அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 79🔥🔥

5
(6)

பரீட்சை – 79

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

ஒவ்வொரு இடமாய்

அழைத்து போனவன்

அவளுடனான

அழகான உறவை

அழுத்தமாய் 

உணர வைத்து

தெளிய வைக்க

 

அவளோ 

 

எந்த நேரமும்

உயிர் 

போய்விடும் 

என்பது போன்ற

வலியில் துடித்து

விரைவில் தன்னை

காலன் அவன்

ஆட்கொள்ள

உருகி நிற்கும்

உயிருக்கு

விடை கொடுக்க

துணிந்து நின்றாள்..

 

######################

 

உயிர் வலி…!!

 

தேஜூ “நீங்க புதுசா டாட்டூ போட வேணாம்.. இந்த டாட்டூல இருக்கிற “ஏ.கே”ன்ற ரெண்டு எழுத்தை அழிச்சுட்டு அது மேலேயே “ஆர்.எஸ்”னு வேற ரெண்டு எழுத்து போட முடியுமா?” என்று கேட்டாள்..

 

“இல்ல மேடம்.. அது ஒரு லேஸர் ப்ரோசீஜர் மூலமா தான் பண்ணமுடியும்.. அது டாக்டர் கிட்ட பண்ணிக்கிட்டா தான் சேஃப்‌… நான் வேணும்னா உங்க இன்னொரு கையில இன்னொரு புது டேட்டூவை போட்டு விடுறேன்..” என்று சொல்ல தேஜுவுக்கு அதைக் கேட்டு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது..

 

அவரிடம் “இல்ல வேண்டாம்.. நான் ஒரு டாக்டர் கிட்ட போய் மாத்தி போட்டுக்கிறேன்.. தேங்க்யூ..” என்று சொன்னவளின் கண்களில் கண்ணீர் வழிய வெளியே வந்தாள்..

 

வெளியே வந்தவள் “நிச்சயமா உன் பேரை என் கையில இருந்து எடுத்துட்டு என் ராம் பேரை நான் பதிச்சிடுவேன்டா.‌ அவர் முழு பேரையும் நான் என் கையில் பச்சை குத்திக்கிறேன்.. இது நிச்சயமா நடக்கும்..” என்று சொன்னவள் விடுவிடுவெனக் காரை நோக்கி நடந்தாள்..

 

அடுத்து அவர்கள் சென்ற இடம் நடன வகுப்பு.. அங்கே உள்ளே சென்றவுடன் அவளை பார்த்த அந்த ஆசிரியர் “ஹலோ மிஸ். தேஜஸ்வினி.. எப்படி இருக்கீங்க? ஒரே வாரத்தில் என் கிளாஸ்ல எக்ஸெல் பண்ண ஒரே ஸ்டூடண்ட் நீங்கதான்.. அதுக்கப்புறம் அந்த மாதிரி ஒரு ஸ்டுடென்ட்டை நான் பார்க்கலை.. அதுவும் நீங்க எக்ஸெல் பண்ணதுக்கு காரணம் இதோ நிக்கிறாரே அவர் தான்..”  என்று அருணை காண்பித்து சொல்ல அவளோ அங்கே சுவற்றில் அவள் அருணுடன் ஆடிக்கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படம் தொங்கிக் கொண்டிருக்க அதையே வெறித்து பார்த்திருந்தாள்.. 

 

அதை பார்த்தவள் அந்த நடன ஆசிரியரிடம், “நான் எந்த வீக்ல இங்க கிளாஸ்க்கு வந்தேனு உங்களால சொல்ல முடியுமா?” என்று கேட்க “ஒன் மினிட்..” என்றவன் உள்ளே சென்று ஒரு கோப்பை எடுத்து வந்து அதை அவர்கள் முன்னாலேயே திறந்து பார்த்தான்.. சரியாக அருண் சொன்ன அதே தேதியை சொல்ல அவள் அதிர்ச்சிக்கு உள்ளானாள்..

 

அப்படியும் நம்பிக்கை வராமல் அந்த கோப்பை அவரிடம் இருந்து பறித்து பார்த்தாள்.. அதில் அவள் அந்த வகுப்பில் சேரும்போது நடன வகுப்பில் சேரும் மாணவி கையொப்பமிட வேண்டிய இடத்தில் கையொப்பமிட்டு இருந்தாள்..

 

அது அவளுடைய கையொப்பம் தான் என்று பார்த்தவுடன் அவளுக்கு விளங்கி விட்டது.. ஒரு நிமிடம் அவளுக்கு தலையே சுற்ற அப்படியே பின்னால் விழப் போனவளை தாங்கி பிடித்தான் அருண்..

 

“அஷ்ஷூமா.. கேர்ஃபுல் அஷ்ஷூமா.. கீழ விழுந்திருப்ப..” என்று சொன்னான்..

 

 அவளை நேராக நிற்க வைத்து விட்டு அவளால் நிலையாக நிற்கமுடியும் என்ற நிலையில் அவள் தோளை தாங்கி இருந்த கையை எடுத்தான்.. 

 

“ரொம்ப தேங்க்ஸ் சார்.. சரி.. அஷ்ஷூமா.. போலாமா..?” என்று கேட்டான் தேஜுவிடம்..

 

“உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ரிக்வெஸ்ட்.. எனக்காக ஒரு சாங்குக்கு நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடமுடியுமா?” என்று கேட்க தேஜூ அந்த நடன ஆசிரியரை முறைத்தாள்.. 

 

“சாரி.. எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து திரும்பி வாயிலை நோக்கி நடந்தாள்..

 

அவளைப் பின் தொடர்ந்து வந்த அருண்.., “என்ன அஷ்ஷூம்மா.. இன்னும் கூட நீ என்னை நம்ப மாட்டியா?” என்று கேட்க “ஏன்டா.. நான் அவ்வளவு சீக்கிரம் உயிரை விடணும்னு உனக்கு ஆசையா இருக்கா? நான் நம்புறேன்.. பேசாம நீயே என்னை கொன்னுடு.. எனக்கு என் ராமுக்கு துரோகம் பண்ணி இருக்கேன்னு தெரிஞ்ச அப்பறம் உயிர் வாழ இஷ்டமே இல்ல.. பேசாம என்னை கொன்னுடுடா.. ப்ளீஸ்” என்று கெஞ்ச ஆரம்பித்தாள் பாவை..

 

“என்ன அஷ்ஷூம்மா.. திரும்ப திரும்ப சாகறதை பத்தியே பேசிகிட்டு இருக்கே.. நான் உன்னோட வாழணும்னு ஆசையோட வந்து இருக்கேன்.. நீ அப்படியே என் மனசை உடைக்கிற சாகணும்னு சொல்லி..” என்று சொன்னவனிடம் “நீ சொன்னது.. டைரியில் எழுதினது.. இதெல்லாம் உண்மைன்னு நிரூபிச்ச அப்புறம் நான் வாழறது கூட சாகறதுக்கு சமம் தான்டா..” என்று சொன்னாள் வெறுப்புடன்..

 

“சரி அஷ்ஷூம்மா.. உன்னை விட்டா நீ இப்படியே தான் பேசிகிட்டு இருப்ப.. காலையிலிருந்து அங்க இங்கன்னு சுத்திக்கிட்டு இருக்கோம்.. ரொம்ப பசிக்குது.. வா.. ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம்..” என்று சொல்லி அவர்களை ஒரு உணவகத்துக்கு அழைத்து சென்றான்.. அங்கே சாப்பிட அமர்ந்தவள் அருகே ஒருத்தி வந்தாள்..

 

“ஹாய் தேஜூ.. எப்படி இருக்க? அப்புறம்.. ராம் எப்படி இருக்காரு? நீ என்ன ராமை விட்டுட்டு அருண் கூட வந்து இருக்கே.. மறுபடியும் அருணோட சேர்ந்துட்டியா என்ன?” என்று கேட்டாள் அந்தப் பெண்..

 

அருண் அவளை பார்த்து முறைத்தான்.. தேஜு அவளைப் பார்த்து, “நீங்க யாரு? உங்களுக்கு எப்படி என்னை தெரியும்?” என்று கேட்க அருண் “இவதான் அந்த நித்திலா..” என்று சொன்னான்.. அவன் சொன்னது தான் தாமதம்.. வைஷூவும் விஷ்வாவும் அவளை கண்களாலேயே எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்..

 

தன்னிடத்தில் இருந்து எழுந்த வைஷு “உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? இது வரைக்கும் பண்ண டேமேஜ் எல்லாம் பத்தாதுன்னு இங்கேயே வந்துட்டியா இவங்க வாழ்க்கையை கெடுக்குறதுக்கு? நீ எல்லாம் ஒரு பொண்ணா? உன்னை பத்தி கேள்விப்பட்டதிலிருந்து உன்னை ஒருமுறை பார்த்து அப்படியே கழுத்து நெறிச்சு கொல்லனும்னு தோணுச்சு.. வாடி வா.. நானே உன்னை கொன்னு போட்டுடறேன்..” என்று அவள் அருகில் சென்றவள் கையை பிடித்து அமர வைத்தான் அருண்..

 

“வைஷு இவளுக்கு எல்லாம் மதிப்பு கொடுத்து ரியாக்ட் பண்ணாத.. இவளுக்கெல்லாம் அதுக்கு தகுதியே கிடையாது.. இதெல்லாம் மனஷ ஜென்மமே கிடையாது..” என்று சொல்லிக் கொண்டிருக்க வைஷூவிற்கோ அவன் சொன்னது எதுவுமே காதில் விழவில்லை.. 

 

அவள் கையை அவன் பற்றி இருந்ததை மட்டுமே உணர்ந்திருந்தாள் அந்த நொடியில்.. காதுகளில் ஏதோ காதல் இன்னிசை கேட்டு கொண்டிருக்க தன் கையைப் பிடித்திருந்த அருணின் கையை பார்த்தபடியே உறைந்து போயிருந்தாள் அவள்..

 

“அருண் செல்லம்.. இப்படியே என் கையை என்னைக்கும் பிடிச்சுக்கிட்டே இருடா.. சந்தோஷமா உன் பின்னாடியே ஆட்டுக்குட்டி மாதிரி வந்துருவேன்..” என்று சொல்லி அவன் கையை ஏக்கமாக பார்க்க அவள் கையை விடுவித்தவன் நித்திலாவை பார்த்து “நீ வந்த வேலை முடிஞ்சுதா? இங்க ஒரு எஃபெக்ட்டும் இல்ல.. கெளம்பு” என்றான்..

 

“இவ்வளவு நடந்தும் உனக்கு திமிர் குறையலல்ல?” என்று நித்திலா கேட்க “நீயும் அந்த சரணும் செஞ்ச வேலைக்கு உங்களை அப்படியே போட்டு தள்ளி இருக்கணும்.. ஏதோ நான் என் அஷ்ஷூவோட வாழணுங்கற ஆசையில உன் மேல கைய வைக்காம இருக்கேன்.. மரியாதையா இங்கிருந்து போயிரு..” என்று சொன்னவனை முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து போனாள் நித்திலா..

 

காலையிலிருந்தே அவன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தாள் நித்திலா.. இதை அவனும் அறிந்து தான் இருந்தான்.. ஆனாலும் அவள் வந்ததை பெரிது படுத்தாமல் அவன் வேலையை அவன் செய்து கொண்டிருந்தான்.. அவனுக்கு தான் அவள் எப்படியும் மோப்பம் பிடித்து தாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து விடுவாள் என்று தெரியுமே..

 

அங்கே தேஜூக்கு பிடித்த உணவு வகைகள் எல்லாம் கொண்டு வரச் செய்து அவளை சாப்பிட வைத்தான் அருண்.. 

 

உணவு உண்டு முடித்த பிறகு எல்லோரும் கிளம்பி ஒரு வீட்டுக்கு போனார்கள்.. தேஜூவுக்கு அந்த வீட்டை ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போல் இருந்தது..

 

 அதன் பிறகு திடீரென நினைவு வந்தவள் போல “இது எங்க அத்தை மாமா இருந்த வீடு..” என்று சொன்னாள்..

 

“கரெக்ட்  அஷ்ஷூம்மா.. இந்த வீட்ல தான் நீ ரெண்டு வருஷம் இருந்த..” என்று சொல்ல “எனக்கு அது ஞாபகம் இல்லை..” என்று முறைத்துக் கொண்டே சொன்னவள் “நான் சின்ன வயசுல எல்லாம் நிறைய முறை இந்த வீட்டுக்கு வந்து இருக்கேன்.. லீவுக்கு எல்லாம் எங்க அத்தையோட வந்து இருப்பேன்.. அந்த ஞாபகத்தில தான் சொன்னேன்.. இங்க வந்தப்ப எல்லாம் நானும் நிவியும் அவ ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு எல்லாம் போய் விளையாடுவோம்..” என்றாள்..

 

“ஓகே ஓகே.. எனக்கு உன்னை இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் காட்டணும்னு ஆசைதான்.. ஆனா இப்ப இந்த வீட்ல வேற யாரோ குடி இருக்காங்க.. நம்ம உள்ள போக முடியாது..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த வீட்டின் உள்ளிருந்து ஒரு நடுத்தர வயது பெண் வெளியே வந்து பார்த்தாள்..

 

“யார் நீங்க..? இவ்ளோ பேரு எங்க வீட்டை பார்த்துட்டு நிக்கிறீங்க..?” என்று கேட்டாள் அந்தப் பெண்..

 

“சாரி.. தப்பா நினைச்சுக்காதீங்க.. இந்த வீட்ல முன்னாடி இருந்தவங்க இவங்க‌. ஒரு ஆக்சிடென்ட்ல பழசு எல்லாம் மறந்து போச்சு இவங்களுக்கு.. அதான் இந்த வீட்டை பார்த்தா ஏதாவது ஞாபகம் வருமோன்னு கூட்டிட்டு வந்தேன்.. மத்தபடி வேற ஒன்னும் இல்ல.. நீங்க பயப்படாதீங்க..” என்று அருண் சொல்ல “ஓ அப்படியா? இதுக்கு முன்னாடி ஒரு அம்மா,அப்பா அவங்க பொண்ணுன்னு குடும்பமா இங்க இருந்ததா சொன்னாங்க.. அதுக்கப்புறம் பெத்தவங்க ரெண்டு பேரும் இறந்து போயிட்டதால வேற யாரோ அந்த பொண்ணு கூட வந்து இருந்ததா சொன்னாங்க.. அப்புறம் அவசர அவசரமா இந்த வீட்டை எங்களுக்கு வித்துட்டு போயிட்டாங்க..” என்று சொன்னாள் அந்த பெண்..

 

தேஜூ அதற்குள் “இந்த வீட்ல இருந்தவங்க எங்க அத்தையும் மாமாவும்.. அவங்க தான் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க.. எங்க அப்பா பேர் அழகப்பன்..” என்று சொல்ல “ஓ அவரோட பொண்ணா நீங்க? அவர் தான் இந்த வீட்டை எங்களுக்கு வித்தாரு.. உள்ள வாங்க..” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே போனாள் அந்த பெண்..

 

“எங்க வீட்டை சுத்தி பாருங்க‌.‌.. உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருதான்னு..” என்று சொல்லிவிட்டு அவள் அங்கேயே வரவேற்பறையில் நின்று கொண்டிருந்தாள்.. அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை.. வைஷு அந்த பெண்ணிடம் “வீட்ல நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?” என்று கேட்க “ஆமா பசங்க ஸ்கூலுக்கு போய்ட்டாங்க.. அவர் ஆஃபீஸ் போய் இருக்காரு.. நான் மட்டும் தான் இருக்கேன்..” என்று சொன்னாள் அந்த பெண்..

 

தேஜு ஒவ்வொரு அறையாய் சென்று பார்க்க ஒரு அறையில் சுவற்றில் 

அருண் ❤️ அஸ்வினி என்று எழுதி இருந்தது.. அதுவும் அவளுடைய கையெழுத்தில்.. அதை பார்த்தவள் ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றாள் அதிர்ச்சியில்..

 

அருண் “அஷ்ஷூம்மா.. நீ செவுத்துல எல்லாம் நம்ம பேரை எழுதி வச்சிருக்கியா? இந்த விஷயம் எனக்கு தெரியவே தெரியாதே அஷ்ஷூம்மா.. நானே இதை பார்த்ததில்லை.‌ எவ்வளவு லவ் பண்ணி இருக்க அஷ்ஷூம்மா என்னை நீ..? எப்பவும் என் நினைப்பாவே இருந்திருக்க போல..” என்றான்..

 

அதை பார்த்த அருணின் கண்கள் ஏனோ கலங்கி இருந்தன… அந்த அறையை விட்டு வெளியே வந்த தேஜூவோ எதுவும் பேசாமல் அப்படியே இடிந்து போய் நின்று கொண்டிருந்தாள்.. 

 

“ரொம்ப தேங்க்ஸ்.. இன்னொருத்தரா இருந்தா புது மனுஷங்களை வீட்ல அலவ் பண்ணி இருக்க மாட்டாங்க.. நீங்க இவங்க நிலைமைக்காக உங்க வீட்டை பார்க்க விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்க.. நாங்க வரோம்..” என்று சொன்ன அருண் தேஜுவின் தோளை அரவணைத்தாற்போல் பிடித்து மெதுவாக அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்..

 

இப்போதைக்கு அவள் அதிர்ச்சியில் இருந்து வெளிவர மாட்டாள் என்று அவனுக்கு தெரியும்.. “சரி வாங்க.. நம்ம நெக்ஸ்ட் டெஸ்டினேஷனுக்கு போலாம்..” என்று சொன்னவன் காரை எடுத்துக் கொண்டு போன அடுத்த இடம் நிவேதாவின் வீடு..

 

தேஜூ அங்கே வந்து இறங்க வாசலிலேயே நின்று கொண்டிருந்த நிவேதாவை பார்த்தவள் அவள் கூட நின்றிருந்தவனை எங்கோ பார்த்தாற்போல இருக்க அவனைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள்..

 

“வா தேஜூக்கா.. எப்படி இருக்க?” என்று கேட்டாள் நிவேதா.. “நான் நல்லா இருக்கேன்..” என்று சொல்ல அதற்குள் அவள் பக்கத்தில் நின்றிருந்தவன் “நல்லா இருக்கீங்களா அண்ணி?” என்றான்.. 

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!

 

மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயnவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி 

“❤️❤️சுபா❤️❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!