அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 73🔥🔥

4.9
(8)

பரீட்சை – 73

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

உன் உயிரை இங்கு

ஊசலாட விட்டு

என் உணர்வை 

எல்லாம்

பறித்துக்கொண்டு

எங்கு போனாயடா?

 

உயிரின்றி உடல்

வாழாது என்று

உணர்ந்திருந்தும்

உன்னுயிர் தந்து

என் உயிரை

உறைய வைத்தாயடா..

 

ஈருடல் ஓருயிர்

என்று

என்னோடு கலந்து

வாழ

இந்த ஜென்மத்தில்

ஒரு எழுத்தை

நமக்காய்

இறைவன்

எழுதவில்லையோ..?

சொல்லடா என்

ஜீவனே..!!

 

#####################

 

என்னுயிர் எங்கே..?

 

மலை முகட்டில் ஒரு வழியாக வண்டியை நிறுத்திய அருண்.. வண்டியை நிறுத்தி விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விடுகையில் அவர்கள் பின்னால் இன்னொரு வண்டி வந்து கொண்டிருந்தது.. கண்ணாடி வழியே பார்க்க அந்த வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது சரண் என்று அறிந்தவன் மனதில் பயம் தொற்றிக் கொண்டது..

 

அதைப் பார்த்தவன் “அஷ்ஷூ ஜம்ப்..” என்று சொல்லி அவளை கார் கதவை திறந்து வெளியே தள்ளி விட்டான்.. அவள் ஒரு பாறையில் சென்று தன் தலையின் பின்னால் இடித்துக் கொண்டாள்.. அவள் தலையில் ரத்தம் வருவதை பார்த்தவன் அவளை பார்த்துக் கொண்டு தான் குதிப்பதற்கு சிறிது தாமதிக்க அதற்குள் சரண் ஓட்டி வந்த கார் அவன் காரை மோதியது.. மோதிய அடுத்த நிமிடம் கார் முன்னே நகர்ந்து அந்த பெரிய பள்ளத்தாக்கில் விழுந்தது.. 

 

ஆனால் கார் பள்ளத்தில் விழும் முன் அருண் காரில் இருந்து குதித்திருந்தான்.. அந்தப் பள்ளத்தாக்கு ஆரம்பித்த இடத்தில் ஒரு பாறையை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தான் அவன்..

 

தன் காரை விட்டு இறங்கி வந்த சரண் அவர்களை பார்த்து சத்தமாக சிரித்தான்.. 

தலையில் அடிபட்ட தேஜுவை நெருங்கியவன் அவள் தலை முடியை பிடித்து இழுத்து வந்து அருண் விழுந்து தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு மேல் அவனை பார்க்கும்படி தேஜூவை கிடத்திவிட்டு “அருண்.. இப்ப நீ என்ன பண்ற.. ஒரு கையால அந்த பாறையை புடிச்சுகிட்டு… இன்னொரு கையால.. இதை பாரு.. தேஜூ கழுத்தில் இருக்குதே இந்த தாலி.. இதோ வசதியா உன் கைக்கு எட்டற தூரத்தில தொங்கிக்கிட்டு இருக்கு.. அதை அறுத்து எடுத்துக்கிற..” என்று சொன்னான்..

 

அருண் “முடியாது டா.. அவ என் பொண்டாட்டி.. அவ கழுத்துல இருக்குற தாலியை நான் ஏன்டா எடுக்கணும்?” என்று கேட்க “நீ இப்ப அவ கழுத்திலருந்து அந்த தாலியை எடுக்கலைன்னு வச்சுக்கோ.. நான் அவளை கெடுத்து சீரழிச்சுடுவேன்.. அப்புறம் உன் பொண்டாட்டி எனக்கு ஆசைநாயகி ஆயிடுவா.. உன் அஸ்வினியை எல்லாரும் கெட்டு போனவன்னு சொல்லுவாங்க.. அது உனக்கு பரவாயில்லையா?” என்று கேட்க அருண் சீறினான்.. 

 

“வேண்டாம் சரண்.. நெருப்போட விளையாடாதடா.. அவ மேல கைய வெச்ச கொன்னுடுவேன் நான் உன்னை..” 

 

“உயிர் போற நிலைமையில கூட உனக்கு திமிர் குறையலை இல்லை?” என்று சொல்லி தேஜூ மேல் சரண் கையை வைக்க போக “வேண்டாம்டா.. வேண்டாம்..” என்று கத்தினான் அருண்..

 

ஒரு கையால் பாறையை பிடித்துக்கொண்டு மறு கையால் மேலே இருந்த பாறையைப் பிடித்து அவன் ஏற முற்பட அவன் கையிலேயே ஓங்கி அடித்தான் சரண்..

 

“அப்படி எல்லாம் உன்னை ஏற விட்டுருவேனா அருண்..? இன்னிக்கு நீ உயிரோட இங்க இருந்து திரும்பி போக முடியாதுடா.. நான் உனக்கு எமனா வந்து இருக்கேன் இங்க..” மிரட்டும் தொனியில் உறுமினான் சரண்..

 

“ம்ம்ம்ம்.. என்கிட்ட ரொம்ப நேரம் இல்லை.. தாலியை கழட்டி எடு அவ கழுத்திலேர்ந்து” என்று சரண் சொல்ல மயக்கமாய் இருந்த தேஜூ கண் விழித்தாள்.. 

 

“அருண்..” என்று அவனுக்கு கை கொடுக்க முனைந்தவள் கையை இறுக்க பிடித்துக் கொண்டான் சரண்..

 

“பாரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல உன் கழுத்துல தாலி கட்டினானே உன் புருஷன்.. அவனே உன் கழுத்தில இருக்கற தாலியை அறுத்துக்கிட்டு கீழே விழுந்து செத்துப் போகப் போறான்.. அதுக்கப்புறம் நான் உன்னை கல்யாணம் பண்ணாமலே என் பொண்டாட்டி‌யா ஆக்கிக்க போறேன்.. உன்னை கல்யாணம் பண்ணி உன்னோட வாழனும்னு தான் நெனச்சேன்.. ஆனா உன் திமிருனால என்னை இப்படி உன்னை அனுபவிக்க வச்சிட்டியேடி..” என்று சொன்னவன் “அருண்.. அவ கழுத்தில் இருந்து தாலியை அறுக்குறியா.. இல்ல..?” என்று அவள் புடவையை முந்தானையில் கை வைத்தான்..

 

அருண் சின்ன பையனுக்காக காத்திருந்தான்.. அவன் வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை என்று தெரிந்த உடனேயே சின்ன பையனுக்கு செய்தி அனுப்பியிருந்தான்.. எந்த நேரமும் அவன் வந்து விடுவான் என்று தெரியும்.. ஆனால் இப்போது அவன் எதுவும் செய்யாவிட்டால் சரண் தேஜூவின் மானத்தை வாங்கி விடுவான் என்று பயந்தான்.. வேறு வழியின்றி தேஜூவின் கழுத்தில் இருந்த தாலியை தன் கையால் பறிக்க துணிந்தான் அருண்..

 

ஆனால் தேஜூவோ “என் தாலியை தொட்ட நானே கொன்னுடுவேன்டா உன்னை… அதுக்கு அப்புறம் நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உன்னை மன்னிக்கவே மாட்டேன் டா.. அவன் என்ன வேணா பண்ணிக்கட்டும்.. அவன் சொல்றது எதையும் நீ பண்ணக்கூடாது…” என்றாள் தேஜு..

 

சரண் “உனக்கு அவ்ளோ திமிரா டி..? நான் சொல்றதை அவன் பண்ணலனா நீ ரொம்ப கஷ்டப்படுவ தேஜூ..” என்று அவள் தலை முடியை பிடித்து இழுத்து சொன்னான்.. 

 

அவள் பின்னந்தலையில் ரத்தம் வந்து கொண்டிருக்க அவன் பிடித்து இழுத்த வலியில் தேஜூவோ உயிரே போனாற்போல் “அர்ரூ….ண்..” என்று கதறினாள்.. 

 

அருண் எதுவும் செய்ய முடியாமல் கண்களில் கண்ணீர் பெருக இதயத்தில் ரத்தம் வழிய அவள் வலியில் கதறுவதை செயலற்று பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் பின்னந்தலையில் பட்டிருந்த அடியிலிருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தம் அருணின் முகத்தில் சொட்டு சொட்டாய் விழுந்து கொண்டிருந்தது..

 

“டேய் சரண்.. அவளை விட்டுடுடா.. அவளுக்கு தலையில அடிபட்டு இருக்குடா.. அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போடா.. சொன்னா கேளுடா..” என்று சொல்ல “ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறதா? நான் அவளை அனுபவிக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன்.. நீ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது பத்தி பேசுற..? எனக்கும் அவளை பார்த்தா பாவமா தான் இருக்கு.. நான் வேணா அவளை அனுபவிச்சிட்டு அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்.. சரியா?” என்று சொன்னவனை பார்த்து “டேய்.. வேணாண்டா.. உன்னை கொன்னுடுவேன்..” என்று கத்தினான் அருண்..

 

“த்சு…த்சு…த்சு.. இப்ப நீ என்னை கொல்ல முடியாதுடா.. நான் தான் உன்னை கொல்ல போறேன்..” என்று சொன்னவன் “நான் இவளை தொடக்கூடாதுன்னா நீ என்ன பண்ற தெரியுமா? அப்படியே அவ தாலியை கழுத்தில இருந்து அறுத்துக்கிட்டே அந்த பாறையிலருந்து உன் கைய எடுத்துட்டு பள்ளத்தில விழுந்திரு.. இல்லன்னா…” என்று தேஜூவின் கன்னத்தை நோக்கி குனிந்த சரண் அவள் பின்னால் அவள் முதுகின் மேல் அப்படியே தன் உடம்பை படர விட்டிருந்தான்.. 

 

முகம் முழுக்க சரணின் தீண்டல் தந்த அருவருப்புடன் தேஜு “வேண்டாம்.. அருண் வேண்டாம்.. என்னை விட்டு போயிடாத.. அவன் என்ன வேணா பண்ணிக்கட்டும்.. நான் எப்படி இருந்தாலும் நீ என்னை ஏத்துப்ப இல்ல? நீ உயிரோட இருந்தா போதும்.. அவன் என்னை தொட்டுட்டாங்கறதுக்காக நீ என்னை விட்டுடுவியா?” என்று கேட்க “இல்லை அஷ்ஷூம்மா.. நீ ஏற்கனவே என் உயிருக்குள்ள இருக்க.. உன்னை விட்டு என்னால வாழ முடியாதுடி.. நீ எப்படி இருந்தாலும் எனக்கு சொந்தமானவ..” என்று சொன்னான்..

 

சரணை திரும்பி ஏளனமாக பார்த்தாள் தேஜு.. சரணுக்கோ மேலும் மேலும் அரக்கத்தனம் உச்சியை தொட்டுக் கொண்டிருந்தது.. எது செய்தாலும் இருவரின் மன உறுதியும் உடையாமல் இருக்கும் அந்த நிலையில் அவன் அவர்களிடம் தோற்றுப் போனதாய் உணர்ந்தான்..

 

ஆனால் இந்த முறை தான் எப்படியும் தோற்று விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் சரண்..

 

“ஓ அப்படியா.. அப்போ நான் அவளை கெடுத்தா கூட நீ அவளை ஏத்துப்பியா? வேற என்ன பண்றது?” என்று யோசித்தவன் அவள் தலையில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்த பகுதியில் அவள் முடியை பிடித்தவன் அருணை பார்த்து “இப்ப நீ நான் சொல்றத பண்ணலேன்னா இப்படியே உனக்கு பதிலா இவ பள்ளத்துல விழுந்துடுவா.. பரவாயில்லையா? என்ன..? அவ தாலியை எடுத்துட்டு நீ கீழே விழறியா? இல்ல இவளை பிடிச்சி கீழே தள்ளட்டுமா?” என்று அவன் கேட்க அருணுக்கு ஒரு நொடி உயிரே உறைந்து விட்டது அவன் கேள்வியில்..

 

சின்ன பையன் வருகிறானா என்று அவ்வப்போது நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருந்தான்..

 

தேஜூவோ கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு போய்க் கொண்டிருந்தாள்.. “இங்க பாரு.. என்கிட்ட நிறைய டைம் இல்ல.. சீக்கிரம் நான் சொன்னதை செய்” என்று சொன்ன சரண் தேஜூவை கொஞ்சம் கொஞ்சமாக அந்த மலை முகட்டில் தள்ளுவதற்கு வாகாக நகர்த்திக் கொண்டே வந்தான்..

 

அவள் பாதி உடம்பு மலைமுகட்டின் வெளியிலிருக்க பாதி உடம்பு உள்ளே இருந்தது..

 

அதைப் பார்த்தவன் அடுத்து ஒரு அடி அவள் முன்னே வந்தால் கீழே விழுந்து விடுவாள் என்று உணர்ந்து “வேணாம் சரண்.. அவளை விட்டுடு.. அவளை எதுவும் பண்ணாத.. நான் இல்லாம அவ உயிரை விட்டுடுவாடா..” என்று கத்தினான்.. கதறினான்.. அது எதுவுமே சரணின் காதில் விழவில்லை..

 

தேஜுவை இன்னும் அரை அடி முன்னே நகர்த்தினான்.. தேஜூவின் கால் மட்டுமே மலை மேலிருந்த தரையில் இருந்தது.. அவள் உடலின் மற்ற பாகம் அனைத்தும் மலைக்கு இந்த பக்கம் தொங்கிக் கொண்டிருந்தது.. அதை பார்த்த அருண் “டேய் வேணாம்டா..” என்று கெஞ்ச தேஜுவோ அருணையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு சாவதில் பயமில்லை..

 

“பரவால்ல அருண்.. நான் செத்துப் போறேன்.. ஆனா இந்த சரண் நினைச்சது நடக்க கூடாது.. நீ செத்துப்போனா அப்புறம் இந்த உலகத்துல நான் வாழ்ந்து ஒன்னும் பண்ண போறது இல்ல..” என்று சொன்னவளை தன் கையாலாகாதனத்தை எண்ணி தன்னையே திட்டிக்கொண்டே பார்த்தான்..

 

“போயும் போயும் என்னை ஏண்டி லவ் பண்ண? என் மேல அன்பு வச்ச யாருக்குமே நிம்மதி இருக்காது.. எல்லாரும் செத்து போயிட்டாங்க.. நீயும் என்னை விட்டு போனா அதை என்னால தாங்க முடியாதுடி.. இனிமே இன்னும் ஒரு உயிர் என்னை விட்டு போக வேண்டாம்.. நானே போயிடுறேன்.. அது தான் நல்லது..” என்று சொன்னவனை “வேண்டாம்.. சொன்னா கேளு அருண்..” என்று தேஜு கண்களில் பயத்தோடு சொல்ல சரண் அவள் காலை பிடித்து ஒரு ஆட்டு ஆட்ட அவள் கீழே விழுவது போல் போக அதை பார்த்த அருண் “நீ சொல்ற மாதிரியே நான் பண்றேன்.. அவளை தள்ளிடாதே..” என்று சொல்லி பார்வையாலேயே அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவள் கழுத்தில் இருந்த தாலியை கையால் பிடித்தபடி “எனக்கு வேற வழி தெரியல.. அஷ்ஷூம்மா.. ஐயம் சாரி..” என்று சொன்னவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை பறித்துக் கொண்டு அப்படியே அந்த பள்ளத்தில் விழுந்து விட்டான்..

 

தன் பிடியை அந்த பாறையிலிருந்து விட்டவன் கீழே விழும் போது தேஜுவின் முகத்தில் இருந்து பார்வையை அகற்றாமல் அப்படியே அவள் முகத்தை பார்த்தபடியே கீழ் நோக்கி பயணித்திருந்தான்.. தேஜூவை விட்டு எங்கேயோ விலகி தான் பாதாள உலகத்துக்கு போய்க் கொண்டிருப்பது போல் உணர்ந்தான்.. அந்தரத்தில் எவ்வளவு நேரம் போய்க் கொண்டிருந்தானோ தெரியாது.. அவன் பார்வையோ தேஜு கண்ணை விட்டு மறையும் வரை அவள் முகத்தில் இருந்து சிறிதும் அகலவில்லை..

 

விழுந்தவன் ஒரு பாறை மேல் தன் தலை மோதிட அது அகலமான பாறையாக இருக்கவே அங்கேயே விழுந்து கிடந்தான்.. உடலில் ஆங்காங்கே குருதி வெளியேறி கொட்டிக் கொண்டிருந்தது.. தலையிலும் அந்தப் பாறையோடு பலமாக மோதியதால் அதிக இரத்தம் போய்க் கொண்டிருந்தது.. பாறையில் விழுந்து கிடந்தவன் “ஐ ல..வ் யூ.. அ..ஷ்..ஷூ..மா.. எ.. என்னை.. ம.. ம..ன்னிச்சிடு..” என்று சொல்லிக் கொண்டே அடுத்த நிமிடம் தன் நினைவை இழந்தான்..

 

தேஜுவோ “அ….ரூஊஊஊஊஊ……ண்..” என்று தன் கையை அவனை நோக்கி நீட்டியபடி கத்திக்கொண்டு மேலிருந்து விழுந்த அவன் கண்ணில் இருந்து மறையும் வரை அவன் விழுவதை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவன் கண்ணில் இருந்து மறைந்தவுடன் வெற்று வெளியை சிறிது நேரம் வெறித்திருந்தவள் அப்படியே உணர்வற்று சாய்ந்துவிட்டாள்.. சரண் அவளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை நெருங்கிட அப்போது அங்கே சின்ன பையன் ஓடி வந்தான்.. “அண்ணி.. அண்ணி..” என்று ஓடி வந்தவன் தன்னோடு போலீசையும் கூட்டி வந்திருந்தான்..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!

 

மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து

பதிவு பண்ணுங்க..!! 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி 

“❤️❤️சுபா❤️❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!