அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 69🔥🔥

4.5
(12)

பரீட்சை – 69

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

மழலையாய் மாறி 

என் சோகம் 

தீர்க்க 

என்னோடு சிரித்து

விளையாடினாய்..

 

தாயாய் மாறி 

என் வேதனை 

தீர 

வடிகாலாய்

உன் மடி 

தந்தாய்..

 

தோழியாய் மாறி 

எனக்கு உற்சாகம்

ஊட்ட 

தோள் கொடுத்து 

அரட்டை அடித்தாய்..

 

காதலியாய் மாறி 

என் கவலை 

தீர்க்க

உன் காதலையே 

பரிசாய் தந்தாய்..

 

இன்னும் என்ன 

வேணுமடி 

எனக்கு..?

இந்த வரம் 

போதுமடி சகியே..!!

 

#################

 

அனைத்துமாய் ஆனவளே..!!

 

 

“நான் காலேஜுக்கு போறதுக்கு ரெடியாயிட்டு இருந்தேன்.. அப்போ ஒரு நாள் நான் சிஸ்டர் ரூம் வழியா போயிட்டு இருக்கும்போது அவங்க என் பெயர் சொல்லி ஒரு கேர் டேக்கர் கிட்ட பேசிட்டு இருந்தது எனக்கு கேட்டது..” என்று சொன்னவன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தான்.. 

 

பிறகு முகத்தை நிமிர்த்தி தேஜுவை பார்த்தவன் “அவங்க என்ன பேசுறாங்கன்னு அங்கேயே நின்னு கேட்டேன்.. அப்ப அவங்க சொன்னதை கேட்டப்போ எனக்கு என்னை நெனச்சே வெறுப்பா இருந்துச்சு.. இப்படி கூட உலகத்தில மனுஷங்க இருப்பாங்களான்னு தோணுச்சு.. இந்த உலகத்துல பணத்தை தவிர வேறு எதுக்குமே வேல்யூ கிடையாதுன்னு தோணுச்சு” என்று சொன்னவனிடம் “அப்படி என்ன பேசினாங்க அந்த சிஸ்டர்?” என்று கேட்டாள் தேஜூ..

 

அந்த கேர் டேக்கர் “மேடம் இதுவரைக்கும் எந்த குழந்தையையும் நீங்க காலேஜ்ல படிக்க வைக்க முடியறதில்லை.. நம்ம கிட்ட அவ்வளவு ஃபண்ட்ஸ் கிடையாது.. ஆனா இந்த அருணை மட்டும் காலேஜ்ல படிக்க வைக்கிறேன்னு சொல்றீங்க.. இது எப்படி உங்களால முடியுது..? அவனுக்கு மட்டும் எப்படி மேடம் பணம் செலவு பண்ண முடியும்? அவனுக்கு செலவு பண்ற பணத்தை நம்ப ஆசிரம செலவுகளுக்கு எடுத்துக்கிட்டா.. எல்லா பசங்களுக்கும் ரெண்டு வேளை சாப்பாடு துணிமணி இதெல்லாம் கிடைக்கும் இல்ல..?”ன்னு கேட்டாங்க..

 

அதுக்கு அந்த சிஸ்டர் சொன்ன பதில் ஒரு நிமிஷம் என் வாழ்க்கையையே அர்த்தம் இல்லாம ஆக்கிடுச்சு.‌.. அது வரைக்கும் நான் எதுக்கு வாழ்ந்தேன்னு என்னை நானே கேள்வி கேட்டு புழு மாதிரி துடிச்சேன்.. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா அப்படின்னு எனக்கு நினைக்க தோணுச்சு.. என்னை மாதிரி ஒரு ஈனப்பிறவி ஒரு தேவையில்லாத குழந்தை இந்த உலகத்தில இருக்க முடியுமான்னு தோணுச்சு..” என்று சொல்லும் போதே அவன் கண்ணில் கண்ணீர் வழிய அழுது கொண்டிருந்த அருணை கண்களை துடைத்து சமாதானப்படுத்தினாள் தேஜூ..

 

“உன்னால சொல்ல முடியலைன்னா விட்டுடு அருண்.. இன்னிக்கு ரொம்ப அழுதிட்ட…” என்று சொல்ல.. “இல்ல அஸ்வினி.. உன்கிட்ட சொன்னா என் மனசுல இருக்குற பாரம் குறையற மாதிரி இருக்கு.. எனக்கு உன் கிட்ட சொல்லணும்..” என்று சொன்னவன் “அந்த சிஸ்டர் அந்த கேர் டேக்கர் கேட்ட கேள்விக்கு அருணை நம்ப ஆஸ்ரமத்துக்கு கிடைக்கிற டொனேஷன்ல இருந்து நான் படிக்க வைக்கல.. அவன் தாத்தா கொடுக்குற பணத்தில் இருந்து தான் நான் படிக்க வைக்கிறேன்”னு சொன்னாங்க..

 

எனக்கு ஒரு தாத்தா இருக்கிறார்.. அவர் மாசா மாசம் என் செலவுக்கு பணம் கொடுத்துட்டு இருக்காரு.. அப்படிங்கறது எனக்கு அப்போ தான் தெரியும்..” என்றவனிடம் தேஜூ “உனக்கு ஒரு தாத்தா இருக்கிறார்ன்னா அப்ப ஏன் உன்னை அந்த அனாதை ஆசிரமத்தில விட்டு வச்சிருநதாங்க..?” என்று கேட்க “அதுக்கும் அவங்களே பதில் சொன்னாங்க.. அருணோட அம்மா யாரோ ஒரு பையனை பணக்காரன்னு நம்பி ஏமாந்து இருக்காங்க.. ஏதோ இளமை வேகத்துல தப்பு பண்ணிட்டாங்களாம்.. ஆனா அதுக்கப்புறம் அவனை பத்தி தெரிஞ்சப்போ அவன்கிட்ட இருந்து வெலகிட்டாங்களாம்.. அவங்க ஒரு குழந்தையை சுமந்துட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சப்பறம் அருணோட தாத்தா அவங்களை யாருக்கும் தெரியாம இங்க கொடைக்கானல்ல இருக்கிற ஒரு தனி பங்களாக்கு அவங்களை அனுப்பிச்சு அவங்களை பார்த்துக்க ஒரு ஆள் போட்டு ஒருவழியா அந்த குழந்தை பிறந்திருக்கு.. அருண் அவங்க கூட இருந்தா தான் நினைச்ச மாதிரி ஒரு பணக்காரரை நல்ல அந்தஸ்து இருக்குற ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு நெனச்சு இந்த குழந்தையை வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்களாம் அருணோட அம்மா.. இந்த குழந்தைய வளர்க்க அவங்களுக்கு இஷ்டம் இல்லையாம்.. அவங்க அந்த குழந்தையை தான் உயிரா நினைக்காம அதை பாரமா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.. தான் நெனைச்ச மாதிரி வாழ்க்கையை வாழறதுக்கு ஒரு தடையா அருணை நினைக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.. ஒரு நாள் அந்த குழந்தையை எடுத்து எங்கேயோ கொண்டு போய் ஒரு குப்பை தொட்டி பக்கத்துல போட்டுட்டு வந்துட்டாங்க போல இருக்கு.. அவங்க அப்பா வந்து கேட்டப்போ எதுவுமே சொல்லாம இருந்திருக்காங்க.. வேலைக்காரங்க மூலமா விஷயம் தெரிஞ்சு அங்கிருந்து மறுபடியும் குழந்தையை தூக்கிட்டு வந்து இருக்காரு அவரு.. அருணோட அம்மா அந்த குழந்தையை வெறுத்தாங்க.. ஆனா அந்த தாத்தாக்கு தன் பேரன் மேல் நிறைய பாசம் இருந்தது.. தன் மகளையும் விட்டுக் கொடுக்க முடியல.. அதே சமயம் அருணை அவர் வீட்டில வச்சு வளர்த்தா சொந்தக்காரங்கள்லாம் எப்படியும் அந்த குழந்தை யாரு என்னன்னு கேட்பாங்கன்னு நினைச்சு அந்த குழந்தையை இங்கே எடுத்துட்டு வந்தார்.. தான் பேரனை தன்னோடு வெச்சுக்கவும் முடியாம அவனை தூக்கி போடவும் முடியாம அந்த தாத்தா வேற வழி இல்லாம இந்த ஆசிரமத்தில கொண்டு விட்டு மாசா மாசம் அவனோட செலவுக்கு பணமும் கொடுத்துட்டு இருக்காரு..” அப்படின்னு அந்த சிஸ்டர் சொன்னதை கேட்டு எனக்கு அப்படியே இந்த உலகமே இடிஞ்சு என் தலை மேல விழுந்தது போல இருந்தது.. எங்க அம்மாக்கு நான் வேண்டாம்.. எங்க அப்பாவுக்கு  நான் இருக்கிறதே தெரியாது.. எங்க தாத்தா அவர் பொண்ணுக்காக என்னை தள்ளி வச்சுட்டாரு.. என்னை பாரமா நினைச்சு இந்த அனாதை ஆசிரமத்தில விட்டு ஏதோ கடமைக்காக எங்க தாத்தா எனக்கு செலவு மட்டும் பண்ணிட்டு இருந்தாரு..” என்று அவன் சொல்ல அவன் கதையைக் கேட்டு தேஜூவின் கண்களில் கண்ணீர் ஆறாய் கொட்டிக் கொண்டிருந்தது..

 

“நீ உங்க அம்மா உன்னை இப்படி வெறுத்தாங்கன்னு சொல்றதை என்னால ஏத்துக்கவே முடியல அருண்.. எனக்கு ஆச்சரியமா இருக்கு ஒரு அம்மாவால தான் குழந்தையை வெறுக்க முடியுமான்னு.. இப்போவும் நீ சொல்றதை என்னால நம்ப முடியல.. இத்தனை வருஷத்துல உங்க அம்மா ஒரு தடவை கூட ஒன்னை வந்து பார்த்ததில்லையா?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள் தேஜூ..  

 

இல்லை என இடவலமாக தலையை ஆட்டியவன் “அந்த சிஸ்டர் சொன்னதை கேட்டப்புறம் அந்தப் பெரிய மனுஷன் கொடுத்த பணத்தில நான் போட்டு இருந்த சட்டை பேன்ட்டை கூட கழட்டி எரிச்சிடனும்னு தோணிச்சு..” என்று சொன்னவன் விரக்தியாய் சிரித்தான்..

 

“ஆனா அப்ப என் கையில சல்லி காசு கிடையாது.. அப்படி எரிச்சேன்னா நான் டிரஸ் இல்லாம தான் இருந்துருக்கணும்.. அதனால அன்னிக்கு அந்த ஆசிரமத்தை விட்டு நான் வெளியில் வந்தேன்.. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இனிமே அந்த முகம் தெரியாத தாத்தா கொடுக்கிற பணத்துல சாப்பிடக்கூடாது.. ட்ரஸ் போட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.. ஏற்கனவே என் மனநிலை காரணமா பொண்ணுங்களை கிட்ட சேர்க்காத எனக்கு இப்ப எங்க அம்மா செஞ்ச காரியம் தெரிஞ்சதனால பொண்ணுங்க மேல வெறுப்பே வந்துருச்சு.. பொண்ணுங்களை பார்த்தாலே கொல்லணும்னு தோணுச்சு.. அதனால அதுக்கப்புறம் எந்த பொண்ணையும் என்னை நான் நெருங்க கூட விடல.. அவங்களை பார்க்கும்போதே ஒரு அருவருப்பான பார்வை தான் பார்த்தேன்.. அப்பதான் நீ என் வாழ்க்கையில் வந்த.. ஒரு ரோஜா பூவோட உன் காதலை சொல்லிக்கிட்டு.. சத்தியமா சொல்றேன் அஸ்வினி.. உன்னை பாத்த அன்னைக்கு நீ முழுசா என் மனசுல வந்து உட்கார்ந்துட்ட.. ஏனோ மத்த பொண்ணுங்களை பார்க்கும்போது வர்ற மாதிரி உன்னை பார்க்கும்போது எனக்கு அருவறுப்பு வரல.. எங்க அம்மா மாதிரி பொண்ணுன்னு ஒன்னை நினைக்க தோணல.. உன்னை பார்க்கும்போதே ஏதோ எனக்காக நீ பொறந்தவன்னு தோணுச்சு.. எனக்கு அம்மா இல்லாத குறையை போக்க வந்த ஒரு தேவதைன்னு தோணுச்சு.. நீ என்னோட இருந்தா எனக்கு அம்மாவா.. பொண்டாட்டியா.. ஃப்ரெண்டா.. எல்லாமாவும் இருப்பேன்னு தோணுச்சு.. அதோட நீ ரொம்ப அழகா வேற இருந்தியா?” என்று அவன் சொல்ல அவள் தன் காலரை தூக்கி விடுவது போல் ஜாடை காட்டி பெருமையாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.. 

 

“செம க்யூட் டி நீ.. இப்படி எல்லாம் பண்ணாத.. அப்புறம் எனக்கு ரொம்ப கஷ்டமாயிரும்..” என்றான் அவன் அவள் கன்னத்தைக் கிள்ளி..

 

“சரி சரி.. நீ என் புகழ் பாடறதை கண்டினியூ பண்ணு.. கேக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..” என்றாள் அவள்..

 

அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன்.. “நீ என்கிட்ட ஐ லவ் யூன்னு முதல் நாள் சொன்னப்போ அப்பவே உன்னை இறுக்க கட்டிக்கிட்டு ஐ டூ லவ் யூ டி அப்படின்னு சொல்லணும்னு தோணுச்சு.. ஆனா இதெல்லாம் செய்ய முடியாம இந்தரோட நினைப்பும் தீபாவோட நினைப்பும் ஒரு பொண்ணு என்னை நெருங்கி வந்தா எனக்குள்ள என்ன எல்லாம் நடக்கும்ன்ற நினைப்பும் என்னை தடுத்துருச்சு.. அதனாலதான் எல்லா பொண்ணுங்களையும் எப்படி ட்ரீட் பண்ணுவனோ அதே மாதிரி உன்கிட்டயும் நடந்துகிட்டேன்.. ஆனா என்ன செஞ்சும் என் மனசை உன் பக்கம் போறதிலிருந்து என்னால தடுக்க முடியல.. அந்த நிலைமை ரொம்ப வேதனையான நிலைமை அஸ்வினி.. நான் உன்னை விரும்புறேன்னு தெரிஞ்சும் நீ இல்லாம என்னால உயிரோட வாழ முடியாதுன்னு தெரிஞ்சும் என்னை நெருங்கி வந்த ஒன்னை என் வாழ்க்கையில் இருந்து விரட்டி அடிச்சுக்கிட்டே இருந்தேன்.. என்னை நினைச்சு எனக்கே வெறுப்பா இருந்தது.. இன்னும் வெறுப்பா தான் இருக்கு.. என்னால நான் உயிருக்குயிரா விரும்புறவளுக்கு கூட எந்த சந்தோஷமும் கொடுக்க முடியலயேடி..” என்று அழுதவனை “ஆமா.. அப்படின்னு யார் சொன்னா?” என்று கேட்டாள் தேஜூ..

 

“யாரு சொல்லணும்? என் நிலைமை தான் எனக்கு தெரியுமே..” என்றவனிடம் “மறுபடியும் மறுபடியும் நான் உன்கிட்ட சொல்றேன்.. எனக்கு நீ நினைக்கிற மாதிரி சந்தோஷம் எல்லாம் வேண்டாம்.. இப்படியே உன்னை பாத்துட்டு உன் கூடவே இருக்கிற சந்தோஷம் போதும்.. என்னால நிறைவா வாழ்ந்திட முடியும் டா.. நான் உன்னோட பாதி.. உனக்கு இருக்கிற கஷ்டம் எனக்கும் தானே..? உனக்கு இருக்கிற அந்த பிரச்சனை அத்தனையும் எனக்கும் இருக்குறதா தான் நான் உணருறேன்.. அப்புறம் நீயும் அந்த பிரச்சனை அத்தனையும் எனக்கு இருக்கிறதா நினைச்சுக்கோ.. அப்புறம் நம்ம வாழறது ரொம்ப ஈசி ஆயிடும் டா.. என் சந்தோசத்தை உன் சந்தோஷமா நான் நினைக்கிறேன்.. நான் சந்தோஷப்படும் போதெல்லாம் நீயும் என்னோட சேர்ந்து சந்தோஷப்படணும்.. எனக்கு சந்தோஷம் தர்ற விஷயங்கள் அத்தனையும் உனக்கும் சந்தோஷம் தரணும்.. என் பிரச்சனை உன் பிரச்சனையா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.. அந்த சரண் எனக்கு பிரச்சனையா இருந்தப்போ அவன் உனக்கும் பிரச்சினையா தெரியனும்னு நான் எதிர்பார்த்தேன்.. அந்த பிரச்சனையை நீ ஸால்வ் பண்ணனும்னு நான் எதிர்பார்த்தேன்.. என் துக்கத்தை உன் துக்கமா நீ நெனைக்கணும்..  நான் அழும் போது நீயும் அழனும்.. எனக்கு எதெல்லாம் கஷ்டத்தை கொடுக்குதோ அது உனக்கும் கஷ்டத்தை கொடுக்கணும்.. அப்படி இருந்தா தான்டா அது காதல்.. அதே மாதிரி தான் நீயும் நினைக்கணும்.. உன் சந்தோஷத்தை என் சந்தோஷமா.. உன் துக்கத்தை என் துக்கமா.. உன் பிரச்சனையை என் பிரச்சனையா நினைக்கணும்.. அப்போ நீ இப்ப சொல்ற பாரு.. உன்னால எனக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்க முடியாதுன்னு அந்த வார்த்தைக்கு அர்த்தமே இருக்காது.. புரிஞ்சுதா?” என்று கேட்டவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் அருண்..

 

“நிஜமாவே நீ எனக்கு கிடைச்ச தேவதை.. எந்த பொண்ணும் இவ்ளோ தெளிவா வாழ்க்கையை பார்க்க மாட்டா.. உன் கண்ணுல எவ்வளவு தெளிவு இருக்கு..? எப்படி வாழ்க்கையை அப்ரோச் பண்ணனும்னு எங்கே தேடி கத்துக்கிட்ட..?” என்று கேட்டவனிடம் “ஏன்..? நான் எங்கேருந்து கத்துக்கிட்டேன்னு உனக்கு தெரியாதா?” என்று கேட்க “தெரியும்.. உங்க அப்பா கிட்ட இருந்து.. இந்த அழகியோட அப்பன் கிட்ட இருந்து.. மிஸ்டர் அழகப்பன் கிட்ட இருந்து.. கரெக்டா?” என்று கேட்டான் சிரித்துக் கொண்டே..

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!

 

மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி 

“❤️❤️சுபா❤️❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!