அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 62🔥🔥

5
(13)

பரீட்சை – 62

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

பூபாளம் ஆனாலும்

நீலாம்பரி ஆனாலும்

இரண்டையும் இசைக்கும்

வீணையாய் நான் மீட்டிட

நீ மட்டுமே வேண்டுமடி

என்னவளே..!!

 

இன்பம் என்றாலும்

துன்பம் வந்தாலும்

இருள் சூழ்ந்தாலும்

ஒளி நிறைந்தாலும்

சுகத்தில் திளைத்தாலும்

சோகத்தில் மூழ்கினாலும்

 

கரம் கோர்த்து நடக்க

நீ மட்டுமே வேண்டுமடி

இனியவளே..!!

 

நீ கூட இருந்தால்

நரகமும் சொர்க்கமடி..

வலியும் இன்பமடி…

மரணமும் இனிக்குமடி..!!

 

################

 

நீயின்றி நான் இல்லை..!!

 

“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? ஒரு பொண்ணோட மனசை என்னனு நினைச்சீங்க? நீங்க நினைச்சப்ப லவ் பண்றது.. நீங்க நினைச்சப்ப தாலி கட்டறது.. நீங்க நினைச்சப்ப தாலியை கழட்டறது.. அப்புறம் நீங்களே நினைச்சுக்கிட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கிறது.. அவ வாழ்க்கைல எல்லா முடிவையும் நீங்களே எடுத்துட்டா அப்புறம் அவளுக்கு வாழறதுக்கு என்ன வாழ்க்கை இருக்கும்.. அவளுக்குன்னு ஒரு மனசு.. அவளுக்குன்னு ஃபீலிங்ஸ் இதெல்லாம் இருக்காதா? நீங்க எப்படி அவளுக்காக முடிவு எடுக்க முடியும்?” என்று கேட்ட தேஜுவை நால்வரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்..

 

அவர்களுடைய வித்தியாசமான பார்வையை உணர்ந்தவள் அதன் பிறகு தான் என்ன சொல்லிக் கொண்டிருந்தோம் என்று உணர்ந்தாள்..

 

 “எதுக்கு நாலு பேரும் அப்படி பாக்குறீங்க?” என்று கேட்டவளிடம் விஷ்வா “ஏன்கா… இவ்வளவு நேரம் இது ஒரு கதை.. நான் நம்பலைன்னு சொல்லிட்டு இருந்தீங்க.. இப்போ பொண்ணுக்கு ஒரு மனசு இருக்காதா அது இருக்காதா இது இருக்காதான்னு கேள்வி கேக்குறீங்க..? பெண்களுக்காக கொடி பிடிக்கிறீங்க? அப்படின்னா இதெல்லாம் நிஜமாவே நடந்ததுன்னு நீங்க நம்ப ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கேட்டான்..

 

“அப்படின்னு நான் சொன்னேனா?” என்றவள் “ஆரம்பத்தில் இருந்தே இதோ இந்த அருண் எழுதின கதையா மட்டும் தான் இதை பார்க்கிறேன்.. இந்த கதையில வர்ற ஒரு கேரக்டர் தேஜஸ்வினி.. இவர் கதையாவே இதை எழுதியிருந்தாலும் பொண்ணுக்குன்னு ஒரு மனசு இருக்கு.. ஃபீலிங்ஸ் இருக்கு.. அவளுக்குன்னு காதல் உணர்வுகள் இருக்கு.. அதை எல்லாம் அழிச்சிட்டு நான் சொல்றவனை நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றதுக்கு இவர் யார்.. இவர் தான் அவர் காதலியை ஏத்துக்கல இல்ல? அப்புறம் இவர் எப்படி அந்த பொண்ணை இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்ல முடியும்? அப்படி ஒரு உரிமை அவருக்கு கிடையவே கிடையாது.. ஆம்பளைன்னா ஒரு பொண்ணு வாழ்க்கையை எப்படி வேணா தீர்மானிக்கலாமா? அவங்களுக்குன்னு ஒரு மனசு.. அவங்களுக்குனு ஒரு காதல்.. அவங்களுக்குன்னு ஒரு முடிவுன்னு இருக்கும்.. அதை எல்லாம் புரிஞ்சுக்காம இவங்க இஷ்டத்துக்கு அழிக்கிறதுக்கும் எழுதறதுக்கும் அவங்க என்ன ஜட பொருளா..? இந்த கதையிலயும் அந்த தேஜஸ்வினி கேரக்டருக்கு இவன் இதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கான்.. நிஜ வாழ்க்கையில இப்போ எனக்கும் இதைதான் பண்ணிட்டு இருக்கான்.. என் வாழ்க்கையை இவன் டிசைட் பண்றான்.. என் வாழ்க்கையில எனக்கு என் ராம் மேல காதல் இருக்கு.. என்னை அவரோட வாழ விடுன்னு நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ஆனா இவனை தான் நான் காதலிக்கணும்னு இவன் சொல்லிட்டு இருக்கான்.. இவன் குணமே அப்படித்தான் போல.. இவனை வேற நீங்க மூணு பேரும் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து கிட்டு இருக்கீங்க…” என்றாள் தேஜு..

 

அப்போது பேசிய கல்யாணி அம்மாள் “அம்மா அந்த புள்ள மாதிரி ஒரு தங்கமான புள்ள நீ எங்க தேடுனாலும் கிடைக்காது.. அவனை போய் இப்படி பேசுறியேம்மா.. ஒவ்வொருத்தர பத்தியும் எவ்வளவு யோசிப்பான் தெரியுமா? ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் எவ்வளவு செஞ்சிருக்கான் தெரியுமா? அந்தப் புள்ளைய பத்தி தப்பா பேசினா நீ…” என்று ஆரம்பித்தவளை “கல்யாணிம்மா.. அதோட நிறுத்துங்க..” என்று அடக்கினான் அருண்..

 

அதற்குள் நிலைமையை சமாளிக்க வைஷு “சரி சரி.. போதும் கோபப்பட்டது.. இந்த டிஸ்கஷனை இங்கேயே முடிச்சுக்கலாம்..  சரி.. அருண் சார்.. நிலவழகன் அண்ணா என்னதான் சொன்னாருன்னு சொல்லுங்க..” என்று கேட்க “இப்ப அஷ்வினி சொன்னதை தான் நிலவழக்கனும் சொன்னான்… “அருண் நீ என்னை பத்தி என்ன நெனச்ச..? உன் காதல் மட்டும் தான் உண்மையான காதலா? என் காதல்லாம் ஃபேக்கான காதல்னு நினைச்சியா..? இல்ல அருண்.. நான் என்னைக்கு நித்திலாவை மனசுல நினைச்சேனோ அன்னைலிருந்து அவளை மட்டும் தான் காதலிச்சு கிட்டு இருக்கேன்.. அவ இப்போதைக்கு தப்பான விஷயங்களை பண்ணி இருக்கலாம்.. இனிமேலும் பண்ணலாம்.. ஆனா நான் அவ மேல வச்சது உண்மையான காதல்.. அவ எப்படி இருந்தாலும் நான் அவளை அப்படியே அவளோட நிறை குறைகளோட விரும்பறேன்.. அவளை மட்டும் தான் என் வாழ்க்கை முழுக்க காதலிச்சுகிட்டு இருப்பேன்.. அவளுக்கு என்னை பிடிக்குதோ இல்லையோ.. இந்த ஜென்மத்துல அவ தான் என்னோட காதல்.. இதுல எந்த மாற்றமும் இல்லை.. உன்னோட காதலுக்கு என் காதல் எந்த விதத்திலும் குறைஞ்சது இல்லை.. அப்புறம் நான் எப்படி தேஜூவை கல்யாணம் பண்ணிக்க முடியும்?” அப்படின்னு கேட்டான்..” என்று அருண் சொல்ல விஷ்வா “அப்படி போடு அருவாளை” என்று சொல்ல அவனைப் பார்த்து முறைத்தான் அருண்..

 

அப்படியே எச்சிலை விழுங்கி தலையை குனிந்து கொண்டான் விஷ்வா..

 

“அப்படி சொன்னானே தவிர அஸ்வினி கிட்ட தான்தான் அவ கழுத்துல தாலி கட்டுனேன்னு சொல்றதுக்கு ஒத்துக்கிட்டான்..” என்று அருண் சொல்ல “ஒரு பிரச்சனை ஓகே ஆயிடுச்சு.. நிலவழகன் அண்ணாவை எப்படியோ சமாளிச்சுட்டீங்க.. சுமி அக்காவை எப்படி சமாளிச்சீங்க..?” என்று கேட்க விஷ்வா “இரு இரு.. அது என்ன..? இத்தனை நேரம் அருண் சாரை அருண் சார் அருண் சார்ன்னு கூப்பிட்ட.. ஆனா நிலவழகன் பேரை சொன்னதும் அவரை அண்ணன்கிற?” என்று முக்கியமான கேள்வியைக் கேட்டான்..

 

அவனை முறைத்த வைஷூ “இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியமா?” என்று கேட்டவள் “நான் அருண் சார சார்னு கூப்பிடறதுக்கு ஒரு ரீசன் இருக்கு.. ஏன்னா தேஜூ அக்காவ நான் அக்கான்னு கூப்பிடறேன்.. அப்போ அவங்களை லவ் பண்ணவரை நான் மாமான்னு தானே கூப்பிடனும்.. நான் மாமான்னு கூப்பிட்டா இவரு ரொம்ப கோச்சுப்பாரு இல்ல..?” என்று அருணை பார்த்தவளை “கோச்சுக்க மாட்டேன்.. கொன்னே போட்ருவேன்” என்றான் அருண்..

 

“பாத்தியா..? அனாவசியமா என் உயிர் போயிருக்கும்.. அதனாலதான் அவரை சார்ன்னு கூப்பிட்டேன்.. ஆனா நிலவழகன் அண்ணா யாரோ ஒருத்தர்.. அவருக்கும் தேஜூ அக்காக்கும் சம்பந்தம் இல்ல..  எனக்கு என்னமோ அவரு தேஜூ அக்காவை அவரோட சிஸ்டர் மாதிரி தான் நினைச்சுட்டு இருக்காருன்னு தோணுது.. அதனாலதான் அவரை அண்ணான்னு சொன்னேன்.. இதுல என்ன தப்பு இருக்கு…?” என்று சொன்னாள் வைஷு..

 

ஆரம்பத்தில் வைஷூவின் மேலும் விஷ்வாவின் மேலும் மிகவும் கோபமாக இருந்த அருண் போகப் போக அவர்களுடைய வெகுளித்தனமான பேச்சையும் துடுக்கான நடவடிக்கைகளையும் ரசிக்க ஆரம்பித்து இருந்தான்.. அவர்கள் செய்யும் குறும்புகளை பார்த்து தன்னை மறந்து புன்னகைக்க ஆரம்பித்து இருந்தான்.. இப்போதும் அவர்கள் பேசுவதை பார்த்து இயல்பாகவே அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது..

 

அவன் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து அவன் இயல்பாக புன்னகைக்க ஆரம்பித்திருப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் வைஷூ.. உள்ளுக்குள் அவனுக்குள் அப்படி ஒரு மாற்றம் கொண்டு வந்தது தான்தான் என்று எண்ணியவளுக்கு பெருமையாய் இருந்தது..

 

“சரி.. சுமி அக்காவை எப்படி சமாளிச்சீங்க? அதை சொல்லுங்க.. ஒருவேளை நிலவழகன் அண்ணா கிட்ட உண்மையையெல்லாம் சொன்ன மாதிரி சுமி அக்கா கிட்டேயும் சொல்லிட்டீங்களா?” என்று கேட்டாள் வைஷூ..

 

“இல்ல.. சுமி கிட்ட சொன்னா அது நிச்சயமா அஸ்வினியோட காதுக்கு போயிடும்னு எனக்கு தெரியும்.. அதனால அவ கிட்ட உண்மையை சொல்லல.. ஆனா அவகிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அஷ்வினியோட உயிருக்கு ஆபத்தாயிடும்.. அவ வாழ்க்கையே நரகம் ஆயிடும்.. இது நிலவழகனுக்கு தெரியும்.. அதனால தான் அவனும் நான் சொல்றதுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டு இருக்கான்.. நீ உண்மையாவே உன் ஃப்ரெண்டு மேல அக்கறை வெச்சிருந்தேன்னா அவ வாழ்க்கை கொடுமையா போகக்கூடாதுன்னு நினைச்சேன்னா அவ நிறைய காலம் சந்தோஷமா உயிரோட இருக்கணும்னு நினைச்சேன்னா இந்த திட்டத்துக்கு நீயும் கோ ஆபரேட் பண்ணனும்னு சொன்னேன்.. அதுக்கு அவ அப்படி என்ன உன்னால அஷ்வினிக்கு ஆபத்தான விஷயம் நடக்கப் போகுதுன்னு கேட்டா..?” என்று சொன்னான் அவன்..

 

“நாங்களும் அது அப்படி என்ன விஷயம்னு தான் அப்போதிலேர்ந்து கேட்டுகிட்டு இருக்கோம்.. எங்களுக்கும் சொல்ல மாட்டேங்கறீங்க.. அவங்களுக்கும் சொல்லலையா? பாவம்.. எவ்வளவு மண்டை குழம்பி இருக்கும்.. எனக்கே மண்டை வெடிச்சிடும் போல இருக்கு.. அதை தெரிஞ்சுக்காம.. அது என்னன்னு தான் சொல்லக்கூடாதா? இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்களே” என்றாள் வைஷு..

 

அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த அருண் “அவகிட்ட “அந்த விஷயத்தை உன்கிட்ட சொல்ல முடியாது.. ஆனா நான் சொன்ன மாதிரி அவ வாழ்க்கை நரகம் ஆயிடும்ங்கறது உண்மை.. இது என்னோட மெக்கானிக் ஷெட் மேல என் கடையில வேலை செய்ற சின்ன பையன் மேல சத்தியம்ன்னு நான் சொன்னேன்.. அப்போ வேற வழியே இல்லாம அவ என்னை நம்பிட்டா.. ஏன்னா அந்த மெக்கானிக் ஷெட்டும் சின்ன பையனும் எனக்கு எவ்வளவு முக்கியம்னு அவளுக்கு தெரியும்.. அவளும் அவ ஃப்ரெண்டோட நல்லதுக்காக எங்களோட சேர்ந்து இந்த நாடகத்தை நடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டா..” என்றான் அருண்..

 

“என்ன நடிச்சி என்ன புண்ணியம்? அதான் எல்லாம் ஊத்திக்கிச்சே” என்று சொன்ன வைஷுவை முறைத்தவனை சமாளிக்க “அதுக்கு என்ன அருண் சார் பண்றது? தேஜூ அக்காவோட உண்மையான காதல் ஜெயிக்கணும்னு இருக்கு..” என்று சொன்னவளை ஒரு பக்கம் தேஜு தீவிரமாக முறைத்தாள்..

 

“என்னப்பா.. எப்படி பேசினாலும் ஆளாளுக்கு முறைக்கிறீங்க?” என்று எச்சிலை விழுங்கி தலையை குனிந்து கொண்டு கண்களை உருட்டினாள்.. தனக்குள்ளேயே “வாயை அடக்குடி வைஷு..” என்று சொல்லிக் கொண்டாள்..

 

“சரி போதும்.. நீ வாயடிச்சது.. டைரியை மேல படி..” என்று அருண் சொல்ல அவளும் டைரியில் இருப்பதை படிக்க தொடங்கினாள்..

 

########################

 

 

மல்லி அருணுக்கும் தேஜூவுக்கும் நடந்த திருமணத்தை பற்றி சொல்லி முடித்திருந்தாள்.. அப்படியே அதைக் கேட்டு.. தான் எங்கேயாவது உயிரோடு பூமிக்குள் புதைந்து விடுவோமோ என்ற பயத்தில் ஆடாமல் அசையாமல் காலை அழுந்த பூமியில் பதித்து சிலையாய் அமர்ந்திருந்தான் ராம்சரண்..

 

அழகப்பன் அவள் சொன்னதை நம்ப முடியாமல் “என்ன தேஜூக்கும் அருணுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா? இது எப்ப நடந்தது? இதை பத்தி தேஜூ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே.. அவ அருணை விரும்பினதா சொன்னா.. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கேட்டாளே தவிர அவனோட அவளுக்கு கல்யாணம் நடந்ததா என்கிட்ட அவ சொன்னதே கிடையாது.. என் பொண்ணா என்கிட்ட இவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சு இருக்கா..?” என்று அப்படியே அதிர்ச்சி தெரிய கேட்டார் அழகப்பன்..

 

“அங்கிள்.. அது ஆக்சிடென்ட்டலா நடந்த  கல்யாணம்.. அதை தேஜூவும் சரி.. அருணும் சரி.. மனசு முழுக்க சம்மதத்தோட பண்ணிக்கல.. வேற வழி இல்லாம அந்த சரணால தேஜூவோட வாழ்க்கை கெட்டுடக்கூடாதுன்னு ஒரு அக்கறைல நடந்த கல்யாணம்.. இன்ஃபேக்ட் தேஜு அதை கல்யாணமாவே நினைக்கல.. இந்த விஷயத்தை என்கிட்ட ஃபோன்ல சொன்னப்போ அவ என்ன தெரியுமா சொன்னா..? அருண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்காக அவன் வாழ்க்கையில என்ன விபரீதம் நடந்திருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்காக தான் அவனை ஃபோர்ஸ் பண்ணி அந்த கல்யாணம் பண்ண வச்சதா சொன்னா.. மத்தபடி “எங்கப்பாகிட்ட முறையா சம்மதம் வாங்கி என்னிக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கிறேனோ அதுதான் எனக்கும் அருணுக்கும் நடக்குற உண்மையான கல்யாணம்.. இதை நான் ஒரு கல்யாணமாவே நினைக்கல.. அவனை பத்தி தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கிறதுக்கான ஒரு சம்பவமா மட்டும் தான் நினைக்கிறேன்..”ன்னு அவ சொன்னா..” என்று சொன்னாள் மல்லி..

 

பார்த்துக் கொண்டிருக்கும்போதே ராம் சரண் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தது…

 

 அதைப் பார்த்த அழகப்பன் “ஐயோ மாப்பிள்ளை.. என் பொண்ணை பத்தி தப்பா நினைச்சுறாதீங்க மாப்பிள்ளை.. அவ அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது.. அவ உங்களை ஏமாத்தல மாப்பிள்ளை.. அவ உங்களுக்கு துரோகம் பண்ணிட்டான்னு மட்டும் நினைச்சுறாதீங்க.. அவ வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு முழுசா கேட்டீங்கன்னா நிச்சயமா நீங்க அவ நிலைமையில எந்த பொண்ணு இருந்தாலும் இதை தான் பண்ணி இருப்பான்னு புரிஞ்சுக்குவீங்க மாப்பிள்ளை.. உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னாலும் எனக்கு குடுங்க.. என்ன திட்டனும்னாலும் என்னை திட்டுங்க மாப்பிள்ளை.. ஏன்னா இதுல தப்பு முழுக்க பண்ணவன் நான் தான்” என்றார் அழகப்பன்..

 

அவர் முகமோ தேஜூவுக்கும் அருணுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது என்று தெரிந்தவுடன் ராம் அவளை பற்றி தவறாக நினைத்து அவளை பிரிந்துவிடும் முடிவை எடுத்து விடப்போகிறாரே.. என்று நினைத்து இருண்டது..

 

ஒரு குடும்பம் என்னும் தேன் கூட்டில் கல் எறிந்து கலைத்தாற்போல் ஆகிவிட போகிறதே என்று கவலை கொண்டு பதட்டத்திலேயே இருந்தார்..  

 

ராமை பிரிந்து அழுதுக்கொண்டு இருக்கும் தேஜூவின் முகமும் இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் இருக்க நடுவிலே தன் பேரப்பிள்ளைகள் பிரிந்த தங்கள் அன்னை தந்தையின் அன்பிற்காக ஏங்கி தவித்து அழுதுகொண்டு இருக்கும் காட்சியும் ஒரு நொடி அவர் கண் முன் தோன்றி மறைந்தது.. 

 

தன் மகள் வாழ்வில் அப்படி ஒரு நிலை வருவதை எண்ணும்போதே அவருக்கு பயத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது.. அப்படி எதுவும் நடக்க கூடாது கடவுளே என்று மனதிற்குள் இறைவனை இறைஞ்சி வேண்டிக் கொண்டே ராமின் பதிலுக்காக காத்திருந்தார் அவர்..

 

தொடரும்..

 

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..!!

 

என் கதை நடையில.. கதை போக்குல.. உங்களுக்கு ஏதாவது விமர்சனம் இருக்கு.. ன்னா தயவு செ

ய்து பகிரவும்…

 

உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு தோழி

❤️❤️சுபா❤️❤️

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!