பரீட்சை – 64
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சோர்ந்த என்னை
எப்படி
சிறகடிக்க வைப்பதென
என்
சுந்தரன் நீ
அறிவாயடா..
சடுதியில் ஒரு
அணைப்பை தந்து
சமாதான படுத்தி
போவாயடா..
உனக்குள் தொலைந்து
போக
உள்ளுக்குள் வேட்கை
கொண்டேனடா..
எனக்குள் ஏற்பட்ட
இந்த
மோகத்தவிப்பு
உன் இதழ்
முத்தத்தாலேயே
தீருமடா..
உனக்காய் என்னை
கொடுத்து உன்
உளம் கொண்ட
தாகம்
தீர்ப்பேனடா..
இதில் என்
உயிர் போனாலும்
எனக்கு
இன்பம் தானடா
என் இனியவனே..!!
#####################
என் இனியவனே..!!
“ஒருவேளை இன்னிக்கு நான் அந்த அம்மன் கோவிலுக்கு வரவே இல்லன்னா என்னடி பண்ணி இருப்ப? தைரியமா அந்த சரண் கூப்பிட்டான்னு போயிருக்கே.. அதுவும் அந்த நித்திலாவோட..”
அருண் கேட்ட கேள்வியில் புருவம் உயர்த்தி அவனை அர்த்தமாய் பார்த்தவள்.. ”நான் அந்த சரணை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக தான் அங்க போய் இருக்கேன்னு தெரிஞ்சும் நீ அங்க வராம இருந்திருப்பியா?” என்று பதில் கேள்வி கேட்க “ம்ம்ம்ம்.. நல்லா பேசுறே நீ.. இன்னைக்கு நான் வராம இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் உனக்கு..” என்றவனை ஆழ்ந்து பார்த்தவள் “நீ வராம இருந்திருந்தா உனக்கு தெரிஞ்சிருக்கும் சரண் தாலி கட்டுன அடுத்த நிமிஷம் மலை உச்சியில இருந்து கீழே குதிச்சு நான் செத்து போயிட்டேன்ற நியூஸ்..” என்றாள் அவள்..
அவள் தலை முடியை இறுக்கப் பிடித்து அவள் முகத்தருகே தன் முகத்தை வைத்து கண்களை பார்த்தவன் “இன்னொரு தடவை இந்த மாதிரி பேசினே.. கொன்னுடுவேன் உன்னை” என்றான் அருண்..
பலமாக சிரித்தவள் “நீ சரியான கிராக்குடா.. மலை உச்சியில் இருந்து விழுந்தாலும் செத்து தான் போவேன்.. நீ என்னை கொன்னாலும் செத்து தான் போவேன்.. ஆனா இப்போ உன் கையால எனக்கு தாலி கட்டிட்டடா.. இப்ப நீ கொன்னு நான் செத்துப்போனா கூட எனக்கு சந்தோஷம் தான்..” என்றாள் அவள்..
“போதும்.. நீ என்னை ஜெயிலுக்கு அனுப்ப பிளான் பண்ணாத.. இனிமே இப்படி கண்ட மாதிரி பேசாதே..” என்று சொன்னவன் இப்படியே அவளோடு பேசிக் கொண்டிருந்தால் அவளை விட்டு பிரிய மனமே வராது என்று உணர்ந்தவன் “சரி நீ வீட்டுக்கு கிளம்பு.. இன்னைக்கு காலேஜ் லீவு போட்டாச்சு.. நான் ஷெட்டுல போய் வேலையை பார்க்கிறேன்..”
அவன் சொன்னவுடன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு உதட்டை சுழட்டியபடி “போ.. போ.. அங்க அந்த சின்ன பையனை கட்டிக்கிட்டே அழு.. நான் போறேன்..” என்று சொல்லி திரும்பியவள் கையை பிடித்து இழுத்தவன் “ஏண்டி என்னை இப்படி படுத்துற? கோச்சிட்டு போகாத அஸ்வினி…. எனக்கு இன்னும் வலிக்கும்..”
தலையை குனிந்து கொண்டு சொன்னவனின் கன்னத்தில் கை வைத்தவள் “சாரிடா.. சரி.. நான் போயிட்டு வரேன்..” என்று சிரித்தபடி சொன்னவள் அவன் கையை விட மனம் இல்லாமல் இருக்க அவனுக்கும் தன் கையில் இருந்து அவள் கையை விடுவிக்க மனம் இல்லாமல் இருவரும் கண்களில் ஏக்கத்தை தேக்கியபடியே மிகவும் சிரமப்பட்டு..வேறு வழியின்றி அவன் கையை விட்டு தன் கையை எடுத்தவள் அவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தாள்..
அடுத்த நாளிலிருந்து தேஜு தன் கழுத்தில் இருந்த தாலியை வீட்டில் மறைத்துக் கொண்டு எப்போதும் போல் கல்லூரிக்கு வந்து போய்க் கொண்டிருந்தவள் தன்னவனுடன் கண்களாலேயே பேசிக் கொண்டிருந்தாள்..
இப்படியே இன்னும் மூன்று மாதங்கள் சென்றன.. இந்த மூன்று மாதங்களுக்கு இடையில் அவள் கல்லூரியில் அந்த வருடத்திற்கான கலை விழா வர தேஜு முந்தைய வருடத்திற்கு மாறாக இந்த வருடம் ஒரு மேற்கத்திய நடன போட்டியில் பெயரை கொடுத்திருந்தாள்..
ஆனால் மற்ற மாணவர்கள் அதற்கான பிரத்தியேக வகுப்புக்கு சென்று வந்ததால் அவர்களுக்கு சுலபமாக நடனம் ஆட முடிந்தது.. ஆனால் தேஜு அப்போதுதான் மேற்கத்திய நடனத்தை பழகிக் கொண்டிருந்ததால் அவளால் அப்படி ஆட முடியவில்லை..
தினமும் அருணுடன் மாலையில் கைபேசியில் பேசுபவள் அன்றும் அதே போல் அவனுக்கு அழைத்துப் பேசிக் கொண்டிருந்தாள்.. அவள் குரல் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன அஷ்ஷூம்மா.. குரல் ஒரு மாதிரி இருக்கு.. ஏதாவது உடம்பு சரியில்லையா?” என்று கேட்டான் அருண்..
“இல்ல அருண்.. நான் வெஸ்டர்ன் டான்ஸ்க்கு பேர் கொடுத்து இருக்கேன்.. ஆனா எனக்கு டான்ஸ் ஆடவே வரல.. கேவலமா தோக்க போறேன் இந்த டான்ஸ் காம்பெட்டிஷன்ல.. இன்னும் கல்ச்சுரல்ஸ்க்கு ஒன் வீக் தான் இருக்கு.. ஆனா எனக்கு பேசிக் ஸ்டெப்ஸ் கூட ஒழுங்கா வர மாட்டேங்குது” என்று வருத்தப்பட்டாள்..
“அவ்வளவு தானே..? இதுக்கா இவ்ளோ சோகமா இருக்க? நாளைக்கு சாயங்காலம் நம்ம காலேஜ் முடிஞ்சப்புறம் பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாண்ட்ல என் கார்ல இருக்கேன்.. அங்க வந்துரு.. என்று அவன் சொல்ல நான் சோகமா இருக்கேன்னு எனக்கு ஊர் சுத்தி காட்ட போறியா? அப்புறம் உன் கண்டிஷன் எல்லாம் பாழா போயிரும்… வேண்டாம் வேண்டாம்.. நீ இருக்கறப்படியே இரு..” என்று அவள் சொல்ல “ரொம்ப பண்ணாதடி.. நீ அங்க வா.. நான் அப்புறம் சொல்றேன்.. நம்ம எங்க போறோம்னு” என்று சொன்னவன் “சரி.. நான் ஃபோனை வைக்கிறேன்” என்று சொல்ல “ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்” என்றாள்..
“என்ன..?” என்று கேட்க அந்த கைபேசியிலேயே கிட்டத்தட்ட ஒரு 20 முத்தங்களை வாரி வழங்கினாள் தேஜு..
இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானவன் எதுவும் பேசாமல் இருக்க தேஜு “நேர்ல தான் எனக்கு முத்தம் கொடுக்க மாட்டே.. கட்டி பிடிக்க மாட்டே.. ஃபோன்ல கூட கொடுக்க மாட்டியா டா..?” என்று அவள் கெஞ்ச அதற்கு மேல் அவள் கெஞ்சுவது தாங்க முடியாமல் அழுத்தமாய் கைபேசி மூலமாக அவளுக்கு ஒரு முத்தத்தை அனுப்பி வைத்தான்..
“ஐயோ.. சோ ஸ்வீட் டா செல்லக்குட்டி.. சூப்பர் கிக்கா இருக்கு உன்னோட முத்தம்.. ஃபோன்ல கிஸ் பண்ணதுக்கே இப்படி இருக்கே.. நீ மட்டும்..” என்றவளை அதற்கு மேல் பேச விடாமல் “போதும்.. நான் ஃபோனை வச்சுடறேன்” என்று சொல்லி கைபேசி இணைப்பை துண்டித்து விட்டு அந்த கைபேசிக்கு கிட்டத்தட்ட ஒரு நூறு முத்தங்கள் கொடுத்திருப்பான் கண்களில் கண்ணீரோடு…
அடுத்த நாள் தேஜு அவன் சொன்னபடி அந்த பேருந்து நிலையத்திற்கு வந்தவள் அவன் தன் காரின் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் சிகப்பு நிற டி-ஷர்ட்டும் அணிந்து கண்ணில் கூலர்ஸோடு வலது காலை இடது காலின் குறுக்கே வைத்து தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்த தோரணையை பார்க்க அப்படியே சினிமா கதாநாயகன் போல் இருந்தான்..
அப்படியே அவன் அழகில் தன்னையே தொலைத்து அவனைப் பார்த்துக் கொண்டே அவனை நோக்கி நடந்தவள் தான் சாலையின் குறுக்கே வந்து கொண்டு இருப்பதை மறந்து விட்டாள்..
அப்போது எதிரில் ஒரு வண்டி வர சாலையின் நடு பகுதிக்கு சட்டென ஓடிய அருண் அவளை வேகமாக பிடித்து இழுத்து வந்தான்.. நூல் இழையில் உயிர் தப்பினாள் அவள்..
“உனக்கு ஏதாவது அறிவு இருக்கா..? இப்படியா ரோடை பார்க்காம எங்கேயோ பார்த்துட்டு ரோடு கிராஸ் பண்ணுவே.. உனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னடி பண்றது?” என்று சத்தம் போட்டவனை முறைத்தாள் அவள்..
அவளைக் காப்பாற்றுவதற்காக அணைத்து பிடித்து இருந்தவன் அவனையும் அறியாமல் தன் கைகளால் அவள் இடையை அணைத்து பிடித்திருந்தான்..
அவ்வளவு அருகில் அவனைப் பார்த்தவள் “ஐயோ.. எவ்ளோ அழகன் டா நீ.. இவ்வளவு அழகா இருக்கே.. ஆனா ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாது.. சரியான சாமியார்..” என்று முனகி கொண்டே அவனை விட்டு விலகி கோவமாக சென்றவளைப் பார்த்து “ரொம்ப கோவமா இருக்க?” என்று கேட்டவனிடம்.. “சொன்னா எனக்கு பதிலா நீ கோபப்படுவே.. ஏன்டா..? வா போலாம்..” என்று சலித்துக்கொண்டே சொன்னவள் நேரே சென்று காரில் ஏறி அமர ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் “இவ ஏதோ இன்னைக்கு சரி இல்லையே… கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்..” என்று நினைத்துக் கொண்டு காரை எடுத்தான்..
அவன் காரை எடுத்து இரண்டு நொடிகளில் அவன் எதிர்பாராமல் அருகில் வந்தவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு வேகமாக திரும்பி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் தேஜு..
அவள் முத்தத்தில் எப்போதும் போல அதிர்ந்து இறுக்கமடைந்தவன் பிறகு சிறிது தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொண்டு அவளை முறைத்து விட்டு காரை நிறுத்தினான்..
“என்ன காரை நிறுத்திட்ட? அதுக்குள்ள நம்ம போக வேண்டிய இடம் வந்துருச்சா?” என்று கேட்க “இல்ல.. நம்ம போக வேண்டிய இடம் இருக்கட்டும்.. நீ இப்ப முதல்ல இங்கிருந்து எழுந்து பின் சீட்ல போய் உட்காரு..” என்று சொன்னான் அருண்..
“இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன்.. ப்ளீஸ் நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேனே..” என்றாள் அவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு..
“முடியாது.. இந்த மாதிரி பாவமா மூஞ்சி வச்சுக்கிட்டு நடிக்கறது எல்லாம் என்கிட்ட வேண்டாம்.. எழுந்து போய் பின்னாடி உட்காரு..” என்று சொன்னவனிடம் “நான் என்னடா பண்ணுவேன்..? இவ்வளவு அழகா ஹீரோ மாதிரி இருக்க.. என்னால என்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியல.. ஆக்சுவலா பார்த்தா நான் முத்தம் கொடுத்து இருக்க வேண்டிய இடமே வேற.. என்னை நானே கண்ட்ரோல் பண்ணிட்டதனால தான் கன்னத்துல கொடுத்துட்டு விட்டுட்டேன்.. நீ ஏன்டா இவ்வளவு க்யூட்டா ட்ரஸ் பண்ணிட்டு வர? அந்த மெக்கானிக் ஷெட்ல இருப்பியே அதே மாதிரி அழுக்கா வர வேண்டியதுதானே?” என்று பொய் கோபம் காட்டி அவனிடம் கேட்க அவனுக்கோ அவள் கோபத்தை பார்த்து சிரிப்பு வந்தது..
அவள் கன்னத்தைக் கிள்ளியவன் “சரி இங்கேயே உட்காரு.. ஆனா எந்த சேட்டையும் பண்ண கூடாது.. நாளையிலிருந்து நான் மெக்கானிக் ஷெட்ல எப்படி இருக்கனோ அப்படியே வரேன்..” என்றான் அவன்..
“வேணாம் வேணாம்.. நீ இப்படியே டிரஸ் பண்ணிக்கிட்டு வா.. என்னை நான் கண்ட்ரோல் பண்ணிக்கிறேன்..” என்று அவள் பதில் சொல்ல அவன் முகம் தான் கொஞ்சம் சுருங்கி போனது..
அதை கவனித்தவள் “சாரி டா.. ப்ளீஸ்.. சோகமாகாத.. நான் ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.. இனிமே இப்படி பண்ணவே மாட்டேன்.. நீ கொஞ்சம் ஸ்மைல் பண்ணேன்.. ப்ளீஸ்..” என்று அவள் கேட்க சிரமப்பட்டு அவன் புன்னகைத்தான்..
“சரி விடு.. கொஞ்ச நேரத்துல நான் சரியாயிடுவேன்… போலாமா?” என்று கேட்டவனிடம் “போலாம்..” என்று உதட்டை பிதுக்கிய படி சொன்னவளின் தலையை வருடிவிட்டு வண்டியை எடுத்தான் அருண்..
காரை ஒரு மேற்கத்திய நடனம் சொல்லிக் கொடுக்கும் இடத்தின் முன்னால் நிறுத்தினான்…
அதை பார்த்தவள் “டான்ஸ் கிளாஸா.. இங்கே போட்டு.. நான் எப்ப கத்துகிறது..? ஒரு வாரத்தில நடக்கிற காரியமா? நீ எங்கேயோ என்னை சந்தோஷப்படுத்த ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்க கூட்டிட்டு வரேன்னு நினைச்சேன்..” என்று சொன்னவுடன் “முதல்ல இறங்கு.. நம்ம நினைச்சா முடியாதுன்னு எதுவும் கிடையாது.. ஒரு வாரத்துல உன்னால டான்ஸ் பண்ண முடியும்.. வா..” என்று சொன்னவன் அவள் இறங்கியவுடன் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த நடன வகுப்புக்குள் சென்றான்..
அவர்களிடம் விஷயத்தை சொல்ல அவர்களும் அன்றைய வகுப்பை தொடங்கினார்கள்.. தேஜு அந்த வகுப்பு ஆசிரியருடன் நடனமாட மிகவும் கஷ்டப்பட்டதை பார்த்தவனுக்கு அவளை நினைத்து சிறிது கவலையாக இருந்தது..
ஆனால் அவளுக்கு தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும் என்று எண்ணி அடுத்த இரண்டு நாட்களும் அந்த வகுப்பிற்கு கூட்டி வந்தான் அவளை..
ஆனால் அவளுக்கு பெரிதாக நடனத்தில் முன்னேற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.. அதனால் சோகமடைந்தவள் முகத்தை உம்மென்று வைத்திருக்க அவனுக்கு ஏதோ போல இருந்தது..
“இப்ப எதுக்கு நீ இப்படி உம்முன்னு இருக்க? இப்ப என்ன ஆயிடுச்சு? மூணு நாள் தானே ஆகி இருக்கு.. இன்னும் நாலு நாள் இருக்கு.. அதுக்குள்ள உனக்கு நல்லா டான்ஸ் ஆட வந்திடும்..” என்று சொன்னவனை “இப்படி சொல்லி சொல்லி என்னை ஏமாத்தாத அருண்.. எனக்கெல்லாம் சுட்டு போட்டாலும் டான்ஸ் வராது..” என்று சொன்னவளின் நாடி பிடித்து தன் பக்கம் திருப்பியவன் “உனக்கு எல்லாம் வரும்.. அதுக்கு நான் கேரண்டி.. சரி இப்போ மூடை மாத்துவோமா? வா.. உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்..” என்று சொன்னவன் அவளை அழைத்துக் கொண்டு ஒரு ஆடை வடிவமைக்கும் இடத்திற்கு சென்றான்..
“இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க?” என்று கேட்டவளிடம் “வெயிட் பண்ணு… சொல்றேன்..” என்று சொன்னவன்.. அவளை உள்ளே அழைத்துச் செல்ல அங்கே விதவிதமான மேற்கத்திய ஆடைகள் இருந்தன..
“இதிலிருந்து நீ ஒரு டிரஸ் வாங்கிக்கோ.. இந்த டிரஸ் போட்டுக்கிட்டு தான் நீ டான்ஸ் பண்ணனும் காம்பெட்டிஷன்ல.. இது நீ அந்தப் போட்டியில் ஜெயிக்க போறதுக்கு என்னோட அட்வான்ஸ் கிஃப்ட்..” என்று சொன்னவனை உணர்ச்சி வசப்பட்டு இறுக்க கட்டிக்கொண்டவள் “ஐ லவ் யூ டா செல்லக்குட்டி..!!” என்று உற்சாகமாய் சொல்லிவிட்டு அவனை விட்டு விலகி என்ன செய்தோம் என்று கூட அறியாமல் ஆடைகளை பார்க்க ஆரம்பித்தாள்..
அந்த ஒரு நொடி ஏதோ பெரிய கண்டத்தையே கடந்து வருவது போல இருந்தது அவனுக்கு..
அந்த ஆடைகளில் ஒரு ஆடையை எடுத்து பார்த்தவள் “இந்த டிரஸ் அழகா இருக்கு ஆனா..” என்று இழுக்க “ஆமாம்.. அழகா இருக்கு.. எனக்கு புடிச்ச பிங்க் கலர்” என்று அவன் சொல்ல “உனக்கு பிங்க் கலர் பிடிக்குமா? அப்படின்னா இதையே எடுத்துக்கிறேன்..” என்று அவள் சொல்ல “இல்லையே இந்த டிரஸ் அழகா இருக்கு.. ஆனான்னு ஏதோ சொல்ல வந்த.. என்ன விஷயம்..? ஒழுங்கா உண்மையை சொல்லு..” என்று கேட்டான்..
தொடரும்…
கமெண்ட்ஸ் போட மறக்காதீங்க செல்லம்ஸ்…❤️❤️
உங்கள்
❤️❤️சுபா❤️❤️