பரீட்சை – 68
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
மடியில் உறங்கும்
மழலையாய் நீ
உறங்க உன்
முகத்தைப் பார்த்து
மயங்கி விட்டேனடா
என் மன்மதனே..
நிம்மதியான உறக்கம்
என்பதே இல்லாமல்
நெடுநாளாய் தவித்திருந்த
உனக்கு
நெஞ்சில் அமைதி
தரும்
அன்னை மடியாய்
என் மடியானதோ
சொல்லடா என்
நினைவில் எப்போதும்
நிலைத்திருப்பவனே..!!
#####################
நினைவில் நிலைத்திருப்பவனே..!!
உறங்கிக் கொண்டிருந்த அருணை பார்த்தவள் அவன் முகத்தில் இருந்த அமைதியை பார்த்து மனதிற்குள் “கொஞ்ச நேரத்துல என்னை கலங்க அடிச்சுட்டியேடா.. நீ என்னை அடிக்க வந்தப்போ உன் முகத்தை பார்த்து அப்படியே உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிட்டேன் டா.. மனசுல எவ்ளோ வேதனை வச்சிருக்கே? எனக்கு தெரிஞ்சு ரொம்ப நாளைக்கு அப்புறம் நீ இன்னைக்கு தான் நிம்மதியா தூங்குறேன்னு நினைக்கிறேன்.. நிச்சயமா உன் வாழ்க்கையில நான் உன் கூடயே இருந்து இந்த நிம்மதியை எப்பவும் இருக்க வைப்பேன்டா..” என்று சொல்லிக் கொண்டாள்..
அவள் மடியிலேயே தலை வைத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் உறங்கியவன் திடீரென கண் விழித்தான்..
தான் தேஜுவின் மடியில் அவ்வளவு நேரமாக தலை வைத்து படுத்திருந்ததை உணர்ந்தவன் “ஐயோ அஸ்வினி.. சாரிடி.. உனக்கு காலு எவ்ளோ வலிச்சிருக்கும்.. நான் பாட்டுக்கு உன் மடியில அப்படியே படுத்து தூங்கிட்டேன்.. என்னை எடுத்து தலையணையில படுக்க வைக்க வேண்டியதுதானே? இவ்வளவு நேரம் உன் மடியில படுத்து இருந்தா உன் கால் ரொம்ப வலி எடுத்திருக்கும்..” என்று கேட்டு பதறியவனிடம் “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ரொம்ப நாளைக்கு அப்புறம் நீ நிம்மதியா தூங்கினே டா.. தூங்கும்போது உன் முகத்தை பார்த்துக்கிட்டே இருந்தேனா.. எனக்கு நேரம் போறதே தெரியல.. எந்த வலியும் தெரியல.. தூங்குறவங்களை ரசிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. ஆனா தூங்கும்போது நீ ரொம்ப அழகா இருக்கடா… என்னால ரசிக்காம இருக்கவே முடியல..” என்று சொல்ல அவன் ஒரு வெட்கச் சிரிப்பு சிரித்தான்..
“இப்படி எல்லாம் வெக்கப்பட்டு சிரிக்காத.. இன்னும் அழகா இருக்கடா என் அழகா..” என்று அவன் கன்னத்தை கிள்ளியவள் அவன் மார்பில் புதைந்து கொண்டு “எனக்கு இப்படி உன்னை பார்த்துக்கிட்டே இருந்தா கூட போதும் டா.. வேற எதுவும் வேண்டாம்..” என்று சொன்னவளை “எனக்கு ஆனா இது போதாது அஸ்வினி.. உனக்கு இந்த உலகத்தோட அத்தனை சந்தோஷத்தையும் கொடுக்கணும்.. அதுக்கு வழி தெரியாம தான்டி இருக்கேன்..” என்றான் அருண்..
“தயவு செஞ்சு உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி? சொல்லுடா.. நான் ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்..” என்றவளை பார்த்து ஒரு விரக்தி சிரிப்பு சிரித்தவன் “நான் சொல்றேன்.. ஆனா இதுக்கு எதுவும் பண்ண முடியாது அஸ்வினி… நான் இதுக்கு ட்ரீட்மென்ட்க்கு போயிட்டு தான் இருக்கேன்.. ஆனா அதனால ஒரு எஃபெக்ட்டும் இல்லை..” என்றான் அருண்..
“சரி.. நீ என்ன நடந்ததுன்னு சொல்லு.. அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்..” என்று சொன்னவளிடம் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான் அருண்..
“ஆக்சுவலா நான் அம்மா அப்பா இல்லாத ஒரு அனாதை.. அம்மா அப்பா இல்லாதன்னு சொல்றதை விட அம்மா அப்பாவால வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு அனாதை.. ஒரு அனாதை ஆசிரமத்தில் தான் நான் வளர்ந்துக்கிட்டு இருந்தேன்.. இங்க கொடைக்கானல்ல தான் அந்த ஆஷ்ரமம் இருக்கு.. அந்த ஆஷ்ரமத்துல என்னை யாரு கொண்டு வந்து விட்டாங்கன்னு எனக்கு சின்ன வயசுல தெரியாது.. நான்… என்னோட ஃப்ரெண்ட் இந்தர்.. அப்புறம் அவனோட உயிர் தீபா.. நாங்க மூணு பேரும் ஆஸ்ரமத்துக்கு ஒரே நாள்ல வந்தவங்க.. கிட்ட தட்ட மாச கணக்குல எங்களுக்குள்ள வயசுல டிஃபரென்ஸ் இருந்திருக்கும்..
மூணு பேருமே நல்ல ஃபிரண்ட்ஸா இருந்தோம்.. தீபா என்னோட ஒரு ஃபிரண்டா மட்டும்தான் பழகிக்கிட்டு இருந்தா.. நாங்க மூணு பேரும் அடிக்காத லூட்டி கிடையாது ஆஷ்ரமத்துல.. யார் எங்களை பார்த்தாலும் எங்க மூணு பேரையும் ஒட்டி பொறந்த குழந்தைகள்னு சொல்லுவாங்க.. அந்த அளவுக்கு எல்லா நேரமும் நாங்க மூணு பேரும் ஒண்ணா தான் இருந்தோம்.. நான் ரொம்ப நல்லா படிப்பேன்.. இந்தர் அவ்வளவு நல்லா படிக்கலனாலும் நல்லா பாடுவான்.. அவனுக்கு கிட்டார் கூட வாசிக்க தெரியும்.. அப்பப்போ நான் அவனை பாட சொல்லி கேட்பேன்.. தீபாவும் நல்லா பாடுவா.. இரண்டு பேரும் டூயட் சாங்ஸ் எல்லாம் பாடுனாங்கன்னா எதோ லவ்வர்ஸ் பாடற மாதிரியே இருக்கும்..
ஆஷ்ரமத்துல எனக்கு மட்டும் நல்ல சட்டை.. நல்ல சாப்பாடுன்னு சிஸ்டர் சில சமயம் கொடுப்பாங்க.. நான் ஏன்னு கேட்டா காரணம் சொல்ல மாட்டாங்க.. எனக்கு கொடுக்கறது அத்தனையும் நான் அவங்க ரெண்டு பேருக்கும் கொடுப்பேன்.. என் சட்டை எல்லாம் இந்தருக்கும் போட்டு பார்த்து அழகு பார்ப்பேன்.. என்ன சாப்பாடு எக்ஸ்ட்ரா கிடைச்சாலும் இந்தருக்கும் தீபாக்கும் கொடுத்துட்டு தான் சாப்பிடுவேன்.. நாங்க மூணு பேரும் எங்க உலகத்துல சந்தோஷமா இருந்தோம்.. தினமும் ஸ்கூலுக்கு போய் படிச்சிட்டு வர்றது.. வந்தப்புறம் விளையாடுறது.. அதுக்கப்புறம் நைட் கதை பேசிக்கிட்டே தூங்குறதுன்னு எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போயிட்டு இருந்தது..
ஆனா ஒரு 15 வயசுக்கு மேல இந்தரும் தீபாவும் பார்த்துக்கற பார்வையில ஒரு வித்தியாசம் தெரிஞ்சது..
அன்னைக்கு இந்தர் என்னோட பேசிக்கிட்டே இருந்தான்.. அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ இருக்குது தெரிஞ்சுக்கிட்ட நான் இந்தரை அது பத்தி கேட்டேன்.. அவனும் என்கிட்ட மறைக்காம தீபாவை லவ் பண்றதை பத்தி சொன்னான்..
தீபா அதை மறைஞ்சிருந்து கேட்டுட்டா..
நான் இந்தர் கிட்ட அவன் தீபாவை லவ் பண்றான்னா அதை அவ கிட்ட சொல்ல வேண்டியது தானேன்னு கேட்டதுக்கு தனக்கு சொல்றதுக்கு தயக்கமா இருக்குன்னும் ஒரு வேளை அவ தன்னை காதலிக்கலன்னு சொல்லிட்டா அதை தன்னால தாங்கவே முடியாதுன்னும் சொன்னான்..
நான் “அதுக்காக சொல்லாமலே இருப்பியா?” அப்படின்னு கேட்டதுக்கு தான் பிறந்த நாள் அன்னைக்கு அவகிட்ட சொல்ல போறதா என்கிட்ட சொன்னான்.. அவன் பிறந்த நாளும் வந்தது.. நாங்க எல்லாருமே படிச்சுக்கிட்டு தான் இருந்தோம் ஸ்கூல்ல.. அது தவிர நாங்க ஆசிரமத்துல சின்ன சின்ன கைவேலைகள் எல்லாம் செய்வோம்.. அதை வித்து அதில் கிடைச்ச பணத்தை வைச்சு அவன் பர்த்டேக்கு ஒரு கேக் வாங்கினோம்.. அவன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினோம்.. அவன் அன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தான்.. அப்போ அவன் எல்லா பசங்களுக்கும் கேக் கொடுத்துட்டு இருந்தப்ப அவன் கண்ணு முன்னாடி தீபா என்னை இழுத்துகிட்டு தனியா கூட்டிட்டு வந்தா.. எனக்கு ஒண்ணுமே புரியல..
“என்ன தீபா? எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த? அங்க பர்த்டே பார்ட்டி நடக்குது இல்ல?”ன்னு நான் கேட்க அவ “அதை விடு.. பின்னாடி இந்தர் வரானா?”ன்னு கேட்க நான் பின்னாடி பார்த்தப்போ இந்தர் எங்க பக்கம் தான் கேள்வியா பாத்துக்கிட்டே வந்தான்.. “ஆமா நம்ம பக்கம் தான் வரான்”னு நான் சொன்னேன்.. அப்போ “ஜப் வி மெட் படத்துல வரும் இல்ல.. அந்த மாதிரி ஒரு பிராங்க் பண்ண போறேன்.. சரியா?”ன்னு சொல்லிட்டு சட்டுன்னு என் உதட்டில முத்தம் கொடுக்குற மாதிரி பாவனை பண்ணா.. என் உதட்டுல அவ உதடு படவே இல்லை..
பின்னாடியில் இருந்து பார்த்த இந்தர் முகம் அப்படியே சுருங்கி போச்சு.. வாடி வதங்கி வேதனையில அங்கே இருந்து திரும்பி அப்படியே போயிட்டான்..
“தீபா இந்தர் உம் மேல உயிரையே வச்சிருக்கான்.. நீ எதுக்கு இப்படி பண்ற?”ன்னு நான் கேட்டேன் தீபா கிட்ட.. அவ “இப்ப அவன் கோவமா போய் இருக்கான் இல்ல? இப்ப போய் அவனை சமாதானப்படுத்தி இது சும்மா விளையாட்டுக்கு செஞ்சேன்.. நான் உன்னை தான் விரும்புறேன்னு என் காதலை அவன் கிட்ட சொல்லி அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன்..” ன்னு அவ சொன்னா..
ஆனா அவ சர்ப்ரைஸ் கொடுக்கறதுக்கு முன்னாடி இந்தர் எங்களுக்கு ஷாக் கொடுத்துட்டான்.. உள்ளே இருந்து திடீர்னு யாரோ பயங்கரமா கத்துற, அழுகுற சத்தம் கேட்டுது.. நாங்க சத்தம் வந்த பக்கம் ஓடிப்போய் பார்த்தோம்.. அங்க.. அங்க..” என்று உணர்ச்சிவசப்பட்டு கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான் அருண்..
“அருண் ரிலாக்ஸ் பண்ணு.. ஒன்னும் இல்ல.. ரிலாக்ஸ் பண்ணு..” என்று தேஜு சொல்ல “இந்தர் அவனையே எரிச்சுக்கிட்டு செத்துட்டான் என் கண்ணு முன்னாடி.. அவன் எரிஞ்சு சாம்பலாறதை நான் பார்த்தேன் அஸ்வினி.. அப்படியே உறைஞ்சு போய் நின்னேன்.. அந்த நிமிஷம் அது எல்லாத்துக்கும் காரணம் அந்த தீபா தான்னு எனக்கு தோணுச்சு.. பக்கத்துல நின்னு கதறிக்கிட்டிருந்த அவளோட கழுத்தை புடிச்சு நெறிச்சு அவளை கிட்டத்தட்ட கொன்னுட்டேன்..
ஆனா அவளை என்கிட்ட இருந்து காப்பாத்தினவங்களால அவளோட மனசாட்சி கிட்ட இருந்து அவளை காப்பாத்த முடியல.. அடுத்த ஒரு வாரத்துல அவ தூக்கு மாட்டிட்டு இந்தரோட நினைப்பிலேயே செத்துட்டா..
ஆனா என்னால அந்த சம்பவத்தை மறக்க முடியல.. என் ஃப்ரெண்ட் அவன்.. சாகுறதுக்கு முன்னாடி அவன் லவ் பண்ண பொண்ணோட என்னை அப்படி பார்த்தப்போ என்னை பத்தி என்ன நினைச்சிருப்பான்னு ஒவ்வொரு நாளும் நெனச்சு அணு அணுவா சித்திரவதை அனுபவிச்சேன்..
நான் விரும்புற பொண்ணு இன்னொருத்தனுக்கு முத்தம் கொடுத்துட்டாளேன்னு தோணி இருக்கும் அவனுக்கு.. மனசுக்குள்ள உடைஞ்சு அப்படியே அந்த நிமிஷமே உயிர் போன மாதிரி அவனுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்.. இதுல என் தப்பு எதுவும் இல்லைன்னாலும் அவன் செத்ததுக்கு நான் தானே காரணம் அஸ்வினி.. நான் அங்க அவங்களோட இருந்ததுனால தானே அவ எனக்கு முத்தம் கொடுக்கற மாதிரி நடிச்சு அவனை வெறுப்பேத்தணும்னு நினைச்சா.. என் ஃப்ரெண்ட்ஸோட சாவுக்கு காரணமா இருந்ததா நெனைச்சு என்னையே நான் வெறுக்க ஆரம்பிச்சேன்.. எனக்கு ஆறுதல் சொல்ல வந்த அத்தனை பொண்ணுங்களையும் எங்க ஆசிரமத்தில் இருந்த சிஸ்டர் உட்பட எல்லாரையும் கொலை பண்ணனும்னு நினைக்க ஆரம்பிச்சேன்.. பொண்ணுங்க இந்த உலகத்துல வாழறதுக்கு தகுதி இல்லாதவங்கன்னு நினைச்சு வெறுக்கிற அளவுக்கு என்னை அந்த சம்பவம் கொண்டு போயிருச்சு..
அதுக்கப்புறம் பொண்ணுங்க கிட்டருந்து விலகி வாழ்க்கையை வாழ்ந்து கிட்டு இருந்தேன்.. வாரம் ஒரு நாள் கவுன்சிலர் கிட்ட போய் நான் கவுன்சிலிங் எடுத்துட்டு இருக்கேன்.. இப்போ பொண்ணுங்களோட பேச முடியுது.. ஆனா என்கிட்ட நெருங்கி வர பொண்ணுங்களை என் முறைப்பிலேயே தள்ளி போற மாதிரி பண்ணிடுவேன்.. அதெல்லாம் தாண்டி என் மனசை தொட்ட ஒரே பொண்ணு நீ தான்டி.. என்னால உன்னை காதலியா நினைக்காமயும் இருக்க முடியல.. ஆனா அப்படி நினைச்சா நீ என் கையாலயே செத்துருவியோன்னு பயமாவும் இருக்கு.. ஏன்னா ஒரு மனைவியா நினைச்சு நான் உன்னை தொடற அந்த நிமிஷம் என்னுடைய பழைய ஞாபகங்கள் வந்து உன்னை கொன்னுடுவேன்டி.. அதான் உன்னை என்கிட்ட இருந்து தள்ளியே வைக்கணும்னு நினைச்சேன்..” என்றான்..
“சரி.. நீ அந்த ஆசிரமத்தை விட்டு ஏன் வந்த?” என்று கேட்டாள் தேஜூ..
“அந்த ஆசிரமத்துல எனக்கு இந்தரோட ஞாபகமும் தீபாவோட ஞாபகமும் அடிக்கடி வந்து கிட்டே இருந்தது.. அங்க இருந்த பொண்ணுங்க எல்லாம் என்னை பார்த்தாலே பயப்பட ஆரம்பிச்சாங்க.. அப்ப கூட அந்த ஆசிரமத்தோட சிஸ்டர் என்கிட்ட வந்து அருண் இன்னும் கொஞ்ச நாள் கவுன்சிலிங் போனா உன்னுடைய எல்லா ப்ராப்ளமும் சரி ஆயிடும்.. அந்த கவுன்சிலர் என்கிட்ட நீ கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டு இருக்கேன்னு தான் சொன்னாங்க.. உன்னோட ஸ்கூல் ஸ்டடீஸ் முடிஞ்சிடுச்சு.. நீ பிளஸ் டூ ல நல்ல ஸ்கோர் பண்ணி இருக்கே.. உன்னை காலேஜ் அனுப்புறதுக்கு ஒரு ஸ்பான்சர் கிடைச்சிருக்கு.. நான் உன்னை காலேஜ் அனுப்ப போறேன்.. பக்கத்தில் இருக்கிற ஆர்ட்ஸ் காலேஜ்ல நீ பிஎஸ்சி மேக்ஸ் சேர்ந்துப் படின்னு சொன்னாங்க..
நானும் அந்த ஆஷ்ரமத்தில் இருந்து எனக்கு வெளியில போக ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு சந்தோஷமா சரின்னு தான் சொன்னேன்.. பொண்ணுங்கள பார்த்தா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியல.. அதனால அதை நினைச்சு கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு.. ஆனாலும் பரவால்லன்னு நான் காலேஜுக்கு வர்றதுக்கு ரெடியாயிட்டு இருந்தேன்.. அப்போ ஒரு நாள் நான் சிஸ்டர் ரூம் வழியா போயிட்டு இருக்கும்போது அவங்க என் பெயர் சொல்லி ஒரு கேர் டேக்கர் கிட்ட பேசிட்டு இருந்தது எனக்கு கேட்டது..” என்று சொன்னவன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தான்..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”