பரீட்சை – 77
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
மனத்தை திருடிய
மோகினியே..
மங்கை உன்னை
பிரிந்து
இருக்கமாட்டேன் என
மனம் அது
முரண்டு
பிடிக்கிறதே..
சொல்லி புரிய வைக்க
முயற்சி
செய்தேன்..
சொல் பேச்சு
கேட்பதில்லை என
முடிவுடன்
மறுக்கிறது
என் சின்ன இதயம்..!!
#################
சின்ன இதயம்..!!
“ஹாஸ்பிடல்ல அருண் செத்துப் போனதா உங்களுக்கு ஏன் சொல்லணும்? அதுதான் எனக்கு புரியல..” என்று ராம் கேட்க… “அந்தக் கேள்விக்கு பதில் உங்க கல்யாணம் முடிச்சு ரெண்டு வருஷம் கழிச்சு எனக்கு கெடைச்சுது.. ஏன்னா அப்பதான் அருண் வந்து என்னை பார்த்தான்..” என்றார் அழகப்பன்..
“என்ன..? அருண் வந்து உங்களை பார்த்தானா? என்ன சொல்றீங்க மாமா?”
“ஆமாம் மாப்பிள்ளை.. அருண் வந்து என்னை பாத்தப்போ என்கிட்ட அவன் செத்துப்போனதா ஹாஸ்பிடல்ல இருந்த டாக்டர்கிட்ட சொல்ல சொன்னது அவன் தான்னு சொன்னான்.. அவன் கோமால இருந்து நாங்க கிளம்பி வந்த ஒரு வாரத்துல வெளிய வந்திருக்கான்.. அதுலருந்து வெளிய வந்தும் அவன் உயிருக்கு இருந்த ஆபத்து போகல.. அவன் யாரோ ஒரு அம்மா அவங்க பொண்ணை அஸ்வினின்னு திரும்ப திரும்ப கூப்பிடறதை கேட்டு தான் கோமாலருந்து முழிச்சிருக்கான்.. இதை சொன்னப்போ அவனோட காதலோட ஆழம் எனக்கு புரிஞ்சது மாப்பிள்ளை.. அவன் மனசுல என் பொண்ணு எந்த அளவுக்கு பதிஞ்சிருந்தா கோமால இருந்தவன் யாரோ ஒருத்தர் அவ பேரை கூப்பிட்டதை கேட்டு கண்ணு முழிச்சிருக்கான்.. ஆனா கண்ணை முழிச்சும் அவனுக்கு எந்த பலனும் இல்ல.. அவன் கோமாலேருந்து வெளி வந்தாலும் அவன் உடம்புல எந்த பாகத்தையும் அசைக்க முடியாம பேச முடியாம ஒரு பொருள் மாதிரி இருந்திருக்கான்.. எப்ப வேணா அவன் உயிர் போற ஆபத்து இருக்குன்னும் டாக்டர் சொல்லி இருந்திருக்காரு.. ஆனா அவங்க தாத்தா மனசை தளர விடல.. அவனுக்கு நிறைய பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி கொடுத்து அவனை அதிலிருந்து வெளியில கொண்டுவர ரொம்ப முயற்சி பண்ணிருக்காரு.. ஆறு மாசத்துல அவன் நடக்க பேச ஆரம்பிச்சிருந்தாலும் அவன் உயிருக்கு இருந்த ஆபத்து மட்டும் போகவே இல்லை.. அது மட்டும் இல்லாம அவனால ஒருத்தர் சப்போர்ட் இல்லாம தனியா நடக்கவோ ரொம்ப கிளியரா பேசவோ முடியல.. அதனால இப்படி ஒரு வாழ்க்கையை அஸ்வினிக்கு கொடுக்க வேண்டாம்னு அவனே முடிவு பண்ணி ஹாஸ்பிடல்ல நான் எப்ப ஃபோன் பண்ணி கேட்டாலும் அவன் செத்துப் போயிட்டதா சொல்ல சொல்லி இருக்கான்.. ஆனா விதி மறுபடியும் அவன் வாழ்க்கையில வேற மாதிரி விளையாடுச்சு..” என்று சொல்லி பெருமூச்சு விட்டார்..
“அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா உடல்நிலையில முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா நார்மலான லைஃப் வாழ ஆரம்பிச்சு இருக்கான்.. ஆனா அப்பப்ப அவனுக்கு தலைவலி மட்டும் வந்துகிட்டு தான் இருந்திருக்கு.. அந்த தலைவலி தாங்க முடியாத அளவுக்கு போனா அவன் உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் சொல்லி இருந்திருக்காரு.. ஆனா அவன் உயிர் போறதை பத்தி அவன் கவலைப்படல.. அவன் வெறுத்த அந்த தாத்தா தான் அவனுக்கு ஹாஸ்பிடல் செலவெல்லாம் பண்ணாருன்னு தெரிஞ்சப்போ அது முழுக்க அவருக்கு திருப்பி அடைக்கணும்னு அவனுக்கு வெறி வந்து இருக்கு.. தான் செத்தாலும் பரவாயில்லை.. சாகறதுக்குள்ள அவர் செலவு பண்ணின பணம் முழுக்க திரும்ப அவர்கிட்ட அடைச்சுட்டு தான் செத்துப்போவேன்னு சொல்லி அவன் ஒரு ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் பிசினஸ் பண்ண ஆரம்பிச்சான்.. அதுல தன் உழைப்பை போட்டு கொஞ்சம் கொஞ்சமா வளர்த்து மூணு வருஷத்துல அவன் இந்தியால யு எஸ் ல அப்புறம் இன்னும் ரெண்டு மூணு நாட்டுல கம்பெனி வச்சு நடத்திக்கிட்டு இருந்தான்.. கொடைக்கானல்ல கூட அவன் ஒரு ஷோரூம் வச்சிருக்கான்.. அவனுக்கு பணம் சேர ஆரம்பிச்ச உடனே யூ எஸ்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டும் இருந்தான்.. ஒரு ஸ்டேஜ்ல அவன் உயிருக்கு ஆபத்து இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு.. அவன் நல்லா ஆயிட்டான்னு அவர் சொன்னதை கேட்டு அடுத்த நிமிஷமே ஃபிளைட் புக் பண்ணி இந்தியாவுக்கு வந்துட்டான்.. ஆனா அவன் வந்த நேரம் உங்களுக்கும் தேஜூக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகி இருந்தது.. உங்களுக்கு ரெண்டு குழந்தைகளும் இருந்தாங்க… இதை சொன்னப்போ அவன் இடிஞ்சே போயிட்டான்.. எப்படியும் தேஜூவை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவ்வளவு நம்பிக்கையோட வந்தவன் அப்படியே உடைஞ்சு போய் நின்னதை பாக்க ரொம்ப கஷ்டமா இருந்தது மாப்பிள்ளை.. அவன் கிட்ட கெஞ்சி கூத்தாடி எந்த காரணத்தை கொண்டும் என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துறாதன்னு கேட்டுகிட்டேன்.. அவளை பொறுத்த வரைக்கும் நீ செத்தவன் செத்தவனாவே இருன்னு என் மனசை கல்லாக்கிக்கிட்டு அவன் கிட்ட சொன்னேன்.. அவனும் தேஜூவை உயிருக்குயிரா விரும்பினவன் ஆச்சே.. எந்த காலத்திலயும் அவன் அவளோட சாவுக்கு காரணமா இருக்க மாட்டேன்னு என்கிட்ட சொல்லிட்டு இங்க இருந்து போயிட்டான்…” என்று முடித்தார் அழகப்பன்..
“அப்படின்னா.. இப்ப எதுக்கு அவன் வந்து இருக்கான்..? இப்ப எதுக்கு தேஜூகிட்ட உண்மையெல்லாம் சொல்லி அவளை குழப்பணும்? இப்ப எதுக்கு அவளை தன்னோட வச்சுக்கணும்னு அவன் நினைக்கிறான்?”
ராம் விளங்காமல் கேட்க “அவனோட காதல் அப்படி.. என்னதான் அவன் என்கிட்ட தேஜு சாவுக்கு காரணமா இருக்க மாட்டேன்னு சொன்னாலும் அவனால தேஜூ இல்லாம இருந்திருக்க முடியாது மாப்பிள்ளை.. ரொம்ப முயற்சி பண்ணி பார்த்துட்டு உயிர் வலி ஜாஸ்தியாக ஆக அவன் தேஜுவை தேடி வந்திருப்பான்.. ஆனா அவன் தேஜூகிட்ட நடந்த உண்மையை எல்லாம் சொன்னாலும் தேஜூவை சாக விடமாட்டான்.. அவ சாகக்கூடாதுன்னு அவ்வளவு பெரிய மலை உச்சியில் இருந்து பள்ளத்தில குதிச்சு தான் உயிரையே விட துணிஞ்சவன் அவன்.. அவனால தேஜுக்கு எந்த பிரச்சினையும் வராது மாப்பிள்ளை..” என்றார் அழகப்பன்..
ராம் “மாமா.. எனக்கு அந்த அருணை பாக்கணும் போல இருக்கு.. அவன் காதலை நினைக்கும் போது என் காதல்லாம் ஒண்ணுமே இல்ல மாமா.. அவன் வாழ்க்கை முழுக்க தேஜூவுக்காக தியாகம் மட்டும்தான் பண்ணி இருக்கான்.. அவன் தியாகம் தான் என்னோட வாழ்க்கை மாமா..” என்று சொன்ன ராம் “சரி மாமா.. இப்ப அவன் எங்க இருப்பான்? உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா? நம்ப போய் அவங்களை தேடிப் பார்க்கலாம்..” என்று சொன்னான்..
“அவன் கொடைக்கானல் போய் இருக்கலாம்ன்னு எனக்கு ஒரு டவுட் இருக்கு மாப்பிள்ளை.. இன்னொரு விஷயமும் இருக்கு.. அவன் கூட இருந்த சின்ன பையன்.. அவனை தான் நிவேதா கல்யாணம் பண்ணி இருக்கா.. எப்ப அருண் தேஜூவை லவ் பண்ணறேன்னு சொல்லிட்டு என் வீட்டுக்கு வந்தானோ அப்போலிருந்து அந்த சின்ன பையனோட அவ பழக ஆரம்பிச்சிருந்தா.. அப்பல்லாம் அவங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா தான் இருந்தாங்க.. அந்த சின்ன பையன் படிச்சு முடிச்சு கொடைக்கானலில இருக்கிற அருணோட கம்பெனியை பாத்துக்குறான்.. நிவேதாவும் கொடைக்கானல்ல ஹாஸ்டல்ல தங்கி தான் படிச்சா.. அவங்க ரெண்டு பேரும் ஒரு ஸ்டேஜ்ல லவ் பண்ணி அவ எனக்கு ஃபோன் பண்ணி கல்யாணம் பண்றேன்னு சொன்னப்போ எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ஏன்னா தேஜூகிட்ட சின்ன பையன் பத்தி சொல்ல முடியாது.. அதனால நான் நிவேதாவோட காதல் எனக்கு பிடிக்கலன்னும் அந்த பையன் நல்ல பையன் இல்லைன்னும் சொல்லி தேஜூ கிட்ட நடிச்சிட்டு தேஜுக்கு தெரியாம தான் நான் போய் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன்..” என்றார் அழகப்பன்..
“சரி மாமா நீங்க சொல்ற மாதிரி கொடைக்கானல்ல இருக்கற நிவேதா வீட்டுக்கு போய் பார்ப்போம்.. ஒரு வேளை அவன் தேஜூவை அங்க கூட்டிட்டு போய் இருக்கலாம்.. எனக்கும் அப்படித்தான் தோணுது..” என்று சொன்னான் ராம்..
#########################
டைரியை படித்த வைஷூ “அக்கா.. நீங்க எந்த சமயத்திலுமே என் அருணை சந்தேகப்படாதீங்க அக்கா.. அவன் உங்களை காப்பாத்தறதில அந்த சாமிக்கு மேல நிக்கிறான் கா.. ஒவ்வொரு நேரமும் உங்களை மட்டும் தான் அவன் காப்பாத்தி இருக்கான்.. ஆனா அருண் சார்.. இவ்வளவு தூரம் நடந்தப்பறம் இப்ப எதுக்கு தேஜூ அக்காவை டிஸ்டர்ப் பண்றீங்க..? இப்ப நீங்க பண்ற வேலைனால அவங்க வாழ்க்கை கெட்டு போகாதா?” ஆதங்கத்துடன் கேட்டாள்..
“நானும் அவ வாழ்க்கைக்காக தான் என்ன என்னமோ பண்ணி பிசினஸ்ல என் கான்சன்ட்ரேஷன் ஃபுல்லா வச்சு என் மனசை சிதற அடிக்காம பிஸ்னஸ்லயே மூழ்கி அவளை மறக்க ரொம்ப முயற்சி பண்ணேன்.. இந்த எட்டு வருஷமா ஒரு நரக வாழ்க்கையை நான் வாழ்ந்துருக்கேன்.. அந்த டாக்டர் சொன்ன மாதிரி ஒரு வாரத்தில நான் செத்துப் போயிருந்தாலே பரவால்லன்னு தோணுச்சு எனக்கு.. எனக்கு என் அஷ்ஷூ முகத்தை பார்க்கணும்னு தோண ஆரம்பிச்சுது.. அப்போ இவ முகத்தைப் பார்க்கலாம்ன்னு நான் இங்கே வந்து இவ போற இடத்தில எல்லாம் அங்கங்க ஒளிஞ்சிருந்து இவளோட முகத்தை பார்த்துட்டு இருந்தேன்.. ஆனா அஸ்வினியை பார்த்தப்புறம் என்னால என்னையே கட்டுப்படுத்திக்க முடியல.. அவ எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும்னு தோண ஆரம்பிச்சுடுச்சு.. இப்போ அந்த எண்ணம் எனக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு.. என் அஸ்வினி எனக்கு மட்டும்தான் சொந்தம்.. வேற யாருக்கும் அவளை விட்டு கொடுக்க மாட்டேன்..” என்று சொன்னவன் “சரி அஷ்ஷூம்மா.. நீ இன்னும் இந்த கதை எல்லாம் நம்பலல்ல? இன்னைக்கு நம்ம கொடைக்கானல் கிளம்பி போலாம்.. நான் அதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி வெச்சுட்டேன்..” என்றவனை புதிராய் பார்த்தாள் தேஜு..
“அப்படின்னா நீ முன்னாடியே என்னை கொடைக்கானல் கூட்டிட்டு போறதா இருந்தியா? நான் இப்பதானே உன் கிட்ட கேட்டேன்..” என்று கேட்க “எப்படி இருந்தாலும் நீ இப்படி என்கிட்ட கேட்பேன்னு எனக்கு தான் தெரியுமே.. ரெண்டு வருஷம் உன் மனசை படிச்சு இருக்கேன் அஷ்ஷூம்மா.. என்கிட்ட இருந்து உன் மனசுல இருக்குற எதையும் நீ மறைக்க முடியாது..” என்று சொன்னவன் அந்த அறையில் இருந்து வெளியே சென்று விட்டான்..
வைஷு “அக்கா நம்ம போலாம் அக்கா.. கொடைக்கானல் போகலாம்.. நிஜமாவே இவன் சொல்றதெல்லாம் உண்மையானு தெரிஞ்சுக்கலாம்.. உங்க அத்தை பொண்ணையும் பார்த்து அவளையும் கேட்கலாம்..” என்று சொன்னாள் வைஷு..
“எனக்கு என்னவோ நான் கொடைக்கானலுக்கு என் உயிரை விடத் தான் போறேன்னு தோணுது.. வைஷூ..” என்று விரக்தியாக சிரித்துக் கொண்டே சொன்னாள் தேஜூ..
“ஏன் கா அப்படி சொல்றீங்க? அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது.. நீங்க கிளம்புங்க.. போய் தான் பார்ப்போமே.. என்னதான் நடக்குதுன்னு..” என்றாள் வைஷு.. உள்ளுக்குள் அவளோ டைரியில் எழுதியதெல்லாம் பொய்யாக இருக்க வேண்டும் என்று நப்பாசை கொண்டாள்.. அவள் ஏன் அப்படி நினைத்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை..
கொடைக்கானலுக்கு வந்து சேர்ந்தார்கள் அருண், வைஷூ மற்றும் விஷ்வா..
அவர்களை அழைத்துக் கொண்டு நேராக தாங்கள் படித்த கல்லூரிக்கு அழைத்துச் சென்றான் அருண்..
அவர்களை அழைத்துக்கொண்டு கல்லூரி முதல்வரின் அறைக்கு சென்றான்.. அங்கே சகுந்தலா அமர்ந்திருந்தார்.. தேஜூவைப் பார்த்தவர் “வாம்மா தேஜஸ்வினி.. எப்படி இருக்க? திடீர்னு காலேஜை விட்டு போயிட்ட.. அதுக்கப்புறம் இப்ப தான் உன்னை பாக்கறேன்.. நல்லா இருக்கியா? இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டவளை அப்படியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜூ..
“மேம்.. அவளுக்கு இங்க படிச்சது எல்லாம் ஞாபகம் இல்லை.. எல்லாத்தையும் மறந்து போயிட்டா.. ஒரு ஆக்சிடென்ட்ல அவளுக்கு எல்லாம் மறந்து போச்சு..” என்று சொன்னாள் அருண்..
“ஓ மை காட்.. சோ சாரி… எப்ப நடந்தது இதெல்லாம்… எங்களுக்கெல்லாம் இது பத்தி ஒன்னுமே தெரியாதே..” என்று கேட்க தேஜூ “மேடம்.. நீங்க நெஜமாவே இந்த காலேஜ் பிரின்சிபல் தானா..?” என்று கேட்டாள்..
சகுந்தலாவுக்கோ அவள் கேட்ட கேள்வியில் தூக்கி வாரி போட்டது.. “என்ன தேஜூ.. இப்படி கேட்கிற? இந்த காலேஜ்ல ஒவ்வொரு முறையும் அருணை பத்தி கம்ப்ளைன்ட் எடுத்துட்டு எவ்வளவு தரம் என்கிட்ட வந்து இருக்க? ஒவ்வொரு முறையும் ஒன்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பேன்.. ஒருநாள் அப்படியே தலைகீழா மாறி அருண் தான் உன் உயிர்ன்ற லெவலுக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டே.. இது எதுவுமே உனக்கு ஞாபகம் இல்லையா?” என்று கேட்டார் அந்த கல்லூரி முதல்வர்..
“அவ இங்க நடந்தது எதையுமே நம்ப மாட்டேங்குறா மேடம்.. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் உங்க கிட்ட இருந்து…” என்றான் அருண்..
” என்ன ஹெல்ப்?” என்று கேட்டார் அந்த கல்லூரி முதல்வர்..
“இவங்க அப்பா இவளோட ப்ளஸ் டூ மார்க் சீட், டிசி இதெல்லாம் உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு போனாரா?” என்று கேட்க “இல்ல.. எதுவுமே வாங்கல.. திடீர்னு ஒரு நாள் இவ மாயமாயிட்டா.. காலேஜுக்கு வரல.. எனக்கே ஒன்னும் புரியல.. அதுக்கப்புறம் நான் ஃபோன் பண்ணி பார்த்தப்போ அவங்க ஃபோன் எல்லாமே சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது.. இங்க கொடைக்கானல்ல இவங்க யாரும் இல்ல.. எங்க போனாங்கன்னு சொல்லிட்டு போகல.. சுமி கிட்ட கேட்டப்போ அவளுக்கும் தெரியலைன்னு சொல்லிட்டா.. ஃபோன் பண்ணப்போ அவளுக்கும் இதே ரெஸ்பான்ஸ் தான் கிடைச்சதுன்னு சொன்னா..” என்றார்..
“சரிங்க மேடம்.. அப்போ இவளோட அந்த டிசி, மார்க் ஷீட் இதெல்லாம் உங்க காலேஜ்ல தான் இருக்கும் இல்ல? உங்களால அதை எடுத்து கொடுக்க முடியுமா?” என்று கேட்டான் அருண்..
எதையோ கண்டுபிடித்தவள் போல அருணின் பக்கம் திரும்பி “அருண்.. ஆக்சுவலா சுமிக்கு எனக்கு ஆக்சிடென்ட் நடந்தது தெரியும் தானே? அப்போ அவ கிட்ட கேட்டப்போ அவளுக்கு என்னை பத்தி எதுவும் தெரியலைன்னு சொன்னான்னு சொல்றாங்க.. அப்படின்னா இவங்களும் பொய் தானே சொல்றாங்க?” என்று கேட்டாள் தேஜூ..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”