அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 70 🔥🔥

4.6
(9)

ரீட்சை – 70

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

என்னவளின் தந்தையிடம்

இயல்பாய் எங்கள்

காதலை

எடுத்து 

சொல்லி விட்டேன்..

 

என்னவளை 

விரும்புகிறேன் 

என்று சொல்ல

தயக்கமோ

தடுமாற்றமோ

இல்லை 

எனக்கு..

 

தன் மகளுக்கு 

ஏற்றவனாய்

என்னை அவர் 

ஏற்பாரோ?

இல்லை 

எனக்கு

தகுதி இல்லை 

என்று சொல்லி 

தள்ளி விட்டு

விடுவாரோ.. ?

 

#####################

 

சம்மதம் கிடைக்குமா?

 

“உன் கண்ணுல எவ்வளவு தெளிவு இருக்கு..? எப்படி வாழ்க்கையை அப்ரோச் பண்ணனும்னு எங்கே தேடி கத்துக்கிட்ட..?” என்று கேட்டவனிடம் “ஏன்..? நான் எங்கேருந்து கத்துக்கிட்டேன்னு உனக்கு தெரியாதா?” என்று கேட்க “தெரியும்.. உங்க அப்பா கிட்ட இருந்து.. இந்த அழகியோட அப்பன் கிட்ட இருந்து.. மிஸ்டர் அழகப்பன் கிட்ட இருந்து.. கரெக்டா?” என்று கேட்டான் சிரித்துக் கொண்டே..

 

“கரெக்ட்.. அவர் தான் எனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தது.. சரி மணி ஆறுக்கு மேல ஆயிடுச்சு.. இதுக்கு மேல நான் இங்க இருந்தா சரி கிடையாது.. நான் அப்புறம் உனக்கு நிஜமாவே பொண்டாட்டியா இந்த வீட்டிலேயே தங்கிடுவேன்..” என்று சொன்னவளை பார்த்து “இப்ப எனக்கு பயமே இல்லடி.. எனக்கு தான் நீ வாழ்க்கையோட அர்த்தத்தை புரிய வெச்சிட்டியே..”  என்றான்..

 

“அப்பாடா.. இப்பதான் என் அருண் நீ.. அப்பு…றம்..  ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் உன்கிட்ட.. நான் இனிமே இங்கே வரும்போது கூட என்னை கட்டிக்கோ.. எங்க வேணா கிஸ் பண்ணு.. ஆனா உதட்டில மட்டும் கிஸ் பண்ண கூடாது.. அப்படி கிஸ் பண்ணனும்னு நி..னை…ச்சே.. உன் கழுத்துல கைய வச்சு.. இறுக்கி புடிச்சு.. கழுத்தை நெறிச்சு.. உன்னை அப்படியே செவுத்துல தூக்கி வெச்சு நசுக்கி கொன்னுடுவேன்.. ஜாக்கிரதை” என்றாள் அவள்..

 

விளையாட்டாய் கண்களை சுருக்கி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ஏதோ சினிமா பட வில்லன் போல கையை எடுத்துக் கொண்டு போய் அவன் கழுத்தறுகில் கழுத்தை நெரிப்பது போல் வைத்திருந்து சொன்னவளை தன் இதழுக்குள் சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியபடி தலையை சாய்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அருண்.. 

 

அவன் தன் நிலை மறந்து சிரித்தான்.. அவள் பதில் அவனை சிரிக்க வைத்திருந்தது.. அவனுக்கு கோவமோ இல்லை வருத்தமோ கொடுக்கவில்லை அவள் பதில் சொல்லிய விதம்.. மாறாக ஒரு நம்பிக்கையை கொடுத்தது..

 

அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.. “நான் உன்னை கிண்டல் பண்ணல டா.. நெஜமாவே இனிமே நானும் அப்படி பண்ணலாமான்னு யோசிக்கிறேன்.. நான் அப்படி பண்ணினா அப்புறம் உனக்கு தான் பிரச்சனை இருக்குன்னு உனக்கு தோணாது இல்லை?” என்று சொன்னவளின் கன்னங்களை தன் கைகளில் ஏந்தி நெற்றியோடு நெற்றி முட்டி “சரியான கிராக்குடி நீ.. என்னையும் பைத்தியம் ஆக்கிடுவ போல இருக்கு.. என் அஸ்வினி பைத்தியம்” என்று சொன்னவனை “இல்லடா.. நான் தான் கொஞ்சம் கொஞ்சமா அருண் பைத்தியமாயிட்டு இருக்கேன்.. நீ இல்லாம என்னால ஒரு நாளை கூட நினைச்சு பார்க்க முடியல டா.. ஒரு நாள் என்ன..? ஒரு நிமிஷத்தை கூட நினைச்சு பார்க்க முடியல.. இப்ப வீட்டுக்கு போனா ஒவ்வொரு நிமிஷத்தையும் கஷ்டப்பட்டு தள்ள வேண்டி இருக்கும்.. தெரியுமா? அருண் நான் உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்று சொல்ல “ஏய்.. அஷ்ஷூ டியர்.. என்கிட்ட கேக்குறதுக்கு என்ன தயக்கம்டி உனக்கு..? என்கிட்ட எதை வேணா கேளு..” என்றான் அவன்…

 

“அது.. நமக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும் நான் அதை நிஜமாகவே கல்யாணமா நினைக்கல.. எங்க அப்பா, எங்க அம்மா, என் குடும்பம் எல்லார் முன்னாலயும் நீ எனக்கு முறையா அக்னி வளர்த்து ஐயர் மந்திரம் சொல்ல தாலி கட்டணும்… அப்பதான் நான் அதை கல்யாணமா ஏத்துப்பேன்.. அதுக்கு முதல்ல எங்க அப்பா கிட்ட நம்ப லவ் பண்ற விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்கணும்.. என்னோட வரியா? எங்க அப்பா கிட்ட சம்மதம் வாங்கலாம்..” என்று அவள் கேட்க “நானும் இதை பத்தி தான் நினைச்சுகிட்டு இருந்தேன் அஸ்வினி.. நாளைக்கு நான் உங்க அப்பா கிட்ட வந்து பேசுறேன்.. அவர் நாளைக்கு வருவார் இல்ல?” என்று கேட்க “ஆமாண்டா வீக் என்ட் இல்ல..? நாளைக்கு வருவார்.. ஆக்சுவலா இன்னிக்கு அந்த கல்யாணத்துக்கே வந்து இருக்கணும்.. ஆனா கடைசி நிமிஷத்துல ஏதோ வேலை வந்துருச்சு.. நாளைக்கு கட்டாயமா வருவார்..” என்று சொன்னவள் “சரிடா.. நான் கிளம்புறேன்..” என்று சொல்லி அவள் கட்டிலை விட்டு எழ போக அவளை இழுத்து இறுக்க அணைத்துக் கொண்டான் அருண்..

 

“நீ என்னை சொல்ல கூடாதுன்னு சொல்லுவ.. ஆனாலும் சொல்றேன்.. தேங்க்ஸ் அஷ்வினி.. நீ இல்லன்னா நான் காணாம போய் இருப்பேன் டி.. என் லைஃபோட பெஸ்ட் விஷயம் நீ தாண்டி.. இந்த அனாதைக்கு கிடைச்ச ஒரு பெஸ்ட் உறவுடி நீ..” என்று சொல்ல “நான் இருக்கும் போது இனிமே அனாதைன்னு சொன்ன கொன்னுடுவேன் உன்னை.. உனக்கு உன் பொண்டாட்டி இருக்கா.. நீ அனாதையே ஆக முடியாது..” என்றாள் தேஜூ..

 

வெளியே வந்தவள் சமையல் அறைக்கு சென்று பாத்திரங்களை கழுவி வைத்து சமையல் அறையை சுத்தம் செய்துவிட்டு கிளம்பப் போனவளை பின் இருந்து அதிசயமாய் பார்த்தான் அருண்..

 

“நீ எப்பவுமே இப்படித்தானா? மனுஷங்களை அப்படியே ஏத்துக்குவியா?” என்று கேட்க “எங்க அப்பா எப்பவுமே இப்படித்தான்.. அதனால நானும் அப்படித்தான்..” என்றாள் அவள்.. “இனிமே உன்னால நானும் அப்படித்தான்” என்றான் அருண் சிரித்துக் கொண்டே..

 

“சரி.  நான் கிளம்புறேன்.. நாளைக்கு சாயந்திரம் எங்க வீட்டுக்கு வரணும்.. ஞாபகம் இருக்கட்டும்..” என்றாள்..

 

“மறக்க மாட்டேன் டி என் மோகினி..” என்று சொல்லி அவள் கன்னத்தைக் கிள்ள “போடா ராட்சசா” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள் வெளியே.. அவனும் வெகு நாட்களுக்குப் பிறகு மனதார சிரித்துக் கொண்டு அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்..

 

தேஜூ சொன்னபடியே அடுத்த நாள் மாலை தன் ஷெட்டில் இருந்தவன் கண்ணாடியை பார்த்து தலையை வாரிக் கொண்டு இளம் பிங்க் நிற சட்டையும் பிரவுன் பேண்ட்டும் அணிந்தான்.. வெகு நேரமாக கண்ணாடியை பார்த்துக்கொண்டிருக்க அவனைப் பார்த்த சின்ன பையன் “எங்க அண்ணே போறீங்க?” என்று கேட்க “டேய் போகும்போதே எங்க போறன்னு கேட்காதடா.. முக்கியமான வேலைக்கு போறேன்..” என்று சொன்னவனின் உற்சாகத்தை பார்த்து ஆச்சரியமடைந்தான்..

 

“அண்ணியை பாக்க போறீங்களா?” என்று கேட்க “இல்லடா.. உங்க அண்ணியோட அப்பாவை பாக்க போறேன்.. எங்க கல்யாண விஷயமா பேசறதுக்காக..” 

 

“கல்யாணமா? அதான் முடிஞ்சிருச்சே” என்று அவன் கேட்க “இல்லடா.. அது ஒழுங்கா நடக்கல.. நல்லபடியா முறையா என் மாமனார் நடத்தி வைக்கிற கல்யாணம்த்தை பத்தி பேசறதுக்கு தான் போறேன்..” 

 

“அண்ணியோட அப்பா ஒத்துப்பாரா அண்ணே?” 

 

 “ஒத்துப்பாருன்னு தான் உங்க அண்ணி சொன்னா.. அப்படி ஒத்துக்கலைன்னா என்ன? அதான் எங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சே.. ரிஜிஸ்டர் மேரேஜ் ஆயிடுச்சு.. அவளை தூக்கிட்டு வந்து என் வீட்ல வச்சுப்பேன்.. யார் என்னை கேட்க முடியும்? அவ என் பொண்டாட்டி..” 

 

அவனுடைய மாறுதலை பார்த்த சின்ன பையனுக்கு உள்ளுக்குள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது..

 

 “அண்ணே.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே.. உங்களை இப்படி பார்க்கணும்னு தான் ரொம்ப நாளா ஆசைப்பட்டேன்.. இனிமே உங்க வாழ்க்கையில எந்த கவலையும் இல்லை” என்று சொன்னவனின் கன்னத்தை கிள்ளி “டேய்.. இப்பயாவது நீ எங்களோடயே வந்து இருந்துடுடா.. தனியா இருக்காத.. நான் வீட்ல இல்லாத நேரத்துல உங்க அண்ணிக்கு நீ பாதுகாப்பா இருக்கலாம் இல்ல?” என்று கேட்க “ஓகேண்ணே.. உங்களோடயே இருக்கேன்..” என்று சொன்னான் அவன்..

 

“அடப்பாவி.. எவ்வளவு நாளா என் வீட்டுக்கு வந்து என்னோட இருடான்னு நான் கூப்பிட்டுட்டு இருக்கேன்.. அப்பல்லாம் வராதவன்.. உங்க அண்ணி வரான்னு தெரிஞ்ச உடனே என்னோட வந்து இருக்கேன்னு சொல்றியேடா.. இவ்ளோ நாளா உன்கூட இருக்கேன்.. என்னை பாத்தா உனக்கு மனுஷனா தெரியலல்ல? நேத்து வந்தவ உங்க அண்ணி.. அவ வந்தா வந்து இருக்கேன்னு சொல்ற இல்ல..? ஆனாலும் உனக்கு ரொம்ப கொழுப்பு தான் டா.. ஊட்டி ஊட்டி வளர்த்தது நானு.. கடைசில பாசம் எல்லாம் உங்க அண்ணி கிட்டயா?” என்று முகத்தில் பொய் கோபம் காட்டி கேட்டான் அவன்..

 

“அண்ணே அண்ணி என் கண்ணுக்கு என் அம்மாவா தெரியுறாங்கண்ணே.. இத்தனை நாள் உங்க வீட்டுக்கு நீங்க கூப்பிட்டீங்க.. ஆனா அண்ணி ஒரு நாள் தான் உங்க வீட்டுக்கு வந்தாங்க.. ஒரு விருந்தே செஞ்சு போட்டாங்க. அவங்க எப்பவும் நம்ம வீட்ல இருந்தா எனக்கு ஒரு அம்மா இருந்தா என்ன எல்லாம் செய்வாங்களோ அதை அத்தனையும் செய்வாங்கன்னு எனக்கு தோணுதுண்ணே.. நான் அவங்களை என் அண்ணியா பாக்கல.. என் அம்மாவா பார்க்கிறேன்..” என்றான் அவன் நெகிழ்ச்சியோடு..

 

அருணுக்கு கண்கள் கலங்கின.. சின்ன பையனை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் “சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் உனக்கு அப்பா டா.. அதனால என் அஸ்வினி உனக்கு அம்மா.. நீ எங்களோட முதல் பையன் டா.. நாளைக்கு எங்களுக்குன்னு குழந்தை இருக்குமான்னு தெரியாது.. அப்படி எங்களுக்கு குழந்தை இருந்தாலும் நீ தான்டா எங்க முதல் குழந்தை” என்றான் அருண்..

 

அதைக் கேட்டு அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதான் சின்ன பையன்..

 

 “எனக்கு நிஜமாவே என்னை பெத்த அம்மா அப்பா இருந்தா கூட இதெல்லாம் செஞ்சுருப்பாங்களான்னு தெரியாதுண்ணே.. நீங்க எனக்கு கிடைச்சது எனக்கு பெரிய அதிர்ஷ்டம்ண்ணே..  உங்களுக்கு அண்ணி கிடைச்சது இன்னும் பெரிய லக்கி ப்ரைஸ்ண்ணே.. இப்ப இந்த உலகத்திலேயே ரொம்ப சந்தோஷமான ஆளு நான்தாண்ணே..” 

 

“டேய் அழாதடா.. சரி.. இன்னைக்கு சாயந்தரம் உனக்கு பாடம் எடுக்க முடியாது.. கொஞ்சம் நீயே படிச்சிக்கிறியா? நான் அஸ்வினி வீட்டுக்கு போயிட்டு வந்திடறேன்..” என்று சொல்ல “இந்த பாடத்தை விடுங்கண்ணே.. இது நாளைக்கு கூட பார்த்துக்கலாம்.. அண்ணியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுதான் முக்கியம்.. நீங்க முதல்ல போய் உங்க கல்யாணத்துக்கு அவங்க அப்பா சம்மதிச்சுட்டாருன்கிற நல்ல சேதியை கேட்டுட்டு வந்து சொல்லுங்க..” என்று சொன்னவன் அவனை சந்தோஷமாய் அனுப்பி வைத்தான்..

 

தேஜுவின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் தயங்கியபடி மெதுவாக சென்று அழைப்பு மணியை அழுத்தினான்.. அவன் வருவதற்காகவே ஒரு மணி நேரமாய் அலங்காரம் செய்து கொண்டு காத்திருந்த தேஜு அழைப்பு மணி சத்தம் கேட்டவுடன் ஓடி வந்து கதவை திறந்தாள்.. எதிரில் கதவில் ஒரு பக்கமாய் சாய்ந்த படி நின்று கொண்டிருந்த அவனைப் பார்த்தவுடன் அப்படியே அவள் முகம் முழுவதும் வெட்க சிவப்பும் சந்தோஷமும் பூரித்து நின்றது..

 

அவள் அழகை பார்த்தவனுக்கு அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.. ஆனால் தான் அவள் வீட்டில் இருக்கிறோம் என்பது நினைவிருக்க “ஹாய்.. அஷ்ஷூ பேபி..” என்று உதட்டை குவித்து பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுத்தான்..

 

அதில் திடுக்கிட்டவள் வெட்கச் சிரிப்பு சிரிக்க “ரொம்ப வெட்கப்படாத டி.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. அப்புறம் உங்க அப்பாவை பாக்கறதுக்கு முன்னாடி உன்னை கட்டிக்கிடுவேன்..” என்று சொன்னான் பார்வையில் குறும்பு மின்ன..

 

அவள் அவனை தீவிரமாய் முறைத்தாள்.. “சரி.. உள்ள வாங்க..” என்று சொல்லி அவனை உள்ளே அழைத்தவள் அவனோடு நேரே தன் தந்தையின் அறைக்கு சென்றாள்..

 

அங்கே அகிலாவும் இருக்க “அம்மா.. அப்பா.. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்..” என்றவளை திரும்பி பார்த்த அழகப்பன் அவள் பின்னே நின்று கொண்டிருந்த அருணை பார்த்து புருவத்தை சுருக்கினார்..

 

“நீ அந்த அருண் தானே? முதல் நாள் தேஜூவை அடிச்சது..?” என்று அவர் கேட்க அருண் முகம் சுருங்கி போனது.. தன்னை இப்படியா அவர் நினைவு வைத்திருக்க வேண்டும் என்று மிகவும் வருந்தினான்.. “அப்பா.. அது அப்போ.. இப்போ அவர் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்டுக்கும் மேல..” என்று அவள் சொல்லும் போதே அழகப்பனுக்கு கொஞ்சம் புரிந்தது.. 

 

“சரி.. வாங்க.. உட்கார்ந்து பேசலாம்..” என்று அவனுக்கு ஒரு கதிரையை போட்டு அதில் அமரச் சொன்னார்..

 

தன் கை நகத்தை கடித்துக் கொண்டு பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தாள் தேஜு.. “சார்.. நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.. உங்க பொண்ணு நானும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்.. ” என்று பேச்சை ஆரம்பித்தான் அவன்..

 

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!

 

மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி 

“❤️❤️சுபா❤️❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!