அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 72🔥🔥

5
(6)

பரீட்சை – 72

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

அன்பே என் 

அன்பே..

ஆபத்து உன்னை

நெருங்கி 

அருகில் வருவதற்கு

முன்னால்..

 

என்னுயிரை 

அணையாய்

வைத்து

உன்னுடைய

இன்னுயிர்

காத்திடுவேன்..

 

உன் உயிருக்கு

கேடயமாய்

இந்த

உலகத்தில்

உள்ளவரை

 

மீனுக்கு நீர் 

போல 

மரத்துக்கு வேர் 

போல 

என்றும் இருந்திடுவேன் 

உன்னோடு

இறுதி வரை..

 

######################

 

அன்பே என் அன்பே..!!

 

 

அங்கிருந்து சந்தோஷமாய் கிளம்பி தன் மெக்கானிக் ஷெட்டுக்கு சென்றான்.. அங்கே சின்ன பையனிடம் விஷயத்தை சொல்ல அவனும் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தான்..

 

அடுத்த நாள் மாலை சொன்னது போலவே நிவேதா, சின்ன பையன், தேஜு மூவரையும் அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பினான் அருண்..

 

அவர்கள் இருவருக்கும் நிறைய பரிசுகளை வாங்கி கொடுத்து அவர்கள் கண்கள் விரிவதை கண்டு சந்தோஷப்பட்டு கொண்டிருந்தான்..

 

தேஜூ கவலையுடன் “அருண் எல்லா பணமும் இவங்களுக்கு செலவு பண்ணாதீங்க.. உங்க படிப்புக்கு வேணும்.. சின்ன பையன் படிப்புக்கு வேணும்.. அதுக்கு எல்லாம் வெச்சுக்கோங்க..” என்று சொல்ல “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை.. இன்னும் ரெண்டு வண்டி சேர்த்து பார்த்தேனா அதெல்லாம் மேனேஜ் பண்ணிக்கலாம்.. இவங்க முகத்தில இருக்கற சந்தோஷத்துக்கு எவ்வளவு வேணா செலவு செய்யலாம் டி..” என்றவனை முறைத்தாள்..

 

“என்னடி எதுக்கெடுத்தாலும் முறைக்கிற?” என்று கேட்க “சின்ன பையன் ஏற்கனவே நீங்க 12 மணிக்கு தான் வீட்டுக்கு போறீங்கன்னு சொன்னான்.. இதுல இன்னும் ரெண்டு வண்டி வேற ரிப்பேர் பாக்க போறீங்களா? உடம்பு என்னத்துக்கு ஆகறது? இதுதான் லாஸ்ட்.. அடுத்த வாட்டி வெளிய கூட்டிட்டு போனா சுத்தி பாக்குறது மட்டும்தான்.. செலவு பண்ணறது கிடையாது..” என்று சொன்னவளிடம் “ஓகே பொண்டாட்டி.. நீங்க சொல்ற மாதிரியே செய்யறேன்..” என்றான் அவன்..

 

“க்யூட் புருஷன்..” என்று சொன்னவள் அவன் கன்னத்தை கிள்ளினாள்..

 

 அப்போது அங்கே வந்த நிவேதா “போதும் போதும்.. நாங்க எல்லாம் இருக்கோம் இங்க..” என்று சொல்ல “இருந்துட்டு போங்க.. என் புருஷன் நான் கொஞ்சறேன்..  உனக்கு என்னடி வந்தது?” என்று கேட்க அவள் “புருஷனா..?” என்று வாயை பிளக்க “அது.. அது..” என்று இழுத்தாள் தேஜூ..

 

அருண் “என்னிக்கு நான் அவளை காதலிக்க ஆரம்பிச்சனோ.. அன்னைக்கே அவ எனக்கு பொண்டாட்டி ஆயிட்டா.. நான் அவளுக்கு புருஷன் ஆயிட்டேன்.. அதான் அப்படி சொல்றா..” என்று சொல்ல அங்கு வந்த சின்ன பையன் “அய்யய்யோ.. இன்னும் அவங்களுக்கு கல்யாணம் ஆன விஷயம் இவங்களுக்கு தெரியாதா?” என்று யோசித்தான்..

 

நிவேதாவும் சின்ன பையனும் நல்ல நண்பர்கள் ஆகி இருந்தார்கள்.. சின்னப் பையனும் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான்.. யாரும் இல்லாமல் தெருவில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு அதில் கிடைத்த பணத்தில் எதையோ வாங்கி சாப்பிட்டு கிழிந்த உடைகளை போட்டுக் கொண்டு திரிந்து கொண்டிருந்தான்.. அருண் கண்களில் பட்டவுடன் தான் அவனை மெக்கானிக் ஷெட்டில் சேர்த்துக்கொண்டு அருண் அவனை படிக்க வைக்க ஆரம்பித்தான்.. அவன்  அந்த வருடம் பத்தாவது எழுதி முடித்தே ஆகவேண்டும் என்பதில் சின்ன பையனை விட அருண் மிகவும் உறுதியாக இருந்தான்.. 

 

நிவேதா, சின்ன பையன் இருவரும் ஒருவரை ஒருவர் மெக்கானிக் செட்டில் அடிக்கடி சந்திக்க நிவேதா பாடங்களில் அவனுக்கு இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு இருந்தாள்.. அருண் தேஜூவுடன் வெளியே செல்வதில் மும்முரமாய் இருந்தவன் அவனுக்கு பதிலாக சின்ன பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நிவேதா கிடைத்ததில் சந்தோஷமடைந்தான்.. 

 

அவர்களை தன் பார்வை எல்லைக்குள்ளேயே வைத்திருந்தான் அருண்..  தான் தேஜூவோடு வெளியே செல்லும்போது அழகப்பன் வீட்டில் போய் சின்ன பையனை படிக்க சொல்லி விடுவான்.. நிவேதா அங்கு தான் அவனுக்கு பாடம் கற்றுக் கொடுத்தாள்..

 

அதன் பிறகு கல்லூரியிலும் தேஜூவும் அருணும் நெருங்கி பழக ஆரம்பித்தார்கள்.. மற்றவர்கள் பார்த்தாலும் கவலை கொள்ளாமல் இளம் காதல் சிட்டுகள் போல் பறந்து கொண்டு இருந்தார்கள்.. கல்லூரியே இவர்கள் ஜோடி பொருத்தத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தது..

 

நித்திலாவுக்கோ வயிறு எரிந்தது.. தன் தந்தையை தனிமையில் கைபேசியில் அழைத்தவள் “அப்பா.. நான் எவ்வளவு பண்ணியும் என்னோட எல்லா பிளான்ல இருந்தும் அவங்க ரெண்டு பேரும் தப்பிச்சுட்டாங்கப்பா.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க.. ஒன்னா சுத்துறாங்க.. எனக்கு அதை பார்க்கும்போதே வயிறு எரியுது பா.. ஏதாவது செய்யணும் பா அவங்களை..” என்று சொன்னவளிடம் “இந்த வருஷத்தோட உனக்கு படிப்பு முடியுது.. நீ திரும்பி வரும்போது நான் சொன்ன மாதிரி அவங்களை பழி வாங்கி இருந்தா வா.. இல்லன்னா அங்கேயே இரு..” என்று சொன்னார் ஈஸ்வரமூர்த்தி..

 

அதைக் கேட்டவள் “நானும் அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காக தான் பா காத்துகிட்டு இருக்கேன்.. நிச்சயமா அவங்களை பழி வாங்காம நான் திரும்பி வர மாட்டேன்..” என்றாள் தன் தந்தையிடம்..

 

“தட்ஸ் லைக் மை கேர்ள்..” என்று சொன்னவர் “சரி எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. நான் உனக்கு அப்புறம் கால் பண்றேன்..” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார்..

 

அருணுடன் சென்று அவனுடைய மருத்துவரையும் சந்தித்தாள் தேஜு.. அவரோ கொஞ்சம் கொஞ்சமாக அருணின் மனநிலையில் முன்னேற்றத்தை பார்ப்பதாக சொன்னார்.. ஒவ்வொரு மாதமும் அவன் நடவடிக்கைகளில் முன்னேற்றம் தெரிகிறது என்று சொன்னார்.. அவர் செய்யும் சிறு சிறு பரிசோதனைகளில் அவன் நேர்மறையான சில மாற்றங்களை காண்பித்ததாக சொன்னார்.. கூடிய சீக்கிரம் அவன் முழுதாக ஒரு கல்யாண உறவுக்கு தயாராகி விடுவான் என்று அவர் சொன்னதை கேட்ட தேஜுவோ துள்ளி குதித்தாள்..

 

அதை பார்த்த மருத்துவர் சிரிக்க அருண் சிறு தர்ம சங்கடத்துடன் நெளிந்தான்.. “அஷ்ஷூமா.. மானத்தை வாங்காத.. போதும்..” என்று அவளை பிடித்து உட்கார வைப்பதற்குள் அவனுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது..

 

வெளியே வந்தவன் “என்ன அஷ்ஷூம்மா..? என்னால உனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்க முடியும்ன்னு டாக்டர் சொன்னதுல உனக்கு அவ்ளோ சந்தோஷமா ஆயிடுச்சா?” என்று கேட்க இடவலமாக தலையாட்டியவள் “உனக்கு எல்லா சந்தோஷமும் கிடைக்க போகுதே.. அதை நினைச்சு தான் எனக்கு சந்தோஷமா இருந்தது அருண்..” என்று அவள் சொல்ல “நீ சொல்றதை கேட்டா எனக்கு என்னென்னமோ பண்ணனும்னு தோணுதுடி.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. டாக்டர் சொன்ன மாதிரி எனக்கு எல்லாம் சரியாயிடுச்சுன்னா இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு உன்னை என்ன பண்றேன் பாரு..” என்று அவன் சொல்ல அவளோ வெட்கத்தோடு அவனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்..

 

அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன் “சரி.. வா போலாம்..” என்று அழைத்தான்.. காரில் திரும்பி வரும்போது “தேஜூ.. நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்..” என்றான்..

 

“என்ன விஷயம்..?” என்று அவள் கேட்க வண்டியை நிறுத்தியவன் சில பத்திரங்களை எடுத்து அவளிடம் கொடுத்தான்..

 

“இந்த பேப்பர்ஸ்ல ஸைன் பண்ணு தேஜூ..” என்றான்..

 

“என்ன பேப்பர் இது?” என்று அவள் கேட்க “ஏன்? உன் சொத்தை ஏதாவது ஏமாத்தி எழுதி வாங்கிடுவேன்னு சந்தேகமா இருக்கா?” என்று கேட்டான் அவன்..

 

“அதுக்கெல்லாம் ஏமாத்தவே வேண்டாம்.. நீ என்னை கேட்டாலே நானே எழுதி கொடுத்துடுவேன்.. ஏன்னா உன்னை விட எனக்கு எந்த சொத்தும் முக்கியம் இல்லை.. அது மட்டும் இல்லாம நீ என்னை தான் இருக்கறதிலேயே பெரிய சொத்தா நினைக்கிறேன்னு எனக்கு தெரியும்..” என்றாள் அவள்..

 

அவளைப் பார்த்து சிரித்தவன் “எனக்கு தெரியும் டி உன்னை பத்தி.. அது வேற ஒன்னும் இல்ல.. நம்ம டிவோர்ஸ் பேப்பர்ஸ் தான்..” என்று அவன் சாதாரணமாக சொல்ல அவளுக்கு அப்படியே அதிர்ச்சியாகி போனது..

 

“டிவோர்ஸ் பேப்பரா? அதுல எதுக்குடா ஸைன் வாங்கற? என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு விவாகரத்து பண்ற.. என்னடா உன் பிளானு..?” என்று கேட்டவளை திரும்பி பாரத்து முறைத்தான்..

 

“ஆமா.. உன்னை விவாகரத்து பண்ணிட்டு வேற எவளையோ கல்யாணம் பண்ணிக்க போறேன்… பேச்சை பாரு.. உங்க அப்பா தான் நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டாரு இல்ல..?” என்று கேட்க “ஆமா.. அதுக்கும் இந்த டிவோர்ஸ் பேப்பர்ஸ்க்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள்..

 

“சம்பந்தம் இருக்கு.. இந்த கல்யாணம்.. ரிஜிஸ்டர் மேரேஜ்.. எல்லாமே உங்க அப்பாக்கு தெரியாம நம்ம பண்ணிக்கிட்டது தானே..?” என்று அவன் கேட்க “ஆமா.. அப்பாக்கு தெரியாம தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்..” என்று அவள் சொல்ல “நீ தானே சொன்னே.. உன் பார்வையில இந்த கல்யாணத்துக்கும் ரிஜிஸ்டர் மேரேஜுக்கும் வேல்யூ இல்லன்னு.. அப்புறம் சட்டப்படி அந்த பேப்பர்ஸ் மட்டும் எதுக்கு..? அதான் டிவோர்ஸ் பண்ணிட்டு உங்க அப்பா சம்மதத்தோட நாலு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கும்போது புதுசா ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்ன்னு இப்போ டிவோர்ஸூக்கு அப்ளை பண்ண போறேன்..” என்றான் அவன்..

 

தேஜூ அவனை பெருமையாக பார்த்தாள் அடுத்த இரண்டு மாதங்களில் அவர்களுக்கு விவாகரத்தும் கிடைத்துவிட்டது..

 

அந்த வருட இறுதி வந்தது அருண் அந்த கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தங்க மெடல் வாங்கி இருந்தான்..

 

அவனுக்கு உதவி தொகையோடு மேல் படிப்பு படிக்க வெளிநாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.. அதற்காக அந்தக் கல்லூரி டிரஸ்டில் இருந்த ஒருவர் அவன் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டிருந்தார்.. அவரிடம் அப்போதைக்கு அவர் அந்த செலவை ஏற்றுக் கொண்டிருந்தாலும் படித்து முடித்தவுடன் வேலை செய்து அவருடைய பணம் முழுவதையும் திருப்பிக் கொடுத்து விடுவதாக அருண் மிகவும் உறுதியாக சொல்லி இருந்தான்.. அவரும் அதை ஏற்றுக் கொண்டு அவனை படிக்க அனுப்புவதாக சொன்னார்.. 

 

நித்திலாவுக்கோ இவர்களின் மகிழ்ச்சி பொறுக்கவே இல்லை.. இருவரும் தங்களை மறந்து காதல் பரவசத்தில் திரிந்து கொண்டிருந்ததை பார்த்தவள் மேலும் மேலும் பற்றி எரிந்தாள்.. அவளும் சரணும் அவர்கள் மேல் கொலை வெறியில் இருந்தனர்.. இருவரும் அவர்களை வீழ்த்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.. 

 

அந்த வருட படிப்பு முடிந்து நித்திலா வீட்டிற்கு போக வேண்டிய நேரம் வந்ததும் சரணிடம் “சரண்… ஏதாவது பண்ணனும் சரண்.. இவங்க ரெண்டு பேருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத படி ஒரு அடி கொடுக்கணும்.. இவங்க நிம்மதியா இருக்க கூடாது..” என்று சொன்னவளிடம் சரண் “சரி.. பேசாம அவங்க ரெண்டு பேரையும் போட்டு தள்ளிடலாம்” என்று சொன்னவுடனே சிறிது பயத்தோடு அவனை பார்த்தாள் நித்திலா..

 

“என்னடா சொல்ற?” என்று அவள் கேட்க “ஒவ்வொரு வீக் என்டும் அருணும் தேஜூவும் எங்கேயோ வெளியில சுத்துறாங்க.. இந்த வீக் எண்டு வெளியில போறவங்க இந்த உலகத்தை விட்டே போயிடுவாங்க.. அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்..” என்றான் அவன்..

 

அந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் தங்கள் திருமணம் நடந்த அந்தக் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.. தேஜுவுக்கு ஏனோ அந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது..

 

காரில் ஏறியவர்கள் அவ்வப்போது ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டு சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தார்கள்.. மலை மீது ஏறிப் போய்க் கொண்டே இருந்த அருணின் முகம் திடீரென மாறுவதை கவனித்தாள் தேஜு..

 

“என்ன ஆச்சு அருண்..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்க “அஷ்ஷூமா.. நீ பயப்படாத.. வண்டியில பிரேக் பிடிக்கல.. நான் எப்படியாவது வண்டியை நிறுத்திடுறேன்” என்றான் அவன்..

 

அவன் வண்டியை அவனுக்கிருந்த உற்சாகத்தில் மிகவும் வேகமாக செலுத்தியிருந்தான்.. தேஜூ பக்கம் திரும்பியவன் “நம்ம வேற கிட்டத்தட்ட மலை உச்சிக்கு வந்துட்டோம்.. இப்போ கொஞ்ச நேரத்தில அந்த கோயில் இருக்கிற இடம் வந்துடும்..” என்று சொல்ல அரண்டு போனாள் தேஜு..

 

“என்ன சொல்ற அருண்? நீ மெக்கானிக் தானே? பிரேக் ரிப்பேரா இருந்தது கூட உனக்கு தெரியலையா?” என்று கேட்க “இல்ல தேஜு.. வண்டியை நான் கிளம்பறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி செக் பண்ணேன்.. எல்லாம் சரியா தான் இருந்தது.. அதுக்கப்புறம் யாரோ வண்டில ஏதோ செஞ்சு இருக்காங்க..” என்று சொன்னான் அருண்..

 

“இப்ப என்ன பண்றது அருண்?” என்று கேட்டவளை ஆசுவாசப்படுத்தினான் அருண்..

 

“நீ ஒன்னும் கவலை படாதே.. நான் ஒரு மெக்கானிக்.. பிரேக் பிடிக்கலன்னா வண்டியை எப்படி நிறுத்தணும்னு எனக்கு தெரியும்.. நான் நிறுத்திடுவேன்..” என்று சொன்னவன் ஏதேதோ செய்து அந்த மலை முகட்டில் ஒரு வழியாக வண்டியை நிறுத்தி விட்டான்.. வண்டியை நிறுத்தி விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விடுகையில் அவர்கள் பின்னால் இன்னொரு வண்டி வந்து கொண்டிருந்தது.. கண்ணாடி வழியே பார்க்க அந்த வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது சரண் என்று அறிந்தவன் மனதில் பயம் தொற்றிக் கொண்டது..

 

தொடரும்..

 

#######################

 

 

 

ஹலோ என் வாசக செல்வங்களே..!!

 

புதிய வாசகர்கள் நிறைய பேர் நடுநடுவுல அக்னி பரீட்சைக்கு விமர்சனம் எழுதுறீங்க.. ஆனா தொடர்ந்து குறைந்தது ஒரு 5 அத்தியாயங்களுக்கு நடுவுலயாவது உங்க விமர்சனங்களை பதிவு பண்ணனும்னு நான் கேட்டுக்குறேன்..

 

நீங்க தொடர்ந்து படிக்கிறீங்களா இல்ல பாதியிலேயே படிக்கிறதை நிறுத்திட்டீங்களா.. இது எனக்கு தெரிய மாட்டேங்குது.. நீங்க தொடர்ந்து படிக்கிறீங்கன்னா அவ்வப்போது உங்க விமர்சனங்கள்னால அது தெரியப்படுத்துங்க..

 

கதை ரொம்ப தொய்வு அடையுது.. இன்ட்ரஸ்டிங்கா இல்ல.. இப்படி ஏதாவது கருத்துக்கள் இருந்தாலும் அதையும் வெளிப்படையா பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

 

இதுவரைக்கும் என் கதைக்கு தொடர்ந்து நல்ல ரேட்டிங்ஸ் கொடுத்து விமர்சனம் கொடுக்கிறவங்களுக்கு ரொம்ப நன்றி.. ரேட்டிங்ஸ் கம்மியா கொடுத்து அதை ஏன் குடுத்தீங்கன்னு விமர்சனம் கொடுத்தீர்கள் என்றால் எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்..

 

மறுபடியும் சொல்றேன்.. விமர்சனத்தை பதிவு பண்ண மறக்காதீங்க.. நன்றி நண்பர்களே..🙏🙏🥰🥰🥰🤩🤩

 

உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

 

❤️❤️சுபா❤️❤️

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!