அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 80🔥🔥

5
(7)

பரீட்சை – 80

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

இரு வாழ்வு 

வாழ்ந்து விட்டேன்..

எதை விடுத்து

எதை தொடர?

என்ற குழப்பம்

எனக்கில்லை..

 

இறுதி வரை

என் ராமனுடனே

இதயம் கலந்து

வாழ்வதே

எனக்கான நிறை

வாழ்வு..

 

அதை விடுத்து

இன்னொருவன் 

உடைமையாய்

என்றும் ஆக

உடன்பட மாட்டேனடா

என் 

உயிரான உயிரே..!!

 

##################

 

உயிரான உயிரே..!!

 

 

“வா தேஜூக்கா.. எப்படி இருக்க?” என்று கேட்டாள் நிவேதா.. “நான் நல்லா இருக்கேன்..” என்று தேஜூ சொல்ல அதற்குள் அவள் பக்கத்தில் நின்றிருந்தவன் “நல்லா இருக்கீங்களா அண்ணி?” என்றான்.. 

 

அவன் குரலில் பொய்யில்லை.. அவனுடைய அண்ணி என்ற அழைப்பில் அவ்வளவு உயிரோட்டம் இருந்தது.. அவன் நிஜமாகவே தன்னை அப்படி எண்ணித்தான் அழைக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது..

 

“உன் பேரு கார்த்திக் தானே?” என்று கேட்க “என் பேரு கார்த்திக் தான்.. ஆனா உங்களுக்கு நான் எப்பவுமே சின்ன பையன் தான் அண்ணி.. அப்படியே கூப்பிடுங்க.. நீங்க… அருண் அண்ணன்.. நீங்க எல்லாம் என்னை சின்ன பையன்னு கூப்ட்டா தான் எனக்கு பிடிக்கும்” என்றான் கார்த்திக் என்கிற சின்ன பையன்..

 

அதைக் கேட்டு ஏனோ சிறிது நெகழ்ந்து போனாள் தேஜூ.. ஏனோ அவனைப் பார்த்தவுடன் ஒரு அன்னைக்கு பிள்ளை மீது தோன்றுவது போல் பாசம் தோன்றியது அவளுக்கு.. அவன் கன்னத்தில் கை வைத்து அவனை பார்த்து புன்னகைத்தாள்.. 

 

வரவேற்பறைக்குள் வந்தவர்கள் எதிரில் நின்றவர்களை பார்த்து திடுக்கிட்டு போனார்கள்.. 

 

அவர்களைப் பார்த்தவுடன் தெரிந்தது அங்கு நின்றிருந்தவர்கள் தேஜுவின் தந்தை அழகப்பனும் அவளுடைய கணவன் ராமும் என்று..

 

வைஷூ விஷ்வாவிடம் “இவங்க எப்படா இங்க வந்தாங்க?” என்று ரகசியமாய் கேட்டாள்..

 

“ஒருவேளை உன் ஆளு வர வெச்சிருப்பாரோ என்னவோ.. அவர் என்ன பண்றாருன்னு அவருக்கு மட்டும் தான் தெரியும்..” என்றான் விஷ்வா..

 

தேஜூவோ இன்ப அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.. ஆனால் அருணோ அவர்கள் அங்கு இருப்பார்கள் என்று ஏற்கனவே தெரிந்தது போல்.. அவர்களை எதிர்பார்த்தது போல் சோஃபாவில் சென்று அமர்ந்தான்..

 

தேஜு “அப்பா நீங்க எப்பப்பா இங்க வந்தீங்க?” என்று கேட்டாள்..

 

அப்போது அழகப்பன் பின்னே ராம் வந்து நிற்க ராமை பார்த்தவள் ஓடி சென்று அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.. 

 

தன் கைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த அருண் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்து “தேஜுமா.. இன்னிக்கி ஒரு நாள் நைட்டு தான் உனக்கு டைம்.. உன் டெம்பரரி புருஷனோட இன்னைக்கு நைட் ஸ்பென்ட் பண்ணிக்கோ.. நாளைக்கு காலைல நீ எனக்கு சொந்தம் ஆயிடுவ.. நமக்கு கல்யாணம் நடந்துச்சில்ல.. அதே கோவில்ல உன் கழுத்துல இருக்கற இந்த தாலியை எடுத்துட்டு என் கையால உன் கழுத்துல தாலி கட்ட போறேன்..” என்று சொன்னவனை ராமின் அணைப்பில் இருந்த படி பார்த்தவள் “அது உன் கனவிலயும் நடக்காது” என்றாள்..

 

“அதையும் பார்க்கலாமே.. நாளைக்கு எப்படியும் நீ  நிரந்தரமா எனக்கு பொண்டாட்டி ஆயிடுவ.. அதனால உன் ராமோட பொண்டாட்டியா இன்னிக்கு ஒரு நாள் நீ இருந்துக்க..” என்று ராமையும் தேஜுவையும் தீர்க்கமாக பார்த்து சொன்னான் அருண்..

 

“நீ எவ்வளவு நல்லவனா இருந்த? இப்ப ஏன் இப்படி மாறிட்ட? எதுக்கு இப்படி ஒவ்வொரு நாளும் என் பொண்ணை சித்திரவதை பண்ற? அவளுக்கு தான் உன் மேல இஷ்டம் இல்லல்ல? அவளை விட்டுடு அருண் ப்ளீஸ்..” என்று அழகப்பன் கெஞ்ச அந்த நேரம் அழகப்பன் சொன்ன வார்த்தைகளை கேட்டவள் அப்படியே அதிர்ச்சியில் சிலையாகி நின்றாள்.. 

 

“அப்படின்னா.. அந்த அருண் சொன்னது அத்தனையும் உண்மையா? ஐயோ கடவுளே.. அப்பா.. நீங்க என்கிட்ட இவ்ளோ பெரிய உண்மையையா மறைச்சீங்க?” என்று மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டாளே தவிர வெளியில் கேட்க முடியாமல் வாயடைத்து போய் நின்றிருந்தாள் அவள்..

 

அப்போது அழகப்பனை  பார்த்த அருண் “மாமா.. நீங்க எனக்கு நாலஞ்சு வருஷம் கழிச்சு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெக்கறதா சத்தியம் பண்ணி இருக்கீங்க.. உங்களுக்கு நினைவிருக்கா? இப்ப நான் வந்து இருக்கேன்.. நாளைக்கு காலைல எங்க ரெண்டு பேருக்கும் நடக்கிற கல்யாணத்துக்கு சாட்சியா இருந்து ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா..” என்று அவரிடம் சொன்னவன் அவர் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சின்ன பையன் பக்கம் திரும்பி “டேய்.. சின்ன பையா என்னோட ரூம் எதுடா?” என்று கேட்க அவன் ஒரு அறையை காட்ட அந்த அறைக்கு எழுந்து போய் விட்டான் அருண்..

 

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தேஜூ ராமின் மார்பில் புதைந்து கதறி கதறி அழுது கொண்டிருந்தாள்..

 

 “ராம்.. என்னை உங்களோட கூட்டிட்டு போயிடுங்க.. இவன் என்னென்னவோ சொல்றான்.. எனக்கு பயமா இருக்கு.. அவன் சொல்றதெல்லாம் கேட்டா எனக்கு உயிரோட இருக்கணும்னே தோணல.. செத்துடலாம் போல இருக்கு.. என்னை மன்னிச்சிடுங்க.. நான் மனசறிஞ்சு உங்களுக்கு எந்த துரோகமும் பண்ணல..” திரும்பி திரும்பி சொன்னதையே சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்..

 

அப்போது ராமின் பின்பக்கத்தில் இருந்து பூஜாவும் அஸ்வினும் “அம்மா..” என்று அழைக்க ஓடி சென்று அவர்கள் இருவரையும் இரு தோள்களில் அணைத்தவள் “என் செல்லங்களா.. எப்படி இருக்கீங்க? அம்மா இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துதாடா?” என்று கேட்க “ரொம்ப மிஸ் பண்ணோம்மா உன்னை.. எங்கம்மா போயிட்ட நீ? அந்த அங்கிளோடயே இருந்துட்டியா? மறுபடியும் எங்களை பார்க்கவே வர மாட்டியோன்னு நினைச்சேன்.. டாடி தான் எங்களை இங்க கூட்டிட்டு வந்தாரு..” என்று பூஜா சொல்ல “இனிமே எங்களை விட்டு எங்கேயும் போகாதம்மா.. நீ இல்லாம எங்களால இருக்கவே முடியாது..” என்றான் அஸ்வின்..

 

இருவரையும் மறுபடி அணைத்துக் கொண்டவள் கண்ணில் வற்றாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.. 

 

“சாப்பிட்டீங்களா செல்லக்குட்டி?” என்று கேட்க “சாப்பிட்டோம்மா.. நிவேதா ஆன்ட்டி எங்களுக்கு சாப்பாடு கொடுத்தாங்க..” என்று சொன்னாள் பூஜா..

 

“அம்மா எங்களுக்கு தூக்கமா வருது மா.. நீ எங்களோட வந்து எங்களுக்கு பெட் டைம் ஸ்டோரி சொல்றியா?” என்று அஸ்வின் கண்ணை கசக்கி கொண்டே கேட்க “வாடா செல்லம்..” என்று சொல்லி இருவரையும் அழைத்துக்கொண்டு அவர்களுடைய அறைக்குச் சென்றவள் அவர்களை தன் இரு பக்கம் படுக்க வைத்துக் கொண்டு அவர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தாள்.. 

 

ஒரு இளவரசி இன்னொரு நாட்டின் அழகான இளவரசனை காதலித்து திருமணம் செய்ய அவளை ஒரு ராட்சசன் வந்து கடத்திக் கொண்டு போன கதையை சொல்லிக் கொண்டிருந்தாள் தன் பிள்ளைகளிடம்..

 

அங்கு கதவோரம் நின்றுகொண்டு அதைக் கேட்ட ராம் மனதிற்குள் “உன்னை கடத்திட்டு போனது ராட்சஸன் இல்ல தேஜூ.. உன்னை கடத்திட்டு போனது உன் மேல முழுமையா உண்மையா ஆழமா காதல் வெச்சிருந்த இன்னொரு இளவரசன்.. நீயும் அதே அளவுக்கு அந்த இளவரசனை காதலிச்சிட்டு இருந்தே.. இப்போ உனக்கு அவனோட காதல், அன்பு இதெல்லாம் ஞாபகம் வந்தா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியல.. அவனோட காதலுக்கு முன்னாடி என் காதல் தோத்துப்போயிடும் தேஜூம்மா..” என்று நினைத்துக் கொண்டான்..

 

இரு குழந்தைகளும் தூங்கிய பிறகு அங்கே வந்து நின்றாள் நிவேதா.. அவளிடம் சென்று தேஜு “நிவேதா வெளியில வா.. பிள்ளைங்க தூங்கட்டும்..” என்று சொன்னவள் அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்..

 

“இங்க வேற ஏதாவது ரூம் இருக்கா?” என்று கேட்க “உங்க ரெண்டு பேருக்கும் மாடியில ஒரு ரூம் ஏற்பாடு பண்ணி இருக்காங்கக்கா..” என்று சொல்லி அவளையும் ராமையும் மாடியில் இருந்த அறைக்கு அழைத்து போனாள்..

 

அந்த அறையின் உள்ளே சென்றதும் நிவேதாவின் தோளை பற்றி தனக்கு எதிரில் நிறுத்தியவள் “நிவி.. உண்மையை சொல்லு.. அந்த அருண் சொல்றதெல்லாம் உண்மையா? நானும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோமா? ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தோமா? அவன் என்னை ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு என்னென்னமோ கதை எல்லாம் சொல்றான்.. இதெல்லாம் உண்மையா?” என்று கேட்க “அவர் சொல்றது அத்தனையும் உண்மைதான்க்கா.. அவர் சொல்ற அத்தனையும் உன் வாழ்க்கையில அச்சு பிசகாம நடந்ததுக்கா..” என்றாள் நிவேதா..

 

அதைக் கேட்டு அவ்வளவு நேரம் இருந்து கொண்டிருந்த கொஞ்சம் நஞ்சம் கடைசி நம்பிக்கையும் இற்று போனது அவளுக்கு.. அப்படியே காலை மடக்கி தரையில் அமர்ந்தவள் தலையில் அடித்துக் கொண்டு கதறி கதறி அழ ஆரம்பித்தாள்.. 

 

“ஐயோ.. நிவி.. எப்படியும் நீ இதெல்லாம் பொய்ன்னு சொல்லி என்னோட நம்பிக்கையை காப்பாத்திடுவன்னு நினைச்சேன்.. அப்பா சொல்லும் போது கூட அவர் ஏதோ ஒரு மிரட்டலுக்காக.. என்னோட உயிருக்கு பயந்தோ இல்லை என்னோட மானத்துக்கு பயந்தோ அருண் மிரட்டலுக்கு பணிஞ்சு போய் அந்த மாதிரி பொய் சொல்றாரோன்னு நான் நினைச்சேன்.. ஆனா நீயும் இதெல்லாம் உண்மைன்னு சொல்லிட்டியே நிவேதா.. நான் என்னடி தப்பு பண்ணேன்..? இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு நான் வாழாமலே இருக்கலாம்..” என்று தலையில் அடித்துக் கொண்டு கதறியவளின் கையைப் பற்றி நிறுத்தினான் அங்கு வந்த ராம்..

 

“உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டான்.. அவன் மார்பிலேயே புதைந்து “நான் செத்துப்போறேன் ராம்.. நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்.. நான் இனிமே உயிரோட இருக்க கூடாது..” என்று கதறி கதறி அழுதாள் தேஜூ..

 

ராம் தன் அணைப்புக்குள் அவளை இறுக்கிக் கொண்டு “தேஜு அழாதம்மா.. இது எதுக்குமே நீ காரணம் இல்ல.. இவ்வளவு நடந்து இருந்தாலும் நீ மனசால இப்போ என்னை மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கே.. அதனால நீ எனக்கு துரோகம் பண்ணிட்டதா நான் நினைக்கவே இல்ல.. நீ எதைப் பத்தியும் கவலைப்படாதடா.. இந்த ஜென்மத்துல நீ தான் எனக்கு பொண்டாட்டி.. நான் தான் உனக்கு புருஷன்.. இதை யாராலயும் மாத்த முடியாது..” என்றான் அவன்..

 

நிவேதா அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து வெளியே சென்று விட்டாள்..

 

“ஐயோ.. அவன் எனக்கு தாலி கட்டி இருக்காங்க.. நான் அவன் பொண்டாட்டியா இருந்து இருக்கேன்..” என்று மறுபடியும் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் அவள்..

 

“ஆனா பொண்டாட்டியா நீ அவனுக்கு எதுவுமே கொடுக்கலையே கண்ணம்மா.. நம்ம ரெண்டு பேரும் தான்டி அப்படி வாழ்ந்திருக்கோம்.. அப்புறம் எதுக்கு கவலைப்படுற தேஜூமா..?”  என்று அவன் கேட்க “இப்ப அந்த உரிமையை எதிர்பார்த்து தானங்க அவன் வந்து இருக்கான்.. நான் என்னங்க பண்ணுவேன்..? நாளைக்கு காலைல என் கழுத்தில தாலி கட்ட போறேன்னு சொல்றான்ங்க.. அவனை பொறுத்த வரைக்கும் அவன் செய்யறது சரின்னு சொல்றான்.. அவன் சொல்றதெல்லாம் உண்மை.. ஆனா அவன் செய்யறது சரி இல்ல.. உங்க பொண்டாட்டியா இருக்கிற என்னை.. உங்க ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கிற என்னை.. அவன் எப்படிங்க தாலி கட்டி பொண்டாட்டியா ஆக்கிக்க முடியும்? அவன் கையால என் கழுத்துல தாலி வாங்குறதை விட நான் செத்து போறதே மேலுங்க.. நீங்க கட்டின இந்த தாலி என் கழுத்தில இருந்து இறங்கினா அடுத்த நிமிஷம் என் உயிர் என்னை விட்டு போயிருங்க..” என்றாள் ராமிடம்..

 

“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நான் கட்டின தாலி உன் கழுத்தில இருந்து இறங்காது.. நான் என்னைக்கு செத்துப் போறேனோ அன்னைக்கு தான் இந்த தாலி உன் கழுத்தில் இருந்து இறங்கும்.. உன் கழுத்தில் இருந்து இந்த தாலியை எடுக்கணும்னா அந்த அருண் என்னை கொல்லணும்.. ஆனா உங்க அப்பா சொன்னதெல்லாம் கேட்டப்போ எனக்கு என்னவோ அவன் என்னை கொல்லுவான்னு தோணல.. முடிஞ்சா.. அவனால முடிஞ்சா என்னை கொன்னுட்டு உன் கழுத்துல இருக்குற தாலியை எடுத்துட்டு இன்னொரு தாலியை கட்டட்டும்.. அப்படி அவன் இன்னொரு தாலியை கட்ட வரும்போது உனக்கு அதை ஏத்துக்க விருப்பம் இல்லனா அப்ப நீ உன் உயிரை விடு.. ஆனா நான் உயிரோட இருக்கும்போது நீ உன் உயிரை விடுறதை பத்தி பேசாத.. அது எனக்கு அவமானம்..” என்றான் ராம்..

 

அவளோ அவனை கட்டிக் கொண்டு கேவி கேவி குழந்தை போல் அழுதாள்.. அவள் தலையை வருடி விட்டு முகத்தை நிமிர்த்தியவன் அவள் இதழில் இதழ் வைத்து அத்தனை நாள் அவளைப் பிரிந்த தாபம் அத்தனையும் இதழ் மூலமாக கடத்திக் கொண்டிருந்தான்..

 

அவளும் அவன் இதழுக்கு தன் இதழை சமர்ப்பணம் செய்து விட்டு அவன் முடிக்குள் தன் விரல்களை விட்டு இறுக்க பிடித்தவள் அப்படியே அவனோடு உயிரோடு உயிராக ஐக்கியமாகி விடுவது போல் அவன் அணைப்புக்குள் உருகி இருந்தாள்..

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!

 

மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி 

“❤️❤️சுபா❤️❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!