பரீட்சை – 61
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உனக்கும் எனக்கும்
பதிவுத் திருமணம்
உறவு முறையில்
கணவன் மனைவி..
உன்னத உறவை
உரக்க சொல்லிட முடியாத
உறுத்தலான நிலை
உன்னவனுக்கு..
என்ன செய்வேனடி
நான்..
எதுவும் இல்லை
என் கையில்
எழுதுபவன் அன்று
எப்படி எழுதி
வைத்திருக்கிறானோ..
எதிர்காலம் யார் அறிவார்..
################
கணவன் மனைவி..?!!
தேஜூ சொன்னதை கேட்ட பதிவாளருக்கு ஏதோ தவறாக தெரிய “ஏம்மா நீ சொல்றதை கேட்டா பயமா இருக்கேமா.. இந்த கல்யாணத்துனால நாளைக்கு போலீஸ் கீலீஸ்ன்னு எதுவும் பிரச்சனை வராது இல்ல..?” என்று பதிவாளர் கேட்க “அதெல்லாம் ஒன்னும் வராது சார்.. நீங்க எங்க ஐடி ப்ரூஃப் வேணும்னா பாருங்க.. எங்க ஃபேமிலி பேக்ரவுண்ட்டை செக் பண்ணிக்கோங்க.. நாங்கெல்லாம் ரொம்ப டீசண்டான பேமிலி சார்.. ஆக்சுவலி ஒரு பொறுக்கி எனக்கு கட்டாய தாலி கட்டணும்னு ட்ரை பண்ணான்.. இந்த நல்லவர்தான் அவன்கிட்ட இருந்து என்னை காப்பாத்தி எனக்கு தாலி கட்டினார்..” என்று நிலவழகனை காட்டியவள் “இதுக்கு இங்க நிக்கிறாங்களே.. இவங்க ரெண்டு பேரும் சாட்சி..” என்று சுமியையும் அருணையும் அந்த பதிவாளரிடம் காண்பித்து சொன்னாள்..
“ஏதோ நீ சொல்ற.. நான் நம்புறேன்.. கல்யாணம் நடந்ததுக்கு எந்த ஃப்ரூப்வும் இல்லாததுனால இப்போ உங்க மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிட்டு இங்க நோட்டீஸ் போர்டுல 30 நாளைக்கு ஒட்டுவோம்.. யாரும் உங்க கல்யாணத்துக்கு எதிர்ப்பு சொல்லலைன்னா அப்புறம் உங்க கல்யாணத்தை கன்ஃபார்ம் பண்ணுவோம்.. ம்ம் ம்ம்.. நல்ல நேரம் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு..அதுக்கு அப்புறம் டைம் நல்லா இல்ல.. அதனால நான் ரிஜிஸ்டர் தரேன்.. முதல்ல நீங்க கையெழுத்து போட்டுடுங்க.. அதுக்கப்புறம் மேல பேர்.. டீடெய்ல்ஸ் எல்லாம் ஃபில் பண்ணிக்கலாம்.. முதல்ல நீங்க ரெண்டு பேரும் கையெழுத்து போட்டு மாலை மாத்திக்கங்க..” என்று சொல்லி பதிவேட்டை அவர்கள் பக்கம் திருப்பி அங்கிருந்த சிப்பந்தியை மாலைகளை கொண்டு வரச் சொன்னார்..
அவர் மாலைகளோடு வந்து நிற்க வேகமாக பதிவேட்டில் மணப்பெண் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் தேஜஸ்வினி என்று தன் கையொப்பத்தை இட்டு விட்டாள் தேஜு..
கையெழுத்து போட்டவுடன் அந்த பதிவேட்டை நிலவழகன் புறம் தள்ள பேனாவை கையில் வாங்கிய நிலவழகன் கை நடுங்க நின்று கொண்டிருந்தான்.. அதை பார்த்தவளோ மறுபுறம் திரும்பி வாயில் கை வைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.. திரும்பி பார்க்க அங்கே பதிவேட்டில் மணமகன் கையெழுத்திட வேண்டிய இடத்தில் அருண் குமார் என்று கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான் அருண்..
#############################
அருணின் டைரியில் இருந்து..
அருண் பதிவேட்டில் கையெழுத்திட்டதை படித்த வைஷு “அப்பாடா.. நான் பயந்தே போயிட்டேன்.. இப்பதான் நிம்மதியா இருக்கு.. அப்போ அக்காக்கு தாலி கட்டுனது நீங்க தானா அருண் சார்?” என்று முகம் மலர்ந்த சிரிப்போடு கேட்டவளை பார்த்து புன்னகைத்த அருண்… “ஆமா.. என் கண் முன்னாடி என் அஸ்வினிக்கு அவ சம்மதம் இல்லாம இன்னொருத்தனை தாலி கட்ட விட்டுடுவேனா.. அதுவும் அந்த சரண் மாதிரி ஒரு பொறுக்கியை.. அப்புறம் நான் அவளோட லவ்வர்ன்னு சொல்லிக்கிற தகுதியையே இழந்திடுவேன்..” என்றான் அருண்..
“நீங்க தாலி கட்டுனது எல்லாம் சரி.. ஆனா அக்காக்கு அந்த சரண் தானே தாலி கட்ட போனான்னு எழுதி இருந்தது டைரில… அப்புறம் அந்த தாலி எப்போ உங்க கைக்கு மாறிச்சு?” என்று கேட்டாள் வைஷு..
“அது.. அந்த சரண் தான் தாலி கட்ட போனான்… அவன் அஷ்வினி கழுத்துல தாலி கட்ட போற சமயத்துக்கு நான் போய் அவனை அடிச்சு கீழே தள்ளிட்டு அந்த தாலியை அவன் கையிலேர்ந்து வாங்க ட்ரை பண்ணேன்.. ஆனா கீழே விழுந்தவன் மறுபடியும் எழுந்து வந்து என் அஸ்வினி கழுத்துல தாலி கட்ட போனான். அந்த நேரத்துல பக்கத்துல நின்னுட்டு இருந்த எனக்கு வேற வழி தெரியல..அவன் தாலி கட்டுறதை தடுக்குறதுக்காக அவன் கையில இருந்து தாலியை வாங்கி அவனை புடிச்சு தள்ளிட்டு என் அஸ்வினி கழுத்துல ஒரே செகண்ட்ல தாலியை கட்டிட்டேன்..” என்றான் அருண்..
“சூப்பர் அருண் சார்.. என்ன ஒரு ஆக்ஷன் சீக்குவன்ஸ்.. அங்க நடந்ததை கற்பனைல யோசிச்சு பாக்குறப்பவே ஏதோ சினிமா படத்துல வர ஃபைட் சீன் மாதிரி இருக்கு.. நேரா பார்க்க முடியலயேன்னு ஒரு குறை தான்.. பார்த்திருந்தா எங்க பத்திரிகையில் போட்டு இத்தனை நேரம் சர்குலேஷன் பிச்சிட்டு போயிருக்கும்.. மீடியாக்கு எல்லாம் செம நியூஸ் கிடைச்சிருக்கும்.. ஹூம்.. இதெல்லாம் நாங்க மிஸ் பண்ணிட்டோமே.. நான் காலேஜ் படிக்கும் போதே இதெல்லாம் பண்ணிட்டீங்க.. உங்களை நான் தேஜூ அக்காக்கு முன்னாடி பாக்காம போயிட்டேனே.. ரொம்ப வருத்தமா இருக்கு சார்..” என்றாள் முகத்தை சுருக்கி கொண்டு..
அவளை தீவிரமாய் முறைத்தவனை கண்டு பயந்தார் போல் விழியை உருட்டி பார்த்தவள்,”சாரி சார்.. தெரியாம..” என்று தயங்கி தயங்கி கூற அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.. மனம் திறந்து வாய் மலர்ந்து அவனுடைய அழகான வரிசை பற்கள் தெரிய பெரிதாக சிரித்தான்..
அதைப் பார்த்த வைஷு அப்படியே அவன் சிரிப்பில் மயங்கி நின்றாள்.. “ஐயோ சார் ரொம்ப சிரிக்காதீங்க சார்.. அப்புறம் உங்க கற்புக்கு நான் உத்தரவாதம் இல்லை.. சிரிச்சா எவ்வளவு க்யூட்டா இருக்கீங்க?” என்றாள்.. சட்டென தன் சிரிப்பை நிறுத்திவிட்டு அவளை முறைத்தான் அருண்..
“சரி சரி.. முறைக்காதீங்க.. மறுபடியும் மறுபடியும் பழைய மாதிரி கோவக்கார அருணா மாறிடாதீங்க.. ம்ம் ம்ம்.. இப்படி சிரிச்ச முகத்தை அழகா வாழ்க்கை பூரா கூட இருந்து பாக்குறதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்..” என்று சொன்னவள் தேஜூவை பார்த்து உதட்டை சுழித்து “ஆமா.. அந்த மாதிரி ஒரு அபூர்வமான சான்ஸ் கிடைச்சவங்களே அதை விட்டுட்டு இருக்காங்க.. நம்மளுக்கு எல்லாம் இந்த மாதிரி சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது..” என்று சொன்னவளை தேஜூவும் அவள் பங்குக்கு முறைத்தாள்..
“கண்ட கண்டவன் சிரிப்பெல்லாம் பார்த்து ரசிக்கணும்னு நான் ஒன்னும் அலையல.. நான் ரசிக்கறத்துக்கு என் ராம் இருக்காரு.. அவர் சிரிச்சா இன்னைக்கு முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம்.. அவர் என்னை பாக்குற ஒவ்வொரு பார்வையிலயும் எவ்வளவு காதல் இருக்கும் தெரியுமா? அந்த காதலை இந்த ஜென்மம் மட்டும் இல்ல இன்னும் ஏழேழு ஜென்மம் ஆனாலும் சாப்பாடு தண்ணி இல்லாம பாத்துக்கிட்டே அப்படியே வாழ்ந்துடுவேன் நான்..” என்று தன்னை மறந்து ராமின் நினைவுகளோடு சொன்னாள் தேஜூ..
அதை பார்த்த அருண் விரக்தியோடு ஒரு சிரிப்பை உதிர்த்தான்.. அருணின் விரக்தி சிரிப்பை பார்த்து வைஷூக்கு மனதை என்னவோ செய்தது..
விஷ்வா அங்கு இருக்கும் அமைதியை கலைக்க நினைத்தவன் “அய்யோ.. அக்கா நீங்க அப்படியே உங்க கனவுலகத்திற்கு போயிடாதீங்க.. பூமியிலேயே இருங்க.. கூடிய சீக்கிரம் உங்க மேல உண்மையான காதல் யார் வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிரும்.. அதுக்கப்புறம் யார் பார்வையில உங்களுக்கான காதல் அதிகமா இருக்குன்னு நீங்களே முடிவு பண்ணுங்க..” என்று சொல்ல “எனக்கு என்னவோ என் அருண் தான் உங்களை இந்த உலகத்திலேயே அதிகமா காதலிக்கிறார்ன்னு தோணுது..” என்று சொன்னவளை புருவத்தை உயர்த்தி கேள்வியாக பார்த்தான் அருண்..
புருவத்தை சுருக்கி அவன் தன்னை ஏன் அப்படி பார்க்கிறான் என்று யோசித்தாள் வைஷூ.. அப்போது தான் தான் என்ன சொன்னோம் என்று உணர்ந்தாள்..
“அடடா… டங்க் ஸ்லிப் ஆயிடுச்சே.. ஐயையோ.. இந்த ருத்ரமூர்த்தி என்னை உண்டு இல்லன்னு ஆக்கிருவானே.. இப்ப என்ன பண்ணி சமாளிக்கிறது?” என்று யோசித்தவள் “அய்யோ.. நான் மாத்தி சொல்லிட்டேன்கா.. உங்க அருண்னு சொல்றதுக்கு பதிலா என் அருண்ணு சொல்லிட்டேன்..” என்று தேஜூவிடம் சொன்னவள் அருணை திரும்பி பார்த்து “நீங்க தேஜூ அக்காவோட அருண் தானே? நான் சரியாத்தானே சொல்லி இருக்கேன் அருண் சார்..” என்று பல்லை இளித்துக் கொண்டு வழிந்தவளை அருண் முறைத்து “போதும்.. அதோட நிறுத்து..” என்று சொன்னான்..
“சரி.. அருண் சார்.. அதை விடுங்க.. ஆமா.. எல்லாம் சரிதான்.. நீங்க அக்காக்கு தாலி கட்டுனீங்க.. ஆனா அங்க நிலவழகன் அண்ணாவும் சுமியும் இருந்தாங்களே.. அக்காக்கு நிலவழகன் அண்ணா தான்தான் தாலி கட்டுனேன்னு சொன்னாரே.. அப்படி சொல்றதுக்கு அவரை எப்படி ஒத்துக்க வச்சீங்க? அதே மாதிரி அங்க சுமி அக்காவும் இருந்தாங்க.. அவங்க எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டாங்க?” என்று கேட்டாள் வைஷு..
“அதுவா..? அஸ்வினி மயக்கமா இருந்தப்ப தான் நான் தாலி கட்டினேன்.. அதனால அவளுக்கு எப்படி இருந்தாலும் யார் தனக்கு தாலி கட்டினதுன்னு தெரியாது.. இது தான் எனக்கு ரொம்ப சவுரியமா போச்சு.. நான் நிலவழகன் கிட்ட அஷ்வினிக்கு அவன் தாலி கட்டினதா ஒத்துக்க சொன்னேன்.. அவன் என்கிட்ட முடியவே முடியாதுன்னு தான் சொன்னான்.. நான் ஏன் அஷ்வினியை ஏத்துக்க மாட்டேன்னு சொல்றேங்கற விஷயம் அவனுக்கு தெரியுங்கறதுனால அவன்கிட்ட “நிலவழகா.. இப்போ அஸ்வினிக்கு நான்தான் அவ கழுத்தில தாலி கட்டினேன்னு தெரிஞ்சா அவ என்னோட வந்து வாழணும்னு நினைப்பா.. அதுக்கப்புறம் என்ன நடக்கும்னு உனக்கு தான் தெரியும் இல்ல..? வேண்டாம் அழகா.. அவளுக்கு தப்பா ஏதாவது நடந்துச்சுன்னா அதை என்னால தாங்கிக்கவே முடியாது.. இப்போதைக்கு நீ தாலி கட்டி இருக்கேன்னு அவ கிட்ட சொல்லிடலாம்.. நல்லபடியா படிப்பை முடிக்கட்டும்.. அதுக்கப்புறம் அவகிட்ட நான் பேசி கன்வின்ஸ் பண்ணி அந்த தாலியை கழட்ட வெச்சிடறேன்.. ஏன்னா இப்ப அவகிட்ட உண்மையை சொல்லி தாலியை கழட்டி கேட்டா அந்த உண்மையை கேட்டு அவளுக்கு மனசு உடைஞ்சு போகும்.. அந்த மன உளைச்சல்ல அவளால படிப்பில கான்சன்ட்ரேட் பண்ண முடியாது.. ஆனா நீ தாலி கட்டிட்டேன்னு தெரிஞ்சா அதுக்கப்புறம் அவ என்னை தொந்தரவு பண்ணறதை நிறுத்திடுவா..” அப்படின்னு நான் சொன்னதை கேட்ட நிலவழகன் அப்பவும் அந்த பிளானுக்கு ஒத்துக்கல..” என்று சொன்னான் அருண்..
“எப்படி சார் ஒத்துப்பாரு? அவருக்கும் ஒரு கேள்வி வந்திருக்கும்ல? நிலவழகன் தான் தனக்கு தாலி கட்டினார்ன்னு தெரிஞ்சா அவங்க மனசுல நிலவழகனை தன் புருஷனா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்கனா அப்புறம் ரொம்ப ஏடாகூடம் ஆயிடுமே சார்.. அதை பத்தி நிச்சயமா யோசிச்சு இருப்பார் அவர்..” என்றாள் வைஷு..
“பரவாயில்லையே நீ கூட இப்படி மூளையோட யோசிக்கிறே.. “என்று சொன்ன அருணிடம் பொய் கோபம் காட்டி “அதென்ன சார்..? அப்படி சொல்லிட்டீங்க.. நான் எவ்ளோ கேஸ் கண்டுபிடிச்சு சால்வ் பண்ணி இருக்கேன் தெரியுமா? நான் ஒரு உண்மையான ஜர்னலிஸ்ட்..” என்றாள் வைஷு..
“அம்மா.. வைஷூ மாதா.. உன் ஜர்னலிஸ்ட் பெருமை எல்லாம் எனக்கு தெரியும்மா.. சார் ஒவ்வொரு கேசையும் கண்டுபிடிக்கறதுக்கு இவ பலி கொடுக்கிற ஆள் யார் தெரியுமா? நான் தான்.. ஒவ்வொரு கேஸ்லையும் என் உயிரை கைல புடிச்சுக்கிட்டே திரியணும் சார்.. இங்கேயும் உங்க கிட்ட அப்படித்தான் வந்து மாட்டினேன்..” என்றான் விஷ்வா..
“போதும்.. விடுடா விஷ்வா.. இப்ப எதுக்கு நம்ம பெருமையை பேசிக்கிட்டு.. நீங்க சொல்லுங்க அருண் சார்.. அதுக்கு அப்புறம் என்ன நடந்தது..?” என்று ஆர்வமாய் கேட்டாள் வைஷு..
“ம்ம்.. நீ சொன்ன மாதிரி தான் நிலவழகனும் என்னை கேட்டான்.. அதுக்கு நான் அவன்கிட்ட “அவ படிப்பு முடிய கிட்டதட்ட ஒன்றரை வருஷத்துக்கு மேல இருக்கு.. இந்த ஒன்றரை வருஷத்துல அவ மனசுல இருக்குற என்னை மறக்க முயற்சி பண்ணுவா.. உண்மைய சொல்லப்போனா அதுக்கு ரொம்ப டைம் எடுக்கும்.. இந்த ஒன்றரை வருஷம் நிச்சயம் அவளுக்கு போதாது.. அப்படியே என்னை இந்த ஒன்றரை வருஷத்துல அவ மறந்தாலும் உன் மேல காதல் வர்றதற்கு இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும்.. அதுக்குள்ள அவளுக்கு உண்மையை சொல்லி அவ கழுத்துல இருக்குற தாலியை நான் கழட்ட வெச்சுடறேன்” அப்படின்னு நான் அவன்கிட்ட சொல்லி அவனை சமாதானப்படுத்திட்டேன்..” என்றான் அருண்..
“உண்மைதான் சார்.. இப்படி ஒரு ஆளை லவ் பண்ணிட்டு மறக்கிறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல.. ஒன்றரை வருஷம் இல்லை.. பத்து வருஷம் ஆனாலும் மறக்காது..” என்றாள் வைஷு கண்களில் காதலுடன் அருணை பார்த்து கொண்டே..
அதை கவனிக்காத அருண் “அதை சொன்னப்போ அவன் சமாதானம் ஆகிட்டான்.. ஆனா அதுக்கப்புறம் நான் அவனை கேட்ட விஷயத்துல கோவம் வந்துருச்சு அவனுக்கு..” என்றான் அருண்..
“என்ன நிலவழகன் அண்ணாக்கு கோவம் வந்துச்சா? அவருக்கு கோபம் வர்ற அளவுக்கு அப்படி என்ன கேட்டீங்க?” என்று கேட்டாள் வைஷு..
“நிலவழகன் கிட்ட “அஸ்வினியை நான் கட்டின தாலியை கழட்ட வெச்சப்புறம் நீயே என் அஸ்வினியை கல்யாணம் பண்ணிக்கோ.. உன்னை விட ஒரு நல்லவன் அவளுக்கு கிடைக்க மாட்டான்.. ஏன்னா அவளை வேற யாராவது கல்யாணம் பண்ணிக்கிட்டா கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கும் அஷ்வினிக்கும் நடுவுல நடந்த விஷயங்களை பத்தி அவளை கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கு தெரிய வந்தா அவ வாழ்க்கை ரொம்ப கஷ்டமாயிரும்.. அதனாலதான்” னு நான் கேட்டப்போ அவன் முகத்தில தெரிஞ்ச கோவத்தை நான் அதுவரைக்கும் பார்த்ததில்லை..” என்று அருண் சொல்ல ஏனோ தேஜூ அவனை தீவிரமாக முறைத்தாள்..
“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? ஒரு பொண்ணோட மனசை என்னனு நினைச்சீங்க? நீங்க நினைச்சப்ப லவ் பண்றது.. நீங்க நினைச்சப்ப தாலி கட்டறது.. நீங்க நினைச்சப்ப தாலியை கழட்டறது..அப்புறம் நீங்களே நினைச்சுக்கிட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கிறது.. அவ வாழ்க்கைல எல்லா முடிவையும் நீங்களே எடுத்துட்டா அப்புறம் அவளுக்கு வாழறதுக்கு என்ன வாழ்க்கை இருக்கும்.. அவளுக்குன்னு ஒரு மனசு.. அவளுக்குன்னு பீலிங்ஸ் இதெல்லாம் இருக்காதா? நீங்க எப்படி அவளுக்காக முடிவு எடுக்க முடியும்?” என்று கேட்ட தேஜுவை நால்வரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்..
தொடரும்..
ஹாய் பிரண்ட்ஸ்..
ஷேர் பண்ணுங்க.. கமெண்ட் போடுங்க..
ஆவலுடன் காத்திருக்கும்
உங்கள் தோழி
❤️❤️சுபா❤️❤️