ல இப்போதைக்கு சொல்ல முடியலனாலும் மெதுவா சொல்லிக்கலாம்..” என்று நிதானமாக பதட்டமில்லாமல் சொன்னவளை ஆத்திரத்தோடு பார்த்தான் அருண்..
“ஏய்.. என்ன விளையாடுறியா? உன் முட்டாள்தனத்துனால வேற வழி இல்லாம தாலி கட்டினான் அவன்.. இப்ப என்னடான்னா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாங்கற.. ஒழுங்கா படிப்பை முடிச்சுட்டு அதுக்கப்புறம் உங்க அப்பா கிட்ட சொல்லிட்டு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோ.. அதுவரைக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்..” என்று அருண் சொல்ல “இதோ பாருடா.. வந்துட்டாரு.. கருத்து கந்தசாமி.. ஹலோ.. நானும் நிலவழகனும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கோம்.. எங்க வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கணும்னு நாங்க ரெண்டு பேரும் பேசி தான் டிசைட் பண்ணனும்.. நீ யாரு இதுல நடுவுல வர்றத்துக்கு… போனா போகுது.. நிலவழகன் பக்கம் சாட்சி கையெழுத்து போட ஆள் இல்லையேன்னு உன்னை சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டேன்.. அவ்வளவுதான்.. மத்தபடி எங்க டெசிஷன்ல தலையிடற உரிமை எல்லாம் உனக்கு கிடையாது.. உன்னால சாட்சி கையெழுத்து போட முடியாதுன்னா அப்படியே கிளம்பி போ.. நான் வேற யாரையாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்.. ஆனா இன்னிக்கு என்னோட ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்தே தீரும்..” என்றாள் அவள்..
நிலவழகனும் அருணை பார்த்து “டேய் அருண்.. என்னடா இது..?” என்று அழும் தொனியில் கேட்க “ஏன் அஸ்வினி..? உங்க வீட்ல மட்டும் ஒத்துக்கிட்டா போதுமா? அவன் வீட்டில் ஒத்துக்க வேண்டாமா? இஷ்டத்துக்கு நீ உன் பாட்டுக்கு முடிவெடுக்கிற?” என்று கேட்க சத்தமாக சிரித்தவள் “இதெல்லாம் அவன் எனக்கு தாலி கட்டினான் பாரு.. அதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும்.. அவன் வீட்ல சொல்லாம தாலி கட்டுறது மட்டும் சரியா..? தாலியே கட்டிட்டான்.. இப்ப எங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதுல என்ன பிரச்சனை..? ஆமா.. நீ எதுக்கு இவ்ளோ கோபப்படுற? நீ கொஞ்சம் அடங்கு.. நான் நிலவழகன் கிட்ட பேசிக்கிறேன்..” என்று சொன்னவள் அவன் பக்கம் திரும்பி “வாடா புருஷா.. நம்ம போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்று சொல்லி அவன் கையை பிடித்து தர தரவென இழுத்துக் கொண்டு அந்த பதிவு திருமண அலுவலகத்துக்குள் நுழைந்தாள்..
அவள் நிலவழகனை புருஷா என்று கூப்பிட்டது கேட்டு அருணுக்கோ உடம்பெல்லாம் பற்றி எரிந்தது..
நிலவழகன் அவள் கையில் இருந்து தன் கையை விலக்க முயன்று தோற்றுப் போனான்..
உள்ளே சென்றவள் அங்கிருந்த அலுவலரை பார்த்து “நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கணும்.. சாட்சி கையெழுத்து போட பின்னாடி ரெண்டு பேர் வர்றாங்க.. நீங்க ஏற்பாடு பண்ணுங்க..” என்று சொன்னாள்..
“என்னம்மா திருட்டு கல்யாணமா?” என்று அவர் கேட்க “ஏற்கனவே தாலி கட்டி கல்யாணம் பண்ணியாச்சு சார்.. இப்ப வெறும் ரெஜிஸ்ட்ரேஷன் மட்டும்தான் பாக்கி.. நீங்க அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. நான் கையெழுத்து போட வேண்டியவங்களை கூட்டிட்டு வரேன்..” என்று சொன்னவள் சுமியை அழைத்து வந்தாள்.. சுமியும் திருதிருவென அவள் பின்னால் பலியிடப் போகும் ஆடு போல விழித்துக் கொண்டு சென்றாள்..
“ஏய் தேஜு.. வேணாம்டி.. இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம்.. நான் சொல்றதை கேளு..” என்று சொன்னவளிடம் “ஏண்டி நீ தானே சொன்ன.. நிலவழகன் தான் எனக்கு தாலி கட்டினாருன்னு.. இப்ப நாங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்றதுல உனக்கு என்னடி பிரச்சனை..?” என்று கேட்டாள் தேஜூ..
“அதில்லடி.. இன்னைக்கு வேணாண்டி தேஜூ.. கொஞ்சம் யோசிச்சு பண்ணிக்கலாம்.. அவசரப்படாத..” என்று சுமி சொல்ல “அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் வராதுடி.. நீ பேசாம வந்து சாட்சி கையெழுத்து போடு.. வா..” என்று அவளை இழுத்துக் கொண்டு போனாள் தேஜூ.. அவர்கள் பின்னாடியே சென்ற அருண் பல்லை கடித்துக் கொண்டு அங்கே நிற்க தேஜு “என்ன சார்.. ஏற்பாடு பண்ணிட்டீங்களா?” என்று அங்கிருந்த சார் பதிவாளரிடம் கேட்டாள்..
“அம்மா.. மாப்பிள்ளை பேர் என்ன? பொண்ணு பேரு என்ன? எதுவுமே நீங்க சொல்லல.. உங்களோட ஐடி ப்ரூஃப் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்களா?” என்று கேட்டார் அவர்..
“என் ஐடி ப்ரூஃப்.. என்கிட்ட இருக்கு சார்.. நிலவழகா நீ ஏதாவது ஐடி ப்ரூஃப் வச்சிருக்கியா?” என்று கேட்க சட்டென்று “இருக்கு..” என்று சொல்லிவிட்டான் அவன்.. அருண் அவன் காலை தன் காலால் ஓங்கி மிதிக்க “இல்லை இல்லை.. என்கிட்ட இல்லை..” என்றான்..
தேஜூ அவனிடம் “உன் வேலட்டை என்கிட்ட கொடு..” என்று கேட்க தயக்கத்தோடு அதை எடுத்துக் கொடுத்தான் அவளிடம்.. அதன் உள்ளே அவன் டிரைவிங் லைசன்ஸ் இருக்க அதை எடுத்து அவரிடம் கொடுத்தவள் “இந்தாங்க சார்.. எங்க ரெண்டு பேரோட ஐடி ப்ரூஃப்..” என்றாள்..
“ஓகே மா.. ஐடி ப்ரூப் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கு.. ஆனா உங்க கல்யாணம் நடந்ததுக்கு சாட்சி ஏதாவது இருக்கா? இந்த கல்யாண இன்விடேஷன்.. கல்யாணம் பண்ணி வச்ச புரோகிதர்.. அந்த மாதிரி” என்று
கேட்க “எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்ச ஐயர் இருக்கிறார்.. ஆனா அவரை அழைச்சிட்டு வரதுல ஒரு சின்ன பிராப்ளம் சார்.. அவரு வருவாரான்னு தெரியல.. ஏன்னா எங்க கல்யாணம் நடந்தப்போ, ஒரு குட்டி கலாட்டா நடந்துது.. அதுல பயந்து ஓடிட்டாரு.. இப்ப அவரை எங்க போய் புடிக்கிறது சார்..?” என்று கேட்டாள் அவள்..
அதைக் கேட்ட அந்த பதிவாளருக்கோ ஏதோ தவறாக தெரிய அவர்களை சந்தேகமாய் ஒரு பார்வை பார்த்தார்..
தொடரும்..
ஹாய் பிரண்ட்ஸ்.. கோவப்படாதீங்க.. அடுத்த எபில நிச்சயமா தேஜுவுக்கு எப்படி கல்யாணம் நடந்ததுன்னு உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடும்.. தவறாமல் படிங்க..
ஷேர் பண்ணுங்க.. கமெண்ட் போடுங்க..
ஆவலுடன் காத்திருக்கும்
உங்கள் தோழி
❤️❤️சுபா❤️❤️